திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 7-1 கறவா மடநாகு (10 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1548பெரிய திருமொழி || (7-1–கறவா மடநாகு) (திரு நறையூர் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அனுபவ விரோதியான சம்சார சம்பந்தத்தை கழித்து அருள வேணும் -என்கிறார்) 1
கறவா மட நாகு தன் கன்றுள்ளினால் போல் மறவாது அடியேன் உன்னையே அழைக்கின்றேன் நறவார் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பி பிறவாமை என்னைப் பணி எந்தை பிரானே –7-1-1
பதவுரை Show / Hide
நறவு ஆர் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பி, Naravu Ar Pozhil Soozh Naraiyur Nindra Nambi - தேன்மிக்க சோலைகளால் சூழப்பட்ட திருநறையூரில் நித்யவாஸம் பண்ணுகிற ஸ்வாமிந்!, (- (அது தன்னுடைய கன்றானது))
கறவா மடநாகு, Karavaa Madaanagu - பால்சுரவாத இளம்பசுவை
தன் கன்று உள்ளினால் போல், Than Kankru Ullinaal Pol - நினைத்துக் கத்துமாபோலே
அடியேன், Adiyen - அடியேன்
மறவாது, Maravaadhu - ஓயாமல்
உன்னையே அழைக்கின்றேன், Unnaiye Azhaiykinren - உன்னையே சொல்லிக் கூப்பிடா நின்றேன்;
எந்தை பிரானே, Endhai Pirane - எனக்குத் தந்தையான பெருமானே!
எனை, Enai - என்னை
பிறவாமை, Piravaamai - (இனி ஸம்ஸாரத்தில்) பிறவாதபடி
பணி, Pani - செய்தருளாய்.
1549பெரிய திருமொழி || (7-1–கறவா மடநாகு) (திரு நறையூர் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இது தான் மிகை அன்றோ –பிரளயம் கொண்ட பூமியை நீ எடுத்தது ஆர் கூப்பிட – நீ அறிந்த ஆபத்தும் விலக்காமையும் அன்றோ வேண்டுவது உனக்கு ரஷிக்கைக்கு – பிரளயம் கொண்ட பூமி ஆழ்ந்த இத்தனை அல்லது என்னை எடுக்க வேண்டும் -என்றதோ) 2
வற்றா முதுநீரொடு மால்வரை ஏழும் துற்றாக முன் துற்றிய தொல் புகழானே அற்றேன் அடியேன் உன்னையே அழைக்கின்றேன் பெற்றேன் அருள் தந்திடும் எந்தை பிரானே –7-1-2
பதவுரை Show / Hide
வற்றா முத நீரொடு, Vatraa Muda Neerodu - ஒருகாலும் வடியாத கடல்களையும் (- (அருள் தந்திடு கிருபைசெய்தருளவேணும்.))
மால்வரை ஏழும், Maalvarai Ezhum - பெரிய குலபர்வதங்களேழையும்
முன், Mun - முன்பொருகால்
துற்று ஆக துற்றிய, Thuttru Aaga Thuttriya - ஒரு கபளமாக வாரி விழுங்கின
தொல் புகழோனே, Thol Pugazhone - சாச்வதமான கீர்த்தியையுடையவனே!
