திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 8-10 நெடுமாற் கடிமை (11 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3546திருவாய்மொழி || 8-10—நெடுமாற் கடிமை (பாகவத கைங்கர்யமாகிற பெருஞ்செல்வம் கிடைக்கப் பெற்றால் மூவுலகாளுஞ் செல்வமும் இத்தோடொவ்வாதென்று இதன் பரம போக்யதையைப் பேசுகிறார்.) 1
நெடுமாற்கு அடிமை செய்வன் போல் அவனைக் கருத வஞ்சித்து தடுமாற்றற்ற தீக் கதிகள் முற்றும் தவிர்ந்த சதிர் நினைந்தால் கொடுமா வினையேன் அவன் அடியார் அடியே கூடும் இது வல்லால் விடுமாறு எனபது என்னந்தோ வியன் மூ வுலகு பெறினுமே–8-10-1
பதவுரை Show / Hide
nedu maarku,நெடு மாற்கு - ஸர்வேச்வரனுக்கு
adimai seyaveen pol,அடிமை செயவேன்போல் - அடிமை செய்பவன் போலவிருந்து
avanai karutha,அவனை கருத - அப்பெருமானை நினைத்தவளவிலே
thee kadhigal mutrum,தீ கதிகள் முற்றும் - (என்னிடத்திலிருந்த) தீவினைகளெல்லாம்
vanjithu,வஞ்சித்து - வஞ்சனை செய்து (என்னோடு சொல்லாமலே)
tadumaarru atra,தடுமாற்று அற்ற - நிச்சயமாக
tavirndha sadhir ninaitthaal,தவிர்ந்த சதிர் நினைத்தால் - என்னைவிட்டு நீங்கிப் போனபடியை ஆராயந்து பார்த்தால்
viyal moo ulagu perinum,வியல் மூ உலகு பெறினும் - விஷ்தாரமான மூவுலகையும் பேறாகப் பெற நேர்ந்தாலுங்கூட (அதை உபேக்ஷித்து
avan adiyaar adiye koodum idhu allaal,அவன் அடியார் அடியே கூடும் இது அல்லால் - பாகவதர்களின் திருவடிகளையே அடைவது தவிர
kodu maavinyen,கொடு மாவினையென் - பெரும் அந்த பாவியாகிய நான்
veetum aaru enpathu en,வீடும் ஆறு என்பது என் - (அந்த பாகவத சேஷத்தவ்தை) விடுவதென்று ஒன்று உண்டோ?
antho,அந்தோ - இதை நான் சொல்லவும் வேணுமோ?
3547திருவாய்மொழி || 8-10—நெடுமாற் கடிமை (ஐச்வர்ய கைவல்யங்களிரண்டுங் கூடினாலும் நான் பெற்ற பாகவத சேஷத்வமாகிற புருஷார்த்த்த்தோடு ஒவ்வாதென்கிறார்.) 2
வியன் மூ வுலகு பெறினும் போய்த் தானே தானே ஆனாலும் புயல் மேகம் போல் திருமேனி அம்மான் புனை பூம் கழல் அடிக் கீழ் சயமே அடிமை தலை நின்றார் திருத்தாள் வணங்கி இம்மையே பயனே இன்பம் யான் பெற்றது உறுமோ பாவியேனுக்கே–8-10-2
பதவுரை Show / Hide
viyal moo ulagu perinum,வியல் மூ உலகு பெறினும் - விபுலத்ரிலோக ஸாம்ராஜ்யத்தைப்பெற்றாலும்,
poi,போய் - அதற்கும் மேலான
thaane thaane aanalum,தானே தானே ஆனாலும் - தன்னைத் தானே யநுபவிக்கையாகிற கைவல்ய மோக்ஷம் பெற்றாலும்
puyal megham pol thirumeni ammaan,புயல் மேகம் போல் திருமேனி அம்மான் - மழைகாலத்து மேகம் போன்ற திருமேனி வாய்ந்த எம்பெருமானுடைய
punai poo kazhal adikeel,புனை பூ கழல் அடிகீழ் - சாத்தின புஷ்பங்களையும் வீரக்கழலையுமுடைத்தான திருவடி வாரத்திலே
sayame,சயமே - ஸ்வயம் பிரயோஜநமாக
adimai thalai nindraar,அடிமை தலை நின்றார் - கைங்கர்யத்தின் மேலெல்லை யிலே நிலை நின்றவர்களுடைய
thiru thal vanangi,திரு தாள் வணங்கி - திருவடிகளைத் தொழுது
immaye,இம்மையே - இஹலோகத்திலேயே
yaan perthadhu,யான் பெற்றது - நான் அடைந்த்து
payane inbam,பயனே இன்பம் - புருஷார்த்தமான சுகமே
paaviyaenukku,பாவியேனுக்கு - பாவியான வெனக்கு
urumo,உறுமோ - (கீழ்ச்சொன்ன ஐச்வர்ய கைவல்யங்கள்) இப்பேற்றுக்கு ஒக்குமோ?
