திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 8-1 சிலையிலங்கு (10 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1648பெரிய திருமொழி || (8-1–சிலையிலங்கு) (திரு கண்ணபுரம் 1) - (தலைமகன்பால் ஈடுபட்ட தலைமகளது செய்லகளை வினவ வந்தாருக்குத் தாய் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தன் பெண் பிள்ளை சொல்லக் கடவ இது தனக்கு ரசித்த படியாலே அப்பாசுரத்தை தன் வாயாலேயும் ஒரு கால் பேசி அனுபவிக்கப் பார்க்கிறாள்) 1
சிலை இலங்கு பொன் ஆழி திண் படை தண்டு ஒண் சங்கம் என்கின்றாளால் மலை இலங்கு தோள் நான்கே மற்று அவனுக்கு எற்றே காண் என்கின்றாளால் முலை இலங்கு பூம் பயலை முன்போட அன்போடு இருகின்றாளால் கலை இலங்கு மொழியாளர் கண்ண புரத்தம்மானை கண்டாள் கொலோ –8-1-1
பதவுரை Show / Hide
சிலை, Silai - (என்றும்) ‘சார்ங்கவில்’ (- (இல்லையாகில் இப்படிப்பட்ட நிலைமை) (இவளுக்கு எப்படி உண்டாகும்!.))
இலங்கு பொன் ஆழி, Ilangu Pon Aazhi - ‘விளங்குகின்றதும் விரும்பத் தக்கதுமான திருவாழி’ (என்றும்)
திண் படை, Thin Padai - ‘வலிமை பொருந்திய வாட்படை’ (என்றும்)
தண்டு, Thandu - ‘கதை’ (என்றும்)
ஒண் சங்கம் என்கின்றாள், On Sangam Enkindraal - ‘அழகிய சங்கு’ என்றும் சொல்லா நின்றாள்,
ஆல்!, Aal - இஃது என்னே!
மற்று, Mattru - இன்னமும்
அவனுக்கு, Avanukku - ‘அப்பெருமானுக்கு
மலை இலங்கு, Malai Ilangu - மலைபோல் விளங்குகின்ற
நான்கு தோளே, Naanthu Thoale - நான்கு திருத்தோள்களும்
எற்றே காண், Ettrae Kaan - எப்படி அழகாயிருக்கின்றன பார்’
என்கின்றாள், Enkindraal - என்று சொல்லுகிறாள்;
முலை இலங்கு, Mulai Ilangu - முலையில் விளங்குகின்ற
பூ பயலை, Poo Payalai - அழகிய பசலை நிறமானது
முன்பு ஓட, Munbu Oda - முன்னே சென்று வழிகாட்ட
அன்பு ஓடி இருக்கின்றாள், Anbu Odi Irukkindraal - அன்பு பின் செல்லப் பெற்றிருக்கின்றாள்;
கலை இலங்கு மொழி ஆளர், Kalai Ilangu Mozhi Aalar - சாஸ்த்ரப் பயிற்சி விளங்குகின்ற வாய்ப் பேச்சை யுடையவர்கள் வாழ்கிற
கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்தி லெழுந்தருளியிருக்கிற
அம்மானை, Ammaanai - சௌரிப்பெருமாளை
கண்டாள் கொல் ஓ, Kandhaal Kol O - ஸேவிக்கப் பெற்றாளோ!
