திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1518 | பெரிய திருமொழி || (6-8–மான் கொண்ட) (திரு நறையூர் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தேன் மிக்க பர்யந்தத்தை உடைத்தான திரு மலையிலே வந்து நிற்கிறவனை – தாளால் அளந்த போது தப்பினார்க்கும் இழக்க வேண்டாத படி ஸ்ரீ திருமலையிலே வந்து நின்றான் ஆய்த்து- அவன் நாடித் திரிகிற போது வைமுக்க்யம் பண்ணி இறாய்த்து திரிந்த நான் ஸ்ரீ நறையூரில் –அறுகாத பயணம் போய் ஸ்ரீ பரம பதத்தில் காண்கை அன்றிக்கே விடாய்த்த இடத்தில் தண்ணீர் குடிக்கப் பெறுவாரைப் போலே ஸ்ரீ திரு நறையூரிலே காணப் பெற்றேன் – என்கிறார் முதல் பாசுரத்தில்) 1 | மான் கொண்ட தோல் மார்வில் மாணியாய் மாவலி மண்
தான் கொண்டு தாளால் அளந்த பெருமானைத்
தேன் கொண்ட சாரல் திரு வேங்கடத்தானை
நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே –6-8-1 | பதவுரை Show / Hideமான் கொண்ட தோல் மார்வில் மாணி ஆய், Maan Konda Thol Maarvil Maani Aay - கிருஷ்ணாஜினத்தை மார்பிலே தரித்த பிரமசாரியாகி மாவலி, Mavali - மஹாபலி பக்கலில் மண்தான் கொண்டு, Manthaan Kondo - பூமியைத் தான் யாசித்துப்பெற்று தாளால் அளந்த, Thaalal Alandha - திருவடிகளாலே ஆக்ரமித்துக் கொண்ட பெருமானை, Perumaanai - பெருமை பொருந்தியவனும் தேன்கொண்ட சாரல், Then Konda Saaral - தேனையுடைத்தான தாழ்வரைகளையுடைய திருவேங்கடத்தானை, Thiruveengadathaanai - திருமலையில் எழுந்தருளியிருப்பவனுமான எம்பெருமானை நான் நாடி சென்று நறையூரில் கண்டேன், Naan Naadi Senru Naraiyooril Kandein - தேடிக் கொண்டுபோய் திருநறையூரில் ஸேவிக்கப் பெற்றேன். |
| 1519 | பெரிய திருமொழி || (6-8–மான் கொண்ட) (திரு நறையூர் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தேவர்களுக்கு கடல் கடைந்தாப் போலேயும் ஜகத்துக்கு பிரளயத்தைப் பரிகரித்தால் போலேயும் என்னுடைய சம்சார பிரளயத்தை பரிகரிக்கைகாக ஸ்ரீ பிராட்டி யோடும் கூட ஸ்ரீ திரு வாலியிலே நிற்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனை தேவர்களோடு லௌகிகரொடு என்னோடு வாசி அற அபேஷிதம் செய்யும்படி யான ஸ்ரீ சர்வேஸ்வரனை –பிராப்தி உடையவனை) 2 | முந்நீரை முன்னாள் கடைந்தானை மூழ்த்த நாள்
அந்நீரை மீனாய் அமைத்த பெருமானைத்
தென்னாலி மேய திருமாலை யெம்மானை
நன்னீர் வயல் சூழ் நறையூரில் கண்டேனே –6-8-2 | பதவுரை Show / Hideமுன்நாள், Munnal - முன்பொருகாலத்தில் (- (நறையூரில், கண்டேன்-.)) முந்நீரை, Munneerai - ஸமுத்ரத்தை கடைந்தானை, Kadaindhaanai - கடைந்தவனும் மூழ்ந்த நாள், Moozhndha Naal - (உலகத்தைப்) பிரளயங்கொண்ட காலத்தில் மீன் ஆய், Meen Aay - மத்ஸ்ரூபியாகி அந்நீரை, Annneerai - அந்தப் பிரளயக்கடல் நீரை அமைத்த, Amaiththa - அடக்கின பெருமானை, Perumaanai - பெருமை பொருந்தியவனும் தென் ஆலி, Then Aali - அழகிய திருவாலிமா நகரில் மேய, Meya - நி்த்யவாஸம் பண்ணுநின்ற திருமாலை, Thirumalai - திருமகள் நாதனுமான எம்மானை, Emmaanai - எம்பெருமானை நல் நீர் வயல் சூழ், Nal Neer Vayal Soozh - நல்ல நீர்பாயும் கழனிகளாற் சூழப்பட்ட |
