திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1468 | பெரிய திருமொழி || (6-3–துறப்பேன்) (திருவிண்ணகர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (துறப்பேன் அல்லேன் இன்பம் –சுகத்தை சந்யசிப்பேன் அல்லேன் துறவாது நின்னுருவம் மறப்பேன் அல்லேன் –சுகத்தை துறவாமை யாவது உன்னுடைய வடிவை மறவாதே இருக்கை என்றும் மறவாது யான் உலகில் பிறப்பேனாக எண்ணேன் –மறவாமையால் பெற்றது பிறவாமை நின் திறத்தேன் ஆன தன்மையால் -பிறவாமை பெற்றது-ஸ்ரீ திரு விண்ணகரானே – உன் திறத்தேனாக பெற்றது நீ சந்நிஹிதன் ஆகை) 1 | துறப்பேன் அல்லேன் இன்பம் துறவாது நின்னுருவம்
மறப்பேன் அல்லேன் என்றும் மறவாது யானுலகில்
பிறப்பேனாக எண்ணேன் பிறவாமை பெற்றது நின்
திறத்தேன் ஆ தன்மையால் திரு விண்ணகரானே –6-3-1 | பதவுரை Show / Hideஇன்பம், Inbam - (உன் அநுபவத்தினாலுண்டாகக்கூடிய) பேரின்பத்தை (- (திருவிண்ணகரானே!-)) துறப்பேன் அல்லேன், Thurappeen Alleen - தவிரமாட்டேன்; துறவாது, Thuravaadhu - அவ்வின்பத்தைத்தவிராதவனாகி என்றும், Endrum - ஒருநாளும் நின் உருவம் மறப்பேன் அல்லேன், Nin Uruvam Marappeen Alleen - உன்வடிவழகை மறவாதவனாயிருக்கின்றேன்; மறவாது, Maravaadhu - அவ்வடிவழகை மறவாதவனாகி யான், Yan - நான் உலகில், Ulagil - ஸம்ஸாரத்தில் பிறப்பேன் ஆக எண்ணேன், Pirappeen Aaga Ennen - இனிப் பிறவியெடுக்க எண்ணமற்றவனாயிருக்கின்றேன்; பிறவாமை பெற்றது, Piravaamai Pettrathu - இனிப்பிறவாதபடி பேறுபெற்ற இதுதானும் நின் திறத்தேன் ஆதன்மை யால், Nin Thiraththen Aadhanmai Yaal - உனக்கே ஆட்பட்டதனாலேயாம். |
| 1469 | பெரிய திருமொழி || (6-3–துறப்பேன்) (திருவிண்ணகர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ராவண பவனத்தை விட்டு ஆகாஸ ஸ்தானனான போதே ஸ்ரீமான் ஆனான் இறே அப்ராப்த விஷயங்களை விட்ட அநந்தரம் ப்ராப்த விஷயத்தின் உடைய சரம அவதியிலே நின்றேன் பிராப்தி பலமான கைங்கர்யத்துக்கு யோக்யன் ஆனேன் – இவனுக்கு கர்ம பாரதந்த்ர்யம் ஔபாதிகமாய்-ஈஸ்வர பாரதந்த்ர்யம் ஸ்வா பாவிகமாய் இருக்கும் இறே – நீயே வந்து புகுகிற இடத்தில்-நான் விலக்கிற்றிலேன்-என்ற படி-அநந்ய கதியை விடில் நிர்க்க்ருணன் ஆம் பிராட்டிக்கு அநபிமதம் செய்யில் பிரணயி யன்றிக்கே ஒழியும்ஆக-ஸ்வரூபமும் பிரணயித்வமும்-இரண்டும் இழவாம்) 2 | துறந்தேன் ஆர்வச் செற்ற சுற்றம் துறந்தமையால்
சிறந்தேன் நின்னடிக்கே யடிமை திருமாலே
அறந்தானாய்த் திரிவாய் யுன்னை என் மனத்தகத்தே
