திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3370 | திருவாய்மொழி || (7-4–ஆழி எழ) - ((ஆழியெழ.) முதன்முதலாக உலகளந்த விஜயாபதாநத்தை அநுஸந்தித்து உகக்கிறார்.) 1 | ஆழி எழச் சங்கும் வில்லும் எழத் திசை
வாழி எழத் தண்டும் வாளும் எழ அண்டம்
மோழை எழ முடி பாதம் எழ அப்பன்
ஊழி எழ உலகங் கொண்ட வாறே.–7-4-1 | பதவுரை Show / Hideaazhi ezha,ஆழி எழ - திருவாழியாழ்வான் முன்னே உயர்ந்து தோன்றவும் sangum villum ezha,சங்கும் வில்லும் எழ - பாஞ்சஜந்யமும் சார்ங்கமும் தோன்றவும் thandum vaalum ezha,தண்டும் வாளும் எழ - கதையும் நந்தகமும் தோன்றவும் thisai vaazhi ezha,திசை வாழி எழ - திசைகள் தோறும் மங்களாசாஸன கோஷம் கிளம்புவும் andam mozhai ezha,அண்டம் மோழைஎழ - (உயரவளர்ந்தபடியாலே) அண்டகபாலம் பிளந்து ஆவரணஜலம் குமிழி கிளம்பும் படியாகவும் mudi paadham ezha,முடி பாதம் எழ - (வளர்ந்த விரைவாலே) திருமுடியும் திருவடியும் ஒக்கக்கிளம்பும் படியாகவும் oozhi ezha,ஊழி எழ - மாவலியால் துன்பப் பட்டகாலம் போய்) நல்லகாலம் வந்து தோற்றும்படியாகவும் appan,அப்பன் - ஸர்வேச்வரன் ulagam kondaa aaru eyy,உலகம் கொண்ட ஆறு ஏ - (திரிவிக்கிரமனாய்) உலகங்களையளந்து கொண்டபடி என்னே!. |
| 3371 | திருவாய்மொழி || (7-4–ஆழி எழ) - ((ஆறுமலைக்கு.) கடல் கடைந்தபடியை யநுஸந்தித்து ஈடுபடுகிறார். துர்வாஸமுனிவனுடைய சாபத்தினால் தேவர்களினுடைய செல்வம் யாவும் ஒழிய, அசுரர் வந்து பொருது அமரரை வெல்ல,) 2 | ஆறு மலைக்கு எதிர்ந்து ஒடும் ஒலி அர
வூறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி கடல்
மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி அப்பன்
சாறு பட அமுதம் கொண்ட நான்றே.–7-4-2 | பதவுரை Show / Hideappan,அப்பன் - ஸர்வேச்வரன் saaru pada,சாறு பட - (தேவர்களுக்கு) மஹோத்ஸவமுண்டாம்படியாக amudham konda nanru,அமுதம் கொண்ட நான்று - (கடல் கடைந்து) அமுதங்கொண்ட காலத்திலே. aaru,ஆறு - கடலிலே சென்று சேர்வதற்காக வந்து கொண்டிருந்த) ஆறுகளானவை malaikku edhiruthu oadum oli,மலைக்கு எதிர்த்து ஓடும் ஒலி - தங்கள் பிறப்பிடமான மலைகளையே நோக்கித் திரும்பியோடுகிறஓலியும். aravu ooru sulaay,அரவு ஊறு சுலாய் - வாஸீகியென்கிற பாம்பினுடம்பைச் சுற்றி malai theykkum oli,மலை தேய்க்கும் ஓலி - மந்தர மலையிலே தேய்க்கிற (ஓலியும் kadal maaru sulandru,கடல் மாறு சுழன்று - கடலானது இடம் வலமாக மாறிச் சுழன்று alaikkindra oli,அழைக்கின்ற ஒலி - கோஷிக்கிற கோஷமும் உண்டாயின. |
| 3372 | திருவாய்மொழி || (7-4–ஆழி எழ) - ((நான்றிலவேழ்.) மஹாவராஹ மூர்த்தியாகி நிலத்தை யிடந்தெடுத்த வரலாற்றை யநுஸந்திக்கிறாரிப்பாட்டில்.) 3 | நான்றில ஏழ் மண்ணுந் தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் மலை தானத்தவே பின்னும்
நான்றில ஏழ்கடல் தானத்தவே அப்பன்
ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே.–7-4-3 | பதவுரை Show / Hideappan,அப்பன் - ஸர்வேச்வரன் oondri idandhu eittril kondan naal,ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாள் - (பிராளயங்கதையான பூமியைக்) குத்தியிடந்தெடுத்து எயிற்றின் மேலே கொண்ட காலத்தில் ezhu mannum,ஏழ் மண்ணும் - ஏழு தீவுகளான பூமி பேதங்களானவை naantril,நான்றில - நழுவாதவையாய் thaanthath,தானத்த - தங்கள் ஸ்தானத்திலேயே யிருந்தன; pinnum,பின்னும் - மேலும் ezhu malai,ஏழ் மலை - ஸப்த குலாசங்களும்) naantril,நான்றில - சலியாதவையாகி thaanthath,தானத்த - தங்கள் ஸ்தானத்திலேயே யிருந்தன; pinnum,பின்னும் - மேலும் ezhu kadal,ஏழ் கடல் - ஸப்த ஸாகரங்களும் naanaril,நானறில - உடைந்தொழுகாதவையாய் thaanthath,தானத்த - தங்கள் ஸ்தானத்திலேயே யிருந்தன. eyy,ஏ - ஆச்சரியம் |
| 3373 | திருவாய்மொழி || (7-4–ஆழி எழ) - ((நாளுமெழ.) மஹாப்ரளயத்தில் ரக்ஷித்தபடியை இப்பாட்டில் அருளிச்செய்கிறார்.) 4 | நாளும் எழ நிலம் நீரும் எழ விண்ணும்
கோளும் எழ எரி காலும் எழ மலை
தாளும் எழச் சுடர் தானும் எழ அப்பன்
ஊளி எழ உலகம் உண்ட ஊணே.–7-4-4 | பதவுரை Show / Hidenaal ezvum,நாள் எழவும் - காலவ்யவஸ்தைபேரும் படியாகவும் nilam neer ezvum,நிலம் நீர் எழவும் - நிலமும் நீரும் நிலை குலைந்து போகவும் vinnum koalum ezhu,விண்ணும் கோளும் எழ - ஆகாசமும் க்ரஹங்களும் நிலை குலைத்து போகவும் eri kaalum ezhu,எரி காலும் எழ - நெருப்பும் காற்றும் நிலைகுலைந்து போகவும் malai thaal ezvum,மலை தாள் எழவும் - மலைகள் அடிபெயர்ந்து போகவும் sudarthaanum ezhu,சுடர்தானும் எழ - நக்ஷ்த்திரம் முதலிய சுடர்ப்பொருள்கள் நிலை குலையவும் appan,அப்பன் - ஸர்வேச்வரன் ooli ezhu ulagam unda oon,ஊளி எழ உலகம் உண்ட ஊண் - ஆரவரமுண்டாம்படி உலகங்களை உண்டருளின உணவு என்ன ஆச்சரியம்! |
| 3374 | திருவாய்மொழி || (7-4–ஆழி எழ) - ((ஊணுடை மல்லர்.) கண்ணபிரான் பாரதப்போர் நிர்வஹித்தருளின சதிரைப் பேசுகிறாரிப்பாட்டில்.) 5 | ஊணுடை மல்லர் தகர்த்த ஒலி மன்னர்
ஆணுடைச் சேனை நடுங்கும் ஒலி விண்ணள்
ஏணுடைத் தேவர் வெளிப்பட்ட ஒலி அப்பன்
காணுடைப் பாரதம் கையறை போழ்தே.–7-4-5 | பதவுரை Show / Hideappan,அப்பன் - ஆச்ரிதபக்ஷ்பாதியான கண்ணபிரான் kaanudai bharatham kai arai pothu,காணுடை பாரதம் கை அறை போழ்து - ஆச்சரியமான பாரதயுத்தத்தை அணிவகுத்த போது, oon udai mallar thadarndha oli,ஊண் உடை மல்லர் ததர்ந்த ஒலி - வலியை யூட்டும் உணவுகளைக்கொண்ட பெருமிடுக்கரான மல்லர்கள் (த்வந்த்வயுத்தம் பண்ணி, நேரிந்து விழுகிற ஒசையும் mannar,மன்னர் - அரசர்களினுடைய aan udai senai,ஆண் உடை சேனை - வீர புருஷர்களை யுடைத்தான சேனைகளானவை nadungum oli vinnull,நடுங்கும் ஒலி விண்ணுள் - நடுங்குகிற சத்தமும் விண்ணுலகத்திலே aen udai devar,ஏண் உடை தேவர் - மதிப்பராக எண்ணப்பட்ட தேவர்கள் velippatta oli,வெளிப்பட்ட ஒலி - (யுத்த விநோதம் காண்கைக்காக) வெளிப் பட்ட ஓசையும் ஆயின |
