திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 8-9 கைம்மான (10 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1728பெரிய திருமொழி || (8-9–கைம்மான) (திரு கண்ணபுரம் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வடிவு அழகாலே என்னை எழுதிக் கொண்டவனை – எனக்கு உபகாரகனான ஸ்ரீ சர்வேஸ்வரனை – என் நெஞ்சிலே இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனை –அடைந்து உஜ்ஜீவிக்கப் போனேன்) 1
கைம்மான மத யானை யிடர் தீர்த்த கரு முகிலை மைம்மான மணியை யணி கொள் மரகதத்தை எம்மானை யெம்பிரானை ஈசனை யென் மனத்துள் அம்மானை அடியேன் அடைந்து உய்ந்து போனேனே –8-9-1
பதவுரை Show / Hide
மானம் கை மதம் யானை, Maanam Kai Matham Yaanai - நீண்ட துதிக்கையையுடையதும் மதங்கொள்ளுமியல்வுடையதுமான கஜேந்திரனுடைய
இடர், Idar - துயரத்தை
தீர்த்த, Theertha - போக்கியருளின
கரு முகிலை, Karum Mugilai - காளமேகம் போன்றவனும்
மை, Mai - மைபோன்ற நிறத்தையுடைய
மானம் மணியை, Maanam Maniyai - பெருவிலைபெறும் நீல ரத்னம் போன்றவனும்
அணி கொள் மரதகத்தை, Ani Kol Marathakaththai - அழகு பொருந்திய மரதகப் பச்சை போன்றவனும்
எம்மானை, Emmaanai - எமக்கு ஸ்வாமியும்
எம்பிரானை, Embiraanai - எமக்கு மஹோபகாரம் செய்தருள்பவனும்
ஈசனை, Eesanai - ஸர்வேச்வரனும்
எம் மனத்துள் அம்மானை, Em Manaththul Ammmaanai - என் நெஞ்சினுள் இருக்கும் ஸ்வாமியுமான ஸ்ரீசௌரிராஜனை
அடியேன் அடைந்து, Adiyean Adaindhu - அடியேன் ஆச்ரயித்து
உய்ந்து போனேன், Uyinthu Ponaen - உஜ்ஜீவித்துப் போனேன்
1729பெரிய திருமொழி || (8-9–கைம்மான) (திரு கண்ணபுரம் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (என்னுடைய ரஷணத்தில் உத்யுக்தனாய்க் கொண்டு ஸ்ரீ திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற ஸ்ரீ சர்வாதிகனை – ப்ரஹ்மாதிகளுக்காக கடலிலே வந்து கண் வளர்ந்து அருளின பெரியவனை –அடியேன் அடைந்து உய்ந்து பிழைக்கப் பெற்றேன்) 2
தருமான மழை முகிலைப் பிரியாது தன்னடைந்தார் வருமானம் தவிர்க்கும் மணியை யணி யுருவில் திருமாலை யம்மானை யமுதத்தைக் கடல் கிடந்த பெருமானை – அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேனே –8-9-2
பதவுரை Show / Hide
தரு, Tharu - கல்பவிருக்ஷம் போன்றவனும் (- (அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேன்-,))
மானம், Maanam - பெரிய
மழை முகிலை, Mazhai Mukilai - காளமேகம் போன்றவனும்,
பிரியாது, Priyaadhu - ஒரு காலும் விட்டுநீங்காமல்
தன் அடைந்தார், Than Adaindhaar - தன்னை வந்து பணிந்தவர்கட்கு
வரும், Varum - நேர்கின்ற
மானம், Maanam - அவமானத்தை
தவிர்க்கும், Thavirkum - போக்குகின்றவனும்