| 1520 | பெரிய திருமொழி || (6-8–மான் கொண்ட) (திரு நறையூர் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆனைக்கு இடர் இன்றிக்கே முதலைக்கே இடர் ஆம்படி பண்ணினான் ஆய்த்து – ராஜ புத்ரர்களைப் பிணைத்தால் கைக் கூட்டனுக்கும் பாலும் சோறும் இடக் கடவது காண் -என்று அருளிச் செய்தார் -ஸ்ரீ பட்டர்- ஸ்ரீ பரமபதம் கலவிருக்கையாய் இருக்க என்னுடைய ரஷணத்துக்காக ஸ்ரீ திரு நாவாயிலே வந்து நித்ய வாஸம் பண்ணுகிறவனை- அந்த ஸ்ரீ திரு நாவாய் தான் பரம பதத்தோபாதியாம் படி அடுத்து அணித்தாக ஸ்ரீ திரு நறையூரிலே-காணப் பெற்றேன்) 3 | தூவாய புள்ளூர்ந்து வந்து துறை வேழம்
மூவாமை நல்கி முதலை துணித்தானைத்
தேவாதி தேவனைச் செங்கமலக் கண்ணானை
நாவாயுளானை நறையூரில் கண்டேனே –6-8-3 | பதவுரை Show / Hideதூ வாய புள் ஊர்ந்து, Thoo Vaai Pul Oondru - பரிசுத்தமான வாயையுடைய பெரிய திருவடியை வாஹனமாகக்கொண்டு (- (நறையூரில், கண்டேன்-.)) துறை வந்து, Thurai Vandu - வந்து சேர்ந்து வேழம் மூவாமை நல்கி, Vezham Moovaamai Nalki - ஸ்ரீ கஜேந்திராழ்வான் துன்பமடையாதபடி அருள்புரிந்து முதலை துணித்தானை, Muthalai Thuniththaanai - முதலையை இரு துண்டமாக்கி யொழித்தவனும் தேவாதி தேவனை, Devaadhi Devanai - நித்யஸூரிகளுக்குத் தலைவனும் செம் கமலம் கண்ணானை, Sem Kamalam Kannaanaai - செந்தாமரைப் பூப்போன்ற திருக்கண்களை யுடையனும் நாவாய் உளானை, Naavai Ulaanai - திருநாவாயென்னும் திருப்பதியிலிருப்பவனுமான எம்பெருமானை |
| 1521 | பெரிய திருமொழி || (6-8–மான் கொண்ட) (திரு நறையூர் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஜகத் ரஷணத்துக்காக முடி கவித்து மாலை இட்டுக் கொண்டு இருக்கிறவனை நாள் தோறும் ஸ்ரீ நித்ய சூரிகள் உடைய ஆசையே யாத்ரையாக உடையனாய்க் கொண்டு இங்கே காணப் பெற்றேன்) 4 | ஒடாவரியாய் இரணியனை ஊன் இடந்த
சேடார் பொழில் சூழ் திரு நீர் மலையானை
வாடா மலர்த் துழாய் மாலை முடியானை
நாடோறும் நாடி நறையூரில் கண்டேனே –6-8-4 | பதவுரை Show / Hideஓடா அரி ஆய், Odaa Ari Aay - நாட்டில் நடையாடாத (விலக்ஷணமான) நரஸிம்ஹ ரூபியாகி (- (நறையூரில், கண்டேன்-.)) இரணியன் ஊனை இடந்த, Iraniyan Oonai Idantha - ஹிரண்யா ஸுரனுடைய உடலைக் கிழித்தொழித்தவனும் சேடு ஆர் பொழில் சூழ், Seedu Aar Pozhil Soozh - இளமைபொருந்திய சோலைகளாலே சூழப்பட்ட திருநீர்மலை யானை, Thiruneermalai Yaanai - திருநீர்மலையிலே ஸந்நிதி பண்ணியிருப்பவனும் வாடா மலர் துழாய் மாலை முடியானை, Vaadaa Malar Thuzhai Maalai Mudhiyaanai - செவ்விகுன்றாத மலர்களையுடைய திருத்துழாய் மாலையைத் திருமுடியில் அணிந்தள்ளவனுமான எம்பெருமானை நாள் தோறும் நாடி, Naal Thorum Naadi - நித்தியமும் தேடித்திரிந்து |
