திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1278 | பெரிய திருமொழி || (4-4–மாற்றரசர்) (திருநாங்கூர்த் திருத்தெற்றியம்பலம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பகவத் சரணாரவிந்த திவ்ய பரிமளம் யாதொரு ஜந்துவின் இடத்தில் உண்டாகிறதோ அங்கு சூரிகள் பிரசாதமும் குறைவற உண்டாம்–ஸ்வாபதேசம்- முதலையாலே இடர் பட்ட அளவிலே வந்து உதவிற்று இலன் என்று எனக்கு நான் கடவேனாய் இடர் பட்டேனோ ஒருவர் இல்லாதாப் போலே -இடர் படுவதே -என்று ஆனையை ரஷித்த கண்ணர் கிடீர்) 1 | மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும் மற்றவர்தம் காதலிமார் குழையும் தந்தை
கால் தளையும் உடன் கழல வந்து தோன்றிக் கத நாகம் காத்தளித்த கண்ணர் கண்டீர்
நூற்று இதழ் கொள் அரவிந்தம் நுழைந்த பள்ளத்து இளம்கமுகின் முது பாளை பகுவாய் நண்டின்
சேற்றளையில் வெண் முத்தம் சிந்து நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண்மாலே –4-4-1 | பதவுரை Show / Hideபள்ளத்து, Pallaththu - தாழ்ந்த நிலத்தில் முளைத்துள்ள நூறு இதழ் கொள் அரவிந்தம் நுழைந்த, Nooru Idazh Kol Aravindham Nuzhaindha - பல இதழ்களையுடைய தாமரைப் பூவிலே பிரவேசித்த பகு வாய் நண்டின், Pagu Vaai Nandin - விரிந்தவாயை யுடைத்தான நண்டினுடைய சேறு அளையில், Seru Alaiyil - சேறுமிக்க விளையிலே இள கமுகின் முது பாளை, Ila Kamugin Muthu Paalai - இளைய பாக்கு மரங்களினுடைய முற்றின பாளையானது வெண்முத்தம் சிந்து, Venmuththam Sindhu - வெளுத்த முத்துக்களை இறைக்கப்பெற்ற நாங்கூர், Naangoor - திருநாங்கூரில் திருத்தெற்றியம்பலத்து, Thiruththetriyampalathu - திருத்தெற்றியம்பலம் என்னுந் திருப்பதியில் எழுந்தருளியுள்ள என், En - எனக்கு ஸ்வாமியாய் செம் கண் மால், Sem Kan Maal - செந்தாமரைக் கண்ணனான ஸர்வேச்வரன் (எப்படிப்பட்டவனென்றால்,) மாறு அரசர் மணி முடியும் திறலும் தேசும், Maaru Arasar Mani Mudiyum Thiralum Desum - பகைவரான (துரியோதனன் முதலிய) அரசர்களினுடைய மாணிக்கங்களிழைத்த கிரீடங்களும் வலியும் தேஜஸ்ஸும் அவர்தம் காதலிமார் குழையும், Avardham Kaadhalimaar Kuzhaiyum - அவ்வரசரது மனைவியின் காதணியும் தந்தை கால் தளையும், Thandai Kaal Thalaiyum - தன் தகப்பனாரான வஸுதேவருடைய காலிலே இடப்பட்டிருந்த விலங்கும் உடன் கழல, Udan Kazhala - ஏககாலத்திலே ஒழியும்படியாக வந்து தோன்றி, Vandhu Thondri - திருவவதரித்தவனாயும் கதம் நாகம், Kadham Naagam - சீற்றத்தையுடைய கஜேந்திராழ்வானை காத்து அளித்த, Kaathu Aliththa - ரக்ஷித்தருளினவனாயுமுள்ள கண்ணர்கண்டீர், Kannarkandheer - கண்ணபிரான் காண்மின். |