மணியை, Maniyai - நீல மணிபோன்றவனும்
அணி உருவின், Ani Uruvin - அழகிய வடிவத்தையுடைய
திருமாலை, Thirumaalai - லக்ஷ்மீநாதனும்
அம்மானை, Ammaanai - ஸர்வசேஷியா யிருப்பவனும்
அமுதத்தை, Amudhatthai - அமிருதம் போன்றவனும்
கடல் கிடந்த பெருமானை, Kadal Kidandha Perumai - திருபாற்கடலில் திருகண்வளர்ந்தருளும் பெருமானுமான ஸ்ரீசௌரிப் பெருமானை
1730பெரிய திருமொழி || (8-9–கைம்மான) (திரு கண்ணபுரம் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இது தான் உமக்கு எத்தனை குளிக்கு நிற்கும் -என்ன நான் பிறர்க்கு உரியேன் அல்லேன் -என்கிறார்) 3
விடை ஏழு அன்று அடர்த்து வெகுண்டு விலங்கலுறப் படையாலாழி தட்ட பரமன் பரஞ்சோதி மடையார் நீலம் மல்கும் வயல் சூழ் கண்ண புரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ –8-9-3
பதவுரை Show / Hide
அன்று, Andru - முன்பொருகாலத்தில் (நப்பின்னைப் பிராட்டியைப் பெறுதற்காக)
ஏழ்விடை, Ezhuvidai - ஏழு ரிஷபங்களை
வெகுண்டு, Vegundu - சீறிக்கொண்டு
அடர்த்து, Adarthu - வலியடக்கினவனும்,
விலங்கல், Vilangal - த்ரிகூடபர்வதத்தில்
உற, Ura - சென்று சேரும்படியாக
படையால், Padaiyal - (வாநர) ஸேனைகளைக்கொண்டு
ஆழி, Aazhi - ஸமுத்ரத்தை
தட்ட, Thatta - அடைத்தவனும்,
பரமன், Paraman - எல்லாரினுஞ் சிறந்தவனும்
பரம் சோதி, Param Sothi - சிறந்த தேஜஸ்ஸ்வரூபியும்
மடை ஆர், Madai Aar - மடைகளெங்கும் நிரம்பிய
நீலம், Neelam - நீலோற்பல மலர்கள்
மல்கும், Malkum - வியாபித்திருக்கப் பெற்ற
வயல், Vayal - கழனிகளாலே
சூழ், Sool - சூழப்பட்ட
கண்ணபுரம் ஒன்று, Kannapuram Ondru - திருக்கண்ணபுரமென்கிற ஒரு விலக்ஷண திவ்யதேசத்தை
உடையானுக்கு, Udaiyanukku - (இருப்பிடமாக) உடைய பெருமானுக்கு
அடியேன், Adiyen - சேஷபூதனான நான்
ஒருவர்க்கு, Oruvarkku - வேறுசிலர்க்கு
உரியேனோ, Uriyenoo - உரிமைப்படுவேனோ?
1731பெரிய திருமொழி || (8-9–கைம்மான) (திரு கண்ணபுரம் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒரு சம்சாரி சேதனன் உடைய ஹிருதயத்திலே அவனுக்கு அபேஷை இன்றிக்கே இருக்க தானே போய் புகுவதே – இது ஒரு நீர்மை இருக்கும்படியே என்று இருந்ததே குடியாக எல்லாரும் ஒக்கச் சொல்லுகையாலே வந்த மிக்க புகழை உடையனாய்க் கொண்டு உஜ்ஜ்வலனாய் இருக்கிறவனை –நிரதிசய போக்யனாய் இருக்கிறவனை – அடைந்து உய்ந்து போனேனே) 4
மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள் புக்கானைப் புகழ் சேர் பொலிகின்ற பொன் மலையை தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த அக்காரக் கனியை அடைந்து உய்ந்து போனேனே –8-9-4
பதவுரை Show / Hide
மிக்கானை, Mikkaanai - சிறந்தவனும் (- (அடைந்து உய்ந்து போனேன்-.))
