திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 4-3 பேரணிந்து (10 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1268பெரிய திருமொழி || (4-3–பேரணிந்து) (திருநாங்கூர்ச் செம்பொன் செய்கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (லோகத்தில் காட்டிலும் ஐஸ்வர்யம் விஞ்சி இருக்கும் ஆய்த்து அவ் ஊரில் – அது அடைய தோற்றும்படி தர்ச நீயமான மாடங்களை உடைய திரு நாங்கூரில் நன்றான நடுவுள் ஸ்ரீ செம் பொன் செய் கோயிலின் உள்ளே- கார் காலத்திலே வர்ஷ உந்முகமாகமாய்க் கொண்டு அழகிய வடிவை உடைத்ததாய் இருப்பதொரு மேகம் போலே இருககிறவனைக் கண்ணாலே கண்டு அனுபவிக்கப் பெற்று அசந்நேவ-என்னும் நிலை தீர்ந்து சந்தமேனம் -என்கிறபடியே உஜ்ஜீவித்து க்ருதார்த்தன் ஆனேன் -என்கிறார்) 1
பேரணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும் பேரருளாளன் எம்பிரானை வாரணிமுலையாள் மலர் மகளோடு மண் மகளும் உடன் நிற்ப சீரணி மாட நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே காரணி மேகம் நின்றது ஒப்பானைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே –4-3-1
பதவுரை Show / Hide
உலகத்தவர் பேர் அணிந்து, Ulagaththavar Per Anindhu - இவ்வுலகிலுள்ளார் அனைவரும் திருநாம ஸங்கீர்த்தனஞ் செய்துகொண்டு (- (கண்டு கொண்டு ஸேவித்து))
தொழுது ஏத்தும் பேரருளாளன், Thozhuthu Aethum Perarulalan - அடிபணிந்து துதிக்கப்பெற்ற பேரருளாளப் பெருமாளாய்
எம்பிரானை, Embiranaik - எமக்கு ஸ்வாமியாய்
கார் அணிமேகம் நின்றது ஒப்பானை, Kaar Animegam Nindrathu Oppanai - மழைகாலத்தில் உண்டான அழகிய மேகம் நிற்கிறாப் போலுள்ளவனான பெருமானை
சீர் அணிமாடம் நாங்கை நல்நடுவுள், Seer Animaadam Naangkai Nalanaduvul - அழகு பொருந்திய மாடங்களையுடைய திருநாங்கூரில் நட்டநடுவிலே
செம்பொன் செய் கோயிலின் உள்ளே, Sembon Sei Koyilin Ullae - செம்பொன் செய்கோயில் என்னுந் திருப்பதியிலே,
வார் அணி முலையாள், Vaar Ani Mulaiyal - கச்சணிந்த முலையையுடையளான
மலர் மகளோடு, Malar Magalodu - பெரிய பிராட்டியும்
மண் மகளும், Man Magalum - பூமிப்பிராட்டியும்
உடன் நிற்ப, Udan Nirpa - கூடியிருக்க
உய்ந்தொழிந்தேன், Uyndozhindhen - உஜ்ஜீவித்துப்போனேன்
1269பெரிய திருமொழி || (4-3–பேரணிந்து) (திருநாங்கூர்ச் செம்பொன் செய்கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கீழ் திரு மேனி திவ்ய மங்கள விக்ரஹத்தை அனுபவித்து இதில் திவ்ய ஆத்ம ஸ்வரூபம் திவ்ய குண ஸ்வரூபம் அனுபவிக்கிறார்) 2
பிறப்பொடு மூப்பு ஓன்று இல்லவன் தன்னைப் பேதியா இன்ப வெள்ளத்தை இறப்பு எதிர் காலக் கழிவும் ஆனானை ஏழு இசையின் சுவை தன்னைச் சிறப்புடை மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே மறைப் பெரும் பொருளை வானவர் கோனைக் கண்டு நான் வாழ்ந்து ஒழிந்தேனே –4-3-2
பதவுரை Show / Hide
பிறப்பொடு மூப்பு ஒன்று இல்லவன் தன்னை, Pirappodu Mooppu Ondru Illavan Thannai - பிறப்பு கிழத்தனம் முதலிய வாகாரங்களொன்று மில்லாதவனாய் (- (கண்டு நான் வாழ்ந்தொழிந்தேன்))