3548திருவாய்மொழி || 8-10—நெடுமாற் கடிமை (ஐச்வர்ய கைவல்யங்களிற் காட்டிலும் விலக்ஷணமான பகவல்லாபமுண்டானாலும் இங்கேயிருந்து ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அடிமை செய்கையோடொவ்வாது என்கிறாப்பாட்டில்.) 3
உறுமோ பாவியேனுக்கு இவ்வுலக மூன்றுமுடன் நிறைய சிறுமா மேனி நிமிர்ந்த எம் செந்தாமரைக் கண் திருக் குறளன் நறு மா விரை நாள் மலரடிக் கீழ் புகுதல் அன்றி அவன் அடியார் சிறுமா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரியவே–8-10-3
பதவுரை Show / Hide
Siru maa manisar aai,சிறு மா மனிசர் ஆய் - வடிவில் சிறுத்து அறிவில் பெருத்தவர்களாயிருந்து கொண்டு
Ennai aandaar,என்னை ஆண்டார் - என்னை யீடுபடுத்திக் கொண்டவர்களான
Avan adiyaar,அவன் அடியார் - பாகவதர்கள்
Inge thiriya,இங்கே திரிய - இந்நிலவுலகில் இருக்க
Andri,அன்றி - அன்னவர்களுக்கு அடிமை பூண்டிருப்பது தவிர
Iv vulagam moonrum udan niraiya siru maa meni nimirnth,இவ் வுலகம் மூன்றும் உடன் நிறைய சிறு மா மேனி நிமிர்ந்த - இம்மூவுலகங்களும் ஏக காலத்தில் இடமடையும் படி தனது சிறிய பெரிய திருமேனியை வளரச்செய்த
Sem thamarai kan enn thirukkuralan,செம்தாமரை கண் எண் திருகுறளன் - புண்டரீகாக்ஷனாய் எனக்கினியனான ஸ்ரீவாமநனுடைய
Naru maa virai naal malar adikeel puguthal paaviyaenukku urumo,நறு மா விரை நாள் மலர் அடிகீழ் புகுதல் பாவியேனுக்கு உறுமோ - மிக்க பரிமளம் வாய்ந்த திருவடித்தாமரைகளிலே சென்று சேர்தல் எனக்குத் தகுமோ?
