திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1398 | பெரிய திருமொழி || (5-6–கைம்மானம்) (திருவரங்கம் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தான் அல்லது ரஷகர் அல்லாதாரை அரியன செய்தும் ரஷிக்குமவனை – ஒரு கால் மலையை எடுத்து பசுக்களையும் இடையரையும் ரஷித்தான் – ஸ்ரீ திருப் பாற் கடலிலே கிடந்தான் -என்று கேட்டார் வாய் கேட்கை அன்றிக்கே நான் ஸ்ரீ கோயிலிலே காணப் பெற்றேன்) 1 | கைம்மானம் மழ களிற்றைக் கடல் கிடந்த கரு மணியை
மைம்மான மரகதத்தை மறை யுரைத்த திரு மாலை
எம்மானை எனக்கு என்றும் இனியானைப் பனி காத்த
வம்மானை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே –5-6-1 | பதவுரை Show / Hideமானம் கை மழ களிற்றை, Maanam Kai Mazha Kalittrai - நீண்ட கையையுடைய இளமைதங்கிய யானை போன்றவனும் கடல் கிடந்த கருமணியை, Kadal Kidandha Karumaniyai - கடலிலே கண்வளர்ந்தருள்கிற நீலமணி போன்றவனும் மை மானம் மரதகத்தை, Mai Maanam Marathagaththai - பசுமை நிறம் மிக்கிருக்கப் பெற்ற மரகதப் பச்சை போன்றவனும் மறை உரைத்த திருமாலை, Marai Uraitha Thirumalai - வேதங்களாலே பிரதிபாதிக்கப்பட்ட ச்ரியபேதியானவனும் எம்மானை, Emmanai - எனக்கு ஸ்வாமியானவனும் எனக்கு என்றும் இனியானை, Enakku Endrum Iniyanai - எனக்கு எக்காலத்திலும் போக்யனா யிருப்பவனும் பனி காத்த அம்;மானை, Pani Kaatha Am Maanai - மழையில் நின்றும் (ஆநிரையைக்) காத்தருளினவனுமான பொருமானை யான் கண்டது, Yaan Kandathu - அடியேன் ஸேவிக்கப்பெற்றது (எவ்விடத்திலென்னில்) அணிநீர் தென்அரங்கத்து, Anineer Thenarangkathu - அழகிய தீர்த்தம்பொருந்திய திருவரங்கத்திலே. |
| 1399 | பெரிய திருமொழி || (5-6–கைம்மானம்) (திருவரங்கம் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீஸ்ரீ இந்த லோகங்கள் ஏழையும் தன் வயிற்றிலே வைத்து ரஷிக்கச் செய்தேயும் ஒன்றும் செய்திலனாய் இருக்கையாலே உபகாரம் கொண்டார்க்கு பிரத்யுபகாரம் தேடி நெஞ்சாறல் பட வேண்டாத படி இருந்தவனை –கண்டது ஸ்ரீ தென்னரங்கத்தே) 2 | பேரானைக் குறுங்குடி எம்பெருமானைத் திருத் தண் கால்
ஊரானைக் கரம்பனூர் உத்தமனை முத்திலங்கு
காரார் திண் கடல் ஏழும் மலை யெழ் இவ்வுலகு யெழ் உண்டு
ஆராது என்று இருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே –5-6-2 | பதவுரை Show / Hideபேரானை, Peranai - திருப்பேர் நகரில் உறைபவனும் (- (கண்டது தென் அரங்கத்து)) குறுங்குடி எம் பெருமானை, Kurungudi Em Perumanai - திருக்குறுங்குடியி லெழுந்தருளியிருக்கும் ஸ்வாமி யானவனும் திருத்தண்காலூரானை, Thiruthankalooranai - திருத்தண்காலில் நித்யவாஸம் பண்ணுமவனும் கரம்பனூர் உத்தமனை, Karambanoor Uthamanai - திருக்கரம்பனூரில் உத்தமனாய் விளங்குபவனும், முத்து இலங்கு கார் ஆர் திண் கடல் ஏழும், Muthu Ilangu Kaar Aar Thin Kadal Ezhum - (உள்ளே) முத்துக்கள் ஒளிவிடாநிற்பனவும் கருநிறம் மிக்கவையும் திடமுள்ளனவுமான ஸப்த ஸமுத்ரங்களையும் ஏழ் மலை, Ezh Malai - ஸப்த குலாசலங்களையும் இ ஏழ் உலகு, I Ezh Ulagu - இவ்வேழுலகங்களையும் (பிரளயகாலத்தில்) உண்டும், Undum - அமுது செய்தும் ஆராது என்று இருந்தானை, Aarathu Endru Irundhaanai - த்ருப்திபெறாதவனாய் இருந்தவனுமான பெருமானை |
