திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1368 | பெரிய திருமொழி || (5-3–வென்றி) (திரு வெள்ளறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பூமிக்கு ராஜாக்களால் வரும் நலிவைப் போக்கி ரஷித்த அருமை வேணுமோ என்னுடைய பிரதிபந்தகத்தைப் போக்கி என்னை அடிமை கொள்ளுகைக்கு -என்கிறார் முன் – நீ தான் விரோதியைப் போக்கப் புக்கது இன்றோ) 1 | வென்றி மா மழு வேந்தி முன் மண் மிசை மன்னவரை மூ வெழு கால்
கொன்ற தேவ நின் குரை கழல் தொழுவதோர் வகை எனக்கு அருள் புரியே
மன்றில் மாம் பொழில் நுழை தந்து மல்லிகை மௌவலின் போது அலர்த்தித்
தென்றல் மா மணம் கமழ் தரவரு திரு வெள்ளறை நின்றானே –5-3-1 | பதவுரை Show / Hideதென்றல், Thendral - தென்றல் காற்றானது மன்றில் மாம் பொழில் நுழைதந்து, Manril Maam Pozhil Nuzhaithanthu - இடைவெளிகளிலே யுள்ள மாந்தோப்புகளிலே நுழைந்தும் மல்லிகை போது மௌவலின் போது அலர்த்தி, Mallikai Podhu Maulavin Podhu Alarthi - மல்லிகைப் பூக்களையும் முல்லைப் பூக்களையும் மலரச்செய்தும் மா மணம் கமழ்தர வரு, Maa Manam Kamazhdhara Varu - மிக்க பரிமளம் வீச வந்துலாவப் பெற்ற திரு வெள்ளறை, Thiru Vellarai - திருவெள்ளறையிலே நின்றானே, Nindraane - நின்றருளும் பெருமானே!, முன், Mun - முன்பொருகால் வென்றி மா மழு ஏந்தி, Vendri Maa Mazhu Aendhi - ஜயசீலமான பெரிய கோடாலிப் படையைத் தரித்து மண் மிசை மன்னரை மூவெழுகால் கொன்ற தேவ, Man Misai Mannarai Moovezhukaal Konra Deva - பூமியிலுள்ள அரசர்களை இருபத்தொரு தலைமுறை கொலைசெய்த தேவனே! நின் குரை கழல் தொழுவது ஓர் வகை எனக்கு அருள்புரி, Nin Kurai Kazhal Thozhuthavathu Oru Vagai Enakku Arulpuri - உன்னுடைய ஆபரண வொலிபொருந்திய திருவடிகளை வணங்கப் பெறும் ஓருபாயத்தை அடியேனுக்கு அருளவேணும். |
| 1369 | பெரிய திருமொழி || (5-3–வென்றி) (திரு வெள்ளறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஓர் ஆச்சார்ய அனுவர்த்தனம் பண்ணிக் கேட்க என்றால் இவன் இறாய்க்கும்-என்று இவன் தன்னை தாழ விட்டு ஸ்ரீ ஹயக்ரீவனாய் நின்று யாய்த்து உபதேசித்தது –ஸ்ரீ சாரதியாய் நின்று உபதேசித்தால் போலே யாய்த்து – வேதம் இதிஹாசாதிகள் இவற்றை உண்டாக்கினவனே என் பக்கலிலே கிருபையை பண்ணி யருள வேணும்) 2 | வசையில் நான்மறை கெடுத்த அம்மலர் அயற்கு அருளி முன் பரி முகமாய்
இசைகொள் வேதநூல் என்று இவை பயந்தவனே எனக்கு அருள் புரியே
உயர்கொள் மாதவிப் போதொடு உலாவிய மாருதம் வீதியின் வாய்த்
