Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 5-3 துக்கச்சுழலையை (10 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
453ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை) (திருமாலிருஞ்சோலை எம்பெருமானைப் போகவொட்டேனென்று தடுத்தல்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 1
துக்கச் சுழலையைச் சூழ்ந்து கிடந்த வலையை அறப் பறித்து
புக்கினில் புக்குன்னைக் கண்டு கொண்டேன் இனிப் போக விடுவதுண்டே
மக்க ளறுவரைக் கல்லிடை மோத இழந்தவள் தன் வயிற்றில்
சிக்கென வந்து பிறந்து நின்றாய் திரு மாலிருஞ்சோலை யெந்தாய்–5-3-1
மக்கள் அறுவரை,Makkal Aruvarai - உனக்கு முன்பிருந்த (ஆறு பிள்ளைகளையும்)
கல் இடை மோத,Kal Idai Moedha - (கம்ஸனானவன்) கல்லில் மோதி முடிக்க, (அதனால்)
இழந்தவள் தன்,Izhandhaval Than - (அம் மக்கள் அறுவரையும்) இழந்தவனான தேவகியினுடைய
வயிற்றில்,Vayitrril - திரு வயிற்றில்
சிக்கென வந்து,Sikkena Vandhu - சடக்கென வந்து
பிறந்து நின்றாய்,Pirandhu Nindraai - திருவவதரித் தருளினவனே!
திருமாலிருஞ்சோலை எந்தாய்,Thirumaalirunjcholai Endhaai - (எல்லார்க்கும் எளியவனும்படி) திருமாலிருஞ்சோலையில் (எழுந்தருளியிருக்கிற) எம்பெருமானே!
புக்கினில் புக்கு,Pukkinil Pukku - (நீ) புகுந்தவிடங்களில் எல்லாம் (நானும்) புகுந்து
கண்டுகொண்டு,Kandukondu - உன்னை ஸேவித்து
துக்கம் சுழலையை சூழ்ந்து கிடந்த,Thukkam Suzhalaiyai Soozhndhu Kidandha - துக்கங்களாகிற சுழலாற்றைச் சுற்று மதிளாகக் கொண்டிருக்கிற
வலையை,Valaiyai - வலை போன்ற சரீரத்தில் நசையை
அற,Ara - அறும்படி
பறித்தேன்,Pariththaen - போக்கிக் கொண்ட அடியேன்
இனி,Ini - (உன்னைப்) பிரயாணப்பட்டுப் பெற்ற பின்பும்
போக விடுவது உண்டே,Poga Viduvathu Undae - (வேறிடத்திற்குப்) போகும்படி விடுவது முண்டோ?
454ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை) (திருமாலிருஞ்சோலை எம்பெருமானைப் போகவொட்டேனென்று தடுத்தல்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 2
வளைத்து வைத்தேன் இனிப் போகலொட்டேன் உந்த னிந்திர ஞாலங்களால்
ஒளித்திடில் நின் திரு வாணை கண்டாய் நீ ஒருவர்க்கும் மெய்யனல்லை
அளித்தெங்கும் நாடும் நகரமும் தம்முடைத் தீ வினை தீர்க்கலுற்று
தெளித்து வலஞ்செய்யும் தீர்த்தமுடைத் திரு மாலிருஞ் சோலை யெந்தாய்–5-3-2
நாடும்,Naadum - நாட்டிலுள்ளாரும்
நகரமும்,Nagaramum - நகரத்திலுள்ளாரும்
எங்கும்,Engkum - மற்றெங்குமுள்ளவர்களும்
அளித்து,Aliththu - நெருங்கி
தம்முடைய,Thammudaiya - தங்கள் தங்களுடைய
தீ வினை,Thee Vinai - துஷ்ட கர்மங்களை
தீர்க்கல் உற்று,Theerkal Utrru - ஒழிப்பத்தில் விருப்புற்று
தெளித்து,Thelizththu - ஆரவாரித்துக் கொண்டு
வலம் செய்யும்,Valam Seiyyum - பிரதக்ஷிணம் செய்யப் பெற்ற
தீர்த்தம் உடை,Theertham Udai - தீர்த்தம் விசேஷங்களையுடைய
திருமாலிருஞ்சோலை,Thirumaalirunjcholai - திருமாலிருஞ்சோலையில்
எந்தாய்,Endhaai - (எழுந்தருளியிருக்கிற) எம்பெருமானே!
