திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 6-6 அம்பரமும் (10 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1498பெரிய திருமொழி || (6-6–அம்பரமும்) (திரு நறையூர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (செம்பியன் கோச் செங்கணான் -அவன் தனக்கு பெயர்-அவனுடைய அகடிதகட நா சாமர்த்தியம் உடன் இந்த வண்டுகள் மகிழம் பூவிலே படிந்த இத்துடன் வாசி அற உத்தேச்யமாய்த்து இருக்கிறது இவருக்கு அவ் ஊரில் உள்ளதாகையாலே) 1
அம்பரமும் பெரு நிலனும் திசைகள் எட்டும் அலை கடலும் குல வரையும் உண்ட கண்டன் கொம்பமரும் வட மரத்தினிலை மேல் பள்ளி கூடினான் திருவடியே கூட கிற்பீர் வம்பவிழும் செண்பகத்தின் வாசம் உண்டு மணி வண்டு வகுளத்தின் மலர் மேல் வைகு செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணிமாடம் சேர்மின்களே –6-6-1
பதவுரை Show / Hide
அம்பரமும், Ambaramum - ஆகாசத்தையும்
பெரு நிலனும், Peru Nilanum - பரந்த பூமியையும்
திசைகள் எட்டும், Thisaigal Ettum - எட்டுத்திக்குகளையும்
அலை கடலும், Alai Kadhalum - அலையெறிகின்ற கடல்களையும்
குலம் வரையும், Kulam Varaiyum - குலபர்வதங்களையும்
உண்ட, Unda - உட்கொண்ட
கண்டன், Kandan - திருக்கழுத்தையுடையவனும்
கொம்பு அமரும், Kombu Amarum - கிளைகள் பொருந்திய
வட மரத்தின், Vada Marathin - ஆலமரத்தினுடைய
இலை மேல், Ilai Mel - தளிரின் மீது
பள்ளி கூடினான், Palli Koodinaan - சயனித்துக்கொண்டவனுமான ஸர்வேச்வரனுடைய
திரு அடியே, Thiru Adiye - திருவடிகளையே
கூட கிற்பீர், Kooda Kirbeer - அடையவேணுமென்றிருப்பவர்களே!,
மணி வண்டு, Mani Vandu - அழகிய வண்டுகள்
வம்பு அவிழும் செண்பகத்தின் வாசம் உண்டு, Vambu Avizhum Senbagathin Vaasam Undu - அப்போதலர்கின்ற செண்பகப் பூவின் பரிமளத்தைப் புஜித்து (பின்பு)
வகுளத்தின் மலர் மேல் வைகு, Vakulathin Malar Mel Vaiku - மகிழம்பூவின் மீது தங்கி யிருக்கப்பெற்றதும்.
செம்பியன் கோ செங்கணான் சேர்ந்த கோயில், Sembiyan Ko Senganaam Serndha Koyil - ‘செம்பியன் கோச்செய்கணான்’ என்னும் சோழராஜன் பணிசெய்யப்பெற்ற கோயிலுமான
திருநறையூர் மணிமாடம், Thirunaraiyoor Manimaadam - திரநறையூரிலுள்ள திவ்ய ஸந்நிதியை
சேர்மின்கள், Serminkal - போய்ச்சேங்கள்.