திசை எல்லாம் கமழும் பொழில் சூழ் திரு வெள்ளறை நின்றானே –5-3-2 | பதவுரை Show / Hideஉயர்கொள் மாதவி போ தொழு உலாவிய மாருதம், Uyarkol Maathavi Po Thozhu Ulaaviya Maarudham - ஓங்கிவளர்கின்ற குருக்கத்தி மரங்களிலுள்ள புஷ்பங்களோடே அணைந்த காற்றானது (- (திரு வெள்ளறை, நின்றானே!;)) வீதியின் வாய், Veedhiyin Vaai - வீதிகள்தோறும் (வீசும்போது) திசை எல்லாம் கமழும், Thisai Ellam Kamazhum - திக்குக்களெல்லாம் பரிமளம் பரவப்பெற்றதும் பொழில் சூழ், Pozhil Soozh - சோலைகள் சூழ்ந்திருக்கப்பெற்றதுமான முன், Mun - முன்பொருகால், வசை இல் நால் மறை கெடுத்த, Vasai Il Naal Marai Kedu - குற்றமற்ற நான்கு வேதங்களையும் போக்கடித்துக் கொண்டு வருந்திநின்ற அ மலர் அயர்கு, A Malai Ayarku - மலாரில் தோன்றின அப்பிரமனுக்கு அருளி, Aruli - அருள்புரிந்து பரி முகம் ஆய், Pari Mugam Aayi - ஹயக்ரிவாவதாரமெடுத்து இசை கொள் வேத நூல் இவை என்று, Isai Kol Veda Nool Ivai Endru - “ஸ்வரப்ரதானமான வேத சாஸ்த்ரங்கள் இவைகாண்” என்று சொல்லி பயந்தவனே, Payandhavaney - அவற்றை அவனுக்கு உபதேசித்துத் தந்தவனே! எனக்கு அருள்புரி, Enakku Arulpuriy - என் மீது கிருபை பண்ண வேணும் |
| 1370 | பெரிய திருமொழி || (5-3–வென்றி) (திரு வெள்ளறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திரு வாழியைக் கொண்டு கார்யம் செய்யப் பெறாத படி அவன் வரம் பெற்று இருக்கையாலே ஸ்ரீ திரு உகிரே ஆயுதமாகக் கொண்டு வ்யாபரித்தவனே – என்னுடைய விரோதியைப் போக்கி என் பக்கலிலே கிருபையைப் பண்ணி அருள வேணும்) 3 | வெய்யனாய் உலகு ஏழு உடன் நலிந்தவன் உடலம் இரு பிளவாகக்
கையில் நீள் உகிர் படையது வாய்த்தவனே எனக்கு அருள் புரியே
மையினார் தரு வரால் இனம் பாய வண் தடத்திடைக் கமலங்கள்
தெய்வம் நாறும் ஒண் பொய்கைகள் சூழ் திரு வெள்ளறை நின்றானே –5-3-3 | பதவுரை Show / Hideமையின் ஆர் தரு, Maiyin Ar Tharu - கருநிறத்தினால் பூர்ணமான (- (திருவெள்ளறை, நின்றானே!;)) வரால் இனம், Varal Inam - வரால் மீன்களின் திரள் வண் தடத்திடை பாய, Van Thadathidai Paaya - அழகிய தடாகங்களிலே துள்ளி விளையாடப்பெற்றதும், கமலங்கள் தெய்வம் நாறும், Kamalangal Deivam Naarum - தாமரைப் பூக்கள் திவ்யமான வாஸனை வீசாநின்ற ஒண் பொய்கைகள், On Poigaihal - அழகிய பொய்கைகளினால் சூழ், Sool - சூழப்பட்டதுமான வெய்யன் ஆய் உலகு ஏழ் உடன் நலிந்தவன், Veyyan Aayi Ulaku Ezhu Udan Nalindhavan - மிகவும் க்ரூரனாயிருந்து கொண்டு ஸப்த லோகங்களையும் ஒருங்கே ஹிம்ஸித்துக்கொண்டிருந்த இரணியனுடைய உடலகம் இரு பிளவு ஆ கையில், Udalagam Iru Pilavu Aa Kaiyil - மார்பு இரண்டு கூறாம்படி திருக்கைகளில் நீள் உகிர் படை அது வாய்த்தவனே, Neel Ukir Padai Adhu Vaiththavaney - நீண்ட நகங்களையே ஆயுதமாகப் பெற்றவனே! எனக்கு அருள்புரி, Enakku Arulpuriy - அடியேன் மீது க்ருபை பண்ணவேணும் |
| 1371 | பெரிய திருமொழி || (5-3–வென்றி) (திரு வெள்ளறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தேவர் திருவடிகளில் உண்டான கைங்கர்யத்துக்கு பூர்வ ஷண வர்த்தியான பரம பக்தியை எனக்கு பண்ணி அருள வேணும்) 4 | வாம்பரி யுக மன்னர் தம் உயிர் செக ஐவர் கட்கு அரசளித்த
காம்பினார் திரு வேங்கடப் பொருப்ப நின் காதலை யருள் எனக்கு