பேதியா இன்பம் வெள்ளத்தை, Paethiya Inbam Vellathai - என்றுமொருபடிப்பட்ட ஆநந்தக்கடலாய் இருப்பவனாய்
இறப்பு எதிர் காலம் கழிவும் ஆனானை, Irappu Edhir Kaalam Kazhivum Aananaik - மூன்று காலங்களிலும் உள்ளவனாய்
ஏழ் இசையின் சுவைதன்னை, Ezhu Isaiyin Suvaithannai - ஸப்தஸ்வரங்களினுடைய ரஸம்போல் போக்யனாய்
மறைபெரு பொருளை, Maraiperu Porulai - வேதங்களிற் சிறந்த பொருளாயிருப்பவனாய்
வானவர் கோனை, Vaanavar Konai - நித்யஸூரி நாதனான எம்பெருமானை
சிறப்பு உடை மறையோர், Sirappu Udai Maraivor - சிறந்த வைதிகர்கள் வாழ்கிற
நாங்கை நல்நடுவுள், Naangkai Nalanaduvul - திருநாங்கூரில் நட்டநடுவிலே
செம்பொன்செய்கோயிலின் உள்ளே, Sembonseikoyilin Ullae - செம்பொன்செய்கோயில் என்னும் திருப்பதியிலே
1270பெரிய திருமொழி || (4-3–பேரணிந்து) (திருநாங்கூர்ச் செம்பொன் செய்கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (காணவே தாபத் த்ரயம் ஆறும்படி ஸ்ரமஹரமான வடிவை உடையவனை கண்டு அனுபவித்து நான் உஜ்ஜீவிக்கப் பெற்றேன் -என்கிறார்) 3
திட விசும்பு எரி நீர் திங்களும் சுடரும் செழு நிலத்து உயிர்களும் மற்றும் படர் பொருள்களுமாய் நின்றவன் தன்னைப் பங்கயத்தயன் அவன் அனைய திட மொழி மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே கடல் நிற வண்ணன் தன்னை நான் அடியேன் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே –4-3-3
பதவுரை Show / Hide
திடம், Thidam - திடமான (- (நாங்கை நன்னடுவுள் செம்பொன்செய்) (கோயிலின் உள்ளே அடியேன் நான் கண்டுகொண்டு உய்ந்து ஒழிந்தேன்))
விசும்பு எரி நீர், Visumbu Eri Neer - ஆகாசம் அக்நி ஜலம் முதலான பஞ்சபூதங்களும்
திங்களும், Thingalum - சந்திரனும்
சுடரும், Sudarum - ஸூர்யனும்
செழு நிலத்து பிராணிகளும், Sezhu Nilathu Piranigalum - வளம்மிக்க பூமியிலுள்ள பிராணிகளும்
மற்றும் படர் பொருள்களும், Mattrum Padar Porulgalum - மற்றும் பலவகைப்பட்ட பதார்த்தங்களும் (ஆகிய இவற்றுக்கு)
ஆய் நின்றவன் தன்னை, Aayi Nindravan Thannai - அந்தர்யாமியா யிருப்பவனும்
கடல் நிறம் வண்ணன் தன்னை, Kadal Niram Vannan Thannai - கடலின் நிறம் போன்ற திருமேனியை யுடையனுமான பெருமானை
பங்கயத்து அயன் அவன் அனைய, Pangayathu Ayan Avan Anaiya - தாமரையிற் பிறந்த பிரமனைப் போன்றவர்களாய்
திடம் மொழி மறையோர், Thidam Mozhi Maraiyor - திடமான வாக்கையுடையவர்களான அந்தணர்கள் வாழ்கிற
1271பெரிய திருமொழி || (4-3–பேரணிந்து) (திருநாங்கூர்ச் செம்பொன் செய்கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கீழ்ப் பாட்டில் அந்தராத்மாவை அனுபவித்தவர் இதில் விபவத்தையும் அதுக்கடியான வ்யூஹத்தையும் அனுசந்தித்து உகக்கிறார்) 4
வசையறு குறளாய் மாவலி வேள்வியில் மண் அளவிட்டவன் தன்னை அசைவறும் அமரர் அடி இணை வணங்க வலைகடல் துயின்ற வம்மானைத் திசை முகனனை யோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே உயர் மணி மகுடம் சூடி நின்றானைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே –4-3-4
பதவுரை Show / Hide