1499பெரிய திருமொழி || (6-6–அம்பரமும்) (திரு நறையூர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவனுடைய விலாச சேஷ்டிதங்கள் உடன் காவேரியினுடைய ஸ்வைர சஞ்சாரத்தோடே வாசி அற இவருக்கு உத்தேச்யமாய் இருக்கிறது காணும் அங்கு உள்ளது ஆகையாலே) 2
கொழுங்கயலாய் நெடு வெள்ளம் கொண்ட காலம் குலவரையின் மீதோடி யண்டத் தப்பால் எழுந்து இனிது விளையாடும் ஈசன் எந்தை இணை அடிக் கீழ் இனிது இருப்பீர் இன வண்டாலும் உழும் செறுவில் மணி கொணர்ந்து கரை மேல் சிந்தி உலகெல்லாம் சந்தனமும் அகிலும் கொள்ள செழும் பொன்னி வளம் கொடுக்கும் சோழன் சேர்ந்த திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே –6-6-2
பதவுரை Show / Hide
நெடு வெள்ளம் கொண்ட காலம், Nedu Vellam Konda Kaalam - பிரளயப் பெருவெள்ளம் உலகங்களை) ஆக்ரமித்தவொரு சமயத்திலே (- (திருநறையூர் மணி மாடம், சேர்மின்கள்.-))
கொழுகயல் ஆய், Kozhukayal Aayi - பருத்த மத்ஸ்யரூபியாய்க் கொண்டு
குலவரையில் மீது ஓடி, Kulavaraiyil Meedhu Oodi - குவபர்வதங்களின் மேலே போய் ஸஞ்சரித்து
அப்பால், Appaal - அதற்குமேலே
அண்டத்து, Andaththu - அண்டபித்தியளவும்
எழுந்து, Ezhunthu - கிளம்பி (துள்ளி)
இனிது, Inidhu - சுகமாக
விளையாடும், Vilaiyadum - விளையாடின
ஈசன் எந்தை, Eesan Endhai - எம்பெருமானுடைய
இணை அடி கீழ், Inai Adi Keezh - உபயபாதங்களின் கீழ்
இனிது இருப்பீர், Inidhu Iruppir - சுகமாகவாழ விருப்பமுள்ளவர்களே!
இனம் வண்டு ஆலும், Inam Vandu Aalum - கூட்டமாகத் திரண்ட வண்டுகள் நடமாடப் பெற்ற
செழு பொன்னி, Sezhu Ponnni - அழகிய திருக்காவேரியானது
உழும் செறுவின் கரைகொணர்ந்து மேல், Uzhuvum Seruvin Karikondru Mel - உழப்படுகிற கழனிகளின் வரப்புகளின் மீது
மணி சிந்தி, Mani Sindhi - ரத்னங்களைக் கொண்டுவந்து சிதறத் தள்ளியும்
உலகு எல்லாம், Ulaku Ellam - ஸகல ஜனங்களும்
சந்தனமும், Sandhanamum - சந்தனக்கட்டைகளையும்
அகிலும், Akilum - அகிற்கட்டைகளையும்
கொள்ள, Kolla - எடுத்துக்கொள்ளும்படியாக
வளம் கொடுக்கும், Valam Kodukkum - வளங்களைக் கொடுக்குமிடமாய்
சோழன் சேர்ந்த, Chozhan Serndha - சோழராஜன் பணிசெய்யப்பெற்றதான
1500பெரிய திருமொழி || (6-6–அம்பரமும்) (திரு நறையூர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் ஜகதா காரனாய் நிற்கிற நிலையோடு இவன் யுத்தத்தில் பராக்ரமித்ததோடு வாசி அற -இவருக்கு உத்தேச்யமாய் இருக்கிறது காணும் அவ் ஊரை ஆஸ்ரயித்து வந்த சம்பத்து ஆகையாலே) 3
பவ்வ நீருடை யாடையாகச் சுற்றிப் பாரகலம் திருவடியாப் பவனம் மெய்யா செவ்வி மாதிரமெட்டும் தோளா வண்டம் திரு முடியா நின்றான் பால் செல்ல கிற்பீர் கவ்வை மா களிருந்தி விண்ணி ஏற்றிக் கழல் மன்னர் மணி முடி மேல் காகமேறத் தெய்வ வாள் வலங்கொண்ட சோழன் சேர்ந்த திரு நறையூர் மணி மாடம், சேர்மின்களே –6-6-3
பதவுரை Show / Hide
பவ்வம் நீர், Pavvam Neer - கடல் நீரை (- (திருநிறையூர் மணிமாடம் சேர்மின்கள்))
உடை ஆடை ஆகச் சுற்றி, Udai Aadai Aagasuttri - அரையிலுடுத்துக் கொள்ளும் பீதாம்பரமாகச் சுற்றி