1649பெரிய திருமொழி || (8-1–சிலையிலங்கு) (திரு கண்ணபுரம் 1) - (தலைமகன்பால் ஈடுபட்ட தலைமகளது செய்லகளை வினவ வந்தாருக்குத் தாய் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கையும் திவ்ய ஆயுதங்களுமாய் பண்ணின உபகாரம் இன்னளவு என்று பரிச்சேதிக்கலாய் இருக்கிறதோ – நிருபாதிக பந்து என்று தோற்றி யன்றோ செயல் இருக்கிறது – தன்னை உபகரிக்கைக்கு தான் முற்பாடனாய் அவசர ப்ரதீஷனாய் -வந்து நிற்கிறபடி – அஞ்சன கிரி போலே யாயிற்று கண்ணுக்கு விஷயமான போது இருக்கிறபடி – அவன் அவசர ப்ரதீஷனாய் நிற்கையே அன்றிக்கே-இவளும் ஆபி முக்கியம் பண்ணப் பெற்றது வடிவு அழகிலும் ஔதார்யம் தோற்ற நின்ற நிலையிலும் போலே காணும் இவள் கண் விழித்தது) 2
செருவரை முன்னா சறுத்த சிலையன்றோ கைத்தலத்து என்கின்றாளால் பொருவரை முன் போர் தொலைத்த பொன்னாழி மற்றொரு கை என்கின்றாளால் ஒருவரையும் நின்னொப்பார் ஒப்பிலா வென்னப்பா வென்கின்றாளால் கருவரை போல் நின்றானைக் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-2
பதவுரை Show / Hide
முன், Mun - முன்னம் (- (என்கின்றாள் ஆல்;) (என்கின்றாள் ஆல்;) (கண்ணபுரத்து அம்மானை கண்டாள் கொலோ-))
செருவரை, Seruvarai - போர் வீரர்களை
ஆசு அறுத்த, Aasu Aruttha - சீக்கிரமாகத் தொலைத்த
சிலை அன்றோ, Silai Anro - சார்ங்க வில்லன்றோ
கைத்தலத்தது, Kaithalaththathu - திருக்கையிலுள்ளது
என்கின்றாள், Enkindraal - என்று சொல்லுகிறாள்;
மற்றொருகை, Mattroru Kai - மற்றொரு திருக்கையிலே,
முன், Mun - முன்பொருகால்
பொரு வரை, Poru Varai - (சிறகோடு கூடிப்) போர் செய்த மலைகளை
போர், Por - யுத்தத்தில்
தொலைத்த, Tholaitha - பங்கமடைவித்த
பொன் ஆழி, Pon Aazhi - அழகிய திருச்சக்கரம் (உள்ளது)
ஒப்பு, Oppu - ஒத்திருக்கும் விஷயத்தில்
நின் ஒப்பார் ஒருவரையும் இலா, Nin Oppaar Oruvaraiyum Ila - உன்னோடொத்தவர்கள் ஒருவருமில்லாதிருக்கப்பெற்ற
என் அப்பா, En Appa - என் நாயகனே;
கரு வரை போல் நின்றானை, Karuvai Pol Nindranai - அஞ்சன மலைபோல் நிற்பவனான
1650பெரிய திருமொழி || (8-1–சிலையிலங்கு) (திரு கண்ணபுரம் 1) - (தலைமகன்பால் ஈடுபட்ட தலைமகளது செய்லகளை வினவ வந்தாருக்குத் தாய் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இத்தனை அதிமாத்ர பிராவாண்யம் ஆகாது காண்- எல்லாம் செய்தாலும் நாங்கள் சொல்லுகிற ஹித வசனத்தை நீ கேட்க வேணும் காண் என்று நீங்கள் சொன்னால் -அவனுடைய ஆபரண சோபை கண்களுக்கு முற்படா நின்றது – உங்கள் வார்த்தை செவிப் படுகிற இத்தை நான் கேட்கவோ கண்ணுக்கு இலக்கான அவன் அழகிலே துவக்குண்ணவோ -என்னா நின்றாள் – சேஷித்வ ஸூசகமாய் இருக்கவோ -என்னா நின்றாள்) 3
துன்னு மா மணி முடி மேல் துழாய் அலங்கல் தோன்றுமால் என்கின்றாளால் மின்னு மா மணி மகர குண்டலங்கள் வில் வீசும் என்கின்றாளால் பொன்னின் மா மணியாரம் அணியாகத் திலங்குமால் என்கின்றாளால் கன்னி மா மதிள் புடை சூழ் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-3
பதவுரை Show / Hide
துன்னு, Thunnu - நெருங்கியிருக்கின்ற (- (கண்ணபுரத்து, அம்மானை கண்டாள் கொலோ….))
