| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 443 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை) (தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே விரும்பிப்புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல்.) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 1 | நெய்க் குடத்தைப் பற்றி ஏறும் எறும்புகள் போல் நிரந்து எங்கும் கைக் கொண்டு நிற்கின்ற நோய்காள் காலம் பெற உய்யப் போமின் மெய்க் கொண்டு வந்து புகுந்து வேதப் பிரானார் கிடந்தார் பைக் கொண்ட பாம்பணை யோடும் பண்டன்று பட்டினம் காப்பே–5-2-1 | நெய்க் குடத்தை,Neik Kudaththai - நெய் வைத்திருக்கும் குடத்தை பற்றி,Patri - பற்றிக் கொண்டு ஏறும்,Erum - (அக் குடத்தின் மேல்) ஏறுகின்ற எறும்புகள் போல்,Erumbugal Pol - எறும்புகளைப் போல் நிரந்து எங்கும்,Niranthu Engum - என்னுடைய உடம்பு முழுவதும் பரவி கைக் கொண்டு,Kaik Kondu - (என்னை) வசப்படுத்தி நிற்கின்ற ,Nirkkinra - (என்னையே இருப்பிடமாகக் கொண்டு) நிலைத்து நிற்கிற நோய்காள்,Noigal - வியாதிகளே! காலம்பெற,Kaalampera - விரைவாக உய்ய,Uyya - (நீங்கள்) பிழைக்க வேண்டி போமின்,Pomin - (என்னை விட்டு வேறிடத்தைத் தேடிப்) போய் விடுங்கள் வேதம் பிரானார்,Vedham Piraanaar - (பிரமனுக்கு) வேதத்தை உபகரித்தருளின் எம்பெருமான். பைக் கொண்ட,Paik Konda - பரம்பினை படங்களை யுடைய பாம்பு அணையோடும்,Paambu Anaiyodum - திருவனந்தாழ்வானாகிற படுக்கையோடுங்கூட வந்து புகுந்து ,Vandhu Pugundhu - எழுந்தருளி மெய்,Mei - (எனது) சரீரத்தை கொண்டு,Kondu - (தனக்கு இனிதாகத்) திருவுள்ளம் பற்றி கிடந்தார்,Kidandhaar - (என் சரீரத்தை கொண்டு (தனக்கு இனிதாகத்) திருவுள்ளம் பற்றி (என் சரீரத்தினுள்ளே) பள்ளி கொண்டிரா நின்றார், ஆதலால் பட்டினம்,Pattinam - (அவ்வெம்பெருமானுடைய) பட்டணமாகிய இவ்வாத்மா பண்டு அன்று,Pandu Andru - பழைய நிலைமையை உடையதன்று; காப்பு ,Kaappu - (அவனால்) காக்கப் பெற்றது. |
| 444 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை) (தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே விரும்பிப்புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல்.) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 2 | சித்திர குத்த னெழுத்தால் தென் புலக்கோன் பொறி யொற்றி வைத்த இலச்சினை மாற்றித் தூதுவர் ஓடி யொளித்தார் முத்துத் திரைக்கடற் சேர்ப்பன் மூதறி வாளர் முதல்வன் பத்தர்க் கமுதன் அடியேன் பண்டன்று பட்டினம் காப்பே–5-2-2 | சித்திர குத்தன்,Siththira Kuththan - சித்ரகுப்தனென்கிற (யமலோகத்துக்) கணக்குப் பிள்ளையானவன் தென் புலம் கோன்,Then Pulam Kon - தெற்குத் திசைக்குத் தலைவனான யமனுடைய பொறி ஒற்றி,Pori Oththri - மேலெழுத்தை இடுவித்து எழுத்தால் வைத்த,Ezuththaal Vaiththa - (தான்) எழுதிவைத்த இலச்சினை,Ilachchinai - குறிப்புச் சீட்டை தூதுவர்,Thoodhuvar - யம கிங்கரர்கள் மாற்றி,Maatri - கிழித்துப் போட்டு விட்டு ஓடி ஒளிந்தார்,Odi Olindhaar - கண்ணுக்குத் தெரியாத இடந்தேடி) ஓடி ஒளிந்துக் கொண்டார்கள்; முத்து,Muththu - முத்துக்களை (க்கொண்டு வீசுகிற) திரை,Thirai - அலைகளை யுடைய கடல்,Kadal - கடலில் சேர்ப்பன,Saerppana - கண் வளர்ந்தருளுமவனும், மூது அறிவு ஆளர்,Moothu Arivu Aalar - முதிர்ந்த அறிவை யுடைய நித்ய ஸூரிகளுக்கு முதல்வன்,Mudhalvan - தலைவனும், பத்தர்க்கு,Paththarkku - அடியார்களுக்கு அமுதன்,Amudhan - அம்ருதம் போல் இனியனுமான எம்பெருமானுக்கு அடியேன்,Adiyaen - (யான்) தாஸனாயினேன்; பட்டினம்,Pattinam - (அவ்வெம்பெருமானுடைய) பட்டணமாகிய இவ்வாத்மா பண்டு அன்று,Pandu Andru - பழைய நிலைமையை உடையதன்று; காப்பு ,Kaappu - (அவனால்) காக்கப் பெற்றது. |
| 445 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை) (தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே விரும்பிப்புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல்.) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 3 | வயிற்றில் தொழுவைப் பிரித்து வன் புலச் சேவை யதக்கி கயிற்றும் அக் காணி கழித்துக் காலிடைப் பாசம் கழற்றி எயிற்றிடை மண் கொண்ட எந்தை இராப் பகல் ஓதுவித்து என்னைப் பயிற்றிப் பணி செய்யக் கொண்டான் பண்டன்று பட்டினம் காப்பே–5-2-3 | எயிற்றிடை,Eyittridai - (வராஹ ரூபியாய் திருவதரித்தபோது.) (தனது) கோரப் பல் மேல் மண்,Man - பூமியை கொண்ட,Kondra - தாங்கி யருள எந்தை,Endhai - எம்பெருமான் (அடியேனுக்கு) வயிற்றில் தொழுவை,Vayitril Thozhuvai - வயிற்றினுள் விலங்கிட்டுக் கொண்டிருக்கை யாகிற கர்ப்ப வாசத்தை பிரித்து,Piriththu - கழித்தருளியும் புலம்,Pulam - இந்திரியங்களால் வல் சேவை,Val Saevai - கடுயைமான ரிஷபங்களை அதக்கி,Athakki - (பட்டி மேய்ந்து திரிய வொட்டாமல்) அடக்கியும் கயிறும்,Kayirum - நரம்புகளும் அக்கு,Akku - எலும்புகளுமேயா யிருக்கின்ற ஆணி,Aani - சரீரத்தில் (ஆசையை) கழித்து,Kaliththu - ஒழித்தருளியும் பாசம்,Paasam - (யம தூதர்களுடைய) பாசங்களை காலிடை கழற்றி,Kaalidai Kalittri - காலிலே கட்டி இழுக்க வொண்ணாதபடி பண்ணியும், இரா பகல்,Iraa Pakal - இரவும் பகலும் ஓதுவித்து,Othuviththu - நல்லறிவைப் போதித்து பயிற்றி,Payittri - (கற்பித்தவற்றை) அனுஷ்டிக்கச் செய்து அருளியும் பணி செய்ய,Pani Seiyya - நித்திய கைங்கர்யம் பண்ணும்படி என்னை கொண்டான்,Ennai Kondaan - அடியேனைக் கைக் கொண்டருளினான்; பட்டினம்,Pattinam - (அவ்வெம்பெருமானுடைய) பட்டணமாகிய இவ்வாத்மா பண்டு அன்று,Pandu Andru - பழைய நிலைமையை உடையதன்று; காப்பு ,Kaappu - (அவனால்) காக்கப் பெற்றது. |