பார் அகலம் திரு அடி ஆ, Paar Akalam Thiru Adi Aa - பூமிப் பரப்பையெல்லாம் திருவடியாகக் கொண்டு,
பவளம் மெய் ஆ, Pavalam Mei Aa - வாயுவைத் திருமேனியாகக் கொண்டு
செவ்வி மாதிரம் எட்டும் தோள் ஆ, Sevvi Maadhiram Ettum Thol Aa - அழகிய திசைகளெட்டையும் புஜங்களாகக் கொண்டு
அண்டம் திருமுடி ஆ, Andam Thirumudi Aa - அண்டப்பித்தியைத் திருவபிஷேகமாகவுங் கொண்டு
நின்றான் பால், Nindraan Paal - நின்ற ஸர்வேச்வரனிடத்திலே
செல்ல நிற்பீர், Sella Nirbeer - சென்று சேர விரும்பியிருக்குமவர்களே!,
கவ்வை, Kavvai - ஆரவாரத்தையுடையனவாய்
மா, Maa - பெரியவையான
களிறு, Kaliru - யானைகளை
உந்தி, Undhi - தள்ளிக்கொண்டு
வெண்ணி, Vennni - வெண்ணியென்னுமிடத்தில்
ஏற்ற, Etra - எதிர்த்து வந்த
கழல் மன்னர், Kazhal Mannar - வீரக்கழலணிந்த அரசர்களினுடைய
மணிமுடிமேல், Manimudimel - சிறந்த தலைகளின் மீது
காகம் ஏற, Kaagam Eera - காக்கைகள் ஏறி ஜீவிக்கும்படி
தெய்வம் வாள் வலம் கொண்ட, Deivam Vaal Valam Konda - திவ்யமான வாட்பட்டையின் வலிவைக் காட்டின
சோழன் –, Chozhan - சோழராஜன்
சேர்ந்த, Serndha - பணிசெய்யப்பெற்ற
1501பெரிய திருமொழி || (6-6–அம்பரமும்) (திரு நறையூர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் ஆஸ்ரித விரோதிகளைப் போக்கினதோடு இவன் யுத்தத்தில் வ்யாபரித்ததோடு வாசி அற உத்தேச்யமாய் இருக்கிறது காணும் இவருக்கு) 4
பைங்கண் ஆள் அரி உருவாய் வெருவ நோக்கிப் பருவரத் தோள் இரணியனைப் பற்றி வாங்கி அங்கை வாள் உகிர் நுதியால் அவனதாகம் அங்குருதி பொங்குவித்தான் அடிக்கீழ் நிற்பீர் வெங்கண் மா களிருந்தி விண்ணி யேற்ற விறல் மன்னர் திறல் அழிய வெம்மா வுய்த்த செங்கணான் கோச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே –6-6-4
பதவுரை Show / Hide
பைங் கண், Paing Kan - பசுமையான திருக்கண்களையுடைய (- (செங்கணான் கோ சோழந்;) (சேர்ந்த கோயில்;) (திருநறையூர் மணிமாடம் சேர்மின்கள்.))
ஆள் அரி உரு ஆய், Aal Ari Uru Aayi - நரஸிம்ஹரூபியாகி
வெருவ நோக்கி, Veruva Nookki - (எதிரிகள்) அஞ்சும்படி விழித்து
வரம் பரு தோள் இரணியனை, Varam Paru Thol Iraniyanai - பெற்ற வரங்களினால் பருத்த புஜங்களையுடையனான இரணியாசுரனை
பற்றி வாங்கி, Patri Vaangi - பிடித்திழுத்து
அம் கை, Am Kai - அழகிய திருக்கைகளிலுள்ள
வாள் உகிர் றுதியால், Vaal Ukir Rudhiyal - ஒளிபொருந்திய நகங்களின் நுனியினால்
அவனது ஆகம், Avanadhu Aagam - அவ்விரணியனுடைய சரீரத்தில் நின்றும்
அம் குருதி பொக்குவித்தான், Am Kuruthi Pokkuviththaan - அழகிய ரத்தத்தை வெள்ளமிடச்செய்த பெருமானுடைய
அடி கீழ் நிற்பீர், Adi Keezh Nirbeer - திருவடிகளின் கீழ் நிற்க விருப்பமுடையவர்களே!,
வெம் கண் மா களிறு உந்தி, Vem Kan Maa Kaliru Undhi - வெவ்விய கண்களை உடைய பெரிய யனைகளைத் தள்ளிக்கொண்டு
வெண்ணி ஏற்ற, Vennni Aetra - வெண்ணியென்னுமிடத்தில் எதிர்த்து வந்த
விறல் மன்னர், Virhal Mannar - சூரர்களான அரசர்கள்
திறல் அழிய, Thiral Azhiya - வலிமாளும்படியாக
வெம் மா உய்த்த, Vem Maa Uyththa - கடுங்குதிரைகளை நடத்தி வெற்றி பெற்றவனான
