திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 8-3 கரையெடுத்த (10 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1668பெரிய திருமொழி || (8-3–கரையெடுத்த) (திரு கண்ணபுரம் 3) - (தலைமகளைப் பிரிந்த தலைமகள் இரங்கிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மிக்க பரிமளத்தை உடைத்தான திருத் துழாய் மாலையையும் உடைத்தாய் பெரிய மிடுக்கையும் உடைத்தாய் மலை போலே இருக்கிற திருத் தோள்கள் அசையும் படியாக மலையை எடுத்து பரிஹரித்த ஆபத் சகனான ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு-என்னுடைய தர்ச நீயமான வளையை இழந்தேன்) 1
கரையெடுத்த சுரி சங்கும் கன பவளத்து எழு கொடியும் திரை எடுத்து வரு புனல் சூழ் திருக் கண்ண புரத்து உறையும் விரையெடுத்த துழாய் அலங்கல் விறல் வரைத் தோள் புடை பெயர வரையெடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் வரி வளையே –8-3-1
பதவுரை Show / Hide
கரை எடுத்த, Karai Edutha - கோஷத்தையுடைத்தாய்
சுரி, Suri - வளைந்த
சங்கும், Sangum - சங்குகளையும்
கனம், Kanam - செறிந்திருக்கிற
பவளத்து, Pavalathu - பவழங்களினுடைய
எழு, Ezhu - வளர்த்தியையுடைய
கொடியும், Kodiyum - கொடிகளையும்
திரை, Thirai - அலைகளானவை
எடுத்து வரு, Eduthu Varu - அடித்துக்கொண்டு வரப்பெற்ற
புனல், Punal - ஜலத்தாலே
சூழ், Sool - சூழப்பட்ட
திருக்கண்ணபுரத்து, Thirukkannapurathu - திருக்கண்ணபுரத்திலே
உறையும், Urayum - நித்யவாஸம் செய்தருள்பவனும்
விரை எடுத்த, Virai Edutha - பரிமளம் மிகுந்த
துழாய் அலங்கல், Thuzhai Alangkal - திருத்துழாய் மாலையை யணிந்த தாய்
விறல், Viral - மிடுக்கையுடையதாய்
வரை, Varai - மலைபோன்றதான
தோள், Thol - திருத்தோள்
புடை பெயர, Pudai Peyar - அசையும்படியாக
வரை எடுத்த, Varai Edutha - கோவர்த்தனமலையை யெடுத்து (க்குடையாகப்) பிடித்தவனுமான
பெருமானுக்கு, Perumanukku - எம்பெருமானுக்கு
என் வரி வளை, En Vari Vilai - எனது அழகிய வளைகளை
இழந்தேன், Izhandhen - இழந்துவிட்டேன்.
1669பெரிய திருமொழி || (8-3–கரையெடுத்த) (திரு கண்ணபுரம் 3) - (தலைமகளைப் பிரிந்த தலைமகள் இரங்கிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (குவலயா பீடமானது வெருவும்படியாக அதன் கொம்புகளை அநாயாசேன முறித்துப் பொகட்ட அச் செயலுக்கு வளை இழந்தேன்) 2
அரி விரவும் முகில் கணத்தால் அகில் புகையால் வரையோடும் தெரிவு அரிய மணி மாடத் திருக் கண்ண புரத் துறையும் வரி அரவின் அணைத் துயின்று மழை மதத்த சிறு தரு கண் கரி வெருவ மருப்பு ஒசித்தார்க்கு இழந்தது என் கன வளை –8-3-2
பதவுரை Show / Hide
அரி, Ari - கறுப்பானது (- (இழந்தேன்-.))
