திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1178 | பெரிய திருமொழி || (3-4–ஒருகுறளாய்) (காழிச்சீராம விண்ணகம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆஸ்ரித அர்த்தமாக தான் இரந்தான்-என்னும் மேன்மையை உடையவன் திருவடிகளை கிட்ட வேண்டி இருப்பீர் – அபௌருஷேயத்வ நிபந்தனமான கீர்த்தியை உடைய வேதங்கள் உடைய திரள்கள் நாலும் பஞ்ச மகா யஞ்ஞங்களும் ஆறு அங்கங்களும் ஏழு இசைகளும் தெருவிலே மிக்கு இருந்துள்ள உத்சவத்தால் வந்த அழகும் இவை எல்லாம் அடைய சிறக்கும்படியான ஸ்ரீ சீராம விண்ணகரை ஆஸ்ரயிங்கோள்) 1 | ஒரு குறளாய் இரு நிலம் மூவடி மண் வேண்டி உலகு அனைத்தும் ஈரடியால் ஒடுக்கி ஒன்றும்
தருக வென மாவலியைச் சிறையில் வைத்த தாடாளன் தாள் அணைவீர் தக்க கீர்த்தி
அருமறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும் அங்கங்கள் அவை யாறும் இசைகள் ஏழும்
தெருவில் மலி விழா வளமும் சிறக்கும் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே –3-4-1 | பதவுரை Show / Hideஒரு குறள் ஆய் இரு நிலம் மூ அடி மண் வேண்டி, Oru Kural Aayi Iru Nilam Moo Adi Mann Vendi - விலக்ஷண வாமநரூபியாகி (மஹாபலியிடஞ் சென்று) விசாலமான இந்த பூமிக்குள்ளே மூவடிநிலத்தை மாத்திரம் யாசித்து (- (அப்படியே அவன் தாரைவார்த்து தத்தஞ்செய்தவாறே) (மூன்றாமடியை வைக்க இடம் காணாமையாலே) (அதற்கு அவன் தன் தலையைக் காட்டவே அதில் மூன்றாமடியை வைத்து ) (நீங்கள் செய்யத்தக்கது என்னவென்றால்)) உலகு அனைத்தும், Ulaku Anaithum - கீழ்மேலுலகங்களெல்லாவற்றையும் இரண்டடியாலே ஈர்அடியால் ஒடுக்கி ஆக்கிரமித்து, ஒன்றும் தருக எனா, Ondrum Taruga Ena - மற்றோரடி வைப்புக்கு உரிய நிலத்தைக் கொடு என்று சொல்லி மாவலியை சிறையில் வைத்த, Mavalaiyai Siraiyil Vaiththa - அந்த மஹாபலியைப் (பாதாளமாகிற) சிறையிலே கொண்டு வைத்த தாடாளன், Thaadalain - பெருமை பொருந்திய ஸர்வேச்வரனுடைய தாள் அணைவீர், Thaal Anaiveer - திருவடிகளைச் சேரவேண்டியிருக்குமவர்களே! தக்க கீர்த்தி அருமறையின் திரள் நான்கும், Thakka Keerthi Arumaraayin Thiral Naankum - தகுதியான கீர்த்தியையுடைய அரிய வேதங்களின் திரள்கள் நான்கும் வேள்வி ஐந்தும், Velvi Aindum - பஞ்சமஹாயஜ்ஞங்களும் அங்கங்கள் அவை ஆறும், Angangal Avai Aarum - வியாகரணம் முதலிய ஆறு அங்கங்களும் இசைகள் ஏழும், Isaihal Aezhum - ஸப்த ஸ்வரங்களும் தெருவில் மலி விழா வளமும், Theruvil Mali Vizha Valamum - வீதி நிறைந்த உத்ஸவவைபவங்களும் (ஆகிய இவற்றாலே சிறக்கும், Sirakkum - சிறப்புப் பெற்ற காழி, Kaazhi - காழியென்னும் க்ஷேத்திரத்திலுள்ள சீராம விண்ணகரி, Seerama Vinnakari - சீராம விண்ணகரமென்னும் திருப்பதியை நீர்சேர்மின், Neerchermin - நீங்கள் சென்று சேருங்கள் |