1502பெரிய திருமொழி || (6-6–அம்பரமும்) (திரு நறையூர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் பூமியை அடைய அளந்து கொண்டத்தோடு இவன் பூமியை அடையத் தானே நெருக்கி ஆண்டத்தோடு வாசி அற உத்தேச்யமாய் இருக்கிறது காணும் இவருக்கு அவனை ஆஸ்ரயித்து வந்த சம்பத்து ஆகையாலே) 5
அன்று உலகம் மூன்றினையும் அளந்து வேறு ஓர் அரி உருவாய் இரணியனதாகம் கீண்டு வென்றவனை விண்ணுலகில் செல யுய்த்தாற்கு விருந்தாவீர் மேல் எழுந்து விலங்கல் பாய்ந்து பொன் சிதறி மணி கொணர்ந்து கரை மேல் சிந்திப் புலம் பரந்து நிலம் பரக்கும் பொன்னி நாடன் தென் தமிழன் வடபுலக் கோன் சோழன் சேர்ந்த திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே –6-6-5
பதவுரை Show / Hide
அன்று, Andru - முன்பொரு காலத்தில் (- (அதற்கு மேலே) (சோழன், சேர்ந்த, திருநறையூர் மணிமாடம் சேர்மின்கள்-))
உலகம் மூன்றினையும், Ulagam Moondrinaiyum - மூவுலகங்களையும்
அளந்து, Alandhu - (திரிவிக்கிரமனாய்) அளந்து கொண்டவனும்
வேறு ஓர் அரி உரு ஆய், Veeru Oru Ari Uru Aay - விலக்ஷ்ணமானவொரு நரஸிம்ஹரூபியாகி
இரணியனது, Iraniyanathu - ஹ்ஹிரண்யாஸுரனுடைய
ஆகம், Aagam - உடலை
கீண்டு, Keendu - இருபிளவாகப் பிளந்து
வென்று, Vendru - வெற்றிபெற்று
அவனை விண் உலகில் செல உய்த்தார்க்கு, Avanai Vin Ulakil Sela Uyththarkku - அவ்விரணியனை வீரஸ்வர்க்கத்திற்குப் போகவிட்டவனுமான ஸர்வேச்வரனுக்கு
விருந்து ஆவீர், Virundhu Aaveer - விருந்தினராக ஆகவேண்டியிருக்குமவர்களே!,
மேல் எழுந்து, Mel Ezhunthu - கிளர்ந்துகொண்டு
விலங்கல் பாய்ந்து, Vilangkal Paayndhu - (இடையே தடையாக நின்ற) மலைகளை உடைத்துக்கொண்டு வந்து
பொன் சிதறி, Pon Sidhari - பொன்களை எங்கும் இறைத்துக்கொண்டு
மணி கொணர்ந்து, Mani Konarnthu - (மற்றும் பல)ரத்னங்களைத் திரட்டிக்கொண்டு வந்து
கரை மேல், Karai Mel - கரைகளின் மீது
சிந்தி, Sindhi - விழவிட்டு
புலம், Pulam - வெளிநிலங்களிலெங்கும்
பரந்து, Parandhu - வியாபித்து(இப்படி)
நிலம் பரக்கும், Nilaam Parakkum - பூமியெங்கும் பரவுகின்ற
பொன்னி, Ponni - திருக்காவேரியையுடைத்தான
நாடன், Naadan - நாட்டுக்குத் தலைவனாய்
தென் தமிழன், Then Tamizhan - தென் திசையிலுள்ள தமிழ்நாட்டுக்கரசனாய்
வடபுலம் கோன் –, Vadapulam Kon - வடநாட்டுக்கும் அரசனான
1503பெரிய திருமொழி || (6-6–அம்பரமும்) (திரு நறையூர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய ஜகதா காரதையோடு இவன் மூன்று ராஜ்யத்தையும் நிர்வஹித்ததோடு வாசி அற உத்தேச்யமாய் இருக்கிறது ஆய்த்து அவ் ஊரை ஆஸ்ரயித்து வந்தது ஆகையாலே) 6
தன்னாலே தன்னுருவம் பயந்த தானாய்த் தயங்கொளி சேர் மூவுலகும் தானாய் வானாய் தன்னாலே தன்னுருவில் மூர்த்தி மூன்றாய் தானாயன் ஆயினான் சரண் என்று உய்வீர் மின்னாடு வேல் ஏந்து விளைந்த வேளை விண் ஏறத் தனி வேல் உய்த்து உலகம் ஆண்ட தென்னாடன் குட கொங்கன் சோழன் சேர்ந்த திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே –6-6-6
பதவுரை Show / Hide
தன்னாலே, Thannale - ஸ்வேச்கையாலே (- (சோழன், சேர்ந்த திருநறையூர் மணிமாடம்) (சோமின்கள்?))
