திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1328 | பெரிய திருமொழி || (4-9–நும்மைத் தொழுதோம்) (திருவிந்தளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சேஷிக்கு அதிசயத்தை பண்ணி யாய்த்து இவருக்கு ஸ்வரூப சித்தி- அத்தலைக்கு அதிசயத்தை பண்ணுகையே ஸ்வரூபமாம் படி யாய்த்து ப்ராப்தி இருப்பது – ஸ்ரீ வைகுண்டத்தை விட்டு ஸ்ரீ திரு இந்தளூரிலே வந்து சந்நிதி பண்ணின ஸ்வாமி- இவ்வஸ்து உனக்கு சேஷம் -என்னும் இம் முறையை அறிவித்தவனே இன்று இப்படி ஆறி இருக்கிற நீ-முன் தீம்பு செய்து-சம்பந்த ஞானத்தை எனக்கு பிறப்பிப்பான் என் சேஷத்வ ஞானத்தை பிறப்பித்து அருளிற்று அந்த சேஷத்வ அனுரூபமான வ்ருத்தியை என்னைக் கொண்டு அருள வேணும் – சர்வஞ்ஞன் ஆனவனுக்கும் அறிவிக்க வேண்டும்படி இருக்கிறது காணும் க்ரம ப்ராப்தி பற்றாத படியான இவருடைய சௌகுமார்யம்- என் முன்பே நாலடி இட்டு நடந்து காட்டினால்-அக்ரத ப்ரயயௌ ராம -என்கிறபடியே ஸ்ரீ பிராட்டிக்கு இட்ட விருந்து இட வேணும் காணும் இவருக்கு இப்படி நடந்தால் போன உயிர் மீளும்-உறாவின பயிரிலே ஒரு பாட்டம் மழை விழுந்தால் அது ஜீவிக்கச் சொல்ல வேணுமோ) 1 | நும்மைத் தொழுதோம் நுந்தம் பணி செய்து இருக்கும் நும் அடியோம்
இம்மைக்கு இன்பம் பெற்றோம் எந்தாய் இந்தளூரீரே
எம்மைக் கடிதாக் கருமம் அருளி யாவா வென்று இரங்கி
நம்மை ஒரு கால் காட்டி நடந்தால் நாங்கள் உய்யோமே — –4-9-1 | பதவுரை Show / Hideஇந்தளூரிர், Indhaloorir - திருவிந்தளூரில் எழுந்தருளியிருக்கிற எந்தாய், Endhaai - ஸ்வாமியே!. நும்மை தொழுதோம், Nummai Thozhuthom - தேவரீரை ஆச்ரயித்தோம்; நும் தம் பணி செய்து இருக்கும் நும் அடியோம், Num Tham Pani Seidhu Irukkum Num Adiyom - உமக்குக் கைங்கரியம் செய்தே ஸத்தை பெற்கூடிய அடியவர்களா யிருக்கின்றோம்-; இம்மைக்கு, Immaikku - இப்பிறவியிலே இன்பம் பெற்றோம், Inbam Pettrom - உம்மைப் பற்றின உணர்வாகிற ஆனந்தத்ததைப் பெற்றிருக்கிறோம்; எம்மை, Emmai - இப்படிப்பட்ட எங்கள் விஷயத்திலே ஆ ஆ என்று அரங்கி, Aa Aa Endru Arangi - ஐயொவென்று திருவுள்ளமிரங்கி கடது ஆ கருமம் அருளி, Kadathu Aa Karumam Aruli - சீக்கிரமாக ஏதேனுமொரு கைங்கரியத்தை நியமித்து நம்மை ஒருகால் காட்டி நடந்தால், Nammai Orukal Kaatti Nadandhaal - தேவரீரை ஒரு தடவையாவது ஸேவை ஸாதிப்பித்து எமது கண்வட்டத்திலே உலாவினால் நாங்கள் உய்யோமே, Naangal Uyyome - நாம் உஜ்ஜீவிக்க மாட்டோமோ?. |
| 1329 | பெரிய திருமொழி || (4-9–நும்மைத் தொழுதோம்) (திருவிந்தளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தர்ச நீயமான ஸ்ரமஹரமான ஸ்ரீ திரு வாலியிலே நித்ய வாஸம் பண்ணி வ்யாமோஹத்தை தெரிவித்தவனே – கள்வன் கொல் என்னும் படி கைப்பிடித்து வ்யாமோஹத்தை அறிவிப்பித்தவனே ஸ்ரீ திருவாலி யானைக் கைப்பிடித்து-ஸ்ரீ திரு நறையூர் நம்பியானை உபாய பூதனாகவும் – திரு இந்தளூரானை சேஷித்வ சம்பந்த ஞானம் அறிவிப்பிதவன் சம்பந்த ஞானத்தை பிறப்பித்த உனக்கு என்னுடைய ஸ்வரூப அனுரூபமான வ்ருத்தி விசேஷத்தை கொள்கை யாகிற இம்மாத்ரம் இத்தனையும் செய்கை பெரிய பணியோ) 2 | சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே மருவினிய