வசை அறு குறள் ஆய், Vasai Aru Kural Aayi - குற்றமற்ற வாமநரூபியாய்க்கொண்டு (- (நாங்கை நன்னடுவுள் செம்பொன்செய் கோயிலின் உள்ளே கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேன்))
மாவலி வேள்வியில், Mavali Velviyil - மஹாபலியினுடைய யாக பூமியில்
மண் அளவிட்டவன் தன்னை, Man Azhavittavan Thannai - உலகளந்தவனும்,
அசைவு அறும் அமரர், Asaivu Arum Amarar - சலிப்பில்லாத நித்யஸூரிகள்
அடி இணை, Adi Inai - உபயபாதங்களை
வணங்க, Vananga - ஆச்ரயிக்கும்படியாக
அலை கடல் துயின்ற அம்மானை, Alai Kadal Thuyinra Ammanaik - அலையெறிகின்ற திருப்பாற் கடலில் பள்ளிகொண்டிருப்பவனும்,
உயர் மணி மகுடம் சூடி நின்றானை, Uyar Mani Makudam Soodi Nindranaik - உயர்ந்த ரத்ன கிரீடத்தை அணிந்துகொண்டிருப்பவனுமான பெருமானை
திசைமுகன் அனையோர், Thisaimugan Anaiyor - பிரமனைப்போன்ற அந்தணர்கள் வாழ்கிற
1272பெரிய திருமொழி || (4-3–பேரணிந்து) (திருநாங்கூர்ச் செம்பொன் செய்கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (விபவத்தில் நெஞ்சு சென்று ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ண அவதாரங்களைப் பேசி அனுபவிக்கிறார்) 5
தீ மனத்து அரக்கர் திறல் அழித்தவனே என்று சென்று அடைந்தவர் தமக்குத் தாய் மனத்து இரங்கி யருளினைக் கொடுக்கும் தயரதன் மதலையைச் சயமே தேமலர்ப் பொழில் சூழ் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலினுள்ளே காமனைப் பயந்தான் தன்னை நான் அடியேன் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே –4-3-5
பதவுரை Show / Hide
தீ மனத்து அரக்கர் திறல் அழித்தவனே என்று, Thee Manaththu Arakkar Thiral Azhithavane Endru - ‘தீய நெஞ்சையுடையரான ராக்ஷஸர்களின் உடைய மிடுக்கை நாசம் செய்தவனே!’ என்று சொல்லிக்கொண்டு (- (நன்னடுவுள் செம்பொன்செய் கோயிலின் உள்ளே அடியேன் நான் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன்))
சென்று அடைந்தவர் தமக்கு, Sendru Adaindhavar Thamakku - வந்து கிட்டினவர்கள் விஷயத்தில்
தாய் மனத்து இரங்கி அருளினை கொடுக்கும், Thaai Manaththu Irangi Arulinai Kodukkum - தாய்போலே கரைந்து கிருபை பண்ணுகின்ற
தயரதன் மதலையை, Thayaradhan Mathalaiyai - தசரத புத்ரனானவனும்
காமனை பயந்தான் தன்னை, Kaamanai Bayandhaan Thannai - ப்ரத்யும்நனைப் படைத்தவனுமான பெருமானை
சயம் மே, Sayam Mae - ஜயசப்தங்கள் பொருந்தியிருக்கப் பெற்றதும்
தேன் மலர் பொழில் சூழ், Then Malar Pozhil Soozh - தேன்நிறைந்த புஷ்பங்களையுடைய சோலைகளாலே சூழப்பட்டதுமான
நாங்கை, Naangkai - திருநாங்கூரில்
1273பெரிய திருமொழி || (4-3–பேரணிந்து) (திருநாங்கூர்ச் செம்பொன் செய்கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இலங்கை ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படி கைக்கு எட்டிற்று ஓர் அம்பை விட்டவனை நிரவதிக சம்பத்தை உடைய பிராமணர் உடைய அவர்கள் ஐஸ்வர்யத்துக்கு நிதான பூதையான ஸ்ரீ பெரிய பிராட்டியார் உடன் கூடக் காணப் பெற்று சாம்சாரிக சகல துரிதங்களும் தீரப் பெற்றேன்) 6