தன் உருவம், Than Uruvam - தனது திவ்யமங்கள விக்ரஹத்தை
பயந்த, Payandha - உண்நுபண்ணிக்கொண்ட
தான் ஆய், Thaan Aay - திவ்யாத்மஸ்வரூபத்தையுடையனாய்
நயங்கு ஒளி சேர் மூஉலகும் தான் ஆய், Nayangku Oli Seer Moolagum Thaan Aay - மிக்க வொளியையுடைய மூவுலங்களையும் தான் என்கிறசொல்லுக்குள்ளே அடக்கிக் கொண்டவனாய்
வான் ஆய், Vaan Aay - பரமபதத்துக்குத் தலைவனாய்
தன்னாலே, Thannale - தன்னுடைய ஸங்கல்பத்தாலே
தன் உருவில், Than Uruvil - தன்ஸ்வரூபத்தில் நின்றும்
மூன்று மூர்த்தி ஆய், Moondru Moorthi Aay - மூன்று மூர்த்திகள வெளியிட்டவனாய்
தான், Thaan - தானே
ஆயன் ஆயினான், Aayan Aayinaan - கோபாலக்ருஷ்ணனமாகத் திருவவதரித்தவனான எம்பெருமான்
சரண் என்று உய்வீர், Saran Endru Uyvheer - சரணம் என்றெண்ணி உஜ்ஜீவிக்க நினைப்பவர்களே!.
மின் ஆடு, Min Aadu - ஒளி பொருந்திய
வேல் ஏந்து, Vel Aendhu - வேற்படையைத்தரித்த
விளந்தை வேளை, Vilanthai Velaik - ‘விளந்தைவேள்’ என்னுமோரரசனை
விண் ஏற, Vin Aera - வீரஸ்வர்க்கமடையும்படி
தனி வேல் உய்த்து, Thani Vel Uythu - ஒப்பற்ற வேற்படையைப் பிரயோகித்து
உலகம் ஆண்ட, Ulagam Aanda - உலகங்களை ஆண்டு வந்த
தென் நாடன், Then Naadan - தென்தேசத்தரசனாய்
குடகொங்கன், Kudakongan - மேற்றிசையிலுள்ள கொங்கு நாட்டுக்குத் தலைவனான
1504பெரிய திருமொழி || (6-6–அம்பரமும்) (திரு நறையூர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பெரிய ஆண் பிள்ளை யானவன் அவ் வாண் பிள்ளை தனத்தை நிர்வஹித்துக் கொடுக்கைக்காக ஆஸ்ரயிக்கிற தேசம்) 7
முலைத்தடத்த நஞ்சுண்டு துஞ்சப் பேய்ச்சி முது துவரைக் குலபதியாக் காலிப் பின்னே இலைத் தடத்த குழலூதி ஆயர் மாதர் இனவளை கொண்டான் அடிக் கீழ் எய்த கிற்பீர் மலைத் தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய வளம் கொடுக்கும் வருபுனலம் பொன்னி நாடன் சிலைத் தடக்கை குலச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே –6-6-7
பதவுரை Show / Hide
பேய்ச்சி, Peychchi - பூதனையானவள் (- (சேர்ந்த, கோயில், திருநறையூர் மணிமாடம்) (சேர்மின்கள்-.))
