திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 7-6 சிங்கமதாய் (10 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1598பெரிய திருமொழி || (7-6–சிங்கமதாய்) (திருவழுந்தூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவ் ஊரில் உள்ளார் உடைய ஜன்மமும் இன்றிக்கே ஸ்ரீ பிரகலதான் உடைய படியும் இன்றிக்கே இருக்கிற நான் கண்டு அனுபவிக்கப் பெற்றேன்) 1
சிங்கமதாய் அவுணன் திரளாகம் முன் கீண்டுகந்த சங்கமிடத்தானைத் தழலாழி வலத்தானைச் செங்கமலத் தயனனை பார் தென் அழுந்தையில் மன்னி நின்ற அங்கமலக் கண்ணனை யடியேன் கண்டு கொண்டேனே –7-6-1
பதவுரை Show / Hide
முன், Mun - முன்னொருகால்,
சிங்கம் அது ஆய், Singam Adhu Aai - நரசிம்ஹ ரூபியாய்க்கொண்டு
அவுணன், Avunan - இரணியாசுரனுடைய
திறல் ஆகம், Thiral Aagam - வலிமிக்க மார்வை
கீண்டு, Keendu - இருபிளவாக்கி
உகந்த, Ugantha - திருவுள்ளமுவந்தவனும்
சங்கம் இடத்தானை, Sangam Idaththaanai - சங்கை இடத்திருக்கையிலுடையவனும்
தழல் ஆழி வலத்தானை, Thazhal Aazhi Valaththaanai - தீக்ஷ்ணமான திருவாழியை வலத்திருக்கையிலுடையவனும்
செம் கமலத்து அயன் அனையார், Sem Kamalaththu Ayan Anaiyaar - செவ்விய (திருநாயிக்) கமலத்திற் பறந்த பிரமனைப்போன்ற  பிராமணர்கள் (வாழ்கிற)
தென் அழுந்தையில் மன்னி நின்ற, Then Azhundhaiyil Manni Nindra - அழகிய திருவழுந்தூரிலே நித்யவாஸம் செய்பவனும்
அம் கமலம் கண்ணனை, Am Kamalam Kannanai - அழகிய தாமரை மலர் போன்ற திருக்கண்களையுடையனுமான ஆமருவியப்பனை
அடியேன் கண்டு கொண்டேன், Adiyen Kandu Konden - அடியேன் ஸேவிக்கப்பெற்றேன்.
1599பெரிய திருமொழி || (7-6–சிங்கமதாய்) (திருவழுந்தூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அசாதாரண பரிகரத்துக்கு ஐயோ என்று கிருபையைப் பண்ணி ஸ்ரீ திரு வழுந்தூரிலே வந்து நிற்கிற அயர்வறும் அமரர்கள் அதிபதியை-நான் கண்ணாலே காணப் பெற்று ஷோபம் அடையத் தீர்ந்து களிக்கப் பெற்றேன்) 2
கோவானார் மடியக் கொலையார் மழுக் கொண்டு அருளும் மூவா வானவனை முழு நீர் வண்ணனை யடியார்க்கு ஆவா வென்று இரங்கித் தென் அழுந்தையில் மன்னி நின்ற தேவாதி தேவனை யான் கண்டு கொண்டு திளைத்தேனே –7-6-2
பதவுரை Show / Hide
கோ ஆனார், Ko Aanaar - க்ஷத்ரியர்களென்று பேர் பெற்றவரடங்கலும் (- (தென் அழுந்தையில் மன்னி நின்ற -;))
மடிய, Madiya - மடிந்தொழியும்படி
கொலை ஆர் மழு, Kolai Aar Mazhu - கொலைத்தொழில் வல்ல மழுப்படையை
கொண்டருளும், Kondarulum - (திருக்கையில்) ஏந்தியுள்ளவனும்
மூவா வானவனை, Moova Vaanavanai - கிழத்தனம் முதலிய விகாரங்களில்லாத தேவாதி தேவனும்
முழுநீர் வண்ணனை, Muzhunir Vannnai - கடல்போன்ற திருநிறத்தை யுடையவனும்
அடியார்க்கு, Adiyarkku - அடியார் விஷயத்திலே
ஆ ஆ என்று இரங்கி, Aa Aa Endru Irangi - ஐயோவென்று கிருபை பண்ணி
தேவாதி தேவனை, Devaadhi Devanai - தேவர்கட்கும் சிறந்த தேவனுமான பெருமானை
யான் கண்டு கொண்டு, Yaan Kandu Kondo - அடியேன் ஸேவித்து
திளைத்தேன், Thilaiththen - களிக்கப்பெற்றென்.