3549திருவாய்மொழி || 8-10—நெடுமாற் கடிமை (பாகவத சேஷத்வத்திலே யிடுபட்டவர்கள் பகவச் சேஷவத்திலே நிற்கலாகாதென்று சிலர் நினைப்பதுண்டு, அதுதவறு பகவானுடைய முகோல்லாஸத்திற்காக பாகவதர்களையுகப்பதுபோல அந்த பாகவதர்களின் முகோல்லாஸத்திற்காகப் பகவானை யுகப்பதும் ப்ராப்தமே) 4
இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என் இரு மா நிலம் முன் உண்டு உமிழ்ந்த செங்கோ லத்த பவள வாய்ச் செந்தாமரைக் கண் என் அம்மான் பொங்கு ஏழ் புகழ்கள் வாய ஆய் புலன் கொள் வடிவு என் மனத்தது ஆய் அங்கு ஏய் மலர்கள் கைய ஆய் வழி பட்டு ஓட அருளிலே–8-10-4
பதவுரை Show / Hide
Mun,முன் - முன்பொரு காலத்திலே
Iru maanilam undu umizhndha,இரு மாநிலம் உண்டு உமிழ்ந்த - மிகப்பெரிய பூமியை யெல்லாம் தனது திருவயிற்றிலே வைத்து நோக்கிப் பிறகு வெளிப்படுத்தின
Koalatha,கோலத்த - அழகு வாய்ந்த
Sem pavalam vaai,செம் பவளம்வாய் - சிவந்த பவழம் போன்ற அதரத்தையுடைய
Senthaamarai kan en ammaan,செம் தாமரை கண் என் அம்மான் - புண்டரீகாக்ஷனான எம்பெருமான்
Pongu ezh pugazhkal,பொங்கு ஏழ் புகழ்கள் - பொங்கிக் கிளர்கின்ற தனது திருக்குணங்களானவை
Vaaya aai,வாய ஆய் - என் வாக்குக்கு விஷயமாகவும்
Pulan kol vadivu,புலன் கொள் வடிவு - மநோஹமான தனது வடிவு
En manathu aai,என் மனத்த்து ஆய் - என் மனத்திலுள்ளதாகவும்
Angu aay malarkal,அங்கு ஏய் மலர்கள் - அத்தலைக்கு ஏற்ற புஷ்பங்கள்
Kaiya aai,கைய ஆய் - என் கையிலுள்ளனவாகவும் பெற்று
Vazhipattu oada arulil,வழிபட்டு ஓட அருளில் - பாகவதர்கள் செய்யும் கைங்கரிய மார்கத்திலே நானும் உடன்பட்டு நடக்கும்படியாக அருளாமாகில்
Inge thirindhaerku,இங்கே திரிந்தேற்கு - (திருநாடு செல்ல விரும்பாதே) இந்த விபூதியிலேயே இப்படி திரிவேனான எனக்கு
Izukkuthu en,இழுக்குற்று என் - என்னதாழ்வு?
3550திருவாய்மொழி || 8-10—நெடுமாற் கடிமை (எம்பெருமானுடைய திருநாட்டிலே பேரின்பம் நுகர்ந்திருக்கப் பெற்றாலும் அத்தோடே கீழ்ச்சிசொன்ன ஐச்வர்யாதிகளெல்லாம் சேரக்கூடினாலும் இங்கே பாகவதர்களுக்கு உகப்பாகத் திருவாய்மொழிபாடி ரஸிக்குமதோடொக்குமோ வென்கிறார்) 5
வழி பட்டு ஓட அருள் பெற்று மாயன் கோல மலர் அடிக்கீழ் சுழி பட்டு ஓடும் சுடர்ச் சோதி வெள்ளத்து இன்புற்று இருந்தாலும் இழி பட்டு ஓடும் உடலினில் பிறந்து தன் சீர் யான் கற்று மொழி பட்டு ஓடும் கவி அமுதம் நுகர்ச்சி உறுமோ முழுதுமே–8-10-5
பதவுரை Show / Hide
Vazhipattu oadu arul petru,வழிபட்டு ஓட அருள் பெற்று - நித்ய கைங்கரியம் பண்ணும்படியாக அவனது திருவருளைப் பெற்று
Maayan,மாயன் - ஆச்சர்ய விபூதி யுக்தனான அந்த ஸர்வேச்வரனுடைய