துஞ்ச, Thunja - மாளும்படியாக
தடமுலை, Tadamulai - (அவளது) பருத்த முலையிலுள்ள
நஞ்சு உண்டு, Nanju Undu - விஷத்தை உட்கொண்டவனும்,
முது துவரை, Muthu Thavarai - பிராசீனமான துவாரகைக்கு
குலபதி ஆய், Kulapathi Aay - தலைவனாய்த் திருவவதரித்து
காலி பின்னே, Kaali Pinne - பசுக்களின் பின்னே
தட, Tada - பெரிய
இலை குழல், Ilai Kuzhal - இலையாலே செய்யப்பட்ட குழலை
ஊதி, Oothi - ஊதிக்கொண்டு போனவனும்,
ஆயர் மாதர், Aayar Maathar - இடைப்பெண்களினுடைய
வளை இனம், Valai Inam - வளைத்திரள்களை
கொண்டான், Kondaan - (விளையாட்டாக) அபஹரித்தவனுமான எம்பெருமானுடைய
அடி கீழ், Adi Keezh - திருவடிகளின் கீழே
எய்த கிற்பீர், Eytha Kirbeer - கி்ட்டி ஆச்ரயிக்க விருப்பமுடையவர்களே!,
மலை தடத்த, Malai Thadatha - மலைப்பிராந்தங்களிலுண்டான
மணி, Mani - ரத்னங்களை
கொணர்ந்து, Konarndhu - திரட்டிக்கொண்டு வந்து
வையம் உய்ய, Vaiyam Uyy - உலகமெல்லாம் உஜ்ஜீவிக்கும்படி
வளம் கொடுக்கும், Valam Kodukkum - மிகுதியாக கொடுக்கின்றதாய்
வரு, Varu - பெருகிவருமதான
புனல், Punal - தீர்த்தத்தையுடைத்தாய்
அம், Am - அழகியதான
பொன்னி, Ponni - திருக்காவேரியையுடைய
நாடன், Naadan - நாட்டுக்குத் தலைவனாய்
சிலை, Silai - வில்லை
தட கை, Tada Kai - பெரிய கையிலுடையவனாய்
குலம் சோழன், Kulam Sozhan - சிறந்தவனான சோழராஜன்
1505பெரிய திருமொழி || (6-6–அம்பரமும்) (திரு நறையூர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ கிருஷ்ணன் இடைப் பெண்கள் உடைய துகில்களையும் வளைகளையும் வாரிக் கொடு வருகிற வரவோடு வாசி அற –உத்தேச்யமாய் இருக்கிற படியை சொல்லிற்று -கீழ்ப் பாட்டில் – இப்பாட்டில் –ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்கு வல்லபனாய் இருக்கும் இருப்போடு ஆஸ்ரித விரோதிகளை அழியச் செய்த செயலோடு வாசி அற உத்தேச்யமாய் இருக்கிற படி சொல்லுகிறது) 8
முருக்கிலங்கு கனித்துவர்வாய் பின்னை கேள்வன் மன்னெல்லாம் முன்னவியச் சென்று வென்றிச் செருக்களத்து திறல் அழியச் செற்ற வேந்தன் சிரம் துணித்தான் திருவடி நும் சென்னி வைப்பீர் இருக்கிலங்கு திரு மொழி வாய் எண் தோள் ஈசற்கு எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட திருக்குலத்து வளச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே –6-6-8
பதவுரை Show / Hide
முருக்கு, Murukku - முருக்கம்பூப்போலவும் (- (சோழன், சேர்ந்த கோயில் திருநறையூர்) (மணிமாடம் சேர்மின்கள்-.))
இலங்கு கனி, Ilangu Kani - விளங்குகின்ற (கோலைப்) பழம்போலவும்
துவர், Thuvar - சிவந்திருக்கிற
வாய், Vaai - அதரத்தையுடையளான
பின்னை, Pinnai - நப்பின்னைப்பிராட்டிக்கு
கேள்வன், Kelvan - நாயகனும்,
முன், Mun - முன்பொருகாலத்தில்
மன் எல்லாம், Man Ellam - க்ஷத்ரியர்களெல்லாரும்
அவிய, Aviy - ஒழியும்படியாக
வென்றி செரு களத்து, Vendri Seru Kalathu - வெற்றி தரவல்ல போர்க்களத்திலே
சென்று, Sendru - போய்
செற்றம் வேந்தன், Settram Vendan - மாற்றரசனான கார்த் வீரியார்ஜுனனுடைய
திறல் அழிய, Thiral Azhiya - மிடுக்கு அழியும்படியாக
சிரம் துணித்தான், Siram Thuniththan - (அவனது) தலையைத் துணித்தவனுமான ஸர்வேச்வரனுடைய
திரு அடி, Thiru Adi - திருவடிகளை
நும் சென்னி வைப்பீர், Num Senni Vaippir - உங்கள் தலைகளிலே அணிந்துகொள்ள விருப்பமுடையவர்களே!