1600பெரிய திருமொழி || (7-6–சிங்கமதாய்) (திருவழுந்தூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நித்ய விபூதி உக்தனான சம்பத்துக்கு மேலே ஓன்று காணும் –ஸ்ரீ திரு வழுந்தூருக்கு கடவன் ஆனது – அநந்ய கதியான நான் கிட்டப் பெற்று –அசந்நேவ -என்னும் நிலை தவிர்ந்து –உஜ்ஜீவித்து –க்ருதார்த்தனாகப் பெற்றேன்) 3
உடையானை யொலி நீர் உலகங்கள் படைத்தானை விடையானோடே அன்று விறலாழி விசைத்தானை அடையார் தென்னிலங்கை அழித்தானை யணி யழுந்தூர் உடையானை அடியேன் அடைந்து உய்ந்து போனேனே –7-6-3
பதவுரை Show / Hide
உடையானை, Udaiyanai - ஸர்வஸ்வாமியானவனும் (- (அடியேன் அடைந்து-;-))
ஒலி நீர் உலகங்கள் படைத்தானை, Oli Neer Ulagangal Padaiththaanai - கடல் சூழ்ந்த உலகங்களைப் படைத்தவனும்
அன்று, Andru - பாணாஸுர யுத்தத்தினன்று
விடையான் ஓட, Vidaiyaan Oda - பரமசிவன் தோற்று ஓடும்படி
விறல் ஆழி, Virhal Aazhi - வலிமிக்க திருவாழியை
விசைத்தானை, Visaiththaanai - வேகமாகப் பிரயோகித்தவனும்
அடையார் தென் இலங்கை அழித்தானை, Adaiyaar Then Ilangai Azhiththaanai - பகைவர் நிறைந்திருக்கிற தென்னிலங்கையை அழியச்செய்தவனும்
அணி அழுந்தூர் உடையானை, Ani Azhundhoor Udaiyanai - அழகிய திருவழுந்தூரை இருப்பிடமாக வுடையனுமான பெருமானை
உய்ந்து போனேன், Uyinthu Poneen - உஜ்ஜீவித்து விட்டேன்.
1601பெரிய திருமொழி || (7-6–சிங்கமதாய்) (திருவழுந்தூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அன்று பசுவின் நெய்யை அமர்ந்து அமுது செய்த ஸ்ரீ திரு வழுந்தூர் நின்றானை- ஸ்ரீ திருவாய்ப்பாடியிலே நின்ற படி யாய்த்து இங்கு நிற்பது – கண்ணாலே காணப் பெற்று அபூர்ணனான நான் பூர்ணனாகப் பெற்றேன்) 4
குன்றால் மாரி தடுத்தவனைக் குல வேழம் அன்று பொன்றாமை அதனுக்கு அருள் செய்த போர் ஏற்றை அன்று ஆவின் நறு நெய் அமர்ந்து உண்ண வணி யழுந்தூர் நின்றானை யடியேன் கண்டு கொண்டு நிறைந்தேனே –7-6-4
பதவுரை Show / Hide
குன்றால், Kundraal - கோவர்த்தந கிரியைக்கொண்டு (- (அடியேன் கண்டுகொண்ட-;))
மாரி, Maari - பெருமழையை
தடுத்தவனை, Thaduthavanai - தடை செய்தவனும்
குலம் வேழம், Kulam Vezham - சிறந்தகுலத்துப் பிறந்த கஜேந்திராழ்வான்
பொன்றாமை, Pondraamai - (முதலைவாய்ப்பட்டு) முடிந்து போகாமல்
அன்று, Andru - அக்காலத்து
அதனுக்கு அருள்செய்த, Adhanukku Arulcheytha - அதற்கு அருள்புரிந்தவனும்
போர் ஏற்றை, Por Aetrai - போர் செய்யவல்ல காளை போன்றவனும்
ஆவின் நறு நெய், Aavin Naru Ney - பசுவின மண நெய்யை
அமர்ந்து உண்ண, Amarnthu Unna - விரும்பியமுதுசெய்ய
அன்று, Andru - அன்றேபிடித்து
அணி அழுந்தூர் நின்றானை, Ani Azhundoor Nindraanai - அழகிய திருவழுந்தூரில் நிற்பவனமான பெருமானை
நிறைந்தேன், Niraindhen - குறையற்றவனானேன்.
