திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 8-5 தந்தை காலில் (10 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1688பெரிய திருமொழி || (8-5–தந்தை காலில்) (திரு கண்ணபுரம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிறரால் வந்த விலங்கு பரிஹரிக்குமவன் தன்னால் வந்த விலங்கு பரிஹரியாது ஒழிவதே – ஸ்ரீ வசுதேவர் காலிலே விலங்கு கழலும்படி வந்து அவதரித்த முக்த்தன் உடைய ஸவபாவத்தை அனுசந்தித்து ஆபத்துக்களிலே வந்து உதவும் ஸ்வ பாவனான பின்பு அந்த பித்ராதிகள் அளவில்லாத ஆசையை உடைய நமக்கு வந்து உதவுவானோ என்று பிரிந்து தனி இருக்கிற என் நெஞ்சானது அவன் பின்னே போயிற்று) 1
தந்தை காலில் விலங்கற வந்து தோன்றிய தோன்றல் பின் தமியேன் சிந்தை போயிற்று திருவருள் அவனிடைப் பெறும் அளவு இருந்தேனை அந்தி காவலன் அமுதுறு பசுங்கதிர் அவை சுட அதனோடு மந்த மாருதம் வனமுலை தடவந்து வலி செய்வது ஒழியாதே –8-5-1
பதவுரை Show / Hide
தந்தை, Thandhai - தகப்பனாரான நந்தகோபருடைய
காலில், Kaalil - காலில் பூட்டியிருந்த
விலங்கு, Vilangu - விலங்கானது
அற, Aru - இற்று முறிந்து விழும்படி
வந்து தோன்றிய, Vandu Thonriya - திருவவதரித்த
தோன்றல் பின், Thonral Pin - ஸ்வாமியான கண்ணபிரானுடைய பின்னே
தமியேன் தன், Thamiyen Than - தனிப்பட்டிருக்கின்ற என்னுடைய
சிந்தை, Sindhai - நெஞ்சானது
போயிற்று, Poyitru - போய்விட்டது;
அவனிடை, Avanidai - அப்பெருமானிடத்தில்
திரு அருள், Thiru Arul - க்ருபையை
பெறும் அளவு இருந்தேனை, Perum Alavu Irundhenai - பெறுவதற்க ஸமயம் பார்த்திருக்கின்ற என்னை
அந்தி காவலன், Andhi Kavalain - இராப்பொழுதுக்கு இறைவனான சந்திரனுடைய
அமுது உறு, Amuthu Uru - அமுதம் மிக்க
பசுங் கதிர் அவை, Pasung Kathir Avai - அப்போதுண்டான கிரணங்களானவை
சுட, Suda - தஹிக்க,
அதனோடும், Adhanodum - அதோடுகூட,
மந்த மாருதம், Mantha Maarutham - மெல்லிய தென்றற்காற்றும்
வனம் முலை தடம் வந்து, Vanam Mulai Thadam Vandu - அழகிய முலைத்தடத்திலே வந்து வீசி
வலி செய்வது ஒழியாது, Vali Seivathu Ozhiyadhu - ஹிம்ஸைபண்ணுவதில் நின்றும் ஓய்கிறதில்லை.
1689பெரிய திருமொழி || (8-5–தந்தை காலில்) (திரு கண்ணபுரம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (புறம்பு உள்ளார் ஒருவரும் இல்லை யாயிற்று –அகவாய் குடி போயிற்று – நாயகனோ வந்து அணைகிறிலன்- இனி எத்தைச் செய்வது) 2
மாரி மாக்கடல் வளை வணர்க்கு இளையவன் வரை புரை திரு மார்பில் தாரின் ஆசையில் போயின நெஞ்சமும் தாழ்ந்த தோர் துணை காணேன் ஊரும் துஞ்சிற்று உலகமும் துயின்றது ஒளியவன் விசும்பு இயங்கும் தேரும் போயிற்றுத் திசைகளும் மறைந்தன செய்வது ஓன்று அறியேனே –8-5-2
பதவுரை Show / Hide
மாரி, Maari - மேகம்போன்றவனும்
மா கடல், Maa Kadal - நீலக்கடல் போன்றவனும்
வளை வணற்கு இளையவன், Valai Vanarku Ilaiyavan - சங்குபோன்ற (வெளுத்த) நிறமுடையனான பலராமனுக்குப் பின் பிறந்தவனுமான கண்ணபிரானுடைய
வரை புரை, Varai Purai - மலைபோன்ற
திரு மார்வில், Thiru Marvil - திருமார்பிலுள்ள
தாரின், Tharin - மாலையினிடத்து
ஆசையின், Aasaiyin - ஆசையினால்
போயின, Poyin - என்னைவிட்டு நீங்கின
நெஞ்சமும், Nenjamum - மனமும்
தாழ்ந்தது, Thaanthathu - மீண்டுவரத் தாமதித்தது; (அவனிடத்திலேயே கால் தாழ்ந்துவிட்டது.)