மைந்தா அம் தண் ஆலி மாலே சோலை மழ களிறே
நந்தா விளக்கின் சுடரே நறையூர் நின்ற நம்பீ என்
எந்தாய் இந்தளூராய் அடியேற்கு இறையும் இரங்காயே –4-9-2 | பதவுரை Show / Hideசிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே மருவ இனிய மைந்தா, Sindhai Thannul Neengaadhu Irundha Thiruve Maruva Iniya Maindha - நெஞ்சிலே ஒரு நொடிப்பொழுதும் விட்டுப் பிரியாமலிருக்கிற செல்வமே! மருவ இனிய மைந்தா, Maruva Iniya Maindha - அநுபவிக்க அநுபவிக்க போக்யனாயிருக்கிற நித்யயுவாவே!, அம் தண் ஆலி மாலே, Am Than Aali Maale - அழகிய குளிர்ந்த திருவாலி நகர்ப்பெருமானே!, சோலை மழகளிறே, Solai Mazhagalire - சோலைக்குள்ளே வளர்ந்தஒரு யானைக்குட்டி போன்றவனே! நந்தா விளக்கின் சுடரே, Nandha Vilakkil Sudare - ஒரு நாளுமணையாதவிளக்குச் சோதிபோல் திகழுமவனே! நறையூர் நின்ற நம்பீ, Naraiyoor Nindra Nambee - திருநறையூரில் எழுந்தருளியிருக்கிற பரிபூர்ணனே! இந்தளுராய் என் எந்தாய், Indhaluraai En Endhaai - திருவிந்தளூரில் எழுந்தருளியிருக்கிற எம்பெருமானே! ஆடியேற்கு இறையும் இரங்காயே, Aadiyaerku Irain Irangaiye - அடியேன் விஷயத்தில் சிறிதும் கிருபைசெய்கிற யில்லையே! |
| 1330 | பெரிய திருமொழி || (4-9–நும்மைத் தொழுதோம்) (திருவிந்தளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உகவாதார் சொல்லும் பழியை பரிஹரிகைக்கும்-உகப்பார் நினைத்த வகைகள் எல்லாம் பரிமாறுகைக்கு அன்றோ திரு இந்தளூரிலே வந்து நித்ய வாஸம் பண்ணுகிறது) 3 | பேசுகின்றது இதுவே வையம் ஈரடியால் அளந்த
மூசி வண்டு முரலும் கன்னி முடியீர் உம்மைக் காணும்
ஆசை என்னும் கடலில் வீழ்ந்து இங்கு அயர்த்தோம் அயலாரும்
ஏசுகின்றது இதுவே காணும் இந்தளூரீரே –4-9-3 | பதவுரை Show / Hideவையம் ஈர் அடியால் அளந்து, Vaiyam Eer Adiyal Alandhu - உலகங்களை இரண்டு அடிகளாலே அளந்து கொண்டவராயும் வண்டு மூசி முரலும் கண்ணி முடியீர், Vandu Moosi Murallum Kanni Mudiyir - வண்டுகளானவை மொய்த்துக்கொண்டு ரீங்காரம் செய்யப்பெற்ற மாலையை திருமுடியில் அணிந்து கொண்டவராயுமிருக்கிற இந்தளூரீர், Indhaloorir - திருவிந்தளூர் நாதரே!, இங்கு, Ingu - இவ்வுலகில் |
