திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1578 | பெரிய திருமொழி || (7-4–கண் சோர) (திருச்சேறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திருத் துழாய் போலேயும் ஸ்ரீ கௌஸ்துபம் போலேயும் உம்முடைய ஸ்பர்சம் நமக்கு இனிதாய் இரா நின்றது – உம்முடைய தலையைக் கொடு வாரும் நம்முடைய காலை வைக்க என்ன இங்கு உமக்கு ஒழியாது வகுத்தவர்கள் காலுக்கு இடம் போரும் இத்தனை) 1 | கண் சோர வெங்குருதி வந்திழிய வெந்தழல் போல் கூந்தலாளை
மண் சேர முலை உண்ட மா மதலாய் வானவர் தம் கோவே என்று
விண் சேரும் இளம் திங்கள் அகடு உரிஞ்சு மணி மாட மல்கு செல்வத்
தண் சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலாரே –7-4-1 | பதவுரை Show / Hideகண் சோர, Kan Soora - கண்கள் சுழலமிட்டுத் தளரும்படியாகவும் வெம் குருதி, Vem Kuruthi - வெவ்விய ரத்தமானது வந்து இழிய, Vandhu Izhaiya - வெள்ளமிட்டுப் பெருகவுமாய் மண் சேர, Man Cheera - மாண்டுபோம்படி வெம் தழல் போல் கூந்தலாளை, Vem Thazhal Pol Koondhalalai - நெருப்புப்போல் செம்பட்ட மயிரையுடையளான பூதனையினுடைய முலை, Mulai - (விஷங்கலந்த)முலையை உண்ட, Unda - உறிஞ்சியுண்ட மா மதலாய், Maa Mathalai - இளம்பிள்ளையே! வானவர் தம் கோவே, Vaanavar Tham Kove - தேவாதி தேவனே! என்று, Endru - என்று இவ்வண்ணமாகத் துதிசெய்து விண் சேரும் இள திங்கள், Vin Serum Ila Thingal - ஆகாயத்தில் திரிகின்ற பாலசந்திரனுடைய அகடு, Akadu - கீழ்வயிற்றை உரிஞ்சு, Urinthu - அளாவுகின்ற மணி மாடம், Mani Maadam - திருமாளிகைகள் மல்கு, Malku - நிறைந்திருக்கப்பெற்ற செல்வம், Selvam - வளம் மிக்க தண், Than - குளிர்ந்த சேறை, Serai - திருச்சேறையில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமான், Emperumaan - ஸாரநாதப் பெருமாளுடைய தாள், Thaal - திருவடிகளை தொழுவார் காண்மின், Thozhuvaar Kaanmin - வணங்குமவர்கள் தாம் என் தலை மேலார், En Thalai Meelaar - என் தலைமேல் வீற்றிருக்க வுரியார். |
| 1579 | பெரிய திருமொழி || (7-4–கண் சோர) (திருச்சேறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நித்ய வசந்தமாய் ஸ்ரமஹரமான பொழிலை உடைத்தாய் இருக்கிற ஸ்ரீ திருச் சேறையிலே ஸ்பர்தையாலே ஆகாசத்தைத் தள்ளுகிறாப் போலே இருக்கிற ஸ்ரீ கோயிலிலே வந்து நித்ய வாஸம் பண்ணுகிறவனுடைய திருவடிகளைத் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே – நிதித்யாசி தவ்ய-என்கிற விஷயத்துக்குஇடம் காண்கிறிலேன்) 2 | அம்புருவ வரி நெடுங்கண் அலர் மகளை வரை யகலத்து அமர்ந்து மல்லல்
கொம்பு உருவ விளங்கனி மேல் இளங்கன்று கொண்டு எறிந்த கூத்தர் போலாம்
வம்பலரும் தண்சோலை வண்சேறை வான் உந்து கோயில் மேய
எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே –7-4-2 | பதவுரை Show / Hideஅம் புருவம், Am Puruvam - அழகிய புருவத்தையும் அரி நெடு கண், Ari Nedu Kan - செவ்வரி கருவரிபடர்ந்து நீண்ட கண்களையுமுடையளான அலர் மகளை, Alar Magalai - பெரிய பிராட்டியாரை வரை அகலத்து, Varai Akalathu - மாலைபோன்ற திருமார்பிலே அமர்ந்து, Amarnthu - பொருந்தவைத்துள்ளவனும் மல்லல் கொம்பு, Mallal Kombu - தழைத்த கிளைகளை வடிவமாகவுடைய விளாமரத்திலுள்ள கனி மேல், Kani Mel - பழத்தின் மேலே இள கன்று கொண்டு, Ila Kandu Kondu - (அஸுரவடிவாய் வந்த தொரு) சிறு கன்றை(த் தடியாக)க் கொண்டு எறிந்த, Erintha - வீசியெறிந்த கூத்தர் ஆம், Koothar Aam - நடையழகுடையவனும், வம்பு அலரும் தண் சோலை, Vambu Alarum Than Solai - பரிமளம் வீசுகின்ற குளிர்ந்த சோலைகளையுடைய வண் சேறை, Van Serai - அழகிய திருச்சேறையிலே வான் உந்து கோயில் மேய, Vaan Unthu Koyil Meya - ஆகாசத்ததையளாவுகின்ற ஸந்நிதியில் நித்யவாஸம் செய்பவனுமான எம்பெருமான், Emperumaan - ஸாரநாதப்பெருமாளுடைய தாள், Thaal - திருவடிகளை தொழுவார், Thozhuvar - ஸேவிப்பவர்கள் எப்பொழுதும், Eppozhudum - எந்நாளும் எம் மனத்தே இருக்கின்றார், Em Manathae Irukkindraar - என்னெஞ்சிலேயே வாஸஞ்செய்கிறார்கள் |
| 1580 | பெரிய திருமொழி || (7-4–கண் சோர) (திருச்சேறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திருச் சேறையிலே எழுந்து அருளி இருக்கிறவன் திருவடிகளை ஏத்தி –ஆஸ்ரயிக்கிற பாக்யாதிகரே – சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி ஆஸ்ரயிக்கிற நித்ய சூரிகளில் சம்ருத்தர் ஆகிறார் – அங்கே இருந்து ஆஸ்ரயிக்கிறவர்கள் இங்கே இருந்தபடியே ஆஸ்ரயிக்கிறவர்களோடே ஒவ்வார் இறே) 3 | மீதோடி வாள் எயிறு மின்னிலக முன் விலகும் உருவினாளைக்
காதோடு கொடி மூக்கு அன்று உடன் அறுத்த கைத்தலத்தா என்று நின்று
தாதோடு வண்டலம்பும் தண் சேறை எம்பெருமான் தாளை ஏத்திப்
போதொடு புனல் தூவும் புண்ணியரே விண்ணவரில் பொலிகின்றாரே –7-4-3 | பதவுரை Show / Hideவாள் எயிறு, Vaal Eiyiru - ஒளி பொருந்திய கோரப்பல்லானது மீது ஓடி, Meethu Odi - மேல் முகமாக வளர்ந்து மின் இலக, Min Ilaka - மின்னல்போல் விளங்க முன் விலகும் உருவினாளை, Mun Vilakum Uruvinai - முன்னே வந்து நின்ற உருவத்தை யுடையளான சூர்ப்பணகை யினுடைய காதோடு, Kaadodu - காதையும் கொடி மூக்கு, Kodi Mooku - கொடி மூக்கையும் அன்று, Andru - அப்போது உடன், Udan - உடனே அறுத்த, Arutha - அறுத்துவிட்ட கைத்தலத்தா, Kaithalaththaa - திருக்கையை யுடையவனே! என்று நின்று, Endru Nindru - என்று நிலைநின்று,- வண்டு, Vandu - வண்டுகளானவை தாதோடு, Thadodhu - பூந்தாதுகளிலே அலம்பும், Alambum - ஆரவாரம் செய்யப்பெற்ற தண் சேறை, Than Serai - குளிர்ந்த திருச்சேறையிலுள்ள எம்பெருமான், Emperumaan - ஸாரநாதப்பெருமாளுடைய தாளை, Thaalai - திருவடிகளை ஏத்தி, Aethi - துதித்து போதோடு, Pothodu - புஷ்பங்களையும் புனல், Punal - தீர்த்தத்தையும் தூவும், Thuvum - ஸமர்ப்பிக்கிற புண்ணியர், Punniyar - பாக்கியசாலிகள் விண்ணவரில், Vinnavaril - நித்யஸூரிகளிற் காட்டிலும் பொலிகின்றார், Polikindraar - மேம்பாடுடையார். |
| 1581 | பெரிய திருமொழி || (7-4–கண் சோர) (திருச்சேறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வாயாலே திரு நாமம் சொல்லா விடில் தரியாத ஸ்வபாவத்தை உடையராயக் கொண்டு சங்கீர்த்தனம் பண்ணுகிற பெரியோர் உண்டு – அவன் தானும் அகப்பட -மகாத்மான -என்னும்படி இருக்கிற மகா பிரபாவர்களை –ஷண காலமும் பிரிய-காலம் எல்லாம் இடை விடாமல் அனுபவிக்கலாம் என்னிலும் பிரிய ஷமன் அல்லேன்) 4 | தேராளும் வாளரக்கன் தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழப்
போராளும் சிலையதனால் பொரு கணைகள் போக்குவித்தாய் என்று நாளும்
தாராளும் வரை மார்பன் தண் சேறை எம்பெருமான் உம்பராளும்
பேராளன் பேரோதும் பெரியோரை யொருகாலும் பிரிகிலேனே –7-4-4 | பதவுரை Show / Hideதேர் ஆளும், Ther Aalum - தேர்களை நடத்தவல்லவனாய் வாள், Vaal - வாட்படையையுடையனான அரக்கன், Arakkan - இராவணனுடைய தென் இலங்கை, Then Ilangai - அழகிய லங்காபுரியை வெம் சமத்து, Vem Samathu - கொடிய போர்க்களத்தில் பொன்றி வீழ, Pondri Veela - சிதறியழிந்துபோம்படி போர் ஆளும் சிலை அதனால், Por Aalum Silai Adhanal - போரை நடத்தவல்ல வில்லினால் பொரு கணைகள், Poru Kanigal - கொடிய அம்புகளை போக்குவித்தாய், Pokkuviththai - பிரயோகித்தவனே! என்று, Endru - என்று சொல்லி, நாளும், Naalum - நாள்தோறும் தார் ஆளும் வரை மார்பன், Thar Aalum Varai Marban - மாலையை அணிந்தள்ள மலை போன்ற திருமார்பையுடையவனும் உம்பர் ஆளும், Umbar Aalum - மேலுலகங்களை ஆள்பவனும் பேராளன், Peraalan - பெருமை பொருந்தினவனுமான தண் சேறை எம்பெருமான், Than Serai Emperumaan - திருச்சேறைப் பெருமானுடைய பேர், Per - திருநாமங்களை ஓதும், Oodhum - ஓதுகின்ற பெரியோரை, Periyoorai - மஹாத்மாக்களை ஒருகாலும், Orukaalum - ஒருபோதும் பிரிகிலேன், Prikileen - பிரியமாட்டேன். |
| 1582 | பெரிய திருமொழி || (7-4–கண் சோர) (திருச்சேறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரமஹரமாய் இருக்கிற ஸ்ரீ திருச் சேறையிலே நாயனார் உடைய திருவடிகளை நாள் தோறும் போக ரூபமாக அனுசந்திப்பாருக்கு –என்னுடைய ஹிருதயமானது தேனூறி எப்பொழுதும் இனிதாக நின்றது இது வெருமனேயோ) 5 | வந்திக்கும் மற்றவர்க்கும் மாசுடம்பில் வல்லமணர் தமக்கும் அல்லேன்