| 446 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை) (தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே விரும்பிப்புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல்.) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 4 | மங்கிய வல்வினை நோய்காள் உமக்கும் ஓர் வல்வினை கண்டீர் இங்குப் புகேன்மின் புகேன்மின் எளிதன்று கண்டீர் புகேன்மின் சிங்கப் பிரானவன் எம்மான் சேரும் திருக் கோயில் கண்டீர் பங்கப் படாது உய்யப் போமின் பண்டன்று பட்டினம் காப்பே–5-2-4 | மங்கிய,Mangiya - (ஆத்துமா உருத் தெரியாதபடி) மழுங்கிக் கிடப்பதற்கு காரணமான வல் வினை,Val Vinai - வலிய பாவங்களின் மூலமாக வளர்ந்த நோய்காள்,Noigal - வியாதிகளே உமக்கும்,Umakkum - உங்களுக்கும் கூட ஓர் வல் வினை,Or Val Vinai - ஒரு கடினமான தீமை நேர்ந்தபடியே) கண்டீர்,Kandir - (இன்று) பாருஙக்ள் இங்கு,Ingku - இவ்விடத்தும் புகேன்மின் புகேன் மின்,Pugenmin Pugen Min - வர வேண்டா, வர வேண்டா எளிது அன்று ,Elidhu Andru - (இனி நீங்கள் என்னைக் கிட்டுகை) சுலபமான கரியமன்று; புகேன்மின்,Pugenmin - ஆகையால் இனி இங்கு வர வேண்டா சிங்கப் பிரானவன்,Singap Piraanavan - நரசிம்மாவதாரமெடுத்து உபசரித்தருளினவன எம்மான் அவன்,Emmaaan Avan - (என் ஆத்துமா) எமக்குத் தலைவனுமான எம்பெருமான் சேரும்,Saerum - எழுந்தருளி யிருப்பதற்கிடமான திரு கோவில் கண்டீர்,Thiru Kovil Kandir - திருக் கோயிலாக அமைந்த படியைப் பாருங்கள் பங்கப்படாத,Pangkap Padaadha - பரிபவப் படாமல் உய்யபோமின்,Uyya Pomin - பிழைத்துப் போங்கள். பட்டினம்,Pattinam - (அவ்வெம்பெருமானுடைய) பட்டணமாகிய இவ்வாத்மா பண்டு அன்று,Pandu Andru - பழைய நிலைமையை உடையதன்று; காப்பு ,Kaappu - (அவனால்) காக்கப் பெற்றது. |
| 447 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை) (தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே விரும்பிப்புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல்.) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 5 | மாணிக் குறளுருவாய மாயனை என் மனத் துள்ளே பேணிக் கொணர்ந்து புகுத வைத்துக் கொண்டேன் பிறிதின்றி மாணிக்கப் பண்டாரம் கண்டீர் வலி வன் குறும்பர்களுள்ளீர் பாணிக்க வேண்டா நடமின் பண்டன்று பட்டினம் காப்பே–5-2-5 | மாணி,Maani - பிரமசாரி வேஷத்தை யுடைய குறள் உரு,Kural Uru - வாமனாய் அவதரித்தவனும் மாணிக்கப் பண்டாரம்,Maanikkap Pandaaram - மாணிக்க நிதி போல் இனியவனும் மாயனை,Maayanai - ஆச்சரிய பூதனுமான எம்பெருமானை பேணி,Paeni - ஆசைப் பட்டு கொணர்ந்து,Konarndhu - எழுந்தருளப் பண்ணிக் கொண்டு வந்து என் மனத்துள்ளே,En Manaththullae - என் நெஞ்சினுள்ளே புகுத,Pugudha - புகுந்திருக்கும்படி பிறிது இன்றி,Piridhu Inri - வேற்றுமை யில்லாமல் வைத்துக் கொண்டேன்,Vaiththuk Konden - அமைத்துக் கொண்டேன். வலி வல் குறும்பர்கள் உள்ளீர்,Vali Val Kurumpargal Ullir - மிகவும் கொடிய குறும்புகளைச் செய்கிற இந்திரியங்களே! நடமின்,Nadamin - (வேறிடந்தேடி) ஓடுங்கள்; பாணிக்க வேண்டா,Paanikka Vaendaa - தாமதிக்க வேண்டியதில்லை, பட்டினம்,Pattinam - (அவ்வெம்பெருமானுடைய) பட்டணமாகிய இவ்வாத்மா பண்டு அன்று,Pandu Andru - பழைய நிலைமையை உடையதன்று; காப்பு ,Kaappu - (அவனால்) காக்கப் பெற்றது. |