| 1400 | பெரிய திருமொழி || (5-6–கைம்மானம்) (திருவரங்கம் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒருவன் காலில் முள் பாய்ந்தால் சரீரி யானவன் நோவு படுமா போலே ஜகத்துக்கு வந்த ஆபத்து தன்னதாம் படி இதுக்கு அபிமானியாய் இருக்கிற இருப்பை அனுசந்தித்து இருக்கும் தனக்கு அசாதாராணர் ஆனவருக்கு சர்வ வித போக்யனாய் அத்தாலே உஜ்ஜ்வலனாய் இருக்குமவனை – ஸ்ரீ கிருஷ்ணனாய் அவதரித்து ஸ்ரீ பரமபதம் கலவிருக்கையாய் இருக்க நமக்கு இங்கே வந்து குறைய நிற்க வேண்டா நின்றது என்னும் இன்னாப்போடு அன்றிக்கே இப்படி யாகிலும் இவர்களுக்கு உறுப்பாக பெற்றோம் என்னும் ப்ரீதி பிரகர்ஷத்தோடே பண்டு ஒரு கால் பசுக்களையும் கன்றுகளையும் மேய்க்கும் இடையனாய் அதில் புரையற வர்த்தித்தவனை கண்டது ஸ்ரீ தென்னரங்கத்தே) 3 | ஏனாகி உலகிடந்து அன்று இரு நிலமும் பெரு விசும்பும்
தானாய பெருமானைத் தன் அடியார் மனத்து என்றும்
தேனாகி அமுதாகித் திகழ்ந்தானை மகிழ்ந்து ஒரு கால்
ஆனாயன் ஆனானைக் கண்டது தென்னரங்கத்தே –5-6-3 | பதவுரை Show / Hideஅன்று, Andru - வராஹகல்பத்தின் தொடக்கத்தில் (- (கண்டது தென் அரங்கத்தே–.)) ஏன் ஆகி உலகு இடந்து, Yen Aagi Ulagu Idanthu - மஹாவராஹரூபியாய்த் திருவவதரித்துப் பூமியை (அண்டபித்தியில் நின்றும் குத்தியெடுத்துக் கொணர்ந்தவனும்) இரு நிலனும் பெரு விசும்பும் தான் ஆய பெருமானை, Iru Nilanum Peru Vizhumbum Thaan Aaya Perumaanai - விசாலமான மண்ணுலகமும் பரந்த விண்ணுலகமும் தனக்கு உடலாக இருக்கப்பெற்ற ஸ்வாமியாயும், தன் அடியார் மனத்து, Than Adiyaar Manathu - தன் அடியவர்களது நெஞ்சிலே என்றும் தேன் ஆகி அமுது ஆகி திகழ்ந்தானை, Endrum Then Aagi Amuthu Aagi Thigazhnthaanai - எப்போதும் தேன்போலவும் அமிருதம் போலவும் விளங்குமவனாயும், ஒருகால், Orukaal - முன்பொருகாலத்திலே மகிழ்ந்து, Magizhndhu - திருவுள்ள முவந்து ஆன் ஆயன் ஆனானை, Aan Aayan Aanaanai - பசுக்களை மேய்க்குமிடையனாய்ப் பிறந்தவனாயுமுள்ள எம்பெருமானை |
| 1401 | பெரிய திருமொழி || (5-6–கைம்மானம்) (திருவரங்கம் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஊர்ந்து வருகிற சகடம் சின்னம் பின்னமாய் போம்படி திருவடிகளாலே உதைத்தவனை- ஸ்ரீ நரசிம்ஹமாய் ஹிரண்யனைப் பிளந்து பொகட்டவனை – பரைப்பை உடைய பூமி இரண்டு அடியாலே அடங்கும்படி திருவடிகளை நீட்டி அளந்து கொண்டவனை – யான் கண்டது அணி நீர் ஸ்ரீ தென்னரங்கத்தே) 4 | வளர்ந்தவனைத் தடம் கடலுள் வலியுருவில் திரிசகடம்