மல்லை மா முந்நீர் அதர்பட மலையால் அணை செய்து மகிழ்ந்தவன் தன்னை கல்லின் மீது இயன்ற கடி மதிள் இலங்கை கலங்க ஓர் வாளி தொட்டானைச் செல்வ நான் மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே அல்லி மா மலராள் தன்னோடும் அடியேன் கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேனே –4-3-6
பதவுரை Show / Hide
மல்லை மாமுந்நீர் அதர்பட, Mallai Maamunneer Atharpad - செல்வம் மிக்க பெரிய கடலானது வழியாக அமையும்படி (- (நாங்கை நன்னடுவுள் செம்பொன்செய் கோயிலின் உள்ளே;))
மலையால் அணை செய்து மகிழ்ந்தவன் தன்னை, Malaiyaal Anai Seidhu Magizhndhavan Thannai - மலைகளைக்கொண்டு அணைகட்டி திருவுள்ள முகந்தவனும்,
கல்லின் மீது இயன்ற கடி மதிள் இலங்கை கலங்க, Kallin Meedhu Iyandra Kadi Mathil Ilangai Kalang - (த்ரிகூடமென்னும்) மலையின் மேலே கட்டப்பட்ட அரணான மதிளை யுடைத்தான இலங்காபுரியானது சிதறிபொழியும்படி
ஓர் வாளி தொட்டனை, Oor Vaalai Thottanai - ஒரு அம்பை பிரயோகித்தவனுமான பெருமாணை
செல்வம் நால்மறையோர், Selvam Naalmaraiyore - சதுர்வேதங்களைச் செல்வமாகவுடைய அந்தணர் வாழ்கிற
அல்லி மாமலராள் தன்னொடும், Alli Maamalaraal Thannodum - பிராட்டியோடு கூட
அடியேன் கண்டுகொண்டு, Adiyen Kandukondu - அடியேன் ஸேவித்து
அல்லல் தீர்ந்தேன், Allal Theerndhen - துன்பங்கள் தொலையப் பெற்றேன்
1274பெரிய திருமொழி || (4-3–பேரணிந்து) (திருநாங்கூர்ச் செம்பொன் செய்கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பருவம் நிரம்பாத அளவிலே ஆய்த்து ஈஸ்வரன் செய்ததைச் செய்தது கம்சனை நிரசித்து -ஆஸ்ரித விரோதி போகப் பெற்றோம் -என்று ஸ்ரமஹரமான என்ற வடிவோடு நின்றவனை-கண்டார் கண் குளிரும்படியாக ஓர் அஞ்சன கிரி நின்றாப் போலே நிற்கிறவனை கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேனே) 7
வெஞ்சினக் களிறும் வில்லோடு மல்லும் வெகுண்டு இருத்து அடர்த்தவன் தன்னைக் கஞ்சனைக் காய்ந்த காளை யம்மானைக் கரு முகில் நிறத்தவனைச் செஞ்சொல் நான் மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே அஞ்சனக் குன்றம் நின்றது ஒப்பானைக் கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேனே –4-3-7
பதவுரை Show / Hide
வேம் சினம் களிறு வெகுண்டும், Vaem Sinam Kaliru Vegundum - வெவ்விய கோபத்தை யுடைத்தான (குவலயா பீடமென்னும்) யானையைச் சீறி முடித்தும், (- (நாங்கை ஈன்னடுவுள் செம்பொன்செய் கோயிலின் உள்ளே கண்டுகொண்டு;))
வில் இறுத்து மல்லும்அடர்ந்தவன் தன்னை, Vil Iruththu Mallum Adarnthavan Thannai - (கம்ஸன் பூஜையின் வைத்திருந்த) வில்லை முறித்தும் மல்லர்களையும் முடித்தவனாய்
கஞ்சனை காய்ந்த காளை, Kanjanai Kaayndha Kaalai - கம்ஸனைக் கோபித்து முடித்த யுவாவான
அம்மானை, Ammaanai - ஸ்வாமியாய்
கருமுகில் திரு நிறத்தவனை, Karumugil Thiru Niraithavanai - காளமேகத் திருவுருவனாய்
அஞ்சனம் குன்றம் நின்றது ஒப்பானை, Anjanam Kunram Nindrathu Oppaanai - ஒரு மைமலை நின்றது போன்றுள்ளவனான பெருமானை
செம் சொல் நாவல் மறையோர், Sem Sol Naaval Maraiyore - அழகிய சொற்களையுடையரான வைதிகர் வாழ்கிற
அல்லல் தீர்ந்தேன், Allal Theerndhen - துன்பங்கள் தொலையப் பெற்றேன்.