திறம்பாமல் கொண்டேன் திருவிண்ணகரானே –6-3-2 | பதவுரை Show / Hideஅறம் தானாய்த் திரிவாய், Aram Thaanayth Thirivaai - தானே ஸாக்ஷாத்தர்மமாய் ஆள்பார்த்துத் திரியுமவனே!, (- (திருவிண்ணகரானே!- ;) (திருமாலே!- ;)) சுற்றம், Sutram - (ஸம்ஸாரிகளுடன்) உறவையும் ஆர்வம், Aarvam - அன்பையும் செற்றம், Settram - விரோதத்தையும் துறந்தேன், Thurandhen - தவிர்ந்தேன்; துறந்தமை யால், Thurandhamai Yaal - தவிர்ந்ததனால், நின் அடிக்கே, Nin Adikke - உன் திருவடிகளிலேயே அடிமை சிறந்தேன், Adimai Sirandhen - கைங்கர்யம் பண்ணவுரியனானேன்; உன்னை, Unnai - உன்னை என் மனத்தகத்தே, En Manaththakaththae - எனது நெஞ்சினுள்ளே திறம்பாமல் கொண்டேன், Thirampamal Konden - தவறாது தரித்துக் கொண்டேன் |
| 1470 | பெரிய திருமொழி || (6-3–துறப்பேன்) (திருவிண்ணகர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தப்ப ஒண்ணாததைத் தப்பி திருவடிகளிலே வந்து சரணம் புகுந்தேன் என் பக்கலில் தயைப் பண்ணி யருள வேணும் -என்கிறார்) 3 | மானேய் நோக்கு நல்லார் மதி போல் முகத்து உலவும்
ஊனேய் கண் வாளிக்கு உடைந்து ஓட்டந்து உன்னடைந்தேன்
கோனே குறுங்குடியுள் குழகா திரு நறையூர்த்
தேனே வரு புனல் சூழ் திரு விண்ணகரானே –6-3-3 | பதவுரை Show / Hideகோனே, Kone - ஸ்வாமிந்! குறுங்குடியுள் குழகா, Kurungudiyul Kuzhaga - திருக்குறுங்குடியிலே வந்து கலந்துகொள்ள வரு புனல் சூழ் திரு விண்ணகரானே, Varu Punal Sooz Thiru Vinnakaranne - பெருகுகின்ற தீர்த்தங்களால் சூழப்பட்ட திருவிண்ணகரில் எழுந்தருளியிருக்கும் பெருமானே! மான் ஏய் நோக்கு நல்லார், Maan Aey Nookku Nallaar - மான் பார்வை போன்ற பார்வையையுடைய மாதர்களது மதி போல் முகத்து உலவும், Mathi Pol Mugaththu Ulavum - சந்திரன் போன்ற முகத்தில் உலாவுகின்ற ஊன் எய் கண் வாளிக்கு, Oon Aey Kann Vaalikku - மாம்ஸமயமான கண்களாகிற பாணத்துக்கு உடைந்து, Udaindhu - அஞ்சி நடுங்கி ஓட்டந்து, Oottandhu - ஓடிவந்து உன் அடைந்தேன், Un Adaindhen - உன்னைச் சரணடைந்தேன் |
| 1471 | பெரிய திருமொழி || (6-3–துறப்பேன்) (திருவிண்ணகர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நினைவு இன்றிக்கே இருக்க ஸ்ரீ மதுரையிலே உறங்குகிறவர்கள் ஸ்ரீ மத் த்வாரகையிலே விழித்தால் போலே திருவடிகளிலே வந்து கிட்டிக் கொடு நிற்கக் கண்டேன் – உன்னை கிட்டுகைக்கு மூல ஸுஹ்ருதமும் நீயே -என்கிறார் ஸ்ரீ சர்வாதிகனான உன்னைக் கிட்டி என்னுடைய பிராப்தி பிரதிபந்தகமான பாபங்களை அடியைப் போக்கினேன் – ராவணனாலே நெருக்குண்டு புகலிடம் அற்ற ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு புகலாகக் கடவதாக கடல் கரை வெளியிலே எடுத்துவிட்டு நின்றால் போலே சம்சாரத்திலே விஷயங்களாலே நெருக்குண்டு நோவு படுகிற எனக்கு புகலாகஸ்ரீ திரு விண்ணகரிலே வந்து சந்நிஹிதன் ஆகையாலே-அத்தைத் தப்பித் திருவடிகளிலே வந்து புகுந்தேன்) 4 | சாந்தேந்து மென்முலையார் தடந்தோள் புணரின்ப வெள்ளத்து
