திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1378 | பெரிய திருமொழி || (5-4–உந்திமேல்) (திருவரங்கம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சர்வ ஸ்ரஷ்டாவாய் ஆபத் சகனுமாய் இருக்கும் இருப்பைக் காட்டி என் குலத்துக்கு நாதன் ஆனவன் – அடியார்களை குழாங்களை– உடன் கூடுவது என்று கொலோ -என்று சொல்லும் ஸ்ரீ நித்ய சூரிகளும் இவ்விடத்தை விரும்பி இங்கே படுகாடு கிடப்பார்கள் ஆய்த்து) 1 | உந்தி மேல் நான் முகனைப் படைத்தான் உலகுண்டவன்
எந்தை பெம்மான் இமையோர்கள் தாதைக்கு இடம் என்பரால்
சந்தினொடு மணியும் கொழிக்கும் புனல் காவிரி
அந்தி போலும் நிறத்தார் வயல் சூழ் தென்னரங்கமே –5-4-1 | பதவுரை Show / Hideசந்தினோடு மணியும் கொழிக்கும், Sandhinodu Maniyum Kozhikkum - சந்தனக்கட்டைகளையும் நவரத்னங்களையும் தள்ளிக்கொண்டு பெருகுகின்ற புனல், Punal - தீர்த்தத்தை யுடைத்தான காவிரி, Kaviri - திருக்காவிரி நதியாலும் அந்தி போலும் நிறத்து ஆர் வயல், Andhi Polum Nirathu Ar Vayal - ஸந்தியாகாலம் போன்ற வர்ணத்தையுடைய கழினிகளினாலும் சூழ், Sool - சூழப்பட்ட தென் அரங்கம், Then Arangam - திருவரங்கமானது;– உந்தி மேல் நான் முகனைபடைத்தான், Undhi Mel Naan Muganaipadaiththan - (தனது) திருநாபியிலே பிரமனை ஸ்ருஷ்டித்தவனும் உலகு உண்டவன், Ulaku Undavan - (பிரளயகாலத்தில்) லோகங்களை அமுது செய்தவனும் எந்தை பெம்மான், Endhai Pemmaan - எம் குலத்துக்கு நாதனானவனும் இமையோர்கள் தாதைக்கு, Imaiyorkal Thathaikku - நித்யஸூரிகளுக்குத் தலைவனுமான பெருமானுக்கு இடம், Idam - வாஸஸ்தலம் என்பர், Enbar - என்று சொல்லுவர்கள் |
| 1379 | பெரிய திருமொழி || (5-4–உந்திமேல்) (திருவரங்கம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கண் வளர்ந்து அருளுகைக்கு ஈடான பரப்பை உடையனாய் இருக்கிற ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுகிறவன் விடாதே வர்த்திக்கிற தேசம்) 2 | வையம் உண்டு ஆலிலை மேல் மேவு மாயன் மணி நீண் முடிப்
பை கொள் நாகத்தணையான் பயிலும் இடம் என்பரால்
தைய நல்லார் குழல் மாலையும் மற்றவர் தட முலைச்
செய்ய சந்தும் கலந்து இழி புனல் சூழ் தென்னரங்கமே –5-4-2 | பதவுரை Show / Hideநல் தையலார் குழல் மாலையும், Nal Thaiyalar Kuzhal Maalayum - நல்ல ஸ்த்ரீகளினுடைய தலையிலணிந்த பூமாலைகளும் மற்று அவர் தடமுலை செய்ய சாந்தும், Mattru Avar Thadamulai Seyya Santhum - இன்னமும் அந்த ஸ்த்ரீகளினுடைய முலைத்தடங்களில் (பூசப்பட்ட) சிவந்த சந்தனமும் (ஆகிய இவற்றோடு) கலந்து இழி புனல் சூழ், Kalandhu Izhi Punal Soozh - சேர்ந்து கலங்கிப் பிரவஹிக்கின்ற (காவிரித்) தீர்த்தத்தினால் சூழப்பட்ட தென் அரங்கம், Then Arangam - திருவரங்கம், வையம் உண்டு ஆல் இலை மேவும் மாயன், Vaiyam Undu Aal Ilai Maevum Maayan - (பிரளயத்தில்) பூமியை யெல்லாம் அமுது செய்து ஆலந்தளிரிலே பொருந்திக் கண்வளர்கின்ற ஆச்சர்ய சக்தியுக்தனும், மணி நீள் முடி, Mani Neel Mudi - மணிமயமான நீண்ட கிரீடமணிந்தவனும் பை கொள் நாகத்து அணையான், Pai Kol Naagathu Anaiyaan - படங்கொண்ட திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடையனுமான பெருமான் பயிலும் இடம் என்பர், Payilum Idam Enbar - நித்யவாஸம் பண்ணுகிற இடமென்று சொல்லுவர் |
