திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3425 | திருவாய்மொழி || (7-9–என்றைக்கும்) (இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்குக் கைம்மாறு இல்லை எனல்) (மிகவும் நீசனாயிருக்கிறவென்னை ஞானம் சக்தி முதலியன வுடையேனாம்படி பண்ணி என்னையிட்டுத் திருவாய்மொழி பாடுவித்துக் கொண்ட வுபகாரத்தை நினைக்க நினைக்கத் தரித்திருக்ககில்லேனே! என்கிறார்.) 1 | என்றைக்கும் என்னை உய்யக் கொண்டு போகிய
அன்றைக்கு அன்று என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை
இன் தமிழ் பாடிய ஈசனை ஆதியாய்
நின்ற என் சோதியை என் சொல்லி நிற்பனோ?–7-9-1 | பதவுரை Show / Hideஎன்னை,Ennai - நெடுநாளாக என்பெருமானுடையவிஷயீகாரம் பெறாதிருந்த வடியேனை என்றைக்கும்,Endraikkum - முதலிலேயே சாச்வதமாக அங்கீகரித்து (அவ்வளவேயன்றிக்கே) போகிய அன்றைக்கு அன்று,Pogiya andraikku andru - நிகழ்கின்ற நாள்தோறும் உய்யக் கொண்டு,Uyyaik kondru - விசேஷ கடாஹஷம் பண்ணி என்னை தன் ஆக்கி,Ennai than aakki - இப்படி விஷயீகரிக்கப் பட்டனென்னைத் தன்னைடொத்தஜ்ஞான சக்திகளுடையேனும்படியாக்கி என்னால்,Ennaal - என்னை உபகரணமாகக் கொண்டு தன்னை,Thannai - வேதங்களுக்கு மெட்டாத பெருமை பொலிந்த தன் விஷயமாக இன் தமிழ் பாடிய,In thamizh paadiya - இனியதமிழ்ப் பிரந்தத்தைப் பாடுவித்துக் கொள்கின்ற ஈசனே,Eesaney - ஸ்வாமியாய ஆதி ஆய் நின்றஎன் சோதியை,Aadhi aai ninra en sothiyai - இத்திருவாய்மொழிக்கு மூலகாரணமாயிருந்து எனக்கு வடிவழகைக் காட்டிக்கொடுத்த பெருமானைக் குறித்து என் சொல்லி நிற்பன்,En solli nirpan - எத்தைச் சொல்லித் தரிப்பேன்! |
| 3426 | திருவாய்மொழி || (7-9–என்றைக்கும்) (இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்குக் கைம்மாறு இல்லை எனல்) (தானே தன்னைக் கவி பாடிவைத்து நான் தன்னைக் கவி பாடினதாக உலகில் ப்ரஸித்தமாக்குவதே! இது என்கொல்! என்று தலைசீய்க்கிறார்.) 2 | என் சொல்லி நிற்பன்?என் இன்னுயிர் இன்று ஒன்றாய்
என் சொல்லால் யான் சொன்ன இன்கவி என்பித்துத்
தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த மாயன் என்
முன் சொல்லும் மூவுருவாம் முதல்வனே.–7-9-2 | பதவுரை Show / Hideஎன் இன் உயிர்,En in uyir - என்னுடைய ஹேயமான ஆத்ம வஸ்துவானது இன்று ஒன்று ஆய்,Indru ondru aai - இன்று தனக்கொரு வஸ்துவாத, என் சொல்லால் யான் சொன்ன இன் கவி என்பித்து,En sollaal yaan sonna in kavi enpiththu - என்னுடைய சொல்லாலே நான் கர்த்தாவாகச் சொன்ன இனிய பிரபந்த மென்று பிரபந்த மென்று நாட்டிலே பிரஸித்தமாக்கி தன் சொல்லால்,Than sollaal - தன்னுடைய உக்திகளாலே தான் தன்னை கீர்த்தித்த,Thaan thannai keerthitha - தானே தன்னைக் கவிபாடிக் கொண்டவனாய் என் முன் சொல்லும் மாயன்,En mun sollum maayan - எனக்குள்ளேயிருந்து முன்னுருச் சொல்கின்ற ஆச்சர்யபூதனாய் மூ உரு ஆம் முதல்வன்,Moo uru aam mudhalvan - த்ரிமூர்த்தியாயிருப்பவனான காரணபூதனைக் குறித்துக் என் சொல்லி நிற்பன்,En solli nirpan - எதைச் சொல்லித் தரிப்பேன்? |
