திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 9-1 வங்கமா முந்நீர் (10 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1748பெரிய திருமொழி || (9-1–வங்கமா முந்நீர்) (திருக் கண்ணங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒரு கருமத்தை அனுஷ்டியா நின்றோம் அது நமக்கு ரஷகம் அன்று ஸ்ரீ சர்வேஸ்வரனே ரஷகன் -என்று இருக்கும் இருப்பில் குலைத்தலை உடைய நெஞ்சை உடையார் அன்றிக்கே இருப்பாருமானவர்கள் வர்த்திக்கிற – ஸ்ரீ திருக் கண்ணங்குடியுள் நின்றானே) 1
வங்க மா முந்நீர் வரி நிறப் பெரிய வாள் அரவின் அணை மேவிச் சங்கமாரங்கைத் தடமலருந்திச் சாம மா மேனி என் தலைவன் அங்கமாறைந்து வேள்வி நால் வேத மருங்கலை பயின்று எரி மூன்றும் செங்கையால் வளர்க்கும் துளக்கமில் மனத்தோர் திருக் கண்ணங்குடியுள் நின்றானே –9-1-1
பதவுரை Show / Hide
வங்கம், Vangam - மரக்கலங்களை யுடைத்தாய்
மா, Maa - பெரிதான
முந்நீர், Munnir - (திருப்பாற்) கடலிலே,
வரி, Vari - பல கோடுகளையும்
நிறம், Niram - அழகையுமுடைய
பெரிய, Periya - விசாலமான
வாள், Vaal - ஒளி பொருந்திய
அரவு, Aravu - திருவனந்தாழ்வானாகிற
இன், In - இனிமையான
அணை, Anai - படுக்கையிலே
மேவி, Mevi - பொருந்தி வர்த்திப்பவனும்,
என் தலைவன், En Thalaivan - எம்பெருமான் (எங்கு எழுந்தருளியிருக்கிறனென்றால்)
அங்கம் ஆறு, Angam Aaru - ஆறு வேதாங்கங்களென்ன
ஐந்து வேள்வி, Ainthu Velvi - பஞ்சமஹாயஜ்ஞங்களென்ன
நால் வேதம், Naal Vedham - நான்கு வேதங்களென்ன
அரு கலை, Aru Kalai - (வேதங்களுக்கு உபப்ரும் ஹணமாகவுள்ள) அருமையான நூல்களென்ன ஆகிய இவற்றை
பயின்று, Payinru - காலக்ஷேபமாகக் கொண்டு
எரி மூன்றும், Eri Moondrum - த்ரேதாக்நிகளை
செம் கையால் வளர்க்கும், Sem Kaiyal Valarkkum - செவ்விய கைகளாலே ஓம்புகின்றவர்களும்
துளக்கம் இல் மனத்தோர், Thulakkam Il Manaththor - நிலைநின்ற அத்யவஸாய முடையவர்களுமான அஅந்தணர்வாழ்கிற
திருக்கண்ணங்குடியுள், Thirukkannangudiyul - திருக்கண்ணங்குடி யென்னுந் திருப்பதியிலே
நின்றான், Nindraan - எழுந்தருளியிருக்கிறான்.
1749பெரிய திருமொழி || (9-1–வங்கமா முந்நீர்) (திருக் கண்ணங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆகாச அவகாசத்தை வெளி அடைத்துக் கொண்டு வந்து தோற்ற – சாபத்தாலே திண்ணியதான நெஞ்சை உடைய முதலை-சின்னம் பின்னம் -என்கிறபடியே துணி படும்படி பிரதி பஷததின் மேலே நெருப்பை உமிழா நின்றுள்ள திரு ஆழியை ஏவினவன்) 2
கவளமாக தத்த கரி உய்யப் பொய்கை காரம் கொளக் கலங்கி யுள் நினைந்து துவள மேல் வந்து தோன்றி வன் முதலை துணி படச் சுடு படை துரந்தோன் குவளை நீள் முளரிக் குமுத மொண் கழுநீர் கொய் மலர் நெய்தல் ஒண் கழனித் திவளும் மாளிகை சூழ் செழு மணிப் புரிசைத் திரு கண்ணங்குடி யுள் நின்றானே –9-1-2
பதவுரை Show / Hide
கவளம், Kavalam - கவளங்கொள்ளுமியல் புடையதும் (- (திருக்கண்ணங்குடியுள், நின்றான்-.))
