திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3326 | திருவாய்மொழி || (6-10–உலகம் உண்ட பெருவாயா) - ((உலகமுண்டபெருவாயா) ஸகல ஜகத்தையும் ரக்ஷிக்குமியல்வை யுடைபையாய்க் கொண்டு திருமலையிலே நித்யஸந்நதி பண்ணியிருக்கிறவுன்னை நான் கிட்டியநுபவிக்கும் விரகு அருளிச் செய்ய வேணுமென்கிறார்.) 1 | உலகம் உண்ட பெரு வாயா! உலப்பில் கீர்த்தி அம்மானே!
நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி! நெடியாய்! அடியேன் ஆருயிரே!
திலதம் உலகுக்காய் நின்ற திரு வேங்கடத் தெம் பெருமானே!
குல தொல் அடியேன் உன பாதம் கூடுமாறு கூறாயே.–6-10-1 | பதவுரை Show / Hideulagam unda peru vaaya,உலகம் உண்ட பெரு வாயா - (பிரளய காலத்தில்) உலகங்களையெல்லாம் அமுது செய்த பெருவாயையுடையவனே! ulappu il keerthi ammaane,உலப்பு இல் கீர்த்தி அம்மானே - முடிவில்லாத புகழுடைய பெருமானே nilavum sudar soozi oli moorthi,நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி - அப்ராக்ருத தேஜோமயமான திவ்ய விக்ரஹத்தையுடையவனே! nediaay,நெடியாய் - மிகப்பெரியோனே! adiyen aar uyire,அடியேன் ஆர் உயிரே - அடியேனுக்குப் பரிபூர்ண ப்ராணபூதனே! ulagukku thilatham aay nindra,உலகுக்கு திலதம் ஆய் நின்ற - உலகுக்கெல்லாம் திலகம் போன்றதான திருமலையிலே விளங்குகின்ற emperumane,எம்பெருமானே - அஸ்மத்ஸ்வாமியே! kulam tol adiyen,குலம் தொல் அடியேன் - குலபரம்பரையாக உனக்கு அடிமைப் பட்டிருப்பவனான அடியேன் una paadham,உன பாதம் - உனது திருவடிகளை koodum aaru,கூடும் ஆறு - வந்து சேறும்படியை kooraay,கூறாய் - அருளிச் செய்யவேணும். |
| 3327 | திருவாய்மொழி || (6-10–உலகம் உண்ட பெருவாயா) - ((கூறாய் நீறாய்) விரோதிகளையெல்லாம் கிழங்கெடுக்கவல்ல திவ்யாயுதத்தினால் ஒளி பெற்றிருக்கிற நீ எனது விரோதிகளையும் போக்கி, நான் உன் திருவடிகளைச் சேரும் படி க்ருபை பண்ண வேணுமென்கிறார்.) 2 | கூறாய் நீறாய் நிலனாகிக் கொடு வல்லசுரர் குலமெல்லாம்
சீறா எரியும் திரு நேமி வலவா! தெய்வக் கோமானே!
சேறார் சுனைத் தாமரை செந் தீ மலரும் திருவேங் கடத்தானே!
ஆறா அன்பில் அடியேன் உன்னடி சேர் வண்ணம் அருளாயே.–6-10-2- | பதவுரை Show / Hidekodu valla asurar kulam ellaam,கொடு வல்ல அசுரர் குலம் எல்லாம் - மிகக் கொடிய அசுரர்களின் கூட்டமெல்லாம் kooru aay,கூறு ஆய் - பலபல கண்டங்களாகி neeru aay,நீறு ஆய் - சாம்பலாகி nilan aagi,நிலன் ஆகி - தரைப்பட்டிருக்கச் செய்தேயும் seeraa,சீறா - பின்னையும் சீறி eriyum,எறியும் - ஜ்வலியா நிற்கிற thiru nemi valavaa,திரு நேமி வலவா - திருவாழியாழ்வானை வலவருகிலே ஏந்தியிருப்பவனே! theyvam komaane,தெய்வம் கோமானே - நித்ய ஸூரிநாதனே! seeru aar sunai,சேறு ஆர் சுனை - சேறு நிரம்பிய கனைகளிலே thaamarai,தாமரை - செந்தாமரை மலர்கள் sem thee malarum,செம் தீ மலரும் - சிவந்த தீப்போன்ற நிறத்தையுடைத்தாய்க் கொண்டு மலரும்படியுள்ள thiruvengadathaaney,திருவேங்கடத்தானே - அளவுபடாத அன்பையுடையேனான நான் un adi ser vannam,உன் அடி சேர் வண்ணம் - உன் திருவடிகளைச் சேறும்படி arulaay,அருளாய் - அருள்புரிய வேணும். |
| 3328 | திருவாய்மொழி || (6-10–உலகம் உண்ட பெருவாயா) - ((வண்ணமருள் கொள்) கீழ்ப்பாட்டில் “உன்னடிசேர் வண்ணமருளாய்“ என்ற ஆழ்வாரை நோக்கி) 3 | வண்ண மருள் கொள் அணி மேக வண்ணா! மாய அம்மானே!