| 1279 | பெரிய திருமொழி || (4-4–மாற்றரசர்) (திருநாங்கூர்த் திருத்தெற்றியம்பலம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒருத்தரும் விரும்பாத நஞ்சை யுண்டு அறிவு குடி புகுராமையாலே உகந்த பிள்ளை கண்டீர் மடமகள் வடிவு கொண்ட -என்னாமல் மடமகள் தன் வடிவு கொண்ட -அசாதாரணமான வேஷம்) 2 | பொற்றொடித் தோள் மடமகள் தன் வடிவு கொண்ட பொல்லாத வன் பேய்ச்சி கொங்கை வாங்கிப்
பெற்றெடுத்த தாய் போல் மடுப்ப யாரும் பேணா நஞ்சுண்டு உகந்த பிள்ளை கண்டீர்
நெற்றோடுத்த மலர் நீலம் நிறைந்த சூழல் இரும் சிறிய வண்டொலியும் நெடும் கணார் தம்
சிற்றடிமேல் சிலம்பொலியும் மிழற்று நாங்கூர் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே –4-4-2 | பதவுரை Show / Hideநெல் தொடுத்த நீலம்மலர்நிறைந்த சூழல், Nel Thodutha Neelammalarniraindha Soozhal - நெற்கதிர்களின்மேல் வரிசை வரிசையாகக் கட்டப்பட்ட கரு நெய்கற் பூக்களாலே நிறைந்துள்ள சுற்றுப்புறங்களில் (- (நாங்கூர், திருத்தெற்றியம்பலத்து, என் செங்கண் மால்!)) இரு சிறைய வண்டஒலியும், Iru Sirai Vandaoliyum - அழகிய சிறகுகளையுடைய வண்டுகளின் ஆரவாரமும் நெடு கண்ணார்தம் சிறு அடிமேல் சிலம்பு ஒலியும், Nedu Kannaartham Siru Adimeel Silambu Oliyum - நீண்ட கண்களையுடையரான மாதர்களது சிறிய பாதங்களிலணிந்த தண்டைகளினுடைய ஓசையும் மிழற்று, Mizhatru - தொனிக்கப்பெற்ற பொன்தொடி தோள், Pondhodi Thol - பொன் வளைகளணிந்த புஜங்களை உடையவளும் மடம் மகள் தன், Madam Magal Than - ஆத்மகுணம் உடையவளுமான யசோதைப் பிராட்டியினுடைய வடிவு கொண்ட, Vadivu Konda - வேஷத்தை ஏறிட்டுக்கொண்டுவந்த பொல்லாத வன் பேய்ச்சி, Polladha Van Paeychchi - மிகவும் பொல்லாத பூதனையானவள் கொங்கை வாங்கி, Kongai Vaangi - (தனது) முலையைக் கையாலெடுத்து பெற்று எடுத்த தாய் போல மடுப்ப, Petru Edutha Thaai Pola Maduppa - பெற்றுவளர்த்த தாய்போலே |
| 1280 | பெரிய திருமொழி || (4-4–மாற்றரசர்) (திருநாங்கூர்த் திருத்தெற்றியம்பலம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இடைச்சிகள் சிறு குடில்களின் வாசலிலே படலைத் திருக்கி வைத்துப் போனால் படலை திறந்து நுழைந்து புக்கு-அன்று கடைந்த வெண்ணெய் செவ்வி அழியாமல் அமுது செய்கைக்காக- இவனுக்கு நுழைந்து புகுகை யாகை இறே குடிலின் உடைய பெருமை) 3 | படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்குப் பசு வெண்ணெய் பதமாரப் பண்ணை முற்றும்
அடல் அடர்த்த வேற்கணார் தோக்கை பற்றி அலந்தலைமை செய்து உழலும் ஐயன் கண்டீர்
மடலெடுத்த நெடும் தெங்கின் பழங்கள் வீழ மாங்கனிகள் திரட்டு உருட்டா வரு நீர்ப் பொன்னி