மா கதத்த, Maa Kathath - மிக்க மதத்தையுடையதுமான
கரி, Kari - கஜேந்திரன்
பொய்கை, Poykai - ஒரு பொய்கையிலிருந்த
கராம், Karaam - முதலையினாலே
கொள, Kol - கௌவப்பட்டு
கலங்கி, Kalangi - கலக்கமடைந்து
உள் நினைந்து, Ul Ninaindhu - (எம்பெருமானைச்) சிந்தித்து
துவள, Thuvazhal - வருந்திநின்றவளவிலே,
உய்ய, Uyya - அது உஜ்ஜீவக்கும்படி
மேல் வந்து தோன்றி, Mel Vandu Thondri - மேல்வழியாய் எழுந்தருளி ஸேவைஸாதித்து
வன் முதலை, Van Muthalai - வலிவுள்ள (அந்த) முதலை
துணிபட, Thunipad - துண்டாக அறும்படி
சுடு படை, Sudu Padai - ஜ்வலிக்கின்ற திருவாழிப்படையை
துரந்தோன், Thuranthoon - பிரயோகித்தருளின எம்பெருமான்,-
குவளை, Kuvazhai - கருநெய்தற்பூக்களென்ன
நீள் முளரி, Neel Mulari - பெரிய தாமரைப் பூக்களென்ன
குமுதம், Kumudham - ஆம்பலென்ன
ஒண் கழுநீர், On Kazhuneer - செங்கழுநீரென்ன
கொய் மலர் நெய்தல், Koi Malar Neithal - பறிக்கைக்கு உரியமலரை யுடைத்தான நெய்தலென்ன ஆகிய இவற்றாலே
ஒண், On - அழகுபெற்ற
கழனி, Kazhani - கழனிகளையுடையதும்
திவளும் மாளிகை சூழ், Thivalum Maligai Soozh - பிரகாசிக்கின்ற திருமாளிகைகளாலே சூழப்பட்டதும்
செழு மணி புரிசை, Sezhu Mani Purisai - சிறந்த ரத்நமயமான திருமதிளையுடையதுமான
1750பெரிய திருமொழி || (9-1–வங்கமா முந்நீர்) (திருக் கண்ணங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (எங்கும் ஒக்க பிரளயமாய் நலிவானது மேலிட-ஆகாசமும்-பூமியும் குல பர்வதங்களும் கடலிலே புக்கு அகப்பட –இவற்றை அடைய தன் மேலே ஏறிட்டுக் கொண்டு தரிக்க வற்றாய் – பெரிய களிப்பை உடைய ஸ்ரீ மத்ஸ்ய ரூபியாய் பரந்த புனலை தன் செலுவிலெ-ஏக தேசத்திலே -அடக்கினவன்) 3
வாதை வந்து அடர வானமும் நிலனும் மலைகளும் அலை கடல் குளிப்ப மீது கொண்டு உகளும் மீனுருவாகி விரி புனல் வரியகட்டு ஒளித்தோன் போதலர் புன்னை மல்லிகை மௌவல் புது விரை மது மலர் அணைந்து சீத ஒண் தென்றல் திசை தொறும் கமழும் திருக் கண்ணங்குடியுள் நின்றானே –9-1-3
பதவுரை Show / Hide
வாதை வந்து அடர, Vathai Vandu Adara - கஷ்டம்நேர்ந்து அதிகரிக்க (- (திருக்கண்ணங்குடியுள், நின்றானே-.))
வானமும், Vaanamum - ஆகாசமும்
நிலனும், Nilanum - பூமியும்
மலைகளும், Malaigalum - மலைகளும்
அலை கடல், Alai Kadal - மலையெறிகின்ற கடலிலே
குளிப்ப, Kulippa - அழுந்திவிட.