மா மணி, Ma Mani - சிறந்த ரத்னங்களிழைக்கப்பெற்ற
முடி மேல், Mudi Mel - கிரீடத்தின் மீது
துழாய் அலங்கல், Thuzhai Alangkal - திருத்துழாய் மாலை
தோன்றும ஆல் என்கின்றாள் ஆல், Thonrum Aal Enkindraal Aal - விளங்குகின்றதே! என்று சொல்லுகிறாளே!;
மின்னு, Minnu - ஜ்வலிக்கின்ற
மா மணி, Ma Mani - சிறந்த மணிகளழுத்தின
மகர குண்டலங்கள், Makara Kuntalangal - மகரக் குழைகள்
வில் வீசும் என்கின்றாள் ஆல், Vil Veesum Enkindraal Aal - ஒளி வீசுகின்றன என்று சொல்லுகிறாளே! ;
பொன்னின் மா மணி ஆரம், Ponnin Maa Mani Aaram - பொன்னாலே செய்யப்பட்டதும் சிறந்த ரத்னங்களழுத்தப்பட்டதுமான ஹாரமானது
அணி ஆகத்து, Ani Aagathu - அழகிய திருமார்பிலே
இலங்கும் ஆல் என்கின்றாள் ஆல், Ilangum Aal Enkindraal Aal - விளங்கா நின்றதே! என்று சொல்லுகிறாளே! ;
கன்னி மா மதில், Kanni Maa Mathil - அழிவில்லாத பெரிய மதிள்களாலே
புடை சூழ், Pudai Soozh - நாற்புறமும் சூழப்பட்ட
1651பெரிய திருமொழி || (8-1–சிலையிலங்கு) (திரு கண்ணபுரம் 1) - (தலைமகன்பால் ஈடுபட்ட தலைமகளது செய்லகளை வினவ வந்தாருக்குத் தாய் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ பெரிய திருவடி முதுகில் இருந்து இருப்பைக் காட்டி என்னை எனக்கு உரியேன் ஆகாதபடி -பண்ணினவன் – ஹிதம் சொல்லி விலக்குகிற நீங்களும் பாருங்கோள்- அழகிய பவளம் போலே இருந்துள்ள திரு வதரத்தைக் கண்டார்க்கு விட்டுப் போகலாய் இருந்ததோ – உக்தி மாத்ரத்திலே மீளாதே அவ்விஷயத்தைக் கண்டு அனுபவித்தாள் என்று தோற்றி இரா நின்றது) 4
தாராய தண் துளப வண்டுழுத வரை மார்பன் என்கின்றாளால் போரானைக் கொம்பொசித்த புட்பாகன் என்னம்மான் என்கின்றாளால் ஆரானும் காண்மின்கள் அம்பவளம் வாயவனுக்கு என்கின்றாளால் கார்வானம் நின்றதிரும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-4
பதவுரை Show / Hide
தார் ஆய தண் துளபம், Thaar Aaya Than Thulabam - மாலையாகிய குளிர்ந்த திருத்துழாயிலுள்ள (- (என்கின்றாள் ஆல்;) (என்கின்றாள் ஆல்;) (என்கின்றாள் ஆல்… ;) (கண்ணபுரத்து, அம்மானை கண்டாள் கொலோ….))
வண்டு, Vandu - வண்டுகளாலே
உழுத, Uzutha - (தேனும் சுண்ணமுங்கொண்டு) சேறு செய்யப்பட்ட
வரை மார்பன், Varai Maarban - மலைபோன்ற திருமார்பை யுடையவன்
போர் ஆனை, Poar Aanaik - போர் புரிய நின்ற (கம்ஸனது) யானையினுடைய
கொம்பு ஒசித்த, Kombu Osiththa - தந்தங்களை முறித்தொழித்த
புள் பாகன், Pul Paagan - கருடவாஹநன்
என் அம்மான், En Ammaaan - எனக்கு ஸ்வாமி
ஆரானும் காண்மின்கள், Aaraanum Kaanmingal - யாராகிலும்பாருங்கள்
அவனுக்கு, Avanukku - அப்பெருமானுடைய
வாய், Vaai - திருவதரமானது
அம் பவளம், Am Pavalam - அழகிய பவளம் போல் சிவந்தது
கார் வானம், Kaar Vaanam - கறுத்த மேகம்
நின்று அதிரும், Ninru Adhirum - நிலைநின்று கோஷிக்கப்பெற்ற