| 1179 | பெரிய திருமொழி || (3-4–ஒருகுறளாய்) (காழிச்சீராம விண்ணகம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஜகத்துக்கு ஈச்வரர்களாக பிரசித்தர் இருவரும் இறே அவர்கள் இருவரும் உடைய அபிமானத்தை கழித்தான் ஆயிற்று- ப்ரஹ்ம ருத்ராதிகள் -சேக்கள்-ஈச்வரோஹம் என்று கை ஒழிய ஓட ஸ்ரீ பக்தி உழவன் நம் பூர்வர்கள் -சங்குகள் -ஸ்வ ஸ்வபாவரைப் பெறுவிக்க கமலமலர் பாவை முகம் விகசித்து அனுராக அதிசயம் வெள்ளம் இட அதிலே துள்ளா நிற்பர் ஸ்ரீ நித்ய சூரிகள்) 2 | நான்முகன் நாள் மிகைத் தருக்கை இருக்கு வாய்மை நலமிகு சீர் உரோமசனால் நவிற்றி நக்கன்
ஊன் முகமார் தலையோட்டூண் ஒழித்த எந்தை ஒளி மலர்ச் சேவடி அணைவீர் உழுசேயோடச்
சூழ் முகமார் வளையளைவாய் உகுத்த முத்தைத் தொல் குறுக்கு சினை என்னச் சூழ்ந்து இயங்க எங்கும்
தேன் முகமார் கமல வயல் சேல் பாய் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே –3-4-2 | பதவுரை Show / Hideநான்முகன் நாள் மிகை தருக்கை, Naanmugan Naal Mikai Tharukkai - பிரமனுக்குஆயுள் மிகுதியினா லுண்டான கருவத்தை (- (நீங்கள் செய்ய வேண்டியதாவது) (காழி………சேர்மின்-.)) இருக்கு வாய்மை நலம் மிகுசீர் உரோமசனால்நவிற்றி, Irukku Vaimai Nalam Mikuseer Uromasanalnavittri - வேதாத்யயநநிஷ்டனும் நற்குணங்க ளமைந்தவனுமான ரோமசமஹர்ஷி யினால் போக்கடித்தவனாயும். நக்கன் ஊன்முகம் ஆர்தலை ஓடு ஊண் ஒழித்த எந்தை, Nakkan Oonmugam Aarthalai Odu Oon Ozhitha Endhai - மாமிசம் முதலியவை தங்கியிருந்த கபாலத்தைக் கொண்டு பிச்சையெ டுத்தலை தவிர்த்தவனாயுமுள்ள எம் பெருமானுடைய ஒளிமலர்சேவடி அணைவீர், Olimalarsevati Anaiveer - அழகு பொருந்திய திருவடித் தாமரைகளை அணுகவேணுமென்றிருக்கு மன்பர்களே! உழு சே ஓட, Uzhu Se Oda - உழுகிற எருதுகள் (வயல்களிலே ஓடுவதனால். சூல்முகம் ஆர்வளை அளைவாய் உகுத்த முத்தை, Soolmugam Aarvalai Alaiyai Ukutha Muththai - பிரஸவிக்குந் தருணத்திலிருந்த சங்குகள் வங்குகளிலே ஈன்ற முத்துக்களை தொல் தருகு, Thol Tharugu - பெரிய கொக்குகளானவை சினை என, Sinai Ena - தங்களுடைய முட்டையென்று (மயங்கி ) சூழ்ந்து இயங்க, Sozhndhu Iyanga - (அந்த முத்துக்களைச்) சுற்றி ஸஞ்சாரியா நிற்கப் பெற்றதும் எங்கும், Engum - எல்லாவிடங்களிலும் தேன்முகம் ஆர்கமலம், Thenmugam Aarkamalam - தேனெழுகுகின்ற முகம் பொருந்திய தாமரைகளையுடையதும் சேல் பாய், Sel Pai - மீன்கள் துள்ளிக் குதிக்கப் பெற்றதுமான வயல், Vayal - கழனியையுடைய |
| 1180 | பெரிய திருமொழி || (3-4–ஒருகுறளாய்) (காழிச்சீராம விண்ணகம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (களை பறிப்பதாக அடுத்து வயலிலே இழிந்து கண்ணுக்கும் வாய்க்கும் அவற்றோடு உண்டான சர்வதா சாம்யத்தாலே களை பரியாதே போந்து ஏறுகிற ஸ்ரீ காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே) 3 | வையணைந்த நுதிக் கோட்டு வராகம் ஒன்றாய் மண் எல்லாம் இடந்து எடுத்து மதங்கள் செய்து