மீது கொண்டு, Meethu Kondo - (இவற்றை யெல்லாம்) தன் மேலே யேறிட்டுக் கொண்டு
உகளும், Ugalum - களிப்புடன் உலாவுகிற
மீன் உரு ஆகி, Meen Uru Aagi - மத்ஸ்ய ரூபியாகி
விரி புனல், Viri Punal - பரம்பின பெருவெள்ள நீரை
வரி அகடு, Vari Akadu - அழகிய (தனது) செலுவிலே
ஒளித்தோன், Oliththon - அடக்கின எம்பெருமான்,
போது, Podhu - உரிய காலத்திலே
அலர், Alar - விகஸிக்கிற
புன்னை, Punnai - புன்னைகளென்ன
மல்லிகை, Mallikai - மல்லிகைகளென்ன
மௌவல், Mauval - முல்லைகளென்ன (இவற்றினுடைய)
புது விரை மது மலர், Puthu Virai Madhu Malar - புதிய பரிமளத்தையும் தேனையுமுடைய பூக்களிலே
அளைந்து, Alaindhu - அளாவி
சீதம் ஒண் தென்றல், Seetham On Thendral - குளிர்ந்த அழகிய தென்றற்காற்று
திசை தொறும், Thisai Thorum - எல்லாப்பக்கங்களிலும்
கமழும், Kamazhum - வாஸனைவீசப்பெற்ற
1751பெரிய திருமொழி || (9-1–வங்கமா முந்நீர்) (திருக் கண்ணங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ வராஹமாய் பூமியை பிரளயம் கொண்டது என்று அத்தை எடுத்து ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு வந்த வை வர்ண்யத்தைப் போக்கினவன் – பாண்டவர்களுக்கு சாரதி யானவன்) 4
வென்றி சேர் திண்மை விலங்கல் மா மேனி வெள் எயிற்று ஒள் எரித் தறு கண் பன்றியாய் அன்று பார்மகள் பயலைத் தீர்த்தவன் பஞ்சவர் பாகன் ஒன்றலா வுருவத் துலபபில் பல்காலத் துயர் கொடி யொளிவளர் மதியம் சென்று சேர் சென்னிச் சிகர நன்மாடத் திருக் கண்ணங்குடியுள் நின்றானே –9-1-4
பதவுரை Show / Hide
அன்று, Andru - முன்பொருகால், (- (திருக்கண்ணங்குடியுள், நின்றான்-.))
வென்றி சேர், Vendri Ser - வெற்றிபெறுந்தன்மையுடையதும்
திண்மை, Thinmai - வலிமையுடையதும்
விலங்கல் மா மேனி, Vilangkal Maa Meni - மலைபோன்ற பெரிய வடிவுடையதும்
வெள்எயிறு, Velaiyiru - வெறுத்தகோரப்பற்களையும்
ஒள் எரி, Ol Eri - ஜ்வலிக்கின்ற அக்நியோடொத்த
தறு கண், Tharu Kan - வட்டணித்த கண்களையும் உடையதுமான
பன்றி ஆய், Pandri Aayi - வராஹரூபியாய்த் திருவவதரித்து
பார் மகள், Paar Magal - பூமிப்பிராட்டியினுடைய
பயலை, Payalai - விரஹவேதனையை
தீர்த்தவன், Theerthavan - போக்கினவனும்
பஞ்சவர் பாகன், Panjavar Bhagan - பாண்டவர்களுக்கு ஸாரதியுமான எம்பெருமான்,-
ஒன்று அலா உருவத்து, Onru Ala Uruvaththu - பலவகைப்பட்ட உருவங்களையுடையவையாய்
உலப்பு இல், Ulappu Il - முடிவில்லாமல்
பல் காலத்து, Pal Kaalaththu - நீண்டகாலமுள்ளவையாய்
உயர் கொடி ஒளி வளர் மதியம் சென்று சேர் சென்னி சிகரம், Uyar Kodi Olli Valar Madhiyam Sendru Ser Chennni Sikaram - உயர்ந்தகொடிகளானவை ஒளிமிக்க சந்திர மண்டலத்தளவும் சென்று சேரும்படியாக ஓங்கின சிகரங்களை யடையவையான
நல் மாடம், Nal Maadam - அழகிய மாடமாளிகைகளை யுடைத்தான