திடலெடுத்து மலர் சுமந்து அங்கு இழியும் நாங்கூர் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே –4-4-3 | பதவுரை Show / Hideமடல் எடுத்த நெடு தெங்கின, Madal Edutha Nedu Thengin - பாளைகள் மிகவும் நிறைந்து உயர்ந்துள்ள தென்னை மரங்களினின்று, (- (நாங்கூர், திருத்தெற்றியம்பலத்து என் செங்கண் மால்;)) பழங்கள், Pazhangal - காய்கள் வீழ, Veela - (மாமங்களின் மீது) விழ அதனால் உதிர்ந்த மாங்கனிகள் திரட்டு, Manganihal Thirattu - மாம்பழத் திரள்களை உருட்டா மலர் சுமந்துவரும் நீர் பொன்னி, Urutta Malai Sumandhuvarum Neer Ponni - உருட்டிக்கொண்டும் (பல வகைப்) பூக்களையடித்துக் கொண்டும் பெருகுகின்ற பிரவாஹத்தையுடைய காவேரியானது திடல் எடுத்து, Thidal Eduthu - மேட்டு நிலங்களை யெடுத்துவிட்டு இழியும், Izhiyum - வெள்ளமிடப்பெற்ற பசு வெண்ணெய் பதம் ஆர, Pasu Vennai Padham Aara - அப்போது கடைந்து வைத்த வெண்ணெயை அமுது செய்வதற்காக படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்துபுக்கு, Padal Adaitha Siru Kurambai Nuzhaindupukku - படலிட்டு மூடிவைத்த சிறு குடில்களிலே நுழைந்து உள்ளேபோய் அடல் அடர்த்த வேல்கண்ணார், Adal Adaritha Velkannaar - போர்செய்வதற்குரிய வேற்படைபோன்ற கண்களையுடையரான இடைச்சிகளினுடைய தோக்கை, Thokkai - சேலைத் தலைப்பை பற்றி, Patri - பிடித்திழுத்து அலந்தலைமை செய்து, Alandhalamai Seythu - துன்பமான சேஷ்டைகளைப் பண்ணி பண்ணை முற்றும் உழலும், Pannai Mutrum Uzhalum - இடைச்சேரி யெங்குந் திரிகின்ற ஐயன் கண்டீர், Aiyan Kandeer - மஹாநுபாவன் காண்மின் |
| 1281 | பெரிய திருமொழி || (4-4–மாற்றரசர்) (திருநாங்கூர்த் திருத்தெற்றியம்பலம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கறுப்பு ஆர்ந்த திண்ணியதான ருஷபங்களை அடர்த்து விவாஹ மங்களத்தை நிர்வஹித்த கரு முகில் போல் திரு நிறத்து என் கண்ணர்) 4 | வாராரும் முலை மடவாள் பின்னைக்காகி வளை மருப்பில் கடுஞ்சினத்து வன் தாள் ஆர்ந்த
காரார் திண் விடை யடர்த்து வதுவை யாண்ட கருமுகில் போல் திரு நிறத்து என் கண்ணர் கண்டீர்
ஏராரும் மலர்ப் பொழில்கள் தழுவி எங்கும் எழில் மதியைக் கால் தொடர விளங்கு சோதிச்
சீராரு மணி மாடம் திகழு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே –4-4-4 | பதவுரை Show / Hideஏர் ஆரும் மலர் பொழில்கள், Aer Aarum Malai Pozhilgal - அழகுபொருந்திய புஷ்பங்களையுடைய சோலைகளானவை (- (நாங்கூர், திருத்தெற்றியம்பலத்து என் செங்கண் மால்)) எங்கும் தழுவி, Engum Thazhuvi - ஆகாசமுள்ளவளவும் வியாபித்து எழில் மதியை, Ezhil Mathiyai - அழகிய சந்திரனை கால் தொடர, Kaal Thodara - (அசையவொட்டாமல்) பால் கட்டப்பெற்றதும் விளங்கு சோதி சீர் ஆரும் மணி மாடம் திகழும், Vilangu Sothi Seer Aarum Mani Maadam Thigazhum - விளங்குகின்ற ஒளியையுடைய அழகிய மணிமாடங்கள் பிரகாசிக்கப்பெற்றதுமான வார் ஆரும் முலை மடவாள் பின்னைக்கு ஆகி, Vaar Aarum Mulai Madavaal Pinnaikku Aagi - கச்சணிந்த முலையையுடையவளும் ஆத்மகுணங்களை உடையவளுமான நப்பின்னைப்பிராட்டியைப் பெறுதற்காக, வளை