மாம் பொழில் தளிர் கோதிய மடக்குயில் வாயது துவர்ப்பு எய்த
தீம் பலங்கனி தேனது நுகர் திரு வெள்ளறை நின்றானே –5-3-4 | பதவுரை Show / Hideமாம்பொழில் தளிர் கோதிய மட குயில், Maampozhil Thalir Kothiya Mada Kuyil - மாந்தோப்புகளிலே அவற்றின் தளிர்களை கொத்தி உண்ட அழகிய குயில்கள் (- (திருவெள்ளறையில் நின்றானே!;)) வாய் அது துவர்ப்பு எய்த, Vaai Adhu Thuvarppu Eytha - தமது வாய் துவர்த்துப்போக (அந்த ரஸத்தை மாற்றுகைக்காக) தீம் பலங்கனி தேன் அது நுகர், Theem Palangani Then Adhu Nukar - இனிமையான பலாப் பழங்களிலுள்ள மதுவைப் பானம் பண்ணப் பெற்ற வாம் பரி, Vaam Pari - (பாரதப்போர்ச் சேனைகளிலே) மேல்விழுந்து வருகிற குதிரைகள் உக மன்னர்தம் உயிர் செக, Uga Mannartham Uyir Sek - மாளும்படியாகவும் (எதிரிகளான) அரசர்களினுடைய பிராணன் அழியும்படியாகவும் செய்து ஐவர்கட்கு அரசு அளித்த, Aivar Kadhku Arasu Alitha - பஞ்சபாண்டவர்களுக்கு ராஜ்யத்தை உபகரித்தருளிவனும், காம்பின் ஆர் திருவேங்கடம் பொருப்ப, Kaampin Ar Thiruvaengadam Poruppa - மூங்கில்களாலே நிறைந்த திருவேங்கடமலையில் உள்ளவனமான பெருமானே! நின் காதலை எனக்கு அருள், Nin Kaadhalai Enakku Arul - உன் விஷயமான பரம பக்தியை அடியேனுக்குப் பிறப்பித் தருளவேணும். |
| 1372 | பெரிய திருமொழி || (5-3–வென்றி) (திரு வெள்ளறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ பூமிப் பிராட்டி தன் விபூதி முகத்தாலே புக்கு அழுந்த –பிரளயத்தில் அகப்பட நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத ஸ்ரீ வராஹ வேஷத்தைப் பரிக்ரஹித்து அண்ட பித்தியிலே ஒட்டின பூமியை இடந்து எடுத்துக் கொண்டு ஏறினவனே – அர்த்திக்கவும் மாட்டாதே பூமியை ரஷித்த உனக்கு அர்த்தித்த என்னுடைய ரஷணம் பண்ணுகை பெரிய பணியோ) 5 | மான வேல் ஒண் கண் மடவரல் மண் மகள் அழுங்க முந்நீர்ப் பரப்பில்
ஏனமாகி அன்று இரு நிலம் இடந்தவனே எனக்கு அருள் புரியே
கான மா முல்லை கழைக் கரும்பு ஏறி வெண் முறுவல் செய்து அலர்கின்ற
தேனின் வாய் மலர் முருகு குக்கும் திரு வெள்ளறை நின்றானே –5-3-5 | பதவுரை Show / Hideகரும்பு கழை ஏறி, Karumbu Kazhai Eri - கரும்பு நுனியளவும் சென்று படர்ந்து (- (திருவெள்ளறையில் நின்றானே!;)) வெண் முறுவல் செய்து அலர்கின்ற, Ven Muruvai Seidhu Alarkindra - வெண்மையான புன்சிரிப்பைச் செய்வனபோல் விகஸியா நின்ற மா கானம் முல்லை மலர், Maa Kaanam Mullai Malar - பெரிய காட்டு முல்லைப் பூக்கள் தேனின் வாய் முருகு உகுக்கும், Thenin Vaai Murugu Ukukkum - வண்டுகளில் வாய்களிலே தேனைப் பெருக்காநிற்கப்பெற்ற மானம் வேல் ஒண் கண், Maanam Veel On Kan - பெருமை தங்கிய வேற்படை போன்ற அழகிய கண்களையுடையளாய் மடவரல், Madavarl - பெண்டிர்க்குரிய குணங்களையுடையளான மண்மகள், Manmakal - பூமிப் பிராட்டி அழுங்க, Azhunga - (பிரளயக் கடலில்) மூழ்கிக்கிடக்க, அன்று, Andru - அக்காலத்து, முந்நீர், Munnir - (அந்த பிரளயக்) கடலினுடைய பரப்பில், Parappil - மஹாஜலத்திலே ஏனம் ஆகி, Enam Aagi - மஹாவராஹ ரூபியாக (இழிந்து) இருநிலம் இடந்தவனே, Irunilam Idanthavane - விசாலமான பூமியை அண்டபித்தியில் நின்றும் குத்தியெடுத்து வந்தவனே! எனக்கு அருள்புரி, Enakku Arulpuriy - அடியேன்மீது கிருபை பண்ணாய். |