விரவும், Viravum - கலந்து பரவப்பெற்ற
முகில் கணத்தால், Mugil Kanathal - மேகக் கூட்டங்களாலும்
அகில் புகையால், Akil Pugaiyal - அகில் புகைகளாலும்
வரையோடும் தெரிவு அரிய, Varaiyodum Therivu Ariya - மலையோடு வாசியறிய வொண்ணாத
மணி மாடம், Mani Maadam - மணிமயமான மாளிகைகளையுடைய திருக்கண்ணபுரத்து; உறையும் -;
வரி அரவு இன் அணை துயின்று, Vari Aravu In Anai Thuyinru - கோடுகளையுடைய ஆதிசேஷனாகிற போக்யமான படுக்கையிலே சயனிப்பவனாயும்
மழை மதத்த, Mazhai Mathath - மழைபோல் பெருகுகின்ற மதஜலத்தையுடையதும்
சிறு தறு கண், Siru Tharu Kan - சிறுத்த வட்டணித்த கண்களையுடையதுமான
கரி, Kari - குவலயா பீட மென்னும் யானை யானது
வெருவ, Veruva - அஞ்சும்படியாக
மருப்பு, Maruppu - (அதன்) தந்தத்தை
ஒசித்தாற்கு, Osiththarku - ஒடித்தொழித்தவனாயுமுள்ள பெருமானுக்கு
என் கனம் வளை, En Kanam Valai - எனது பொன்வளைகளை
1670பெரிய திருமொழி || (8-3–கரையெடுத்த) (திரு கண்ணபுரம் 3) - (தலைமகளைப் பிரிந்த தலைமகள் இரங்கிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சந்த்ரனுக்கு வந்த ஷயத்தை போக்கி-அது தன்னை தன் பேறாக நினைத்து இருக்கிற புண்டரீ காஷனான ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு ஒரு காலும் கழற்ற ஒண்ணாத வளையை இழந்தேன்) 3
துங்க மா மணி மாட நெடு முகட்டின் சூலிகை போம் திங்கள் மா முகில் துணிக்கும் திருக் கண்ண புரத் துறையும் பைங்கண் மால் விடை அடர்த்துப் பனி மதி கோள் விடுத்துகந்த செங்கண் மால் யம்மானுக்கு இழந்தேன் என் செறி வளையே –8-3-3
பதவுரை Show / Hide
மாடம் நெடுமுகட்டின் சூலிகை, Madam Nedumugattin Soolikai - உந்நதமாய் சிறந்த ரத்னங்களிழைக்கப் பெற்றதான மாடமாளிகைகளினுடைய நீண்ட உச்சியிலுள்ள சூலமானது (- (துங்கம் மா மணி) (திருக்கண்ணபுரத்து, உறையும்-;) (இழந்தேன்-.))
போம் திங்கள், Pom Thingal - மேலே சஞ்சரிக்கின்ற சந்திரனையும்
மா முகில், Maa Mukil - பெரிய மேகங்களையும்
துணிக்கும், Thunikkum - துண்டிக்கப் பெற்ற
பைங்கண் மால் விடை அடர்த்து, Paingkan Maal Vidai Adarthu - பசுமை தங்கிய கண்களையுடைய பெரிய எருதுகளை அழியச் செய்தவனாயும்
பனி மதி கோள் விடுத்து, Pani Mathi Kol Viduthu - குளிர்ச்சியை இயல்வாகவுடைய சந்திரனுடை க்ஷயத்தைப்போக்கி
உகந்த, Ugantha - திருவுள்ள முவந்தவனாயும்
செங்கண் மால் அம்மானுக்கு, Sengkan Maal Ammanukku - புண்டரீகாக்ஷனாயு மிருக்கிற ஸர்வேச்வரன் விஷயத்திலே
என் செறி வளை, En Seri Valai - என்னுடைய கழலாதிருக்கத்தக்க வளைகளை
1671பெரிய திருமொழி || (8-3–கரையெடுத்த) (திரு கண்ணபுரம் 3) - (தலைமகளைப் பிரிந்த தலைமகள் இரங்கிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இரண்டு எண்ண ஒண்ணாத படி நிர்விவரமாய் இருக்கிற மருதுகள் முறிந்து விழும்படியாக போன முக்தனுக்கு என்னுடைய ஸ்லாக்கியமான வளையை இழந்தேன்) 4
கணம் மருவும் மயில் அகவும் கடி பொழில் சூழ் நெடு மறுகில் திணம் மருவும் கன மதிள் சூழ் திருக் கண்ண புரத் துறையும் மணம் மருவும் தோள் ஆய்ச்சி யார்க்கப் போய் உரலோடும் புணர் மருதம் இற நடந்தாற்க்கு இழந்தேன் என் பொன் வளையே –8-3-4
பதவுரை Show / Hide
கணம் மருவு, Kanam Maruvu - திரள் மிக்கிருந்துள்ள (- (திருக்கண்ணபுரத்து, உறையும்) (என் பொன் வளை இழந்தேன்-.))