மறை ஆய் விரிந்த விளக்கை, Marai Aayi Virindha Vilakkai - வேதமாக விரிவுபெற்ற விளக்குப் போன்றவனும்
என்னுள் புக்கானை, Ennul Pukkaanaai - என்னெஞ்சினுள்ளே புகுந்திருப்பவனும்
புகழ் சேர், Pugazh Ser - கீர்த்தி வாய்ந்தவனும்
பொலிகின்ற பொன்மலையை, Polikindra Ponmalaiya - ஜ்வலிக்கின்ற பொன் மலை போன்றவனும்,
தக்கானை, Thakkaanai - தகவுடையவனும்
கடிகை தட குன்றின் மிசை இருந்த, Kadikai Thada Kunrin Misai Irundha - கடிகை யென்னும் பெரிய திருமலையின் மீது எழுந்தருளியிருக்கின்ற
அக்காரக் கனியை, Akkaarak Kaniyai - அக்காரக் கனியுமான திருக்கண்ணபுரத்தெம்பெருமானை
1732பெரிய திருமொழி || (8-9–கைம்மான) (திரு கண்ணபுரம் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நாம் என்ன உபகாரம் பண்ணினோமாக தான் இப்படி கிடந்து படுகிறது -என்ன – நான் இருந்த இடம் தேடி நீயே வந்தாய் – ஸ்ரீ திருக் குடந்தையிலே கண் வளர்ந்து நாம் ஆஸ்ரிதர்க்கு உறுப்பாகப் பெற்றோமே இறே-என்று அத்தாலே உகந்து – இப்படி உபகாரகனான உன்னை மறவாது ஒழியப் பெற்றேன் – நீயோ தீரக் கழிய உபகரித்து நின்றாய் – நான் அந்த உபகாரகத்தை மறவாது ஒழியப் பெற்றேன் –இனி இதுக்கு மேற்பட பேறு உண்டோ) 5
வந்தாய் என் மனத்தே வந்து நீ புகுந்த பின்னை எந்தாய் போய் அறியாய் யிதுவே யமையாதோ கொந்தார் பைம் பொழில் சூழ் குடந்தைக் கிடந்துகந்த மைந்தா வுன்னை என்றும் மறவாமை பெற்றேனே –8-9-5
பதவுரை Show / Hide
எந்தாள், Endhaal - எம்பெருமானே!
என் மனத்தே, En Manathae - என் நெஞ்சினுள்ளே
நீ வந்தாய், Nee Vandhaai - நீ வந்து புகுந்தாய்;
வந்து புகுந்து பின்னை, Vandhu Pugundhu Pinnai - அங்ஙனம் வந்து சேர்ந்த பின்பு
போய் அறியாய், Poi Ariyaai - திரும்பிப்போவதை அடியோடு மறந்திட்டாய்;
இதுவே, Idhuvae - இந்தப் பேறுதானே
அமையாதோ, Amaiyaa Tho - போராதோ?
கொந்து ஆர், Kondhu Aar - கொத்துக்கள் நிரம்பிய
பை பொழில், Pai Pozhil - பரந்த சோலைகளினால்
சூழ், Sool - சூழப்பட்ட
குடந்தை, Kudandhai - திருக்குடந்தையிலே
கிடந்து, Kidandhu - சாய்ந்தருளி
உகந்த, Ugantha - திருவுள்ளமுவந்த
மைந்தா, Maindha - ஸுந்தரனே!,
உன்னை, Unnai - உன்னை
என்றும், Endrum - என்றைக்கும்
மறவாமை பெற்றேன், Maravaamai Pettraen - மறவாமலிக்கப் பெற்றேன்.