| 1373 | பெரிய திருமொழி || (5-3–வென்றி) (திரு வெள்ளறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மந்தரத்தை தரிக்க வல்ல ஸ்ரீ ஆமையின் வேஷத்தை பரிக்ரஹித்து அவர்களை ரஷித்து அவர்களுக்கு சத்தா ஹேது வானவனே –நின்னடிமையை யருள் எனக்கு) 6 | பொங்கு நீண்முடி யமரர்கள் தொழுது எழ அமுதினைக் கொடுத்து அளிப்பான்
அங்குஒர் ஆமையதாகிய வாதி நின்னடிமையை யருள் எனக்கு
தங்கு பேடை யோடூடிய மதுகரம் தையலார் குழல் அணைவான்
திங்கள் தோய் சென்னி மாடம் சென்று அணை திருவெள்ளறை நின்றானே –5-3-6 | பதவுரை Show / Hideதங்கு பேடையோடு ஊடிய மதுகரம், Thangu Pedaivodu Oodiya Mathukaram - பூவிலே தங்கியிருந்த பெண் வண்டோடு பிரணய கலஹங்கொண்ட ஆண் வண்டு (- (திருவெள்ளறை, நின்றானே!;) (அவர்களுக்கு இரங்கி)) தையலார் குழல் அணைவான், Thayalar Kuzhal Anaivaan - ஸ்த்ரிகளினுடைய கூந்தல்களைச் சென்று கிட்டி அங்கே மறைந்திருக்கைக்காக, திங்கள் தோய் சென்னி மாடம் சென்ற அணை, Thingal Thoi Senni Maadam Senra Anai - சந்திரமண்டலத்திலே படிந்திருக்கிற சிகரங்களையுடைய மாளிகைகளை சென்று சேர்ந்திருக்கப்பெற்ற பொங்கு, Pongu - விளங்குகின்ற நீள் முடி, Neel Mudi - நீண்ட கிரீடத்தை யுடையரான அமரர்கள், Amarar - தேவர்கள் தொழுது எழ, Thozhudhu Ezha - (தன்னை) வணங்கி யாச்ரயிக்க அமுதினை கொடுத்து அளிப்பான், Amuthinai Koduthu Alippaan - அமிருதத்தைத் தந்தருள்வதற்காக அங்கு ஓர் ஆமை அது ஆகிய ஆதி, Angu Oru Aamai Adhu Aagiya Aadhi - அப்போது விலக்ஷணமான கூர்மமாகத் திருவவதரித்த காரணபூதனே! நின் அடிமையை எனக்கு அருள், Nin Adimaiyai Enakku Arul - உனக்கு நான் அடியனாயிருக்கப் பெறுவதை எனக்கு அருளவேணும் |
| 1374 | பெரிய திருமொழி || (5-3–வென்றி) (திரு வெள்ளறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ராவணன் உடைய தலை பத்தையும் சின்னம் பின்னமாய் போம்படி யாக வில்லை வளைத்தவனே – என் பக்கலில் கிருபையை பண்ணி யருள வேணும்) 7 | ஆறினோடு ஒரு நான்குடை நெடு முடி யரக்கன் தன் சிரம் எல்லாம்
வேறு வேறு உக வில்லது வளைத்தவனே எனக்கு அருள் புரியே
மாறில் சோதிய மரகதப் பாசடைத் தாமரை மலர் வார்ந்த