| 1380 | பெரிய திருமொழி || (5-4–உந்திமேல்) (திருவரங்கம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (யஞ்ஞவாடத்திலே சென்று ஸ்ரீ திரு ஆழியைப் பிடிக்கக் கடவ கையாலே நீரை ஏற்ற ஸ்ரீ வாமனன் வர்த்திக்கிற தேசம்) 3 | பண்டு இவ்வையம் அளப்பான் சென்று மாவலி கையில் நீர்
கொண்ட வாழித் தடக் கை குறளன் இடம் என்பாரால்
வண்டு பாடும் மதுவார் புனல் வந்திழி காவிரி
அண்ட நாறும் பொழில் சூழ்ந்து அழகார் தென்னரங்கமே –5-4-3 | பதவுரை Show / Hideவண்டு பாடும் மது வார் புனல் வந்து இழி காவிரி, Vandu Paadum Madhu Vaar Punal Vandu Izhi Kaviri - வண்டுகள் பாடப்பெற்ற தென் ஒழுகுகின்ற தீர்த்தமானது வந்து பிரவஹிக்கின்ற திருக்காவேரியினாலும் (- (தென் அரங்கம்;) (இடம் என்பர்)) அண்டம் நாறும் பொழில், Andam Naarum Pozhil - ஆகாச மெங்கும் பரிமளிக்கின்ற சோலைகளாலும் சூழ்ந்து அழகு ஆர், Sozhndhu Azhagu Ar - சூழப்பட்டு அழகு பொருந்தியதான பண்டு, Pandhu - முன்பொருகால் இ வையம் அளப்பான் சென்று –, I Vaiyam Alappaan Sendru - இப்பூமியை அளந்து வசப்படுத்திக் கொள்வதற்காகப் போய் மாவலி கையில், Maavali Kaiyil - மஹாபலியினுடை கையில் நின்றும் தாந ஜலத்தை ஆழி தடம் கை கொண்ட, Aazhi Thadam Kai Konda - திருவாழியை யேந்தவல்ல தடக்கையாலே ஏற்றுக்கொண்ட குறளன், Kuralan - வாமநமூர்த்தியினது |
| 1381 | பெரிய திருமொழி || (5-4–உந்திமேல்) (திருவரங்கம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் சாய்ந்து அருளுகிற தேசம் என்னா நிற்பார்கள்) 4 | விளைத்த வெம்போர் விறல் வாளரக்கன் நகர் பாழ் பட
வளைத்த வல் வில் தடக்கை யவனுக்கு இடம் என்பரால்
துளைக்கை யானை மருப்பும் அகிலும் கொணர்ந்து உந்தி முன்
திளைக்கும் செல்வப் புனல் காவிரி சூழ் தென்னரங்கமே –5-4-4 | பதவுரை Show / Hideதுளைக்கை யானை மருப்பும் அகிலும் கொணர்ந்து மன் உச்சி திளைக்கும், Thulaikkai Yaanai Maruppum Akilum Konarnthu Man Ucchi Thilaikkum - துதிக்கையையுடைய யானைகளின் தந்தங்களையும் அகில் மரங்களையும் அடித்துக் கொண்டுவந்து முன்னே தள்ளி லீலாரஸமனுபவிக்கின்ற (- (தென் அரங்கம்) (இடம் எனபர்)) செல்வம் புனல் காவிரி சூழ், Selvam Punal Kaaviri Soozh - திவ்யமான தீர்த்தத்தையுடைய காவேரியினால் சூழப்பட்ட வெம் போர் விளைத்த விறல் வாள் அரக்கன் நகர் பாழ்பட, Vem Por Vilaittha Viral Vaal Arakkan Nagar Paazhpada - கடுமையான யுத்தத்தை உண்டாக்கின பலிஷ்டனான வாட்படைவல்லனான இராவணனுடைய நகரமாகிய லங்கை பாழாகும்படியாக வளைத்த வல்வில் தட கையவனுக்கு, Valaitha Valvil Thada Kaiyavanukku - வளைக்கப்பட்ட வலியவில்லைத் தடக்கையிலே உடையவனான பெருமானுக்கு |