| 3427 | திருவாய்மொழி || (7-9–என்றைக்கும்) (இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்குக் கைம்மாறு இல்லை எனல்) (அன்பர்களுக்காக என்னைக்கொண்டு தான் தன்னைக் கவிபாடின மஹோபகாரனை ஒரு நாளாவது மறக்கப்போமோ வென்கிறார்.) 3 | ஆ முதல்வன் இவன் என்று தன் தேற்றி என்
நா முதல் வத்து புகுந்து நல் இன்கவி
தூமுதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன என்
வாய் முதல் அப்பனை என்று மறப்பனோ!–7-9-3 | பதவுரை Show / Hideஇவன் முதல்வன் ஆம் என்று,Iwan mudhalvan aam endru - குருகூர்ச்சடகோபனாகிய இவன் ப்ரபந்த ஜநகூடஸ்தானகக் கடவன்’ என்று திருவுள்ளம் பற்றி தன் தேற்றி,Than thetri - தன் விஷயமான தெளிவை எனக்குப் பிறப்பித்து என் நா முதல் வந்து புகுந்து,En naa mudhal vandhu pugundhu - என்னுடைய நாவிலே தானே வந்து புகுந்து நல் இன் கவி,Nal in kavi - பரம போக்யமான சொல் தொடைகளை தூ முதல் பத்தர்க்கு,Thoo mudhal patharkku - முமுக்ஷூக்களுக்கு அநுபவிக்கலாம்படி தான் தன்னை சொன்ன,Thaan thannai sonna - தானே தன்னைப் பாடின என் வாய் முதல் அப்பனே,En vaai mudhal appanai - என் வாக்குக்கு முதல்வானான மஹோபகாரகனை என்று மறப்பனோ,Endru marappano - என்றைக்காவது மறப்பேனா? (ஒரு நாளும் மறக்கமாட்டேன்.) |
| 3428 | திருவாய்மொழி || (7-9–என்றைக்கும்) (இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்குக் கைம்மாறு இல்லை எனல்) (தானே தன்னைக் கவி பாடிக்கொண்டானாகில் ஒர் ஆச்சர்யமில்லை பாடுகைக்குப் பாங்கின்றியே யிருக்கிற வென்னைக் கொண்டு தப்புதலில்லாமல் கவிபாடின இந்த மஹோபகாரத்தை நான் எங்ஙனே மறக்கமுடியுமென்கிறார்.) 4 | அப்பனை என்று மறப்பன் என் ஆகியே
தப்புதல் இன்றித் தனைக் கவி தான் சொல்லி
ஒப்பிலாத் தீ வினையேனை உயக்கொண்டு
செப்பமே செய்து திரிகின்ற சீர்கண்டே.–7-9-4 | பதவுரை Show / Hideஎன் ஆகியே,En aagiyae - எனனைக் கொண்டே தப்புதல் இன்றி,Thapputhal indri - ஒருவகையான அவத்யமும் தட்டாதபடி தனை தான் கவி சொல்லி,Thanai thaan kavi solli - ஒப்பற்ற பாபியான என்னை உய்ய கொண்டு,Uyya kondu - உஜ்ஜீவிப்பிக்கத் திருவுள்ளம்பற்றி செப்பமே செய்து திரிகின்ற,Seppamae seydhu thirikingira - எனக்கு ரக்ஷ்ணமே பண்ணிக்கொண்டு போருகிற சீர்கண்டு,Seerkandu - சீலத்தைக் கண்டு வைத்து அப்பனை என்று மறப்பன்,Appanai endru marappan - அப்பெருமானை என்றைக்காவது மறக்க முடியுமோ? |