மருப்பின், Valai Maruppin - வளைந்த கொம்புகளையுடையனவாய் கடு சினத்து, Kadu Sinatthu - மிக்க கோபத்தை யுடையனவாய் வன் தாள் ஆர்ந்த, Van Thaal Aarnth - வலிய கால்களையுடையனவாய் கார் ஆர், Kaar Aar - கருநிறம் பொருந்தியவான திண் விடை, Thin Vidai - வலிய ரிஷபங்களை அடர்ந்து, Adarnthu - வலியடக்கி வதுவை ஆண்ட, Vadhuvai Aanda - (அவளை) விவாஹஞ் செய்துகொண்ட கருமுகில் கோல் திருநிறத்துஎன் கண்ணர்கண்டீர், Karumugil Kol Thiruniraththen Kannarkandheer - நீலமேகச்யாமளனான நம் கண்ணபிரான் காண்மின். |
| 1282 | பெரிய திருமொழி || (4-4–மாற்றரசர்) (திருநாங்கூர்த் திருத்தெற்றியம்பலம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ ருக்மிணி ஸ்ரீ நப்பின்னை இருவர் உடன் சம்ஸ்லேஷித்த படியை அனுசந்திக்கிறார்- வெளுத்த தந்த பங்க்தியை உடைய ஸ்ரீ பெரிய பிராட்டியார்- அவன் திருமேனியைப் பார்த்த படியே இருக்கையாலே திருமேனியிலே கறுப்பு கண்ணிலே ஊறின ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டி) 5 | கலை இலங்கும் அகல் அல்குல் கமலப் பாவை கதிர் முத்த வெண்ணகையாள் கரும் கண் ஆய்ச்சி
முலை இலங்கும் ஒளி மணிப் பூண் வடமும் தேய்ப்ப மூவாத வரை நெடும் தோள் மூர்த்தி கண்டீர்
மலை இலங்கு நிரைச் சந்தி மாட வீதி யாடவரை மட மொழியார் முகத்திரண்டு
சிலை விலங்கி மனம் சிறை கொண்டு இருக்கும் நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே –4-4-5 | பதவுரை Show / Hideமுலை இலங்குநிரை சந்தி மாடம் வீதி, Mulai Ilangunirai Sandhi Maadam Veethi - மலைபோல் விளங்குகின்ற வரிசைவரிசையாக ஒன்றோடொன்று சேர்ந்திருக்கிற மாடங்களையுடைய தெருக்களிலே (- (நாங்கூர், திருத்தெற்றியம்பலத்துஎன் செங்கண் மால்;)) மடம் மொழியார், Madham Mozhiyaar - இனிய பேச்சையுடைய பெண்களின் முகத்து, Mugaththu - முகத்திலுள்ள இரண்டு சிலை, Irandu Silai - இரண்டு விற்கள் போன்ற புருவங்களானவை விலங்கி, Vilangi - வளைந்து ஆடவரை மனம் சிறைகொண்டு இருக்கும், Aadavarai Manam Siraiykondu Irukkum - ஆண்பிள்ளைகளின் மனத்தை ஸ்வாதீனப்படுத்திக் கொண்டிருக்கப்பெற்ற கலை இலங்கும், Kalai Ilangum - மேகலை விளங்கப்பெற்ற அகல் அல்குல், Akal Alkul - அகன்ற நிதம்பத்தையுடையளாய் கதிர்முத்தவெள் நகையாள், Kathirmuthavell Nagaiyaal - ஒளிபொருந்திய முத்துப் போலே வெளுத்த பற்களையுடையளான கமலம் பாவை, Kamalam Paavai - பெரியபிராட்டியினுடையவும் கரு கண் ஆய்ச்சி, Karhu Kan Aaychchi - கறுத்த கண்களையுடையளான நப்பின்னைப் பிராட்டியினுடையவும் முலை இலங்கும் ஒளி மணி பூண்வடமும் தேய்ப்ப, Mulai Ilangum Oli Mani Poonvadam Theyppa - தனங்களிலே விளங்குகின்ற அழகிய மணிகளிழைத்துச் செய்யப்பட்ட கண்டிகையும் ஹாரமும் உராய, (அதனால்) மூவாத, Moovadha - நித்யயௌவனம் மாறாத வுரை நெடுதோள், Vurai Neduthol - மலைபோன்று நெடிய திருத் தோள்களையுடைய மூர்த்தி கண்டீர், Moorthi Kandeer - ஸ்வாமி காண்மின். |