| 3375 | திருவாய்மொழி || (7-4–ஆழி எழ) - ((போழ்து மெலிந்த) ப்ரஹலாதாழ்வானுக்காக இரணியனை வதைக்கும் போதுண்டான அதிசயத்தைக் கூறுவதிப்பாட்டு.) 6 | போழ்து மெலிந்த புன் செக்கரில் வான் திசை
சூழும் எழுந்து உதிரப் புனலா மலை
கீழ்து பிளந்த சிங்கம் ஓத்ததால் அப்பன்
ஆழ் துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே.–7-4-6 | பதவுரை Show / Hidepozhndhu melindha,போழ்ந்து மெலிந்த - போதுபோனவாறே pun chekkaril,புன் செக்கரில் - செக்கர் வானமிடுகிற வளவிலே vaan thisai,வான் திசை - ஆகாசமும் திக்குக்களும் soolum ezundhu,சூழும் எழுந்து - சூழக்கிளம்பி udhiram punal aa,உதிரம் புனல் ஆ - ரத்த வெள்ளமாம்படி appan,அப்பன் - ஆச்ரிதபக்ஷ்பாதியான நரஸிம்ஹமூர்த்தி aazh thuyar seydhu,ஆழ் துயர் செய்து - அளவிறந்த துன்பத்தை விளைந்து asurai kollum aaru,அசுரை கொல்லும் ஆறு - இரணியாசுரனைக் கொன்ற விதமானது malai keelthu pilandha singam otthadhu,மலை கீழ்து பிளந்த சிங்கம் ஒத்தது - ஒரு மலையைக் கீழேயிட்டு அதன் மேலேயிருந்து அம்மலையைக்கீண்ட சிங்கம் போன்றிருந்தது. aal,ஆல் - ஆச்சரியம். |
| 3376 | திருவாய்மொழி || (7-4–ஆழி எழ) - ((மாறுநிரைத்தது.) இலங்கையைப் பாழ்படுத்தின விதம் வியந்து கூறப்படுகிறது இதில்.) 7 | மாறு நிரைத் திரைக் குஞ்ச ரங்களின்
நூறு பிணம் மலை போற் புரளக் கடல்
ஆறு மடுத்து உதிரப் புனலா அப்பன்
நீறு பட இலங்கை செற்ற நேரே.–7-4-7 | பதவுரை Show / Hideappan,அப்பன் - ஸ்வாமியான ஸ்ரீராமபிரான் ilangai neeru pada setra ner,இலங்கை நீறு பட செற்ற நேர் - லங்காபுரி பஸ்மமாம்படி த்வம்ஸம் பண்ணின நேர்த்தி (எங்ஙனேயிருந்ததென்றால்) maruniraittu iraikkum sarangaL,மாறுநிரைத்துஇரைக்கும் சரங்கள் - எதிரெதி;ராக நிரைக்கப்பட்டு சப்திக்கிற சரங்களாலே inam nooru pinam,இனம் நூறு பிணம் - இனமினமாய் நூறு நூறான ராக்ஷ்ஸப்பிணங்களானவை malai pol purala,மலை போல் புரள - மலை மலையாகப் புரண்டு விழவும் kadal,கடல் - கடலானது udhiram punal aa aaru maṭuthu,உதிரம் புனல் ஆ ஆறு மடுத்து - ரக்த வெள்ளத்தாலே நிரம்பி ஆறுகளிலே எதிர்த்தோடும்படியாகவுமிருந்தது |
| 3377 | திருவாய்மொழி || (7-4–ஆழி எழ) - ((நேர்சரிந்தான்) பாணாஸுரயுத்த விஜயவ்ருத்தாந்தம் கூறுவதிப் பாட்டு.) 8 | நேர் சரிந்தான் கொடிக் கோழி கொண்டான் பின்னும்
நேர் சரிந்தான் எரியும் அனலோன் பின்னும்
நேர் சரிந்தான் முக்கண் மூர்த்தி கண்டீர் அப்பன்