அற்றேன் அடியேன், Attren Adiyen - உனக்கே உரியேனாய்த தீர்ந்திருக்கிற அடியேன்
உன்னையே அழைக்கின்றேன், Unnaiye Azhaiykinren - உன்னையே சொல்லிக் கூப்பிடுகின்றேன்;
பெற்றேன், Pettren - இப்படி உன்னையே அழைக்கும்படியான பாக்யத்தைப் பெற்றேன்;
1550பெரிய திருமொழி || (7-1–கறவா மடநாகு) (திரு நறையூர் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ சௌபரி பல வடிவு கொண்டால் போலே அநேக வடிவம் கொண்டு அவ்வோ இடங்கள் தோறும் இனி இதுக்கு அவ்வருகு இல்லை என்னும்படி வர்த்தியா நின்றான் – ஸ்ரீ திருப் பாற் கடலில் கிடந்ததும்-ஸ்ரீ திரு மலையில் நின்றதும்-ஸ்ரீ திருக் கோட்டியூரிலே வந்ததும் தமக்காக -என்று அறிந்த ஹர்ஷம் -அதுவே பருகிக் களிக்கின்றேன் -என்கிறார்) 3
தாரேன் பிறர்க்கு உன் அருள் என்னிடை வைத்தாய் ஆரேன் அதுவே பருகிக் களிக்கின்றேன் காரேய் கடலே மலையே திருக் கோட்டி ஊரே உகந்தாயை உகந்தேன் அடியேனே –7-1-3
பதவுரை Show / Hide
உன் அருள் என்னிடை வைத்தாய், Un Arul Ennidai Vaiththai - (இனி இவ்வருளை) உனது திருவருளை அடியேன் பக்கலிலே நிலை நிறுத்தினாய், (- (திருநறையூர்ப் பெருமானே!))
பிறர்க்கு, Pirarkku - வேறொருவர்க்கும்
தாரேன், Thaaren - விட்டுக்கொடுக்கக் கடவேனல்லேன்;
கார் ஏய் கடலே, Kaar Aey Kadale - மேகங்கள் படியப்பெற்ற திருப்பாற்கடலையும்
மலையே, Malaiye - திருமலையையும்
திருக் கோட்டியூரே, Thiruk Kottiyure - திருக்கோட்டியூரையும்
உகந்தாயை, Uganthayai - திருவுள்ள முவந்து இருப்பிடமாகக் கொண்டிருக்கிறவுன்னை
அடியேன் உகந்து, Adiyen Uganthu - அடியேன் விரும்பி
ஆரேன், Aren - பர்யாப்தி பெறாதவனாகி
அதுவே பருகி களிக்கின்றேன், Adhuve Parugi Kalikkindren - அவ்வருளையே அனுபவித்து ஸந்தோஷப்படுகின்றேன்
1551பெரிய திருமொழி || (7-1–கறவா மடநாகு) (திரு நறையூர் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆஸ்ரித விரோதியை ஆளிட்டு அந்தி தொழாதே-தானே கை தொட்டுப் போக்கினான் என்னும் சுத்தியை உடையனாய் இருக்கிறபடி) 4
புள் வாய் பிளந்த புனிதா என்று அழைக்க உள்ளே நின்று என்னுள்ளம் குளிரும் ஒருவா கள்வா கடல் மல்லைக் கிடந்த கரும்பே வள்ளால் உன்னை எங்கனம் நான் மறக்கேனே –7-1-4
பதவுரை Show / Hide
புள் வாய் பிளந்த, Pul Vaai Pilantha - பகாஸுரனுடைய வாயைக் கிழித்தெறிந்த
புனிதா, Punithaa - பரமபவித்திரனே!
என்று அழைக்க, Endru Azhaikka - என்று நான் கூப்பிட்ட வளவிலே
உள்ளே நின்று, Ullae Nindru - என்னுள்ளே பொருந்தி
என் உள்ளம் குளிரும் ஒருவா, En Ullam Kulirum Oruvaa - என் மனத்தில் தாபந்தணிக்க வல்ல அத்விதீயனே!
கள்வா, Kalvaa - ஒருவருமறியாமல் பெருநன்றிகள் செய்பவனே!
கடல்மல்லை கிடந்த கரும்பே, Kadalmallai Kidandha Karumbee - திருக்கடன் மல்லையில் பள்ளிகொண்டிருக்கிற பரமபோக்யனே!
வள்ளால், Vallal - உதாரனே!
உன்னை, Unnai - இப்படிப்பட்டவுன்னை
நான் எங்ஙனம் மறக்கேன், Naan Engganam Marakken - நான் எப்படிமறப்பேன்? (ஒருநாளும் மறவேன்.)