தளர்ந்து திற யுதைத்தவனைத் தரியாதன்றி ரணியனைப்
பிளந்தவனைப் பெருநிலம் இடை நீட்டிப் பண்டு ஒரு நாள்
யளந்தவனை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே –5-6-4 | பதவுரை Show / Hideதடங் கடலுள் வளர்ந்தவனை, Thadang Kadalul Valarnthavanai - விசாலமான கடலிலே திருக்கண் வளர்ந்தருளபவனும் (- (யான் கண்டது அணி நீர் தென் அரங்கத்தே–.)) வலி உருவின் திரி சகடம், Vali Uruvin Thiri Sakadam - வலிவுள்ள சரீரத்தை யுடைத்தாய்க்கொண்டு ஊர்ந்து வந்த (அஸுரனாலாவேசிக்கப்பட்ட) சகடமானது தளர்ந்து உதிர உதைத்தவனை, Thalarndhu Uthira Uthaithavanai - கட்டுக்குலைந்து சிந்நாபிந்நமாகும்படி (அதனைத்) திருவடியால் உதைத்தவனும் அன்று தரியாது இரணியனை பிளந்தவனை, Andru Thariyadhu Iraniyanai Pilandhavanai - ஒருகாலத்தில் பொறுத்திருக்கமாட்டாமல் இரண்யாசுரனைக் கிழித்துப்போட்டவனும், பண்டு ஒருகால், Pandhu Orukaal - மற்றுமொருகாலத்தில் ஈர் அடி நீட்டி, Eer Adi Neetti - இரண்டு திருவடிகளைப் பரப்பிவைத்து பெருநிலம் அளந்தவனை, Perunilam Alandhavanai - விசாலமான பூமியை யெல்லாம் அளந்து கொண்டவனுமான பெருமானை |
| 1402 | பெரிய திருமொழி || (5-6–கைம்மானம்) (திருவரங்கம் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இங்குத்தை மர்யாதைகளைத் தப்பி-அவ்வருகே பட்டார்க்கு பிராப்யமான ஸ்ரீ பரம பதமுமாய் – அத்தை அவர்கள் பெறுகைக்கு உறுப்பாக-பிராமணர்கள் உடைய யாகங்களிலே மந்திர பூர்வமான ஹவிஸ் ஸூக்களை த்ரேத அக்னி முகத்தாலே புஜிக்குமவனை –கண்டது ஸ்ரீ தென்னரங்கத்தே) 5 | நீர் அழலாய் நெடு நிலனாய் நின்றானை அன்று அரக்கன்
ஊர் அழலால் உண்டானைக் கண்டார் பின் காணாமே
பேர் அழலாய்ப் பெருவிசும்பாய்ப் பின் மறையோர் மந்த்ரத்தின்
ஆர் அழலால் உண்டானைக் கண்டது தென்னரங்கத்தே –5-6-5 | பதவுரை Show / Hideநீர் ஆய் அழல் ஆய் கெடு நிலன் ஆய் நின்றானை, Neer Aay Azhai Aay Kedu Nilan Aay Nindhiraanai - ஜலஸ்வரூபியாம் அக்நிஸ்வரூபியாயும் விசாலமான பூமிஸ்வரூபியாயும் இருப்பவனும், (- (கண்டது தென் அரங்கத்தே–.)) அன்று, Andru - ஸ்ரீராமனாய்த் திருவவதரித்த காலத்து அரக்கன் ஊர், Arakkan Oor - இராவணனுடைய நகரமான இலங்கையை கண்டார் பின் காணாமே, Kandaar Pin Kaanamae - முன்பு கண்டவர்கள் பின்பு காணவொண்ணாதபடி அழலால் உண்டானை, Azhalaal Undaanai - அக்நிக்கு இரையாக்கினவனும், பேர் அழல் ஆய், Paar Azhai Aay - பெரியபடபாக்னி ஸ்வரூபியும் பெரு விசும்பு ஆய், Peru Visumbu Aay - பரமபதத்துக்கு நிர்வாஹகனும் பின், Pin - அதற்குமேலே, மறையோர் மந்திரத்தின் ஆர் அழலால் உண்டானை, Maraiyore Mandiraththin Aar Azhalaal Undaanai - வைதிக ப்ராஹ்மணர்களினுடைய மந்த்ரபூதமான ஹவிஸ்ஸை அக்நிமுகத்தாலே அமுதுசெய்பவனுமான பெருமாளை |
