| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 328 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || நான்காம்பத்து - முதல் திருமொழி - கதிராயிரம் (ஸர்வேஸ்வரனைக் காணவேணுமென்று தேடுவார் சிலரும், கண்டார் சிலருமாகக் கூறுதல்) அறுசீர்க்கழிநெடிலடிய'சிரியவிருத்தம் 1 | கதிராயிர மிரவி கலந் தெரித்தா லொத்த நீள் முடியன் எதிரில் பெருமை இராமனை இருக்குமிடம் நாடுதிரேல் அதிரும் கழற் பொரு தோள் இரணிய னாகம் பிளந்து அரியாய் உதிரமளைந் தகையோடிருந்தானை உள்ளவா கண்டாருளர்–4-1-1 | கதிர்,Kathir - (எண்ணிறந்த) கிரணங்களை யுடைய ஆயிரம் இரவி,Aayiram Iravi - ஆயிரம் ஆதித்யர்கள் தறித்தால் ஒத்தத,Thariththaal Oththadha - ஜ்வலித்தாற்போல் (மிகவும் பளபளவா நின்றுள்ள) நீள் முடியன்,Neel Mudiyan - நீண்ட திருவபிஷேகத்தை உடையவனுமான இராமன்,Raaman - இராமபிரான் இருக்கும் இடம்,Irukkum Idam - எழுந்தருளியிருக்குமிடத்தை நாடுதிரேல்,Naadhuthireel - தேடுகிறீர்களாகில் (அவ்விடத்தை விட்டுச் செல்லுகிறேன்;) அதிரும்,Athirum - (கல கல் என்று) ஒலி செய்யா நின்றுள்ள கழல்,Kazhal - வீரக் கழலையும் பொரு தோள்,Poru Thol - போர் செய்யப் பதைக்கிற தோள்களையுமுடைய இரணியன்,Iraniyan - ஹிரண்யாஸுரனுடைய ஆகம்,Aagam - மார்பை அரி ஆய்,Ari Aay - நரஸிம்ஹ ருபியாய்க் கொண்டு பிளந்து,Pilandhu - கீண்டு உதிரம் அளைந்து,Uthiram Alainthu - (அதனாலுண்டான) ரத்தத்தை அளைந்த கையோடு,Kaiyodu - கைகளோடு கூடி இருந்தானை,Irundhaanai - (சீற்றந்தோற்ற) எழுந்தருளியிருந்த நிலைமையில் (அவனை) உள்ள ஆ உண்டார் உளர்,Ulla Aa Undaar Ular - உள்ள அவனை ஸேவித்தவர்கள் இருக்கின்றனர். |
| 329 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || நான்காம்பத்து - முதல் திருமொழி - கதிராயிரம் (ஸர்வேஸ்வரனைக் காணவேணுமென்று தேடுவார் சிலரும், கண்டார் சிலருமாகக் கூறுதல்) அறுசீர்க்கழிநெடிலடிய'சிரியவிருத்தம் 2 | நாந்தகம் சங்கு தண்டு நாணொலிச் சார்ங்கம் திருச் சக்கரம் ஏந்து பெருமை இராமனை இருக்குமிடம் நாடுதிரேல் காந்தள் முகிழ் விரல் சீதைக்காகிக் கடுஞ்சிலை சென்றிறுக்க வேந்தர் தலைவஞ் சனகராசன் தன் வேள்வியில் கண்டாருளர்–4-1-2 | நாந்தகம்,Naandhagam - நந்தகம் என்னும் வாளையும் சங்கு,Sangu - ஸ்ரீபாஞ்ச ஐன்யத்தையும் தண்டு,Thandu - கௌமோதகி என்னும் கதையையும் நாண் ஒலி,Naan Oli - நாண் கோஷத்தை யுடைய சார்ங்கம்,Saarngam - ஸ்ரீசார்ங்க ததுஸ்னையும் திரு சக்கரம்,Thiru Chakkaram - திருவாழி யாழ்வானையும் ஏந்து பெருமை இராமன்,Aendhu Perumai Raman - (திருக்கைகளில்) ஏந்தும்படியான பெருமையை யுடைய இராமபிரான் இருக்கும் இடம் நாடுதிரேல்,Irukkum Idam Naadhuthireel - எழுந்தருளியிருக்குமிடத்தை தேடுகிறீர்களாகில் (அவ்விடத்தை