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே! இமையோர் அதிபதியே!
தெண்ணல் அருவி மணி பொன் முத் தலைக்கும் திருவேங் கடத்தானே!
அண்ணலே! உன்னடி சேர அடியேற்கு ஆ ஆ என்னாயே.–6-10-3 | பதவுரை Show / Hidevannam arul kol,வண்ணம் அருள் கொள் - அருளே வடிவெடுத்த வண்ணமாய் ani paegam vannaa,அணி பேகம் வண்ணா - அழகிய மேகம்போன்ற நிறத்தை யுடையவனே! maayam ammaane,மாயம் அம்மானே - ஆச்சரிய குணங்களையுடைய ஸ்வாமியே! ennam pugundhu thithikkum amudhae,எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே - நெஞ்சுக்குள்ளே புகுந்து ரஸிக்கும் அமிருதமானவனே! imaiyor adhipathiye,இமையோர் அதிபதியே - தேவாதிதேவனே! thel nal aruvi,தெள் நல் அருவி - தெளிந்தழகிய அருவிகள் mani pon muthu,மணி பொன் முத்து - மணிகளையும் பொன்களையும் முத்துக்களையும் alaikkum,அலைக்கும் - கொழிக்குமிடமான thiruvengadathaaney,திருவேங்கடத்தானே - திருமலையிலே விளங்குபவனே! annale,அண்ணலே - ஸ்வாமியே! un adi so,உன் அடி சோ - உன் திருவடிகளில் வந்து சேரும்படி adiyerkku,அடியேற்கு - அடியேன் விஷயத்திலே aa aa ennaay,ஆ ஆ என்னாய் - ஐயோ வென்றிரங்கியருள வேணும். |
| 3329 | திருவாய்மொழி || (6-10–உலகம் உண்ட பெருவாயா) - ((ஆவா வென்னாது) பிரானே! உன்னைப் பெறுகைக்கு உடலாக நீ சாஸ்த்ரங்களில் காட்டிக்கொடுத்த ஸாதனங்களொன்றும் எனக்கு உபயோகப்படவில்லை,) 4 | ஆவா என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாணாள் மேல்
தீவாய் வாளி மழை பொழிந்த சிலையா! திரு மா மகள் கேள்வா!
தேவா! சுரர்கள் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே!