| 3429 | திருவாய்மொழி || (7-9–என்றைக்கும்) (இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்குக் கைம்மாறு இல்லை எனல்) (தன்னைக் கவிபாடுகைக்குத் தக்க ஆற்றலும் ஆசையுமில்லாதிருந்த வென்னைக்கொண்டு, உலகமெல்லாங் கொண்டாடும்படியான பாசுரங்களைப் பாடுவித்துக் கொண்டானே! என்ன ஸர்வேச்வரனோ வென்கிறார்.) 5 | சீர் கண்டு கொண்டு திருந்து நல் இன் கவி
நேர்பட யான் சொல்லும் நீர்மை இலாமையில்
ஏர்வுஇலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னைப்
பார் பரவு இன் கவி பாடும் பரமரே.–7-9-5 | பதவுரை Show / Hideசீர் கண்டு கொண்டு,Seer kandu kondu - பகவத்குணங்களை அவகாஹித்து திருந்து நல்இன் கவி,Thirundhu nalin kavi - திருத்தமுற்று விலக்ஷ்ணமாய் மதுரமான பாசுரங்களை யான் நேர்படசொல்லும் நீர்மை இலாமையில்,Yaan naerpadachollum neermai ilaamaiyil - நேர்த்தியாகப் பாடுகைக்குரிய சக்தி எனக்கில்லாமையாலே ஏர்வு இலா என்னை தன்னாக்கி,Aervu ilaa ennai thannaakki - தகுதியற்ற வென்னைத் தன்னோடொக்கக் கடாக்ஷித்து என்னால்,Ennaal - அப்படி கடாக்ஷிக்கப் பெற்ற அடியேனைக் கொண்டு தன்னை,Thannai - தன் விஷயமாக பார் பரவு இன் கவிபாடும் பமர்,Paar paravu in kavi paadum pamara - நிலவுலகம் முழுதும் கொண்டாடும்படி யான இனிய பாசுரங்களைப்பாடும்; பரமபுருஷராயிரா நின்றார்! |
| 3430 | திருவாய்மொழி || (7-9–என்றைக்கும்) (இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்குக் கைம்மாறு இல்லை எனல்) (தனக்குச் சில பாசுரங்கள் வேணுமானால் அவற்றைப் பாடவல்ல மஹாகவிகள் பலருமுண்டே; வ்யாஸபராசரவால்மீகிப்ரப்ருதிகளான மஹர்ஷிகளும் முதலாழ்வார்களுமுண்டாயிருக்க, அவர்களைக்கொண்டு கவி பாடுவித்துக்கொள்ளாதே என்னைக் கருவியாகக்கொண்டு கவி பாடுவதே யென்று தலைசீய்க்கிறார்.) 6 | இன் கவி பாடும் பரம கவிகளால்
தன் கவி தான் தன்னைப் பாடுவியாது இன்று
நன்கு வந்து என்னுடன் ஆக்கி என்னால் தன்னை
வன் கவி பாடும் என் வைகுந்த நாதனே.–7-9-6 | பதவுரை Show / Hideஎன் வைகுந்த நாதன்,En vaikuntha naadhan - பரமபதநாதனை எம்பெருமான் இன் கவி பாடும் பரம கவிகளால்,In kavi paadum parama kavigalal - மதுரமான கவிகளைப்பாடவல்ல முதலாழ்வார்களைக் கொண்டு தன் கவி தான் தன்னை பாடுவியாது,Than kavi thaan thannai paaduviyadhu - தனக்குத் தகுதியான பாசுரங்களைத்தான் பாடுவித்துக்கொள்ளாமல் இன்று நன்கு வந்து என் உடன் ஆக்கி,Indru nanku vandhu en udan aakki - இப்போது எனக்கருள் செய்யவேணுமென்று வந்து என்னைக் கருவியாகக்கொண்டு என்னுல்,Ennul - என் வாயிலாக தன்னை வன் கவிபாடும்,Thannai van kavi paadum - தன் விஷயமான சிறந்த பாசுரங்களைப் பாடிக்கொள்கிறன்!. |