1602பெரிய திருமொழி || (7-6–சிங்கமதாய்) (திருவழுந்தூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரமஹரமான வடிவை உடையனாய்க் கொண்டு தாபத்ரயம் போம் படி நின்றவனை தாபத் த்ரயத்தாலும் தப்தனாய் இருக்கிற நான் கண்டு என்னுடைய தாபத்ரயங்கள் தீரப் பெற்றேன்) 5
கஞ்சனைக் காய்ந்தானைக் கண்ண மங்கையுள் நின்றானை வஞ்சனப் பேய் முலை யூடு உயிர் வாய் மடுத்து உண்டானைச் செஞ்சொல் நான் மறையோர் தென் அழுந்தையில் மன்னி நின்ற அஞ்சனக் குன்றன் தன்னை அடியேன் கண்டு கொண்டேனே –7-6-5
பதவுரை Show / Hide
கஞ்சனை, Kanjanai - கம்ஸனை (- (தென் அழுந்தையில் மன்னி நின்ற -;) (அடியேன் கண்டுகொண்டேன்-))
காய்ந்தானை, Kaindhaanai - சீறித் தொலைத்தவனும்
கண்ண மங்கையுள் நின்றானை, Kanna Mangaiyul Nindraanai - திருக்கணணமங்கையில் நிற்பவனும்
வஞ்சனம், Vanjanam - வஞ்சனையையுடையளான
பேய், Pei - பேய்ச்சியினுடைய
முலையூடு, Mulaiyoodhu - முலைவழியே
வாய் மடுத்து, Vaai Maduthu - வாய் வைத்து
உயிர், Uyir - (அவளது) பிராணனை
உண்டானை, Undhaanai - அபஹரித்தவனும்,
செம் சொல் நால் மறையோர், Sem Sol Naal Maraiyore - அழகிய சொற்கள் நிறைந்த நான்குவேதங்களையும் வல்ல வைதிகர்கள் வாழ்கிற
அஞ்சனம் குன்றம் தன்னை, Anjanam Kuntram Thannai - மைமலைபோன்ற வடிவழகையுடையவனுமான பெருமானை
1603பெரிய திருமொழி || (7-6–சிங்கமதாய்) (திருவழுந்தூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திரு அழுந்தூரில் உண்டான பிராமணர் ஆனவர்கள் திருவடிகளில் ஆஸ்ரயிக்கும் படியாக நிற்கிற ஸ்ரமஹரமான வடிவை உடையவனை –அனந்யார்ஹனான நான் கண்டு கொண்டு களிக்கப் பெற்றேன்) 6
பெரியானை யமரர் தலைவற்கும் பிரமனுக்கும் உரியானை உகந்தான் அவனுக்கும் உணர்வதனுக்கு அரியானை அழுந்தூர் மறையோர்கள் அடி பணியும் கரியானை அடியேன் கண்டு கொண்டு களித்தேனே –7-6-6
பதவுரை Show / Hide
பெரியானை, Periyaanai - எல்லாசிலும் மேம்பட்டவனும் (- (அடியேன் கண்டுகொண்டு களித்தேன்-.))