ஆழ்ந்தேன் அரு நரகத்து அழுந்தும் பயன் படைத்தேன்
போந்தேன் புண்ணியனே உன்னை எய்த்து என் தீ வினைகள்
தீர்ந்தேன் நின்னடைந்தேன் திருவிண்ணகரானே –6-3-4 | பதவுரை Show / Hideசாந்து ஏந்தும் மெல் முலையார், Santhu Aenthum Mel Mulaiyaar - குங்கும மணிந்த மெல்லிய முலைகளையுடையரான மாதர்களது (- (திரு விண்ணகரானே!- ;)) தடம் தோள், Thadam Thol - பருத்த தோள்களை புணர் இன்பம் வெள்ளத்து, Punar Inbam Vellaththu - அணைவதனாலுண்டாகும் இன்பசாகரத்தில் ஆழ்ந்தேன், Aazhnthen - (கீழ் நாட்களில்) மூழ்கிக்கிடந்தேன்; (அதனால்) அரு நரகத்து அழுந்தும் பயன் படைத்தேன், Aru Narakaththu Azhundhum Payan Padaiththen - கொடிய ஸம்ஸாரநரகத்தில் அழுந்திக்கிடப்பதாகிற பலனைப் பெற்றேன்; புண்ணியனே, Punniyanne - புண்யமே வடிவெடுத்திருக்கும் பிரானே! போந்தேன் நின் அடைந்தேன், Pondhen Nin Adaindhen - (உன் திருவடிவாரத்திலே) வந்து சேர்ந்தவனாய் உன்னையடைந்தேன்; உன்னை எய்தி, Unnai Eydhi - உன்னைக் கிட்டி என் தீ வினைகள் தீர்ந்தேன், En Thee Vinaigal Theerndhen - எனது கொடும்பாவங்கள் தொலையப்பெற்றேன். |
| 1472 | பெரிய திருமொழி || (6-3–துறப்பேன்) (திருவிண்ணகர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பெரு மிடுக்கனான ராவணனை அழியச் செய்த வருத்தம் உண்டோ என்னுடைய பிரதிபந்தகங்களைப் போக்கி சேர விட்டுக் கொள்ளுகைக்கு –எனக்காக வந்து நிற்கிற இடம் ஸ்ரீ திருவிண்ணகர் -என்கிறார்) 5 | மற்றோர் தெய்வம் எண்ணேன் உன்னை என் மனத்து வைத்துப்
பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை எம்பெருமான்
வற்றா நீள் கடல் சூழ் இலங்கை ராவணனைச்
செற்றாய் கொற்றவனே திருவிண்ணகரானே –6-3-5 | பதவுரை Show / Hideவற்றா நீள் கடல் சூழ், Vatraa Neel Kadal Sooz - ஒருநாளும் வற்றாத பெரியகடலால் சூழப்பட்ட இலங்கை, Ilankai - லங்காபுரியில் இராவணனை, Iravanai - ராவணனை செற்றாய், Settrai - கொன்றொழித்தவனே!, கொற்றவனே, Kotravaney - தேவாதிதேவனே! மற்று ஓர் தெய்வம் எண்ணேன், Mattru Oru Deivam Ennen - வேறொரு தெய்வத்தை நெஞ்சிலும் நினைப்பேனல்லேன்; எம்பெருமான், Emperumaan - ஸ்வாமிந்! உன்னை, Unnai - உன்னை என் மனத்து வைத்து, En Manaththu Vaiththu - எனது நெஞ்சில் இருத்தி பெற்றேன், Petren - ஒரு பேறுபெற்றேன்; பெற்றதுவும், Pettrathuvum - அப்படி நான் பெற்ற பேறாவது பிறவாமை, Piravaamai - இனிப் பிறப்பில்லாமையே. |