நெய் அணைந்த திகிரியினால் வாணன் திண் தோள் நேர்ந்தவன் தாள் அணைகிற்பீர் நெய்தலோடு
மையணைந்தகு வளைகள் தம் கண்கள் என்றும் மலர்க்குமுதம் வாய் என்றும் கடைசிமார்கள்
செய்யணைந்து களைகளை யாதேறும் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே –3-4-3 | பதவுரை Show / Hideவை அணைந்த நுதி கோடு வராகம் ஒன்று ஆய், Vai Anaindha Nuthi Kodu Varagam Ondru Aayi - கூர்மை பொருந்திய முனையையுடைய கோரப் பற்களையுடைத்தான விலகூண் வராஹகூரூபியாகி மண் எல்லாம் இடத்து எடுத்து மதங்கள் செய்து, Man Ellam Idathu Eduthu Mathangal Seidhu - பூமி முழுவதையும் அண்டபித்தியில் நின்றும் ஓட்டுவிடுவித்து (கோட்டு நுனியில்) ஏந்திக் கொண்டு வந்து செருக்கு விளங்கும் வியாபாரங்களைச் செய்தவனாயும், வாணன் திண் நோள் நெய் அணைந்த திகிரியினால் நேர்ந்தவன், Vaanan Thin Nool Ney Aanaindha Thigiriyinaal Naerndhavan - பாணாஸீரனுடைய திடமான புஜங்களை கூர்மை பொருந்திய திருவாழியினால் அறுத்தவனாயுமுள்ள பெருமானுடைய தாள்;, Thaal - திருவடிகளை அணைகிற்பீர், Anaikirbeer - சேர விரும்பியிருக்கு மண்பர்களே கடைசிமார்கள், Kadaisimaargal - பள்ளச்சிகள் செய் அணைந்து, Sei Anaindhu - களை பறிப்பதாகக் கழினியிலே இழிந்து, நெய்தலோடு மை அணைந்த குவளைகள் தம் கண்கள் என்றும், Neithalodu Mai Anaindha Kuvalaihal Tham Kangkal Endrum - நெய்தல் மலரையும் கருமை நிறம் மிக்க குவளை மலரையும் தங்களுடைய கண்களாகவும் குமுதம் மலர்தம் வாய் என்றும், Kumudham Malartham Vaai Endrum - சிவந்த ஆம்பல் மலரை தங்களுடைய வாயாகவும் ப்ரமித்து களை களையாது ஏறும், Kalai Kalaiyadhu Aerum - களை பறியாமலே வெறுமனே கரையேறுமிடமான காழி, Kaazhi - சேர்மின் |
| 1181 | பெரிய திருமொழி || (3-4–ஒருகுறளாய்) (காழிச்சீராம விண்ணகம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆளிட்டு செய்தல் -ஆயுதங்களாலே அழியச் செய்தல் செய்கை அன்றிக்கே ஆஸ்ரித விரோதியை தானே கை தொட்டு திரு உகிராகிற வேலாலே அழியச் செய்து அத்தாலே வந்த சுத்தியை உடையவன் திருவடிகளைக் கிட்ட வேண்டி இருப்பீர்-ஏக காலத்தில் இருளும் சந்த்ரோதயமும் வெய்யிலும் ஒக்கக் கண்டு அனுபவிக்கும் படியான தேசம் ஆயிற்று) 4 | பஞ்சிய மெல்லடிப் பின்னை திறத்து முன்னாள் பாய் விடைகள் ஏழ் அடர்த்து பொன்னம் பைம்பூண்
நெஞ்சிடந்து குருதி உகிர் வேலாண்ட நின்மலன் தாள் அணை கிற்பீர் நீல மாலைத்
தஞ்சடைய இருள் தழைப்பத் தரளம் ஆங்கே த்ண் மதியின் நிலாக் காட்ட பவளம் தன்னால்