வளைத்து வைத்தேன்,Valaitthu Vaiththaen - (உன்னைச்) சூழ்ந்து கொண்டேன்
இனி,Eni - இனி மேல்
போகல் ஒட்டேன்,Pogal Ottaen - (நீ வேறிடந் தேடிப்) போவதை (நான்) ஸம்மதிக்க மாட்டேன்.
உன் தன்,Un Than - உனக்கு உள்ள
இந்திர ஞாலங்களால்,Endhira Gnaalangalal - மாயச் செய்கையினால்- வல்லமையினால்
ஒளித்திடில்,Oliththidil - (உன்னை நீ) ஒளித்துக் கொண்டால்
நின் திரு ஆணை,Nin Thiru Aanai - உனது பிராட்டியின் மேலாணை.
நீ,Nee - (அப்படி ஒளிக்கலாகாது) நீ
ஒருவர்க்கும்,Oruvarkkum - ஒருவரிடத்திலும்
மெய்யன் அல்லை,Meiyan Allai - உண்மையான உக்தி அனுஷ்டானங்களை யுடையவனல்லை.
455ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை) (திருமாலிருஞ்சோலை எம்பெருமானைப் போகவொட்டேனென்று தடுத்தல்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 3
உனக்குப் பணி செய்திருக்கும் தவமுடையேன் இனிப் போய் ஒருவன்
தனக்குப் பணிந்து கடைத்தலை நிற்கை நின் சாயை யழிவு கண்டாய்
புனத்தினை கிள்ளிப் புதுவவி காட்டி உன் பொன்னடி வாழ்க வென்று
இனக் குறவர் புதிய துண்ணும் எழில் திரு மாலிருஞ் சோலை யெந்தாய்–5-3-3
இனம் குறவர்,Enam Kuravar - திரள் திரளாய்ச் சேர்ந்துள்ள குறவர்கள்
புனம்,Punam - புனத்திலுண்டான
தினை,Thinai - தினைகளை
கிள்ளி,Killli - பறித்து
புது அவி காட்டி,Pudhu Avi Kaatti - (அதை எம்பெருமானுக்குப்) புதிய ஹவிஸ்ஸாக அமுது செய்யப் பண்ணி
உன் பொன் அடி வாழ்க என்று,Un Pon Adi Vaazhga Endru - அதற்காகப் பிரயோஜ நாந்தரத்தை விரும்பாமல்)“உன் செவ்வடி செவ்வி திருக்காப்பு” என்று (மங்களாசாஸநம் பண்ணிக் கொண்டு)
புதியது,Pudhiyadhu - புதியதாகிய அத் தினையை
உண்ணும்,Unnum - உண்ணுதற்கு இடமான
எழில்,Ezhil - அழகு பொருந்திய
மாலிருஞ் சோலை,Maalirunjcholai - திருமாலிருஞ் சோலை மலையில் (எழுந்தருளி யிருக்கிற)
எந்தாய்,Endhaai - எம்பெருமானே!
உனக்கு,Unakku - (சேஷியாகிய) உனக்கு
பணி செய்து இருக்கும் தவம் உடையேன்,Pani Seidhu Irukkum Thavam Udaiyaen - கைங்கரியம் பண்ணிக் கொண்டிருக்கையாகிற (உனது) அநுக்ரஹத்தைப் பெற்றுள்ள அடியேன்
இனி,Eni - இனி மேல்
போய்,Poi - புறம்பே போய்
ஒருவன் தனக்கு பணிந்து,Oruvan Thanakku Panindhu - ஒரு க்ஷுத்ர புருஷனைப் பற்றி
கடைத்தலை,Kadainthalai - (அவனுடைய) வீட்டு வாசலில்
நிற்கை,Nirkai - (கதிதேடி) நிற்பதானது
நின் சாயை அழிவு கண்டாய்,Nin Saayai Azhivu Kandaai - உன்னுடைய மேன்மைக்குக் குறை யன்றோ?
456ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை) (திருமாலிருஞ்சோலை எம்பெருமானைப் போகவொட்டேனென்று தடுத்தல்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 4
காதம் பலவும் திரிந்துழன்றேற்கு அங்கோர் நிழலில்லை நீருமில்லை உன்
பாத நிழலல்லால் மற்றோரு யிர்ப்பிடம் நான் எங்கும் காண்கின்றிலேன்
தூது சென்றாய் குரு பாண்டவர்க்காய் அங்கோர் பொய் சுற்றம் பேசிச் சென்று
பேதஞ்செய்து எங்கும் பிணம் படுத்தாய் திருமாலிருஞ் சோலை யெந்தாய்–5-3-4
குரு,Guru - குருவம்சத்திற் பிறந்த
பாண்டவர்க்காய்,Paandavarkkaai - பாண்டவர்களுக்காக
ஓர் பொய் சுற்றம் பேசி சென்று,Or Poi Sutrram Paesi Sendru - ஒரு பொய் யுறவைப் பாராட்டிக் கொண்டு
அங்கு,Angu - துரியோதனாதியரிடத்து
தூது சென்றாய்,Thoodhu Sendraai - தூது போய்
பேதம் செய்து,Paedham Seidhu - இரண்டு வகுப்பினர்க்கும் கலஹத்தை மூட்டி
இல்லை,Ellai - (பின்பு பாரத யுத்தங் கோடித்து அந்த யுத்தத்தில்) கண்டதில்லை
உன் பாதம் நிழல் அல்லால்,Un Paadham Nizhal Allaalaal - உனது திருவடி நிழலொழிய
எங்கும்,Enggum - துரியோதனாதியரில் ஒருவர் தப்பாமல்
பிணம் படுத்தாய்,Pinam Paduththaai - பிணமாக்கி யொழித் தருளினவனே!
திருமாலிருஞ்சோலை எந்தாய்!,Thirumaalirunjcholai Endhaai - திருமாலிருஞ் சோலை மலையில் (எழுந்தருளி யிருக்கிற)
எம்பெருமானே!

காதம் பலவும்,Kaadham Palavum - பலகாத தூரமளவும்
திரிந்து உழன்றேற்கு,Thirindhu Uzhandraerku - திரிந்து அலைந்த எனக்கு
அங்கு,Angu - அவ் விடங்களில்
ஓர் நிழல் இல்லை,Or Nizhal Illai - (ஒதுங்குகைக்கு) ஒரு நிழலுங் கண்டதில்லை;
நீர்,Neer - (அன்றியும்) (காபமாற்றக் கடவதான) தண்ணீரும்
மற்று ஓர்,Matru Or - மற்றொரு
இல்லை,Ellai - கண்டதில்லை ஆராய்ந்து பார்த்தவிடத்தில்
உன் பாதம் நிழல் அல்லால்,Un Paadham Nizhal Allaalaal - உனது திருவடி நிழலொழிய
உயிர்ப்புஇடம்,Uyirppidam - ஆச்வாஸ ஹேதுவான இடத்தை
நான் எங்கும் காண்கின்றிலேன்,Naan Enggum Kaankindrilaen - நான் ஓரிடத்தும் காண்கிறேனில்லை.
457ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை) (திருமாலிருஞ்சோலை எம்பெருமானைப் போகவொட்டேனென்று தடுத்தல்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 5
காலுமெழா கண்ண நீரும் நில்லா உடல் சோர்ந்து நடுங்கி குரல்
மேலு மெழா மயிர்க் கூச்சுமறா என தோள்களும் வீழ் வொழியா
மாலுகளா நிற்கும் என் மனனே உன்னை வாழத் தலைப் பெய்திட்டேன்
சேலுகளா நிற்கும் நீள் சுனை சூழ் திரு மாலிருஞ் சோலை யெந்தாய்–5-3-5
சேல்,Sael - மீன்களானவை
உகளா நிற்கும்,Ughalaa Nirkum - துள்ளி விளையாடுதற்கு இடமான
நீள் சுனை சூழ்,Neel Sunai Soozh - பெரிய தடாகங்களாலே சூழப் பெற்ற
என,Ena - என்னுடைய
காலும்,Kaalum - கால்களும்
எழா,Ezhaa - (வைத்து விடத்தை விட்டுப்) போகின்றனவில்லை;
கண்ண நீரும்,Kanna Neerum - கண்ணீரும்
நில்லா,Nillaa - உள்ளே தங்குகின்றனவில்லை.
உடல்,Udal - சரீரமானது
சோர்ந்து நடுங்கி,Soarndhu Nadungi - கட்டுக் குலைந்து நடுங்கியதனால்
குரலும்,Kuralum - குரலும்
மேல் எழா,Mael Ezhaa - கிளம்புகின்றதில்லை;
மயிர் கூச்சும் அறா,Mayir Koochchum Araa - மயிர்க் கூச்செறிதலும் ஒழிகின்றதில்லை;
திருமாலிருஞ்சோலை,Thirumaalirunjcholai - திருமாலிருஞ்சோலையில் (எழுந்தருளி யிருக்கிற)
எந்தாய்,Endhaai - எம்பெருமானே!