| 1522 | பெரிய திருமொழி || (6-8–மான் கொண்ட) (திரு நறையூர் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வருகிற ஸ்ரீ விபீஷணன் புகுரக் கடவன் அல்லன் என்று ஸ்ரீ மகா ராஜர் உள்ளிட்டார் நிரோதிக்க அவனைக் கை கொள்ளுகை தவிரோம் – என்று ஸ்ரீ பெருமாளும் நிர்பந்திக்க ஆகில் கிஷ்கிந்தையில் பரிகரம் இங்கனே விடை கொள்ளுகிறது -என்ன வேணுமாகில் அது செய்கிறது -இது ஒரு படியாலும் தவிரோம் என்று அவன் பக்கலிலே விசேஷித்து சங்கத்தைப் பண்ணினவனை-நான் அவனைத் தேடி ஸ்ரீ நறையூரிலே காணப் பெற்றேன்) 5 | கல்லார் மதிள் சூழ் கடி இலங்கைக் கார் அரக்கன்
வல்லாகம் கீள வரி வெஞ்சரம் துரந்த
வில்லானைச் செல்வ விபீடணற்கு வேறானை
நல்லானை நாடி நறையூரில் கண்டேனே –6-8-5 | பதவுரை Show / Hideகல் ஆர் மதிள் சூழ் கடி, Kal Aar Mathil Soozh Kadi - கற்களால் கட்டப்பட்ட மதிள்களால் சூழப்பட்ட (- (நாடி, நறையூரில் கண்டேன்-.)) இலங்கை கார் அரக்கன், Ilankai Kaar Arakkan - அருணுடைத்தான லங்காபுரியிலுள்ள நீசனான ராக்ஷஸராஜனுடைய வல் ஆகம் கீள, Val Aagam Keela - மிடுக்குடைய சரீரம் தொலையும்படி வரி வெம் சரம் துரந்த, Vari Vem Saram Thurandha - அழகிய வெவ்விய அம்புகளைப் பிரயோகித்த வில்லானை, Villaanai - சார்ங்கத்தை யுடையவனும் செல்வம் விபீடணற்கு, Selvam Vibeedanarku - ஸ்ரீமானான விபீஷணாழ்வானுக்கு வேறுஆக, Veeraga - விலக்ஷணமாக நல்லானை, Nallaanai - அன்பனுமான எம்பெருமானை |
| 1523 | பெரிய திருமொழி || (6-8–மான் கொண்ட) (திரு நறையூர் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தன்னை அணுகினவருக்கு தன் கையிலே சமர்ப்பிக்கலாம் படி விச்வச நீயன் ஆனவன் -– சம்சாரத்தில் இருக்கச் செய்தே அவனை விச்வசித்து பற்றப் பெற்றேன்) 6 | உம்பர் உலகோடு உயிர் எல்லாம் உந்தியில்
வம்பு மலர் மேல் படைத்தானை மாயோனை
அம்பன்ன கண்ணாள் அசோதை தன் சிங்கத்தை
நம்பனை நாடி நறையூரில் கண்டேனே –6-8-6 | பதவுரை Show / Hideஉம்பர் உலகோடு உயிர் எல்லாம், Umbra Ulagodu Uyir Ellam - தேவலோகத்தோடு கூட (மற்றுமுள்ள மநுஷ்யாதி பிராணிகளையும் (- (நாடி, நறையூரில் கண்டேன்-.)) உந்தியில் வம்பு மலர்மேல் படைத்தானை, Undhiyil Vambu Malarmel Padaithaanai - (தனது) திருநாபியிலுள்ள பரிமளம்மிக்க தாமரைப் பூவிலே ஸ்ருஷ்டித்தவனும் மாயோனை, Maayoni - ஆச்சரியமான குணசேஷ்டிதங்களை யுடையவனும் அம்பு அன்ன கண்ணாள், Ambu Anna Kannaal - அம்புபோன்ற கண்களை யுடையவளான அசோதை தன், Asothai Than - யசோதைப்பிராட்டியின் சிங்கத்தை, Singaththai - சிங்கக்குட்டி போன்ற பிள்ளையும் நம்பனை, Nambanai - ஆச்ரிதர்களுக்கு நம்பத்தகுந்தவனுமான எம்பெருமானை |