| 1331 | பெரிய திருமொழி || (4-9–நும்மைத் தொழுதோம்) (திருவிந்தளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நமக்கு அவத்யம் வரும் என்று இறே நீர் தாம் இப்படிப் படுகிறது-நாம் அத்தைப் பொறுக்கிறோம் என்ன உமக்கு பொறுக்க ஒண்ணாததும் ஓன்று உண்டு-எங்களுக்கும் அவத்யம் என்கிறார் நதே நுரூபே-என்னக் கடவது இறே) 4 | ஆசை வழுவாது ஏத்தும் எமக்கு இங்கு இழுக்காயாய்த்து அடியோர்க்குத் தேசம் அறிய வுமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்குக் காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர் எம்பெருமான் வாசி வல்லீர் இந்தளூரீர் வாழ்ந்தே போம் நீரே –4-9-4 | பதவுரை Show / Hideஇங்கு ஆசை வழுவாது ஏத்தும் எமக்கு, Ingu Aasai Vazhuvathu Aeththum Emakku - இந்நிலத்தில் ஆசைகுன்றாமல் துதிக்கின்ற எமக்கு இழுக்கு ஆய்த்து, Izhukku Aayththu - (இத்துதிசெய்தல்) அவத்யமாய் வந்து முடிந்தது; தேசம் அறிய, Desam Ariya - உலகமெல்லாம் அறியும்படியாக உமக்கே ஆளாய் திரிகின்றோமுக்கு அடியோர்க்கு, Umakke Aalai Thirikinromukku Adiyorukku - உமக்கே தொண்டராய்த் திரிகின்ற எமக்கு |
| 1332 | பெரிய திருமொழி || (4-9–நும்மைத் தொழுதோம்) (திருவிந்தளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அநந்ய கதிகளாய் இருக்கிற எங்களுக்கு ருசி பிறந்த போதே நினைத்த படிகள் எல்லாம் அனுபவிக்கைக்கு அன்றோ தேவரீர் திரு இந்தளூரிலே வந்து கிட்டி நிற்கிறது – பூ அலறும் போதை செவ்விபார்த்து பறித்து கொடு வாரா நிற்பாரைப் போலே ருசி பிறந்த போதே அடிமை கொள்ளுகைக்கு ஈடாக காலம் பார்த்து அன்றோ தேவரீர் இங்கே வந்து நிற்கிறது – பரத்வம் நித்ய சூரிகளுக்கு அனுபாவ்யமாய் இருக்கும் வ்யூஹம் ப்ரஹ்மாதிகள் உடைய கூக்குரல் கேட்கைக்கு ஈடாக இருக்கும் ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணாதி அவதாரம் ஸ்ரீ தசரத ஸ்ரீ வசுதேவாதிகள் உடைய பாக்ய பலமாய் இருக்கும் உகந்து அருளின நிலங்கள் -தங்களுக்கு ஹிதம் இன்னது என்று அறியாதே சம்சாரம் த்யாஜ்யம் என்று அறியாதே சர்வேஸ்வரன் பிராப்யன் என்று அறியாதே இருக்கிற சம்சாரிகளுக்கே முகம் கொடுக்கைகாகவாய் இருக்கும் இறே குருடருக்கு வைத்த இறையிலியில் விழித்தாருக்கு பிராப்தி இல்லை இறே பின்னானார் வணங்கும் சோதி -என்னக் கடவது இறே) 5 | தீ எம்பெருமான் நீர் எம்பெருமான் திசையும் இரு நிலனுமாய் எம்பெருமானாகி நின்றால் அடியோம் காணோமால் தாய் எம்பெருமான் தந்தை தந்தையாவீர் அடியோமுக்கே எம்பெருமான் அல்லீரோ நீர் இந்தளூரீரே –4-9-5 | பதவுரை Show / Hideஇந்தளூரீர், Indhaloorir - திருவிந்தளூர்ப் பெருமாளே! நீர், Neer - தேவரீர் தீ எம் பெருமான், Thee Em Perumaan - தேஜஸ்தத்வத்திற்கு அந்தர்யாமியான எம்பெருமானாகவும் நீர் எம் பெருமான், Neer Em Perumaan - ஜலதத்வத்திற்கு அந்தர்யாமியான பெருமானாயும் திசை எம்பெருமான் ஆயும் இருநிலன் எம்பெருமான் ஆகியும் நின்றால், Thisai Emperumaan Aayum Irunilan Emperumaan Aagiyum Nindraal - திசைகளுக்கு அந்தர்யாமியான பெருமானாயும் விசாலமான பூமிக்கு அந்தர்யாமியான பெருமானாயும் நின்றால் |