இருக்கு, Irukku - வேதத்தில்
இலங்கு திருமொழி, Ilangu Thirumozhi - சிறந்தவையான புருஷஸூக்தம் முதலிய பாகங்களை
வாய், Vaai - வாயிலே உடையவனாய்
ஏண் தோள், Aen Thol - எட்டு புஜங்களையுடையனான
ஈசற்கு, Eesarku - சிவபிரானுக்கு
எழில், Ezhil - அழகிய
எழுபது மாடம், Ezhupathu Maadam - எழுபது ஆலயங்களை
செய்து, Seithu - நிருமணம் செய்வித்து
உலகம் ஆண்ட, Ulagam Aanda - உலகத்தைப் பரிபாலனம் பண்ணின
திரு குலத்து, Thiru Kulathu - உயர்ந்த குலத்திற் பிறந்தவனாய்
வளம், Valam - செல்வம் மிக்கவனான
1506பெரிய திருமொழி || (6-6–அம்பரமும்) (திரு நறையூர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உபய விபூதியினுடைய ரஷணத்துக்கு தனி மாலை இட்டு இருக்கிறவன் ஜகத் ரஷணத்துக்கு உறுப்பாக கோயிலை வாசஸ் ஸ்தானமாக கொண்டு இருக்கிறவன் – தாமரைப் பூவை இருப்பிடமாக உடையளாய் அத்விதீயமான ஸ்த்ரீத்வத்தை உடைய ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபன் – கேவலம் ப்ரஹ்ம பாவனையேயாய் இருக்கிற ஸ்ரீ சநகாதிகள் யேத்துகையால் வந்த பெருமையை உடையவன் – அனுபவிப்பாருக்கு இழிந்த இடம் எங்கும் துறையாகும் படியாய் இருக்கிற ஆயிரம் திரு நாமங்களை உடையவன் – ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டிக்கு வல்லபன் ஆனவன் பெருமையைக் கேட்க வேண்டி இருப்பீர் நறையூர் மணி மாடம் சேர்மின்களே) 9
தாராளன் தண்ணரங்க வாளன் பூ மேல் தனியாளன் முனியாளர் ஏத்த நின்ற பேராளன் ஆயிரம் பேருடைய வாளன் பின்னைக்கு மணவாளன் பெருமை கேட்பீர் பாராளர் அவரிவர் என்று அழுந்தை ஏற்றப் படைமன்னர் உடல் துணியப் பரிமா வுய்த்த தேராளன் கோச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே –6-6-9
பதவுரை Show / Hide
தார் ஆவன், Thar Aavan - மாலையணிந்துள்ளவனும் (- (கோச்சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர்) (மணிமாடம் சேர்மின்கள்-,))
தண் அரங்கம் ஆவன், Than Arangam Aavan - குளிர்ந்த திருவரங்கமாநகரை ஆள்பவனும்
பூமேல் தனி ஆளன், Poomeel Thani Aalan - தாமரைப்பூவிற் பிறந்து ஒப்பற்றவளான பிராட்டியை ஆள்பவனும்
முனீயாளர் ஏத்த நின்ற பேர் ஆளன், Muniyaalar Aettha Nindra Per Aalan - மஹர்ஷிகள் துதிக்குப்படியாயுள்ள பெருமைவாய்ந்தவனும்
ஆயிரம் பேர் உடைய ஆளன், Aayiram Per Udaiya Aalan - ஸஹஸ்ரநாமங்களை வாசகமாகக் கொண்ட ஸ்வாமியும்
பின்னைக்கு மணவாளன், Pinnaikku Manavaalan - நப்பின்னைப் பிராட்டிக்கு வல்லபனுமான எம்பெருமானுடைய
பெருமை, Perumai - பெருமைகளை
கேட்பீர், Kaetbeer - கேட்கவேண்டியிருக்குவர்களே!,
ஆவர் இவர் என்று பார் ஆளர், Aavar Ivar Endru Paar Aalar - இன்னாரின்னாரென்று ப்ரஸித்தராய்க்கொண்டு பூமியை ஆள்பவராய்
அழுந்தை, Azhundhai - திருவழுந்தூரிலே வந்து
ஏற்ற, Etra - எதிரிட்டவர்களான