விட்டுச் செல்லுகிறேன்;) காந்தன் முகிழ் விரல் சீதைக்கு ஆகி,Gaanthan Mughil Viral Seethaaikku Aagi - செங்காந்தளம்பு போன்ற விரல்களையுடைய பிராட்டிக்காக வேந்தர் தலைவன்,Vaendhar Thalaivan - ராஜாதிராஜனான சனகராசன் தன்,Sanagaraasan Than - ஜனக சக்கரவர்த்தியினுடைய வேள்வியில்,Velviyil - யஜ்ஞ வாடத்திலே சென்று,Sendru - எழுந்தருளி கடு சிலை,Kadu Silai - வலிய வில்லை இறுக்க கண்டார் உளர்,Irukka Kandaar Ular - முறிக்கக் கண்டவர்கள் இருக்கின்றனர். |
| 330 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || நான்காம்பத்து - முதல் திருமொழி - கதிராயிரம் (ஸர்வேஸ்வரனைக் காணவேணுமென்று தேடுவார் சிலரும், கண்டார் சிலருமாகக் கூறுதல்) அறுசீர்க்கழிநெடிலடிய'சிரியவிருத்தம் 3 | கொலையானைக் கொம்பு பறித்துக் கூடலர் சேனை பொரு தழிய சிலையால் மராமர மெய்த தேவனைச் சிக்கென நாடுதிரேல் தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று தட வரை கொண்டடைப்ப அலையார் கடற்கரை வீற்றிருந்தானை அங்குத்தைக் கண்டாருளர்–4-1-3 | கொலை யானை,Kolai Yaanai - கொலை செய்வதையே இயல்பாக வுடைய (குவலய பீடமென்னும் யானையினுடைய கொம்பு,Kombu - தந்தங்களை பறித்து,Pariththu - பறித்துக் கொண்டவனும், கூடலர்,Koodalar - (ஜகஸ்தாதத்திலுள்ள ராக்ஷஸர்களாகிய) சத்துருக்களுடைய சேனை,Saenai - சேனையானது அழிய,Azhiya - அழியும்படி பொருது,Porudhu - போர் செய்தவனும், சிலையால்,Silaiyaal - வில்லாலே மராமரம்,Maraamaram - ஸப்த ஸால வ்ருக்ஷங்களை மெய்த,Meidha - எய்தவனுமான தேவனை,Thevanai - எம்பிரானை சிக்கன நாடுதிரேல்,Sikkana Naadhuthireel - த்ருடாத்யவஸாயத்தோடு தேடுகிறீர்களாகில், குரங்கு இனம்,Kurangu Inam - (அவனிருக்குமிடஞ் சொல்லுகிறேன்;) வாநர ஸேனையானது தடவரை,Thadavarai - பெரிய மலைகளை தலையால்,Thalaiyaal - (தமது) தலைகளினால் தாங்கிக் கொண்டு சென்று,Thaangik Kondu Sendru - சுமந்து கொண்டு போய் அடைப்ப,Adaippa - கடலின் நடுவே அணையாக) அடைக்க அலை ஆர் கடல் கரை,Alai Aar Kadal Karai - அலையெறிகிற கடற்கரையிலே வீற்றிருந்தானை,Veetrirundhaanai - எழுந்தருளியிருந்த இராமபிரானை அங்குத்தை கண்டார் உளர்,Anguththai - அந்த ஸந்நிவேசத்தில் கண்டார் உளர் |
| 331 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || நான்காம்பத்து - முதல் திருமொழி - கதிராயிரம் (ஸர்வேஸ்வரனைக் காணவேணுமென்று தேடுவார் சிலரும், கண்டார் சிலருமாகக் கூறுதல்) அறுசீர்க்கழிநெடிலடிய'சிரியவிருத்தம் 4 | தோயம் பரந்த நடுவு சூழலில் தொல்லை வடிவு கொண்ட மாயக் குழவியதனை நாடுதிறில் வம்மின் சுவடுரைக்கேன் ஆயர் மடமகள் பின்னைக்காகி அடல்விடை யேழினையும் வீயப் பொருது வியர்த்து நின்றானை மெய்ம்மையே கண்டாருளர்–4-1-4 | பரந்த,Parandha - எங்கும் பரவின தோயம் நடுவு,Thoyam Naduvu - ஜலத்தின் நடுவே சூழலின்,Soozhalin - உபாயத்தினால் தொல்லை வடிவு கொண்ட,Thollai Vadivu Konda - பழமையான (பெரிய) வடிவைச் சுருக்கிக் கொண்ட மாயம் குழலி அதனை,Maayam Kuzhali Adhanai - அந்த ஆச்சர்யக் குட்டியை நாடுதிறில்,Naadhuthiril - தேட முயன்றீர்களாகில் வம்மின்,Vammin - (இங்கே) வாருங்கள்; சுவடு உரைக்கேன்,Suvadu Uraikkaen - (உங்களுக்கு) ஓரடையாளம் சொல்லுகின்றேன்; ஆயர் மகள்,Aayar Magal - (ஸ்ரீகும்பர் என்னும்) ஆயருடைய பெண் பிள்ளையும் மடம்,Madam - மடப்பம் என்ற குணத்தை உடையவளுமான பின்னைக்கு ஆகி,Pinnaikku Aagi - நப்பின்னைப் பிராட்டிக்காக அடல் விடை யேழினையும்,Adal Vidai Eaezhinaiyum - வலிய ரிஷபங்களேழும் வீய,Veea - முடியும்படியாக பொருது,Porudhu - (அவற்றோடு) போர் செய்து (அந்த ஆயாஸத்தாலே) வியர்த்து நின்றானை,Viyarththu Nindraanai - குறு வெயர்ப்பரும்பின வடிவுந்தானுமாய் நின்றவனை மெய்யம்மையே,Meiyyammayae - உண்மையாகவே கண்டார் உளர் |
| 332 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || நான்காம்பத்து - முதல் திருமொழி - கதிராயிரம் (ஸர்வேஸ்வரனைக் காணவேணுமென்று தேடுவார் சிலரும், கண்டார் சிலருமாகக் கூறுதல்) அறுசீர்க்கழிநெடிலடிய'சிரியவிருத்தம் 5 | நீரேறு செஞ்சடை நீல கண்டனும் நான்முகனும் முறையால் சீரேறு வாசகஞ் செய்ய நின்ற திருமாலை நாடுதிரேல் வாரேறு கொங்கை உருப்பிணியை வலியப் பிடித்துக் கொண்டு தேரேற்றி சேனை நடுவு போர் செய்யச் சிக்கெனக் கண்டாருளர்–4-1-5 | நீர்,Neer - (எம்பெருமானது ஸ்ரீபாத) தீர்த்தமானது ஏறு,Eru - ஏறப் பெற்ற செம் சடை,Sem Sadai - சிவந்த ஜடையையுடைய நீல கண்டனும்,Neela Kandhanum - (விஷமுடையதனால்) கறுத்த மிடற்றை யுடையவனான சிவ பெருமானும். நான்முகனும்,Naanmughanum - சதுர் முக ப்ரஹ்மாவும் முறையால்,Muraiyaal - (சேஷ சேஷி பாவமாகிற) முறையின்படி சீர் ஏறு வாசகம் செய்ய நின்ற,Seer Eru Vaasagam Seiyya Nindra - சிறந்த சொற்களைக் கொண்டு துதிக்கும்படி அமைந்து நின்ற திருமாலை,Thirumaalai - ச்ரிய : பதியாகிய எம்பெருமானை நாடுதிரேல்,Naadhuthireel - தேடுகிறீர்களாகில், (இதைக் கேளுங்கள்;) வார் ஏறு,Vaar Eru - கச்சை அணிந்த கொங்கை,Kongai - முலைகளை யுடைய உருப்பிணியை,Urupiniyai - ருக்மிணிப் பிராட்டியை வலிய,Valiya - பலாத்காரமாக பிடித்துக்கொண்டு தேர் ஏற்றி,Ther Eritti - (தனது) திருத் தேரின் மேல் ஏற விட்டு சேனை நடுவு,Saenai Naduvu - (அவ்வளவிலே சிசுபாலதிகளான பல அரசர்கள் எதிர்த்துவர) அவ்வரசர்களுடைய ஸேநா மத்யத்திலே போர் செய்ய,Por Seiyya - (அவ்வரசர்களோடு )யுத்தம் செய்ய சிக்கென கண்டார் உளர்,Sikkena Kandaar Ular - திண்மையான (த்ருடமாக) கண்டார் உளர் |
