Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 4-9 மரவடியை (11 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
412ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஒன்பதாம் திருமொழி - மரவடியை (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 2) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) (ஸ்ரீ மணவாள மா முனிகள் - வியாக்யானம்-அவதாரிகை) (முதல் பாட்டு மீண்ட எழுந்து அருளுமதுக்கு விஸ்வாசமாக ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு திருவடி நிலைகளை கொடுத்து போய் – தேவர்களுக்கு விரோதியான ராவணாதிகளை நிரசித்து -மீண்டு வந்து லோகத்தை ஆண்டு அருளினவன் வர்த்திக்கிற தேசம் இது என்கிறார்.) 1
மரவடியை தம்பிக்கு வான் பணயம் வைத்து போய் வானோர் வாழ
செரு உடைய திசைக் கருமம் திருத்தி வந்து உலகாண்ட திருமால் கோயில்
திருவடி தன் திரு உருவமும் திருமங்கை மலர் கண்ணும் காட்டி நின்று
உருவுடைய மலர் நீலம் காற்றாட்ட வோசலிக்கும் ஒளி அரங்கமே –4-9-1
தம்பிக்கு,Thambikku - சித்திர கூடத்தில் வந்த ப்ரபத்தி பண்ணின) பரதாழ்வானுக்கு
மரவடியை ,Maravadiyai - (மலய) பர்வதத்திலுள்ள ஸ்ரீபாதுகைகளை
வான் பணயம் வைத்து,Vaan Panayam Vaiththu - நன்றாக நம்புசைக்கு உரிய அடாக அளித்து
வானோர் வாழ,Vaanor Vaazha - தேவர்கள் வாழும்படி
போய்,Poy - (சித்திரக் கூடத்தைவிட்டு அவ்வருகே ) எழுந்தருளி
செருஉடைய திசை கருமம்,Seru Udaiya Thisai Karumam - யுத்தத்துக்கு உரிய தெற்குத்திக்கில் செல்ல வேண்டிய காரியங்களை
திருத்தி,Thiruththi - குறையறச்செய்து முடித்துவிட்டு
வந்து,Vanthu - (பிராட்டியுடன் அயோத்திக்கு) எழுந்தருளி
உலகு ஆண்ட,Ulagu Aanda - ராஜ்யபரிபாலநம் செய்தருளின
திருமால்,Thirumaal - ச்சரியபதி (எழுந்தருளியிருக்கிற)
கோயில்,Koyil - கோயிலாவது;
திரு அடி தன்,Thiru Adi Than - ஸர்வஸ்வாமியான் பெரிய பெருமாளுடைய
திரு உருவும்,Thiru Uruvum - திருமேனி நிறத்தையும்
திரு மங்கை,Thiru Mangai - பெரிய பிராட்டியருடைய
மலர் கண்ணும்,Malar Kannum - மலர்ந்த திருக்கண்ணனின் நிறத்தையும்
காட்டி நின்ற,Kaatti Nindra - பிரகாசிப்பியா நின்ற
உரு உடைய,Uru Udaiya - அழகு பொருந்திய
நீலம் மலர்,Neelam Malar - கறாநெய்தற் பூக்களானவை
காற்று ஆட்ட சலிக்கும்,Kaatru Aatta Salikkum - காற்று அசைக்க அசைக்க கொண்டிருக்கப்பெற்ற
ஒளி,Oli - ஒளிபொருந்திய
அரங்கம்,Arangam - திருவரங்கம்
413ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஒன்பதாம் திருமொழி - மரவடியை (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 2) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) (ஸ்ரீ மணவாள மா முனிகள் - வியாக்யானம்-அவதாரிகை) (இரண்டாம் பாட்டு – புருஷகார பூதையான பிராட்டி தானே சிதகுரைக்கிலும் -அவளோடு மறுதலித்து நின்று ஆஸ்ரிதரை ரஷித்து அருளும் ஸ்ரீ பெரிய பெருமாள் குணத்தை அருளிச் செய்து -இப்படி இருக்கிற இவர்க்கு ஒழிய வேறு ஒருவர்க்கு ஆளாவாரோ என்கிறார்.) 2
தன்னடியார் திறத்தகத்து தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல்
என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும்
மன்னுடைய விபீடணர்க்காய் மதிள் இலங்கை திசை நோக்கி மலர் கண் வைத்த
என்னுடைய திருவரங்கர்க்கு அன்றியும் மற்று ஒருவர்க்கு ஆளாவரே –4-9-2
தன் அடியார் திறத்தகத்து,Than Adiyaar Thiraththagathu - தன்னுடைய (எம்பெருமானுடைய) அடியவர்கள் விஷயத்தில்
தாமரையாள் ஆகிலும்,Thaamaraiyaal Aagilum - (புருஷகாரம் பண்ணக்கடவளான) பெரியபிராட்டியார்தாமே