1275பெரிய திருமொழி || (4-3–பேரணிந்து) (திருநாங்கூர்ச் செம்பொன் செய்கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இன்னமும் பாணன் போல்வார் விரோதிகள் வந்து முளைக்கில் செய்வது என் என்று மின் விளங்கா நின்றுள்ள சிகரத்தை உடைத்தான ஸ்ரீ திருமலையில் நித்ய வாசம் பண்ணுகிற வேதைகசமதி கம்யனாய் ஸ்வயம் பிரகாசமான ஸ்வரூபத்தை உடையனாய் உள்ளவனை-பாலோடு சக்கரை சேர்த்து பருகுவாரைப் போலே ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்துடன் ஸ்ரீ திருவேம்கடமுடையானை சேர்த்து அனுபவிக்கிறார்) 8
அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி தொட்டானை மின் திகழ் குடுமி வேங்கடமலை மேல் மேவிய நல் வேத விளக்கைத் தென் திசை திலதம் அனையவர் நாங்கைச் செம் பொன் செய் கோயிலின் உள்ளே மன்றது பொலிய மகிழ்ந்து நின்றானை வணங்கி நான் வாழ்ந்து ஒழிந்தேனே –4-3-8
பதவுரை Show / Hide
அன்றியலாணன் ஆயிரம் தோளும் துணிய, Anriyalanan Aayiram Tholum Thuniy - கோபித்து எதிரிட்ட பாணாஸுரனுடைய ஆயிரந்தோள்களும் அறுத்துவிழும்படி (- (நாங்கை  செம்பொன்செய்) (கோயிலின் உள்ளே;) (நான் வணங்கி வாழ்ந்தொழிந்தேன்))
அன்று ஆழி தொட்டானை, Anru Aazhi Thottanai - அக்காலத்தில் திருவாழியைப் பிரயோகித்தவனும்
மின்திகழ் குடுமி வேங்கடம் மலை மேல் மேவிய, Minthigazh Kudumi Vengadam Malai Mel Meviy - ஒளிவிளங்கானின்ற சிகரத்தையுடைய திருவேங்கடமலையின் மேல் பொருந்தியிருப்பவனும்
வேதம் கல் விளக்கை, Vedham Kal Vilakkai - வேதங்களால் காணக்கூடிய நல்ல விளக்கானவனும்,
தென்திசை திலதம் அனையவர், Thendhisai Thilatham Anaiyavar - தென்திசைக்குத் திலகம் போன்ற மஹான்கள் வாழ்கிற
மன்ற அது பொலிய மகிழ்ந்து நின்றானே, Manra Adhu Poliya Makizhndu Nindraane - ஸ்ரீ வைஷ்ணவகோஷ்டி விளங்கத் திருவுள்ளமுவந்துநிற்பவனுமான பெருமானை
1276பெரிய திருமொழி || (4-3–பேரணிந்து) (திருநாங்கூர்ச் செம்பொன் செய்கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பாலும் சக்கரையும் அனுபவித்து தமக்கு இனித்தாகையாலே எல்லாருக்கும் ரசித்தவன் என்று கொண்டு அருளிச் செய்கிறார்) 9
களம் கனி வண்ணா கண்ணனே என்தன் கார் முகிலே என நினைந்திட்டு உளம் கனிந்து இருக்கும் அடியவர் தங்கள் உள்ளத்து ஊறிய தேனைத் தெளிந்த நான்மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே வளம் கொள் பேரின்பம் மன்னி நின்றானை வணங்கி நான் வாழ்ந்து ஒழிந்தேனே –4-3-9
பதவுரை Show / Hide
களங்கனி வண்ணா, Kalankani Vanna - களாப்பழம்போன்ற திருநிறமுடையவனே! (- (தெளிந்த நான் மறையோர் நாங்கை நன்னடுவுள்) (செம்பொன்செய் கோயிலின் உள்ளே;) (நான் வணங்கி வாழ்ந்தொழிந்தேன்))
கண்ணனே, Kannane - ஸ்ரீக்ருஷ்ணனே!
என்தன் கார்முகிலே, Enthan Kaarmugile - என்னுடைய காளமேகமே!