1752பெரிய திருமொழி || (9-1–வங்கமா முந்நீர்) (திருக் கண்ணங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பூமிப் பரப்பை அடைய இரண்டடியாலே அளப்பதாக பரந்த திக்குகள் அடங்கலும் திருவடிகளுக்கு உள்ளே அடங்கும் படி வளர்ந்தவன்) 5
மன்னவன் பெரிய வேள்வியில் குறளாய் மூவடி நீரொடும் கொண்டு பின்னும் ஏழு உலகம் ஈரடியாகப் பெரும் திசை யடங்கிட நிமிர்ந்தோன் அன்ன மென் கமலத் தணி மலர்ப்பீடத் தலை புனலிலைக் குடை நீழல் செந்நெல் ஒண் கவரி யசைய வீற்று இருக்கும் திருக் கண்ணங்குடி யுள் நின்றானே –9-1-5
பதவுரை Show / Hide
மன்னவன், Mannavan - (மஹாபலியென்னும்) அரசனுடைய (- (திருக்கண்ணங்குடியுள், நின்றான்.))
பெரிய வேள்வியில், Periya Velviyil - மஹாயஜ்ஞத்திலே
குறள் ஆய், Kural Aayi - வாமநமூர்த்தியாய் (ச்சென்று)
நீரொடு, Neerodu - (அவன்வார்த்த) தாரையோடு
மூ அடியும், Moo Adiyum - மூவடி நிலத்தையும்
கொண்டு, Kondru - கைப்பற்றி
பின்னும், Pinnum - பிறகு
ஏழ் உலகும், Ezhu Ulagum - ஏழுலகங்களையும்
ஈர் அடி ஆக, Eer Adi Aaga - இரண்டடியாலே அளப்பதாக
பெரு திசை அடங்கிட, Peru Thisai Adangida - பரந்த திக்குக்கள் இட மடையும்படி
நிமிர்ந்தோன், Nimirndhon - ஓங்கிவளர்ந்த பெருமான்,-
அன்னம், Annam - அன்னப்பறவை
மென் கமலத்து மலர், Men Kamalaththu Malar - மெல்லிய தாமரைப்பூவாகிய
அணி பீடத்து, Ani Peedaththu - அழகிய ஆஸனத்திலே
அலை புனல், Alai Punal - அலையெறிகிற ஜலத்திலுண்டான
இலை, Ilai - இலையாகிற
குடை, Kudai - குடையினுடைய
நீழல், Neezhal - நிழலிலே
செந்நெல் ஒண் கவரி அசைய, Sennel On Kavari Asaiya - அழகிய செந்நெற்கவரிவீச
வீற்றிருக்கும், Veetirukkum - வீற்றிருக்கப்பெற்ற
1753பெரிய திருமொழி || (9-1–வங்கமா முந்நீர்) (திருக் கண்ணங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மழுவைக் கொண்டு பூமியில் ராஜாக்களை இருபத்தொரு படி கால் அறுத்து அவர்கள் உடைய ருதிர வெள்ளத்திலே குளித்து உதக் கிரியையும் பண்ணி மிக்க கோபம் தவிர்ந்தவன்) 6
மழுவினால் அவனி யரசை மூவெழு கால் மணி முடி பொடிபடுத்துதிர குழுவு வார் புனலுள் குளித்து வெங்கோபம் தவிர்ந்தவன் குலை மலி கதலி குழுவும் வார் கமுகும் குரவு நற்பலமும் குளிர் தரு சூத மாதவியும் செழுமையார் பொழில்கள் தழுவு நன் மாடத் திருக் கண்ணங்குடி யுள் நின்றானே –9-1-6
பதவுரை Show / Hide
மூ எழு கால், Moo Ezhuthu Kaal - இருபத்தொரு தலைமுறையளவும் (- (திருக்கண்ணங்குடியுள், நின்றான்-))
அவனி அரசை, Avani Arasai - பூமியிலுள்ள ராஜாக்களுடைய
மணி முடி, Mani Mudi - மணியணிந்த கிரீடங்களை
மழுவினால், Mazhuvinal - கோடாலிப்படையினால் பொடி பொடியாகச்செய்து
பொடிபடுத்து, Podipaduthu - (அரசர்களை யெல்லாம் கொன்று.)