சிதகு,Sithagu - குற்றங்களை
உரைக்கும் என்,Uraikkum En - கணக்கிட்டுச் சொல்லத் தொடங்கினாலும்
என் அடியார்,En Adiyaar - “எனக்கு அடிமைப்பட்டவர்கள்
அது,Adhu - அக்குற்றங்களை
செய்யார்,Seiyaar - செய்யமாட்டார்கள்;
செய்தார் என்,Seithaar En - (செய்தகுற்றத்தைப் பொறுப்பதற்கு எம்பெருமானுண்டு என்று சிலவற்றைச் செய்தார்களாயினும்
நன்றி செய்தார் என்பர்,Nandri Seithaar Enbar - (அவர்கள்) நன்மையையே செய்தார்களத்தனை” என்று சொல்லா நிற்பவரும்,
மன் உடைய,Man Udaiya - ஐச்வரியம் பொருந்திய
விபீடணற்கா,Vibeedanarkaa - விபீஷணாழ்வானுக்காக
மதிள் இலங்கை திசை நோக்கி,Mathil Ilangai Thisai Nookki - மதிளையுடைய லங்கையின் முகமாக
மலர்கண் வைத்த,Malarkan Vaitha - மலர்ந்த திருக்கண்களை வைத்தருளினவனும்
என்னுடைய,Ennudaiya - எனக்கு ஸ்வாமியுமான
திரு அரங்கற்கு அன்றியும்,Thiru Arangarku Andriyum - பெரிய பெருமாளையொழிய
மற்று ஒருவர்க்கு,Matru Oruvarkku - வேறொருவர்க்கு
ஆள் ஆவரே,Aal Aavare - ஆட்படுவோர் ஆரேனுமண்டோ.
414ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஒன்பதாம் திருமொழி - மரவடியை (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 2) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) (ஸ்ரீ மணவாள மா முனிகள் - வியாக்யானம்-அவதாரிகை) (மூன்றாம் பாட்டு விரோதி நிரசன சீலனாய் -அடியார் ஆனவர்களை புநராவர்த்தி இல்லாதபடி ஸ்ரீ பரம பதத்தில் கொடு போய் வைத்து அடிமை கொள்ளுமவன் வர்த்திக்கும் தேசம் இது என்கிறார்) (ஏணி வாங்கி-தன்னுடைய உபாய பாவம் தவிர்த்து புருஷார்த்தம் பகவத் அனுபவம் அருளுவானே ) 3
கருளுடைய பொழில் மருதம் கதக் களிறும் பிலம்பனையும் கடிய மாவும்
உருளுடைய சகடரையும் மல்லரையும் உடைய விட்டோசை கேட்டான்
இருளகற்றும் எரி கதிரோன் மண்டலத்தோடு ஏற்றி வைத்து ஏணி வாங்கி
அருள் கொடுத்திட்டு அடியவரை ஆள்கொள்வான் அமருமூர் அணி அரங்கமே –4-9-3
கருள் உடை,Karul Udai - (கிருஷ்ணனை நலிய வேணும் என்கிற) சீற்றத்தையுடையதும்
பொழில்,Pozhil - (மன விழுப்புண்ணும்படி புறம்பே) சோலை செய்து நிற்பதுமான
மருதும்,Marudhum - (இரட்டை) மருத மரங்களையும்
சதம்,Satham - மிக்க கோபத்தையுடைய
களிறும்,Kalirum - குலையாபீடத்தையும்
பிலம்பளையும்,Pilampalaiyum - ப்ரலம்பாஸுரனையும்
கடிய,Kadiya - மிகவும் க்ரூரான
மாவும்,Maavum - குதிரை வடிவாய் வந்த நேசியையும்
உருள் உடைய,Urul Udaiya - உருண்டுவந்த
சகடினையாய்,Sakadinaiaay - சகடாஸுரனையும்
மல்லரையும்,Mallaraiyum - மல்லர்களையும்
உடையவிட்டு,Udaiyavittu - நிரஹித்தருளி
ஓசை கேட்ட என்,Osai Ketta En - கீர்த்திபெற்றவனும்
இருள் அகற்றும்,Irul Agatrum - இருளைப் போக்காநின்ற
எறிகதிரேசன்,Erikathiresan - வீசுகின்ற கிரணங்களையுடையனான ஸூர்யனுடைய
மண்டலத்தூடு,Mandalaththuudu - மண்டலத்தினுள்ளே
அடியவரை,Adiyavarai - அடியார்களை
ஏற்றி,Eatri - ஏறச்செய்து
வைத்து,Vaiththu - (அங் கு நின்றும் அர்ச்சிராதி மார்க்கமாகப் பரமபதத்திற்குக் கொண்டுபோய்)(அங்கு அவர்களை) நிறுத்தி
ஏணி வாங்கி,Eani Vaangi - தன்னுடைய உபாயத்வரகாரத்தைத் தவிர்த்து
அருள் கொடுத்திட்டு,Arul Koduththittu - (அவர்கள் அவ்விடத்தில் நின்றும் மீளாமைக்கும் கைங்கரிய லாபத்திற்கு முறுப்பாக அவர்கள் பக்கல்) க்ருபைபண்ணி
ஆட் கொள்வான்,Aat Kolvaan - அடிமை கொள்ளுமவனுமான எம்பெருமாள்
அமரும்,Amarum - பொருந்தி எழுந்தருளியிருக்கிற
ஊர்,Oor - திருப்பதியாவது
அணி அரங்கம்,Ani Arangam - அழகிய திருவரங்கமாம்.
415ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஒன்பதாம் திருமொழி - மரவடியை (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 2) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) (ஸ்ரீ மணவாள மா முனிகள் - வியாக்யானம்-அவதாரிகை) (நான்காம் பாட்டு ஸ்ரீ மத் த்வாரகையிலே -பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்ய இருந்தவன் வர்த்திக்கிற தேசம் இது என்கிறார் .) 4
பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்ய துவரை என்னும்
அதில் நாயகராகி வீற்று இருந்த மணவாளர் மன்னு கோயில்
புது நாள் மலர்க் கமலம் எம்பெருமான் பொன் வயிற்றில் பூவே போல்வான்
பொது நாயகம் பாவித்து இறுமாந்து பொன் சாய்க்கும் புனல் அரங்கமே –4-9-4
துவரை என்னும் அதில்,Thuvarai Ennum Adhil - ஸ்ரீத்வாரகை யென்கிற பட்டணத்தில்
பதினாறு ஆம் ஆயிரம் தேவிமார்,Pathinaaru Aam Aayiram Devimaar - (ஆயர் மங்கைகளாகிய) பதினாராயிரம் தேவிமார்
பணி செய்ய,Pani Seiyya - கைங்கரியம் பண்ண,
நாயகர் ஆகி,Naayagar Aagi - (அவர்களுக்கு) நாயகராய்க் கொண்டு
வீற்றிருந்த,Veetrirundha - (அவர்களின் நடுவே) எழுந்தருளியிருந்த
மணவாளர்,Manavaalar - மணவாளப்பிள்ளை
மன்னு,Mannu - (அழகியமணவாளப் பெருமாளாய்) நித்தியவாஸம் பண்ணுகிற
கோயில்,Koyil - கோயிலாவது;
புதுநாள் கமலம் மலர்,Pudunaal Kamalam Malar - அப்போதலர்ந்த செவ்விய தாமரை பூவானது
எம்பெருமான்,Emperumaan - எம்பெருமானுடைய
பொன் வயிற்றில்,Pon Vayitril - அழகிய திருநாபியிலுள்ள
பூபோல்வான்,Poopolvaan - தாமரைப்பூவோடு ஸாம்யம் பெறுவதற்காக
பொதுநாயகம் பாவித்து,Podhunaayagam Paaviththu - ஸர்வநிர்வாஹகத்தைப் பாவித்து
இறுமாந்து,Irumanthu - (அப்பாவனையாலே) கர்வங்கொண்டு
பொன் சாய்க்கும்,Pon Saikkum - (மற்ற தாமரைகளின்) அழகைத் தள்ளிவிடா நின்றுள்ள
புனல்,Punal - நீர்வளத்தையுடைய
அரங்கம்,Arangam - திருவரங்கமாம்.
416ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஒன்பதாம் திருமொழி - மரவடியை (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 2) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) (ஸ்ரீ மணவாள மா முனிகள் - வியாக்யானம்-அவதாரிகை) (ஐந்தாம் பாட்டு – ஸ்ரீ நாரத பகவானுக்கு தன் வைபவத்தை பிரகாசிப்பித்த ஸ்ரீ சர்வேஸ்வரன் -அவன் பக்கலிலே ஸ்தோத்ரம் பண்ணி வணங்க -கண் வளர்ந்த தேசம் இது என்கிறார்.) 5
ஆமையாய் கங்கையாய் ஆழ் கடலாய் அவனியாய் அரு வரைகளாய்
நான்முகனாய் நான்மறையாய் வேள்வியாய் தக்கணையாய் தானும் ஆனான்
சேமமுடை நாரதனார் சென்று சென்று துதித்து இறைஞ்சக் கிடந்தான் கோயில்
பூ மருவிப் புள்ளினங்கள் புள்ளரையன் புகழ் குழறும் புனல் அரங்கமே –4-9-5
ஆமை ஆய்,Aamai Aay - (ஸ்ரீநாரத் மஹர்ஷிக்குத் தன்னுடைய ஸர்வாதிகத்ததுவத்தை விளங்கச் செய்வதற்காக)
(முதலில் கங்காஜலத்துக்குள்) ஆமையாயும்

கங்கை ஆய்,Gangai Aay - (பின்பு அந்த ஆமைமுதலிய ஜந்துக்களுக்கு இருப்பிடமான) கங்கையாயும்
ஆழ் கடல் ஆய்,Aazh Kadal Aay - (பின்பு அக்கங்கை முதலிய நதிகளுக்குப் புகலிடமான) ஆழ்ந்து கடலாயும்
அவனி ஆய்,Avani Aay - (பின்பு அக்கடலுக்கு இருப்பிடமான) பூமியாயும்
அவனி அய்,Avani Ay - (பின்பு) அப்பூமிக்கு ஆதாரமான) பெரியமலைகளாயும்
அரு வரைகள் ஆய்,Aru Varaigal Aay - (பின்பு) அப்பூமிக்கு ஆதாரமான) பெரியமலைகளாயும்
நான்முகன் ஆய்,Naanmugan Aay - (பின்பு அம்மலைகளுக்கு ஸ்ருஷ்டிகர்த்தாவான) சதுர்முகனாயும்
நால்மறை ஆய்,Naalmurai Aay - (பின்பு அச்சதுர்முகனுக்குத் தாரகமான) நான்கு வேதங்களாயும்
வேள்வி ஆய்,Velvi Aay - (பின்பு வேதாந்தங்களுக்குப் பராபணமான) யாகங்களாகவும்
தக்கணை ஆய்,Thakkanai Aay - (பின்பு அந்த யாகங்களுக்கு விர்யத்தைக் கொடுக்க வல்ல) தக்ஷிணையாகவும்
தானும் ஆனான்,Thaanum Aanaan - (அந்த தக்ஷிணை முகமாக அனைவர்க்கும் அவரவர்கள் விரும்பின பலத்தைக் கொடுக்கவல்ல அஸாதாரண விக்ரஹ விசிஷ்டனான) தானகவும்,
சேமம் உடை,Saemam Udai - (ப்ரஹ்மபாவணையில் நிஷ்ட்டையாகிற) க்ஷேமத்தையுடைய
நாரதனார்,Naarathanar, Naradhar - ஸ்ரீநாரத பகவான்
சென்று சென்று,Sendru Sendru - பலகாலும் எழுந்தருளி
துதித்து,Thudiththu - ஸ்தோத்திரம் பண்ணி
இறைஞ்சி,Irainji - வணங்கும்படி
கிடந்தான்,Kidandhaan - பள்ளிகொண்டருள் பவனாகவும் இராநின்ற எம்பெருமானுடைய
கோயில்,Koyil - கோயிலாவது
புள் இனங்கள்,Pul Inangal - (அன்னம் முதலிய) பறவைக்கூட்டங்கள்
பூ,Poo - (நீர்ப்பூ முதலிய) பூக்களில்
மருவி,Maruvi - பொருந்தியிருந்து
புள் அரையன்,Pul Araiyan - தங்கள் சாதிக்குத் தலைவனான பெரிய திருவடியினுடைய
புகழ்,Pugazh - கீர்த்தியை
குழறும்,Kuzharum - அநக்ஷரரஸமாகப் பேசாநிற்கப் பெற்றதும்
புனல்,Punal - நீர்வளத்தையுடையதுமான
அரங்கம்,Arangam - திருவரங்க நகராம்
417ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஒன்பதாம் திருமொழி - மரவடியை (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 2) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) (ஸ்ரீ மணவாள மா முனிகள் - வியாக்யானம்-அவதாரிகை) (ஆறாம் பாட்டு திரௌபதியை குழல் முடிப்பித்து –பாண்டவர்களை ராஜாக்கள் ஆக்கி -உத்தரா தநயனையும் உஜ்ஜீவிப்பித்தவன்- நித்ய வாசம் பண்ணுகிற தேசம் இது என்கிறார்.) 6