| 1382 | பெரிய திருமொழி || (5-4–உந்திமேல்) (திருவரங்கம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வழி கெட அன்றிக்கே நேர் கொடு நேரே அம்பாலே அழியச் செய்த வீர ஸ்ரீ யால் குறை வற்ற ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன் வர்த்திக்கிற தேசம்) 5 | வம்புலாம் கூந்தல் மண்டோதரி காதலன் வான் புக
அம்பு தன்னால் முனிந்த வழகன் இடம் என்பரால்
உம்பர் கோனும் உலகு ஏழும் வந்து ஈண்டி வணங்கும் நற்
செம்பொனாரும் மதிள் சூழ்ந்து அழகார் தென்னரங்கமே –5-4-5 | பதவுரை Show / Hideஉம்பர் கோனும் உலகு ஏழும் வந்து ஈண்டி வணங்கும், Umbra Koonum Ulaku Ezhum Vandu Eendi Vanangum - தேவர்களுக்கு நிர்வாஹகனான பிரமனும் ஸப்த லோகங்களும் கிட்டி திரண்டு வணங்கப்பெற்றதாய் (- (தென் அரங்கம்;) (இடம் என்பர்)) நல் செம் பொன் ஆரும் மதிள் சூழ்ந்து அழகு ஆர், Nal Sem Pon Aarum Mathil Soozhndhu Azhagu Aar - நல்ல செம்பொன்னோடு ஒத்த மதிள்களால் சூழப்பட்டு அழகு பொருந்தியதான வம்பு உலாம் கூந்தல் மண்டோதரி கதாலன் வான் புக, Vambu Ulaam Koondhal Mandothari Kathaalan Vaan Puga - வாஸனை உலாவுகின்ற கூந்தலை யுடையளான மந்தோதரிக்குக் கணவனான இராவணன் வீர ஸ்வர்க்கமடையும்படியாக அம்பு தன்னால் முனிந்த அழகன், Ambu Thannal Munintha Azhagan - பாணங்களினால் சீறிக்கொன்றொழித்த வீரச்ரியையுடையனான இராமபிரானது. |
| 1383 | பெரிய திருமொழி || (5-4–உந்திமேல்) (திருவரங்கம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (முலை உண்ணா விடில் தரியாதானாய் அவள் உயிரை முடித்தவன் இன்னும் இங்கன் ஒத்த விரோதிகளைப் போக்குகைகாக அணித்தாக வந்து வர்த்திக்கிற தேசம்) 6 | கலை யுடுத்த வகலல்குல் வன் பேய் மகள் தாயென
முலை கொடுத்தாள் உயிர் உண்டவன் வாழும் இடம் என்பரால்
குலை எடுத்த கதலிப் பொழிலூடும் வந்துந்தி முன்
அலை எடுக்கும் புனல் காவிரி சூழ் தென்னரங்கமே –5-4-6 | பதவுரை Show / Hideகுலை எடுத்த கதலி பொழில் ஊடும் வந்து, Kulai Eduththa Kathali Pozhil Oodum Vandu - குலைகள் ஓங்கியிருக்கப் பெற்ற வாழைத்தோப்பு களினுள்ளே புகுந்து (- (அம்மரங்களை வேரோடே பறித்துக்கொண்டு) (தென் அரங்கம்;)) முன் உந்தி அலை எடுக்கும் புனல் காவிரி சூழ், Mun Undhi Alai Edukkum Punal Kaaviri Soozh - முன்னே தள்ளி அலைவீசியடியாநின்ற தீர்த்தத்தையுடைத்தான காவேரியினால் சூழப்பட்ட கலை உடுத்த அகல் அல்குல் தாய் என, Kalai Uduththa Akal Alkul Thaai Enna - பட்டாடையணிந்த அகன்ற நிதம்பத்தையுடையளான தாயாகிய யசோதைபோல (வந்து) முலை கொடுத்தாள் வன் பேய்மகள், Mulai Koduththaal Van Paeymakal - முலையுண்ணக் கொடுத்தவளான வலிய (பூதனையென்னும்) பேய்ச்சியினுடைய உயிர் உண்டவன் வாழ்இடம் என்பர், Uyir Undavan Vazh Idam Enbar - பிராணனை உறிஞ்சி உண்ட கண்ணபிரான் வாழும் திவ்யதேசம் என்று சொல்லுவர் |