ஓர் துணை காணேன், Oor Thunai Kaanen - உதவியான ஒருவரையுங் காண்கின்றிலேன்;
ஊரும் துஞ்சிற்று, Oorum Thunjirru - ஊரிலுள்ளாரும் உறங்கினார்கள்;
உலகமும் துயின்றது, Ulagamum Thuyinrrathu - உலகங்களும் உறங்கின;
விசும்பு, Visumbu - ஆகாசத்திலே
இயங்கும், Iyankum - ஸஞ்சரிக்கின்ற
ஒளியவன் தேரும், Oliyavan Therum - ஸூர்யனது தேரும்
போயிற்று, Poyitru - மறைந்து போயிற்று;
திசைகளும், Thisaigalum - திக்குக்களும்
மறைந்தன, Maraindhana - தெரியவில்லை;
செய்வது ஒன்று அறியேன், Seivathu Onru Ariyeen - (இந்நிலையில்) செய்யத்தக்கது ஒன்றுமறிகின்றிலேன்.
1690பெரிய திருமொழி || (8-5–தந்தை காலில்) (திரு கண்ணபுரம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவ்வளவிலே வாராதே இரான் என்கிற நெஞ்சையும் அழித்து கொடு வந்து தோற்றா நின்றதாயிற்று இடையன் ஊதுகிற குழல் –பிராமணர் ஊதுகிற குழலுக்கு அகப்படாள் காணும் இவள் – மாஸூச -என்பார் ஒருவரையும் காண்கிறதில்லை) 3
ஆயன் மாயமே யன்றி மற்றென் கையில் வளைகளும் இறை நில்லா பேயினார் உயிர் உண்டிடும் பிள்ளை நம் பெண் உயிர்க்கு இரங்குமோ தூய மா மதிக் கதிர் சுடத் துணை யில்லை யிணை முலை வேகின்றதால் ஆயன் வேயினுக்கு அழிகின்றது உள்ளமும் அஞ்சல் என்பார் இல்லையே –8-5-3
பதவுரை Show / Hide
ஆயன், Aayan - கண்ணபிரானுடைய
மாயமே அன்றி மற்று என்?, Maayame Anri Matru En - வஞ்சனை தவிர வேறு என்ன இருக்கிறது? (ஒன்றுமில்லை)
வளைகளும், Valaigalum - வளைகளும்
கையில் இறை நில்லா, Kaiyil Irai Nillaa - கையில் க்ஷணகாலமும் தங்குவதில்லை;
பேயினார், Peyinaar - பேய்ச்சியாகிய பூதனையினுடைய
உயிர், Uyir - பிராணனை
உண்டிடும் பிள்ளை, Undidum Pillai - உண்டு அவளை முடித்த பிள்ளை
நம் பெண் உயிர்க்கு, Nam Pen Uyirkkum - (அவளைப்போல்) பெண்ணாய்ப் பிறந்த நம்முடைய பிராணனுக்கு
இரங்குமோ, Irangumo - தயை பண்ண ப்ரஸக்தி யுண்டோ?