முந்திச் சென்று அரி யுருவாய் இரணியனை முரண் அழித்த முதல்வருக்கு அல்லால்
சந்தப்பூ மலர்ச் சோலைத் தண் சேறை எம்பெருமான் தாளை நாளும்
சிந்திப்பார்க்கு என்னுள்ளம் தேனூறி எப்பொழுதும் தித்திக்குமே –7-4-5 | பதவுரை Show / Hideஅரி உரு ஆய், Ari Uru Aay - நரஸிம்ஹரூபியாய் முந்தி சென்று, Mundhi Sendru - முந்துற வெளிப்பட்டு இரணியன் முரணை, Iraaniyan Muranai - இரணியாசுரனுடைய வலியை அழித்த, Azhitha - பாழ்படுத்தின முதல்வற்கு அல்லால், Muthalvarkku Allaal - ஜகத்காரணபூதனான எம்பெருமானுக்கல்லது, மாசு உடம்பின், Maasu Udambin - அழுக்கேறின உடம்பையுடையராய் வல், Val - வலிந்து வாது செய்பவர்களான அமணர் தமக்கும், Amanar Thamakum - ஜைநர்கட்கும் வந்திக்கும் மற்றவர்க்கும், Vandhikkum Matravarkkum - ‘வந்தே’ என்று சொல்லிக் கொண்டு திரிகிற பௌத்தர்கட்கும் அல்லேன், Alleen - கூட்டுப்படக் கடவேனல்லேன்; சந்தம் பூமலர், Sandham Poomalai - சந்தநப் புஷ்பங்களையுடைய சோலை, Solai - சோலைகளையுடைத்தான தண் சேறை, Than Serai - குளிர்ந்த திருச்சேறையிலுள்ள எம்பெருமான், Emperumaan - ஸாரநாதப் பெருமாளுடைய தாளை, Thaalai - திருவடிகளை நாளும், Naalum - நாள்தோறும் சிந்திப்பார்க்கு, Sindhippaarkku - தியானம் செய்யும் பாகவதர்திறத்தில் என் உள்ளம், En Ullam - என் மனமானது தேன் ஊறி, Then Oori - அமுதம் சுரக்கப்பெற்று எப்பொழுதும், Eppozhudum - இடைவிடாது தித்திக்கும், Thithikkum - திக்திக்கின்றது. |
| 1583 | பெரிய திருமொழி || (7-4–கண் சோர) (திருச்சேறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ வண் சேறை எம்பெருமான் அடியாரைக் கண்ட மாத்ரத்திலே –கண்டி கோளே என்னுடைய நெஞ்சும் கண் இணையும் களிக்கிற படி-ஆன பின்பு அத்யவசிக்கையில் ஒரு குறை உண்டோ) 6 | பண்டு ஏனமாய் யுலகை யன்று இடந்த பண்பாளா என்று நின்று
தொண்டானேன் திருவடியே துணை அல்லால் துணை இலேன் சொல்லுகின்றேன்
வண்டு ஏந்து மலர்ப் புறவில் வண் சேறை எம்பெருமான் அடியார் தம்மைக்
கண்டேனுக்கு இதுகாணீர் என் நெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே –7-4-6 | பதவுரை Show / Hideபண்டு அன்று, Pandhu Andru - முன்பொருகால் ஏனம் ஆய், Enam Aay - மஹாவராஹரூபியாய் உலகை, Ulagai - பூமியை இடந்தா, Idandha - கோட்டாற் குத்தியேடுத்துவந்த பண்பாளா, Panpaala - குணசாலியே! என்று நின்று, Endru Nindru - என்று சொல்லி நிலைநின்று தொண்டு ஆனேன், Thondu Aaneen - (உனது திருவடிகட்கு) அடிமை யானேன்; திரு அடியே துணை அல்லால், Thiru Adiye Thunai Allaal - (உனது) திருவடிகளே துணை யாவதன்றி துணை இலேன், Thunai Ileen - வேறு துணையுடையேனல்லேன்; சொல்லுகின்றேன், Solligindren - இ சத்தியம்; வண்டு ஏந்தும், Vandu Aenthum - வண்டுகளைத் தரிக்கின்ற மலர், Malar - பூக்களையுடைய புறவில், Puravil - தோப்புகளை யுடைத்தான வண் சேறை, Van Serai - அழகிய திருச்சேறையிலுள்ள எம்பெருமான், Emperumaan - ஸாரநாதப் பெருமாளுடைய அடியார் தம்மை, Adiyaar Thammai - பக்தர்களை கண்டேனுக்கு என் நெஞ்சும், Kandeenukku En Nenjum - ஸேவிக்கப்பெற்ற எனது மனமும் கண் இணையும், Kan Inaiyum - இரண்டு கண்களும் களிக்கும் ஆறு, Kalikkum Aaru - களிக்கும் விதம் இது காணீர், Idhu Kanneer - இதோ பாருங்கள். |
| 1584 | பெரிய திருமொழி || (7-4–கண் சோர) (திருச்சேறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரமஹரமான திருச் சேறையிலே நிற்கிற ஸ்ரீ நாயனார் உடைய ஸ்லாக்கியமான வடிவு அழகைஅனுசந்தித்தேற்கு – ஸ்ரோத்ராதிகள் ஐந்தாலும் உண்டான வெளிச் சிறப்பை தன் பக்கலிலே ஆக்கிக் கொண்டான் – அது தனக்குத் தான் விஷயம் ஆனான் -என்றபடி – ஐ அறிவும் கொண்டானுக்கு ஆளான அளவிலே நிற்கிறது இல்லை – அவனுக்கு ஆளானார் அளவிலே ஆளாகா நின்றது என் அன்பானது) 7 | பை விரியும் வரி யரவில் படு கடலுள் துயில் அமர்ந்த பண்பா என்றும்
மை விரியும் மணி வரை போல் மாயவனே என்று என்றும் வண்டார் நீலம்
செய் விரியும் தண் சேறை எம்பெருமான் திருவடியைச் சிந்தித்தேற்கு என்
ஐ யறிவும் கொண்டானுக்கு ஆளானார்க்கு ஆளாம் என் அன்பு தானே –7-4-7 | பதவுரை Show / Hideபடுகடலில், Padukadalil - ஆழ்ந்த திருப்பாற்கடலில் பை விரியும் வரி அரவில், Pai Viriyum Vari Aravil - விரிந்த படங்களையும் புள்ளிகளையுமுடைய திருவனந்தாழ்வான் மீது துயில் அமர்ந்த, Thuyil Amarntha - பள்ளிகொண்ட பண்பா என்றும், Panpaa Endrum - குணசாலியே! என்றும், மை விரியும் மணி வரை போல், Mai Viriyum Mani Varai Pol - கருநிறம்மிக்க நீலமணி மயமான மலைபோன்ற (திருமேனியையுடைய) மாயவனே என்று என்றும், Maayavane Endru Endrum - ஆச்சரியனே! என்று பலகால் சொல்லி, வண்டு ஆர் நீலம், Vandu Aar Neelam - வண்டுகள் படிந்த கரு நெய்தல்களானவை செய், Sei - கழனிகளிலே விரியும், Viriyum - மலரப்பெற்ற தண் சேறை, Than Serai - குளிர்ந்த திருச்சேறையிலுள்ள எம்பெருமான், Emperumaan - எம்பெருமானுடைய திரு அடியை, Thiru Adiyai - திருவடிகளை சிந்தித்தேற்கு என், Sindhitheerkku En - தியானம் பண்ணாநின்ற என்னுடைய ஐ அறிவும் கொண்டானுக்கு, Ai Arivum Kondaanaikku - ஐம்புலன்களினறிவையும் தன் விஷயத்திலாக்கிக் கொண்ட அப் பெருமானுக்கு ஆள் ஆனார்க்கு, Aal Aanarkku - ஆட்பட்ட பாகவதர்களுக்கு என் அன்பு தான், En Anbu Thaan - என்னுடைய ப்ரீதியானது ஆள் ஆம், Aal Aam - உரியதாகும். |
