திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1588 | பெரிய திருமொழி || (7-5–தந்தை காலில்) (திருவழுந்தூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிராப்ய பூதனான அவன் வந்து நிற்கையாலே நமக்கு பிராப்ய பூமி தான் போலே இருந்தது என்று ஆதர அதிசயம் தோற்ற சொல்லுகிறது) 1 | தந்தை காலில் பெரு விலங்கு தாள விழ நல்லிருள் கண் வந்த
எந்தை பெருமானார் மருவி நின்ற ஊர் போலும்
முந்தி வானம் மழை பொழியும் மூவா வுருவில் மறையாளர்
அந்தி மூன்று அனல் ஓம்பும் அணியார் வீதி அழுந்தூரே –7-5-1 | பதவுரை Show / Hideவானம், Vaanam - மேகமானது முந்தி, Mundhi - (யாகஞ் செய்வதற்கு) முன்னமே மழை பொழிய, Mazhai Pozhiya - மழை பெய்யப்பெற்றதும், மூவா உருவின், Moova Uruvin - கிழத்தனமற்ற உருவத்தை யுடையரான மறையாளர், Maraiyalar - பிராமணர்கள் அந்திமூன்றும், Andhimoonrum - முச்சந்தியும் அனல் ஓம்பும், Anal Oombum - அக்நிஹோத்ரம் செய்யப்பெற்றதுமான அணி ஆர் வீதி, Ani Ar Veethi - அழகுமிக்க திருவீதிகளை யுடைய அழுந்தூர், Azhundhoor - திருவழுந்தூரென்னுந் திருப்பதியானது,- தந்தை, Thandhai - தகப்பனாராகிய வஸுதேவருடைய காலில், Kaali - காலிலே (பூட்டப்பட்டிருந்த) பெரு விலங்கு தாள் அவிழ, Peru Vilangu Thaal Avizha - பெரிய விலங்குப்பூட்டு இற்றுவிழும்படியாக நள் இருள் கண், Nal Irul Kan - நடுநிசியிலே வந்த, Vandha - திருவவதரித்த எந்தை பெருமானார், Endhai Perumaanar - எம்பெருமான் மருவி நின்ற, Maruvi Nindra - நித்யவாஸஞ் செய்யப்பெற்ற ஊர்போலும், Oorpolum - திவ்யதேசமாகும். |
| 1589 | பெரிய திருமொழி || (7-5–தந்தை காலில்) (திருவழுந்தூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பாரத சமரத்திலே பீஷ்மாதிகள் -அதி ரதர் மகா ரதர் -என்று இங்கனே ஆண் பிள்ளைகளாகப் பேர் பெற்று ஜீவித்து இருந்தோம் இப்போதாக பூசல் கோழைகளாக ஒண்ணாது -என்று சாரதி பக்கலிலே வந்து கிட்டுவது தேர் காலில் உழக்குண்டு போக ஒண்ணாது -என்று அகலுவதாய்க் கொண்டு அவர்கள் படுவுற்றை படா நின்றன வாய்த்துக் குருகு இனங்களும்) 2 | பாரித்து எழுந்த படை மன்னர் தம்மை மாளப் பாரதத்துத்
தேரில் பாகனாயூர்ந்த தேவ தேவனூர் போலும்
நீரில் பணைத்த நெடு வாளைக்கு அஞ்சிப் போன குருகினங்கள்
ஆரல் கவுளோடு அருகு அணையும் அணியார் வயல் சூழ் அழுந்தூரே –7-5-2 | பதவுரை Show / Hideநீரில் பனைத்த, Neeril Panaitta - தண்ணீரில் செழித்து வளர்ந்த நெடு வாளைக்கு, Nedu Valaikku - பெரிய மீன்களுக்கு அஞ்சி போன, Anji Pona - பயப்பட்டு ஓடிப்போன குருகு இனங்கள், Kurugu Inangal - குருகு என்னும் பறவைக் கணங்கள் ஆரல், Aaral - ஆரல் என்னஞ் சிறுமீனை கவுளோடு, Kavulodu - கதுப்பிலேகொண்டு அருகு அணையும், Arugu Anaiyum - பின்னையும் அணுகி வந்து சேரப்பெற்ற அணி ஆர் வயல் சூழ் அழுந்தூர், Ani Aar Vayal Soozh Azhundoor - அழகுமிக்க கழனிகளால் சூழப்பட்ட திருவழுந்தூரானது,- பாரித்து எழுந்த, Pariththu Ezhundha - (வெற்றி பெறவேணுமென்று) ஊக்கங்கொண்டு கிளர்ந்த படை மன்னர் தம்மை மாள, Padai Mannar Thammai Maala - ஆயுதபாணிகளான அரசர்கள் முடியும்படி பாரதத்து, Bharathaththu - பாரதப் போரில் தேரில், Theril - (அர்ஜுநனுடைய) தேரிலே பாகன் ஆய் ஊர்ந்து, Bhagan Aayi Oorndhu - ஸாரதியாயிருந்து கொண்டு நடத்தின தேவ தேவன், Deva Devan - வோதிதேவனுடைய ஊர் போலும், Oor Polum - திவ்யதேசமாகும். |
| 1590 | பெரிய திருமொழி || (7-5–தந்தை காலில்) (திருவழுந்தூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இந்த்ராதிகள் உடைய வஜ்ரத்துக்கு அழியாத பையல் தலைகளை மனிச்சுக்கு ஏகாந்தமான மிடுக்காலே அழித்தான் ஆய்த்து) 3 | செம்பொன் மதிள் சூழ் தென்னிலங்கைக்கு இறைவன் சிரங்கள் ஐ இரண்டும்
உம்பர் வாளிக்கு இலக்காக வுதிர்த்த வுரவோனூர் போலும்
கொம்பிலார்ந்த மாதவி மேல் கோதி மேய்ந்த வண்டினங்கள்
அம்பராவும் கண் மடவார் ஐம்பால் அணையும் அழுந்தூரே –7-5-3 | பதவுரை Show / Hideகொம்பில் ஆர்ந்த, Kombil Aarntha - கிளைகளினால் நிறைந்திருக்கிற மாதவி மேல், Maadhavi Mel - குருக்கத்தி மரத்தின் மேலே கோதி, Kothi - (தளிர்களைக்) கீறி மேய்ந்த, Meyndha - மதுபானம் பண்ணின வண்டு இனங்கள், Vandu Inangal - வண்டுத்திரள்கள் அம்பு அராவும் கண்மடவார், Ambu Aravum Kanmadavaar - அம்புபோன்ற கண்களை உடையரான மாதர்களினுடைய ஐம்பால், Aimpal - கூந்தலின் மீது அணையும், Anaiyum - வந்துசேரப் பெற்ற அழுந்தூர், Azhundhoor - திருவழுந்தூர்,- செம் பொன் மதில் சூழ், Sem Pon Mathil Soozh - செம்பொன் மயமான மதில்களாலே சூழப்பட்ட தென் இலங்கைக்கு, Then Ilangaiyku - தென்னிலங்காபுரிக்கு இறைவன், Iraivan - நாயகனான இராவணனது சிரங்கள் ஐ இரண்டும், Siralgal Ai Irandum - பத்து தலைகளையும் உம்பர்வாளிக்கு, Umbarvaaliku - ப்ரஹ்மாஸ்திரத்திற்கு இலக்கு ஆக, Ilakku Aaga - வக்ஷியமாக்கி உதிர்த்த, Uthirtha - அறுத்தொழித்த உரவோன், Uravon - பொருமிடுக்கனான பெருமானுடைய ஊர் போலும், Oor Polum - திவ்யதேசமாகும். |
| 1591 | பெரிய திருமொழி || (7-5–தந்தை காலில்) (திருவழுந்தூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சேறு என்றால் இறாய்க்கக் கடவ வவை-அங்கு உள்ள போக்யதையின் மிகுதியாலே அத்தை மதியாதே சஞ்சரியா நிற்கும்-இத்தால் சொல்லிற்று ஆய்த்து-பிரளயம் என்று பாராதே ஜகத் ரஷணத்துக்காக ஸ்ரீ மகா வராஹம் ஆனது இறங்குமா போலே இரா நின்றது ஆய்த்து) 4 | வெள்ளத்துள் ஓர் ஆலிலை மேல் மேவி யடியேன் மனம் புகுந்து என்