தூய மா மதி, Thuya Maa Mathi - மறுவற்ற சந்திரனுடைய
கதிர், Kathir - கிரணங்கள்
சுட, Suda - தஹிப்பதனாலே
இணை முலை, Inai Mulai - இரண்டு முலைகளும்
வேகின்றது, Veingirathu - தீப்பற்றி யெரிகி்ன்றன;
ஆல், Aal - அந்தோ! ;
துணை இல்லை, Thunai Illai - (எரியும் நெருப்பையவிக்கத்) துணையாவாரில்லை;
உள்ளமும், Ullamum - மனமும்
ஆயன், Aayan - கண்ணபிரானுடைய
வேயினுக்கு, Veiyinukku - வேய்ங்குழலுக்கு ஈடுபட்டு
அழிகின்றது –, Azhikindrathu - மாய்கின்றது;
அஞ்சேல், Anjael - ‘பயப்படாதே’ என்று அபயமளிப்பாராருமில்லையே.
1691பெரிய திருமொழி || (8-5–தந்தை காலில்) (திரு கண்ணபுரம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ரஷகன் ஆனவன் இவ்வளவில் வந்து உதவிற்றிலன் பாதக பதார்த்தம் தானே இனிக் கிருபை பண்ணி மீளில் நான் எனக்கு உரியேனாய் இருக்கலாம்) 4
கயம் கொள் புண் தலை களிறு உந்து வெந்திறல் கழல் மன்னர் பெறும் போரில் மயங்க வெண் சங்கம் வாய் வைத்த மைந்தனும் வந்திலன் மறி கடல் நீர் தயங்கு வெண் திரைத் திவலை நுண் பனி எனும் தழல் முகந்து இள முலை மேல் இயங்கு மாருதம் விலங்கில் என்னாவியை எனக்கெனப் பெறலாமே –8-5-4
பதவுரை Show / Hide
கயம் கொள் புண் தலை, Kayam Kol Pun Thalai - (சீயும் ரத்தமும்) தடாகம் போலே வற்றாதிருக்கிற புண்கள் நிரம்பிய தலையையுடைய
களிறு, Kaliru - யானைகளை
உந்து, Undhu - தள்ளி நடத்தவல்ல
வெம் திறல், Vem Thiral - வெவ்விய வலிமையை யுடையவரும்
கழல், Kazhal - வீரக்கழலையுடையருமான
மன்னர், Mannar - அரசர்களினுடைய
பெரும் போரில், Perum Poril - பெரிய பாரத யுத்தத்தில்
மயங்க, Mayangka - அறிவுகலங்கும்படி
வெண் சங்கம், Ven Sangam - வெளாதத பாஞ்சஜந்யத்தை
வாய் வைத்த, Vaai Vaiththa - திருப்பவளத்தில் வைத்து ஊதின
மைந்தனும், Mainthanum - மஹா புருஷனும்
வந்திலன், Vandhilan - (என்னிடம்) வந்து சேர்ந்தானில்லை;
மறிகடல், Marikadal - அலைமடிகின்ற கடலினுடைய
நீர், Neer - ஜலத்ததில்
தயங்கு, Thayangku - அசைந்து வருகின்ற
வெண் திரை, Ven Thirai - வெண்மையான அலைகளாலுண்டான
திவலை, Thivalai - திவலைகளாகிற
நுண் பனி எனும், Nun Pani Enum - நுட்பமான பனியென்று சொல்லப்படுகிற
தழல், Thazhal - நெருப்பை
முகந்து, Mugandhu - வாரிக்கொண்டுவந்து
இள முலை மேல், Ila Mulai Mel - (எனது) இளமைதங்கிய முலைகளின் மீது
இயங்கு, Iyangu - வீசுகின்ற
மாருதம், Marudham - காற்றானது
விலங்கில், Vilankil - தணியப்பெற்றால்
என் ஆவியை, En Aaviyai - எனது உயிரை
எனக்கு என பெறலாம், Enakku En Peralaam - எனக்கு உரித்தாக அடையலாகும்.