தோள்களும்,Tholgalum - (எனக்கு உன்னிடத்துள்ள அன்பு மிகுதியினால்) தோள்களும்
வீழ்வு ஒழியா,Veezhvu Ozhiaa - விழுந்து போவதில் நின்றும் ஒழிந்தனவில்லை ( ஒரு வியாபாரமும் செய்ய முடியாமல் விழுந்தொழிந்தன);
என் மனம்,En Manam - எனது நெஞ்சானது
மால் உகளா நிற்கும்,Maal Ughalaa Nirkum - வியாமோஹத்தை அடைந்திரா நின்றது;
வாழ,Vaazha - (இப்படிகளால்) வாழ்வுறும்படி
உன்னை,Unnai - உன்னை
தலைப் பெய்திட்டேன்,Thalaip Peiththittaen - சேர்ந்து விட்டேன்.
458ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை) (திருமாலிருஞ்சோலை எம்பெருமானைப் போகவொட்டேனென்று தடுத்தல்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 6
எருத்துக் கொடியுடை யானும் பிரமனும் இந்திரனும் மற்றும்
ஒருத்தரும் இப் பிறவி யென்னும் நோய்க்கு மருந்தறிவாரு மில்லை
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணா மறு பிறவி தவிரத்
திருத்தி உங் கோயிற் கடைப் புகப் பெய் திரு மாலிருஞ் சோலை யெந்தாய்–5-3-6
திருமாலிருஞ்சோலை எந்தாய்!,Thirumaalirunjcholai Endhaai - திருமாலிருஞ்சோலையில் (எழுந்தருளி யிருக்கிற) எம்பெருமானே!
எருது கொடி உடையானும்,Erudhu Kodi Udaiyaanum - வ்ருஷப த்வஜனான ருத்திரனும்
பிரமனும்,Brahmanum - (அவனுக்குத் தந்தையான) ப்ரஹ்மாவும்
இந்திரனும்,Indhiranum - தேவேந்திரனும்
மற்றும் ஒருத்தரும்,Matrum Oruththarum - மற்றுள்ள எந்தத் தேவரும்
இ பிறவி என்னும் நோய்க்கு,E Piravi Ennum Noaikku - இந்த ஸம்ஸாரமாகிற வியாதிக்கு
மருந்து அறிவார் இல்லை,Marundhu Arivaar Illai - மருந்து அறிய வல்லவரல்லர்;
மருத்துவன் ஆய் நின்ற,Maruththuvan Aay Nindra - (இப்பிறவி நோய்க்கு) மருந்தை அறியுமவனான
மா மணிவண்ணா,Maa ManiVanna - நீலமணி போன்ற வடிவை யுடையவனே!
மறு பிறவி தவிர,Maru Piravi Thavira - (எனக்கு) ஜந்மாந்தரம் நேராதபடி
திருத்தி,Thirutthi - (அடியேனை) சிக்ஷித்து
உன் கோயில் கடை புக பெய்,Un Koyil Kadai Puga Pey - உன் கோயில் வாசலில் வாழும்படி அருள் புரிய வேணும்.
459ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை) (திருமாலிருஞ்சோலை எம்பெருமானைப் போகவொட்டேனென்று தடுத்தல்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 7
அக்கரை யென்னு மனர்த்தக் கடலு ளழுந்தி உன் பேரருளால்
இக்கரை யேறி யிளைத்திருந்தேனை அஞ்சேலென்று கை கவியாய்
சக்கரமும் தடக் கைகளும் கண்களும் பீதக வாடையொடும்
செக்கர் நிறத்துச் சிவப்புடையாய் திரு மாலிருஞ் சோலை யெந்தாய்–5-3-7
சக்கரமும்,Chakkaramum - திருவாழியாழ்வானும்
தட கைகளும்,Thada Kaigalum - பெரிய திருக்கைகளும்
கண்களும்,Kangalum - திருக்கண்களும்
பீதக ஆடை யொடும்,Peethaga Aadai Yodum - திருப் பீதாம்பரமும்
செக்கர் நிறத்து சிவப்பு உடையாய்,Chekkar Niraththu Sivappu Udaiyaai - செவ் வானத்தின் நிறம் போன்ற நிறத்தை உடையவையாய் இருக்கப் பெற்றவனே!