தேறல் மாந்தி வண்டு இன்னிசை முரல் திரு வெள்ளறை நின்றானே –5-3-7 | பதவுரை Show / Hideமாறு இல் சோதிய, Maaru Il Sothiya - ஒப்பற்ற ஒளியை யுடையனவாய் (- (திருவெள்ளறை, நின்றானே!;)) மரதகம் பாசு அடை, Maradhagam Paasu Adai - மரதகம் போன்ற பச்சிலைகளை யுடையனவான தாமரை, Thamarai - தாமரைகளினுடைய மலர், Malar - பூக்களில் நின்றும் வார்ந்த தேறல், Vaarndha Therhal - பெருகின மகரந்தத்தை மாந்தி, Manthi - பானம் பண்ணி வண்டு, Vandu - வண்டுகள் இன் இசை முரல், In Isai Murali - இனிய பண்களைப் பாடா நிற்கப்பெற்ற அரக்கன் தன், Arakkan Than - இராவணனுடைய நெடு முடி உடை, Nedu Mudi Udai - நீண்ட கிரீடங்களை யணிந்த ஆறினோடு ஒரு நான்கு சிரம் எல்லாம், Aarinoodu Oru Naangu Siram Ellam - பத்துத்தலைகளும் ஒன்று தப்பாமல் வேறு வேறு உக, Veeru Veeru Uga - தனித்தனியே அற்று விழும்படி வில் அது வளைத்தவனே, Vil Adhu Valaithavaney - சார்ங்கத்தை வளைத்து அம்பெய்த பெருமானே!, எனக்கு அருள்புரி, Enakku Arulpuriy - என்விஷயத்தில் கிருபை பண்ணு |
| 1375 | பெரிய திருமொழி || (5-3–வென்றி) (திரு வெள்ளறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நீரையும் பாலையும் பிரிக்க வல்ல அன்னத்தின் வடிவினைக் கொண்டு தன் படிகளை அடங்கலும் பேச வற்றை இருக்கிற வேதத்தை உண்டாக்கினவனே-என் பக்கலிலே கிருபையை பண்ணி அருள வேணும்) 8 | முன் இவ் யெழ் உலகு உணர்வு இன்றி இருள் மிகு யும்பர்கள் தொழுது ஏத்த
அன்னமாகி அன்று அருமறை பயந்தவனே எனக்கு அருள் புரியே
மன்னு கேதகை சூதகம் என்று இவை வனத்திடை சுரும்பு இனங்கள்
தென்ன வென்று வண்டு இன்னிசை முரல் திரு வெள்ளறை நின்றானே –5-3-8 | பதவுரை Show / Hideமன்னு கேதகை சூதகம் என்ற இவை, Mannu Kethakai Soodhagam Endra Ivai - மாறாதே பூத்திருக்கிற தாழைகளென்ன மாமரங்களென்ன இத்யாதி வ்ருக்ஷங்களை யுடைத்தான (- (திருவெள்ளறை, நின்றானே!;) (எனக்கு அருள்புரி–.)) வனத்து இடை, Vanaththu Idai - சோலைகளின் நடுவே சுரும்பு இனங்கள், Surumbu Inangal - ‘சுரும்பு’ என்னுஞ்சாதி வண்டுகளின் கூட்டம் தேன்ன என்ன, Thenna Enna - ‘தென்னதென்ன’ என்றுபாட, வண்டு, Vandu - (சாதாரண) வண்டுகளானவை இன் இசை முரல், In Isai Murali - இனிமையான இசைப் பாட்டுக்களைப் பாடாநிற்கப்பெற்ற முன் இ ஏழ் உலகு உணர்வு இன்றி, Mun I Ezh Ulagu Unarvu Inri - முன்பொருகால் இவ்வுலகங்களெல்லாம் அறிவு கெட்டு இருள் மிக, Irul Mika - அஜ்ஞாநாந்தகாரம் மேலிட்ட வளவிலே உம்பர்கள் தொழுது ஏத்த, Umbarhal Thozhudhu Aetha - தேவர்கள் வணங்கித் துதிக்க அன்று அன்னம் ஆகி அரு மறை பயந்தவனே, Anru Annan Aagi Aru Marai Payandavaney - அப்போது ஹம்ஸரூபியாகி அருமையான வேதங்களை ஸம்பாதித்துக் கொடுத்தவனே! |
| 1376 | பெரிய திருமொழி || (5-3–வென்றி) (திரு வெள்ளறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஔதார்யத்துக்கு சமைந்து இருந்த படியால் தன்னை இரப்பாளனாக்கி அவனதாக்கிக் கொண்டான் ஆய்த்து – இந்த்ரன் உடைய ஆஸ்ரயணத்தோ பாதி போராதோ என்னுடைய ஆஸ்ரயணம்) 9 | ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகலிடம் முழுதினையும்
பாங்கினில் கொண்ட பரம நின் பணிந்து எழுவன் எனக்கு அருள் புரியே
ஓங்கு பிண்டியின் செம்மலர் ஏறி வண்டுழி தர மா வேறித்