1692பெரிய திருமொழி || (8-5–தந்தை காலில்) (திரு கண்ணபுரம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நமக்கு அவன் பண்ணின அருளோடு கூட அதினுடைய பல ரூபமான பகலும் போய் நின்றதாயிற்று – அருள் போகவே பகலும் போம் இறே) 5
ஏழு மா மரம் துளை படச் சிலை வளைத்து இலங்கையை மலங்குவித்த ஆழியான் நமக்கு அருளிய அருளொடும் பகல் எல்லை கழிகின்றதால் தோழி நாம் இதற்கு என் செய்தும் துணை இல்லை சுடர் படு முது நீரில் ஆழ வாழ்கின்ற வாவியை யடுவதோர் அந்தி வந்து அடைகின்றதே –8-5-5
பதவுரை Show / Hide
ஏழு மா மரம், Ezhu Maa Maram - ஸப்தஸால வ்ருக்ஷங்கள்
துளைபட, Thulaipada - (ஸுக்ரீவனுடைய நம்பிக்கைக்காகத்) துளைபடும்படி
சிலை, Silai - வில்லை
வளைத்து, Valaiththu - வளைத்தவனும்,
இலங்கையை, Ilankaiyai - லங்காபுரியை
மலங்குவித்த, Malanguviththa - கலங்கப்பண்ணினவனுமான
ஆழியான், Aazhiyaan - அறுகாழி மோதிரத்தைக் கை யிலேயுடைய இராமபிரான்
நமக்கு அருளிய அருளொடும், Namakku Aruliya Arulodum - நம் விஷயத்திற் பண்ணின கிருபையோடுகூட
பகல் எல்லை கழிகின்றது, Pagal Ellai Kazhikinrathu - பகற்போதும் முடிந்து போகாநின்றது;
ஆல், Aal - அந்தோ! ;
தோழி, Thozhi - வாராய் தோழீ! ;
இதற்கு நாம் என் செய்தும், Idharku Naam En Seiththum - இந்த ஆபத்துக்கு நாம் என்ன பரிஹாரம் செய்யவல்லோம்! ;
துணை இல்லை, Thunai Illai - துணைநிற்பார் ஆருமில்லை;
சுடர், Sudhar - ஸூரியனானவன்
படு, Padu - தான் தோன்றின
முது நீரில், Muthu Neeril - ஸமுத்ரத்தினுள்
ஆழ, Aazha - ஆழ்ந்து மறைந்துபோக,
வாழ்கின்ற ஆவியை அடுவது, Vazhkindra Aaviyai Adhuthal - பிழைத்திருக்க நினைத்திருக்கின்ற பிராணனை முடிப்பதான
ஓர் அந்தி, Oru Andhi - ஒரு ஸாயம்ஸந்த்யாகாலமானது
வந்து அடை கின்றதே, Vandhu Adai Kinrathae - வந்து சேர்கின்றதே!.
1693பெரிய திருமொழி || (8-5–தந்தை காலில்) (திரு கண்ணபுரம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நெருப்பை தூவா நின்றுள்ள அம்பை உடைத்தாய் தர்ச நீயமாய் இருக்கிற வில்லை வளைத்த மிடுக்கன் வருகிறிலன்-இனி ஒரு அபலை இருந்து நோக்கிக் கொள்ளவோ) 6
முரியும் வெண்டிரை முது கயம் தீப்பட முழங்கு அழல் ஏறி அம்பின் வரி கொள் வெஞ்சிலை வளைவித்த மைந்தனும் வந்திலன் என் செய்கேன் எரியும் வெங்கதிர் துயின்றது பாவியேன் இணை நெடுங்கண் துயிலா கரிய நாழிகை ஊழியில் பெரியன கழியுமாறு அறியேனே –8-5-6
பதவுரை Show / Hide
முரியும், Muriyum - கிளர்ந்து அலைகின்ற
வெண் திரை, Ven Thirai - வெளுத்த அலைகளையுடைய
முதுகயம், Muthugaiyam - ஸமுத்ரமானது
தீப்பட, Theepada - தீக்கொளுவியெரியும்படி
முழங்கு அழல் எரி அம்பின், Muzhangu Azhala Eri Ambin - ஒலியுடைய நெருப்பு எரியாநின்றுள்ள அம்புகளையுடைய
வரி கொள் வெம் சிலை, Vari Kol Vem Silai - அழகியதாய்க் கொடிதாயிருந்துள்ளவில்லை
வளைவித்த, Valaivitha - வளையச் செய்த
மைந்தனும், Mainthanum - மஹாவீரனான இராமபிரானும்
வந்திலன், Vandhilan - வரவில்லை;
என் செய்கேன், En Seigain - என்ன பண்ணுவேன்? ;
எரியும், Eriyum - பிரகாசித்துக்கொண்டிருந்த
வெம் கதிர், Vem Kathir - ஸூர்யனும்
துயின்றது, Thuyinrathu - அஸ்தமித்தான்;
பாவியேன், Paviyen - பாவியான என்னுடைய
இணை நெடுங்கண் துயிலா, Inai Nedungkan Thuyila - பெரிய இரண்டு கண்களும் உறங்குகின்றனவில்லை;
ஊழியின், Oozhiyin - கல்ப காலத்திற்காட்டிலும்;
பெரியன, Periyan - பெரியவையாயுள்ள
கரிய நாழிகை, Kariya Naazhigai - இரவு நாழிகைகள்
கழியும் ஆறு அறியேன், Kazhiym Aaru Ariyen - எப்படி கழியப் போகின்றனவோ அறிகின்றிலேன்.