| 333 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || நான்காம்பத்து - முதல் திருமொழி - கதிராயிரம் (ஸர்வேஸ்வரனைக் காணவேணுமென்று தேடுவார் சிலரும், கண்டார் சிலருமாகக் கூறுதல்) அறுசீர்க்கழிநெடிலடிய'சிரியவிருத்தம் 6 | பொல்லா வடிவுடைப் பேய்ச்சி துஞ்சப் புணர் முலை வாய் மடுக்க வல்லானை மா மணி வண்ணனை மருவுமிடம் நாடுதிரேல் பல்லாயிரம் பெருந்தேவி மாரொடு பெளவம் ஏறி துவரை எல்லாரும் சூழச் சிங்காசனத்தே இருந்தானைக் கண்டாருளர்–4-1-6 | பொல்லா வடிவு உடைபேய்ச்சி,Polla Vadivu Udaipeychchi - மஹா கோரமான வடிவை யுடைய பூதனை யானவள் அஞ்ச,Anja - மாளும்படியாக புணர்முலை,Punarmulai - தன்னில் தான் சேர்ந்திருள்ள (அவளது) முலையிலே வாய் மடுக்க வல்லான்,Vaai Madukka Vallaan - (தனது) வாயை வைத்து உண்ண வல்லவனும் மா மணிவண்ணன்,Maa Manivannan - நீலமணி போன்ற நிறத்தை யுடையவனுமான எம்பெருமான் மருவும் இடம்,Maruvum Idam - பொருந்தி எழுந்தருளி யிருக்குமிடத்தை நாடுதிரேல்,Naadhuthireel - தேடுகிறீர்களாகில் பௌவம் ஏறி துவரை,Pauvam Eri Thuvarai - (இதைக் கேளுங்கள்:) கடலலைகள் வீசப் பெற்றுள்ள ஸ்ரீத்வாரகையிலே எல்லாரும் சூழ,Ellaarum Soozha - தேவிமார் எல்லாரும் சுற்றுஞ் சூழ்ந்து கொண்டிருக்க பல் ஆயிரம் பெரு தேவிமாரொடு,Pal Aayiram Peru Devimaarodu - (அந்தப்) பதினாறாயிரம் தேவிமாரோடு கூட சிங்காசனத்து,Singaasanaththu - ஸிம்ஹாஸநத்தில் இருந்தானை கண்டார் உளர்,Irundhaanai Kandaar Ular - எழுந்தருளி யிருக்கும் போது கண்டார் உளர் |
| 334 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || நான்காம்பத்து - முதல் திருமொழி - கதிராயிரம் (ஸர்வேஸ்வரனைக் காணவேணுமென்று தேடுவார் சிலரும், கண்டார் சிலருமாகக் கூறுதல்) அறுசீர்க்கழிநெடிலடிய'சிரியவிருத்தம் 7 | வெள்ளை விளி சங்கு வெஞ்சுடர்த் திருச் சக்கரம் ஏந்து கையன் உள்ள விடம் வினவில் உமக்கு இறை வம்மின் சுவடுரைக்கேன் வெள்ளைப் புரவிக் குரக்கு வெல் கொடித் தேர் மிசை முன்பு நின்று கள்ளப் படைத் துணையாகிப் பாரதம் கை செய்யக் கண்டாருளர்–4-1-7 | வெள்ளை,Vellai - வெண்மை நிறமுடையதும் விளி,Vili - (அநுபவ கைங்கரியங்களில் ருசியுடையீர்! வாருங்கள் என்று, தன் த்வநியால்) அழைப்பது போன்றுள்ளதுமான சங்கு,Sangu - ஸ்ரீபாஞ்ச ஜந்யத்தையும் வெம் சுடர்,Vem Sudar - தீக்ஷ்ணமான ஜ்யோதிஸ்ஸை யுடைய திருச் சக்கரம்,Thiruch Chakkaram - திருவாழி யாழ்வாளையும் ஏந்து கையன்,Aendhu Kaiyan - தரியா நின்றுள்ள திருக்கைகளையுடைய எம்பெருமான் உள்ள இடம்,Ulla Idam - எழுத்தருளி யிருக்குமிடத்தை வினவில்,Vinavil - கேட்கிறீர்களாகில் உமக்கு,Umakku - (கேட்கிற) உங்களுக்கு இறை சுவடு உரைக்கேன்,Irai Suvadu Uraikkaen - சிறிது அடையாளம் சொல்லுகிறேன், வம்மின்,Vammin - வாருங்கள்; வெள்ளைப் புரவி,Vellaip Puravi - வெள்ளைக் குதிரகைள் பூண்டிருப்பதும் குரங்குகொடி,Kurangukodi - குரங்காகிற வெற்றிக் கொடியை உடையதுமான தேர்மிசை,Thermisai - (அர்ஜுனனுடைய) தேரின் மேலே முன்பு நின்று ,Munbu Nindru - (ஸாரதியாய்) முன்னே நின்று படை,Padai - ஸைந்யத்துக்கு கள்ளம் துணை ஆகி,Kallam Thunai Aagi - க்ருத்ரிமத் துணையாயிருந்து பாரதம்,Bhaaratham - பாரத யுத்தத்தை கை செய்ய கண்டார் உளர்,Kai Seiyya Kandaar Ular - அணி வகுத்து நடத்தும் போது கண்டார் உளர் |
| 335 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || நான்காம்பத்து - முதல் திருமொழி - கதிராயிரம் (ஸர்வேஸ்வரனைக் காணவேணுமென்று தேடுவார் சிலரும், கண்டார் சிலருமாகக் கூறுதல்) அறுசீர்க்கழிநெடிலடிய'சிரியவிருத்தம் 8 | நாழிகை கூறிட்டுக் காத்து நின்ற அரசர்கள் தம் முகப்பே நாழிகை போகப் படை பொருதவன் தேவகி தன் சிறுவன் ஆழி கொண்டு அன்று இரவி மறைப்பச் சயத்திரதன் தலையை பாழி லுருளப் படை பொருதவன் பக்கமே கண்டாருளர்–4-1-8 | நாழிகை ,Naazhikai - (பகல் முப்பது) நாழிகைகளை கூறி விட்டு,Koouri Vittu - பங்கிட்டுக்கொண்டு காத்து நின்ற,Kaaththu Nindra - (ஜயத்ரதனைக்) காத்துக் கொண்டிருந்த அரசர்கள் நம் முகப்பே,Arasargal Nam Mugappae - ராஜாக்கள் முன்னிலையில் நாழிகை போக,Naazhikai Poga - (பகல் முப்பது) நாழிகையும் போயிற்றென்று தோற்றும்படியாக படை,Padai - (தன்) ஆயுதமாகிய திருவாழியாழ்வானைக் கொண்டு பொருதவன்,Porudhavan - (ஸூர்யனை) மறைத்தவனும் தேவகி தன் சிறுவன்,Devagi Than Siruvan - தேவகிப்பிராட்டியின் பிள்ளையுமான கண்ணபிரான் உள்ள இடம் கேட்கிறீர்களாகிய சொலலுகின்றேன்; (உள்ள இடம்),Ulla Idam - எழுந்தருளியிருக்குமிடத்தை ஆழி கொண்டு,Aazhi Kondu - திருவாழியினால் இரவி,Iravi - ஸூர்யனை மறைப்ப,Maraippa - (தான்) மறைக்க, சயத்திரதன்,Sayaththiradhan - (அதனால் பகல் கழிந்த்தாகத் தோற்றி வெளிப்பட) ஜயத்ரனுடைய தலை,Thalai - தலையானது. பாழில் உருள,Paazhil Urula - பாழியிலே கிடந்துருளும்படி படை பொறாதவன் பக்கமே,Padai Poraadhavan Pakkamae - அம்பைச் செலுத்தின அர்ஜுநனருகில் கண்டார் உளர்,Kandaar Ular - (அவ் வெம்பெருமானைக்) கண்டாருண்டு. |
| 336 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || நான்காம்பத்து - முதல் திருமொழி - கதிராயிரம் (ஸர்வேஸ்வரனைக் காணவேணுமென்று தேடுவார் சிலரும், கண்டார் சிலருமாகக் கூறுதல்) அறுசீர்க்கழிநெடிலடிய'சிரியவிருத்தம் 9 | மண்ணும் மலையும் மறி கடல்களும் மற்றும் யாவுமெல்லாம் திண்ணம் விழுங்கி யுமிழ்ந்த தேவனைச் சிக்கென நாடுதிரேல் எண்ணற் கரிய தோரேனமாகி இரு நிலம் புக்கிடந்து வண்ணக் கருங்குழல் மாதரோடு மணந்தானைக் கண்டாருளர்–4-1-9 | மண்ணும்,Mannum - பூமியையும் மலையும்,Malaiyum - மலைகளையும் மறி,Mari - அலை யெறியா நின்றுள்ள கடல்களும்,Kadalgallum - கடல்களையும் மற்றும் யாவும் எல்லாம்,Matrum Yaavum Ellaam - மற்றுமுண்டான எல்லாப் பொருள்களையும் திண்ணம்,Thinnam - நிச்சயமாக விழுங்கி,Vizhungi - (ப்ரளயங் கொள்ளாதபடி) திருவயிற்றிலே வைத்து நோக்கி உமிழ்ந்த,Umizhndha - (பின்பு ப்ரளயங்கழிந்தவாறே அவற்றை வெளி…..