1733பெரிய திருமொழி || (8-9–கைம்மான) (திரு கண்ணபுரம் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நெஞ்சைப் பார்த்து அதினுடைய நினைவை காதாசித்கமாக்கி அவன் நம்மை உபகரித்து நின்றான் நீ தப்பச் செய்யா நின்றாய் – என்கிறார்) 6
எஞ்சா வென் நரகத்து அழுந்தி நடுங்கின்றேற்கு அஞ்சேல் என்று அடியேனை யாட் கொள்ள வல்லானை நெஞ்சே நீ நினையாது இறைப் போதும் இருத்தி கண்டாய் மஞ்சார் மாளிகை சூழ் வயலாலி மைந்தனையே –8-9-6
பதவுரை Show / Hide
எஞ்சா, Enjaa - ஒருகாலும் குறைதலில்லாத
வெம் நரகத்து, Vem Narakathu - கொடிய நரகத்திலே
அழுந்தி, Azhundhi - ஆழங்காற்பட்டு
நடுங்குகின்றேற்று அடியேனை, Nadungikindretru Adiyanai - நடுங்குகின்ற என்னை
அஞ்சேல் என்று, Anjeyl Endru - ‘பயப்படாதே’ என்று தேற்றி
ஆட்கொள்ள வல்லானை, Aadkolla Vallaanaik - அடிமைகொள்ள வல்லவனும்
மஞ்சு ஆர் மாளிகை சூழ், Manju Aar Maaligai Soozh - மேகமண்டலத்தளவும் ஓங்கின திருமாளிகைகளால் சூழப்பட்டு
வயல், Vayal - வயல்களையுடைத்தான
ஆலி, Aali - திருவாலியில் எழுந்தருளியிருக்கிற
மைந்தனை, Maindhanai - ஸ்வாமியுமான ஸ்ரீசௌரிப்பெருமானை
நெஞ்சே, Nenjey - மனமே!
நீ, Nee - நீ
இறைப்பொழுதும், Iraippoludhum - க்ஷணகாலமும்
நினையாது இருத்தி கண்டாய், Ninaiyadhu Irudhi Kandaai - நினையாமலேயிருக்கிறாயே.
1734பெரிய திருமொழி || (8-9–கைம்மான) (திரு கண்ணபுரம் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உமக்கு இத்தனை அதி மாத்திர நிர்பந்தம் என் என்ன – இவ்விஷயத்தை விட்டுப் போய்-பின்னை நீ ஆரை நினைக்க இருக்கிறாய் -என் புறம்பு நினைக்க ஒருவரும் இல்லையோ என்னில் இது வன்றோ புறம்பு உள்ளார் படி) 7
பெற்றார் பெற்று ஒழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு உற்றானாய் வளர்த்து என் உயிராகி நின்றானை முற்றா மா மதி கோள் விடுத்தானை யெம்மானை எத்தால் யான் மறக்கேன் இனி இது சொல் என் ஏழை நெஞ்சே –8-9-7
பதவுரை Show / Hide
பெற்றார், Petraar - என்னைப் பெற்ற தாய்தந்தையர் (- (என் ஏழை நெஞ்சே!- ;))
பெற்று ஒழிந்தார், Petru Ozhindhaar - பெற்றுப் போட்டுப் போய்விட்டார்கள்;
பின்னும், Pinnum - பின்பு
அடியேனுக்கு, Adiyanukku - அடியேனுக்கு
உற்றான் ஆய் நின்று, Utran Aayi Nindru - ஸகலவித பந்துவுமாயிருந்து கொண்டு
வளர்த்து, Valarthu - என்னை வளரச்செய்து
என் உயிர் ஆகி நின்றானை, En Uyir Aagi Nindraanai - (அவ்வளவோடும் விடாமல்) எனக்கு உயிராயிருந்து கொண்டு மேலும் நன்மைகளைச் செய்பவனும்
முற்றா மா மதி, Mutraa Maa Mathi - பருவம் நிரம்பாத சந்திரனுடைய
கோள், Kol - க்ஷயரோகத்தை
விடுத்தானை, Viduthaanai - போக்கினவனுமான
எம்மானை, Emmaanai - எம்பெருமானை
எத்தால், Eththal - எக்காரணம்பற்றி
யான் மறக்கேன், Yaan Marakken - நான் மறக்க வல்லேன்?