| 3431 | திருவாய்மொழி || (7-9–என்றைக்கும்) (இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்குக் கைம்மாறு இல்லை எனல்) (என்னைக்கொண்டு பரமபோகயமான கவியைப் பாடுவித்துக்கொண்ட பரமோபகாரத்திற்கு இவனைக் காலமுள்ள தனையும் அநுபவித்தாலும் த்ருப்தி பெறமாட்டேனென்கிறார்.) 7 | வைகுந்த நாதன் என் வல்வினை மாய்ந்து அறச்
செய்குந்தன் தன்னை என்னாக்கி என்னால் தன்னை
வைகுந்தனாகப் புகழ் வண் தீங்கவி
செய்குந்தன் தன்னை எந்நாள் சிந்தித்து ஆர்வனோ?–7-9-7 | பதவுரை Show / Hideவைகுந்தநாதன்,Vaikunthanadhan - பரமபதநாதனை எம்பெருமான் என் வல்வினை மாய்ந்து அற,En valvinai maayndhu ara - என்னுடைய பிரபல பாபங்கள் தொலையும்படி செய்பவனாய் குந்தன்,Kunthan - (அதனால்) பரிசுத்தி பெற்றவனாய் தன்னை என் ஆன்கி,Thannai en aanki - என்னேடு ஒரு நீராகக்கலந்து என்னுல் தன்னை வைகுந்தன் ஆக புகழ,Ennul thannai vaikunthan aaga pugazha - என்னைக்கொண்டு தன்னை வைகுண்ட பதியாகப் புகமும்படி வண் தீம் கவி,Van deem kavi - உதாரமதுரங்களான பாசுரங்களை செய் குந்தன் தன்னை,Sei kunthan thannai - செய்யும்படியான உபசாரஸ்வபாவமுடைய தன்னை சிந்தித்து எந்நாள் ஆர்வன்,Sindhiththu ennal aarvan - அநுஸந்தித்து எப்போது த்ருப்தி பிறப்பது? |
| 3432 | திருவாய்மொழி || (7-9–என்றைக்கும்) (இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்குக் கைம்மாறு இல்லை எனல்) (என்னைக்கொண்டு திருவாய்மொழி பாடுவித்துக்கொண்ட இந்த மஹா குணத்திற்கு உபயவிபூதியிலுமுள்ளாருடைய சக்தியையும் வாக்கு முதலிய உபகரணங்களையும் நானொருவனே பெற்று அநுபவித்தாலும் த்ருப்திபெறமாட்டேனென்கிறார்.) 8 | ஆர்வனோ ஆழி அங் கை எம்பிரான் புகழ்
பார் விண் நீர் முற்றும் கலந்து பருகிலும்
ஏர்விலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னைச்
சீர் பெற இன் கவி சொன்ன திறத்துக்கே ? –7-9-8 | பதவுரை Show / Hideஏர்வு இலா என்னை தன் ஆக்கி என்னுல்,Aervu ilaa ennai than aakki ennull - தகுதியற்ற வென்னைத் தன்னேடொக்கவருள் செய்து தன்னை சீர்பெற இன் கவி சொன்ன திறத்துக்கு,Thannai seerperra in kavi sonna thiraththukku - என்னையிட்டுத் தன் விஷயத்தில் சிறப்புண்டாம்படி இனிய பாசுரங்களைச் சொன்னபடிக்கு ஆழி அம் கை எம்பிரான் புகழ்,Aazhi am kai emperaan pugazh - சக்ரபாணியான அந்த எம்பெருமானுடைய திருப்புகழை பார்விண் நீர் முற்றும் கலந்து பருகினும் ஆர்வனே,Paarvin neer muttrum kalandhu paruginum aarvaney - மண்ணிலுள்ளாரும் கூறிராப்தியிலுள்ளாரும் ஒன்று சேர்ந்து புகழ நேர்ந்தாலும் நான் திருப்தியடைவேனே? |
| 3433 | திருவாய்மொழி || (7-9–என்றைக்கும்) (இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்குக் கைம்மாறு இல்லை எனல்) (கீழ்ப்பாட்டிற் சொன்னதுதன்னையே இன்னமும் சிறிது சித்திரித்துப் பேசுகிறார்.) 9 | திறத்துக்கே துப்பரவாம் திரு மாலின் சீர்
இறப்பெதிர் காலம் பருகிலும் ஆர்வனோ?