உள்ளத்துள்ளும் கண்ணுள்ளும் நின்றார் நின்ற ஊர் போலும்
புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடித் போன காதல் பெடையோடும்
அள்ளல் செறுவில் கயல் நாடு மணியார் வயல் சூழ் அழுந்தூரே –7-5-4 | பதவுரை Show / Hideகாதல் பெடையோடும், Kaadhal Pedaiyodum - அன்பார்ந்த பேடையொடு கூடி (- (அணி ஆர் வயல் சூழ் அழுந்தூர்-;)) பிள்ளைக்கு இரை தேடி போன, Pillaiyku Irai Thedi Pona - குட்டிக்காக இரைதேடிக் கொண்டு சென்ற புள்ளு, Pullu - பறவையானது அள்ளல் செறுவில், Allal Seruvil - சேறு மிக்க விளை நிலங்களிலே கயல், Kayal - மீன்கள் நாடும், Naadum - தேடப்பெற்ற வெள்ளத்துள், Vellathul - பிரளய வெள்ளம் நேர்ந்த காலத்தில் ஓர் ஆல் இலை மேல் மேவி, Oor Aal Ilai Mel Mevi - ஒப்பற்றவொரு ஆலந்தளிரின் மீது பொருந்தியிருந்து அடியேன் மனம் புகுந்து, Adiyein Manam Pugundhu - (அந்த நிலைமையுடனே) அடியேனது நெஞ்சினுட புகுந்து என் உள்ளத் துள்ளும், En Ullath Thullum - எனது அந்த நெஞ்சினுள்ளும் கண்ணுள்ளும், Kannullum - கண்களிணுள்ளும் நின்றார், Nindraar - நிலைத்து நின்ற பெருமான் நின்ற, Nindra - நித்யவாஸம் பண்ணுகிற ஊர் போலும், Oor Polum - திவ்யதேசமாகும். |
| 1592 | பெரிய திருமொழி || (7-5–தந்தை காலில்) (திருவழுந்தூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஜகதாகாரனானவன் அசாதாரண விக்ரஹத்தைக் கண்டு அனுபவிக்கலாம் படி வந்து நிற்கிற ஊர் போலும்) 5 | பகலும் இரவும் தானேயாய்ப் பாரும் விண்ணும் தானேயாய்
நிகரில் சுடராய் இருளாகி நின்றார் நின்ற ஊர் போலும்
துகிலின் கொடியும் தேர்த் துகளும் துன்னி மாதர் கூந்தல் வாய்
அகிலின் புகையால் முகில் ஏய்க்கும் அணியார் வீதி அழுந்தூரே –7-5-5 | பதவுரை Show / Hideதுகிலின் கொடியும், Thugilin Kodiyum - துணிகளோடு கூடின துவஜங்களும் (- (அழுந்தூர்-;)) தேர் துகளும், Ther Thughalum - தேர் நடத்தும் போது உண்டாகும் தூள்களும் துன்னி, Thunni - நெருங்கி மாதர், Maathar - ஸ்திரீகளுடைய கூந்தல், Koondhal - கூந்தலிலே (ஊட்டப்பட்ட) அகிலின் புகையால், Akilin Pugaiyaal - அகிற்புகையுமாகிய இவற்றால் முகில் ஏய்க்கும், Mugil Aiykkum - வர்ஷகாலத்தை ஒத்திருக்கின்ற அணி ஆர் வீதி, Ani Ar Veethi - அழகிய திருவீதிகளை யுடைத்தான பகலும் இரவும் தானே ஆய், Pagalum Iravum Thaaney Aay - பகற்போதுக்கும் இராப் போதுக்கம் நியாமகனாய் பாரும் விண்ணும் தானே ஆய், Paarum Vinnum Thaaney Aay - லீலா விபூதிக்கும் நித்ய வீபூதிக்கும் நியாமகனாய் நிகர் இல் சுடர் ஆய், Nikar Il Sudar Aay - ஒப்பில்லாத தேஜஸ் பதார்த்தங்களுக்கும் ப்ரகாரியாய் இருள் ஆயி நின்றார், Irul Aayi Nindraar - இருளையும் ப்ரகாரமாக வுடையரான பெருமாள் நின்ற, Nindra - நித்யவாஸம் பண்ணப்பெற்ற ஊர் போலும், Oor Polum - திவ்யதேசமாகும். |