1694பெரிய திருமொழி || (8-5–தந்தை காலில்) (திரு கண்ணபுரம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நான் முடியவே அவனைக் கிடையாது – அவன் போகவே அவனால் நோக்கப் படும் விபூதி த்வயமும் இல்லையாம் ஆனபின்பு இது எவ்வளவாய் தலைக் கட்டும் என்று அறியேன்) 7
கலங்க மாக்கடல் கடைந்து அடைத்து இலங்கையர் கோனது வரையாகம் மலங்க வெஞ்சமத்து அடுசரம் துரந்த எம்மடிகளும் வாரானால் இலங்கு வெங்கதிர் இள மதி யதனொடும் விடை மணி யடு மாயன் விலங்கல் வேயின தோசையுமாயினி விளைவது ஓன்று அறியேனே –8-5-7
பதவுரை Show / Hide
மா கடல், Maa Kadal - பெரிய கடலானது
கலங்க, Kalanga - கலங்கும்படியாக
கடைந்து, Kadaindhu - (அதனைக்) கடைந்தவனும்
அடைந்து, Adaindhu - (அக்கடலில்) அணை கட்டினவனும்
இலங்கையர் கோனது, Ilankaiyar Konathu - இலங்கையிலுள்ளார்க்கு அரசனான இராவணனுடைய
வரை ஆகம், Varai Aagam - மலைபோன்ற மார்பானது
மலங்க, Malanga - வியாகுலப்படும்படி
வெம் சமத்து, Vem Samathu - கொடியபோரில்
அடு சரம், Adu Saram - கொலையம்புகளை
துரந்த, Thurandha - பிரயோகித்தவனுமான
எம் அடிகளும், Em Adigalum - எமது ஸ்வாமியும்
வாரான், Varaan - வரவில்லை;
ஆல், Aal - அந்தோ! ;
இலங்கு, Ilangu - விளங்காநின்ற
வெம் கதிர், Vem Kathir - கடூரமான கிரணங்களையுடைய
இள மதி அதனொடும், Ila Mathi Adhanodum - இளம் சந்திரனோடு கூட
விடை, Vidai - எருதினுடைய
மணி, Mani - (கழுத்தில் கட்டின மணியின்) ஓசையும்
அடும், Adum - (என்னைக்) கொலை செய்கின்றது;
ஆயன், Aayan - இடையனான கண்ணபிரானிடத்துள்ள
விலங்கல் வேயினது, Vilangal Veiyinathu - மலை மூங்கிற்குழலினுடைய
ஓசையும், Osaiyum - த்வநியும்
ஆய், Aai - உண்டாக,
இனி விளைவது ஒன்று அறியேன், Ini Vilaiyvadhu Ondru Ariyeen - இனி உண்டாகப்போகும் ஆபத்தை ஒன்று மறிகின்றிலேன்.