| 1283 | பெரிய திருமொழி || (4-4–மாற்றரசர்) (திருநாங்கூர்த் திருத்தெற்றியம்பலம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ ஆப்பான் திருவழுந்தூர் அரையரும் மற்றும் உள்ள முதலிகளுமாக இப்பாட்டில் சொல்லுகிறது என் -என்று ஸ்ரீ பட்டருக்கு விண்ணப்பம் செய்ய0ஒரு கால் இயலைக் கேளா ராவணன் வார்த்தை காண்-என்று அருளிச் செய்தார்) 6 | தான் போலும் என்று எழுந்தான் தரணியாளன் அது கண்டு தரித்து இருப்பான் அரக்கர் தங்கள்
கோன் போலும் என்று எழுந்தான் குன்றம் அன்ன இருபது தோளுடன் துணித்த ஒருவன் கண்டீர்
மான் போலும் மென்னோக்கில் செய்ய வாயார் மரகதம் போலே மடக்கிளியைக் கை மேல் கொண்டு
தேன் போலும் மென் மழலை பயிற்று நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே –4-4-6 | பதவுரை Show / Hideமான் போலும் மென் நோக்கின், Maan Polum Men Nookkin - மானின் நோக்குப்போன்ற அழகிய நோக்கையுடையராய் (- (நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என்) (செங்கண் மால்–;-)) செய்ய வாயார், Seyya Vaayaar - சிவந்த அதரத்தையுமுடையரான பெண்கள் மரகதம் போல், Maragatham Pol - மரகதப்பச்சை போலே பசுமையாய் மடம், Madham - அழகியதான கிளியை, Kiliyai - கிளிப்பிள்ளையை கை மேல் கொண்டு, Kai Mel Kondu - தங்கள் கைகளின் மேல்வைத்துக்கொண்டு தேன் போலும் மெல் மழலை, Then Polum Mel Mazhalai - தேன் போலினியமிருதுவான பேச்சை புயிற்றும், Puyitrum - கற்பிக்கப்பெற்ற தரணி ஆளன் தான் போலும் என்றுஎழுந்தான், Tharani Aalan Thaan Polum Endru Ezhunthaan - ‘(இராமனென்கிற ஒரு சிறு மனிசன்) பூமியையெல்லாம் தானே ஆள்பலனாக நினைத்து அஹங்காரப்படுகின்றான்; அது கண்டு, Adhu Kandu - அதை அறிந்தும் தரித்து இருப்பான், Thariththu Iruppaan - (அந்த ராமனைத் தண்டியாமல்) பொறுத்திருப்பவன் அரக்கர் தங்கள் கோன்போலும், Arakkar Thangal Konpolum - ராக்ஷஸர்க்குத் தலைவனாவனோ’ என்று, Endru - என்றிப்படி நினைத்து எழுந்தான், Ezhunthaan - கிளர்ந்தவனான இராவணனுடைய குன்றம் அன்ன, Kundram Anna - மலைபோன்ற இருபது தோள், Irupathu Thol - இருபது தோள்களையும் உடன், Udan - ஏககாலத்தில் துணித்த, Thuniththa - அறுத்தொழித்த ஒருவன் கண்டீர், Oruvan Kandeer - தனிவீரன் காண்மின். |
| 1284 | பெரிய திருமொழி || (4-4–மாற்றரசர்) (திருநாங்கூர்த் திருத்தெற்றியம்பலம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ சர்வேஸ்வரன் செல்லும்படியான யாகம் இறே மங்கலங்கள் சேரத் தட்டு இல்லை இறே மகா பலி உடையனாய் தான் குறைவாளனாய் இரந்த-என்ன பிள்ளை தான்) 7 | பொங்கு இலங்கு புரி நூலும் தோலும் தாழப் பொல்லாத குறள் உருவாய் பொருந்தா வாணன்