| 1593 | பெரிய திருமொழி || (7-5–தந்தை காலில்) (திருவழுந்தூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (என்னைப் பெறுகையால் வந்த அலாப்ய லாபம்தன்னது என்னும் இடம் தோற்ற ஸ்மிதம் பண்ணி – தான் செய்தது விலக்காத படியான தசையை எனக்கு பிறப்பித்து-என் அருகே வந்து நின்று அது சாத்மித்தவாறே ஹிருதயத்திலே வந்து புகுந்து இனி இவருக்கு ஒரு போக்கு இல்லை என்று தோற்ற நிற்கிறவர்) 6 | ஏடிலங்கு தாமரை போல் செவ்வாய் முறுவல் செய்தருளி
மாடு வந்து என் மனம் புகுந்து நின்றார் நின்ற ஊர் போலும்
நீடு மாடத் தனிச் சூலம் போழ்கக் கொண்டல் துளி தூவ
ஆடல் அரவத் தார்ப்போவா அணியூர் வீதி அழுந்தூரே –7-5-6 | பதவுரை Show / Hideநீடு மாடம், Needu Maadam - (நாட்டப்பட்ட) உயர்ந்த மாடங்களில் (- (அணி ஆர் வீதி அழுந்தூர்)) தனி சூலம், Thani Soolem - ஒப்பற்ற சூலமானது போழ்க, Pozhga - (மேகத்தின் வயிற்றைக்) கீண்ட வளவிலே கொண்டல், Kondhal - மேகமானது துளி தூவ, Thuli Thoova - மழை பொழியப் பெற்றதும் ஆடல் அரவத்து ஆர்ப்பு ஓவா, Aadal Aravathu Aarppu Ovaa - கூத்தாட்டவொலிகளினாலுண்டான கோலாஹலம் ஓயாமலிருக்கப்பெற்றதுமான ஏடு இலங்கு தாமரை போல், Aedu Ilangu Thaamarai Pol - இதழ்விளங்குகின்ற தாமரைப்பூ மலர்ந்தாலொப்ப செம் வாய் முறுவல் செய்தருளி, Sem Vaai Muruvai Seitharuliy - சிவந்த திருப்பவளத்தினால் புன்முறுவல் செய்துகொண்டு மாடு வந்து, Maadu Vandu - என் பக்கலிலே வந்து என்மனம் புகுந்து நின்றார், Enmanam Pugundhu Nindrar - என்மனத்திலே புகுந்து நின்றபெருமாள் நின்ற, Nindra - நித்யவாஸம் பண்ணப்பெற்ற ஊர் போலும், Oor Polum - திவ்ய தேசமாகும். |
| 1594 | பெரிய திருமொழி || (7-5–தந்தை காலில்) (திருவழுந்தூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிரிவை பிரசங்கித்து-என்னுடைய கண்ணும் கண்ணீருமான ஆற்றாமையைக் கண்டு பின்னை கால் வாங்கிப் போக மாட்டாதே நின்றவர் நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் போலும்) 7 | மாலைப் புகுந்து மலரணை மேல் வைகி அடியேன் மனம் புகுந்து என்
நீலக் கண்கள் பனி மல்க நின்றார் நின்ற ஊர் போலும்
வேலைக் கடல்போல் நெடு வீதி விண்டோய் சுதை வெண் மணி மாடத்து
ஆலைப் புகையால் அழல் கதிரை மறைக்கும் வீதி அழுந்தூரே –7-5-7 | பதவுரை Show / Hideவேலை கடல் போல, Velaikadal Pola - கரையையுடைய ஸமுத்ரம் போல (- (அழுந்தூர்-;) (பின்பு பிரிவதாக பிரஸங்கித்து)) நெடு, Nedu - நீண்டிருக்கின்ற வீதி, Veethi - வீதிகளிலுண்டான விண் தோய், Vin Thoy - ஆகாசத்தளவு மோங்கியிருக்கிற சுதை வெண்மணி மாடத்து, Suthai Venmani Maadathu - சாந்திட்டு வெளுத்திருக்கின்ற