அக்கரை என்னும்,Akkarai Ennum - ஸம்ஸாரம் என்கிற
அநர்த்த கடலுள்,Anarththa Kadalul - அநர்த்த ஸமுத்திரத்தின் உள்ளே
அழுந்தி,Azhundhi - (நெடுநாள்) அழுந்திக் கிடந்து
இளைத்திருந்து,Elaiththirundhu - (அதில்) வருத்ப்பட்டுக் கொண்டிருந்தது
உன் பேர் அருளால்,Un Per Arulaal - (பின்பு) உனது பரம கிருகையினால்
இக் கரை ஏறினேனை,Ek Karai Eaerinaenaai - இக் கரையேறிய அடியேனைக் குறித்து
அஞ்சேல் என்று கை கவியாய்,Anjael Endru Kai Kaviyai - அபய ப்ரதாக முத்ரையைக் காட்டி யருள
460ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை) (திருமாலிருஞ்சோலை எம்பெருமானைப் போகவொட்டேனென்று தடுத்தல்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 8
அன்று வயிற்றில் கிடந்திருந்தே அடிமை செய்யலுற் றிருப்பன்
இன்று வந்து இங்கு உன்னைக் கண்டு கொண்டேன் இனிப் போக விடுவதுண்டே
சென்றங்கு வாணனை ஆயிரந் தோளும் திருச் சக்கரமதனால்
தென்றித் திசை திசை வீழச் செற்றாய் திருமாலிருஞ் சோலை யெந்தாய்–5-3-9
மைத்துனன் மார்களை,Maiththunan Maargalai - உனது அத்தை பிள்ளைகளான பாண்டவர்களை
வாழ்வித்து,Vaazhviththu - வாழச் செய்து
மாற்றவர் நூற்றுவரை,Maatravar Nootruvarai - (அவர்களுக்குச்) சத்துருக்களாகிய துரியோதநாதியர் நூறு பேரையும்
கெடுத்தாய்,Keduththaai - ஒழித்தருளினவனே!
திருமாலிருஞ்சோலை ஏந்தாய்!,Thirumaalirunjcholai Eaendhaai - திருமாலிருஞ்சோலையில் (எழுந்தருளி யிருக்கிற) எம்பெருமானே!
இன்றொடு நாளை என்றே,Endrodu Naalai Endrae - இன்றைக்கு, நாளைக்கு என்று சொல்லிக் கொண்டே (கழித்த காலம்)
எத்தனை காலமும் எத்தனை ஊழியும்,Ethanai Kaalamum Ethanai Oozhiyum - எத்தனை காலமும் எத்தனை கல்பங்களும் உண்டோ,
இத்தனை காலமும்,Ithanai Kaalamum - இத்தனை காலம் முழுவதும்
போய் கிறிப்பட்டேன்,Poi Kirippattaen - (ஸம்ஸாரமாகிற) யந்திரத்தில் அகப்பட்டுக் கொண்டிருந்தேன்;
இனி,Eni - (அதில் நின்றும் விடுபட்டு ஞானம்பெற்ற) இன்று முதலாக
போக விடுவது உண்டே,Poga Viduvathu Undae - (உன்னை) வேறிடத்திற்குப் போக ஸம்மதிக்க (என்னால்) முடியுமோ?
சித்தம்,Siththam - (எனது) நெஞ்சானது
நின்பாலது,Nin Paalathu - உன் திறத்தில் ஈடுபட்டுள்ளமையை
அறிதி அன்றே,Aridhi Anrae - அறிகின்றா யன்றோ?
461ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை) (திருமாலிருஞ்சோலை எம்பெருமானைப் போகவொட்டேனென்று தடுத்தல்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 9
அன்று வயிற்றில் கிடந்திருந்தே அடிமை செய்யலுற் றிருப்பன்
இன்று வந்து இங்கு உன்னைக் கண்டு கொண்டேன் இனிப் போக விடுவதுண்டே
சென்றங்கு வாணனை ஆயிரந் தோளும் திருச் சக்கரமதனால்
தென்றித் திசை திசை வீழச் செற்றாய் திருமாலிருஞ் சோலை யெந்தாய்–5-3-9
அங்கு,Angu - சோணித புரத்திற்கு
சென்று,Sendru - எழுந்தருளி
வாணனை,Vaananai - பாணாஸுரனுடைய
ஆயிரம் தோளும்,Aayiram Tholum - ஆயிரந் தோள்களும்
திசை திசை,Thisai Thisai - திக்குகள் தோறும்
தென்றி வீழ,Thenri Veezha - சிதறி விழும்படி
திருச் சக்கரம் அதனால்,Thiruch Chakkaram Athanaal - சக்ராயுதத்தினால்
செற்றாய்,Settraai - நெருக்கி யருளினவனே!