அமரர் தலைவற்கும், Amarar Thalaivarkkum - தேவேந்திரனுக்கும்
பிரமனக்கும், Brahmanakkum - ப்ரஹ்மாவுக்கும்
யானை உரி உகந்தானவனுக்கும், Yaanai Uri Uganthaanavanukkum - யானைத்தோலை உகந்து திரிக்கின்ற சிவபிரானுக்கும்
உணர்வதனுக்கு அரியானை, Unarvadhanukku Ariyaanai - உள்ளபடி அறியக்கூடாதவனும்
அழுந்தூர், Azhundhoor - திருவழுந்தூரிலே
மறை யோர்கள், Marai Yorgal - வைதிகர்கள்
அடி பணியும், Adi Paniyum - திருவடிதொழப்பெற்ற
கரியானை, Kariyanai - நீலநிறத்தனுமான பெருமான
1604பெரிய திருமொழி || (7-6–சிங்கமதாய்) (திருவழுந்தூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திரு வழுந்தையிலே நித்ய வாஸம் பண்ணுகிற –அடி உடைத்தான கல்பகம் ஆய்த்து- ஸ்வர்க்கத்திலே நிராலம்பநமாக நிற்கிறது அன்றிக்கே பூமியிலே வேர்ப் பற்று உண்டான கற்பகத்தைக் கண்டு கொண்டு என் சர்வ அபேஷிதங்களையும் பெற்று ஹ்ருஷ்டன் ஆனேன்) 7
திருவாழ் மார்பன் தன்னைத் திசை மண் எரி நீர் முதலா உருவாய் நின்றவனை யொலி சேரும் மாருதத்தை அருவாய் நின்றவனைத் தென் அழுந்தையில் மன்னி நின்ற கருவார் கற்பகத்தைக் கண்டு கொண்டு களித்தேனே –7-6-7
பதவுரை Show / Hide
திரு வாழ் மார்வன் தன்னை, Thiru Vaal Marvan Thannai - பிராட்டி வாழ்கிற திருமார்பை யுடையவனும் (- (தென் அழுந்தையில் மன்னி நி்ன்ற-;) (கண்டுகொண்டு களித்தேன்-.))
திசை மண் நீர் எரி முதலா, Thisai Mann Neer Eri Muthalaa - திக்குகளென்ன பூமியென்ன ஜலமென்ன அக்னியென்ன ஆகிய இவை முதலான
உரு ஆய் நின்றவனை, Uru Aayi Nindra Vanai - பதார்த்தங்களாய் நிற்பவனும்
ஒலி சேரும் மாருதத்தை, Oli Serum Maarudhatthai - சப்தத்தையும் குணமாகவுடைய வாயுவுக்கு நிர்வாஹகனும்
அரு ஆய் நின்றவனை, Aru Aayi Nindra Vanai - அரூபியாயிருப்பவனும்
கரு ஆர் கற்பகத்தை, Karuu Aar Karppagaththai - வேர்ப்பற்றையுடைத்தான கல்பவ்ருக்ஷம் போன்றவனுமான பெருமானை
1605பெரிய திருமொழி || (7-6–சிங்கமதாய்) (திருவழுந்தூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (முது நான்மறை உண்டு -பாசி பூத்த வேதம் –அது திரு வீதிகள் தோறும் திரைக் கிளப்பத்தை உடைய கடல் போலே கோஷியா நின்றுள்ள ஸ்ரீ தென் அழுந்தையில் மன்னி நின்ற – சகல கலைகளாலும் புருஷார்த்தமாக பிரதிபாதிக்கப் பட்டவனைக் கண்டு கொண்டு என் சர்வ அபேஷிதங்களையும் பெற்று ஹ்ருஷ்டன் ஆனேன்) 8
நிலையாளாக வென்னை உகந்தானை நிலமகள் தன் முலையாள் வித்தகனை முது நான்மறை வீதி தோறும் அலையாரும் கடல் போல் முழங்கும் தென் அழுந்தையில் மன்னி நின்ற கலையார் சொற்பொருளைக் கண்டு கொண்டு களித்தேனே –7-6-8
பதவுரை Show / Hide
என்னை, Ennai - என்னை (- (தென் அழுந்தையில் மன்னி நின்ற -;) (கண்டுகொண்டு களித்தேன்-.))