உதிரம் குழுவு, Uthiram Kuzhuvu - (அவர்களுடைய) ரத்த ஸமூஹமாகிற
வார் புனலுள், Vaar Punalul - வெள்ளத்திலே
குளித்து, Kulithu - ஸ்நாநம்பண்ணி
வெம் கோபம் தவிர்ந்தவன், Vem Kobam Thavirthavan - மிக்க கோபம் தணியப் பெற்ற பெருமான்,-
குலை மலி, Kulai Mali - குலைகளாலே நிறைந்த
கதலி, Kathali - வாழைகளினுடைய
குழுவும், Kuzhuvum - தோப்பும்
வார் கமுகும், Vaar Kamukum - ஓங்கின பாக்குமரங்களும்
குரவும், Kuravum - குரவமரங்களும்
நல் பலவும், Nal Palavum - நல்ல பலாமரங்களும்
குளிர்தரு சூதம், Kulirtharu Sootham - குளிர்ந்த மாமரங்களும்
மாதவியும், Madhaviyum - குருக்கத்தியுமாகிய
செழுமை ஆர் பொழில்கள் தழுவு, Sezhumai Aar Pozhilgal Thazhuvu - செழிப்புடைய சோலைகளாலே சூழப்பட்டதும்
நல் மாடம், Nal Maadam - நல்ல மாடமாளிகைகளையுடையதுமான
சூதம், மாதவி, Sootham Madhavi - வடசொற்கள்
1754பெரிய திருமொழி || (9-1–வங்கமா முந்நீர்) (திருக் கண்ணங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இலங்கைக்கு நிர்வாஹகனாய் இருக்கிற ராவணனை –ஆதித்ய கிரணம் போலே கூரிய அம்புகளாலே வர பலத்தாலே பூண் கட்டின முடிகள் ஆனவை பனம் பழம் போலே உதிரும்படி வில்லை வளைத்தவன் – மதுபான மத்தமான வண்டுகள் இனிய இசை பாடா நின்றுள்ள ராவணன் உடன் பொருத ஸ்ரமம் ஆறும் படி ஆடல் பாடல் கேட்டுப் போது போக்கி இருக்கலான தேசம் ஆயிற்று) 7
வானுளாரவரை வலிமையால் நலியும் மறி கடல் இலங்கை யார் கோனைப் பானுநேர் சரத்தால் பனங்கனி போலப் பரு முடியுதிர வில் வளைத்தோன் கானுலா மயிலின் கணங்கள் நின்றாடக் கண முகில் முரச நின்றதிரத் தேனுலா வரி வண்டின் இன்னிசை முரலும் திருக் கண்ணங்குடி யுள் நின்றானே –9-1-7
பதவுரை Show / Hide
வலிமையால், Valimaiyaal - (தனது) மிடுக்கினால் (- (திருக்கண்ணங்குடியுள், நின்றான்-.))