திருமாலிருஞ்சோலை ஏந்தாய்!,Thirumaalirunjcholai Eaendhaai - திருமாலிருஞ்சோலையில் (எழுந்தருளி யிருக்கிற) எம்பெருமானே!
வயிற்றில் கிடந்திருந்து அன்றே,Vayitrril Kidandhirundhu Anrae - கர்ப்ப வாஸம் பண்ணுகையாகிற அன்று முதற் கொண்டே
அடிமை செய்யல்,Adimai Seiyal - (உனக்குக்) கைங்கரியம் பண்ணுவதில்
உற்றிருப்பன்,Uttriruppan - அபிநிவேசங் கொண்டிருந்த நான்
இன்று,Endru - இப்போது
இங்கு வந்து,Engu Vandhu - இத் திருமாலிருஞ்சோலை மலையில் வந்து
உன்னை,Unnai - (அனைவருக்கும் எளியனான) உன்னை
கண்டு கொண்டேன்,Kandu Kondaen - ஸேவித்துக் கொண்டேன்;
இனி போக விடுவது உண்டே,Eni Poga Viduvathu Undae - (அதில் நின்றும் விடுபட்டு ஞானம்பெற்ற) இன்று முதலாக (உன்னை) வேறிடத்திற்குப் போக ஸம்மதிக்க (என்னால்) முடியுமோ?
462ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை) (திருமாலிருஞ்சோலை எம்பெருமானைப் போகவொட்டேனென்று தடுத்தல்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 10
சென்றுலகம் குடைந்தாடும் சுனைத் திரு மாலிருஞ் சோலை தன்னுள்
நின்ற பிரான் அடி மேல் அடிமைத் திறம் நேர் பட விண்ணப்பஞ்செய்
பொன் திகழ் மாடம் பொலிந்து தோன்றும் புதுவைக் கோன் விட்டு சித்தன்
ஒன்றினோ டொன்பதும் பாட வல்லார் உலகமளந்தான் தமரே–5-3-10
உலகம்,Ulagam - உலகத்தாரெல்லாரும்
சென்று,Sendru - (தங்கள் தங்கள் இருப்பிடித்தில் நின்றும்) போய்
குடைந்து,Kudainthu - அவகாஹித்து
ஆடும்,Aadum - நீராடா நிற்கப் பெற்ற
சுனை,Sunai - தீர்த்தங்களை யுடைய
திருமாலிருஞ்சோலை தன்னுள்,Thirumaalirunjcholai Thannul - திருமாலிருஞ்சோலை மலையில்
நின்ற பிரான்,Nindra Praan - எழுந்தருளி யிருக்கிற எம்பெருமானடைய
அடி மேல்,Adi Mael - திருவடிகள் மேல்
அடிமைத்திறம்,Adimaiththiram - கைங்கரிய விஷயமாக
பொன் திகழ்,Pon Thigal - ஸ்வர்ண மயமாய் விளங்கா நின்ற
மாடம்,Maadam - மாடங்களினால்
பொலிந்து தோன்றும்,Polindhu Thoondrum - நிறைந்து விளங்கா நின்ற
புதுவை,Puduvai - ஸ்ரீ வில்லிபுத்தூர்க்கு
கோன்,Koon - தலைவரான
விட்டு சித்தன்,Vittu Siththan - பெரியாழ்வார்
நேர்பட,Naerpadha - பொருந்தும்படி
விண்ணப்பம் செய்,Vinnappam Sei - அருளிச் செய்த
ஒன்றினோடு ஒன்பதும்,Onrinodu Onbadum - இப் பத்துப் பாசுரங்களையும்
பாட வல்லார்,Paada Vallaar - பாட வல்லவர்கள்
உலகம் அளந்தான் தமர்,Ulagam Alandhaan Thamar - திரிவிக்கிரமாவதாரம் செய்தருளின எம்பெருமானுக்குச் சேஷ பூதர்களாகப் பெறுவர்