| 1473 | பெரிய திருமொழி || (6-3–துறப்பேன்) (திருவிண்ணகர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்படி ஜகதா காரனாய் இருக்கிற உன்னை –-நெஞ்சாலே அசந்நேவ-என்கிறபடியே அசத் கல்பனாய் உரு மாய்ந்து போன நான்இப்போது உஜ்ஜீவிக்கும் படி தேவரை அனுவர்த்தித்தேன் – இவ்வாத்மாவுக்கு நீயே சேஷி-உன்னைக் குறித்து இவ்வாத்ம வஸ்து அத்யந்த சேஷம் -என்கிற முறையாலே – தத்வம் இருந்தபடி அல்லது பிரதிபத்தி பண்ணக் கடவது அல்லாத படியான பின்பு வேறு சிலரை ஆஸ்ரயநீயனாக நினைத்து இரேன் – இப்படி ஸ்ரீ திரு விண்ணகரிலே வந்து சந்நிஹிதனான உன்னை ஒழிய ஸ்ரீ பர தத்வமும் அறியேன்) 6 | மை ஒள் கருங்கடலும் நிலனும் அணி வரையும்
செய்ய சுடர் இரண்டும் இவையாய நின்னை நெஞ்சில்
உய்யும் வகை உணர்ந்தேன் உண்மையால் இனி யாதும் மற்றோர்
தெய்வம் பிறிது அறியேன் திருவிண்ணகரானே –6-3-6 | பதவுரை Show / Hideமை ஒண் கருங்கடலும், Mai On Karungadalum - மை போன்று அழகியதாய்க் கறுத்திருக்கின்ற ஸமுத்ரமும் (- (திரு விண்ணகரானே!- ;)) நிலனும், Nilanum - பூமியும் மணி வரையும், Mani Varaiyum - சிறந்த பர்வதங்களும் செய்ய இரண்டு சுடரும், Seyya Irandu Sudarum - அழகிய சந்த்ர ஸூர்யர்களும் இவை ஆய நின்னை, Ivai Aaya Ninnai - ஆகிய இப்பொருள்களாய் விரிந்துநிற்கிற வுன்னை நெஞ்சில், Nenjil - நெஞ்சினால், உய்யும் வகை, Uyum Vagai - நான் உஜ்ஜீவிக்கும்படி உண்மையால் உணர்ந்தேன், Unmaiyaal Unarnthen - உள்ளபடி தெரிந்து கொண்டேன்! இனி, Ini - இப்படியான பின்பு மற்று, Mattru - இதற்குமேலே பிறிது ஓர் தெய்வம் யாதும் அறியேன், Piridhu Oru Deivam Yaadum Ariyen - எவ்விதமான தேவதாந்தரத்தையும் நினைக்கமாட்டேன். |
| 1474 | பெரிய திருமொழி || (6-3–துறப்பேன்) (திருவிண்ணகர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நான் ஒரு அநந்ய கதி -என்கிறார்-இதர தேவதைகளை வாயாலே பேசேன் –-அவ்வளவே அன்றிக்கே நெஞ்சால் அவற்றுக்கு ஒரு ஆதிக்யம் உண்டாக நினையேன் ஆபாத ப்ரதீதியிலே அவற்றுக்கு ஒரு உத்கர்ஷம் உண்டாய்த் தோற்றிற்று ஆகிலும் அத்தை விச்வசியேன் – சர்வாதிகனாய் இருக்கிற நீ ஸ்ரீ திரு விண்ணகரிலே வந்து சந்நிஹிதன் ஆனாய் நீயே ஆஸ்ரயநீயன் என்று அறிவித்த பின்பு இனி உனக்கு விபூதி பூதரானார் பக்கல் பரத்வ பிரதிபத்தி பண்ணேன்) 7 | வேறே கூறுவது உண்டு அடியேன் விரித்து உரைக்கு
மாறே நீ பணியா தடை நின் திரு மனத்து
கூறேன் நெஞ்சு தன்னால் குணம் கொண்டு மற்றோர் தெய்வம்