மைத்துனன்மார் காதலியை மயிர் முடிப்பித்து அவர்களையே மன்னராக்கி
உத்தரை தன் சிறுவனையும் உய்யக் கொண்ட உயிர் ஆளன் உறையும் கோயில்
பத்தர்களும் பகவர்களும் பழ மொழி வாய் முனிவர்களும் பரந்த நாடும்
சித்தர்களும் தொழுது இறைஞ்சி திசை விளக்காய் நின்ற திருவரங்கமே –4-9-6
மைத்துனன் மாரி,Maiththunan Maari - (தனது) மைத்துனன்மாரான பாண்டவர்களுடைய
காதலியை,Kaathaliyai - பத்தினியாகிய த்ரௌபதியை
மயிர் முடிப்பித்து,Mayir Mudippiththu - விரிந்த கூந்தலை முடியும் படி செய்தருளி
அவர்களைளேயே,Avargalaiyeye - அப்பாண்டவர்களையே
மன்னர் ஆக்கி,Mannar Aakki - அரசான்வித்தளியவனும்
உத்தரை தன்,Uththarai Than - (அபிமந்யுவின் மனைவியான) உத்தரை என்பவளுடைய
சிறுவனை,Siruvanai - மகனான (கருவிற் கரிக்கட்டையாயொழிந்த) பரிக்ஷித்தை
உய்யக் கொண்ட,Uyyak Konda - உயிர்பெற்றெழுந்திருக்கும் படி செய்தருளியவனும்
உயிர் ஆளன்,Uyir Aalan - எல்லா உயிர்கட்கும் தலைவனுமான எம்பெருமான்
உறையும்,Urayum - எழுந்தருளயிருக்கிற
கோயில்,Koyil - கோயிலாவது;
பத்தர்களும்,Paththargalum - பக்தர்களும்
பழ மொழி வாய் முனிவர்களும்,Pazha Mozhi Vaai Munivargalum - அநாதிவாக்காகிய வேதத்தை வாயிற்கொண்டுள்ள ரிஷிகளும்
பரந்த நாடும்,Parantha Naadum - விசாலமான நாட்டிலுள்ள மற்றும் பலரும்
சித்தர்களும்,Siththargalum - நித்திய முக்தர்களும்
தொழுது இறைஞ்ச,Thozhuthu Irainja - அஞ்சாலி பண்ணி வணங்கும்படி
திசை விளக்கு ஆய்நிற்கின்ற,Thisai Vilakku Aaynirkkinra - எல்லாத் திக்குகளுக்கும் விளக்காயிருக்கிற திருவரங்க நகராம்
418ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஒன்பதாம் திருமொழி - மரவடியை (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 2) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) (ஸ்ரீ மணவாள மா முனிகள் - வியாக்யானம்-அவதாரிகை) (ஏழாம் பாட்டு-ஸ்ரீ வாமனனாய் மாவலியை குறும்பதக்கி-ராஜ்யத்தை வாங்கி -அவனை பாதாளத்திலே வைத்தவன் வர்த்திக்கிற தேசம் இது என்கிறார்.) 7
குறள் பிரமசாரியாய் மாவலியை குறும்பதக்கி அரசு வாங்கி
இறைப் பொழுதில் பாதாளம் கலவிருக்கை கொடுத்து உகந்த வெம்மான் கோயில்
எறிப்புடைய மணி வரைமேல் இள நாயிறு எழுந்தால் போல் அரவணையின் வாய்ச்
சிறப்புடைய பணங்கள் மிசை செழு மணிகள் விட்டு எறிக்கும் திருவரங்கமே –4-9-7
குறள் பிரம சாரி ஆய்,Kural Brama Saari Aay - வாமக ப்ரஹ்மசாரியாய் (எழுந்தருளி)
பக வலிமை,Paga Valimai - மஹாபலியினடைய
குறும்பு அதக்கி,Kurumbu Athakki - செருக்கை அடக்கி
அரசு,Arasu - (அவனுடைய) ராஜ்யமாயிருந்த பக்ஷமியை
வாங்கி,Vaangi - (தன்னுடையதாம் படி நீரேற்றுப்) பெற்று
இறைப் பொழுதில்,Iraip Pozhudil - க்ஷணகாலத்துக்குள்
பாதாளம்,Paadhaalam - பாதாளலோகத்தை
கலவிருக்கை கொடுத்து,Kalavirukkai Koduththu - (அவனுக்கு) இருப்பிடமாகக் கற்பித்து