செஞ்சுடர் வெயில் விரிக்கும் அழகார் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே –3-4-4 | பதவுரை Show / Hideமுன் நாள், Mun Naal - முற்காலத்தில் பஞ்சிய மெல் அடி பின்னை திறந்து, Panjiy Mel Adi Pinnai Thirandhu - பஞ்சு போன்று மிருதுவான திருவடிகளையுடைய நப்பின்னைப் பிராட்டிக்காக பாய் விடைகள் ஏழ் அடர்ந்து, Pai Vidhaigal Ezhu Adarndhu - மேல் விழுந்து நலியுமியல்வுடைய ரிஷபங்களேழையும் வலியடக்கினவனாயும் பொன்னன் பை பூண் நெஞ்சு இடந்து, Ponnan Pai Poon Nenju Idanthu - இரணியாசுரனுடைய அழகிய ஆபரணங்களணிந்துள்ள மார்வை பிளந்து குருதி உக உகிர்வேல் ஆண்ட நின்மலன், Kuruthi Uga Ugirvel Aanda Ninmalan - ரத்தம் பீறிப்புறப்படும் படி நகங்களையே வேலாயுதமாகக் கொண்டு வியாபரித்தவனாயுமுள்ள பரிசுத்த பரமாத்மாவினது தான் அணைகிற்பீர், Thaan Anaikirbeer - திருவடிகளை சேர விரும்பும் அன்பர்களே! நீலம், Neelam - (மாடங்களிற் பதித்த) நீல ரத்னங்கள் மாலை தஞ்சு உடைய இருள் தழைப்ப, Maalaithanju Udaiya Irul Thazhaippa - அந்திப் பொழுதை ஆதாரமாகவுடைய இருட்டை அதிகப்படுத்தவும் ஆங்கே தரளம் தண் மதியின் நிலா காட்ட, Aange Tharalam Than Mathiyin Nila Kaata - அவற்றின் நடுவே யழுத்தின முத்துக்கள் குளிர்ந்த சந்திரனது நிலாவைக் காட்டவும் பவளம் தன்னால், Pavalam Thannal - (இடையிடையே அழுத்தப்பட்ட) பவழங்களாலே சுடர் செம் வெயில் விரிக்கும், Sudar Sem Veyil Virikkum - (உதயகாலத்து) ஸூர்யனுடைய சிவந்த காந்தியைப் பரப்பவும் பெற்று அழகு ஆர், Azhagu Aar - அழகு பொருந்தியுள்ள |
| 1182 | பெரிய திருமொழி || (3-4–ஒருகுறளாய்) (காழிச்சீராம விண்ணகம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து இப்படி ஆஸ்ரித விரோதிகளை கை தொட்டு போக்குமவன் திருவடிகளைக் கிட்ட வேண்டி இருப்பீர் ஸ்ரீ காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே) 5 | தெவ்வாய மற மன்னர் குருதி கொண்டு திருக் குலத்தில் இறந்தோர்க்குத் திருத்தி செய்து
வெவ்வாய மா கீண்டு வேழம் அட்ட விண்ணவர் கோன் தாள் அணைவீர் விகிர்த மாதர்
அவ்வாய வாள் நெடும் கண் குவளை காட்ட அரவிந்தம் முகம் காட்ட அருகே ஆம்பல்
செவ்வாயின் திரள் காட்டும் வயல் சூழ் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே –3-4-5 | பதவுரை Show / Hideதெவ் ஆய மறம் மன்னர் குருதி கொண்டு, Thev Aaya Maram Mannar Kuruthi Konda - சத்துருக்களாகிய வீரராஜாக்களினுடைய ரத்தத்தாலே திருக்குலத்தில் இறந்தோர்க்கு திருத்தி, Thirukkulathil Irandhorkku Thiruththi - தன் வம்சத்தில் மாண்டவர்களுக்குத் தர்ப்பணம் செய்து செய்த பரசுராமனாக அவதரித்தவனாயும் வெம் வாய மா கீண்டு, Vem Vaaya Maa Keendu - கொடிய வாயையுடைய குதிரையாக வந்த வசுரனைக் கிழித்தொழித் தவனாயும் வேழம் அட்ட, Vezham Atta - கம்ஸனது யானையை முடித்தவனாயுமுள்ள விண்ணவர்கோன், Vinnavarkon - தேவாதி தேவனுடைய திருவடிகளை தாள் அணைவீர் சேரவிரும்பு மன்பர்களே! குவளை விகிர்தம் மாதர் அவ்வாயலாள் நெடுங் கண் காட்ட, Nedung Kan Kaata - கருநெய்தற் பூக்களானவை விலகூணைகளான ஸ்திரிகளுடைய அப்படிப்பட்ட அழகிய நீண்ட கண்கள் போன்று விளங்கவும் அரவிந்தம் முகம் காட்ட, Aravindham Mugam Kaata - தாமரை மலர்களானவை (அவர்களது முகம் போன்று விளங்கவும் ) அருகே ஆம்பல் செம் வாயின் திரள் காட்டும், Aruke Aampal Sem Vaayin Thiral Kaatum - அருகிலுள்ள செவ்வல்லி மலர்களானவை (அவர்களது சிவந்த வாய்களின் கூட்டம் போன்று விளங்கவும் பெற்ற வயல் சூழ், Vayal Soozh - கழனிகளால் சூழப்பட்ட நெல் |