| 448 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை) (தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே விரும்பிப்புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல்.) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 6 | உற்ற வுறு பிணி நோய்காள் உமக்கு ஒன்று சொல்லுகேன் கேண்மின் பெற்றங்கள் மேய்க்கும் பிரானார் பேணும் திருக் கோயில் கண்டீர் அற்ற முரைக்கின்றேன் இன்னம் ஆழ் வினைகாள் உமக்கு இங்கு ஓர் பற்றில்லை கண்டீர் நடமின் பண்டன்று பட்டினம் காப்பே–5-2-6 | உற்ற,Utrra - நெடு நாளாக இருக்கிற உறு பிணி,Uru Pini - மிக்க வருத்தத்தைச் செய்கிற நோய்காள்,Noigal - நோய்களே! உமக்கு,Umakku - உங்களுக்கு ஒன்று,Onru - ஒரு வார்த்தை சொல்லுகேன்,Sollugenaen - சொல்லுகிறேன்: கேண்மின்,Kaenmin - கேளுங்கள்; பெற்றங்கள் மேய்க்கும் பிரானார் பேணும்,Pettrangal Maeykkum Piraanaar Paenum - (நீங்கள் இப்போது குடியிருக்கிற எனது இவ்வுடலானது) பசுக்களை மேய்த்தருளிய கண்ணபிரான் விரும்பி எழுந்தருளி யிருக்கைக்கு இடமான திருக் கோயில்,Thiruk Koyil - திருக் கோயிலாயிற்று; கண்டீர்,Kandir - முன்புள்ள நிலைமையிற் காட்டில் இன்றுள்ள நிலைமையின் வாசியைப் பாருங்கள்; ஆழ்,Aazh - (ஸம்ஸார ஸமுத்திரத்தில் என்னை) ஆழங்காற்படுத்தின வினை காள்,Vinai Kaal - ஓ கொடுமைகளே! இன்னம்,Innam - மறுபடியும் அற்றம் உரைக்கின்றேன்,Attram Uraikkindren - அறுதியாகச் சொல்லுகிறேன்; உமக்கு,Umakku - உங்களுக்கு இங்கு,Ingku - இவ்விடத்தில் ஓர் பற்று இல்லை,Or Patru Illai - ஒருவகை அவலம்பமும் கிடையாது; நடமின்,Nadamin - (இனி இவ்விடத்தை விட்டு) நடவுங்கள். பட்டினம்,Pattinam - (அவ்வெம்பெருமானுடைய) பட்டணமாகிய இவ்வாத்மா பண்டு அன்று,Pandu Andru - பழைய நிலைமையை உடையதன்று; காப்பு ,Kaappu - (அவனால்) காக்கப் பெற்றது. |
| 449 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை) (தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே விரும்பிப்புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல்.) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 7 | கொங்கைச் சிறுவரை யென்னும் பொதும்பினில் வீழ்ந்து வழுக்கி அங்கோர் முழையினில் புக்கிட்டு அழுந்திக் கிடந் துழல்வேனை வங்கக் கடல் வண்ணன் அம்மான் வல் வினையாயின மாற்றி பங்கப் படா வண்ணம் செய்தான் பண்டன்று பட்டினம் காப்பே–5-2-7 | சிறு வரை,Siru Varai - சிறிய மலை போன்ற கொங்கை என்னும்,Kongai Ennum - முலைகளாகிற பொதும்பினில்,Podhumpinil - பொந்தில் வழுக்கி வீழ்ந்து,Vazhukki Veezhndhu - வழுக்கி விழுந்து அங்கு ஓர் முழையினில் புக்கிட்டு,Angu Or Muzhaiyinil Pukkitttu - (நரகமென்கிற) பர லோகமாகிய ஒரு குஹையினுள் புகுந்து அழுந்திக் கிடந்த,Azhundhik Kidandha - (அங்குநின்றும் கால் பேர்க்க வொட்டாமல் அங்கேயே) அழுந்தியிருந்து உழல்வேனை,Uzhalvaenai - (திரியப் போகிற என்னுடைய) வல் வினை ஆயின,Val Vinai Aayina - தீவினைகளா யிருப்பவைகளை வங்கம் கடல் வண்ணன் அம்மாள்,Vangkam Kadal Vannan Ammaaal - கப்பல்களை யுடைய கடல் போன்ற திருநிறத்தனான எம்பெருமான் மாற்றி,Maatri - போக்கி யருளி பங்கப்படா வண்ணம்,Pangkap Padaa Vannam - பரிபவப் படாதபடி செய்தான்,Seidhaan - செய்தருளினான்; பட்டினம்,Pattinam - (அவ்வெம்பெருமானுடைய) பட்டணமாகிய இவ்வாத்மா பண்டு அன்று,Pandu Andru - பழைய நிலைமையை உடையதன்று; காப்பு ,Kaappu - (அவனால்) காக்கப் பெற்றது. |
| 450 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை) (தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே விரும்பிப்புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல்.) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 8 | ஏதங்க ளாயின வெல்லாம் இறங்க லிடுவித்து என் னுள்ளே பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து போதில் கமல வன் னெஞ்சம் புகுந்தும் என் சென்னித் திடரில் பாத விலச்சினை வைத்தார் பண்டன்று பட்டினம் காப்பே–5-2-8 | பீதக ஆடை பிரானர்,Peethaga Aadai Piraanargal - திருப் பீதாம்பரத்தை யுடையவனான எம்பெருமான் பிரமகுரு ஆகிவந்து,Brahmaguru Aagivandhu - ப்ரஹ்மோபதேசம் பண்ணக் கடவனான ஆசாரியனாய் எழுந்தருளி போது இல்,Podhu Il - அறிவுக்கு இருப்பிடானதும் அல்,Al - அந்தர்யாமியையும் அறிய வொட்டாத) வன்மையை யுடையதுமான நெஞ்சம் கமலம்,Nenjcham Kamalam - ஹ்ருதய கமலத்தினுள் புகுந்து,Pugundhu - பிரவேசித்து என் னுள்ளே,En Nullae - எனது (அந்த) ஹிருதயத்தில் ஏதங்கள் ஆயின எல்லாம்,Eaathangal Aayina Ellaam - தோஷங்களாக இருப்பவற்றை யெல்லாம். இறங்க விடுவித்து,Iranga Viduviththu - நீக்கி என்,En - என்னுடைய சென்னித் திடரில்,Sennith Thidarul - தலையினிது பாத விலச்சினை,Paadha Vilachchinai - ஸ்ரீபாத முத்திரையை வைத்தார்,Vaiththaar - ஏறி யருளப் பண்ணினான் பட்டினம்,Pattinam - (அவ்வெம்பெருமானுடைய) பட்டணமாகிய இவ்வாத்மா பண்டு அன்று,Pandu Andru - பழைய நிலைமையை உடையதன்று; காப்பு ,Kaappu - (அவனால்) காக்கப் பெற்றது. |