| 1585 | பெரிய திருமொழி || (7-4–கண் சோர) (திருச்சேறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பாகவதர்களை நெஞ்சாலே நினைக்க மிருத்யுவால் வரும் பயம் போம் – பாபங்கள் உடைய நலிவால் வரும் பயத்துக்கும் அஞ்ச வேண்டா என்கிறது) 8 | உண்ணாது வெங்கூற்றம் ஓவாத பாவங்கள் சேரா மேலை
விண்ணோரும் மண்ணோரும் வந்து இறைஞ்சும் மென் தளிர் போல் அடியினானைப்
பண்ணாரா வண்டு இயம்பும் பைம் பொழில் சூழ் தண் சேறை யம்மான் தன்னைக்
கண்ணாரக் கண்டு உருகி கையார தொழுவாரைக் கருதும் காலே –7-4-8 | பதவுரை Show / Hideமேலை விண்ணோரும், Melaivinnoram - மேலுலகத்தவர்களான நித்ய ஸூரிகளும் மண்ணோரும், Mannoram - இம் மண்ணுலகத்திலுள்ளாரும் வந்து இறைஞ்சும், Vandhu Irainchum - கிட்டி வணங்கும்படியான மென் தளிர் போல் அடியினானை, Men Thalir Pol Adiyinanae - மெல்லிய தளிர்போன்ற (ஸூகுமாரமான) திருவடிகளை யுடையவனும் பண் ஆர வண்டு இயம்பும் பை பொழில் சூழ் தண் சேறை அம்மான் தன்னை, Pan Aara Vandu Iyampum Pai Pozhil Soozh Than Saerai Amman Thannai - பண்கள் நிரம்ப வண்டுகள் பாடப்பெற்ற சோலைகளாற் சூழப்பட்ட குளிர்ந்த திருச்சேறையில் எழுந்தருளியிருப்பவனுமான ஸாரநாதப் பெருமானை கண் ஆர கண்டு, Kan Aara Kandu - கண்கள் நிறையும்படி ஸேவித்து உருகி, Urugi - மனம் நெகிழ்ந்து கை ஆர, Kai Aara - கைகளின் ஆசை தீரும்படி தொழுவாரை, Thozhuvaarai - தொழாநின்ற பாகவதர்களை கருதுங்கால், Karuthungkaal - சிந்தைசெய்த மாத்திரத்தில், வெம், Vem - கொடிதான கூற்றம், Kootram - யமதேவதையானது உண்ணாது –, Unnaadhu - நெருங்கமாட்டாது; ஓவாத பாவங்கள், Ovaadha Paavangal - இடைவிடாத பாவங்களானவை சேரா, Sera - கிட்டமாட்டா. |
| 1586 | பெரிய திருமொழி || (7-4–கண் சோர) (திருச்சேறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (எனக்கு இது தான் உண்டான படி எங்கனே என்கிறார்) 9 | கள்ளத்தேன் பொய்யகத்தேன் ஆதலால் போதருகால் கவலை என்னும்
வெள்ளத்தேற்கு என் கொலோ விளை வயலுள் கரு நீலம் களைஞர் தாளால்
தள்ளத்தேன் மண நாறும் தண் சேறை எம்பெருமான் தாளை நாளும்
உள்ளத்தே வைப்பாருக்கு இது காணீர் என்னுள்ளம் உருகுமாறே –7-4-9 | பதவுரை Show / Hideவிளை வயலுள், Vilai Vayalul - பயிர்தழைத்த கழனிகளில் (முளைத்திருக்கிற) கரு நீலம், Karun Neelam - கருநெய்தலை, களைஞர், Kalaignar - களைபிடுங்குகிற உழவர் தாளால், Thaalal - (தங்கள்) கால்களாலே தள்ள, Thalla - ஒதுக்கித்தள்ள, தேன், Then - (அதில்நின்று மொழுகின) தேனினுடைய மணம் நாறும், Manam Naarum - பரிமளம் வீசப்பெற்ற தண் சேறை, Than Serai - திருச்சேறையில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமான், Emperumaan - ஸாரநாதப் பெருமாளுடைய தாளை, Thaalai - திருவடிகளை நாளும், Naalum - நாள்தோறும் உள்ளத்தே, Ullatthae - நெஞ்சிலே வைப்பாருக்கு, Vaipparukku - வைத்துச் சிந்தைசெய்கின்ற பாகவதர் விஷயத்தில் என் உள்ளம் உருகும் ஆறு காணீர், En Ullam Urugum Aaru Kanneer - என்மனம் நீர்ப்பண்டமாக உருகும் விதத்தைப் பாருங்கோள்; கள்ளத்தேன் பொய் அகத்தேன் ஆதாலால், Kallatthen Poi Agatthen Aathaalal - ஆத்மாபஹாரக்கள்வனும் வஞ்சநெஞ்சையுடையனுமாய் அடியேனிருப்பதால் போதருகால், Potharugal - ஒரு நொடிப் பொழுதும் இடைவிடாதே கவரை என்னும் வெள்ளத் தேற்கு, Kavarai Ennum Vellat Therku - துக்கமாகிற பெருங்கடலில் அழுந்திக்கிடந்த எனக்கு இது என் கொல், Idhu En Kol - இப்படிப்பட்ட பேறு எங்ஙனே உண்டாயிற்றோ? |
| 1587 | பெரிய திருமொழி || (7-4–கண் சோர) (திருச்சேறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ ஆழ்வார்-ஒலியை உடைத்தாம் படி அருளிச் செய்த தமிழ் தொடையைக் கொண்டு-பகவத் விஷயத்தில் ருசி உடையீர் – ஹேய ப்ரத்ய நீகமாய்-தர்ச நீயமாய் இருந்துள்ள திருவடிகளிலே சூட்டுங்கோள்- அது செய்யும் பொது அஞ்சலியைப் பண்ணா நின்ற கையை உடையராய்க் கொண்டு தொழுது இம்மாலையைச் சூட்டுங்கோள்) 10 | பூ மாண் சேர் கருங்கழலார் போல் நடந்து வயல் நின்ற பெடையோடு அன்னம்
தேமாவின் இன் நிழலில் கண் துயிலும் தண் சேறை அம்மான் தன்னை
வா மான் தேர் பரகாலன் கலிகன்றி ஒலி மாலை தொண்டீர்
தூ மாண் சேர் பொன்னடி மேல் சூட்டுமின் நும் துணைக் கையால் தொழுது நின்றே –7-4-10 | பதவுரை Show / Hideஅன்னம், Annam - அன்னப்பறவைகள் வயல் நின்ற பெடையோடு, Vayal Nindra Pedaiyodu - கழனிகளில் திரிகிற பேடைகளோடு கூட, பூ மாண் சேர் கரு குழலார் போல் நடந்து, Poo Maan Ser Karu Kuzhalar Pol Nadandhu - பூக்களணிந்து அழகு பெற்ற கறுத்த கூந்தலை யுடைய இளம் பெண்களைப்போல நடந்து (பின்பு) தே மாவின், The Maavin - தேன் மாமரத்தினுடைய இன் நிழலில், In Nizhalil - இனிமையான நிழலில் கண் துயிலும், Kan Thuyilum - கண்ணுறங்கப்பெற்ற தண் சேறை, Than Serai - திருச்சேறையி லெழுந்தருளி யிருக்கிற அம்மான் தன்னை, Ammaan Thannai - எம்பெருமான் விஷயமாக,- வாம்மான் தேர், Vaammaan Ther - ஓடிவருகின்ற குதிரைகள் பூண்ட தேரையுடையரான பரகாலன் கலிகன்றி, Parakalan Kalikanri - திருமங்கையாழ்வார் ஒலி, Oli - அருளிச் செய்த மாலை கொண்டு, Maalai Kondu - இச் சொல்மாலைகளைக் கொண்டு தொண்டீர், Thondir - ஓ பக்தர்களே!, தூ, Thoo - பரிசுத்தமாய் மாண் சேர், Maan Ser - மாட்சிமை தங்கியதாய் பொன், Pon - விரும்பத்தக்கதான அடிமேல், Adimael - (அப்பெருமானது) திருவடிகளின் மேல் நும் துணை கையால், Num Thunai Kaiyal - உங்களுடைய அஞ்ஜலிபந்தமான கைகளினால் தொழுது நின்று, Thozhudhu Nindru - ஸேவித்திருந்து சூட்டுமின், Sootumin - சூட்டுங்கோள். |