| 1403 | பெரிய திருமொழி || (5-6–கைம்மானம்) (திருவரங்கம் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (த்வேஷத்தை தவிர்ந்து-தன்னை அடைந்தவர்கள் உடைய ஸ்வ பிராப்தி உபாயத்தை தானே நிர்வஹித்துக் கொடுக்குமவனை – த்வேஷமேயாய் இருப்பார் அளவில் இருக்கும் படி – ஸ்ரீ தேவகியாரையும் ஸ்ரீ வசுதேவரையும் நலியப் புக்க வாறே அத்தைப் பொறாதே இனி அரை ஷணம் இவனை வைக்க ஒண்ணாது என்று அவனைக் கொன்றான் ஆய்த்து- த்வேஷமும் பண்ணாதே தன்னை அடைவதும் செய்யாதே இருப்பார் அளவில் இருக்கும் படி ஆபத்தை அடையாளமாக ரஷிக்கும் இத்தனை யாய்த்து-தான் அறிந்த சம்பந்தத்தையே பார்க்கும் இத்தனை – கற்பகத்தை –இப்படி உபகரித்தோம் என்று நினைத்து இராதவனை) 6 | தஞ்சினத்தை தவிர்த்து அடைந்தார் தவ நெறியைத் தரியாது
கஞ்சனைக் கொன்று அன்று உலகம் உண்டு உமிழ்ந்த கற்பகத்தை
வெஞ்சினத்த கொடும் தொழிலான் விசையுருவை யசைவித்த
அஞ்சிறைப் புட்பாகனை யான் கண்டது தென்னரங்கத்தே –5-6-6 | பதவுரை Show / Hideதம் சினத்தை தவிர்த்து அடைந்தார், Tham Sinaththai Thavirthu Adaindhaar - தங்களுடைய த்வேஷத்தை நீக்கிவிட்டுத் தன்னைவந்து பற்றினவர்களுக்கு (- (யான் கண்டது தென் அரங்கத்தே–.)) தவம் நெறியை, Thavam Neriyai - உபாய மார்க்கமாயிருப்பவனும், தரியாது, Thariyadhu - (தீம்புகளைப்) பொறுத்திருக்க மாட்டாமல் கஞ்சனை கொன்று, Kanjanai Konru - கம்ஸனைக் கொன்றொழித்தவனும், அன்று, Andru - முன்பொருகாலத்தில் உலகம், Ulagam - உலகங்களை உண்டு உமிழ்ந்த கற்பகத்தை, Undu Umizhndha Karppagaththai - உண்பதும் வெளிப்படுத்துவதும் செய்த உதாரனும் வெம் சினத்த கொடும் தொழிலோன், Vem Sinathth Kodum Thozhilon - வெவ்விய கோபத்தினால் செய்யக்கூடிய ஸம்ஹாரத் தொழிலையுடையனான ருத்ரனுடைய விசை உருவை, Visai Uruvai - மிக்க வேகத்தோடு கூடின வடிவை அசைவித்த, Azaiviththa - (பாணாஸுர யுத்தத்தில் சலிக்கச் செய்தவனும்) அம் சிறை புள் பாகனை, Am Sirai Pul Paaganai - அழகிய சிறகுடைய பெரிய திருவடியை ஏறி நடத்துபவனுமான பெருமானை |
| 1404 | பெரிய திருமொழி || (5-6–கைம்மானம்) (திருவரங்கம் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்படி பிராப்ய பிராபகங்கள் இரண்டும் தானேயாய் இருக்கிற வஸ்து தான் ஏது என்ன – ஸ்ரீ திருமாலை – பிராபகத்தில் புருஷகாரமுமாய் பிராப்யத்துக்கு அவனோபாதி இறே இருப்பது – ஸ்ரீ ஸ்ரீ திருமலையை தனக்கு வாசஸ் ஸ்தானமாக உடையவனாய் இருந்து வைத்து இவ் வவஸ்தைகளை என் நெஞ்சிலே பிறப்பிக்கைக்கு தானே வந்து மனசிலே விடாதே பொருந்தி இருக்கிறவனை-தானே அர்த்தியாய் கொண்டு இருக்க-நான் கண்டது ஸ்ரீ தென்னரங்கத்தே) 7 | சிந்தனையைத் தவநெறியைத் திருமாலைப் பிரியாது
வந்து எனது மனத்து இருந்த வடமலையை வரி வண்டார்
கொந்து அணைந்த பொழில் கோவல் உலகு அளப்பான் அடி நிமிர்த்த