| 1384 | பெரிய திருமொழி || (5-4–உந்திமேல்) (திருவரங்கம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திரு ஆழியும் கையிலே உண்டாய் இருக்கச் செய்தே அது கொண்டு வ்யாபாரிக்கப் பற்றாமையாலே திருக் காலாண்ட பெருமான் -என்கிறபடியே ஸ்ரீ திருவடிகளாலே அழியச் செய்தவன் வர்த்திக்கிற தேசம்) 7 | கஞ்சன் நெஞ்சும் கடு மல்லரும் சகடமும் காலினால்
துஞ்ச வென்ற சுடர் ஆழியான் வாழும் இடம் என்பரால்
மஞ்சு சேர் மாளிகை நீடு அகில் புகையும் மறையோர்
செஞ்சொல் வேள்விப் புகையும் கமழும் தென்னரங்கமே –5-4-7 | பதவுரை Show / Hideமஞ்சு சேர் மாளிகை நீடு அகில் புகையும், Manju Cher Maaligai Needu Akil Pugaiyum - மேகமண்டலத்தை அளாவியிருக்கிற மாளிகைகளிலுண்டான அதிகமான அகிற்புகையும் மா மறையோர் செம் சொல் வேள்வி புயையும் கமழும், Maa Maraiyore Sem Sol Velvi Puyaiyum Kamazhum - சிறந்த வைதிக ப்ராமணர்கள் வேதங்களிற் விதிப்படியே நடத்துகிற யாகங்களிலுண்டான ஹோமதூமமும் (சேர்ந்து) பரிமளிக்கப்பெற்ற தென் அரங்கம், Then Arangam - திருவரங்கமானது, – கஞ்சன் நெஞ்சும் கடு மல்லரும் சகடமும் துஞ்ச, Kanjan Nenjum Kadu Mallarum Sakadhamum Thunja - கம்ஸனுடைய மனமும் கடிய மல்லர்களும் சகடாஸுரனும் தொலையும்படி காலினால் வென்ற, Kaalinaal Vendra - திருவடியாலே வென்றொழித்த உஜ்வலமான திருவாழியையுடைய பெருமான் ரித்யவாஸம் பண்ணுமிடம் என்று சொல்லுவார்கள் |
| 1385 | பெரிய திருமொழி || (5-4–உந்திமேல்) (திருவரங்கம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அநேக அவதாரங்களைப் பண்ணிக் கொண்டு வந்து ரஷகன் ஆனவன் அவ்வவதார காலங்களிலே பிற் பாடர்க்கும் இழக்க வேண்டாத படி வந்து சந்நிஹிதனான தேசம் கோயில் -என்கிறார்) 8 | ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளுமாய்த்
தானுமாய தரணித் தலைவன் இடம் என்பரால்
வானும் மண்ணும் நிறையப் புகுந்து ஈண்டி வணங்கும் நல்
தேனும் பாலும் கலந்து அன்னவர் சேர் தென்னரங்கமே –5-4-8 | பதவுரை Show / Hideவானும் மண்ணும் நிறைய புகுந்த ஈண்டி வணங்கும், Vaanum Mannum Niraiya Pugundha Eendi Vanangum - விண்ணுலகத்திலுள்ளாரும் மண்ணுலகத்திலுள்ளாரும் ஏராளமாக வந்து சேர்ந்து ஒன்றாகத்திரண்டு வணங்கப்பெற்றதும், (- (தென் அரங்கம்;) (இடம் என்பர்)) நல் தேனும் பாலும் கலந்தன்னவர், Nal Thenum Paalum Kalandannavar - மதுரமான தேனும் பாலும் ஒன்றாகச் சேர்ந்தாற்போலே ஏகரஸராயிருக்கிற பக்தர்கள் சேர், Ser - சேர்ந்திருக்கப்பெற்றதுமான ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளும் ஆய், Eyanam Meen Aamaiyodu Ariyum Siru Kuralum Aay - வராஹமாகவும் மத்ஸ்ய கூர்மமாகவும் நரஸிம்ஹமாகவும் வாமநனாகவும் திருவவதரித்தவனாய் தானும் ஆய, Thaanum Aay - ஸ்ரீராமபிரானாகவும் திருவவதரித்தவனான தரணி தலைவன், Tharani Thalaivan - ஸர்வலோகேச்வரனுடைய |
| 1386 | பெரிய திருமொழி || (5-4–உந்திமேல்) (திருவரங்கம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உள்ளுச் சாய்ந்த வஸ்துவுக்கு அரணாகப் போரும்படியான ஸ்ப்ருஹநீயமாய் இருந்துள்ள மதிள்களாலே சூழப்பட்ட தர்ஸநீயமான ஸ்ரீ கோயில்) 9 | சேயன் என்றும் மிகப் பெரியன் நுண் நேர்மையினாய விம்