1652பெரிய திருமொழி || (8-1–சிலையிலங்கு) (திரு கண்ணபுரம் 1) - (தலைமகன்பால் ஈடுபட்ட தலைமகளது செய்லகளை வினவ வந்தாருக்குத் தாய் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நம்முடைய உத்தேச்யமும் நிரதிசய போக்யமாய் இரா நின்றது – சேர்ப்பாரும் அருகே இருக்க -நான் எத்தைச் சொல்லி அகலுவது -என்னா நின்றாள் – எனக்கு பற்றாசானார் இருக்க நான் என்ன கண் அழிவு சொல்லிக் கடக்க போவது போக்யதை இல்லாமையோ –பிராப்தன் அல்லாமையோ –சேர்ப்பார் இல்லாமையோ –நான் எத்தைச் சொல்லி அகலுவது – நிரதிசய போக்யனான இவனை இவள் அனுபவித்து சொல்லுகிறாள் போலே இருந்தது) 5
அடித் தலமும் தாமரையே அங்கைகளும் பங்கயமே என்கின்றாளால் முடித் தலமும் பொற் பூணும் என் நெஞ்சத்து உள்ளகலாது என்கின்றாளால் வடித் தடங்கண் மலரவளோ வரையாகத் துள்ளிருப்பாள் என்கின்றாளால் கடிக்கமலம் கள்ளுகுக்கும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-5
பதவுரை Show / Hide
அடித்தலமும், Adiththalum - திருவடிகளும் (- (என்கின்றாள் ஆல்…,) (என்கின்றாள் ஆல்…. ;) (கண்ணபுரத்து, அம்மானை கண்டாள் கொலோ…,))
தாமரையே, Thamaraiye - தாமரைப்பூவே;
அம் கைகளும், Am Kaigalum - அழகிய திருக்கைகளும்
பங்கயமே, Pangayame - தாமரைப்பூவே;
முடித்தலமும், Mudiththalum - கிரீடமும்
பொன் பூணும், Pon Poonum - (அதிலிழைத்த) திருவாபரணமும்
என் நெஞ்சத்துள் அகலாது, En Nenchatthul Akalathu - என் மனத்தைவிட்டுப் பிரியாது
வடி, Vadi - கூர்மை பொருந்திய
தட கண், Thada Kan - பெரிய கண்களையுடையளான
மலரவளோ, Malaravaloo - பங்கயச் செல்வியான பெரிய பிராட்டியாரோ வென்னில்
வரை ஆகத்துள் இருப்பாள் என்கின்றாள், Varai Agaththul Iruppaal Enkindraal - மலைபோன்ற திருமார்பிலிருக்கிறாளென்று சொல்லுகிறாள்;
கடி கமலம், Kadi Kamalam - பரிமளமுள்ள தாமரைப்பூக்கள்
கள் உகுக்கும், Kal Ukukkum - தேனைப் பொழியப் பெற்ற
1653பெரிய திருமொழி || (8-1–சிலையிலங்கு) (திரு கண்ணபுரம் 1) - (தலைமகன்பால் ஈடுபட்ட தலைமகளது செய்லகளை வினவ வந்தாருக்குத் தாய் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உபமானம் கதிர் பெருக்க வேண்டி இருக்கிறபடி – கடலைக் கழுத்தே கட்டளையாகப் பருகின மேகம் போலேயும்-அஞ்சன கிரி போலேயும் இருக்கிற வடிவை உடையவன் என்னா நின்றாள் – ஸ்ரமஹரதையும் அபரிச்சேத்யையும் இரண்டையும் சொல்லுகிறது) 6
பேராயிரம் உடைய பேராளன் பேராளன் என்கின்றாளால் ஏரார் கன மகரக் குண்டலத்தன் எண் தோளன் என்கின்றாளால் நீரார் மழை முகிலே நீள் வரையே ஒக்குமால் என்கின்றாளால் காரார் வயல்மருவும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-6
பதவுரை Show / Hide
ஆயிரம் பேர் உடைய, Aayiram Per Udaiya - ஆயிரந் திருநாமங்களையுடைய (- (என்கின்றாள் ஆல்…. ;) (என்கின்றாள் ஆல்-;) (கண்ணபுரத்து, அம்மானை கண்டாள் கொலோ-))
பேர் ஆளன் பேர் ஆளன் என்கின்றாள், Per Aalan Per Aalan Enkindraal - மஹாநுபாவனென்று பலகாலும் சொல்லுகின்றாள்;
ஏர் ஆர், Aer Aar - அழகு பொருந்திய
கனம், Kanam - கனகத்தினால் செய்யப்பட்ட
மகர குண்டலத்தன், Makara Kuntalaththan - மகரக்குழைகளையுடையவன்,
எண் தோளன், En Tholan - எட்டு புஜங்களையுடையவன்
நீர் ஆர், Neer Aar - நீர் நிறைந்த