வந்தணனை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே –5-6-7 | பதவுரை Show / Hideசிந்தனையை, Sindhanaiai - (எனது) மனோரதத்திற்கு விஷயமான விதமும் (- (அப்படியிருந்தும் அவ்விடத்தை விட்டு) (யான கண்டது அணி நீர் தென் அரங்கத்தே–.)) தவம் நெறியை, Thavam Neriyai - உபாயமார்க்கமா யிருப்பவனும் திரு மாலை, Thiru Maalai - திருமகள் தொழுதனம் வடமலையை, Vadamalaiyai - திருவேங்கடமலைக்கு நிர்வாஹதனும் வந்து, Vandhu - எழுந்தருளி எனது மனத்து, Enathu Manathu - என்னுடைய நெஞ்சிலே பிரியாது இருந்த, Priyadhu Irundha - ஒரு நொடிப்பொழுதும் விட்டுப்பிரியாமல் எழுந்தருளியிருப்பவனும், வரி வண்டு ஆர், Vari Vandu Aar - அழகிய வண்டுகள் படிந்த கொந்து, Kondhu - பூங்கொத்துக்கள் அணைந்த, Anaindha - நெருங்கியிருக்கப்பெற்ற பொழில், Pozhil - சோலைகளையுடைத்தான கோவல், Koval - திருக்கோவலூரில் உலகு அளப்பான் அடி நிமிர்த்த அந்தணனை, Ulaku Alappaan Adi Nimirththa Andhanai - உலகங்களை அளப்பதற்குகாகத் திருவடிகளை நீட்டின ஸ்வாமியாக ஸேவை ஸாதிப்பவனுமான பெருமானை |
| 1405 | பெரிய திருமொழி || (5-6–கைம்மானம்) (திருவரங்கம் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தன்னையே பற்றின என்னோடு-சம்பந்தம் உடையாருக்கும்-வைஷ்ணவர்களுக்கும் -என்றபடி எனக்கும்-எனக்கு தாயும் தமப்பனும் என்று இருக்கிற இவர்களுக்கும் நித்ய சூரிகளுக்கும் ஒக்க தரம் வையாதே சேஷியாய் இருக்குமவனை –கண்டது ஸ்ரீ தென்னரங்கத்தே) 8 | துவரித்த உடையவர்க்கும் தூய்மை இல்லா சமணர்க்கும்
அவர்கட்கு அங்கு அருள் இல்லா அருளானைத் தன் அடைந்த
எமர்கட்கும் அடியேற்கும் எம்மாற்க்கும் எம்மனைக்கும்
அமரர்க்கும் பிரானாரைக் கண்டது தென்னரங்கத்தே –5-6-8 | பதவுரை Show / Hideதுவரித்த உடையவர்க்கும், Thuvariththa Udaiyavarkkum - காவித்துணி கட்டித் திரியும் பௌத்தர்களும் (- (கண்டது தென் அரங்கத்தே)) தூய்மை இல்லா சமணர்க்கும் அவர்கட்கு, Thuymai Illaa Samanarkkum Avarkadku - பரிசுத்தியற்றவர்களான ஜைநர்களுமான அந்த அவைதிகர்கள் விஷயத்தில் அருள் இல்லா, Arul Illaa - அருள் செய்யாதவனும் அருளானை, Arulaanai - (வைதிகர் திறத்தில்) அருள் செய்பவனும், தன் அடைந்த, Than Adaindha - தன்னையே ஆச்ரயித்த எமர்கட்கும், Emarkadkum - என்னைச் சேர்ந்தவர்களுக்கும் அடியேற்கும், Adiyerkum - அடியேனுக்கும் எம்மாற்கும், Emmaarkkum - எனது தகப்பனுக்கும் எம் அனைக்கும், Em Anaikkum - எனது தாய்க்கும் அமரர்க்கும், Amararukkum - நித்ய ஸூரிகளுக்கும் பிரானரை, Piranarai - ஸ்வாமியாயிருப்பவனமான பெருமானை |
| 1406 | பெரிய திருமொழி || (5-6–கைம்மானம்) (திருவரங்கம் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பாஹ்யேந்திரங்கள்-விஷயங்களில் போகாதபடி பண்ணி – ஆத்மா யாதாம்ய ஜ்ஞான பூர்வகமாக தன் பக்கலிலே பக்தியைப் பண்ணுமவர்களுக்கு-தன் ஸ்வரூபாதிகளை உள்ளபடியே காட்டிக் கொடுக்கும் விஸ்மயநீயனை –யான் கண்டது ஸ்ரீ தென்னரங்கத்தே) 9 | பொய் வண்ணம் மனத்தகற்றிப் புலன் ஐந்தும் செலவைத்து