நேர் சரி வாணன் திண் தோள் கொண்ட அன்றே–7-4-8 | பதவுரை Show / Hideappan,அப்பன் - ஸ்வாமியான கண்ண பிரான் ner sari vaanan,நேர் சரி வாணன் - முதுகுகாட்டியொடின பாணாஸுரனுடைய thinthol konda anru,திண்தோள் கொண்ட அன்று - திண்ணிய தோள்களைத்துணித்து வென்றி கொண்ட அக்காலத்திலே kozhi kodi kondaan,கோழி கொடி கொண்டான் - மயிலைக் கொடியாகக் கொண்ட ஸீப்ரமணியன் ner sarindhaan,நேர் சரிந்தான் - எதிர்நில்லாமல் சாய்ந்துபோனான்; pinnum,பின்னும் - அதற்குமேலே eriyum analon,எரியும் அனலோன் - ஜ்வலித்துக்கொண்டிருந்த அக்நியும் ner sarindhaan,நேர் சரிந்தான் - எதிர் நில்லாமல் சரிந்தான்; pinnum,பின்னும் - அதற்குமேலும் mukkan mooruthi,முக்கண் மூர்த்தி - முக்கண்ணனான சிவ பிரானும் ner sarindhaan kandeer,நேர் சரிந்தான் கண்டீர் - அப்படியே முதுகிட்டுப்போனான கிடீர். |
| 3378 | திருவாய்மொழி || (7-4–ஆழி எழ) - ((அன்றுமண்ணீர்). இப்பாட்டின் கருத்தை இரண்டு வகையாக நிர்வஹிப்பர்கள் பூருவாசாரியர்கள். ஆதிஸ்ருஷ்டியைச் சொல்லுகிறதாக ஒரு நிர்வாஹம். கீழே பாணாஸுரனை வென்றி கொண்டவிருத்தாந்தம் சொல்லியிருப்பதாலும் மேற்பாட்டிலும் க்ருஷ்ணாவதார சரித மொன்று சொல்லிருப்பதாலும் இப்பாட்டையும் கீழ்ப்பாட்டோடே சேஷமாக்கி பாணாஸுரனுடைய செருக்கையடக்கினவன்று தான் ஜகத்து உண்டாயிற்றென்று ஆழ்வாரருளிச் செய்கிறார் என்பதாக மற்றொரு நிர்வாஹம். இந்த நிர்வாஹித்தின்படி ‘அன்று’ என்று இப்பாட்டில் அடிதோறும் வருவது வாணனை வென்ற வக்காலத்திலே என்ற பொருளிலாம். ஆத்ய ஸ்ருஷ்டியைச் சொல்லுதிறதாக நிர்வஹக்கிற பக்ஷத்தில் அன்றே என்றது எல்லா ஸ்ருஷ்டிகளும் ஏக பக்ஷத்திலேயே’ என்றபடி. “க்ரமஸ்ருஷ்டியன்று; யுகபத்ஸ்ருஷ்டியென்று கருத்து” என்பது பன்னீராயிரவுரை.) 9 | அன்று மண் நீர் எரி கால் விண் மலை முதல்
அன்று சுடர் இரண்டும் பிறவும் பின்னும்
அன்று மழை உயிர் தேவும் மற்றும் அப்பன்
அன்று முதல் உலகம் செய்ததுமே.–7-4-9 | பதவுரை Show / Hideappan,அப்பன் - ஸ்வாமியான ஸாவேச்வரன் முந்துற் முன்னம் anru,அன்று - அந்தவொரு க்ஷ்ணத்திலேயாம்; man neer eri kaal vin,மண் நீர் எரி கால் விண் - பஞ்ச பூதங்ககளையும் malai mudhal,மலை முதல் - மலைகள் முதலானவற்றையும் seydhadhum,செய்ததும் - படைத்ததும் anru,அன்று - அந்த க்ஷ்ணத்திலேயாம்; sudar irandu,சுடர் இரண்டு - சந்திரன் ஸுர்யன் ஆகிய இரண்டு சுடர்ப்பொருள்களையும் piravum,பிறவும் - மற்றுமுள்ள நக்ஷ்த்ராதிதேஜஸ் பதார்த்தங்களையும் ulagam seydhadhum,உலகம் செய்ததும் - உலகங்களைப்படைத்ததும், seydhadhum,செய்ததும் - உண்டாக்கினதும் anru,அன்று - அந்த க்ஷணத்திலேயாம் pinnum,பின்னும் - அதுக்குமேலே mazhai,மழை - மேகங்களையும் uyir,உயிர் - மழையினால்பிழைக்கும் உயிர்களையும் thevum,தேவும் - மழைக்குக் கடவர்களான தேவர்களையும் matrum,மற்றும் - மற்றுமுள்ள திர்யக் ஸ்தாவரங்களையும் seydhadhum,செய்ததும் - உண்டாக்கினதும் |