1552பெரிய திருமொழி || (7-1–கறவா மடநாகு) (திரு நறையூர் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நர நாரணனே –ஸ்த நந்தய பிரஜைகாகா தாய் குடி நீரை குடிக்குமா போலே இவர்களுக்காகா தபஸ் ஸூ பண்ணுமவனே- எங்கள் நம்பி-குறைவாளரான எங்கள் குறையை நிரப்புகைக்கு ஈடான பௌஷ்கல்யத்தை உடையவனே – உன்னுடைய கைங்கர்யத்துக்கு நானே விரோதிகளை நானே போக்கித் தருகிறேன்-அஞ்சாதே கொள் -என்று மாஸூச என்றாப் போலே ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேணும் – சர்வ பூதேப்ய அபயம் ததாமி -என்றாப் போலே இருப்பதொரு வார்த்தை அருளிச் செய்ய வேணும்) 5
வில்லேர் நுதல் வேல் நெடுங்கண்ணியும் நீயும் கல்லார் கடுங்கானம் திரிந்த களிறே நல்லாய் நர நாரணனே எங்கள் நம்பி சொல்லாய் யுன்னை யான் வணங்கித் தொழுமாறே –7-1-5
பதவுரை Show / Hide
வில் ஏர் நுதல், Vil Aer Nuthal - வில்போன்ற நெற்றியையும்
வேல் நெடு கண்ணியும், Veel Nedu Kanniyum - வேல்போன்று நீண்ட கண்களையுமுடையளான பிராட்டியும்
நீயும், Neeyum - நீயுமாக
கல் ஆர் கடு கானம், Kal Ar Kadu Kaanam - கற்கள் நிறைந்த கொடிய காட்டிலே
திரிந்த, Thirindha - ஸஞ்சரித்
களிறே, Kalire - மதயானைபோன்றவனே!,
நல்லாய், Nallai - ஆச்ரிதவத்ஸலனே!
நரநாராயணனே, Naranarayanane - நரநாராயணவதாரம் செய்தருளினவனே!
எங்கள் நம்பீ, Engal Nambi - எங்கள் குறைதீர்க்கவல்ல பரிபூர்ணனே!
உன்னை யான் வணங்கி தொழும் ஆறு, Unnai Yaan Vanangi Thozhum Aaru - அப்படிப்பட்டவுன்னை அடியேன் திருவடிகளிலே விழுந்து ஸேவிக்கும் முறைமையை
சொல்லாய், Sollaai - அருளிச் செய்யவேணும்.
1553பெரிய திருமொழி || (7-1–கறவா மடநாகு) (திரு நறையூர் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தேவர்கள் பருகும் அமிர்தம் போல் அன்றிக்கே கைங்கர்ய ருசி உடையராய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் பருகும் அம்ருதமாய் – அப்போதே எடுத்து நுகரலாம் படி கனி போலே இருக்கிறவனே – காணப் பெறாமையாலே அசந்நேவ-என்கிறபடியே உரு மாய்ந்த நான் கண்டு உஜ்ஜீவிக்கப் பெற்றேன்) 6
பனியேய் பரங்குன்றின் பவளத் திரளே முனியே திரு மூழிக் களத்து விளக்கே இனியாய தொண்டரோம் பருகு இன்னமுதாய கனியே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே –7-1-6
பதவுரை Show / Hide
பனி ஏய், Pani Aey - பனிமிக்கிருந்துள்ள
பரம் குன்றின், Param Kunrin - சிறந்த ஹிமவத்பர்வதத்திலுள்ள திருப்பிரிதியி லெழுந்தருளியிருக்கிற
பவளம் திரளே, Pavalam Thirale - பவளங்கள் திரண்டாற்போன்று அழகியவனே!
முனியே, Muniye - (அடியாருடைய நன்மைகளைச்) சிந்திக்குமவனே!
திருமூழிக் களத்து, Thirumoazhik Kalathu - திருமூழிக்களமென்னுந் திருப்பதியில்
விளக்கே, Vilakke - விளக்குப்போல் விளங்குமவனே
இனியாய், Iniyaai - பரமபோக்யனே!
தொண்டரோம் பருகு, Thondarom Parugu - தொண்டரான அடியோங்கள் பானம பண்ணுதற்கு உரிய
இன் அமுது ஆய, In Amuthu Aaya - இனிய அமுதமானவனே!
கனியே, Kaniye - கனிபோன்றவனே!