மெய் வண்ணம் நினைந்தவர்க்கும் மெய் நின்ற வித்தகனை
மை வண்ணம் கரு முகில் போல் திகழ் வண்ண மரகதத்தின்
அவ்வண்ண வண்ணனை யான் கண்டது தென்னரங்கத்தே –5-6-9 | பதவுரை Show / Hideபொய் வண்ணம் மனத்து அகற்றி, Poi Vannam Manathu Akattri - ப்ரக்ருதி ப்ராக்ருதங்களை மனத்தில் நின்றும் ஒழித்துவிட்டு (- (யான் கண்டது தென் அரங்கத்தே–.)) புலன் ஐந்தும் செலவைத்து, Pulan Aindum Selavaiththu - பஞ்சேந்திரியங்களையும் அப்பாற்படுத்தி மெய்வண்ணம் நினைந்தவர்க்கு, Meivannam Ninaindhavarkku - உண்மையாகத் தன்னைச் சிந்திப்பவர்களுக்கு மெய் நின்ற, Mei Nindra - தன் ஸ்வரூபத்தை உள்ளபடியே காட்டிக்கொடுக்கின்ற வித்தகனை, Viththakanai - ஆச்சர்யபூதனும், மை வண்ணம், Mai Vannam - அஞ்சனத்தின் நிறம்போன்ற நிறத்தையும் கரு முகில் போல் திகழ் வண்ணம் மரதகத்தின் அவ் வண்ணம், Karum Mukil Pol Thigazh Vannam Marathakaththin Av Vannam - காளமேகம் போல் விளங்குகின்ற நிறத்தையுடைய மரதகப் பச்சையின் அப்படிப்பட்ட நிறத்தையும் வண்ணனை, Vannai - தனக்கு நிறமாக வுடையனுமான பெருமானை. |
| 1407 | பெரிய திருமொழி || (5-6–கைம்மானம்) (திருவரங்கம் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்வ ரஷணத்துக்கு ஒரு கைம்முதல் இல்லாத பசுக்களை அவற்றோடு பொருந்தி ரஷித்து அது தான் பர தசை-என்னும்படி ஸ்ரீ கோயிலிலே வந்து சந்நிஹிதன் ஆனவனை -சுலபன் ஆனவனை – மனஸ் சோடே இத்தை அனுசந்தித்துக் கற்றவர்கள் மேல் இவர்கள் போக்க வேணும் -என்று நினையாதே இருக்க துஷ் கர்மங்கள் தாமே இது நமக்கு நிலம் அல்ல -என்று விட்டு ஓடிப் போம்) 10 | ஆமருவி நிரை மேய்த்த வணி யரங்கத்து யம்மானைக்
காமரு சீர்க் கலிகன்றி யொலி செய்த மலி புகழ் சேர்
நாமருவு தமிழ் மாலை நால் இரண்டோடு இரண்டினையும்
தாமருவி வல்லார் மேல் சாரா தீ வினை தானே –5-6-10 | பதவுரை Show / Hideஆ நிரை, Aa Nirai - பசுக்கூட்டங்களை மருவி மேய்த்த, Maruvi Meyththa - விரும்பி மேய்த்தவனாம் அணி அரங்கத்து அம்மானை, Ani Arangaththu Ammanaik - திருவரங்கத்தில் எழுந்தருளி யிருப்பவனான பெருமானைக் குறித்து, காமரு சீர் கலி கன்றி ஒலிசெய்த, Kamaru Seer Kali Kandrai Oliseiththa - விரும்பத்தக்க சீர்மையையுடைய திருமங்கையாழ்வார் அருளிச் செய்ததும் மலி புகழ் சேர், Mali Pugazh Ser - நிரம்பிய கீர்த்தியையுடையதும் நா மருவு, Naa Maruvu - நாவுக்குப் பொருந்தியிருப்பதுமான தமிழ் மாலை நாலிரண்டோடு இரண்டினையும், Tamil Maalai Naalirandodu Irandinaikku - இத்தமிழ்ப் பாசுரங்கள் பத்தையும் தாம் மருவி வல்லார் மேல், Thaam Maruvi Vallar Mel - தாமே விரும்பிக் கற்குமவர்களிடத்து தீ வினை சாரா, Thee Vinai Saaraa - பாவங்கள் அணுகமாட்டா |