| 1183 | பெரிய திருமொழி || (3-4–ஒருகுறளாய்) (காழிச்சீராம விண்ணகம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (விரோதியைப் போக்கி தேவ ஜாதிக்கு குடி இருப்பைப் பண்ணிக் கொடுத்த ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளை ஆஸ்ரயிக்க வேண்டி இருப்பீர்) 6 | பைம் கண் விறல் செம் முகத்து வாலி மாளப் படர் வனத்துக் கவந்தனொடும் படையார் திண் கை
செங்கண் விறல் விராதன் உக வில் குனித்த விண்ணவர் கோன் தாள் அணைகிற்பீர் வெற்புப் போலும்
துங்க முக மாளிகை மேல் ஆயம் கூறும் துடி யிடையார் முகக் கமலச் சோதி தன்னால்
திங்கள் முகம் பனி படைக்கும் அழகார் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே –3-4-6 | பதவுரை Show / Hideபைங் கண் விறல் செம் முகம் வாலி மாள, Paing Kan Viral Sem Mukam Vaali Maala - பசுமை தங்கிய கண்களையும் மிடுக்கையும் (கோபத்தாற்) சிவந்த முகத்தையுமுடைய வாலியென்னும் வாநர ராஜன் முடியும்படியாகவும். (- (அழகு ஆர்காழி ………. சேர்மின்-.)) படர் வனத்து கவந்தனொடும் திண் படை ஆர்கை வெம் கண் விறல் வீராதன் உக, Patar Vanaththu Kavandhanodum Thin Padai Aarkai Vem Kan Viral Veeradhan Uga - பரந்த காட்டிலுள்ள கபந்தனென் பவனும் திடமான ஆயுதங்கள் நிறைந்த கைகளையும் உக்ரமான கண்களையும் வலிமையையுமுடைய விராதனெ ன்பவனும் முடியும்படியாகவும் வில் குனிந்த, Vil Kunindha - வில்லை வனைத்து (அம்புகளைப் பிரயோகித்த) விண்ணவர் கோன், Vinnavar Kon - தேவாதி தேவனுடைய தாள் அணைவீர், Thaal Anaiveer - திருவடிகளையடைய விரும்புமன்பர்களே!;- வெற்பு போலும் துங்கம் முகம் மாளிகை மேல் ஆயம் கூறும், Verpu Polum Thungam Mukam Maaligai Mael Aayam Koorum - மலை போன்று உயர்ந்த முகத்தையுடைய மாளிகைகளின் மேல் நிலத்திலே நின்று ஸ்நேஹமாகப் பேசிக் கொண்டிருக்கிற துடி இடையார், Thudi Idaiyaar - உடுக்கை போன்று நுண்ணிய இடையையுடைய மாதர்களது கமலம் முகம் சோதி தன்னால், Kamalam Mukam Sothi Thannal - தாமரை போன்ற முகத்தின் காந்தியினாலே திங்கள் முகம் பனி படைக்கும், Thingal Mukam Pani Padaikkum - சந்திரனுடைய முகத்திலே வருத்தமுண்டாக்கப் பெற்ற |
| 1184 | பெரிய திருமொழி || (3-4–ஒருகுறளாய்) (காழிச்சீராம விண்ணகம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சத்ருக்களால் சலிப்பிக்க அரிதான தோளை உடைய ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனைக் கிட்டி அவன் திருவடிகளை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்க வேண்டி இருப்பீர்) 7 | பொருவில் வலம்புரி யரக்கன் முடிகள் பத்தும் புற்றுமறிந்தன போலப் புவி மேல் சிந்த