Koalam malar adi keezh,கோலம் மலர் அடி கீழ் - அழகிய திருவடித் தாமரைகளின் கீழே
Kazhipattu oadum sudar sothi vellathu,கழிபட்டு ஓடும் சுடர் சோதி வெள்ளத்து - சுழித்து ஓடுகிற சுடர்ச்சோதி வெள்ள மென்னும்படியான பரம பத்த்திலே
Inputru irundhaalum,இன்புற்று இருந்தாலும் - ஆனந்த வாழ்ச்சியாக இருக்கப்பெற்றாலும்
Muzhudhum,முழுதும் - கீழ்ச்சொன்ன ஐச்வர்ய கைவல்யாதிகள் எல்லாம் கூடினாலும்
Izhi pattu oadum udalil pirandhu,இழி பட்டு ஓடும் உடலினில் பிறந்து - தாழ்ச்சியின் மிக எல்லையில் நிற்பதான சரீரத்திலே பிறந்து
Katru,கற்று - தன்னுடைய குணங்களை நான் அப்யளித்து
Mozhipattu oadum kali amudham,மொழிபட்டு ஓடும் களி அமுதம் - அவ்வநுபவத்தா லுண்டான ப்ரீதிசொல்லாய் ப்ரவஹிக்கிற கவியாகிற அம்ருத்த்தை
Nukaruchchi urumo,நுகர்ச்சி உறுமோ - பாகவதர்களோடு கூடியநுபவித்து ரஸிக்கைக்கு ஒக்குமோ? (ஒவ்வாது)
3551திருவாய்மொழி || 8-10—நெடுமாற் கடிமை (கீழ்ப்பாட்டுக்கு சேஷபூதமாகவே இப்பாட்டுமருளிச் செய்யப்படுகிறது. எம்பெருமானுடைய ஒப்பில்லாத விலக்ஷணமான புகழைத் திருவாய்மொழியாலே நுகருமதுக்கு விபுவான அவன்றன்னுடைய ஆனந்தமும் ஒவ்வாதென்கிறார்) 6
நுகர்ச்சி உறுமோ மூ வுலகின் வீடு பேறு தன் கேழ் இல் புகர்ச் செம் முகத்த களிறு அட்ட பொன் ஆழிக்கை என் அம்மான் நிகரச் செம் பங்கி எரி விழிகள் நீண்ட அசுரர் உயிர் எல்லாம் தகர்த்து உண்டு உமிழும் புள் பாகன் பெரிய தனி மாப் புகழே–8-10-6
பதவுரை Show / Hide
than kel il,தன் கேழ் இல் - தனக்கு ஒப்பின்றியே யிருப்பதாய்
Pugar,புகர் - புகரை யுடைத்தாய்
Semmukatha,செம்முகத்த - சீற்றத்தாலே சிவந்த முகத்தையுடைத்தான
Kiliru,களிறு - (குவலயாபீட மென்கிற) யானையை
Atta,அட்ட - கொன்று முடித்தவனும்
Pon azhi kai,பொன் ஆழி கை - அழகிய திருவாழி மோதிர மணிந்த திருக்கையை யுடையவனும்
En ammaal,என் அம்மாள் - எனக்கு ஸ்வாமியும்
Nikar sem pangi,நிகர் செம் பங்கி - தங்கள் ஜாதிக்குத் தகுதி யாகச் சிவந்த செம் பட்ட) மயிர்களையும்
Eri vizhikal,எரி விழிகள் - அக்நி சக்ரம் போன்ற கண்களையுமுடயராய்
Neenda,நீண்ட - பருத்த வடிவு படைத்தவர்களான
Asurar,அசுரர் - அசுரர்களினுடைய
Uyir ellam,உயிர் எல்லாம் - பிராணன்களை யெல்லாம்
Thakarthu undu,தகர்த்து உண்டு - பிடித்த வாங்கி
Uzalum,உழலும் - இதுவே தொழிலாக ஸஞ்சரிக்கிற
Pul,புள் - கருடனுக்கு
Pakan,பாகன் - நியாமகனுமான எம்பெருமானுடைய
Periya tani maa pugal nukaruchchi urumo moo ulagin veedu paeru,பெரிய தனி மா புகழ் நுகர்ச்சி உறுமோ மூ உலகின் வீடு பேறு - பெரிய ஒப்பற்ற கல்யாண குண ராசியை அநுபவிக்கையோடு ஒக்குமோ ஸர்வேச்ரத்வம்.