மங்கலம் சேர் மறை வேள்வி யதனுள் புக்கு மண்ணகலம் குறை இரந்த மைந்தன் கண்டீர்
கொங்கு அலர்ந்த மலர்க் குழலார் கொங்கை தோய்ந்த குங்குமத்தின் குழம்பு அளைந்த கோலம் தன்னால்
செம் கலங்கல் வெண் மணல் மேல் தவழு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே –4-4-7 | பதவுரை Show / Hideகொங்கு அலர்ந்த, Kongu Alarntha - பரிமளம் பரவாநின்ற (- (நாங்கூர், திருத்தெற்றியம்பலத்து என் செங்கண் மால்;)) மலர் குழலார், Malar Kuzhalaar - பூக்களையணிந்த கூந்தலையுடையரான மாதர்களின் கொங்கை தோய்ந்த, Kongai Thoyntha - தனங்களின் மீது படிந்த குங்குமத்தின் குழம்பு, Kungumaththin Kuzhambu - குங்குமச்சாறு தன்னை அளைந்த, Alaindha - அளைந்ததனாலுண்டான கோலம் தன்னால், Kolam Thannal - அழகினால் செம், Sem - சிவந்திருக்கிற கலங்கல், Kalangal - வெள்ளமானது வெண் மணல் மேல் தவழும், Ven Manal Mel Thavazhum - வெளுத்த மணற்குன்றுகளின் மேல் பரவப்பெற்ற பொங்கு இலங்கு புரிநூலும் தோலும் தாழ, Pongu Ilangu Purinoolum Tholum Thaazha - மிக விளங்குகின்ற யஜ்ஞோப வீதமும் கிருஷ்ணாஜிநமும் தொங்கப்பெற்ற பொல்லாத குறள் உரு ஆய், Polladha Kurall Uru Aay - அழகிய வாமநமூர்த்தியாகி பொருந்தா வாணன், Porundha Vaanan - ஆஸுரப்ரக்ருதியான மஹாபலியினுடைய மங்கலம் சேர் மறை வேள்வி அதனுள் புக்கு, Mangalam Ser Marai Velvi Adhanul Pukku - மங்களம் பொருந்திய வேத கோஷத்தையுடைய யாக பூமியிலே எழுந்தருளி குறைமண்அகலம் இரந்த மைந்தன் கண்டீர், Kuraimanagalam Irandha Maindan Kandeer - தனக்கு வேண்டியதான பூமியையாசித்த சிறுககன் காண்மின் கேளா, Kela - கேட்டு என்றபடி |
| 1285 | பெரிய திருமொழி || (4-4–மாற்றரசர்) (திருநாங்கூர்த் திருத்தெற்றியம்பலம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பூமியை இடந்து அதுக்கு அபிமானியான ஸ்ரீ பூமிப் பிராட்டியை புல்கி கோட்டிடையிலே நீல மணி அழுத்தினால் போலே வைத்த செயலாலே என்னை அடிமை கொண்டவன் கிடீர்-என்கிறார் எட்டாம் பாசுரத்தில்) 8 | சிலம்பினிடைச் சிறு பரல் போல் பெரிய மேரு திருக் குளம்பில் கண கணப்பத் திருவாகாரம்
குலுங்க நில மடந்தை தனை இடந்து புல்கிக் கோட்டிடை வைத்து அருளிய என் கோமான் கண்டீர்
இலங்கிய நான் மறையனைத்தும் அங்கம் ஆறும் ஏழு இசையும் கேள்விகளும் எண் திக்கும் எங்கும்
சிலம்பிய நல் பெரும் செல்வம் திகழு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே –4-4-8 | பதவுரை Show / Hideஇலங்கிய, Ilangiya - (பிரமாணங்களுள் சிறந்ததாக) விளங்குகின்ற (- (நாங்கூர், திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மால்;)) நால் மறை அனைத்தும், Naal Marai Anaiththum - எல்லா வேதங்களும் அங்கம் ஆறும், Angam Aarum - (வியாகரணம் முதலிய) ஆறு அங்கங்களும் ஏழ் இசையும், Ezhu Isaiyum - ஸப்தஸ்வரங்களும் கேள்விகளும், Kelvigalum - இதிஹாஸ புராணங்களும் (ஆகிய இவை) எண் திக்கு எங்கும், En Thikku Engum - எட்டுத் திசைகளிலுமெல்லாம் சிலம்பிய, Silambiya - கோஷம் செய்யப்பெற்றதும் நல் பெரு செல்வம், Nal Peru Selvam - நல்ல அளவற்ற செல்வம் திகழும், Thigazhum - விளங்கப்பெற்றதுமான சிலம்பின் இடை, Silambin Idai - தண்டைச்சிலம்பின் நடுவிலிட்ட சிறு பரல் போல், Siru Paral Pol - சிறிய பருக்காங்கல்போல பெரிய மேரு, Periya Meru - பெருத்த மேருமலையானது திரு குளம்பில், Thiru Kulambil - அழகிய குளம்பிலே கணகணப்ப, Kanakanappa - கணகணவென்று ஒலிக்கும்படியாகவும் திரு ஆகாரம் குலுங்க, Thiru Aakaram Kulunga - (திருமார்பில்) பிராட்டியிருக்குமிருப்பு குலுங்கும்படியாகவும் நிலம் மடந்தைதனை, Nilam Madandhaithanai - பூமிப்பிராட்டியை இடந்து, Idandhu - கோட்டால் குத்தியெடுத்து புல்கி, Pulki - தழுவிக்கொண்டு கோட்டிடை, Kottidai - கோரப் பல்லின்மீது வைத்து அருளிய –, Vaithu Aruliyah - ஸ்தாபித்துக்கொண்ட எம் கோமான் கண்டீர், Em Koman Kandir - எம்பெருமான் காண்மின் |
| 1286 | பெரிய திருமொழி || (4-4–மாற்றரசர்) (திருநாங்கூர்த் திருத்தெற்றியம்பலம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆழியானது மிக்கு இருந்துள்ள ஊழி வெள்ளத்தைப் பண்டு திருமேனியிலே ஏக தேசத்தில் அடக்கின ஸ்ரீ சர்வேஸ்வரன் கிடீர்) 9 | ஏழு உலகும் தாள்வரையும் எங்குமூடி எண் திசையும் மண்டலமும் மண்டி அண்டம்
மோழை எழுந்து ஆழி மிகு மூழி வெள்ளம் முன் அகட்டில் ஒடுக்கிய எம் மூர்த்தி கண்டீர்
ஊழி தொறும் ஊழி தொறும் உயர்ந்த செல்வத்து ஓங்கிய நான்மறை யனைத்தும் தாங்கு நாவர்
சேழுயர்ந்த மணி மாடம் திகழு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து எண் செங்கண் மாலே –4-4-9 | பதவுரை Show / Hideஊழிதொறும் ஊழிதொறும் உயர்ந்தசெல்வத்து, Ozhithorum Ozhithorum Uyarndha Selvathu - காலம் செல்லச்செல்ல வளர்ந்துவருகிற செல்வத்தையுடையராய் (- (நாங்கூர், திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மால்–;)) ஓங்கிய நான்மறை அனைத்தும் தாங்கு நாவர், Ongiya Nanmarai Anaithum Thangu Navar - சிறந்த வேதங்களையெல்லாம் தாங்கிக் கொண்டிருக்கிற நாவையுடையரான வைதிகர்கள் வாழப்பெற்றதும் சேழ்உயர்ந்தமணிமாடம் திகழும், Seyzhuyarnthamanimaadam Thigazhum - மிகவும் உயர்ந்த மணிமாடங்கள் விளங்கப்பெற்றதுமான ஏழ் உலகும் நாள்வரையும் எங்கும், Ezhu Ulakum Naalvaraiyum Engum - ஸப்தத்வீபங்களும் பக்கத்ததுச் சிறுமலைகளையுடைய பெரிய மலைகளும் ஆகிய எவ்விடங்களையும் மூடி, Moodi - ஆக்கிரமித்து எண் திசையும் மண் தலமும் அண்டம் மண்டி, En Thisayum Mann Thalamum Andam Mandi - எட்டுத் திக்குக்களிலும் எல்லாப் பூமியிலும் அண்டத்திலும் பரவி மோழை யெழுந்து, Mozhai Yezhunthu - மோழை கிளம்பி ஆழி மிகும், Aazhi Mikum - கடல் பெருகும்படியான ஊழி வெள்ளம், Oozhi Vellam - பிரளயப்பெரு வெள்ளத்தை முன் அகட்டில் ஒடுக்கிய எம் மூர்த்தி கண்டீர், Mun Akattil Odukkia Em Moorthi Kandeer - முன்பொருகால் திருவயிற்றில் அடக்கிக்கொண்டஎமது ஸ்வாமியானவான். |