செருவில் வலம்புரி சிலைக் கை மலைத் தோள் வேந்தன் திருவடி சேர்ந்து உய்கிற்பீர் திரை நீர்த் தெள்கி
மருவி வலம்புரி கைதைக் கழி யூடாடி வயல் நண்ணி மழை தரு நீர் தவழ் கால் மன்னி
தெருவில் வலம்புரி தரளம் ஈனும் காழிச் சீராம விண்ணகரம் சேர்மின் நீரே –3-4-7 | பதவுரை Show / Hideபொருவு இல் வலம்புரி அரக்கன் முடிகள் பத்தும் பத்தும் புற்று மறிந்தன போல புவிமேல சிந்த, Poruvu Il Valampuri Arakkan Mudigal Paththum Paththum Putttru Marindhana Pol Puvimel Sindha - ஒப்பற்ற வலிமையைக் கொண்டுள்ள இராவணனுடைய பத்துத் தலைகளும் புற்று சரியுமாபோலே (எளிதாகக்) கீழே இற்று விழும்படியாக (- (பிறகு அங்கு நின்றும் ) ( பிறகு அங்கு நின்றும் ) (காழி …………..சேர்மின்)) செருவில் வலம்புரி சிலை கைமலை தோள்வேந்தன், Seruvil Valampuri Silai Kaimalai Tholvendhan - யுத்தத்தில் வலிமை காட்டுகிற வில்லை திருக்கையிலேயுடைய மலை போன்ற தோள்களையுடைய சக்ரவர்த்தி திருமகனது திரு அடி சேர்ந்து உய்கிற்பீர், Thiru Adi Serndhu Uygirbeer - திருவடிகளையடைந்து வாழ விரும்புமன்பர்களே! வலம்புரி, Valampuri - சங்குகளானவை திரை எள்கி நீத்து மருவி, Thirai Elgi Neethu Maruvi - ஸமுத்ரத்தை இகழ்ந்து விட்டு நீங்கி (கடலில் நின்றும் வந்து ) (சீர்காழியிலே) வந்து சேர்ந்து கைதை கழியூடு ஆடி, Kaithai Kazhiyoodu Aadi - தாழைகள் நிறைந்த கழயினுள்ளே திரிந்து வயல் நண்ணி, Vayal Nanni - கழனிகளைச் சென்று சேர்ந்து மழை தருநீர்தவழ் கால், Mazhai Tharuneerthavazh Kaal - மழைநீர்வெள்ளம் பெருகி வருகிற வாய்க்கால்கள் மூலமாக தெருவில் மன்னி, Theruvil Manni - வீதிகளிலே வந்து சேர்ந்து வலம்புரி தரளம் ஈனும், Valampuri Tharalam Eenum - சங்குகளையும் முத்துக்களையும் (தெருக்களிலே) பிரஸவிக்கப்பெற்ற |
| 1185 | பெரிய திருமொழி || (3-4–ஒருகுறளாய்) (காழிச்சீராம விண்ணகம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ சத்ய பாமைப் பிராட்டி ஹேதுவாக என்றும் ஒக்க ஸ்வர்க்கத்தில் இருக்கக் கடவதான வ்ருஷத்தை பூமியிலே கொடு வந்து நிறுத்தினவனுடைய இத்தால் –அரியன செய்தும் ஆஸ்ரித ரஷணம் பண்ணுமவன் என்கை) 8 | பட்டரவேரகல்குல் பவளச் செவ்வாய் பணை நெடும் தோள் பிணை நெடும் கண் பாலாம் இன் சொல்
மட்டவிழும் குழலிக் காவானோர் காவில் மரம் கொணர்ந்தான் அடி யணை வீர் அணில்கள் தாவ
நெட்டிலைய கரும் கமுகின் செங்காய் வீழ நீள் பலவின் தாழ் சினையில் நெருங்கு பீனத்