தேறேன் உன்னை அல்லால் திருவிண்ணகரானே –6-3-7 | பதவுரை Show / Hideவேறே, Veerae - விலக்ஷணமாக (- (திரு விண்ணகரானே!- ;) (அடியேன்-;)) கூறுவது உண்டு, Koora Vudhu Undu - விண்ணப்பஞ் செய்வதொரு வார்த்தையுண்டு; விரித்து உரைக்கும் ஆறே நீ பணியாது, Virithu Uraikkum Aarae Nee Paniyadhu - (நான்) விரிவாகக்கேட்க வேண்டும்படி நியமியாமல் நின் திருமனத்து, Nin Thirumanaththu - உன் திருவுள்ளத்தில் அடை, Aadai - ஸாரமாகக் கொண்டருள வேணும்; உன்னை அல்லால், Unnai Allaal - உன்னையொழிய மற்று ஓர் தெய்வம், Mattru Oor Deivam - வேறொரு தெய்வத்தை கூறேன், Kooraen - வாய்விட்டுச் சொல்லமாட்டேன்; குணம் கொண்டு, Gunam Kondu - (அவர்களிடத்தில்) குணவிசேஷத்தைக் கண்டாகிலும் நெஞ்சு தன்னால், Nenju Thannal - நெஞ்சினால் தேறேன், Theeraen - (அவர்களை ஆச்ரயணீயராக) விச்வஸிக்கமாட்டேன். |
| 1475 | பெரிய திருமொழி || (6-3–துறப்பேன்) (திருவிண்ணகர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சம்சாரத்திலே இருந்து ஜீவித்து முடிந்து போவாரை மநோ ரதியாதே-தேவர் பக்கலிலே ஸ்நேஹித்து அவதானத்தைப் பண்ணி-அநவரதம் மநோ ரதிக்கும் படியான தெளிவை உடைய எனக்கு புநராவ்ருத்தி இல்லாத மோஷத்தை தரப் பார்த்தது என்று அத்தைத் தருகைகாக வந்து நிற்கிற நீ) 8 | முளிந்தீய்ந்த வெம் கடத்து மூரிப் பெரும் களிற்றால்
விளிந்தீய்ந்த மா மரம் போல் வீழ்ந்தாரை நினையாதே
அளிந்தோர்ந்த சிந்தை நின் பால் அடியேற்கு வானுலகம்
தெளிந்தே என்று எய்துவது திரு விண்ணகரானே –6-3-8 | பதவுரை Show / Hideமுளிந்து தீந்த, Mulinthu Theentha - உலர்ந்து தீஞ்சுபோன (- (திரு விண்ணகரானே!- ;)) வெம் கடத்து, Vem Kadathu - வெவ்விய பாலைநிலத்திலே மூரிப் பெருங்களிற்றால், Mooraip Perungkalittraal - வலிய பெரிய யானையினால் விளிந்து, Vilinthu - தள்ளப்பட்டு தீந்து, Theinthu - கெட்டுப்போன மா மரம் போல் வீழ்ந்தாரை, Maa Maram Pol Veelndhaarai - பெரியமரங்கள் போல் தொலைந்து போனவர்களை நினையாதே, Ninaiyaadhe - நினையாமல் நின்பால், Ninpaal - உன்னிடத்தில் அளிந்து ஓர்ந்த சிந்தை அடியேற்கு, Alinthu Oorntha Sindhai Adiyeerkku - கனிந்து தெளிந்த மனமுடையேனான எனக்கு தெளிந்து, Thelinthu - இந்த ஸம்ஸாரக் கலக்கங்கள் நீங்கி வான் உலகம் எய்துவது என்று, Vaan Ulagam Eydhuvathu Endru - பரமபதம் அடையும் நாள் எதுவோ? |
| 1476 | பெரிய திருமொழி || (6-3–துறப்பேன்) (திருவிண்ணகர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீயபதியான உன் திருவடிகளிலே நித்ய கைங்கர்யத்திலே அந்வயிக்கும் படியான வைலஷண்யத்தை உடைய என்னை- எனக்கு அதி தூரத்திலே வர்த்திக்கிற கர்மங்கள் என்னை நெருக்காத படி நீ அங்கீ கரித்து அருள வேணும்- நம்பீ-ஸ்ரீ லஷ்மீ சம்பந்தமும் மிகையாம் படி அன்றோ தேவரீர் உடைய பூர்த்தி – தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல் என் அடியார் அது செய்யார் -என்று அவளோடு மன்றாடும்படியான கல்யாண குணங்களாலே பூர்ணன் அன்றோ) 9 | சொல்லாய் திரு மார்பா உனக்காகித் தொண்டு பட்ட