| 1333 | பெரிய திருமொழி || (4-9–நும்மைத் தொழுதோம்) (திருவிந்தளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவள் ஏகோந சேஷி யாகையாலே அவன் வரும் வரை காத்து இருக்க வேணும் உம்மை அரை ஷணமும் காணாவிடில் ஜீவிக்க மாட்டாத அடியேனையும் அவள் முன்னாகப் பற்றினார்க்கு இத்தனை வாசி உண்டு போலே காணும் சர்வஞ்ஞனையும் அஞ்ஞன் ஆக்க வேண்டும்படி காணும்-இவருடைய பிரகிருதி மார்த்தவம் தம்மை ஆசைப் பட்டார் பருவம் அறிந்து முகம் காட்டிற்றிலர் என்னும்அவத்யத்தை பரிஹரிகைக்கு அன்றோ நீர் ஸ்ரீ திரு இந்தளூரிலே வந்து நிற்கிறது-போந்த கார்யத்தை மறக்கிறது என்) 6 | சொல்லாது ஒழிய கில்லேன் அறிந்த சொல்லில் நும் அடியார்
எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் நமக்கு இவ் உலகத்து
எல்லாம் அறிவீர் ஈதே அறியீர் இந்தளூரீரே –4-9-6 | பதவுரை Show / Hideசொல்லாது ஒழிய கில்லேன், Sollaadhu Ozhiyakilleen - (அடியேன் சொல்ல நினைத்ததைச்) சொல்லாதிருக்க முடியவில்லை; (- (இந்தளூரீர்!–;)) அறிந்த சொல்லில், Arindha Sollil - நான் அறிந்தவற்றைச் சொல்லத் தொடங்கினால் (இதனைச் சொல்லுகிறேன் கேளீர்;), Idhanaich Sollugiren Kelir - இவ்வுலக நடை யெல்லாமும் தெரிந்துகொண்டிருக்கிறீர்; அடியேனை, Adiyenai - (உம்மைப் பிரிந்து தரிக்க மாட்டாத) அடியேனை நும் அடியார் எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர், Num Adiyaar Ellaarodum Okka Enni Irundheer - உம்முடைய மற்ற அடியவர்கள் எல்லாரோடும் ஸமமாக நினைத்திருக்கிறீர்; நல்லார் அறிவீர், Nallaar Ariveer - நல்லவர்களையும் தெரிந்து கொண்டிருக்கிறீர்; தீயார் அறிவீர், Theeyaar Ariveer - தீயவர்களையுந் தெரிந்து கொண்டிருக்கிறீர்; இ உலகத்து எல்லாம் அறிவீர், I Ulakaththu Ellam Ariveer - இவ்வுலக நடையெல்லாமும் தெரிந்துகொண்டிருக்கிறீர்; நமக்கு ஈதே அறியீர், Namakku Eedhe Ariyeer - என்னுடைய தன்மையொன்றையே அறியமாட்டாதவராயிருக்கிறீர். |
| 1334 | பெரிய திருமொழி || (4-9–நும்மைத் தொழுதோம்) (திருவிந்தளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நமக்கு ஒரு குற்றம் இல்லையாக வன்றோ-யஸ் சர்வஞ்ஞஸ் சர்வ வித் -இத்யாதி பிரமாணங்கள் சொல்லுகிறது நம்மை சர்வஞ்ஞன் சர்வ சக்தன் என்று பிரமாணங்கள் சொல்லா நிற்க நீர் நமக்கு ஞான சக்திகளில் வைகல்யம் சொல்லுகிறது-என் கொண்டு என்னில் அது ஒரு வ்யக்தியிலே பலிக்கக் கண்டேன் என்கிறார் பருவம் அறிந்து வந்து முகம் காட்டாமையைக் கொண்டு-சர்வஞ்ஞனை அஞனாக உப பாதித்தார் தம் தசைக்கு ஈடாக உதவாமையைக் கொண்டு சர்வ சக்தனை அசக்தனாக உபபாதிக்கிறார்) 7 | மாட்டீர் ஆனீர் பணி நீர் கொள்ள வெம்மைப் பணி யறியா
வீட்டீர் இதனை வேறே சொன்னோம் இந்தளூரீரே
காட்டீர் ஆனீர் நுந்தம் அடிக்கள் காட்டில் உமக்கு இந்த
