Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 4-6 காசும் (10 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
381ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஆறாம் திருமொழி - காசுங்கறையுடை (பெற்றபிள்ளைகளுக்குப் பரமபுருஷனுடைய திருநாமங்களை இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்) கலித்துறை 1
காசும் கறை யுடைக் கூறைக்கும் அங்கோர் கற்றைக்கும்
ஆசையினால் அங் கவத்தப் பேரிடும் ஆதர்காள்
கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித் திருமினோ
நாயகன் நாரணன் தம் அன்னை நரகம் புகாள். –4-6-1
காசுக்கு,Kaasukku - ஒரு காசுக்காகவும்
கறை உடை,Karai Udai - (தலைப்புகளில் நல்ல) கறைகளை யுடைய
கூறைக்கும்,Kooraiykkum - வஸ்திரத்துக்காகவும்
ஓர் கற்றைக்கும்,Or Katraikkum - ஒரு கட்டுக் கற்றைக்காகவும் (உண்டான)
ஆசையினால்,Aasaiyinaal - ஆசையாலே
பேர்,Per - (க்ஷத்ர பிள்ளைகளுக்கு) இடுகிற
ஆதர்காள்,Aadhargaal - அறிவு கெட்டவர்களே!
நீங்கள்,Neengal - நீங்கள்
கேசவன்,Kesavan - கேசவனென்னுந் திருநாமத்தை யுடையவனும்
நாயகன்,Naayagan - ஸர்வ சேஷியுமான
நாரணன்,Naaranan - நாராணனுடைய
பேர்,Per - திரு நாமங்களை
இட்டு,Ettu - (உங்கள் பிள்ளைகளுக்கு) இட்டு
தேனித்து இருமின்,Theniththu Irumin - மகிழ்ச்சி கொண்டிருங்கள்
தம் மன்னை,Tham Mannai - (அப்படி நாமகரணஞ் செய்தால்) (அப் பிள்ளைகளுடைய) தாய்மார்
நரகம் புகார்,Narakam Pugaar - துர்க் கதியை அடைய மாட்டார்கள்.
382ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஆறாம் திருமொழி - காசுங்கறையுடை (பெற்றபிள்ளைகளுக்குப் பரமபுருஷனுடைய திருநாமங்களை இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்) கலித்துறை 2
அங்கொரு கூறை அரைக்குடுப்ப தனாசையால்
மங்கிய மானிட சாதியின் பேரிடும் ஆதர்காள்
செங்க ணெடு மால் சிரீதரா என்று அழைத்தக்கால்
நங்கைகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்–4-6-2
அங்கு,Angu - அந்த நீசரிடத்தில்
ஒரு கூறை,Oru Koorai - ஒரு வஸ்த்ரத்தைப் (பெற்று)
அரைக்கு உடுப்பதன் ஆசையால்,Araikku Uduppadhan Aasaiyaal - அரையில் உடுக்க வேணுமென்னு மாசையினால்
மங்கிய,Mangiya - கெட்டுக் கிடக்கிற
மானிட சாதி பேர் இடும்,Maanida Saadhi Per Idum - மநுஷ்ய ஜாதியிற் பிறந்தவர்களுடைய பெயரை இடுகிற
ஆதர்காள்,Aadhargaal - குருடர்களே!
நங்கைகாள்,Nangaikaal - சொல்லிற்றை அறிய வல்ல மதியினால் நிறைந்தவர்களே!
செம் கண் நெடு மால்,Sem Kan Nedu Maal - புண்டரீகரக்ஷனான ஸர்வேச்வரனே!
சிரீதரா,Sreedharaa - (நீங்கள் உங்கள் பிள்ளையை) ஸ்ரீதரனே!
அழைத்தக்கால்,Alaiththakkaal - அழைத்தீர்களாகில்
நாரணன்,Naaranan - நாராயண நாமத்தைப் பூண்ட அப் பிள்ளையினுடைய
தம்மன்னை,Thammannai - தாயானவள்
நரகம் புகாள்,Narakam Pugaal - நரகம் புகார்
383ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஆறாம் திருமொழி - காசுங்கறையுடை (பெற்றபிள்ளைகளுக்குப் பரமபுருஷனுடைய திருநாமங்களை இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்) கலித்துறை 3
உச்சியில் எண்ணெயும் சுட்டியும் வளையும் உகந்து
எச்சம் பொலிந்தீர்காள் எஞ்செய்வான் பிறர் பேரிட்டீர்
பிச்சை புக்காகிலும் எம்பிரான் திரு நாமமே
நச்சுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்–4-6-3
எச்சம் பொழிந்தீர்காள்,Echcham Pozhindheergaal - ஸந்தாநத்தினால் விளக்குமவர்களே!