படை மன்னர், Padai Mannar - ஆயுதபாணிகளான அரசர்களின்
உடல் துணிய, Udal Thuniya - சரிரங்கள் துணிபடும்படி
பரிமா உய்த்த, Parimaa Uyththa - குதிரைப்படைகளைச் செலுத்தினவனும்
தேர் ஆளன், Ther Aalan - தேர் வீரனுமான
1507பெரிய திருமொழி || (6-6–அம்பரமும்) (திரு நறையூர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (புறம்பே உண்டு உடுத்து போது போக்குகிற சம்சார விபூதியிலே வ்யாவ்ருத்தராய்க் கொண்டு அதிகரிப்பார் யமபடருடைய குரூரமான சப்தம் கேட்டு அஞ்சாதே –மேல் பெரும் பேறு இருந்த படி சொல்லில் – ஸ்ரீ பரம பதத்திலே போய் பதியினில் பாங்கினில் -என்கிறபடியே ஸ்ரீ நித்ய சூரிகள் எதிரே வந்து தந்தாம் இருப்பிடங்களிலே கொண்டு புக்கு உயர வைத்துத் தாங்கள் தாழ விருந்து ஸ்ரீ பாதம் விளக்கி கொண்டாடும்படியான பெருமையை உடையராய் ஆவார்கள்) 10
செம்மொழி வாய் நால்வேத வாணர் வாழும் திரு நறையூர் மணி மாடச் செங்கண் மாலைப் பொய்ம்மொழி யொன்றில்லாத மெய்ம்மையாளன் புலங்கைக் குல வேந்தன் புலமை யார்ந்த அம்மொழி வாய்க் கலிகன்றி யின்பப் பாடல் பாடுவார் வியனுலகில் நமனார் பாடி வெம்மொழி கேட்டு அஞ்சாதே மெய்ம்மை சொல்லில் விண்ணவர்க்கு விருந்தாகும் பெரும் தக்கோரே –6-6-10
பதவுரை Show / Hide
செம் மொழி வாய், Sem Mozhi Vaai - உண்மை யுரைப்பவர்களும்
நால் வேதம் வாணர், Naal Vedham Vaanar - நான்கு வேதங்களையும் அதிகரித்தவர்களுமான ஸ்ரீவைஷ்ணவர்கள்
வாழும், Vazhum - வாழுமிடமான
திருநறையூர், Thirunaraiyoor - திருநறையூரென்னுந் திருப்பதியில்
மணிமாடம், Manimaadam - மணிமாடத்தில் எழுந்தருளியிக்கிற
செம் கண் மாலை, Sem Kan Maalai - புண்டரீகாக்ஷனான ஸர்வேச்வரன் விஷயமாக
பொய் மொழி ஒன்று இல்லாத, Poi Mozhi Ondru Illadha - பொய்யுரைகள் சிறிதும் கலசாத
மெய்ம்மை ஆளன், Meimmai Aalan - ஸத்ய வசனத்தையுடையரும்
புலம் மங்கை குலம், Pulam Mangai Kulam - அழகிய திருமங்கை நாட்டுக்கு
வேந்தன், Vendan - தலைவரும்
புலமை ஆர்ந்த அம் மொழி வாய், Pulamai Aarntha Am Mozhi Vaai - பாண்டித்யம் நிரம்பிய அப்படிப்பட்ட ஸ்ரீஸூதிகளை திருவாயிலே உடையவருமான
கலிகன்றி, Kalikanri - திருமங்கையாழ்வாருடைய
இன்பம் பாடல், Inbam Paadal - ஆநந்தமயமான (இந்தப்) பாசுரங்களை
வியன் உலகில், Viyan Ulagil - இப்பெரியவுலகத்திலே
பாடுவார், Paaduvaar - பாடுமவர்கள்
மெய்ம்மை சொல்லில், Meimmai Sollil - (பெறும்பலனை) உள்ளபடி சொல்லப்புகுந்தால்,
நமனார் பாடி, Namanar Paadi - யமலோகத்திலுண்டாகக்  கூடிய
வெம் மொழி கேட்டு, Vem Mozhi Kettu - கடுஞ்சொற்களைக் கேட்டு அஞ்சாமல்
விண்ணவர்க்கு விருந்து ஆகும் பெருந்தக்கோர், Vinnavarkku Virundhu Aakum Perunthakoor - நித்யஸூரிகள் ஆதரித்துக் கொண்டாடும்படியான பெருமை பொருந்தியவராவர்