நிலை ஆள் ஆக, Nilai Aal Aaga - நிலைநின்ற அடியவனாக
உகந்தானை, Uganthaanai - உகந்து திருவுள்ளம் பற்றினவனும்
நிலம் மகள் தன், Nilam Magal Than - பூமிப்பிராட்டியினுடைய
முலை, Mulai - திருமுலைத்தடங்களை
ஆள், Aal - ஆளவல்ல
வித்தகனை, Viththakanai - ஸமர்த்தனும்
வீதி தொறும், Veethi Thorum - தெருக்கள் தோறும்
முது நால் மறை, Muthu Naal Marai - புராதனமான நால் வேதங்களும்
அலை ஆரும் கடல் போல் முழங்கும், Alai Aarum Kadal Pol Muzhangu - அலைகள் நிரம்பிய கடல் போலப் பெருமுழக்கம் செய்யப்பெற்ற
கலை ஆர் சொல் பொருளை, Kalai Aar Sol Porulai - சாஸ்த்ரங்களில் நிறைந்துள்ள சொற்களுக்குப் பொருளாயிருப்பவனுமான பெருமானை
1606பெரிய திருமொழி || (7-6–சிங்கமதாய்) (திருவழுந்தூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திரு அழுந்தூரிலே நித்ய வாஸம் பண்ணுகிற – கார் காலத்திலேயே மேகம் போலே ஸ்ரமஹரமான வடிவு அழகை உடையவனை – கண்கள் குளிரக் காணப் பெற்று ஹ்ருஷ்டன் ஆனேன்) 9
பேரானைக் குடந்தை பெருமானை இலங்கொளி சேர் வாரார் வனமுலையாள் மலர்மங்கை நாயகனை ஆராவின்னமுதைத் தென் அழுந்தையில் மன்னி நின்ற காரர் கரு முகிலைக் கண்டு கொண்டு களித்தேனே –7-6-9
பதவுரை Show / Hide
பேரானை, Peraanai - திருப்பேர்நகரில் பள்ளி கொண்டிருப்பவனும (- (தென் அழுந்தையில் மன்னி நின்ற-) (கண்டுகொண்டு களித்தேன்-.))
குடந்தை பெருமானை, Kudandhai Perumaanai - திருக்குடந்தையில் தன் பெருமைகளெல்லாந் தோற்ற சயனித் திருப்பவனும்
இலங்கு ஒளி சேர், Ilangu Oli Ser - விளங்குகின்ற காந்தியோடு கூடின
வார் ஆர், Vaar Aar - கச்சுநிறைந்த
வனம் முலையாள், Vanam Mulaiyal - அழகிய முலைகளையுடைளான
மலர்மங்கை, Malar Mangai - பெரிய பிராட்டியார்க்கு
நாயகனை, Nayakanai - வல்லபனும்
ஆரா இன் அமுதை, Aara In Amuthai - எவ்வளவு அநுபவித்தாலும் த்ருப்திபெறமுடியாத இனிய அமுதம் போன்றவனும்
கார் ஆர் கரு முகிலை, Kaar Ar Karu Mukilai - மழை காலத்துக் காளமேகம் போன்றவனுமான பெருமானை
1607பெரிய திருமொழி || (7-6–சிங்கமதாய்) (திருவழுந்தூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அடைவில் தப்பாதபடி அனுசந்திக்க வல்லவர்கள்-ஆண்மின்கள் வானகம் -என்கிறபடியே த்ரிபாத் விபூதி அடையத் தாங்கள் இட்ட வழக்காகப் பெறுவர்கள்) 10
திறல் முருகன் அனையார் தென் அழுந்தையில் மன்னி நின்ற அறமுதல் ஆனவனை யணி யாலியர் கோன் மருவார் கறை நெடுவேல் வலவன் கலிகன்றி சொல் ஐ இரண்டும் முறை வழுவாமை வல்லார் முழுதாள்வர் வானுலகே –7-6-10
பதவுரை Show / Hide
திறல் முருகன் அனையார், Thiral Murugan Anaiyar - வலிமையில் ஸுப்ரஹ்மண்யன் போன்றவாகள் நிறைந்த (- (தென் அழுந்தையில், மன்னி நின்ற-;))
அறம் முதல்வனவனை, Aram Muthalvanavanai - ஸகலதர்மங்களுக்கும் மூலகாரணமான பெருமாள் விஷயமாக,
அணி ஆலியர் கோன், Ani Aliyar Kon - அழகிய திருவாலிப்பதியிலுள்ளார்க்குத் தலைவராய்
மருவார், Maruvar - பகைவருடைய
கறை, Karai - ரக்தக்கறையையுடைத்தான
நெடுவேல், Neduvel - நீண்டவேற்படையை
வலவன், Valavan - ஆளவல்லவரான
கலிகன்றி, Kalikanri - ஆழ்வார்
சொல், Sol - அருளிச்செய்ய
ஐ இரண்டும், Ai Irandum - இப்பத்துப்பாசுரங்களையும்
முறை வழுவாமை, Murai Vazhuvamai - முறைதப்பாமல்
வல்லார், Vallar - ஓதவல்லவர்கள்
வான் உலகு, Vaan Ulagu - பாரமபதத்தை
முழுது, Muzhuthu - பூர்ணமாக
ஆள்வர், Aalvar - ஆளப்பெறுவர்.