உன்னை கண்டு கொண்டு, Unnai Kandu Kondo - உன்னை ஸேவித்து
உய்ந்தொழிந்தேன், Uyndhozhindhen - உஜ்ஜீவிக்கப் பெற்றேன்
1554பெரிய திருமொழி || (7-1–கறவா மடநாகு) (திரு நறையூர் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (என்னோடு ச கோத்ரிகளாய் தான் உகந்த ஊர் எல்லாம் -என்கிறபடியே உகந்து அருளின நிலங்கள் எல்லாம் புக்கு அனுபவிக்கும் அவர்களுக்கு பிராப்யனாய் உள்ளவனே – நீ உகந்து அருளின நிலங்களிலே வந்து சந்நிஹிதன் ஆகையாலே உன்னைக் கண்டு கொண்டு உஜ்ஜீவிக்கப் பெற்றேன்) 7
கதியேல் இல்லை நின் அருள் அல்லது எனக்கு நிதியே திரு நீர் மலை நித்திலத்தொத்தே பதியே பரவித் தொழும் தொண்டர் தமக்குக் கதியே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே –7-1-7
பதவுரை Show / Hide
நிதியே, Nithiye - நிதிபோன்றவனே! (- (உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேன்,-))
திருநீர்மலை, Thiruneermalai - திருநீர்மலையி லெழுந்தருளியிருக்கிற
நித்திலம் தொத்தே, Niththilam Thoththae - முத்துமாலைபோன்றவனே!
எனக்கு, Enakku - அடியேனுக்கு
நின் அருள் அல்லது, Nin Arul Allathu - உன்னுடைய கிருபையைத் தவிர்த்து
கதி இல்லை, Gathi Illai - வேறொருபுகல் இல்லை;
பதியே பரவி தொழும் தொண்டர் தமக்கு கதியே, Pathiye Paravi Thozhum Thondar Thamakku Kathiye - திவ்யதேசங்களையே ஏத்தித்தொழுகின்ற பாகவதர்களுக்குக் கதியானவனே!
1555பெரிய திருமொழி || (7-1–கறவா மடநாகு) (திரு நறையூர் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிறர் என்னை பேசா நின்றார்கள் என்று கை விடலாம்படி இருக்கிறாய் அல்லையே நீ – முத்துப் போலே ஸ்ரமத்தைப் போக்குமவனே –பெரு விலையனான மாணிக்கம் போலே இருக்கிறவனே பலத்தோடு வ்யபசரியாதவனே -முளையாத வித்து -நிஷ்பலம் என்பதால் முளைக்கின்ற வித்தே -என்கிறார் உன்னை எத்தைச் சொல்லி நான் விடுவது) 8
அத்தா அரியே என்று உன்னை அழைக்கப் பித்தா என்று பேசுகின்றார் பிறர் என்னை முத்தே மணி மாணிக்கமே முளைக்கின்ற வித்தே உன்னை எங்கனம் நான் விடுகேனோ –7-1-8
பதவுரை Show / Hide
அத்தா, Aththaa - ஸ்வாமியே!
அரியே, Ariye - (விரோதிவர்க்கங்களை ஹரிக்குமவனே!
என்று, Endru - என்று இப்படிப்பட்ட திருநாமங்களைச் சொல்லி
உன்னை அழைக்க, Unnai Azaikka - நான் உன்னை அழைக்குமளவில்
பிறர், Piraar - அயலார்
என்னை, Ennai - இப்படி அழைக்கிற என்னைநோக்கி
பித்தா என்று பேசுகின்றார், Piththaa Endru Pesugindraar - ‘அடா பித்தனே!’ என்று சொல்லுகிறார்கள்;
முத்தே, Mutthae - முத்துப்போன்றவனே!
மணி மாணிக்கமே, Mani Maanikkame - சிறந்த மாணிக்கம் போன்றவனே!
முளைக்கின்ற வித்தே, Mulaikkindra Viththae - முளைக்கின்ற விதைபோலே பயனளிப்பவனே!