மயில், Mayil - மயில்களானவை
அகவு, Akavu - கூத்தாடப்பெற்ற
கடி பொழில் சூழ், Kadi Pozhil Soozh - மணம்மிக்க சோலைகளாற் சூழப்பட்டதாய்
நெடு மறுகில், Nedu Marugil - பெரிய திருவீதிகளையுடைத்தாய்
திணம் மருவு, Thinam Maruvu - திடம் பொருந்திய
கனம், Kanam - கனகமயமான
மதிள், Mathil - திருமதிள்களாலே
சூழ், Sool - சூழப்பட்டதான
மணம் மருவு தோள் ஆய்ச்சி, Manam Maruvu Thol Aaychchi - பரிமளம் பொருந்திய தோள்களை யுடையளான இடைச்சி
ஆர்க்க, Aarkka - (தாம்பினால்) கட்ட
உரலோடும் போய், Uralodum Poi - உரலோடு கூடச் சென்று
புணர் மருதம், Punar Marutham - இரட்டை மருதமரங்கள்
இற, Ira - இற்று முறிந்து விழும்படி
நடந்தாற்கு, Nadandaarikku - நடைகற்ற பெருமானுக்கு
1672பெரிய திருமொழி || (8-3–கரையெடுத்த) (திரு கண்ணபுரம் 3) - (தலைமகளைப் பிரிந்த தலைமகள் இரங்கிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஈடுபட்டு ஓடி அமுது செய்த-தயிரைக் காட்டி -நீ களவு கண்டாய் என்பார்கள் என்று பார்த்து அத்தை இல்லை செய்கைக்காக –முகம் எங்கும் தடவிக் கொள்ளுகிற இளிம்பனுக்கு நான் இளிம்பு பட்டேன்) 5
வாய் எடுத்த மந்திரத்தால் அந்தணர் தம் செய் தொழில்கள் தீ எடுத்து மறை வளர்க்கும் திருக் கண்ண புரத் துறையும் தாய் எடுத்த சிறு கோலுக்கு உளைந்தோடி தயிர் உண்ட வாய் துடைத்த மைந்தனுக்கு இழந்தேன் என் வரி வளையே –8-3-5
பதவுரை Show / Hide
அந்தணர், Andhanar - பிராமணர் (- (திருக்கண்ணபுரத்து, உறையும்-;) (என் வரி வளை இழந்தேன்-.))