உச்சியில்,Uchchiyil - உச்சியில் (தடவத் தக்க)
எண்ணெயும்,Ennaiyum - எண்ணெயும்
சுட்டியும்,Sutthiyum - (நெற்றியில் தொங்கும்படி கட்டத்தக்க) சுட்டியையும்
வளையும்,Valaiyum - (கையில் அணியத் தக்க) வளையையும்
உகந்து,Ugandhu - விரும்பி
என் செய்வான் ,En Seivaan - ஏதுக்காக
பிறர்,Pirar - (எம்பெருமானை யொழிந்த) மற்றவர்களுடைய
பேர்,Per - பெயர்களை
இட்டீர்,Ettir - (உங்கள் பிள்ளைகளுக்கு) இட்டீர்கள்?
பிச்சை புக்க ஆகிலும்,Pitchai Pukka Aagilum - பிச்சையெடுத்து ஜீவித்தாலும்
எம்பிரான் திருநாமமே,Empiraan Thirunaamame - எம்பெருமானுடைய திரு நாமத்தையே
நச்சுமின்,Nachchumin - விரும்பி இடுங்கள்; (அப்படி இட்டால்)
நாரணன்,Naaranan - இத்யாதி பூர்வவத்
384ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஆறாம் திருமொழி - காசுங்கறையுடை (பெற்றபிள்ளைகளுக்குப் பரமபுருஷனுடைய திருநாமங்களை இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்) கலித்துறை 4
மானிட சாதியில் தோன்றிற்று ஓர் மானிட சாதியை
மானிட சாதியின் பேரிட்டால் மறுமைக் கில்லை
வானுடை மாதவா கோவிந்தா என்று அழைத்தக்கால்
நானுடை நாரணன் தம் அன்னை நரகம் புகாள்-4-6-4
மானிட சாதியில்,Maanida Saadhiyil - மநுஷ்ய ஜாதியில்
தோன்றிற்று,Thonritru - உண்டான
ஓர் மானிட சாதியை,Or Maanida Saadhiyai - ஒரு மநுஷ்ய ஜந்துவை
மானிட சாதியின் பேர் இட்டாள்,Maanida Saadhiyin Per Ittaal - (கர்ம பலன்களை அநுபவிக்கப் பிறந்த) மநுஷ்ய சாதியர்க்கு உரிய பெயரை இட்டழைத்தால்
மறுமைக்கு இல்லை,Marumaikku Illai - அத்ருஷ்ட பலம் (மோஷம்) பெறுகைக்கு யாதொரு வழியுமில்லையாம்,
வான் உடை,Vaan Udai - பரம பதத்தை (விபூதியாக) உடைய
மாதவா,Maadhavaa - ச்ரியபதியே
கோவிந்தா,Govindhaa - கோவிந்தனே!
என்று அழைத்தக் கால்,Endru Alaiththak Kaal - என்று (எம்பெருமான் திருநாமத்தை யிட்டு) அழைத்தால்,
நானுடை நாராணன்,Naanudai Naaranan - எனக்கு நாதனான நாராயணனுடைய திருநாமத்தைப் பூண்ட அப் பிள்ளையினுடைய
தம்மன்னை நரகம் புகார்,Thammannai Narakam Pugaar - (அப்படி நாமகரணஞ் செய்தால்) (அப் பிள்ளைகளுடைய) தாய்மார் துர்க் கதியை அடைய மாட்டார்கள்.
385ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஆறாம் திருமொழி - காசுங்கறையுடை (பெற்றபிள்ளைகளுக்குப் பரமபுருஷனுடைய திருநாமங்களை இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்) கலித்துறை 5
மலமுடை யூத்தையில் தோன்றிற்று ஓர் மல வூத்தையை
மலமுடை யூத்தையின் பேரிட்டால் மறுமைக்கில்லை
குலமுடைக் கோவிந்தா கோவிந்தா என்று அழைத்தக்கால்
நலமுடை நாரணன் தம் அன்னை நரகம் புகாள்–4-6-5
மலம் உடை,Malam Udai - மலத்தை யுடையதும்
ஊத்தையில்,Ooththaiyil - ஹேயமுமான சரீரத்தில் நின்றும்
தோன்றிற்று ஓர்,Thonritru Or - தோன்றினதொரு
மலம் ஊத்தையை,Malam Ooththaiyai - (தானும் அப்படியே) மலமுடையதும் ஹேயமுமான சரீரத்தோடே கூடி யிருக்கிற ஐந்துவை
மலம் உடை,Malam Udai - (கீழ்ச் சொன்ன படியே) மலத்தை யுடையதும்
பேர்,Per - (ஸத்தையின் ஹேயமுமான சரீரத்தையுடைய மற்றொரு ஐந்துவினுடைய) பெயரை
இட்டால்,Ettaal - இட்டு அழைத்தால்
இல்லை,Ellai - ஒருவழியு மில்லையாம்:
குலம் உடை,Kulam Udai - நற்குலத்திற் பிறந்த
கோவிந்தா கோவிந்தா என்று அழைத்தக் கால்,Govindhaa Govindhaa Endru Alaiththak Kaal - கோவிந்தனே! கோவிந்தனே! என்று (பகவந் நாமத்தை யிட்டு) அழைத்தால்.
நலம் உடை,Nalam Udai - (தன் திருநாமத்தைச் சொன்னவர்களை வாழ்விக்கையாகிற) நன்மையையுடைய
நாரணன்,Naaranan - எம்பெருமானுடைய திருநாமம் பூண்ட அப்பிள்ளயினுடைய
தம்மன்னை நரகம் புகார்,Thammannai Narakam Pugaar - (அப்படி நாமகரணஞ் செய்தால்) (அப் பிள்ளைகளுடைய) தாய்மார் துர்க் கதியை அடைய மாட்டார்கள்.
386ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஆறாம் திருமொழி - காசுங்கறையுடை (பெற்றபிள்ளைகளுக்குப் பரமபுருஷனுடைய திருநாமங்களை இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்) கலித்துறை 6
நாடும் நகரும் அறிய மானிடப் பேரிட்டு
கூடி யழுங்கிக் குழியில் வீழ்ந்து வழுக்காதே
சாடிறப் பாய்ந்த தலைவா தாமோதரா என்று
நாடுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்–4-6-6
நாடும்,Naadum - குக்ராமங்களிலுள்ள ஸாமாந்ய ஜ்ஞானிகளும்
அறிய,Ariya - (இவன் உயர்ந்தவன்’ என்று) அறியும்படி,
மானிடர் பேர் இட்டு,Maanidar Per Ittu - (ஷுத்ர) மனுஷ்யர்கள் பெயரை விட்டு
கூடி,Koodi - அவர்களோடு கூடி
அழுங்கி,Azhungi - ஒளி மழுங்கி
குழியில் வீழ்ந்து,Kuzhiyil Veezhndhu - (அவர்கள் விழுந்த) குழியிலே விழுந்து
வழுக்காதே,Vazhukkaadhe - தவறிப் போகாமல்,
சாடு,Saadu - ‘சகடாஸுரன்
இற,Era - முறியும்படி
பாய்ந்த,Paayndha - உதைத்தருளின
தலைவா,Thalaivaa - பெரியோனே!’ (என்றும்)
தாமோதரா என்று,Thaamodharaa Endru - ‘தாமோதரனே! என்றும்
நாடுமின்,Naadumin - வாழ்த்திக் கொண்டு திரியுங்கள்;
நாரணன் தம்மன்னை நரகம் புகார்,Naaranan Thammannai Naagam Pugaar - (இங்ஙனேயாகில்,) எம்பெருமானுடைய திருநாமம் பூண்ட அப்பிள்ளயினுடைய
(அப்படி நாமகரணஞ் செய்தால்) (அப் பிள்ளைகளுடைய) தாய்மார் துர்க் கதியை அடைய மாட்டார்கள்.
387ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஆறாம் திருமொழி - காசுங்கறையுடை (பெற்றபிள்ளைகளுக்குப் பரமபுருஷனுடைய திருநாமங்களை இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்) கலித்துறை 7
மண்ணில் பிறந்து மண்ணாகும் மானிடப் பேரிட்டு அங்கு
எண்ண மொன் றின்றி யிருக்கும் ஏழை மனிசர்காள்
கண்ணுக் கினிய கரு முகில் வண்ணன் நாமமே
நண்ணுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்–4-6-7
கண்ணில் பிறந்து,Kannil Pirandhu - கண்ணில் நின்று முண்டாய்
மண் ஆகும்,Man Aagum - பின்பு மண்ணாய் விடுகிற
மானிடர்,Maanidar - அல்ப மநுஷர்களுடைய
பேர் இட்டு,Per Ittu - பெயரை (த் தங்கள் பிள்ளைகளுக்கு) இட்டு
அங்கு,Angu - ஆமுஷ்மிக பலத்தில்
எண்ணம் ஒன்று இன்றி இருக்கும்,Ennam Ondru Inri Irukkum - ஒரு விசாரமற்றிருக்கிற
ஏழை மணிசர்காள்,Ezhai Manisargaal - அறிவற்ற மனுஷ்யர்களை!
கண்ணுக்கு,Kannukku - கண்ணால் காண்கைக்கு
இனிய,Iniya - யோக்யனாயும்
கரு முகில்,Karu Mugil - காள மேகம் போன்ற
கண்ணன்,Kannan - நிறத்தை யுடைவனாயுமுள்ள எம்பெருமானுடைய
நாமமே,Naamame - திரு நாமத்தையே
கண்ணுமின் நாரணன்,Kannumin Naaranan - விரும்பி யிடுங்கள்
நாரணன் தம்மன்னை நரகம் புகார்,Naaranan Thammannai Narakam Pugaan - (இங்ஙனேயாகில்,) எம்பெருமானுடைய திருநாமம் பூண்ட அப்பிள்ளயினுடைய
(அப்படி நாமகரணஞ் செய்தால்) (அப் பிள்ளைகளுடைய) தாய்மார் துர்க் கதியை அடைய மாட்டார்கள்.
388ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஆறாம் திருமொழி - காசுங்கறையுடை (பெற்றபிள்ளைகளுக்குப் பரமபுருஷனுடைய திருநாமங்களை இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்) கலித்துறை 8
நம்பி பிம்பி யென்று நாட்டு மானிடப் பேரிட்டால்
நம்பும் பிம்பு மெல்லாம் நாலு நாளில் அழுங்கிப் போம்
செம் பெருந் தாமரைக் கண்ணன் பேரிட்டழைத் தக்கால்
நம்பிகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்–4-6-8
நம்பி பிம்பி என்று,Nambi Pimbi Endru - நம்பி என்றும் பிம்பி என்றும்
நாட்டு மானிடப் பேரிட்டால்,Naattu Maanidap Per Ittaal - க்ஷுத்ர மனுஷ்யர்களுடைய பெயரை (உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள்) இட்டால்
நம்பும் பின்பும் எல்லாம்,Nambum Pinbum Ellaam - ‘நம்பி’ ‘பிம்பி’ என்னும் பெயர்களுக்கு அடியான முதன்மை யெல்லாம்
நாலு நாளில்,Naalu Naalil - நாலு நாளைக்குள்
அழுங்கிப்போம் ,Azhungippom - அழிந்துபோம்;
செம் பெருந் தாமரை,Sem Perun Thaamarai - சிவந்தும் பெருத்துமிருக்கிற தாமரைப் பூப் போன்ற
கண்ணன்,Kannan - திருக் கண்களை யுடைய எம்பெருமானுடைய
பேர் இட்டு,Per Ittu - திரு நாமத்தை இட்டு
அழைத்தக்கால்,Alaiththakkaal - அழைத்தால்
நம்பிகாள்,Nambikaal - (அறிவினால்) குறைவற்றவர்களே!
நாரணன் தம்மன்னை நரகம் புகார்,Naaranan Thammannai Narakam Pugaar - (இங்ஙனேயாகில்,) எம்பெருமானுடைய திருநாமம் பூண்ட அப்பிள்ளயினுடைய
(அப்படி நாமகரணஞ் செய்தால்) (அப் பிள்ளைகளுடைய) தாய்மார் துர்க் கதியை அடைய மாட்டார்கள்.
389ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஆறாம் திருமொழி - காசுங்கறையுடை (பெற்றபிள்ளைகளுக்குப் பரமபுருஷனுடைய திருநாமங்களை இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்) கலித்துறை 9
ஊத்தைக் குழியில் அமுதம் பாய்வது போல் உங்கள்
மூத்திரப் பிள்ளையை என் முகில் வண்ணன் பேரிட்டு
கோத்துக் குழைத்துக் குணால மாடித் திரிமினோ
நாத்தகு நாரணன் தம் அன்னை நரகம் புகாள்–4-6-9
ஊத்தை குழியில் அமுதம் பாய்வது போல்,Ooththai Kuzhiyil Amudham Paayvadhu Pol - அசுத்தமானதொரு குழியிலே அம்ருதம் பாய்ந்தாற்போலே
உங்கள் மூத்திரப் பிள்ளையை,Ungal Mooththirapp Pillaiyai - உங்களுடைய அசுத்தனான பிள்ளைக்கு
என் முகில் வண்ணன் பேர் இட்டு,En Mugil Vannan Per Ittu - எனக்குத் தலைவனும் காளமேகம் போன்ற திரு நிறத்தையுடையனுமான (எம்பெருமானுடைய திருநாமத்தை நாமகரணம் பண்ணி)
கோத்து குழைத்து,Koththu Kuzhaiththu - (அதனால் அப்போதே நீங்கள் எம்பெருமானுடைய பரிக்ரஹமாகப் பெற்று) (அவ் வெம்பெருமானோடு) கூடி கலந்து
குணாலம் ஆடி,Kunaalam Aadi - (அதனாலுண்டாகும் ஆநந்த்த்துக்குப் போக்கு வீடாக) குணாலைக் கூத்தாடிக் கொண்டு
திரிமின்,Thirimin - திரியுங்கள்
நாத்தகு நாரணன்,Naaththaku Naaranan - (இப்படியாகில்) நாவினால் துதிக்கத் தக்க நாரா யணனுடைய பெயரைப் பூண்ட அப்பிள்ளையினுடைய
தம்மன்னை நரகம் புகார்,Thammannai Narakam Pugaar - தாய்மார் துர்க் கதியை அடைய மாட்டார்கள்.
390ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஆறாம் திருமொழி - காசுங்கறையுடை (பெற்றபிள்ளைகளுக்குப் பரமபுருஷனுடைய திருநாமங்களை இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்) கலித்துறை 10
சீரணி மால் திரு நாமமே யிடத் தேற்றிய
வீரணி தொல் புகழ் விட்டு சித்தன் விரித்த
ஓரணி யொண் தமிழ் ஒன்பதோடொன்றும் வல்லவர்
பேரணி வைகுந்தத்து என்றும் பேணி யிருப்பரே–4-6-10
சீர்,Seer - கல்யாண குணங்களை
அணி,Ani - ஆபரணமாக வுடையவனும்
மால்,Maal - (அடியார் பக்கல்) வ்யாமோஹமுடையவனுமான எம்பெருமானுடைய
திரு நாமமே,Thiru Naamame - திருநாமத்தையே
இட,Ida - (தம் பிள்ளைகளுக்கு இடும்படி)
தேற்றிய,Theatriya - உபதேசித்தருளினவரும்
வீரம் அணி,Veeram Ani - (இந்திரியங்களை வெல்லுகை யாகிற) வீரப் பாட்டை ஆபரணமாக வுடையவரும்
தொல் புகழ்,Thol Pugazh - சாச்வதமான கீர்த்தியை யுடையவருமான
விட்டு சித்தன்,Vittu Siththan - பெரியாழ்வார்
விரித்த,Viriththa - விரிவாக அருளிச் செய்தமையும்
ஓர் அணி,Or Ani - (கற்பார்க்கு) ஒப்பற்ற ஆபரணம் போன்றவையும்
ஒண் தமிழ்,On Tamil - அழகிய தமிழ்ப் பாஷை யுமாயிருந்துள்ள
ஒன்பதோடு ஒன்றும்,Onbadhodu Ondrum - இப் பத்துப் பாட்டுக்களையும்
வல்லவர்,Vallavar - ஓத வல்லவர்
பேர் அணி,Per Ani - பெரியதும் அழகியதுமான
வைகுந்தத்து,Vaikunthaththu - ஸ்ரீவைகுண்டத்தில்
என்றும்,Endrum - எந்நாளும்
பேரணி இருப்பர்,Perani Iruppar - (எம்பெருமானுக்கு) மங்களாசாசனம் பண்ணிக் கொண்டு வாழப் பெறுவர்.