உன்னை, Unnai - இப்படிப்பட்டவுன்னை
நான், Naan - அடியேன்
எங்ஙனம் விடுகேன், Engnganam Vidugae - எவ்விதமாக விட்டொழிவேன்?
1556பெரிய திருமொழி || (7-1–கறவா மடநாகு) (திரு நறையூர் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆபத்து கரை புரண்டால் வரையாதே எல்லாரையும் ஒக்க ரஷிக்கும் ஸ்வபாவன் ஆனவனே – திரைக் கிளர்த்தி உடைய கடல் சூழ்ந்த பூமியை அமுது செய்த திருப் பவளத்தை உடையவனே – இப்படி ஆபத் சகனான உன்னை எங்கனே மறக்கும் படி) 9
தூயாய் சுடர் மா மதி போல் உயிர் க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணா ஆயா வலை நீர் உலகு ஏழும் முன்னுண்ட வாயா உன்னை எங்கனம் நான் மறக்கேனோ –7-1-9
பதவுரை Show / Hide
தூயாய், Thuyyaai - பரிசுத்தனானவனே!
சுடர், Sudar - ஒளிவிடுகின்ற
மா மதி போல், Maa Mathi Pol - பூர்ண சந்திரன் போலே
உயிர்க்கு எல்லாம், Uyirkkum Ellam - ஸகலப்ராணிகளுக்கும்
தாய் ஆய் அளிக்கின்ற, Thaai Aay Alikkindra - தாய்போன்று அருள்புரிகின்ற
தண் தாமரை கண்ணா, Than Thaamarai Kanna - குளிர்ந்த செந்தாமரைப் பூப்போன்ற திருக்கண்களை யுடையவனே!
ஆயா, Aayaa - கோபாலனே!
அலை நீர் உலகு ஏழும், Alai Neer Ulaku Ezhum - அலைகடல் சூழ்ந்த ஸப்த லோகங்களையும்
முன், Mun - முன்னொருகால்
உண்டவாயா, Undavaayaa - அமுது செய்த திருப்பவளத்தை யுடையவனே!
உன்னை, Unnai - இப்படிப்பட்ட வுன்னை
நான் எங்ஙனம் மறக்கேன், Naan Engganam Marakken - நான் எப்படிமறப்பேன்!
1557பெரிய திருமொழி || (7-1–கறவா மடநாகு) (திரு நறையூர் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (என்னைப் போலே நீங்களும் இவ் விஷயத்திலே ருசியை உடையிகோளாய் பாடுவது ஆடுவதாகவே ஸ்ரீ பரம பதம் தன்னடையே சித்திக்கும் படியாம் – அதுக்கு விரோதியான பாபம் தன்னடையே போம்) 10
வண்டார் பொழில் சூழ் நறையூர் நம்பிக்கு என்றும் தொண்டாய் கலியன் ஒலி செய் தமிழ் மாலை தொண்டீர் இவை பாடுமின் பாடி நின்றாட உண்டே விசும்பு உந்தமக்கு இல்லை துயரே –7-1-10
பதவுரை Show / Hide
தொண்டீர், Thondir - பக்தர்களே! (- (விசும்பு உண்டு பரமபதம் கிடைக்கும்.))
வண்டு ஆர் பொழில் சூழ் நறையூர் நம்பிக்கு, Vandu Aar Pozhil Soozh Naraiyur Nambikku - வண்டுகள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட திருநறையூரி லெழுந்தருளி யிருக்கும் பெருமானுக்கு
என்றும், Endrum - எக்காலத்தும்
தொண்டு ஆய், Thondu Aay - அடிமைபூண்டு
கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார்
ஒலி செய், Oli Sei - அருளிச் செய்த
தமிழ் மாலை இவை, Tamil Maalai Ivai - இத்தமிழ்ப் பாசுரங்களை
பாடுமின், Paadumin - பாடுங்கோள்
பாடி நின்று ஆட, Paadi Nindru Aada - (அப்படி) பாடியாடப்பெறில்
உந்தமக்கு, Undhamakku - உங்களுக்கு
துயர் இல்லை, Thuyar Illai - ஸம்ஸாரத் துன்பங்கள் இல்லையாய்விடும்;