| 1524 | பெரிய திருமொழி || (6-8–மான் கொண்ட) (திரு நறையூர் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தன் புழக் கடையிலே ஒரு குப்பை மேனியைப் பிடுங்கினான் என்று வஜ்ரத்தை கொண்டு தொடருவதே -என்று ஸ்ரீ பிள்ளை அமுதனார் பணிக்கும் படி) 7 | கட்டேறு நீள் சோலைக் காண்டவத்தைத் தீ மூட்டி
விட்டானை மெய்யமர்ந்த பெருமானை
மட்டேறு கற்பகத்தை மாதர்க்காய் வண்டு வரை
நட்டானை நாடி நறையூரில் கண்டேனே –6-8-7 | பதவுரை Show / Hideகட்டு ஏறு நீள் சோலை, Kattu Aeru Neel Solai - காவல் மிக்கிருப்பதும் நீண்ட சோலைகளையுடையதுமான (- (நாடி, நறையூரில் கண்டேன்-.)) காண்டவத்தை தீ மூட்டி விட்டானை, Kaandavaththai Thee Mootti Vittanai - காண்டவமென்னும் வனத்தை அக்நிக்கு இரையாக்கினவனும் மெய்யம் அமர்ந்த பெருமானை, Meyyam Amarntha Perumaanai - திருமெய்யத்தில் நித்யவாஸம் பண்ணுகிற ஸ்வாமியும் மட்டு ஏறு கற்பகத்தை, Mattu Aeru Karppagaththai - தேன் மிகுந்த கல்பவிருக்ஷத்தை மாதர்க்கு ஆய், Maatharkku Aayi - (ஸத்யபாமைப்) பிராட்டிக்கா வண் துவரை நட்டானை, Van Thavarai Nattaanai - (கொணர்ந்து) ஸ்தாபித்தவனுமான எம்பெருமானை |
| 1525 | பெரிய திருமொழி || (6-8–மான் கொண்ட) (திரு நறையூர் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ அர்ஜுனன் உடைய தேரை நடத்தினவனை – ஆசை உடையேனாய்க் கிட்டி – அவ்வாசைக்கு அனுரூபமாக ஸ்ரீ திரு நறையூரிலே காணப் பெற்றேன்) 8 | மண்ணின் மீ பாரம் கெடுப்பான் மற மன்னர்
பண்ணின் மேல் வந்த படை எல்லாம் பாரதத்து
விண்ணின் மீதேற விசயன் தேரூர்ந்தானை
நண்ணி நான் நாடி நறையூரில் கண்டேனே –6-8-8 | பதவுரை Show / Hideமண்ணின் மீ பாரம், Mannin Mee Paaram - பூமியின் மீது உண்டான சுமைகளை (- (நறையூரில், கண்டேன்-.)) கெடுப்பான், Keduppaan - தொலைப்பதற்காகவும் மறம் மன்னர், Maram Mannar - மாற்றரசர்களது பண்ணின் மேல் வந்த படை எல்லாம், Pannin Mel Vandha Padai Ellam - ஒழுங்காக எதிர்த்து வந்த எல்லாச் சேனைகளும் விண்ணின் மீது ஏற ஸ்ரீ, Vinnin Meedhu Aera Sri - வீரஸ்வர்க்கம் போய்ச் சேரும்படியாகவும் பாரத்ந்து, Bharathndhu - பாரதப்போரில் விசயன் தேர் ஊர்ந்தானை, Visayan Ther Oornthaanai - அர்ஜுனனுடைய தேரை நடத்தினவனை நான் நண்ணிநாடி, Naan Nanninaadi - நான் ஆசைப்பட்டுத்தேடி |