உதந்த,Uthantha - (இந்திரன் வேண்டுகோளைத் தலைக்கட்டினோம் என்று) மகிழ்நத
எம்மான்,Emmaaan - எமது தலைவனான எம்பெருமான் (எழுந்தருளியிருக்கிற)
கோயில்,Koyil - கோயிலாவது
எறிப்பு உடைய,Erippu Udaiya - மிக்க ஒளியையுடைய
மணி வரை மேல்,Mani Varai Mel - நீலரத்ந பர்வதத்தின்மேல்
இள ஞாயிறு,Ila Nyaayiru - காலஸூரியர்கள்
எழுந்தால் போல்,Ezhundhaal Pol - உதித்தாற்போல
அறவு அணை பின் வாய்,Aravu Anai Pin Vaai - திருவனந்தாழ்வானிடத்து
சிறப்பு உடைய,Sirappu Udaiya - அழகு பொருந்திய
பணங்கள் மிக,Panangal Miga - படங்களின்மேல்
செழு மணிகள்,Sezhu Manigal - செழுமை தங்கிய ரத்னங்களானவை
விட்டு எறிந்தும்,Vittu Erindhum - மிகவும் ஜ்வலியா நிற்கப்பெற்ற
திரு அரங்கம்,Thiru Arangam - திருவரங்கமாம்
419ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஒன்பதாம் திருமொழி - மரவடியை (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 2) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) (ஸ்ரீ மணவாள மா முனிகள் - வியாக்யானம்-அவதாரிகை) (எட்டாம் பாட்டு அதி க்ரூரரான ஹிரண்யனை அடர்த்து பிடித்து நிரசித்தவன் வர்த்திக்கிற தேசம் இது என்கிறார்.) 8
உரம் பற்றி இரணியனை உகிர் நுதியால் ஒள்ளிய மார்பு உறைக்க ஊன்றிச்
சிரம் பற்றி முடி இடிய கண் பிதுங்க வாய் அலரத் தெழித்தான் கோயில்
உரம் பெற்ற மலர்க் கமலம் உலகு அளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட
வரம் புற்ற கதிர் செந்நெல் தாள் சாய்த்து தலை வணங்கும் தண் அரங்கமே –4-9-8
மூலம் பற்றி,Moolam Patri - (தன்னுடைய) வலிமை நினைத்து (ச் செருக்குற்று)
இரணியனை,Iraniyanai - இரணியாஸஷரனுடைய
துப்புரிய மார்பு,Thuppuriya Maarbu - அழகிய மார்பை
உகிர்நுதியாற் உறைக்க ஊன்றி,Ugirnuthiyaar Uraikka Oonri - நகங்களின் அணிகள் உள்ளே பொத்தும்படி (திருக்கைகளால்) பற்றிக்கொண்டு
முடி,Mudi - (அவனது தலையிலுள்ள) கிரீடமானது
இடிய,Idiya - பொடி படும்படியாகவும்
கண்,Kan - கண்களானவை
பிதுங்க,Pithunga - பிதுங்கும்படியாகவும்
வாய் அரை,Vaai Arai - (வேதனை பொறுக்கமாட்டாமல்) வாய் விரியும்படியாகவும்
சிரம்பற்றி,Sirampatri - தலையைப் பிடித்து நெரித்து
தெழித்தான்,Thezhiththaan - (பிரஹலாதனுடைய விரோதியை முடித்தோமென்னும் மகிழ்ச்சியினால்) ஆரவாரம் செய்தருளின எம்பெருமான் (எழுந்தருளியிருக்கிற)
கோயில்,Koyil - கோயிலானது;
உரம் பெற்ற,Uram Petra - செழிப்புபொருந்திய
கமலம் மலர்,Kamalam Malar - தாமரை மலர்களானவை
உலகு அளந்த,Ulagu Alandha - மேலுலகை அளப்பதற்கு உயர்ந்த
சே அடி போல்,Sey Adi Pol - திருவடியைப்போல்
உயர்ந்து காட்ட,Uyarnthu Kaatta - உயர்ந்து விளங்க
வரம்பு பெற்ற,Varambu Petra - வரம்பு சேர்ந்து விளைந்து நிற்பதும்
காம்புங்> உற்ற,Kaambung Utra - காம்பு சேர்ந்து விளைந்து நிற்பதும்
கதிர்,Kathir - கதிரையுடையதுமான
செந் நெல்,Sen Nel - செந்நெல்லானது
தான் சாய்த்து,Thaan Saiththu - தாள்களை நீட்டி
தலை வணங்கும்,Thalai Vanangum - தலைவணங்கி நிற்கப்பெற்ற
தண் அரங்கம்,Than Arangam - குளிர்ந்த திருவங்க நகராம்.
420ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஒன்பதாம் திருமொழி - மரவடியை (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 2) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) (ஸ்ரீ மணவாள மா முனிகள் - வியாக்யானம்-அவதாரிகை) (ஒன்பதாம் பாட்டு – தசாவதாரமாய் கொண்டு ஜகத் ரஷணம் பண்ணுமவன் நித்ய வாசம் பண்ணுகிற தேசம் இது என்கிறார்.) 9
தேவுடைய மீனமாய் யாமையாய் ஏனமாய் அரியாய் குறளாய்
மூவுருவில் ராமனாய் கண்ணனாய் கல்கியாய் முடிப்பான் கோயில்
சேவலோடு பெடை அன்னம் செங்கமல மலர் ஏறி யூசலாடி
பூவணை மேல் துதைந்து எழு செம்பொடியாடி விளையாடும் புனல் அரங்கமே –4-9-9
தேவு உடைய,Thevu Udaiya - தேஜஸ்ஸையுடைய
மீனம் ஆய்,Meenam Aay - மத்ஸ்யமாயும்
ஆமை ஆய்,Aamai Aay - கூர்மமாயும்
எனம் ஆய்,Enam Aay - வராஹமாயும்
அரி ஆய்,Ari Aay - நரஸிம்ஹமாயும்
குறள் ஆய்,Kural Aay - வாமனாயும்
மூ உருவின் இராமன் ஆய்,Moo Uruvin Iraaman Aay - பரசுராமனாயும், தசரதராமனாயும், பலராமனாயும்,
கண்ணன் ஆய்,Kannan Aay - ஸ்ரீகிருஷ்ணனாயும்
கற்கி ஆய்,Karki Aay - கல்கியாயும் (திருவலதாரங்களெடுத்து)
முடிப்பான்,Mudippaan - (விரோதிகளை) ஒழிக்கவல்ல எம்பெருமான் (எழுந்தருளியிருக்கிற)
கோயில்,Koyil - கோயிலாவது;
பெடை அன்னம்,Pedai Annam - அன்னப்பேடையான
சேவலொடு,Sevalodu - (தனமு) புருஷஹம்ஸத்தோடு கூடுகிற
செம் கமலம் மலர் ஏறி,Sem Kamalam Malar Eri - செந்தாமரைப் பூவின் மேலேறி
ஊசல் ஆடி,Oosal Aadi - (அம்மலரை அசைத்து ஊசலாடி
பூ அணை மேல்,Poo Anai Mel - புஷ்ப சயகத்தின்
துதைந்து,Thudhaindhu - (ஒன்றோடொன்று புணருகையாகிற) நெருக்கத்தைச் செய்து
எழு,Ezh - (அதனால்) கிளர்ந்த
செம்பொடி ஆடி,Sempodi Aadi - (கண்ணமாகிற) சிவந்த பொடியில் மூழ்கி
விளையாடும்,Vilaiyaadum - விளையாடா நிற்கப்பெற்ற
புனல்,Punal - நீர்வளத்தை யுடைய
அரங்கம்,Arangam - திருவரங்க நகராம்.
421ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஒன்பதாம் திருமொழி - மரவடியை (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 2) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) (ஸ்ரீ மணவாள மா முனிகள் - வியாக்யானம்-அவதாரிகை) (பத்தாம் பாட்டு – சர்வ நிர்வாஹகனாய் -ஸ்ரீயபதி யானவன் சரசமாக கண் வளர்ந்து அருளுகிற தேசம் இது -என்கிறார்.) 10
செரு ஆளும் புள் ஆளன் மண் ஆளன் செரு செய்யும் நாந்தகம் என்னும்
ஒரு வாளன் மறை யாளன் ஓடாத படை ஆளன் விழுக்கை ஆளன்
இரவாளன் பகலாளன் என்னை ஆளன் ஏழுலகப் பெரும் புரவாளன்
திருவாளன் இனிதாக திருக் கண்கள் வளர்கின்ற திருவரங்கமே –4-9-10
செரு ஆளும்,Seru Aalum - தானே போர்ச்செய்யவல்ல
புள் ஆனன்,Pul Aanam - பெரிய திருவடிக்குத் தலைவனும்,
மண் ஆனன்,Man Aanam - லீலாவிபூதியை ஆளுமவனும்,
செரு செய்யும்,Seru Seiyyum - (ஆச்ரித விரோதிக்கு எதிர்த்துப்) பூசல் செய்யவில்லை.