பூவார் கழல்கள் அரு வினையேன் பொருந்துமாறு புணராயே.–6-10-4 | பதவுரை Show / Hideaa aa ennaadhu,ஆ ஆ என்னாது - இரக்கமில்லாமல் ulagathai alaikkum asurar,உலகத்தை அலைக்கும் - உலகத்தவர்களை ஹிம்ஸிப்பவர்களான asurar,அசுரர் - ஆஸுரப்ரக்ருதிகளினுடைய vaazhnal mel,வாழ்நாள் மேல் - ஆயுளை முடிப்பதற்காக thee vai vaali,தீ வாய் வாளி - நெருப்பை உமிழ்கிற அம்புகளை mazhai pozhindha silaiyaa,மழை பொழிந்த சிலையா - மழைபோலே வர்ஷித்த சார்ங்க வில்லையுடையவனே! thiru maa magal kaelva,திரு மா மகள் கேள்வா - திருமகள் கொழுநனே! theva,தேவா - தேவனே! surargal munikanangal virumbum,சுரர்கள் முனிகணங்கள் விரும்பும் - தேவர்களும் முனிவர்களும் திரள் திரளாக ஆதரிக்கும் படியான thiru vengadathaaney,திரு வேங்கடத்தானே - திருமலையில் எழுந்தருளியிருப்பவனே! poo aar kazhalgal,பூ ஆர் கழல்கள் - (உனது) புஷ்பங்கள் நிறைந்த திருவடிகளை aru vinaiyen,அரு வினையேன் - மஹாபாபியான நான் porundhum aaru,பொருந்தும் ஆறு - கிட்டும்படி punaraay,புணராய் - கற்பித்தருளவேணும் |
| 3330 | திருவாய்மொழி || (6-10–உலகம் உண்ட பெருவாயா) - ((புணராநின்ற) ஆழ்வீர்! நீர் இங்ஙனே கிடந்து துடிப்பதேன்? எப்படியும் உம்முடைய விருப்பம் செய்வதாகவே நினைத்திருக்கிறோமென்று திருவேங்கடமுடையான் திருவுள்ளமாக, அது என்றைக்குச் செய்வதாகத் திருவுள்ளம்? ஒரு நாளிட்டு தரலாகாதோ வென்கிறார்.) 5 | புணரா நின்ற மரமேழ் அன் றெய்த ஒரு வில் வலவாவோ!
புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ!
திணரார் மேக மெனக் களிறு சேரும் திருவேங்கடத்தானே!
திணரார் சார்ங்கத் துன பாதம் சேர்வ தடியேன் எந்நாளே.–6-10-5 | பதவுரை Show / Hideanru,அன்று - ராமாவதாரத்திலே punaraa nindra maram ezh,புணரா நின்ற மரம் ஏழ் - ஒன்றொடொன்று பிணைந்திருந்த ஸப்த ஸாலவ்ருக்ஷங்களை eydha,எய்த - துளைபடுத்தின oru vil valavaa o,ஒரு வில் வலவா ஓ - ஓ தனிவீரனே! punar ey nindra maram irandin naduve,புணர் எய் நின்ற மர ம் இரண்டின் நடுவே - சேர்ந்தி பொருத்தி நின்ற இரட்டை மருத மரங்களினிடையே pon,போன் - தவழ்ந்து சென்ற mudhalvaa o,முதல்வா ஓ - ஓ மூலபுருஷனே! thinar aar megham ena,திணர் ஆர் மேகம் என - தின்மை மிக்க மேகங்களென்னும்படி kaliru serum,களிறு சேரும் - யானைகள் சேருமிடமான thiruvengadath thaane,திருவேங்கடத் தானே - திருமலையிலெழுந்தருளி யிருப்பவனே thinar aar saangathu,திணர் ஆர் சார்ங்கத்து - திண்மைமிக்க ஸ்ரீசார்ங்க வில்லையுடைய una paadham,உன பாதம் - உனது திருவடிகளை adiyen saervadhu ennaal,அடியேன் சேர்வது எந்நாள் - அடியேன் அணுகப் பெறுவது என்றைக்கோ? |
| 3331 | திருவாய்மொழி || (6-10–உலகம் உண்ட பெருவாயா) - ((எந்நாளே நாம்.) கீழ்ப்பாட்டில் “உனபாதம் சேர்வதடியே னெந்நாளே“ என்றதற்கு உன் திருவடிகளே நான் சேரப்பெறும் நாள்கூட ஒன்று உண்டா? அது எது? என்று ஸந்தேஹித்துச் சொல்வதாகவும் பொருளாகக்கூடுமே,) 6 | எந்நாளே நாம் மண்ணளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கென்று
எந்நாளும் நின் றிமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனமினமாய்
மெய்ந் நா மனத்தால் வழிபாடு செய்யும் திரு வேங்கடத்தானே!