தெட்ட பழம் சிதைந்து மதுச் சொரியும் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே –3-4-8 | பதவுரை Show / Hideபட்டு அரவு ஏர்அகல் அல்குல், Pattu Aravu Aerakhal Alkul - பட்டுச் சேலை யணிந்துள்ளதும், பாம்பின் படத்தை யொத்து அழகியதும் அகன்றதுமான நிதம்ப ப்ரதேசத்தையும் (- (காழி……… சேர்மின்)) பவளம் செம் வாய், Pavalam Sem Vai - பவழம் போற் சிவந்த அதரத்தையும் பணை நெடு தோள், Panai Nedu Thol - மூங்கில் போன்று நீண்ட தோள்களையும் பிணை நெடு கண், Pinai Nedu Kan - அமுதம் போன்று இனிமையான வாய்மொழிகளையும் மட்டு அவிழும் குழலிக்கா, Mattu Avizhum Kuzhalikka - முழயிலணிந்த மலர்களினின்றும் ) தேன்வெள்ள மிடா நின்ற கூந்தலையும் உடையளான ஸத்யபாமைப் பிராட்டிக்காக வானோர்காவின், Vaanorkavin - தேவலோகத்துச் சோலையில் நின்றும் மரம் கொணர்ந்தான், Maram Konarnthaan - பாரிஜாத மரத்தைப் பிடுங்கிக் கொண்டு வந்த பெருமானுடைய அடி அணைவீர், Adi Anaiveer - திருவடிகளைச் சேர விரும்புமன்பர்காள் அணில்கள் தாவ, Anilkal Thaava - அணிற்பிள்ளைகள் கிளை கிளையாகத் தாவித்தவழ்வதனால் நெடு இலைய கரு கமுகின் செங்காய் வீழ, Nedu Ilaiya Karu Kamukin Chengai Veezha - நீண்ட இலைகளையுடைய கறுத்த பாக்கு மரங்களின் பழுக்காய்கள் உதிர்ந்து விழ (அதனாலே) நீள் பலவின் தாழ் சினையில் நெருங்கு, Neel Palavin Thaazh Sinaiyil Nerungu - நீண்ட பலாமரங்களினுடைய (காய்களின் கணத்தால்) தாழ்ந்த கிளைகளில் நெருங்கியிருக்கிற பீனம் தெட்ட பழம் சிதைந்து மது சொரியும், Peenam Thetta Pazham Sithaindhu Madhu Soriyum - பருத்த கனியப்பழுத்த (பலாப்) பழங்கள் நசுங்கி தேனைப் பொழியுமிடமான |
| 1186 | பெரிய திருமொழி || (3-4–ஒருகுறளாய்) (காழிச்சீராம விண்ணகம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அபிமானிகளான ப்ரஹ்ம ருத்ராதிகளோடு அநந்ய பரையான ஸ்ரீ பிராட்டியோடு வாசி அற திருமேனியில் இடம் கொடுத்துக் கொண்டு இருக்கிற ஸ்ரீ சீலவானைப் பெற வேண்டி இருப்பீர்) 9 | பிறை தங்கு சடையானை வலத்தே வைத்து பிரமனை தன் உந்தியிலே தோற்றுவித்து
கறை தங்கு வேல் தடம் கண் திருவை மார்பில் கலந்தவன் தாள் அணைகிற்பீர் கழி நீர் கூடி
துறை தங்கு கமலத்துயின்று கைதைத் தோடாரும் பொதி சோற்றுச் சுண்ணம் நண்ணிச்
சிறை வண்டு களி பாடும் வயல் சூழ் காசிச் சீராம விண்ணகரம் சேர்மின் நீரே— –3-4-9 | பதவுரை Show / Hideபிறை தங்கு சடையானை வலத்தே வைத்து, Pirai Thangu Sadaiyainai Valatthae Vaiththu - சந்திரகலை தங்கியிருக்கப் பெற்ற சடைமுடியையுடையனான சிவனை வலவருகே வைத்துக் கொண்டிருப்பவனாயும் (- (காழி…….சேர்மின்)) பிரமனை தன் உந்தியிலே தோற்றுவித்து, Brahmanai Than Unthiyile Thotruviththu - நான்முகனைத் தனது ஜாபிக்கம லத்தில் படைத்தவனாயும் கறை தங்குவேல் தட கண் திருவைமார்வில் கலந்தவன், Karai Thanguvael Thada Kan Thiruvaimarvil Kalandhavan - சத்ருக்களின் ரத்தமாம்ஸக் கறை தங்கிய வேல் போன்று விசாலமான திருக்கண்களையுடைய பிராட்டியைத் திருமார்பிலே கொண்டுள்ளவனாயுமிருக்கிற பெருமானுடைய தாள் அணைகிற்பீர், Thaal Anaikirbeer - திருவடிகளைச்சேர விரும்புமன்பர்களே! சிறை வண்டு, Sirai Vandu - இறகையுடைய வண்டுகளானவை கழுநீர்கூடி, Kazhunirkoodi - செங்கழுநீர்ப்பூக்களில் (பேடையோடு) சேர்ந்திருந்து