நல்லேனை வினைகள் நலியாமை நம்பு நம்பீ
மல்லா குடமாடி மதுசூதனே யுலகில்
செல்லா நல்லிசையாய் திருவிண்ணகரானே –6-3-9 | பதவுரை Show / Hideமல்லா, Malla - மிடுக்குடையவனே! (- (திரு விண்ணகரானே!)) குடம் ஆடீ, Kudam Aadi - குடக்கூத்தாடினவனே! மதுசூதனே, Madhusoodhane - மதுவென்னும் அசுரனைக் கொன்றவனே! உலகில் செல்லா, Ulavil Chella - லோகத்தில் நடையாடாத (அபூர்வமான) நல் இசையாய், Nal Isaiyai - நல்ல கீர்த்தியை யுடையவனே!. நம்பீ, Nambi - பரிபூர்ணனே!, திருமார்பா, Thirumaarpaa - பிராட்டியை மார்வில் உடையவனே! சொல்லாய், Sollaai - அடியேனுக்கு மறுமொழி கூறியருளவேணும்; உனக்கு ஆகி, Unakku Aagi - உன்விஷயத்தில் தொண்டுபட்ட, Thondupatta - அடிமைபூண்ட நல்லேனை, Nalleinai - விலக்ஷணனானவென்னை வினைகள் நலியாமை, Vinaigal Naliyamai - பாவங்கள் தொந்தரவு செய்யாதபடி நம்பு, Nambu - ஆதரித்தருளாய். |
| 1477 | பெரிய திருமொழி || (6-3–துறப்பேன்) (திருவிண்ணகர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஜன்ம வ்ருத்தாதிகள் ஏதேனும் ஒரு படியாக அமையும்-இத்தை அதிகரிக்கைக்கு அடியான ருசியில் கண் அழிவு அற்று இருக்கும் அத்தனையே வேண்டுவது அவர்களுக்கு பகவத் பிராப்தி பிரதிபந்தகங்கள்-போக வேணும் என்று இவர்கள் இரக்க வேண்டா அவை தானே -நமக்கு இவ்விடம் இருப்பல்ல -என்று கால் வாங்கிப் போம்) 10 | தாரார் மலர்க் கமலத் தடம் சூழ்ந்த தண் புறவில்
சீரார் நெடு மறுகில் திரு விண்ணகரானைக்
காரார் புயல் தடக்கைக் கலியன் ஒலி மாலை
ஆரார் இவை வல்லார் அவர்க்கு அல்லல் நில்லாவே –6-3-10 | பதவுரை Show / Hideதார் ஆர் மலர், Thaar Aar Malar - இதழ்மிக்க பூக்களையுடைத்தான கமலம் தடம், Kamalam Thadam - தாமரைத் தடாகங்களினால் சூழ்ந்த, Sozhndha - சூழப்பட்ட தண் புறவின், Than Puravin - குளிர்ந்த தோட்டங்களை யுடையதாய் சீர் ஆர் நெடு மறுகில், Seer Aar Nedum Marugil - செல்வம் மிக்க நீண்ட வீதிகளையுடையதான திரு விண்ணகரானை, Thiru Vinnakaranai - திருவிண்ணகரிலே எழுந்தருளியிருக்கிற அப்பன்விஷயமாக, கார் ஆர் புயல் தடக்கை கலியன், Kaar Aar Puyal Thadakkai Kalyan - காளமேகம் போன்று ஔதார்யத்தையுடைய நீண்ட கைகளையுடையரான திருமங்கையாழ்வார் ஒலி, Oli - அருளிச்செய்த மாலை, Maala - சொல்மாலையாகிய இவை, Ivai - இப்பாசுரங்களை ஆர் ஆர் வல்லார், Ar Ar Vallar - எவரெவர் ஓதுகின்றனரோ, அவர்க்கு, Avarkku - அவரவர்கட்கு அல்லல், Allal - பாவங்கள் நில்லா, Nilla - தங்கமாட்டாமல் ஓடிப்போய்விடும். |