மெய்ந் நான் எய்தி எந்நாள் உன்னடிகள் அடியேன் மேவுவதே?–6-10-6 | பதவுரை Show / Hideman alandha thaamaraigal inai,மண் அளந்த தாமரைகள் இணை - உலகமளந்த உபயபாதங்களை naam kaanpadharku ennaal endru,நாம் காண்பதற்கு எந்நாள் என்று - நான் காண்பதற்குரிய நாள் எந்த நாளென்று imaiyor gal,இமையோர்கள் - நித்யஸூரிகள் ennaalum nindru etti,எந்நாளும் நின்று ஏத்தி - நிரந்தரமாக நின்று துதித்து eirainji,இறைஞ்சி - வணங்கி enam enam aay,இனம் இனம் ஆய் - திரள் திரளாக mei naa manathaal,மெய் நா மனத்தால் - த்ரிகரணங்களாலும் vazhipaadu seyyum,வழிபாடு செய்யும் - ஆராதனை செய்யுமிடமான thiruvengadathaaney,திருவேங்கடத்தானே - திருமலையில் எழுந்தருளியிருப்பவனே! adiyen naan,அடியேன் நான் - அடியேனாகிய நான் mei eydhi,மெய் எய்தி - (கனவுபோலன்றிக்கே) மெய்யாகவே யடைந்து un adikkaL mevuvadhu,உன் அடிக்கள் மேவுவது - உன் திருவடிகளிலே பொருந்துவது ennaal,எந்நாள் - என்றைக்கோ? |
| 3332 | திருவாய்மொழி || (6-10–உலகம் உண்ட பெருவாயா) - ((அடியேன் மேவி) பேறு தப்பாதென்று துணிந்திருத்தல் ஸ்வரூபமாயினும் அத்தலையில் போக்யதை நெஞ்சுக்கு விஷயமாக ஆக, தரித்திருக்க முடியாதபடி பதற வேண்டியிருக்குமே, அந்தப் பதற்றத்தை யருளிச் செய்கிறாரிப்பாட்டில்.) 7 | அடியேன் மேவி அமர்கின்ற அமுதே! இமையோர் அதிபதியே!
கொடியா அடு புள் ளுடையானே! கோலக் கனி வாய்ப் பெருமானே!
செடியார் வினைகள் தீர் மருந்தே! திரு வேங்கடத் தெம் பெருமானே!
நொடியார் பொழுதும் உன பாதம் காண நோலா தாற்றேனே.–6-10-7 | பதவுரை Show / Hideadiyen mevi amarkindra amudhae,அடியேன் மேவி அமர்கின்ற அமுதே - அடியேன் கிட்டி யநுபவிக்கும்படியான அமிருதமே! emaiyor adhipathiye,இமையோர் அதிபதியே - தேவாதி தேவனே! adu pul kodi aa udaiyaane,அடு புள் கொடி ஆ உடையானே - (பகைவரைப்) பொசுக்கவல்ல கருடனைக் கொடியாகவுடையவனே! kolam kanivai perumaane,கோலம் கனிவாய் பெருமானே - அழகிய கனிபோன்ற அதரத்தையுடைய பெருமானே! chedi aar vinaigal theer marundhae,செடி ஆர் வினைகள் தீர் மருந்தே - செடிபோலே செழித்த பாபங்களைத் தீர்க்கும் மருந்தானவனே! un paadham kaana,உன பாதம் காண - உனது திருவடிகளைக் காண்கைக்கு noolaadhu,நோலாது - நான் ஒரு நோன்பும் அனுஷ்டியாமலிந்தும் (நோற்றவர்கள் பலன் தாழ்த்தால்படுமாபோலே) nodi aar pozhudhum,நொடி ஆர் பொழுதும் - ஒரு க்ஷண மாத்திரமும் aatren,ஆற்றேன் - தரித்திருக்கமாட்டாமல் துடிக்கின்றேன் |
| 3333 | திருவாய்மொழி || (6-10–உலகம் உண்ட பெருவாயா) - ((நோலாதாற்றேன்) ஸாதநாநுஷ்டானம் என் பக்கலில் ஒன்றுமில்லையென்று சொல்லிக்கொண்டே ஆசைப்பட்டு நாக்கு நீட்டினால் கிடைக்குமோ? என்று எம்பெருமான் திருவுள்ள மாகக்கொண்டு தங்களுடைய உபாய தாரித்ரியத்தைச் சொல்லிக் கொண்டன்றோ வந்து உன்னைக் காணப்பெறுகிறது என்கிறார்.) 8 | நோலா தாற்றேன் உன பாதம் காண என்று நுண்ணுர்வின்
நீலார் கண்டத் தம்மானும் நிறை நான் முகனும் இந்திரனும்
சேலேய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திரு வேங்கடத்தானே!