வாய் எடுத்த மந்திரத்தால், Vaai Edutha Mandiraththaal - உரக்க உச்சரிக்கப்படுகிற மந்திரங்களைக் கொண்டு
தம் செய் தொழில்கள், Tham Sei Thozhilgal - தாங்கள் செய்யும் அநுஷ்டாக மாகிய
தீ எடுத்து, Thee Eduthu - அக்நி காரியங்களைக் குறையறச் செய்து
மறை வளர்க்கும், Marai Valarkkum - வேதமரியாதையை ஓங்கச் செய்யுமிடமான
தாய் எடுத்த, Thaai Edutha - தாயான யசோதைப்பிராட்டி கையிலெடுத்த
சிறு கோலுக்கு, Siru Kolukku - சிறிய தடிக்கு
உளைந்த ஓடி, Ulainda Odi - அஞ்சி ஓடிச் சென்று
தயிர் உண்ட வாய் துடைத்த, Thayir Unda Vaai Thudaitha - தயிரை அமுதுசெய்த வாயைத் துடைத்த
மைந்தனுக்கு, Maindhanukku - ஸ்வாமிக்கு
1673பெரிய திருமொழி || (8-3–கரையெடுத்த) (திரு கண்ணபுரம் 3) - (தலைமகளைப் பிரிந்த தலைமகள் இரங்கிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அன்று ஹிரண்யன் மிடுக்கு அழியும்படி யாக ஸ்ரீ பிராட்டிமாரும் கண்டு கொண்டு இருக்கும் படியாக ஸ்ரீ உகிராலே-அவன் உடைய சரீரத்தை பேதித்து தன்னுடைய ஸ்ரீ ஈஸ்வரத்வத்தை நிலை நிறுத்தினவனுக்கு என் பருவத்தில் ஒருவனுக்கு உதவினான் அன்றோ-என்று இருந்தாயிற்று வளை இழந்தது) 6
மடல் எடுத்த நெடும் தாளை மருங்கு எல்லாம் வளர் பவளம் திடல் எடுத்து சுடர் இமைக்கும் திருக் கண்ண புரத் துறையும் அடல் அடர்த்து அன்று இரணியனை முரண் அழிய வணி யுகிரால் உடல் எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளி வளையே –8-3-6
பதவுரை Show / Hide
மடல் எடுத்த, Madal Edutha - மடல்களை உயரக்கொண்ட (- (திருக்கண்ணபுரத்து, உறையும்-;) (என் ஒளி வளை இழந்தேன்-.))
நெடு, Nedu - நீண்ட
தாழை, Thaalai - தாழைச் சொடிகளின்
மருங்கு எல்லாம், Marungu Ellam - பக்கங்களிலெல்லாம்
வளர், Valar - வளர்கின்ற
பவளம், Pavalam - பவழங்களானவை
திடல் எடுத்து, Thidal Eduthu - மேடுகளிலே படர்ந்து
சுடர் இமைக்கும், Sudar Imaikkum - ஒளியுடன் விளங்கப்பெற்ற
அன்று, Andru - முன்பொருகாலத்தில்
இரணியனை, Iraniyanai - ஹிரண்யாஸுரனை
அடல், Adal - யுத்தத்திலே
அடர்த்து, Adarthu - நெருக்கி
முரண் அழிய, Muran Azhiya - (அவனுடைய) மிடுக்கு அழியும் படியாக
அணி உகிரால், Ani Ukiraal - அழகிய நகங்களாலே
உடல் எடுத்த, Udal Edutha - (அவனது) உடம்பைப் பிளந்தொழிந்த
பெருமானுக்கு, Perumanukku - ஸர்வேச்வரனுக்கு
1674பெரிய திருமொழி || (8-3–கரையெடுத்த) (திரு கண்ணபுரம் 3) - (தலைமகளைப் பிரிந்த தலைமகள் இரங்கிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிரளய காலத்தில் எடுத்து வைத்து பின்னே வெளி நாடு காண உமிழ்ந்த ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு அவனுடைய ஆபத் சகச்வத்தை விஸ்வசித்து கிடாய் நான் கெட்டேன் -என்கிறார்) 7
வண்டமரும் மலர்ப்புன்னை வரி நீழல் அணி முத்தம் தெண்திரைகள் வரத் திரட்டும் திருக் கண்ண புரத் துறையும் எண் திசையும் எழு சுடரும் இரு நிலனும் பெரு விசும்பும் உண்டு உமிழ்ந்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளி வளையே –8-3-7
பதவுரை Show / Hide
வண்டு அமரும், Vandu Amarum - வண்டுகள் படிந்திருக்கிற (- (திருக்கண்ணபுரத்து, உறையும் -;) (என் ஒளி வளை இழந்தேன்-.))