| 1526 | பெரிய திருமொழி || (6-8–மான் கொண்ட) (திரு நறையூர் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அழகிய திருத் தோள்களை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரன் – ஸ்ரீ ஆழ்வார்களை ஒழியவே வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும் படி யாய்த்து திருத் தோள்கள் அழகு இருக்கும் படி – ஆபரணத்துக்கும் ஆபரணம் போலே –ஸ்ரீ பரம பதத்தில் இருப்பு ஸ்ரீ நித்ய சூரிகளுக்காய் இருக்குமா போலே நமக்கு ஸ்வாமி ஆனவனை-நமக்காக வந்து நிற்கிற ஸ்ரீ திரு நறையூரிலே காணப் பெற்றேன்) 9 | பொங்கேறு நீள் சோதிப் பொன்னாழி தன்னோடும்
சங்கேறு கோலத் தடக்கை பெருமானைக்
கொங்கேறு சோலைக் குடந்தை கிடந்தானை
நங்கோனை நாடி நறையூரில் கண்டேனே –6-8-9 | பதவுரை Show / Hideபொங்கு ஏறு, Pongu Aeru - மேன்மேலும் அதிசயித்து வருகிற (- (நாடி, நறையூரில் கண்டேன்-.)) நீள் சோதி, Neel Sothi - அளவற்ற தேஜஸ்ஸையுடைய பொன் ஆழி தன்னோடும், Pon Aazhi Thannodum - அழகிய திருவாழி யாழ்வானும் சங்கு ஏறு கோலம் தட, Sangu Aeru Kolam Thada - ஸ்ரீ பாஞ்சஜந்யாழ்வானும் குடிகொண்டிருக்கப்பெற்ற அழகிய கை, Kai - திருக்கைகளையுடைய பெருமானை, Perumaanai - பெருமை பொருந்தியவனும் கொங்குஏறு சோலை, Konguearu Solai - தேன் மிகுந்திருக்கிற பொழில்களையுடைய குடந்தை, Kudanthai - திருக்குடந்தையில் கிடந்தானை, Kidandhanai - பள்ளிகொண்டிருப்பவனுமான நம் கோனை, Nam Konai - நம்பெருமானை |
| 1527 | பெரிய திருமொழி || (6-8–மான் கொண்ட) (திரு நறையூர் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ மதுரையில் காட்டிலும் மிக்க நன்மை உடைத்தான ஸ்ரீ திரு நறையூரிலே நிற்கிற கல்யாண குண பூர்ணனை – ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் ஒலி உடைத்தாம் படி அருளிச் செய்த தமிழ்த் தொடை வல்லவர்கள் ஸ்ரீ பரம பதத்தில் அங்கு உள்ள ஸ்ரீ நித்ய சூரிகளுக்கு தைவங்கள் ஆவார்கள் வைகுந்தன் தமர் எமர் -என்று இறே அவர்கள் சொல்லுவது –அவர்களுக்கு ஆஸ்ரயநீயர் ஆவார்கள்) 10 | மன்னு மதுரை வசுதேவர் வாழ் முதலை
நன்னறையூர் நின்ற நம்பியை வம்பவிழ் தார்க்
கன்னவிலும் தோளான் கலியன் ஒலிவல்லார்
பொன்னுலகில் வானவர்க்குப் புத்தேளி ராகுவரே –6-8-10 | பதவுரை Show / Hideமன்னு, Mannu - (பகவத்ஸம்பந்தம் ஒரு நாளும் மாறாமல்) நித்யமாயிருக்கிற (- (நல் நறையூர் நின்ற நம்பியை-;)) மதுரை, Madurai - வடமதுரையில் வசுதேவர் வாழ் முதலை, Vasudevar Vazh Mudhalai - வசுதேவருடைய வாழ்வுக்கு மூலகந்தமாக வந்து பிறந்தவனான வம்பு அவிழ் தார், Vambu Avizh Thar - பரிமளம் விளங்குகின்ற மாலையையுடையராய் கல் நவிலும் தோளான், Kal Navilum Tholan - மலையென்று சொல்லத் தகுந்த புஜங்களை யுடையரான கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார் ஒலி, Oli - அருளிச்செய்த இத்திரு மொழியை வல்லார், Vallaar - ஓதவல்லவர்கள் பொன் உலகில், Pon Ulagil - பரமபதத்திற்சென்று வானவர்க்கு, Vaanavarkku - அங்குள்ள நித்யஸூரிகளுக்கு புத்தேளிர் ஆகுவர், Puttelir Aaghuvar - பூஜ்யராகப் பெறுவர். |