மறப்பிலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னை
உறப்பல இன்கவி சொன்ன உதவிக்கே?–7-9-9 | பதவுரை Show / Hideமறப்பு இலா என்னை,Marappu ilaa ennai - மறப்புக்கு விஷயமில்லாதபடி ஸ்மரணமேயில்லாதிருந்த வென்னை தன் ஆக்கி,Than aakki - தன்னோடொக்க வீஷயீகரித்து என்னால் தன்னை உறபல இன்க சொன்ன உதவிக்கு,Ennala thannai urpala inna sonna uthavikku - என்னைக்கொண்டு தனக்குப் பொருத்தமாகப் பல இனிய பாசுரங்களைப் பாடுவித்த மஹோபகாரத்திற்கு, திறத்துக்கு ஏய் துப்பரவு ஆம் திருமாலின் சீர்,Thiraththukku aai thupparavu aam thirumaalin seer - எந்த விஷயத்திலும் பொருத்தமான ஸாமர்த்தியத்தையுடைய திருமாலின் குணங்களை இறப்பு எதிர் காலம்,Irappu edhir kaalham - இறந்த காலத்தையும் எதிர் காலத்தையும் கூட்டிக்கொண்டு பருகிலும்,Paruginum - அநுபவித்தாலும் ஆர்வனோ,Aarvano - பர்யாப்தி பெறுவேனோ? |
| 3434 | திருவாய்மொழி || (7-9–என்றைக்கும்) (இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்குக் கைம்மாறு இல்லை எனல்) (அவனுடைய பேருதவிக்கு ஒருபடியாலும் கைம்மாறு இல்லையென்கிறார்.) 10 | உதவிக் கைம்மாறு என் உயிர் என்ன உற்று எண்ணில்
அதுவும் மற்று ஆங்கவன் தன்னது என்னால் தன்னைப்
பதவிய இன்கவி பாடிய அப்பனுக்கு
எதுவும் ஓன்றும் இல்லை செய்வது இங்கும் அங்கே.–7-9-10 | பதவுரை Show / Hideஉதவி கைம்மாறு,Uthavi kaimmaaru - திருவாய்மொழி பாடுவித்துக் கொண்டவுதவிக்குப் பிரதியுபகாரம் என்உயிர் என்னவுற்று எண்ணில்,En uyir ennavuṟṟu eṇṇil - என்னுடைய ஆத்மா என்று சொல்ல நினைத்தால் அதுவும் அவன் தன்னது,Adhuvum avan thannadhu - அவ்வாக்மவஸ்துவும் அவனுடைய பொருளாகவே யிரா நின்றது; என்னால் தன்னை பதவிய இன்கவி பாடிய அப்பனுக்கு,Ennala thannai padaviy in kavi paadiya appanukku - (ஆனபின்பு) என்னையிட்டுத் தனைனை மதுரமாகப பாடுவித்துக் கொண்ட எம்பிரானுக்கு இங்கும் அங்கும்,Ingum angum - உபயவிபூதியிலும் செய்வது,Seyvathu - செய்யக்கூடிய கைம்மாறு எதுவும் ஒன்றும் இல்லை,Edhuvum ondru illai - மிக அற்பமானதுமில்லை. |
| 3435 | திருவாய்மொழி || (7-9–என்றைக்கும்) (இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்குக் கைம்மாறு இல்லை எனல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –நிகமத்தில் இத்திருவாய் மொழியை அப்யசித்தார்க்கு எங்கனே சொல்லிலும் ப்ரீதியை விளைக்கும் என்கிறார்.) 11 | இங்கும் அங்கும் திரு மால் அன்றி இன்மை கண்டு
அங்ஙனே வண் குரு கூர்ச் சட கோபன்
இங்ஙனே சொன்ன ஓர் ஆயிரத்து இப்பத்து
எங்ஙனே சொல்லிலும் இன்பம் பயக்குமே.–7-9-11 | பதவுரை Show / Hideஇங்கும் அங்கும்,Ingum angum - இவ்விபூதியிலுண்டான ஆச்ரயண வேளையிலும் அவ்விபூதியிலுண்டான கைங்கர்ய தசையிலும் திருமால் அன்றி இன்மை கண்டு,Thirumaal andri inmai kandu - லக்ஷ்மீபதியல்லது வேறெருவர் உர்தேச்யால்லாமையை யறுதியிட்டு அங்ஙனே வண் குரு கூர் சட கோபன்,Anggane van van Kurukoor Sadagopan - அவ்வண்ணமாகவே யிருப்பவரான ஆழ்வார் இங்ஙனே சொன்ன,Anggane sonna - இப்படியருளிச் செய்த ஒர் ஆயிரத்து இப்பத்தும்,Or aayirathu ippaththum - ஆயிரத்துள் இப்பதிகம் எங்ஙனே சொல்லிலும்,Enggane sollilum - எப்படிச் சொன்னாலும் இன்பம் பயக்கும்,Inbam payakkum - ஆனந்தாவஹமாகும். |