மலர், Malar - புஷ்பங்களையுடைத்தான
புன்னை, Punnai - புன்னைமரத்தினுடைய
வரி நீழல், Vari Neezhal - அகன்ற நிழலிலே
தெண் திரைகள், Then Thiraigal - தெளிந்த அலைகளானவை
அணி முத்தம், Ani Muththam - அழகிய முத்துக்களை
வர திரட்டும், Vara Thirattum - கொண்டுவந்து திரட்டப்பெற்ற
எண் திசையும், En Thisaiyum - எட்டுத் திசைகளையும்
எழு கடலும், Ezu Kadalum - ஏழு கடல்களையும்
இரு நிலனும், Iru Nilanum - விசாலமான பூமியையும்
பெரு விசும்பும், Peru Visumbum - பெரிதான ஆகாசத்தையும்
உண்டு, Undu - (பிரளயத்தில்) அமுது செய்து
உமிழ்ந்த, Umizhndha - (பிறகு) வெளிப்படுத்தின
பெருமானுக்கு, Perumanukku - ஸ்வாமிக்கு
1675பெரிய திருமொழி || (8-3–கரையெடுத்த) (திரு கண்ணபுரம் 3) - (தலைமகளைப் பிரிந்த தலைமகள் இரங்கிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தர்ச நீயமான வடிவை உடையனான ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுகிற – சிவந்த கமலத்தை உடைத்தான திரு நாபியை உடையவனுக்கு -உத்பாதகனை விஸ்வசித்து முடிந்தேன் -என்கிறாள்) 8
கொங்கு மலி கருங்குவளை கண்ணாகத் தெண் கயங்கள் செங்கமல முகமலர்த்தும் திருக் கண்ண புரத் துறையும் வங்கமலி தடங்கடலுள் வரி அரவின் அணைத் துயின்ற செங்கமல நாபனுக்கு இழந்தேன் என் செறி வளையே –8-3-8
பதவுரை Show / Hide
தெண் கயங்கள், Then Kayangal - தெளிந்த தடாகங்களானவை (- (திருக்கண்ணபுரத்து, உறையும்-;) (என் செறி வளை இழந்தேன்-.))
கொங்கு மலி, Kongu Mali - பரிமளம் மிக்க
கரு குவளை, Karhu Kuvalai - கரு நெய்தற்பூக்களை
கண் ஆக, Kan Aaga - கண்களாகவும்
செம் கமலம், Sem Kamalam - செந்தாமரைப் பூக்களை
முகம், Mukam - முகங்களாகவும்
மலர்த்தும், Malarthum - விகஸிப்பிக்கப்பெற்ற
வங்கம் மலி தட கடலுள், Vangam Mali Thada Kadalul - அலைகள் நிரம்பிய பெரிய திருப்பாற்கடலிலே
வரி, Vari - கோடுகளையுடைய
அரவு, Aravu - திருவனந்தாழ்வானாகிற
இன், In - இனிமையான
அணை, Anai - திருப்பள்ளி மெத்தையிலே
துயின்ற, Thuyinra - சயனித்தருளாநின்ற
செம் கமலம் நாபனுக்கு, Sem Kamalam Nabanukku - செந்தாமரைப்பூவைத் திருநாபியிலே உடையனான பெருமானுக்கு
1676பெரிய திருமொழி || (8-3–கரையெடுத்த) (திரு கண்ணபுரம் 3) - (தலைமகளைப் பிரிந்த தலைமகள் இரங்கிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தன்னை ஒழியச் செல்லாமை உடையாருக்கு தன்னை கொடுக்குமவன் அன்றோ – நம் செல்லாமை பரிஹரியானோ விஸ்வசித்து வளை இழந்தேன் -என்கிறாள்) 9
வாராளும் இளங் கொங்கை நெடும் பணைத் தோள் மடப்பாவை சீராளும் வரை மார்பன் திருக் கண்ண புரத் துறையும் பேராளன் ஆயிரம் பேர் ஆயிரம் வாய் அரவணை மேல் பேராளர் பெருமானுக்கு இழந்தேன் என் பெய் வளையே –8-3-9
பதவுரை Show / Hide
வார் ஆளும் இளகொங்கை, Vaar Aalum Ilakongai - கச்சினால் தாங்கப்படுகின்ற இள முலைகளையுடையளாய் (- (திருக்கண்ணபுரத்து, உறையும்-;) (என் பெய் வளை இழந்தேன்-.) (பேராளர் பெருமான் பேராளரென்று மஹான்களுக்குப் பெயர்; அவர்கட்கும் மஹான் என்றபடி.))