1695பெரிய திருமொழி || (8-5–தந்தை காலில்) (திரு கண்ணபுரம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவசியம் அனுபோக்தவ்யம் -என்கிறபடியே அனுபவித்து அல்லது நசியாத படி க்ரூரமாய் இருப்பதொரு பாபம் உண்டாக அறிகிறிலேன் – இன்னம் இதில் காட்டில் நரகத்தில் போய் அனுபவிப்பதோர் அனுபவம் தான் உண்டாக அறிகிறிலேன்) 8
முழுது இவ்வையகம் முறை கெட மறைதலும் முனிவனும் முனிவெய்த மழுவினால் மன்னர் ஆர் உயிர் வவ்விய மைந்தனும் வாரானால் ஒழுகு நுண் பனிக்கு ஒடுங்கிய பேடையை யடங்க வஞ்சிறைக் கோலித் தழுவு நள்ளிருள் தனிமையில் கடியதோர் கொடு வினை அறியேனே –8-5-8
பதவுரை Show / Hide
இ வையகம், I Vaiyagam - இந்த லோகமானது (- (வாரான் ஆல்-;))
முழுது, Muzhuthu - அடங்கலும்
முறை கெட மறைதலும், Murai Keda Maraithalum - மரியாதை குலைந்து போனதனால்
முனிவனும், Munivanum - ஜமதக்நி முனிவன்
முனிவு எய்த, Munivu Eytha - சீற்றங்கொள்ள (அது காரணமாக)
மழுவினால், Mazhuvinal - கோடாலிப்படையினால்
மன்னர், Mannar - க்ஷத்ரியர்களினுடைய
ஆர் உயிர், Aar Uyir - அருமையான பிராணன்களை
வௌவிய, Vauviy - கவர்ந்த
மைந்தனும், Mainthanum - மிடுக்கையுடைய (பரசுராம) பிரானும்
ஒழுகு, Ozhugu - பெருகுகின்ற
நுண் பனிக்கு, Nun Panikku - சிறுபனிக்காக
ஒடுங்கிய, Odungiya - ஒடுங்கிவர்த்திக்கிற
பேடையை, Pedaiai - பெண் பறவையை
அம் சிறை கோலி, Am Sirai Koli - அழகிய சிறகுகளை விரித்து
அடங்கத் தழுவும், Adangath Thazhuvum - நிபிடமாக அணைத்துக் கொள்வதற்குரிய
நள்ளிருள், Nallirul - நடு நிசியில்
தனிமையின், Thanimaiyin - (இப்படி) தனிமைப்பட்டிருப்பதிற்காட்டிலும்
கடியது, Kadiyadhu - க்ரூரமான
ஓர் கொடு வினை, Oru Kodu Vinai - வேறொருபாபத்தை
அறியேன், Ariyeen - அறிகின்றிலேன்.
1696பெரிய திருமொழி || (8-5–தந்தை காலில்) (திரு கண்ணபுரம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கண்டத்துக்கு எல்லாம் பாத்த்ய கோடியிலே அந்வயிக்கும் படி மகா பாபத்தை பண்ணின என்னுடைய தரமி லோபத்தை பண்ணுகையிலே ஒருப்படா நின்றது) 9
கனம் செய் மா மதிள் கண புரத் தவனொடும் கனவினில் அவன் தந்த மனம் செய் இன்பம் வந்து உள் புக வெள்கி என் வளை நெக விருந்தேனை சினம் செய் மால் விடைச் செறு மணி யோசை என் சிந்தையைச் சிந்துவிக்கும் அனந்தல் அன்றிலினிரி குரல் பாவியேன் ஆவியை யடுகின்றதே –8-5-9
பதவுரை Show / Hide
கனம் செய், Kanam Sei - திண்ணிதாகச் செய்யப்பட்டுள்ள
மா மதிள், Maa Madil - பெரிய திருமதில்களையுடைத்தான
கணபுரத்து, Kanapurathu - திருக்கண்ணபுரத்திலெழுந்தருளியிருக்கிற
அவனொடும், Avanodum - அப்பெருமானோடு கூடியிருப்பதாக
கனவினில், Kanavinil - ஸ்வப்நத்திலே
அவன் தந்த, Avan Thanda - அப்பெருமான் கொடுத்த