3552திருவாய்மொழி || 8-10—நெடுமாற் கடிமை (ஸ்வயம்புருஷார்த்த மாக்க் கொள்ளும் பகவதநுபவம் வேண்டா, பாகவத ப்ரீதிரூபமான பகவதநுபவத்தைப் பண்ணிக்கொண்டு அந்த பகாவதர்களோடு கூடி வாழ்கையெ நமக்கு நாளும வாய்க்கவேணுமென்கிறார்.) 7
தனி மாப் புகழே எஞ்ஞான்றும் நிற்கும் படியாத் தான் தோன்றி முனி மாப் பிரம முதல் வித்தாய் உலகம் மூன்றும் முளைப்பித்த தனி மாத் தெய்வத் தளிர் அடிக் கீழ்ப் புகுதல் அன்றி அவன் அடியார் நனி மாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே–8-10-7
பதவுரை Show / Hide
Tani maa pugal e yennjanrum nirkumpadi ay,தனி மா புகழே எஞ்ஞான்றும் நிற்கும்படி ஆய் - ஒப்பில்லாத சிறந்த புகழே காலமுள்ளதனையும் வேதாந்த ப்ரஸித்தமாய் நிற்கும்படியாக
Taan tonri,தான் தோன்றி - தானோ (படைப்புக் கடவுளாக) ஆவிர்ப்பவித்து
Muni,முனி - (ஸ்ருஷ்டிக்காக) ஸங்கல்பிக்கிற
Maa piram,மா பிரம்ம் - பரப்ரஹ்ம்மாகிற
Mudhal vithu ay,முதல் வித்து ஆய் - பரமநாரணமாய்
Ulakam moonrum,உலகம் மூன்றும் - லோகங்களை யெல்லாம்
Mulaippitha,முளைப்பித்த - உண்டாக்கின
Tani maa teyvam,தனி மா தெய்வம் - ஒப்பற்ற பர தேவதையினுடைய
Thalira adi keizhl,தளிர அடி கீழ் - தளிர்போன்ற திருவடியின் கீழே
Puguthal anri,புகுதல் அன்றி - புகுகையைத் தவிர்த்து
Avan adiyar,அவன் அடியார் - ஸ்ரீவைஷ்யவர்களுடைய
Nani maa kalavi inbame,நனி மா கலவி இன்பமே - மிகச் சிறந்த்தான ஸம்ச்லேஷ ஸுகமே
Nankatkku nalum vayntha,நங்கட்கு நாளும் வாய்ந்த - நமக்கு எப்போதும் வாய்க்க வேணும்
3553திருவாய்மொழி || 8-10—நெடுமாற் கடிமை (பாகவதர்களின் திரள்களைக் கண்டு கொண்டிருந்தாலே போதுமே யென்கிறாரிப்பாட்டில்.) 8
நாளும் வாய்க்க நங்கட்கு நளிர் நீர்க் கடலைப் படைத்து தன் தாளும் தோளும் முடிகளும் சமன் இலாத பல பரப்பி நீளும் படர் பூங்கற்பகக் காவும் நிறை பல் நாயிற்றின் கோளும் உடைய மணி மலை போல் கிடந்தான் தமர்கள் கூட்டமே–8-10-8
பதவுரை Show / Hide
Nalir neer kadalai padaittu,நளிர் நீர் கடலை படைத்து - குளிர்ந்த நீரையுடைய கடலை யுண்டாக்கி
Saman ilaadha,சமன் இலாத - ஒப்பில்லாத
Than pala thaalum tholum mudikulum,தன் பல தாளும் தோளும் முடிகளும் - தன்னுடைய பல திருவடிகளையும் திருத்தோகளையும் திருமுடிகளையும்
Parappi,பரப்பி - பரப்பிக்கொண்டு
Neelum padar poo,நீளும் படர் பூ - நீண்டு படர்ந்த புஷ்பங்களையும்
Karppagam kaavum,கற்பகம் காவும் - கற்பகச் சோலையையும்
Nirai pal naayitrin kolum udaiya,நிறை பல் நாயிற்றின் கோளும் உடைய - நிறைந்த பல ஆதித்ய தேஜஸ்ஸையு முடைத்தான
Mani malai pol,மணி மலை போல் - மாணிக்கமலை போலே
Kidanthaan,கிடந்தான் - கண்வளர்ந்தருளின பெருமானுடைய
Thamarkal,தமர்கள் - பக்தர்களோ டுண்டான
Kootam,கூட்டம் - சேர்த்தியானது
Nangadku naalum vaaykka,நங்கட்கு நாளும் வாய்க்க - எமக்கு எப்போதும் உண்டாகவேணும்.