| 3379 | திருவாய்மொழி || (7-4–ஆழி எழ) - ((மேய்நிரை.) திருவாய்ப்பாடியில் ஆயர்கள் வழக்கப்படி இந்திரபூஜைக் கென்று சமைத்தசோறு முதலியவற்றையடங்கலும் கண்ணபிரான் அவ்விந்விந்திரனுக்கு இடவொட்டாமல் கோவர்த்தன மலைக்கு இடுவித்துப் பின்பு தானே ஒரு தேவதாரூபங்கொண்டு அவற்றை முற்றும் அமுது செய்துவிட, பிறகு இந்திரன் பசிக்கோபத்தினால்; மேகங்களை ஏவி ஏழுநாள் விடாமழை பெய்விக்க, கண்ணபிரான் அக் கோவர்த்தனகிரியைக் குடையாகத் தூக்கிக் கோக்களையும் கோவலரையும் காத்தருளின் னென்றவரலாறு ப்ரஸித்தம். அப்போதைய நிலைமையை இப்பாட்டில் அநுபவிக்கிறார். மேய்கின்ற பசுக்களானவை புல்லும் உமிழாதே அசையிட்டுக் கொண்டு கீழே புகவும், மலைமேலுள்ள மிருகங்களெல்லாம் மலைகுடையாகக் கவிழ்ந்தபடியடிலே கீழே புரண்டு விழவும், சுனைகள் வாயளவும் நிறைந்த நீரைப் பெரிய கோஷத்தோடு சொரியவும், திருவாய்ப்பாடியடங்களிலும் அங்கே யொடுங்கவும் அப்பன் தீமழை காத்துக் குன்றமெடுத்தா னென்றதாயிற்று.) 10 | மேய் நிரை கீழ் புக மா புரளச் சுனை
வாய் நிறை நீர் பிளிறிச் சொரிய இன
ஆநிரை பாடி அங்கே ஒடுங்க அப்பன்
தீ் மழை காத்துக் குன்றம் எடுத்தானே.–7-4-10 | பதவுரை Show / Hidemeynirai,மேய்நிரை - மேய்கிற பசுக்களானவை keel puga,கீழ் புக - கீழே யொதுங்கும்படியாகவும் maa purala,மா புரள - (கீழது மேலதாக மலையைப் பிடிக்கையாலே மலையிலுள்ள) மிருசங்கள் புரண்டுவிழும் படியாகவும் sunaivaa nirai neer,சுனைவாய் நிறை நீர் - சுனைகளினுடைய வாயளவும் நிறைந்த நீரானது pilirisoriya,பிளிறி சொரிய - பெரிய ஆரவாரத்தோடு சொரியும் படியாகவும் inam aanirai paadi ange oadungga,இனம் ஆநிரை பாடி அங்கே ஓடுங்க - மிகவும் ஸம்ருத்தமான திருவாய்ப்பாடியானது அங்கே அடங்கும்படியாகவும் appan,அப்பன் - கண்ணபிரான் thee mazhai kaathu,தீ மழை காத்து - விநாச ஹேதுவான மழையைத் தடுக்க kunṟam eduthaan,குன்றம் எடுத்தான் - கோவர்த்தன மலையைக் குடையாகத் தூக்கினான் |
| 3380 | திருவாய்மொழி || (7-4–ஆழி எழ) - ((குன்றமெடுத்த.) எம்பெருமானுடைய விஜய பரம்பரைகளைத் தொடுத்த இத்திருவாய்மொழியை ஒதவல்லவர்கள் எல்லா வகையான விஜயமும் பெறுவார்களென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது.) 11 | குன்றம் எடுத்த பிரான் அடியாரொடும்
ஒன்றி நின்ற சட கோபன் உரை செயல்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை
வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே–7-4-11 | பதவுரை Show / Hidekunram edutha piran,குன்றம் எடுத்த பிரான் - கோவர்த்தன மலையையெடுத்த கண்ணபிரானுடைய adiyarodum,அடியாரொடும் - அடியார்களோடு கூட ondri nindra,ஒன்றி நின்ற - ஒருமைப்பட்டிராநின்ற sadagopan,சடகோபன் - நம்மாழ்வாருடைய urai seyal,உரை செயல் - அருளிச்செயலாய் or aayirathu nanri punaintha,ஓர் ஆயிரத்துள் நன்றி புனைந்த - ஆயிரத்தினுள்ளே நலம் மிக்கதான ivai pathum,இவை பத்தும் - இத்திருவாய்மொழி mevi karparkku,மேவி கற்பார்க்கு - தன்னை விரும்பிக் கற்குமவர்களுக்கு venri tharum,வென்றி தரும் - பலவகையான விஜயத்தையுங் கொடுக்கும் |