மாலாய் மயக்கி அடியேன் பால் வந்தாய் போலே வாராயே–6-10-8 | பதவுரை Show / Hidenun unarvin,நுண் உணர்வின் - (ஸர்வஜ்ஞனாகையாலே) நுட்பமான உணர்வையுடையனான neelaar kandathu ammaanum,நீலார் கண்டத்து அம்மானும் - சிவபிரானும் nirai naanmuganum,நிறை நான்முகனும் - (ஞானசக்திகளால்) நிறைந்த பிரமனும் indiranum,இந்திரனும் - தேவேந்திரனும் un paadham kaana voodhu aatrennudru,உன பாதம் காண வோது ஆற்றேன் என்று - “உன் திருவடிகளைக் காண்கைக்கு ஸாதாரநானுஷ்டானம் பண்ணாதேயிருந்து ஆற்ற மாட்டுகின்றிலேன்“ என்று சொல்லிக் கொண்டு sael ey kannar palar soozhu,சேல் எய் கண்ணார் பலர் சூழ - கய் கண்ணிகளான தங்கள் மனைவிமார்கள் பலரோடுங் கூடிவந்து virumbum,விரும்பும் - விரும்பிப்பணியுமிடமான maal aay mayakki vandhaay poalae,மால் ஆய் மயக்கி வந்தாய் போலே - மயக்கிக்கொண்டு வந்தாப்போலே adiyen pal varai,அடியேன் பால் வராய் - அடியேன் திறந்தும் வந்து தோற்றவேணும். |
| 3334 | திருவாய்மொழி || (6-10–உலகம் உண்ட பெருவாயா) - ((வந்தாய்போலே) தம்முடைய விச்லேஷ வ்யஸநத்தைக் கனக்க அருளிச் செய்கிறார்.) 9 | வந்தாய் போலே வாராதாய்! வாராதாய் போல் வருவானே!
செந்தாமரைக்கட் செங்கனி வாய் நாற்றோ ளமுதே! என துயிரே!
சிந்தா மணிகள் பகரல்லைப் பகல் செய் திரு வேங்கடத்தானே!
அந்தோ அடியேன் உன பாதம் அகல கில்லேன் இறையுமே.–6-10-9 | பதவுரை Show / Hidevandhai poalae vaaraadhai,வந்தாய் போலே வாராதாய் - கைக்கு எட்டினாற்போலேயிருந்து எட்டாதவனே! vaaraadhai pol varuvaane,வாராதாய் போல் வருவானே - எட்டாதவன் போலிருந்து எட்டி நிற்பவனே! sen thamarai kan,செம் தாமரை கண் - செந்தாமரைபோன்ற திருக்கண்களையும் sem kani vaay,செம் கனி வாய் - செங்கனி போன்ற திருப்பவளத்தையும் naal thol,நால் தோள் - நான்கு திருத்தோள்களையுமுடைய amudhae,அமுதே - பரமபோக்யனே! enadhu uyire,எனது உயிரே - எனக்கு உயிரானவனே! sindhaamanigal pagar,சிந்தாமணிகள் பகர் - சிறந்த ரத்னங்களின் ஒளியான allai pagal sei,அல்லை பகல் செய் - இரவையும் பகலாக்குமிடமானது thiruvengadathaaney,திருவேங்கடத்தானே - திருமலையில் வாழ்பவனே! antho,அந்தோ - ஐயோ! una paadham,உன பாதம் - உனது திருவடிகளே adiyen,அடியேன் - அடிமைச்சுவடறிந்த நான் iraiyum akala killeen,இறையும் அகல கில்லேன் - ஒரு க்ஷணகாலமும் பிரிந்திருக்க வல்லேனல்லேன் |
| 3335 | திருவாய்மொழி || (6-10–உலகம் உண்ட பெருவாயா) - ((அகலகில்லேன்) கீழ் ஒன்பது பாட்டாலும் சரண்யனான ஸர்வேச்வரனுடைய ஸ்வரூபத்தையும் தம்முடைய ஆற்றாமையையும் சொன்னார், இப்பாட்டில், தம்முடைய அபேக்ஷிதம் சடக்கென ஆகிஞ்சந்யத்தையும் அநந்யகதித்வத்தையும் தெரிவித்துக் கொண்டு திருவேங்கடமுடையான் திருவடிகளிலே சரணம் புகுகிறார்.) 10 | அகல கில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