3554திருவாய்மொழி || 8-10—நெடுமாற் கடிமை (மணவாளமாமுனிகள் யதிராஜவிம்சதியில் ஈத்வத்தாஸதாஸகணநா சரமாவதௌ யஸ் த்த்தாஸதைகரஸதா அவிரதா ம்மாஸ்து * என்று பாகவத சேஷத்வ காஷ்டையிலே தாம் நிற்கவேணுமென்று பாரித்தாரே, அந்தப் பாரிப்புக்கு இந்தப் பாசுரம் நிதானமாயிருக்கும்.) 9
தமர்கள் கூட்ட வல்வினையை நாசம் செய்யும் சதிர் மூர்த்தி அமர் கொள் ஆழி சங்கு வாள் வில் தண்டாதி பல்படையன் குமரன் கோல வைங்கணை வேள் தாதை கோதில் அடியார் தம் தமர்கள் தமர்கள் தமர்களாம் சதிரே வாய்க்க தமியேற்கே–8-10-9
பதவுரை Show / Hide
Tamarkal kootam,தமர்கள் கூட்டம் - பக்த வர்க்கங்களுக்கு வருகின்ற
Val vinaiyai,வல் வினையை - வலிய விரோதிகளை
Naasam seyyum sadhir,நாசம் செய்யும் சதிர் - போக்கும்படியான திறமையுடைய
Moorthi,மூர்த்தி - ஸ்வாமியாய்
Amar kol,அமர் கொள் - போர் செய்யக் கிளர்கின்ற
aazhi sangu vaalvil thandu aadhi,ஆழி சங்கு வாள்வில் தண்டு ஆதி - பஞ்சாயுதங்கள் முதலிய
Pal padaiyan,பல் படையன் - திவ்யாயுத வர்க்கத்டை யுடையனாய்
Kumaran,குமரன் - நித்ய்யுவாவாய்
Kolam ainganai vel thadai,கொலம் ஐங்கணை வேள் தாதை - அழகிற் சிறந்த பஞ்சபாணனான மன்மதனுக்குத் தந்தையான் எம்பெருமானுடைய
Kodu il adiyar tam,கோது இல் அடியார் தம் - கோதற்ற அடியார்க்கு
Tamarkal tamarkal tamarkal aam sadhir,தமர்கள் தமர்கள் தமர்கள் ஆம் சதிர் - அடிமையில் முடிந்த நிலமான வாய்ப்பே
Tamiyerkku vaaykka,தமியேற்கு வாய்க்க - துணையற்றி அடியேனுக்கு வாய்க்கவேணும்
3555திருவாய்மொழி || 8-10—நெடுமாற் கடிமை (எம்பெருமானுக்கு அடியரானாருடைய ஸம்பந்தி ஸம்பந்திகளென்று போருகிற பரம்பரையின் எல்லையில் அடிமைசெய்து நடக்கையாகிற கோட்பாடு என்னளவிலே நிற்காமல் என்னுடைய பரம்பரையிலும் வாய்க்கவேணு மென்கிறார்) 10
வாய்க்க தமியேற்கு ஊழி தோறு ஊழி ஊழி மாகாயாம்- பூக்கொள் மேனி நான்கு தோள் பொன்னாழிக்கை என்னம்மான் நீக்கமில்லா வடியார்தம் அடியார் அடியார் அடியார் எம்கோக்கள் அவர்க்கே குடிகளாய்ச் செல்லும் நல்ல கோட்பாடே–8-10-10
பதவுரை Show / Hide
Maa kaayaa poo kol meni,மா காயா பூகொள் மேனி - அழகிய காயாம்பூநிறத்தைக் கொண்ட திருமேனியையும்