மனம் செய் இன்பம், Manam Sei Inbam - மாநஸிகமாத்ரமான இன்பமானது
வந்து உள்புக, Vandhu Ulpuka - நினைவுக்குவர (அத்தாலே)
எள்கி, Elgi - ஈடுபட்டு
என் வளை நெக இருந்தேனை, En Valai Nega Irundhenai - என் கைவளை கழலும்படி யிருக்கிறவென்னை
சினம் செய், Sinam Sei - கோவங்கொண்ட
மால் விடை, Maal Vidai - பெரிய விருஷபத்தினுடைய
செறு மணி, Seru Mani - க்ரூரமான மணியினுடைய
ஓசை, Osai - த்வநியானது
என் சிந்தையை, En Sindhaiyai - எனது நெஞ்சை
சிந்துவிக்கும், Sindhuvikkum - சிதிலமாக்குகின்றது;
அனந்தல், Anandhal - உறக்கங்கொண்டிருக்கின்ற
அன்றிலின், Anrilin - அன்றிற்பறவையினுடைய
அரி குரல், Ari Kural - தழுதழுத்த பேச்சானது
பாவியேன், Paviyen - பாவியான என்னுடைய
ஆவியை, Aaviyai - உயிரை
அடுகின்றது, Adhigindrathu - ஹிம்ஸிக்கின்றது.
1697பெரிய திருமொழி || (8-5–தந்தை காலில்) (திரு கண்ணபுரம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இத் திரு மொழியை அப்யசிக்க வல்லார் –பிரிவாற்றாமை கூப்பிடுவது தவிர்ந்து நித்ய விபூதியில் நித்ய சூரிகளோடே கூடி அஹம் அன்னம் அஹம் அன்னம் -என்கிறபடியே ஹர்ஷத்துக்கு போக்கு விட்டுக் கூப்பிட்டு பின்னை ஒரு காலும் புனராவ்ருத்தி இல்லாத பேற்றைப் பெறுவர்) 10
வார் கொள் மென் முலை மடந்தையர் தடங்கடல் வண்ணனைத் தாள் நயந்து ஆர்வத்தால் அவர் புலம்பிய புலம்பலை யறிந்து முன்னுரை செய்த கார் கொள் பூம்பொழில் மங்கையர் காவலன் கலிகன்றி ஒலி வல்லார் ஏர் கொள் வைகுந்த மா நகர் புக்கு இமையவரோடும் கூடுவரே –8-5-10
பதவுரை Show / Hide
வார் கொள், Vaar Kol - கச்சு அணிந்த
மென் முலை, Men Mulai - மெல்லிய முலைகளையடைய
மடந்தையர் அவர், Madandaiyar Avar - (திருவாய்ப்பாடியிலுள்ள) அப்பெண்கள்
தட கடல் வண்ணன், Thada Kadal Vannan - பெரிய கடலின் நிறம் போன்ற நிற முடையனான கண்ணபிரானுடைய
தாளை, Thaalai - திருவடிகளை
நயந்து, Nayandhu - ஆசைப்பட்டு
ஆர்வத்தால், Aarvaththal - அன்பினால்
முன் புலம்பிய புலம்பலை, Mun Pulambiya Pulambalai - முன்பு கதறின கதறலை
அறிந்து, Arindhu - உட்கொண்டு,
கார் கொள் பை பொழில் மங்கையர் காவலன், Kaar Kol Pai Pozhil Mangaiyar Kaavalan - மேக ஸஞ்சாரத்தையுடைய பரந்தசோலைகளையுடைத்தான திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவரான
கலிகன்றி, Kalikanri - ஆழ்வார்
உரைசெய்த, Uraichseitha - அருளிச் செய்த
ஒலி, Oli - இச்சொற்களை
வல்லார், Vallaar - ஓதியுரணவல்லவர்கள்
ஏர்கொள், Aerkol - அழகிய
வைகுந்தம் மா நகர், Vaikundham Maa Nagar - பரமபதமென்னுந் திருநாட்டிலே
புக்கு, Pukku - புகுந்து
இமையவரோடும், Imaiyavarodum - நித்யஸுரிகளோடே
கூடுவர், Koodhuvar - சேரப்பெறுவர்கள்.