திருமாளிகைகளின் மேல் அழல் கதிரை, Azhai Kathirai - ஸூர்யகிரணங்களை ஆலைப் புகையால், Aalaip Pugaiyal - ஆலையாடிக்கிளர்ந்த புகையினால் மறைக்கும், Maraikkum - மறைக்கப்பெற்ற வீதி, Veethi - தெருக்களையுடைத்தான மாலை புகுந்து, Maalai Pugundhu - மாலைப்பொழுதிலே வந்து மலர் அணை மேல் வைகி, Malar Anai Mel Vaiki - பூம்படுக்கையில் தங்கியிருந்து அடியேன் மனம் புகுந்து, Adiyein Manam Pugundhu - அடியேனுடைய மனத்திற் பிரவேசித்து என் நீலம் கண்கள், En Neelam Kangal - எனது நீலோற்பலம் போன்ற கண்கள் பனி மல்க, Pani Malka - நீர் தளும்பும்படி நின்றார், Nindraar - நின்று கொண்டிருந்தவர் நின்ற, Nindra - நித்யவாஸம் பண்ணுகிற ஊர் போலும், Oor Polum - திவ்யதேசமாகும் |
| 1595 | பெரிய திருமொழி || (7-5–தந்தை காலில்) (திருவழுந்தூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இன்ன பரிமாற்றம் பெற்றிலோம் -என்கிற அத்ருப்தி நெஞ்சில் கிடவாதபடி யாக வாய்த்து நெஞ்சிலே குறைவறப் புகுந்து நின்றபடி) 8 | வஞ்சி மருங்கிலிடை நோவ மணந்து நின்ற கனவகத்து என்
நெஞ்சு நிறையக் கை கூப்பி நின்றார் நின்ற ஊர் போலும்
பஞ்சியன்ன மெல்லடி நற்பாவை மார்கள் ஆடகத்தின்
அஞ்சிலம்பின் ஆர்ப்போவா அணியார் வீதி அழுந்தூரே –7-5-8 | பதவுரை Show / Hideபஞ்சி அன்ன மெல் அடி, Panjai Anna Mel Adi - பஞ்சுபோன்ற மிருதுவான பாதங்களையுடைய (- (அணி ஆர் வீதி அழுந்தூர்-)) நல் பாவைமார்கள், Nal Paavaimargal - நல்ல ஸ்திரீகளினுடைய ஆடகத்தின் அம் சிலம்பின், Aadakathin Am Silampin - பொன்மயமான அழகிய சிலம்புகளினின்று முண்டான ஆர்ப்பு, Aarppu - ஆரவாரமானது ஓவா, Ovaa - இடைவிடாதிருக்கிற வஞ்சி, Vanjci - வஞ்சிக்கொடிபோன்ற மருங்குல் இடை, Marungul Idai - இடுப்பானது நோவ, Nova - நோகும்படியாக மணந்து நின்ற, Manandhu Nindra - ஸம்ச்சேஷித்து நின்ற கனவகத்து, Kanavakathu - கனவிலே என் நெஞ்சு நிறையா, En Nenju Niraiyaa - எனது நெஞ்சு நிறையுமாறு கை கூப்பி, Kai Koopi - நான அஞ்ஜலி செய்யப்பெற்று நின்றார், Nindraar - நின்று கொண்டிருந்தவர் நின்ற, Nindra - நித்யவாஸம் பண்ணுகிற ஊர் போலும், Oor Polum - திவ்யதேசமாகும். |
| 1596 | பெரிய திருமொழி || (7-5–தந்தை காலில்) (திருவழுந்தூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இத்தலையில் உள்ளதை சர்வ ஸ்வாபஹாரம் பண்ணி தன் பக்கல் உள்ளது ஒன்றும் தொங்காத படி பண்ணிப் போந்த சுத்தியை உடையவர் வர்த்திக்கிற தேசம் போலும்) 9 | என் ஐம் புலனும் எழிலும் கொண்டு இங்கே நெருநல் எழுந்து அருளிப்
பொன்னங்கலைகள் மெலிவெய்தப் போன புனிதரூர் போலும்
மன்னு முது நீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட
அன்னம் பெடையோடு உடனாடும் அணியார் வயல் சூழ் அழுந்தூரே –7-5-9 | பதவுரை Show / Hideமன்னு முது நீர், Mannu Muthu Neer - ஒருநாளும் தண்ணீர் வற்றாத ஆழ்ந்த நீர் நிலைகளிலுள்ள தாமரைப்பூக்களிலே (- (அந்த இசைப்பாட்டுக்குச் சேர) (அணி ஆர் வயல் சூழ் அழுந்தூர்-,)) அரவிந்தம் மலர் மேல், Aravindham Malar Mel - தாமரைப்பூக்களிலே வரி வண்டு, Vari Vandu - வரி வண்டுகள் இசை பாட, Isai Paada - இசைகளைப் பாடா நிற்க அன்னம், Annam - அன்னப்பறவை பொடை யோடும், Podai Yodum - தன் பேடையோடுகூட ஆடும், Aadum - நர்த்தனம் பண்ணப்பெற்ற இங்கே, Inge - நானிருக்குமிடத்து எழுந்நருளி, Ezhunnaruli - எழுந்தருளி என் ஐம்புலனும், En Aimpulanum - எனது பஞ்சேந்திரய அறிவையும் எழிலும், Ezhilum - அழகையும் கொண்டு, Kondhu - கொள்ளைகொண்டு பொன் அம் கலைகள், Pon Am Kalaigal - மிக அழகிய (எனது) வஸ்திரங்கள் மெலிவு எய்த, Melivu Eytha - தளரும்படியாகச் செய்து போன, Pona - பிரிந்துபோன புனிதர், Punithar - பரமபவித்திரருடைய ஊர் போலும், Oor Polum - திவ்யதேசமாகும். |
| 1597 | பெரிய திருமொழி || (7-5–தந்தை காலில்) (திருவழுந்தூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சொல்களால் சம்ருத்தமாய் உள்ள தமிழ் தொடையை வாயாலே சொல்ல – பாவத்தை உண்டாக்குவதானாலும் தவிர ஒண்ணாததைச் சொல்ல பாவங்கள் தன்னடையே போம்) 10 | நெல்லில் குவளை கண் காட்ட நீரில் குமுதம் வாய் காட்ட
அல்லிக் கமலம் முகம் காட்டும் கழனி அழுந்தூர் நின்றானை
வல்லிப் பொதும்பில் குயில் கூவும் மங்கை வேந்தன் பரகாலன்
சொல்லில் பொதிந்த தமிழ் மாலை சொல்லப் பாவம் நில்லாதே –7-5-10 | பதவுரை Show / Hideநெல்லில், Nellil - நெற்பயிரினிடையே (முளைத்த) குவளை, Kuvazhai - கருநெய்தற் பூக்கள் கண் காட்ட, Kan Kaatta - (அவ்வூர் பெண்களது) கண்கள் போன்றுவிளங்கவும் நீரில், Neeril - நீரிலே முளைத்த குமுதம், Kumudham - ஆமபல் பூக்கள் வாய் காட்ட, Vaai Kaatta - (அவர்களது) வாய் போன்று விளங்கவும் அல்லி கமலம், Alli Kamalam - இதழ்மிக்க தாமரைப் பூக்கள் முகம் காட்டும், Mugam Kaatum - (அவர்களது) முகம்போன்று விளங்கவும் பெற்ற கழனி, Kazhani - கழனிகளையுடைய அழுந்தூர், Azhundhoor - திருவழுந்தூரிலே நின்றானை, Nindraanai - எழுந்தருளியிருக்கு மெம்பிரான் விஷயமாக.- வல்லி பொதும்பில், Valli Pothumbil - பூங்கொடிகள் மிக்க முழஞ்சுகளிலே குயில் கூவும், Kuyil Koovum - குயில்கள் கூவப்பெற்ற மங்கை, Mangai - திருமங்கை நாட்டுக்கு வேந்தன், Vendan - தலைவரான பரகாலன், Parakalan - ஆழ்வார் (அருளிச்செய்த) சொல்லில் பொலிந்த, Sollil Polintha - நல்ல சொற்களினால் விளங்குகின்ற தமிழ் மாலை, Tamil Maalai - இத்தமிழ்ப் பாசுரங்களை சொல்ல, Solla - ஓதவே பாவம், Paavam - பாவங்கள் நில்லா, Nilla - இல்லையாய் விடும். |