இது சொல், Idhu Sol - இவ்விஷயத்திற்கு விடைகூறு.
1735பெரிய திருமொழி || (8-9–கைம்மான) (திரு கண்ணபுரம் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உமக்கு உற்றானாய் நின்றவன் பண்ணின உபகாரம் தான் என் என்ன ஸ்வ அனுபவத்துக்கு விச்சேதம் வாராத படி பண்ணி தந்தவன் அன்றோ -என்கிறார் அதுக்கு உம்முடைய பக்கல் உள்ளது என் என்னில்) 8
கற்றார் பற்று அறுக்கும் பிறவிப் பெரும் கடலே பற்றா வந்து அடியேன் பிறந்தேன் பிறந்த பின்னை வற்றா நீர் வயல் சூழ் வயலாலி யம்மானைப் பெற்றேன் பெற்றதுவும் பிறவாமைப் பெற்றேனே –8-9-8
பதவுரை Show / Hide
கற்றார், Kattrar - விவேகிகள்
பற்று அறுக்கும், Patru Arukkum - ‘இதன் ஸம்பந்தமே நமக்கு வேண்டா’ என்று வெறுத்து ஒழிக்கும்படியான
பிறவி பெருகடலே, Piravi Perugadale - ஸம்ஸாரமாகிற பெரிய கடலையே
பற்றா, Pattra - போக்யமாகப் பற்றி
அடியேன் வந்து பிறந்தேன், Adiyen Vandu Pirandhen - (இந்நிலத்திலே) அடியேன் வந்து (பலபிறப்பும்) பிறவாநின்றேன்
பிறந்த பின்னை, Pirandha Pinnai - இப்படி பிறந்து வருமடைவிலே,
வற்றா நீர் வயல் சூழ், Vatra Nee Vayal Soozh - ஒருகாலும் வற்றாத நீர்வளமுடைய கழனிகளாலே சூழப்பட்ட
வயலாலி, Vayalali - ‘வயலாலி’ என்றேபெயர் பெற்ற திருவாலியில் எழுந்தருளியிருக்கிற
அம்மானை, Ammaanai - எம்பெருமானை
பெற்றேன், Petren - ப்ராப்தனானேன்,
பெற்றதுவும், Pettrathuvum - அவனைப்பெற்றவாறே
பிறவாமை பெற்றேன், Piravamai Petren - மறுபிறப்பில்லாமை பெற்றேன்
1736பெரிய திருமொழி || (8-9–கைம்மான) (திரு கண்ணபுரம் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒரு தேச விசேஷத்திலே போனால் சதா தர்சன நத்தாலே -அஹம் அன்னம் அஹம் அன்னம் -என்று களிக்குமத்தை இங்கே கண்ணாலே கண்டு களிக்கப் பெறுவது என்றோ -என்கிறார் – இங்கே கண்களாலே காண்கை யாவது என் என்னில்-இவருடைய த்வரை இருக்கிற படி இறே) 9
கண்ணார் கண்ண புரம் கடிகைகடி கமழும் தண்ணார் தாமரை சூழ் தலைச் சங்க மேல் திசையுள் விண்ணோர் நாண் மதியை விரிகின்ற வெஞ்சுடரை கண்ணாரக் கண்டு கொண்டு களிக்கின்றது இங்கு என்று கொலோ –8-9-9
பதவுரை Show / Hide
கண் ஆர், Kan Aar - கண் பொருந்தும்படியான (ஸுந்தரமான)
கண்ணபுரம், Kannapuram - திருக்கண்ணபுரத்திலும்
கடிகை, Kadikai - திருக்கடிகாசலத்திலும்
தண் ஆர், Than Aar - குளிர்ச்சி பொருந்திய
தாமரை சூழ், Thamarai Soozh - தாமரைகளாலே சூழப்பட்ட
தலைச்சங்கம் மேல் திசையுள், Thalaichangam Mel Thisaiyul - தலைச்சங்கமென்னும் பதியில் மேலைப்பக்கத்திலும்
விண்ணோர், Vinnor - நித்யஸூரிகளுக்கு
நாள் மதியை, Naal Madiyai - நாள்தோறும் சந்திரன்போலே அநுபவிக்கவுரியனாய்
விரிகின்ற வெம் சுடரை, Virikindra Vem Sudarai - உதயகாலத்தில் விரியும் ஸூரியன்போலே ப்ரதாபம் மிக்கவனான எம்பெருமானை
இங்கு, Ingu - இந்நிலத்திலே
கண் ஆர கண்டுகொண்டு, Kan Aara Kandukondu - கண்கள் த்ருப்திபெறுமளவும் காணப்பெற்று
களிக்கின்றது, Kalikkindrathu - ஆநந்திப்பது
என்று கொல், Endru Kol - என்றைக்கோ?.