Naanku thol,நான்கு தோள் - நான்கு தோள்களையும்
Pon aazhi kai,பொன் ஆழி கை - அழகிய திருவாழியேந்திய கையையும் உடைய
Em ammaan,எம் அம்மான் - எம்பெருமானுடைய
Neekkam illaa,நீக்கம் இல்லா - பிரிவு இல்லாத
Adiyar tam,அடியார் தம் - அடியார்களுக்கு
Adiyar adiyar adiyar,அடியார் அடியார் அடியார் - சரமாவதிதாஸ பூதர்கள்
Em kookal,எம் கோக்ள் - எமக்கு ஸ்வாமிகள்
Avargge,அவர்க்கே - அன்னவர்களுக்கே
Kudikal aay chellum,குடிகள் ஆய் செல்லும் - சேஷவ்ருத்தி பண்ணுங்குலமாயச் செல்லும்படியான
Nalla kodpaadu,நல்ல கோட்பாடு - திடமான அத்யவஸாயமானது
Oozi oozii oozii thooru,ஊழி ஊழி ஊழி தோறு - எஞ்ஞான்றும்
Tamiyerkku,தமியேற்கு - அடியேனுக்கு உண்டாக வேணும்
3556திருவாய்மொழி || 8-10—நெடுமாற் கடிமை (இத்திருவாய்மொழியை ஓத வல்லவர்கள் இதிற்சொன்ன பாகவத சேஷத்வத்தைப் பெற்று ஸகுடும்பமாக வாழப் பெறுவரென்று பயனுரைத்த தலைக் கட்டுகிறார்.) 11
நல்ல கோட்பாட்டுலகங்கள் மூன்றின் உள்ளும் தான் நிறைந்த அல்லிக் கமலக் கண்ணனை அந்தண் குருகூர்ச் சடகோபன் சொல்லப்பட்ட வாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள் நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே–8-10-11
பதவுரை Show / Hide
Nalla kootpaadu,நல்ல கோட்பாடு - நல்ல கட்டளைப்பாடுடைய
Ulagangal moonru in ulloam,உலகங்கள் மூன்றின் உள்ளும் - மூவுலகங்களினுள்ளும்
Thaan niraintha,தான் நிறைந்த - வியாபீத்த
Alli kamalam kannanai,அல்லி கமலம் கண்ணனை - விகஸித்த தாமரைப் பூப்போன்ற கண்களையுடைய பெருமான் விஷயமாக
Am than kurukoor sadagopan sollappatta aayirathul,அம் தண் குருகூர் சடகோபன் சொல்லப்பட்ட ஆயிரத்துள் - ஆழ்வாரா வருளிச் செய்யப்பட்ட ஆயிரத்தினுள்
Ivaaiyum pattum vallaarkal,இவையும் பத்தும் வல்லார்கள் - இவை பத்தையும் ஓதவல்லவர்கள்
Konda pentir makkale,கொண்ட பெண்டிர் மக்களே - ஸ குடும்பமாக
Nalla pathal,நல்ல பத்த்தால் - பாகவத சேஷ்த்வ பர்யந்தமான சிறப்புடனே
Manai vaazhvaar,மனை வாழ்வார் - க்ருஹஸ்தர்களாக வாழப்பெறுவர்கள்.