நாட்டே வந்து தொண்டரான நாங்கள் உய்யோமே –4-9-7 | பதவுரை Show / Hideநீர் பணி கொள்ள மாட்டீர் ஆனீர், Neer Pani Koll Maattheer Aanheer - தேவரீர் (எம்மிடத்தில்) கைங்கரியங்கொள்ள விரும்பாதவராயிருக்கின்றீர்; (- (இந்தளூரீர் !–;) (இதெல்லாம் கிடக்கட்டும்:)) எம்மை பணி அறியா விட்டீர், Emmai Pani Ariya Vitteer - அடியோங்களுக்கு சேஷத்வத்தை உணர்த்திவிட்டு கைவிட்டு விட்டீர்; இதனை வேறே சொன்னோம், Idhanai Veerae Sonnom - மேற்சொல்லப்போகிற விஷயத்தை முக்கியமாக விண்ணப்பஞ் செய்கிறோம்; நுந்தம் அடிக்கள் காட்டீர் ஆனீர், Nundham Adikkal Kaattheer Aanheer - தேவரீருடைய திருவடிகளைக் காட்டாமல் போனீர்; காட்டில், Kaattil - காட்டியருளினால், இந்த நாட்டே, Indha Naatte - இந்த நாட்டிலே வந்து, Vandhu - உம்முடைய அடிமைக்கு இசைந்துவந்து உமக்கு தொண்டர் ஆன நாங்கள், Umakku Thondar Aan Naangal - உமக்கு அடிமைப்பட்டவர்களான நாங்கள் உய்யோமே, Uyyoame - உஜ்ஜீவித்துப் போகமாட்டோமோ? |
| 1335 | பெரிய திருமொழி || (4-9–நும்மைத் தொழுதோம்) (திருவிந்தளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சேதனர் உகந்ததையே நிறமாகக் கொள்ளும் ஸ்வ பாவரான-நம் பக்கல் உம்முடைய அபேஷிதம் பெற்று போகையிலே குறை உண்டோ – உம்முடைய அபேஷிதம் தன்னைச் சொல்லீர் என்ன –நீ உகந்தார் உகந்த வடிவுகளைக் கொண்டு வந்து அவர்களுக்கு காட்டிக் கொடுத்தாயே யாகிலும்-உன்னுடைய இச்சா க்ருஹீதமான அசாதாரண விக்ரஹத்தை இது காண் இருக்கும் படி -என்று கொடு வந்து எனக்குக் காட்ட வேணும் -என்கிறார்) 8 | முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலை நின்ற
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ணம் எண்ணும் கால்
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி
இன்ன வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே — –4-9-8 | பதவுரை Show / Hideவண்ணம் எண்ணுங்கால், Vannam Ennungkaal - தேவரீருடைய திருமேனி நிறத்தை ஆராயுமளவில், (- (இந்தளூரீர்!;)) முன்னை வண்ணம், Munnai Vannam - முதலதான கிருதயுகத்தில் கொண்ட நிறம் பாலின் வண்ணம், Paalin Vannam - பாலின் நிறமான வெண்மையாயிருக்கும்; முழுதும் நிலை நின்ற பின்னை வண்ணம், Muzhudhum Nilai Nindra Pinnai Vannam - எப்போதும் நிலைநிற்பதாயும் பிந்தின கலியுகத்திற்கொண்டதாயுமுள்ள நிறம் கொண்டல் வண்ணம், Kondal Vannam - காளமேகத்தின் நிறமான கருமையாம்; பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி, Ponnin Vannam Maniyin Vannam Puraiyum Thirumeeni - பொன்னிறத்தையும் நிலமணி நிறத்தையு மொத்திருக்கின்ற (தேவரீருடைய திருமேனி) இன்ன வண்ணம் என்று காட்டீர், Inna Vannam Endru Kaattheer - (கீழ்ச் சொன்ன நிறங்களுள்) இன்ன நிறமுடையதென்று தெரியக் காட்டியருளவேணும் |
| 1336 | பெரிய திருமொழி || (4-9–நும்மைத் தொழுதோம்) (திருவிந்தளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நெஞ்சில் பிரகாசத்தை ஒழியவே நித்ய சூரிகளுக்கு காட்சி கொடுக்கும் வடிவை அங்கு உள்ளாரோபாதி முழுக்க காட்சி கொடுக்கைக்கு அன்றோ இங்கு வந்து நிற்கிறது) 9 | எந்தை தந்தை தம்மான் என்று எமர் ஏழு அளவும்
வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரால்
சிந்தை தன்னுள் முந்தி நிற்றீர் சிறிதும் திருமேனி
இந்த வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே –4-9-9 | பதவுரை Show / Hideஎந்தை தந்தை தம்மான் என்று என்று, Endhai Thandhai Thammaan Endru Endru - என் தகப்பனார் அவர் தகப்பனார் அவர் தகப்பனார் என்கிற முறைமையில் (- (இந்தளூரீர்!;)) எமர் ஏழ் அளவும், Emar Ezh Azhavum - எமது முன்னோர்கள் எழுதலை முறையாக வந்து நின்ற, Vandhu Nindra - தேவரீருடைய கைங்கரியத்திற்கு இசைந்து வந்திருக்கின்ற தொண்டரோர்க்கே, Thondarorkke - அடியோங்கள் விஷயத்திலேயே வாசி வல்லீர், Vaasi Vallir - கணக்குப் பார்க்கின்றீர்; ஆல், Aal - ஐயோ!; சிந்தை தன்னுள் முந்தி நிற்றிர், Sindhai Thannul Mundi Nitrir - எமது நெஞ்சுக்குள்ளே முற்பட்டுவந்து நிற்கின்றீர்; திருமேனி இந்த வண்ணம் என்று சிறிதும் காட்டீர், Thirumeni Indha Vannam Endru Siridum Kaatteer - திருமேனியின் நிறம் இன்னதென்று சிறிதேனும் காட்டுகின்றிலீர் |
| 1337 | பெரிய திருமொழி || (4-9–நும்மைத் தொழுதோம்) (திருவிந்தளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவற்றை அப்யசித்து-அந்த கர்வத்தாலே யமாதிகள் தலைமேலே அடி இட்டுத் திரியுமவர்கள் இவற்றை அப்யசிக்கும் அத்தனையே வேண்டுவது அவர்களுக்கு ஜன்ம வ்ருத்தாதிகள் ஏதேனும் ஆகவுமாம்- அந்த ஜன்மத்திலே-அந்த வ்ருத்தத்திலே-அந்த ஞானத்திலே அந்த ஜன்மாதிகளால் வரும் உத்கர்ஷம் வேண்டாதே ஸ்வத உத்கர்ஷத்தை உடையரான நித்ய சூரிககளால் சிரஸா வஹிக்கப் பெறுவர்) 10 | ஏரார் பொழில் சூழ் இந்தளூரில் எந்தை பெருமானைக்
காரார் புறவில் மங்கை வேந்தன் கலியன் ஒலி செய்த
சீரார் இன் சொல் மாலை கற்றுத் திரிவார் உலகத்து
ஆராரவரே யமரர்க்கு என்றும் அமரர் ஆவாரே –4-9-10 | பதவுரை Show / Hideஏர் ஆர் பொழில் சூழ் இந்தளூரில், Aer Ar Pozhil Soozh Indhalooril - அழகிய சோலைகளாலே சூழப்பட்ட எந்தை பெருமனை, Endhai Perumanai - எம்பெருமான் விஷயமாக கார் ஆர் புறவின் மங்கை வேந்தன், Kaar Ar Puravin Mangai Vendan - மேகங்கள்படித்த தோப்புகளையுடைய திருமங்கை நகர்க்குத் தலைவரான கலியன், Kaliyan - ஆழ்வார் ஒலி செய்த, Oli Seitha - அருளிச்செய்த சீர் ஆர் இன் சொல் மாலை, Seer Ar In Sol Maalai - சிறந்த மதுரமான இச்சொல் மாலையை கற்று, Kattru - ஓதி திரிவார், Thirivaar - திரிகின்றவர்கள் உலகத்து ஆர் ஆர், Ulagaththu Ar Ar - இவ்வுலகத்தில் எவரெவருண்டோ, அவரே, Avarae - அவர்களே என்றும், Endrum - எக்காலத்திலும் அமரர்க்கு, Amararukku - நித்யஸூரிகளுக்கும் அமரர் ஆவார், Amarar Aavaar - கௌரவிக்கத்தக்கவராவர் |