என நினைந்திட்டு, En Ninaindittu - என்று தியானித்து
உளம் கனிந்திருக்கும், Ulam Kanindirukkum - நெஞ்சு பரிபக்குவமாயிருக்கிற
அடியவர், Adiyavar - தங்கள்  அடியார்களுடைய
உள்ளத்துள் ஊறிய தேனை, Ullaththul Ooriy Thenai - ஹ்ருதயத்திலே மாற்றுமாறாதே யிருக்கிற தேன் போன்றவனும்,
வளம் கொள்பேர் இன்பம் மன்னி நின்றானை, Valam Kolpaer Inbam Manni Nindraanai - மிகுந்த பரமாநந்தம் பொருந்தி நிற்பவனுமான பெருமானை
1277பெரிய திருமொழி || (4-3–பேரணிந்து) (திருநாங்கூர்ச் செம்பொன் செய்கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பரப்பை உடைத்தான வெண் கொற்றக் குடைக் கீழே பூமியை அடைய பாகவத சேஷம் ஆக்குகைகாக நிர்வஹித்து அநந்தரம்-நிரவதிக ப்ரீதி உக்தராய் நித்ய சூரிகளோடு ஒரு கோவையாகப் பெறுவர் பேரருளாளன் எம்பிரான் -என்று உபக்ரமித்து வானவர் கோனை -என்று உபசம்ஹரிக்கிறார் தேவ ராஜா பிதாமகர் தனம் -அயர்வறும் அமரர்கள் அதிபதி நலமுடையவன் அருளினன் அயர்வறும் அமரர்கள் அதிபதி – கோயில் திருமலை பெருமாள் கோயில் உய்ந்து ஒழிந்தேன் வாழ்ந்து ஒழிந்தேன் அல்லல் தீர்ந்தேன் -ஒன்பது பாட்டும் ஒரு தட்டு இந்த பல சுருதி ஒரு தட்டு -ஒன்பதோடு ஒன்றும்) 10
தேனமர் சோலை நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலினுள்ளே வானவர் கோனைக் கண்டமை சொல்லும் மங்கையார் வாள் கலிகன்றி ஊனமில் பாடல் ஒன்பதோடு ஒன்றும் ஒழிவின்றிக் கற்று வல்லார்கள் மான வெண் குடைக் கீழ் வையகம் ஆண்டு வானவர் ஆகுவர் மகிழ்ந்தே –4-3-10
பதவுரை Show / Hide
தேன் அமர் சோலை, Then Amar Solai - வண்டுகள் படிந்த சோலைகளையுடைய
நாங்கை, Naangkai - திருநாங்கூரில்
நல் நடுவுன், Nal Naduvun - நட்ட நடுவில்
செம்பொன்செய் கோயிலின் உள்ளே, Sembonsei Koyilin Ullae - செம்பொன்செய் கோயிலென்னுந் திருப்பதியிலே
வானவர் கோனை, Vaanavar Konai - தேவாதிதேவனை
கண்டமை, Kandamai - தாம் ஸேவித்தபடியை
சொல்லும், Sollum - அருளிச்செய்தவரும்
மங்கையார், Mangaiyaar - திருமங்கையில் உள்ளார்க்குத் தலைவரும்
வாள், Vaal - வாட்படையை யுடையவருமான
கலிகன்றி, Kalikanri - திருமங்கையாழ்வாருடைய,
ஊனம் இல் பாடல், Oonam Il Paadal - குறையொன்றுமில்லாத பாசுரமான
ஓன்பதோடு ஒன்றும், Onpathodu Onrum - இப்பத்துப்பாட்டுகளையும்
ஒழிவு இன்றி, Ozhivu Inri - ஒன்றும் விடாமல்;
கற்று வல்லார்கள், Kattru Vallarhal - ஓதி யுணரவல்லவர்கள்
மானம், Maanam - பரப்பையுடைய
வெண் குடை கீழ், Ven Kudai Keezh - வெண்கொற்றக் குடையின் கீழ் (இருந்துகொண்டு)
வையகம், Vaiyagam - பூ மண்டலத்தை
ஆண்டு, Aandu - அரசாண்டு
மகிழ்ந்து, Magizhndu - உவந்து
வானவர் ஆகுவர், Vaanavar Aaguvar - (பிறகு) நித்யஸூரிகளுமாவர்