| 451 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை) (தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே விரும்பிப்புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல்.) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 9 | உறக லுறக லுறகல் ஒண் சுட ராழியே சங்கே அற வெறி நாந்தக வாளே அழகிய சார்ங்கமே தண்டே இறவு படாம லிருந்த எண்மர் உலோக பாலீர்காள் பறவை யரையா உறகல் பள்ளி யறைக் குறிக் கொண்மின்–5-2-9 | ஒண் சுடர்,On Sudar - அழகிய தேஜஸ்ஸை யுடைய ஆழியே,Aazhiye - திருவாழி யாழ்வானே! எறி,Eri - (எம்பெருமானால்) வீசப் படுகின்ற நாந்தக வாளே!,Naandhaka Vaaley - நந்தகமென்கிற திருக் குற்றுடை வாளே! அழகிய சார்ங்கமே,Azhagiya Saargngamae - அழகு பொருந்திய சார்ங்கமேசார்ங்கமென்கிற தநுஸ்ஸே! தண்டே,Thandae - (கௌமோதகி என்கிற) கதையே! இருந்த,Irundha - (எம்பெருமானுடைய நியமனத்திற்கு ஆட்பட்டு) இரா நின்ற எண்மர் உலோக பாலீர்காள்,Enmar Uloga Paaleerkaal - அஷ்ட திக்குப் பாலகர்களே! இறவு படாமல்,Iravu Padaamal - தப்பிப் போகாமல் சங்கே,Sangey - ஸ்ரீபஞ்சஜந்யாழ்வானே! அற,Ara - (ஆச்ரித விரோதிகளின் உடல்) அறும்படி உறகல் உறகல் உறகல்,Urakal Urakal Urakal - உறங்காதிருங்கள், உறங்காதிருங்கள், உறங்காதிருங்கள்; பறவை அரையா,Paravai Araiya - பறவைகளுக்குத் தலைவனான பெரிய திருவடியே! உறகல்,Urakal - உறங்காதிரு; பள்ளி அறை,Palli Arai - (நீங்கள் எல்லாரும் விழித்துக் கொண்டிருந்தது) (எம்பெருமானுக்குத்) திருப்பள்ளி யறையாகிய என் சரீரத்தை குறிக் கொள்மின்,Kurik Kolmin - நோக்கிக் காத்திடுங்கள். |
| 452 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை) (தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே விரும்பிப்புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல்.) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 10 | அரவத் தமளியி னோடும் அழகிய பாற்கட லோடும் அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து பரவைத் திரை பல மோதப் பள்ளி கொள்கின்ற பிரானை பரவுகின்றான் விட்டு சித்தன் பட்டினம் காவற் பொருட்டே–5-2-10 | அரவத்து அமளியினோடும்,Aravaththu Amaliyinodum - திருவனந்தாழ்வனாகிற படுக்கையோடும் அழகிய பால் கடலோடும்,Azhagiya Paal Kadalodum - அழகு பொருந்திய திருப் பாற் கடலோடுங் கூட அரவிந்தப் பாவையும் தானும்,Aravindhap Paavayum Thaanum - செந்தாமரை மகளாகிய பெரிய பிராட்டியாரும் தானும் வந்து,Vandhu - எழுந்து அருளி அகம்படி,Agampadi - (எனது) உடம்பாகிற ஸ்தானத்தில் புகுந்து,Pugundhu - பிரவேசித்து, பரவை,Paravai - (அந்தத்) திருப்பாற்கடலினுடைய பல திசை,Pala Thisai - பல அலைகள் மோத,Moedha - தளும்ப பள்ளி கொள்கின்ற,Palli Kolginra - திருக் கண் வளர்ந்தருளா நின்ற பிரானை,Piranaai - உபகாரகனான எம்பெருமானை விட்டு சித்தன்,Vittu Siththan - பெரியாழ்வார் பட்டினம் காவல் பொருட்டே,Pattinam Kaaval Poruttrae - ஆத்ம ரக்ஷண நிமித்தமாக பரவுகின்றான்,Paravuginraan - போற்றுகின்றார். |