நாந்தகம் என்னும்,Naandhagam Ennum - நந்தகம் என்கிற
ஒருவானன்,Oruvaanan - ஒப்பற்றதொரு கொற்றவாளையுடையவனும்
மறை ஆனன்,Marai Aanam - நான்கு வேதங்களையும் ஆணாமவனும்
ஓடாத,Odaadha - (போர்க்களத்தில்) முதுகுகாட்டி ஒடாத
படை ஆனன்,Padai Aanam - ஸேனைகளை யுடையவனும்,
விழு கை ஆனன்,Vizhu Kai Aanam - சிறந்த ஔதார்ய முடையனும்,
இரவு ஆனன்,Iravu Aanam - ராத்ரி காலத்துக்கு நியாதமகனும்,
பகல் ஆனன்,Pagal Aanam - பகற்போதுக்கு நியாமகனும்
என்னை ஆனன்,Ennai Aanam - அடியேனுக்கு தலைவனும்
ஏழ் உலகம்பெரு புரவு ஆனன்,Ezh Ulagamperu Puravu Aanam - ஸப்தலோகங்களாகிய பெரிய ஸுஷேத்திரங்களை ஆளுமவனும்
திரு ஆன்,Thiru Aan - பெரிய பிராட்டியாரை (த் தேவியாக) ஆளுமவருமான எம்பெருமான்
இனிது ஆக,Inidhu Aaga - திருவள்ளமுவந்து
திருக்கண்கள் வளர்கின்ற,Thiruk Kangal Valarkkinra - திருக்கண் வளர்ந்தருளு (கோயிலாவது;)
422ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஒன்பதாம் திருமொழி - மரவடியை (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 2) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) (ஸ்ரீ மணவாள மா முனிகள் - வியாக்யானம்-அவதாரிகை) (நிகமத்தில் இத் திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லி தலைக் கட்டுகிறார்.) 11
கைந்நாகத் திடர் கடிந்த கனல் ஆழி படை வுடையான் கருதும் கோயில்
தென்னாடும் வடநாடும் தொழ நின்ற திருவரந்தத் திருப்பதியின் மேல்
மெய்நாவன் மெய்யடியான் விட்டு சித்தன் விரித்த தமிழ் உரைக்க வல்லார்
எஞ்ஞான்றும் எம்பெருமான் இணை அடிக் கீழ் இணை பிரியாது இருப்பர் தாமே –4-9-11
கை நாகத்து இடர் கடிந்த,Kai Naagaththu Idar Kadindha - பெரிய துதிக்கையையுடைய கஜேந்திராழ்வா னுடைய துன்பத்தைப் போக்கின
கனல் ஆழி,Kanal Aazhi - ஜ்வலியா நின்றுள்ள திருவாழியாழ்வனை
படை உடையான்,Padai Udaiyaan - ஆயுதமாகவுடைய எம்பெருமான்
கருதும் கோயில்,Karudhum Koyil - விரும்பி எழுந்தருளியிருக்கப்பெற்ற கோயிலாய்
தென் நாடும் வட நாடும் தொழ நின்ற,Then Naadum Vada Naadum Thozha Nindra - தென்னாட்டிலுள்ளாரும் வடநாட்டிலுள்ளாரும் ஸேவிக்கும்படி அமைந்த
திரு அரங்கம் திருப்பதியின்மேல்,Thiru Arangam Thiruppathiyinmel - திருவரங்கமென்னும் திருப்பதி விஷயமாக
மெய் நாவன் மெய் அடியான் விட்டு சித்தன்,Mei Naavan Mei Adiyaan Vittu Siththan - மெய்யே சொல்லா நின்ற நாவையுடையரும் பிரயோஜனத்தை விரும்பாது அடிமை செய்பவருமான பெரியாழ்வார்
விரித்த தமிழ்,Viritha Tamil - அருளிச்செய்த இத்தமிழ்ப் பாசுரங்களை
உரைக்க வல்லார்,Uraikka Vallaar - ஓதவல்லவர்கள்
எம்பெருமான் இணை அடி கீழ்,Emperumaan Inai Adi Keezh - எனக்குச் சேஷியான பரமபத நாதனுடைய ஒன்றோடொன்றொத்த திருவடிகளின் கீழ்
எஞ்ஞான்றும் இணைபிரியாது இருப்பர்,Ennyaanrum Inaipiriyaadhu Irupaar - எந்நாளும் (நித்யமுக்தர்களின் திரளாகிற) துணையைப் பிரியாமல் (அவர்களோடு கூடி) வாழ்ந்திருக்கப்பெறுவர்