மழை முகிலே, Mazhai Mukile - கார்காலத்து மேகத்தையும்
நீள் வரையே, Neel Varaiye - பெரிய மலையையும்
ஒக்கும், Okum - ஒத்திருப்பன்
கார் ஆர் வயல் அமரும், Kaar Aar Vayal Amarum - கருமை மிக்க கழனிகள் அமர்ந்திருக்கப்பெற்ற
1654பெரிய திருமொழி || (8-1–சிலையிலங்கு) (திரு கண்ணபுரம் 1) - (தலைமகன்பால் ஈடுபட்ட தலைமகளது செய்லகளை வினவ வந்தாருக்குத் தாய் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் உடைய உடை வாய்ப்பிலே தோற்றமை தோற்ற வாய் விடா நின்றாள் – திருப் பீதாம்பரம் சாத்தினால்- கௌசேய புஷ்பித கடீ தடம் -என்கிறபடியே திருவரை பூத்தாப் போலே யாயிற்று இருப்பது) 7
செவ்வரத்த உடை ஆடை யதன் மேலோர் சிவளிகைக் கச்சென்கின்றாளால் அவ்வரத்த வடியிணையும் அங்கைகளும் பங்கயமே என்கின்றாளால் மைவளர்க்கும் மணியுருவம் மரகதமோ மழை முகிலோ என்கின்றாளால் கைவளர்க்கும் அழலாளர் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-7
பதவுரை Show / Hide
செம் வரத்த உடை ஆடை, Sem Varath Uday Aadai - (என்றும்) சிவந்ததாய்ச் சிறந்ததாக உடுக்கப்பட்ட பீதாம்பரம் (- (அன்றி,) (என்கின்றாள் ஆல் – ;) (கண்ணபுரத்து அம்மானை கண்டாள் கொலோ-))
அதன் மேல் ஓர் சிவளிகை கச்சு என்கின்றாள், Adhan Mel Oor Sivalikai Kachchu Enkindraal - அந்தப் பீதாம்பரத்தின் மேல் ஒப்பற்ற சிவளிகைகச்சு (சாத்தப்பட்டிருக்கிறது) என்றும் சொல்லுகிறாள்;
அவ் வரத்த அடி இணையும், Av Varath Adi Inaiyum - அப்படிப்பட்ட சிறந்த உபயபாதங்களும்
அம் கைகளும், Am Kaigalum - அழகிய திருக்கைகளும்
பங்கயமே என்கின்றாள், Pangayame Enkindraal - தாமரைப்பூவே என்று சொல்லுகிறாள்;
மை வளர்க்கும் மணி உருவம், Mai Valarkkum Mani Uruvam - நீலநிறத்தை மிகுதியாகத் தோற்றுவிக்கின்ற நீலமணி போன்ற திருமேனி
மரதகமோ, Marathagamo - மரதகமணியோ,
மழை முகிலோ, Mazhai Mukilo - காளமேகமோ
கை வளர்க்கும் அழல் ஆளர், Kai Valarkkum Azhai Aalar - தமது கைகளால் ஓம்பப்படுகின்ற அக்நியையுடைய வரான அந்தணர் வாழ்கிற
1655பெரிய திருமொழி || (8-1–சிலையிலங்கு) (திரு கண்ணபுரம் 1) - (தலைமகன்பால் ஈடுபட்ட தலைமகளது செய்லகளை வினவ வந்தாருக்குத் தாய் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கீழே அவன் அடியைப் பிடித்தும் மடியைப் பற்றியும் படியை அனுபவித்ததை கேட்டவர்கள்- இவளுக்கு இப்படி அனுபவம் செல்லா நின்றால் முலையில் பூம் பயலை பிறக்கும்படி விரஹ வ்யசனம் நடக்கைக்கு அடி என் என்று கேட்க – இவளுக்கு கிட்டே வந்து சம்ச்லேஷித்தது அல்லாதே அதூர விப்ரக்ருஷ்டமாய் வந்தாப் போலே தோற்றுகையாலே தன்னிடத்தில் வரவில் நிர்ணயம் பிறவாதே விரஹ கிலேசத்தை அடைந்தாள் என்று அவள் வார்த்தையாலே அறிந்தாளாக -அனுவதிக்கிறாள் -என்று சங்கதி – ஸ்ரீ பிள்ளை அமுதனார் இத் திருமொழிக்கு பிரவேசம் சொல்லா நிற்க ராஜாக்கள் அந்தபுரக் கட்டிலே-தெருவிலே -பள்ளி யந்துலாத்திலே ஏறி உலவா நிற்பர்கள் காண் – என்றாப் போலே அநேகம் வாக்ய சில்பங்களை பண்ணினார் – அப்போது பால்யத்தாலே அவ்வடைவுகள் புத்தி பண்ணப் பெற்றிலோம் அவற்றுக்கு இதில் பற்றாசு ஏது என்று விசாரித்தோம் – இதுவாகாதே என்று தெளிந்தோம் காண் என்று இவ்வளவிலே ஸ்ரீ பிள்ளை அருளிச் செய்தார்) 8