துறை தங்கு கமலத்து துயின்று, Thurai Thangu Kamalathu Thuyinru - நீர்நிலங்களிலுள்ள தாமரைப் பூவிலே (புகுந்து தேனைப் பருகி அங்கே) உறங்கி (அதன் பிறகு) கைதை தோடு ஆரும் பொதி சோற்றுச் சுண்ணம் நண்ணி, Kaithai Thodu Aarum Pothi Soattruch Sunnaam Nanni - தாழைமடல்களில் பொருந்தியுள்ள பூந்தாதுத் துகள்களிலே புரண்டு களி பாடும் வயல் சூழ், Kali Paadum Vayal Soozh - களித்து இசைபாடப் பெற்ற கழனிகளால் சூழப்பட்ட |
| 1187 | பெரிய திருமொழி || (3-4–ஒருகுறளாய்) (காழிச்சீராம விண்ணகம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நாயந்தே தேவரைக் கவி பாட என்று துடங்கி தம்மைக் கவி பாடிக் கொண்டார் என்ன – அதுவும் நம்மை அன்றோ சொல்லிற்று என்று திரு உள்ளம் ஆனார் ஸ்ரீ சர்வேஸ்வரனைப் போலே எல்லார்க்கும் தாங்களே ஆஸ்ரயணீயராவார்) 10 | செங்கமலத் தயன் அனைய மறையோர் காழிச் சீராம விண்ணகர் என் செங்கண் மாலை
அங்கமலத் தடம் வயல் சூழ் ஆலிநாடன் அருள்மாரி யரட்டமுக்கி யடையார்சீயம்
கொங்குமலர் குழலியர் கோன் மங்கை வேந்தன் கொற்ற வேல் பரகாலன் கலியன் சொன்ன
சங்க முத்தமிழ் மாலை பத்தும் வல்லார் தடம் கடல் சூழ் உலக்குக்கு தலைவர் தாமே –3-4-10 | பதவுரை Show / Hideசெங்கமலத்து அயன் அனைய மறையோர், Chengamalathu Ayan Anaiya Maraiyor - (திருநாபிக்) கமலத்திற் பிறந்த பிரமனையொத்த வைதிகரிகள் வாழ்கிற காழி சீராம விண்ணகரின், Kaazhi Seeraama Vinnagarin - காழிச் சீராம விண்ணகரத்திலுள்ள செங் கண் மாலை, Cheng Kan Maalai - செந்தாமரை போற் கண்ணனான பெருமான் விஷயமாக அம் கமலம் தடம் வயல் சூழ் ஆலி நாடன், Am Kamalam Thadam Vayal Soozh Aali Naadan - அழகிய தாமரைத்தடாகங்களையுடைய வயல்களால் சூழப்பட்ட திருவாலி நாட்டுக்குத் தலைவரும் அருள் மாரி, Arul Maari - (பக்தர்கட்கு) அருளைப் பொழியும் மேகம் போன்றவரும் அரட்டு அமுக்கி, Arattu Amukki - தீங்கு செய்யுமவர்களைத் தலையெடுக்க வொட்டாதே அமுங்கச் செய்பவரும் அடையார்சீயம், Adaiyaarcheeyam - சத்ருக்களுக்கு ஸிம்ஹம் போன்றவரும் கொங்கு மலர்குழலியர்வேள், Kongu Malarkuzhaliyarveel - தேன்மிக்க பூக்களையணிந்த கூந்தலையுடைய மாதர்க்கு விரும்பத்தக்கவரும் மங்கை வேந்தன், Mangai Vendan - திருமங்கைக்கு நிர்வாஹகரும் பரகாலன், Parakaalan - எதிரிகட்கு யமன் போன்றவரும் கொற்றம் வேல், Kotrama Veel - வெற்றி பொருந்தியவேற்படையை யுடையவருமான கலியன், Kaliyan - ஆழ்வார் சொன்ன, Sonna - அருளிச் செய்த சங்கம் முகம் தமிழ் மாலை பத்தும் வல்லார்தாம், Sangam Mukam Tamil Maalai Pathum Vallaartaam - (புலவர்) கூட்டங்கூடிக் கொண்டாடத் தகுந்த தமிழ்ப் பாசுரங்களான இப்பத்தையும் ஓதவல்லவர்கள் தட கடல் சூழ் உலகுக்கு தலைவர், Thada Kadal Soozh Ulagukku Thalaivar - பரந்த கடலால் சூழப்பட்ட உலகத்திலுள்ளார்க்கெல்லாம் மேலாயிருக்கப் பெறுவர். |