நெடு பணை தோள், Nedu Panai Thol - நீண்ட மூங்கில் போன்ற தோள் களையுடையளாய்
மடம், Madam - ஆத்மகுணங்களால் நிறைந்தவளாய்
பாவை, Pavai - பதுமை போன்றவளான பெரிய பிராட்டியார் (நித்யவாஸம் பண்ணப் பெறுகையினாலே)
சீர் ஆளும், Seer Aalum - சீர்மையை யுடைத்தான
வரை, Varai - மலைபோன்ற
மார்பன், Marban - திருமார்பையுடையவனும்
பேர் ஆளன், Per Aalan - பெருமை பொருந்தியவனும்
ஆயிரம் பேர், Aayiram Per - ஆயிரந்திருநாமங்களை யுடையவனும்
ஆயிரம் வாய், Aayiram Vaai - ஆயிரம் முகங்களையுடைய
அரவு, Aravu - ஆதிசேஷனாகிற
அணை மேல், Anai Mel - படுக்கையின் மீது பள்ளி கொண்டிருப்பவனுமான
பேராளர் பெருமானுக்கு, Peralar Perumanukku - தேவாதி தேவனுக்கு
பெய்வளை, Peivazhai - அணிந்துக்கொண்டிருந்தவளை.
1677பெரிய திருமொழி || (8-3–கரையெடுத்த) (திரு கண்ணபுரம் 3) - (தலைமகளைப் பிரிந்த தலைமகள் இரங்கிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நாவிலே பொருந்தும் படி பாட சஹ்ருதயமாக பண்ணின பாபங்களும் விட்டுப் போம் – உக்தி மாத்ரத்தைச் சொல்ல புத்தி பூர்வகமாக பண்ணின பாபங்கள் கிட்டா -என்கிறார்) 10
தேமருவு பொழில் புடை சூழ் திருக் கண்ண புரத் துறையும் வாமனனை மறி கடல் சூழ் வயலாலி வள நாடன் காமரு சீர்க் கலிகன்றி கண்டுரைத்த தமிழ் மாலை நா மருவி யிவை பாட வினையாய நண்ணாவே –8-3-10
பதவுரை Show / Hide
தே மருவு, The Maruvu - தேன் பொருந்திய
பொழில், Pozhil - சோலைகளினால்
புடை சூழ், Pudai Soozh - நாற்புறமுஞ் சூழப்பட்ட
திருக்கண்ணபுரத்து, Thirukkannapurathu - திருக்கண்ணபுரத்தில்
உறையும், Urayum - நித்யவாஸம் பண்ணுகிற
வாமனனை, Vamananai - வாமநாவதாரம் செய்தருளின பெருமானைக் குறித்து,
மறி கடல் சூழ், Mari Kadal Soozh - அலை மடிகின்ற கடலாலே சூழப்பட்டு
வயல் வளம், Vayal Valam - வயல் வளங்களையு முடைத்தான
ஆலி நாடன், Aali Naadan - திருவாலிநாட்டுக்குத் தலைவரும்
காமரு சீர், Kamaru Seer - விரும்பத்தக்க குணங்களையுடையவருமான
கலிகன்றி, Kalikanri - திருமங்கையாழ்வார்
கண்டு உரைத்த, Kandu Uraitha - ஆராய்ந்து அருளிச்செய்த
தமிழ் மாலை இவை, Tamizh Maalai Ivai - இத்தமிழ்ப் பாசுரங்களை
நாமருவி, Naamaaruvi - நாவிலே பொருந்தவைத்து
பாட, Paada - பாடுமளவிலே
வினை ஆய, Vinai Aaya - பாபமென்று உள்ளவை யெல்லாம்
நண்ணா, Nannaa - கிட்டாதே ஒழிந்துபோம்