கொற்றப் புள் ஓன்று ஏறி மன்றூடே வருகின்றான் என்கின்றாளால் வெற்றிப் போர் இந்திரர்க்கும் இந்திரனே யொக்குமால் என்கின்றாளால் பெற்றக்கால் அவனாகம் பெண் பிறந்தோம் உய்யோமோ என்கின்றாளால் கற்ற நூல் மறையாளர் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-8
பதவுரை Show / Hide
கொற்றம் புள் ஒன்று ஏறி, Kotrham Pul Ondru Eri - வெற்றி பொருந்திய ஒரு கருடப் பறவையை மேற்கொண்டு (- (என்கின்றாள் ஆல்-;) (கண்ணபுரத்து, அம்மானை கண்டாள் கொலோ-.))
மன்று ஊடே, Mandru Oode - திருவீதியிலே
வருகின்றான், Varugiraan - எழுந்தருளுகிறான்
வெற்றி போர், Vettri Por - ஜயசீலமான யுத்தத்திலே
இந்திரற்கும் இந்திரனே ஒக்கும் என்கின்றாள், Indhirarkkum Indhirane Okum Enkindraal - மஹேந்திரனை ஒத்திருப்பன் என்கின்றாள்;
அவன் ஆகம், Avan Aagam - அப்பெருமானுடைய திருமார்பை
பெற்றக்கால், Petra Kaal - பெற்றால்
பெண் பிறந்தோம் உய்யோமோ என்கின்றாள், Pen Pirandhom Uyyom O Enkindraal - பெண்ணாய் பிறந்த நாம் வாழ்ந்துபோக மாட்டோமோ என்கிறாள்;
கற்ற நூல் மறை ஆளர், Katra Nool Marai Aalar - (முறையே) கற்கப்பட்ட சாஸ்த்ரங்களை யுடையரான வைதிகர் வாழ்கிற
1656பெரிய திருமொழி || (8-1–சிலையிலங்கு) (திரு கண்ணபுரம் 1) - (தலைமகன்பால் ஈடுபட்ட தலைமகளது செய்லகளை வினவ வந்தாருக்குத் தாய் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நித்ய அபூர்வமான விஷயம் -என்றபடி சொன்ன இரண்டு அர்த்தத்தையும் அது காட்டுமோ – பயில்கின்றாளால் -என்றது கண்டாயே –எற்றைக்கும் இதுவே வார்த்தை அன்றோ – இப்படியாக வேண்டாவோ -என்று ஸ்ரீ ஜீயர் – கண்டவர்கள் நெஞ்சை மேல் எழுத்துக் கொடா நிற்பர்கள் ஆயிற்று) 9
வண்டமரும் வனமாலை மணி முடி மேல் மண நாறும் என்கின்றாளால் உண்டிவர் பால் அன்பு எனக்கு என்று ஒரு காலும் பிரிகிலேன் என்கின்றாளால் பண்டிவரைக் கண்டறிவது எவ் ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால் கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-9
பதவுரை Show / Hide
வண்டு அமரும், Vandu Amarum - வண்டுகள் படிந்த (- (கண்ணபுரத்து, அம்மானை கண்டாள் கொலோ-))
வனமாலை, Vanamalai - திருத்துழாய் மாலை
மணிமுடிமேல், Manimudimeel - ரத்ன கிரீடத்தின் மீது
மணம் நாறும் என்கின்றாள், Manam Naarum Enkindraal - பரிமளம் கமழ நிற்கிறது என்கிறாள்;
எனக்கு இவர் பால் அன்பு உண்டு என்று, Enakku Ivar Paal Anbu Undu Endru - ‘எனக்கு இவரிடத்திலே அன்பு உண்டு’ என்று சொல்லி
ஒருகாலும் பிரிகிலேன் ஆல் என்கின்றாள், Orukaalum Pirikileen Aal Enkindraal - (அவ்வன்பரை) ஒரு நொடிப்பொழுதும் பிரிந்திருக்க முடியவில்லையே யென்கிறாள்;
இவரை, Ivarai - ‘இப்பெரியவரை
பண்டு, Pandhu - இதற்கு முன்னம்
யாம் கண்டறிவது, Yaam Kandarivathu - நாம் பார்த்திருப்பது
எவ் ஊரில், Ev Ooril - எந்த வூரிலே?