மாயையை யாரும் யறியா வகையான் இடம் என்பரால்
வேயின் முத்தும் மணியும் கொணர்ந்தார் புனல் காவிரி
ஆய பொன் மா மதிள் சூழ்ந்த அழகார் தென்னரங்கமே –5-4-9 | பதவுரை Show / Hideவேயின் முத்தும் மணியும் கொணர்ந்து, Veyin Muthum Maniyum Konarnthu - மூங்கில்களில் நின்று முதிர்ந்த முத்துக்களையும் ரத்னங்களையும் தள்ளிகொண்டுவந்து (- (தென் அரங்கம்;) (இடம் என்பர்)) ஆர் புனல் காவிரி, Aar Punal Kaaviri - நிறைந்திருக்கிற தீர்த்தத்தையுடைய திருக்காவேரியாலும் ஆய பொன் மா மதிள் சூழ்ந்து, Aay Pon Maa Mathil Soozhndhu - தகுதியான அழகிய பெரிய திருமதிற்களாலும் சூழப்பட்டு அழகு ஆர், Azhagu Aar - அழகு பொருந்தியிருப்பதான என்றும்சேயன், Endrumseyan - எந்நாளும் எட்டாமலிருப்பவன் மிக பெரியன், Miga Periyan - மஹாபுருஷன்; நுண் நேர்மையன், Nun Naermaiyan - ஸூக்ஷ்மமான பொருள்களிற் காட்டிலும் ஸூக்ஷ்மத்தன்மை வாய்ந்தவன், ஆய, Aay - என்றிப்படி சொல்லக்கூடியதான இ மாயை, I Maayai - இவ்வாச்சரியத்தை அரும் அறியா வகையான், Arum Ariya Vagaiyaan - ஒருவரும் அறியக் கூடாதபடியிருப்பவனான ஸர்வேச்வரனுடைய |
| 1387 | பெரிய திருமொழி || (5-4–உந்திமேல்) (திருவரங்கம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உந்தி – வையம் -இரண்டும் ஸ்ரீ உலகுண்ட ஸ்ரீ வடதள சாயி விஷயம் விளைத்த -வம்பு -ஸ்ரீ ராமன் விஷயம் கலை -கஞ்சன் -ஸ்ரீ கிருஷ்ண விஷயம் சேயன் -அல்லி -ஸ்ரீ யபதி விஷயம்–இப்படி நாலு இரண்டும் பண்டு -ஸ்ரீ திருக் குறளன் விஷயம் ஏனம் -சகல அவதார சமுதாய விஷயம்–இப்படி இரண்டும்-இவற்றை சாபிப்ராயமாக அப்யசிக்க வல்லார்கள் ஸ்ரீ கோயிலிலே இருந்து அனுபவித்து பின்னை சரீர சமனந்தரம் ஸ்ரீ பரம பதம் தாங்கள் இட்ட வழக்காக பெறுவர்கள்) 10 | அல்லி மாதர் அமரும் திரு மார்வன் அரங்கத்தைக்
கல்லின் மன்னு மதிள் மங்கையர் கோன் கலி கன்றி சொல்
நல்லிசை மாலைகள் நாலிரண்டும் இரண்டும் உடன்
வல்லவர் தாம் உலகாண்டு பின் வானுலகு ஆள்வரே –5-4-10 | பதவுரை Show / Hideஅல்லி மாதர் அமரும் திருமார்வன் அரங்கத்தை, Alli Maathar Amarum Thirumaarvan Arangaththai - பூவிற் பிறந்த பெரியபிராட்டியா பொருந்தி வாழப்பெற்ற திருமார்வையுடையனான ஸர்வேச்வரனுடைய திருவரங்கம் விஷயமாக, கல்லின் மன்னு மதிள் மங்கையர் கோன் கலிகன்றி, Kallin Mannu Mathil Mangaiyar Kon Kalikanri - கல்லாலே கட்டப்பட்ட திடமாயிக்கிற மதிளையுடைத்தான திருமங்கை நகரில் உள்ளவர்களுக்கு தலைவரான ஆழ்வார் சொல் நல் இசை மாலைகள், Sol Nal Isai Maalaigal - அருளிச்செய்த நல்ல இசையோடு கூடின சொல் மாலையாகிய நாலிரண்டும் இரண்டும், Naalirandum Irandum - இப்பத்துப்பாட்டுக்களையும் உடன் வல்லவர்தாம், Udan Vallarvartaam - கருத்தோடுகூட ஓதவல்லவர்கள் உலகு ஆண்டு, Ulaku Aandu - இவ்வுலகில் (கோயில் வாழ்ச்சியை) அநுபவித்து பின் வான் உலகு ஆள்வர், Pin Vaan Ulaku Aalvar - பரமபதாநுபவத்தைப் பெறக்கடவர். |