புகல் ஓன்றில்லா அடியேன் உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே.–6-10-10 | பதவுரை Show / Hidealar mel mangai,அலர் மேல் மங்கை - பூவில் வாழ்மகளான பெரிய பிராட்டியார் iraiyum akala killeen endru,இறையும் அகல கில்லேன் என்று - ஒருக்ஷணமும் பிரிந்திருக்கமாட்டேனென்று சொல்லிக்கொண்டு urai maarpa,உறை மார்பா - நித்யவாஸம் பண்ணப்பெற்ற திருமார்வையுடையவனே! nigar il pugazhai,நிகர் இல் புகழாய் - ஒப்பற்றதான புகழை யுடைய வனே! ulagam moonru udaiyaa,உலகம் மூன்று உடையாய் - சேதநாசேதங்களுக்கும் ஸ்வாமியே! ennai aal,என்னை ஆள் - நீசனே என்னையுமடிமை கொள்பவனே! vaane,வானே - பவனே! amarar,அமரர் - தேவர்களும் muni kanangal,முனி கணங்கள் - மஹர்ஷி ஸமூஹங்களும் virumbum,விரும்பும் - விரும்பிவந்து பணியுமிடமான thiruvengadathaaney,திருவேங்கடத்தானே - திருமலையில் வாழ்பவனே! pugal ondru illa adiyen,புகல் ஒன்று இல்லா அடியேன் - அநந்யகதியான நான் un adi keel,உன் அடி கீழ் - உனது திருவடி வாரத்திலே amarndhu pugundhaen,அமர்ந்து புகுந்தேன் - மிகப் பொருத்தமாக அந்வயித்துவிட்டேன் |
| 3336 | திருவாய்மொழி || (6-10–உலகம் உண்ட பெருவாயா) - ((அடிக்கீழமாந்து) இத்திருவாய்மொழியைப் பற்றினவர்கள் திருநாட்டிலே நித்யாநுபலம் பண்ணப் பெறுவரென்று பயனுரைத்துத் தலைக் கட்டுகின்றார்.) 11 | அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்றென்றருள் கொடுக்கும்
படிக் கேழில்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திருவேங் கடத்துக் கிவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே.–6-10-11 | பதவுரை Show / Hideadiyeeir,அடியீர் - அடியவர்களே! adi keel amarndhu pugundhu vaazhmin endru endru,அடி கீழ் அமர்ந்து புகுந்து வாழ்மின் என்று என்று - நம்முடைய திருவடிகளின் கீழே புகுந்திருந்து உஜ்ஜீவித்துப் போருங்கள்“ என்று அநவாதமும் காட்டிக்கொடுத்து, arul kodukkum,அருள் கொடுக்கும் - க்ருபை பண்ணுகிறவனும் padi kel ella perumaanai,படி கேழ் இல்லா பெருமானை - சீர் நிலங்களை பெருமை வாய்ந்தவனுமான ஸர்வேச்வரனைக்குறித்து mudipaan sonna,முடிப்பான் சொன்ன - ஸம்ஸாரத்தை முடிப்பதற்காக அருளிச்செய்த aayirathu,ஆயிரத்து - ஆயிரத்தினுள்ளும் thiruvengadathukku ivaipaththum,திருவேங்கடத்துக்கு இவைபத்தும் - திருவேங்கடமலை விஷயமான இத்திருவாய்மொழியை pidithaar pidithaar,பிடித்தார்பிடித்தார் - ஸாக்ஷாத்தாகவும் பரம்பரையாகவும் அவலம்பித்தவர்கள் periya vaanul,பெரிய வானுள் - பாமாகாசமென்கிற பரமபதத்திலே veettrindhu nilaavular,வீற்றிருந்து நிலாவுலர் - நிலை நின்று வீற்றிருப்பர்கள். |