என்றே பயில்கி்ன்றாள், Endrae Payilkinraaal - என்றே பலகாலும் உருப்போடுகின்றாள்;
கண்டவர், Kandavar - ஸேவித்தவர்களெல்லோரும்
தம் மனம், Tham Manam - தங்கள் மனத்தை
வழங்கும், Vazhangu - அர்ப்பணம் செய்து விடும் படியான
1657பெரிய திருமொழி || (8-1–சிலையிலங்கு) (திரு கண்ணபுரம் 1) - (தலைமகன்பால் ஈடுபட்ட தலைமகளது செய்லகளை வினவ வந்தாருக்குத் தாய் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பரமபதத்தில் -ஆண்மின்கள் -என்றபடியே தாங்களே நிர்வாஹகராய் -இவ்வருகு உள்ளார் அடங்கலும் சாத்யர் ஆவார்கள்) 10
மாவளரும் மென்னோக்கி மாதராள் மாயவனைக் கண்டாள் என்று காவளரும் கடி பொழில் சூழ் கண்ண புரத் தம்மானைக் கலியன் சொன்ன பாவளரும் தமிழ் மாலை பன்னிய நூல் இவை ஐந்தும் ஐந்தும் வல்லார் பூவளரும் கற்பகம் சேர் பொன்னுலகில் மன்னவராய் புகழ் தக்கோரே –8-1-10
பதவுரை Show / Hide
மா வளரும் மென் நோக்கி, Maa Valarum Men Nookki - மானினுடைய நோக்குப் போன்று விசாலமாய் மெல்லிதான நோக்கை யுடையளான
மாதராள், Madharaal - (பரகால) நாயகியானவள்
மாயவனை கண்டாள் என்று, Maayavanai Kandaal Endru - ஆச்சரியனான எம்பெருமானைக் கண்டாள் கொலோ என்று
கா வளரும் கடி பொழில் சூழ், Kaa Valarum Kadi Pozhil Soozh - சோலைகளில் வளரும் பரிமளமானது பூமியெங்கும் பரவப்பெற்ற
கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்தி லெழுந்தருளியுள்ள
அம்மானை, Ammaanai - ஸ்வாமியைக் குறித்து
கலியன் சொன்ன, Kaliyan Sonna - திருமங்கையாழ்வாரருளிச் செய்த
பா வளரும், Paa Valarum - சந்தங்கள் நிறைந்திருக்கப் பெற்ற
தமிழ் மாலை, Tamizh Maalai - தமிழ்ப் பாசுர மாலையாகிய
பன்னிய நூல், Panniya Nool - கொண்டாடுதற்கு உரிய இத்திவ்ய ப்ரபந்தத்திற் சேர்ந்த
இவை ஐந்தும் ஐந்தும், Ivai Aindhum Aindhum - இப்பத்துப் பாட்டையும்
வல்லார், Vallaar - ஓதியுணரவல்லவர்கள்
பூ வளரும், Poo Valarum - பூக்கள் நிறைந்த
கற்பகம் சேர், Karppagam Ser - கல்ப வ்ருக்ஷம் பொருந்திய
பொன்னுலகில், Ponnulakil - பரமபதத்தில்
மன்னவர் ஆய், Mannavar Aay - நிர்வாஹகர்களாகவும்
புகழ் தக்கோர், Pugazh Thakkor - (இங்குள்ளவரையில்) புகழ்க்குத் தகுதியுடையவர்களாகவும் இருக்கப் பெறுவர்.
அடிவரவு, Adivaravu - சிலை, செரு, துன்னு, தார், அடி, பேர், செவ்வரத்த, கொற்ற, வண்டு, மாவளரும், தெள்ளியீர்.