| 1287 | பெரிய திருமொழி || (4-4–மாற்றரசர்) (திருநாங்கூர்த் திருத்தெற்றியம்பலம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஐந்தும் ஐந்தும் வல்லார்-ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் அபதானங்கள் ஐந்தும் அது கலசாத ஐந்தும் ஐஹிகத்தில் ஐஸ்வர்யமும் குறைவற புஜித்து ஸ்ரீ பரம பதத்தில் ஸ்ரீ நித்ய சூரிகளோடு ஒரு கோவையாக விளங்குவர்) 10 | சீரணிந்த மணி மாடம் திகழு திரு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து எண் செங்கண் மாலைக்
கூரணிந்த வேல் வலவன் ஆலி நாடன் கொடி மாட மங்கையர் கோன் குறையல் ஆளி
பாரணிந்த தொல் புகழான் கலியன் சொன்ன பாமாலை இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்
சீரணிந்து உலகத்து மன்னராகிச் சேண் விசும்பில் வானவராய்த் திகழ்வர் தாமே –4-4-10 | பதவுரை Show / Hideசீர் அணிந்த, Seer Anindha - சிறப்புப் பொருந்திய மணி மாடம், Mani Maadam - மணிமாடங்கள் திகழும், Thigazhum - விளங்கப்பெற்ற நாங்கூர், Naangoor - திருநாங்கூரிலுள்ள திருத்தெற்றியம்பலத்து, Thiruththetriyampalathu - திருத்தெற்றியம்பல மென்னந் திருப்பதியி லெழுந்தருளியிருக்கிற என், En - எனக்கு ஸ்வாமியான செம் கண் மாலை, Sem Kan Maalai - செந்தாமரைக்கண் பெருமான் விஷயமாக, கூர் அணிந்த வேல் வலவன், Koora Anindha Vel Valavan - கூர்மை பொருந்திய வேற்படையை ஆளுமவரும் ஆலி நாடன், Aali Naadan - திருவாலி நாட்டுக்குத் தலைவரும் கோடி மாடம் மங்கையர் கோன், Kodi Maadam Mangaiyar Kon - கொடிகளணிந்த மாடங்களையுடைய திருமங்கையிலுள்ளார்க்குத் தலைவரும் குறையல் ஆளி, Kuraiyal Aali - திருக்குறையலூரை ஆள்பவரும் பார் அணிந்த தொல் புகழான், Paar Anindha Thol Pugazhaan - பூமிக்கு அலங்காரமான தொல்புகழை உடையவருமான கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார் சொன்ன, Sonna - அருளிச்செய்த பாமாலை இவை ஐந்தும் ஐந்தும், Paamalai Ivai Aindhum Aindhum - இப் பத்துப்பாசுரங்களையும் வல்லார் தாம், Vallaar Thaam - ஓத வல்லவர்கள் உலகத்து, Ulakatthu - இவ்வுலகத்தில் சீர் அணிந்த மன்னர் ஆகி, Seer Anintha Mannar Aagi - அரசர்களாகி வாழ்ந்து (பிறகு) சேண் விசும்பில், Seen Visumbil - பரமாகாச மென்கிற பரமபதத்திலே வானவர் ஆய், Vaanavar Aayi - நித்ய ஸூரிகளோடு ஒத்தவர்களாய் நிகழ்வர், Nigalvar - விளங்கப்பெறுவர்கள் |