காண) உமிழ்ந்து தேவனை,Thevanai - எம்பெருமானை சிக்கென,Sikkena - ஊற்றத்துடனே நாடுதிரேல்,Naadhuthireel - தேடுகிறீர்களாகில், (இதனைக் கேளுங்கள்.) எண்ணற்கு அரியது,Ennarku Ariyadhu - நினைக்க முடியாத (பெருமையையுடைய) ஓர்,Or - ஒப்பற்ற ரேனமாகி ,Raenamaagi - அவதரித்து புக்கு,Pukku - ப்ரளய வெள்ளத்தில் புகுந்தது இரு நிலம்,Eru Nilam - பெரிய பூமியை இடந்து,Edandhu - அண்ட பித்தியில் நின்றும் ஒட்டு விடுவித்தெடுத்து (அவ்வளவிலே பூமிப்பிராட்டி தன்னை வந்து அணைக்க,) வண்ணம்,Vannam - அழகியதும் கரு,Karu - கறுத்ததுமான குழல்,Kuzhal - குந்தலையுடைய மாதரோடு ,Maadharodum - (அந்த) பூமிப்பிராட்டியோடு மணந்தானை கண்டார் உளர்,Manandhaanai Kandaar Ular - ஸமச்லேஷித்தருளினவனை கண்டார் உளர் |
| 337 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || நான்காம்பத்து - முதல் திருமொழி - கதிராயிரம் (ஸர்வேஸ்வரனைக் காணவேணுமென்று தேடுவார் சிலரும், கண்டார் சிலருமாகக் கூறுதல்) அறுசீர்க்கழிநெடிலடிய'சிரியவிருத்தம் 10 | கரிய முகில் புரை மேனி மாயனைக் கண்ட சுவடுரைத்து புரவி முகம் செய்து செந்நெலோங்கி விளை கழனிப் புதுவை திருவிற் பொலி மறை வாணன் பட்டர் பிரான் சொன்ன மாலை பத்தும் பரவு மனமுடைப் பத்தருள்ளார் பரமனடி சேர்வர்களே–4-1-10 | கரியமுகிற் புரை மேனி,Kariyamugir Purai Maeni - கரு மலர் போன்ற திருமேனியுடையனும் மாயனை,Maayanai - ஆச்சரிய செய்கைகளை யுடையனுமான கண்ணபிரானை கண்ட சுவடு,Kanda Suvadu - ஸேவித்த அடையாளங்களை உரைத்த,Uraitha - அருளிச் செய்த; செந்நெல்,Sennel - செந்நெற் பயிர்களானவை ஓங்கி,Ongi - (ஆகாசமளவும்) உயர்ந்து புரவி முகம் செய்து,Puravi Mugam Seidhu - குதிரை முகம் போலத் தலை வணங்கி விளை,Vilai - விளையா நிற்கப் பெற்ற கழனி,Kazhani - வயல்களை யுடைய புதுவை,Puduvai - ஸ்ரீவில்லிபுத்தார்க்குத் தலைவரும் திருவின்,Thiruvin - (விஷ்ணு பக்தியாகிற) செல்வத்தினால் பொலி,Poli - விளங்கா நின்றுள்ளவரும் மறை வாணன்,Marai Vaanan - வேதத்துக்கு நிர்வாஹகருமான பட்டர் பிரான்,Pattar Piraan - பெரியாழ்வார் சொன்ன,Sonna - அருளிச்செய்த மாலை பத்தும்,Maalai Paththum - சொல் மாலையாகிற இப் பத்துப் பாட்டையும் பரவும் மனம் உடை,Paravum Manam Udai - அநுஸத்திக்கைக் கீடான மநஸ்ஸை யுடையவரும் பக்தர் உள்ளார்,Bakthar Ullaar - பக்தியை யுடையவருமாயிருப்பவர்கள் பரமன்,Paraman - பரம புருஷனுடைய அடி,Adi - திருவடிகளை சேர்வர்கள்,Saervargal - கிட்டப் பெறுவார்கள் |