1737பெரிய திருமொழி || (8-9–கைம்மான) (திரு கண்ணபுரம் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இன் தமிழாகிற இசைத் தொடையைக் கொண்டு கைங்கர்ய ருசியை உடையரான நீங்கள் –கடல் சூழ்ந்த பூமியிலே இவற்றைப் பாடுவது ஆடுவதாய் உஜ்ஜீவித்துப் போகப் பாருங்கோள் – அன்றிக்கே – சர்க்கே பி நோ பஜா யந்தே பிரளயே நவ்ய தந்திச -என்கிறபடியே வரக் கடவதான பிரளயத்திலே புக்கு அழுந்தி நோவு படாமே நீங்கள் இவற்றைக் கொண்டு பாடுவது ஆடுவதாக உங்கள் சஞ்சாரத்தாலே ஜகத்தை உஜ்ஜீவிப்பிக்க பாருங்கோள் என்னுதல்) 10
செரு நீர் வேல் வலவன் கலிகன்றி மங்கையர் கோன் கரு நீர் முகல் வண்ணன் கண்ண புரத்தானை இரு நீரின் தமிழின் இன்னிசை மாலைகள் கொண்டு தொண்டீர் வரு நீர் வையம் உய்ய விவை பாடி யாடுமினே –8-9-10
பதவுரை Show / Hide
கரு, Karhu - கர்ப்பத்தில்
நீர், Neer - நீர்கொண்ட
முகில், Mugil - மேகம் போன்ற
வண்ணன், Vannan - திருநிறத்தையுடையரான
கண்ணபுரத்தானை, Kannapuraththaanai - சௌரிப்பெருமாள் விஷயமாக,-
செரு நீர வேல் வலவன், Seru Neera Vel Valavan - யுத்தம் செய்வதையே இயல்வாக வுடைய வேற்படையைப் பிரயோகிக்கவல்லவரும்
மங்கையர் கோன், Mangaiyar Kon - திருமங்கையிலுள்ளார்க்கு அரசருமான
கலிகன்றி, Kalikanri - ஆழ்வார் (அருளிச்செய்த)
இரு நீர், Iru Neer - மிக்க நீர்மையையுடைய
இன் தமிழ், In Tamil - இனிய தமிழினாலாகிய
இன் இசை, In Isai - இனிய இசையையுடைய
இவை மாலைகள் கொண்டு, Ivai Malaigal Kondo - இச்சொல் மாலைகளைக் கொண்டு
தொண்டீர், Thondheer - தொண்டர்களே!
வரு நீர் வையம் உய்ய, Varu Neera Vaiyam Uyy - கடல் சூழ்ந்த உலகம் உஜ்ஜீவிக்கும்படி
பாடி, Paadi - வாயாரப்பாடி
ஆடுமின், Aadumin - மகிழ்ச்சிக்குப் போக்கு வீடாகக் கூத்தாடுங்கள்