தீங்குயில் மிழற்றும் படைப்பைத் திரு வெள்ளறை நின்றானே –5-3-9 | பதவுரை Show / Hideஓங்கு பிண்டியின் செம்மலர், Ongu Pindiyin Semmalar - உயர்ந்து வளர்கின்ற அசோக மரத்தினுடைய சிவந்த புஷ்பங்களின் மேலே (- (திருவெள்ளறை, நின்றானே!–;)) வண்டு ஏறி உழிதர, Vandu Eri Uzithara - வண்டுகள் ஏறி ஸஞ்சரிக்க, தீம் குயில் மா ஏறி, Theem Kuyil Maa Eri - மதுரஸ்வரம் உள்ள குயில்கள் மாமரங்களின் மேலேறிநின்று மிழற்றும், Mizhatrum - கூவுதல் செய்யப்பெற்ற படப்பை, Padappai - கொடித் தோட்டங்களை யுடைத்தான மாவலி, Mavali - மஹாபலியினுடைய வேள்வியில் சென்று இரந்து, Velviyil Sendru Irandhu - யாகபூமியில் எழுந்தருளி (மூவடிமண்) யாசித்து ஆங்கு அகல் இடம் முழுதினையும் பாங்கினால் கொண்ட, Aangu Akal Idam Muzhudhinaiyum Pankinaal Konda - அப்போதே பூமிப் பரப்பெல்லாவற்றையும் முறைமையினால் ஸ்வாதீனப்படுத்திக்கொண்ட பரம, Parama - புருஷோத்தமனே! நின் பணிந்து எழுவேன் எனக்கு அருள்புரி, Nin Paninthu Ezhuvein Enakku Arulpuri - உன்னை வணங்கி யெழுகின்ற என் விஷயத்திலே க்ருபை பண்ணியருள் |
| 1377 | பெரிய திருமொழி || (5-3–வென்றி) (திரு வெள்ளறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அசந்நிஹிதனே யாகிலும் விட ஒண்ணாதது யாய்த்து வடிவழகு – அழகு இல்லை யாகிலும் விட ஒண்ணாதது ஆய்த்து பிராப்தி – பிராப்தி இல்லை யாகிலும் விட ஒண்ணாதது யாய்த்து போக்யதை – இப்பத்தையும் ஒன்றும் விடாதே ஏத்த வல்லவர்களை ஸ்ரீ நித்ய சூரிகள் ஸ்ரீ வைகுண்ட நாதனை விட்டு இவர்களை ஆதரியா நிற்பர்கள்) 10 | மஞ்சுலா மணி மாடங்கள் சூழ் திரு வெள்ளறை அதன் மேய
அஞ்சனம் புரையும் திரு வுருவனை யாதியை யமுதத்தை
நஞ்சுலாவிய வேல் வலவன் கலி கன்றி சொல் ஐ இரண்டும்
எஞ்சலின்றி நின்று ஏத்த வல்லார் இமையோர்க்கு அரசர் ஆவர்களே –5-3-10 | பதவுரை Show / Hideமஞ்சு உலாம் மணி மாடங்கள் சூழ், Manju Ulaam Mani Maadangal Soozh - மேகங்கள் படிந்து உலாவப்பெற்ற நவரத்நங்கள் பதித்த மாளிகைகளினால் சூழப்பட்ட திருவெள்ளறை அதன் மேய, Thiruvellarai Adan Meyya - திருவெள்ளறையில் நித்ய வாஸம் செய்பவனும் அஞ்சனம் புரையும் திரு உருவனை, Anjanam Puraiyum Thiru Uruvanei - மை போன்ற திவ்யமான வடிவையுடையவனும் ஆதியை, Aadhiye - ஸகல ஜகத்காரண பூதனும் அமுதத்தை, Amudhatthai - அமுதம்போல் போக்யனுமான எம்பெருமானை, நஞ்சு உலாவிய வேல் வலவன் கலிகன்றி சொல் ஐ இரண்டும், Nanju Ulaaviya Vel Valavan Kalikanri Sol Aiy Irandum - விஷம்தங்கிய வேற்படையைச் செலுத்தவல்லவரான திருமங்கையாழ்வார் அருளிச்செய்த இப்பத்துப் பாசுரங்களைக் கொண்டு எஞ்சல் இன்றி நின்று ஏத்த வல்லார், Enjal Inri Nindru Aetha Vallar - குறைவின்றி மனம் நிலைபெற்று துதிக்க வல்லவர்கள் இமையோர்க்கு அரசு ஆவர்கள் –, Imaiyorkku Arasu Aavargal - நித்யஸூரிகளுக்கும் ஆதரிக்கத் தக்கவராவலர்கள் |