வானுளாரவரை நலியும், Vaanulaaravarai Naliyum - தேவர்களை ஹிம்ஸதித்துக் கொண்டிருந்த
மறிகடல் இலங்கை யார் கோனை, Marikadal Ilangai Yaar Konai - அலைமறியுங் கடல்சூழ்ந்த இலங்கையில் உள்ளவர்களுக்கு அரசனான இராவணனுடைய
பரு முடி, Paru Mudi - பருத்த தலைகள்
பானு நேர் சரத்தால், Paanu Ner Sarathaal - ஸூர்யனோடொத்த (திக்ஷ்ணமான) அம்புகளாலே
பனங்கனி போல, Panangani Poola - பனம்பழம்போல
உதிர, Uthira - அற்றுவிழும்படி
வில் விளைத்தோன், Vil Vilaitthon - சார்ங்கத்தை வளைத்த பெருமான்
கான் உலாம், Kaan Ulaam - காட்டிலே உலாவுகின்ற
மயிலின் கணங்கள், Mayilin Kanangal - மயில் கூட்டங்கள்
நின்று ஆட, Ninru Aada - நின்று கூத்தாடவும்,
கணம் முகில், Kanam Mukil - திரண்ட மேகங்கள்
முரசம் நின்று அதிர, Murasam Ninru Athira - முரஜவாத்தியம் போல நின்று முழங்கவும்,
தேன் உலாம் வரி வண்டு, Then Ulaam Vari Vandu - தேன்களிலே திரிகின்ற அழகிய வண்டுகள்
இன் இசை முரலும், In Isai Muralam - இனிய ராகங்களை ஆலாபிக்கவும் பெற்ற
1755பெரிய திருமொழி || (9-1–வங்கமா முந்நீர்) (திருக் கண்ணங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சர்ப்பத் த்வஜன்-என்னக் கடவது இ றே துரியோதனனை –அவன் தன ஓலகத்தினுள்ளே ஆசனத்தை ஜகத்துக்கு வேர் பற்றானவனை அளிக்கப் புகா நின்றோம் என்று கூசாதே இட்டு அதுவே ஹேதுவாக பெரிய வடிவானது அண்ட அவகாசத்தை ஊடுருவ திக்குகள் தன பக்கலிலே அடங்கும்படியாக வளர்ந்தவன்) 8
அரவு நீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை அஞ்சாதே இட வதற்குப் பெரிய மா மேனி அண்டமூடுருவப் பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தோன் வரையின் மா மணியும் மரகதத் திரளும் வயிரமும் வெதிருதிர் முத்தும் திரை கொணர்ந்துந்தி வயல்தொரும் குவிக்கும் திருக் கண்ணங்குடி யுள் நின்றானே –9-1-8
பதவுரை Show / Hide
அரவு நீள் கொடியோன், Aravu Neel Kodiyon - ஸர்ப்பத்வஜனான துரியோதனன் (- (திருக்கண்ணங்குடியுள், நின்றான் -.))
அவையுள், Avaiyul - ஸபையிலே
ஆசனத்தை, Aasanaththai - (பொய்யான) ஆஸனத்தை
அஞ்சிடாதே இட, Anjidaadhe Ida - அஞ்சாமல் இட
அதற்கு, Adharku - அதுகாரணம்பற்றி
பெரிய மா மேனி, Periya Maa Meeni - பெரிய திருமேனியை யுடையனாய்க் கொண்டு
அண்டம் ஊடு உருவ, Andam Oodu Uruva - மேலுலகம் ஊடுருவிச் செல்லும்படியாகவும்
பெரு திசை அடங்கிட, Peru Thisai Adangida - பெரிய திக்குகள் (தன்னிலே) அடங்கும் படியாகவும்
நிமிர்ந்தோன், Nimirndhon - வளர்ந்த பெருமான்
வரையின் மா மணியும், Varaiyin Maa Maniyum - ஸஹ்ய பர்வதத்திலிருக்கிற சிறந்த ரத்னங்களையும்
மரதகம் திரளும், Maradhagam Thiralum - மரதகக் குலியல்களையும்
வயிரமும், Vayirum - வயிரங்களையும்
வெதிர் உதிர் முத்தும், Vethir Uthir Muththum - மூங்கில்களினின்று உதிர்ந்த முத்துகளையும்
திரை, Thirai - அலைகளானவை
உந்தி கொணர்ந்து, Undhi Konarnthu - தள்ளிக்கொண்டுவந்து
வயல் தொறும், Vayal Thorum - கழனிகளெங்கும்
குவிக்கும், Kuvikkum - குவிக்குமிடமன
1756பெரிய திருமொழி || (9-1–வங்கமா முந்நீர்) (திருக் கண்ணங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (விஞ்சின பாரமானது ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு வாராத படி ஸ்ரீ மகா பாரதத்திலே ராஜாக்கள் ஆனவர்கள் மடியும் படியாக ஸ்ரீ அர்ஜுனன் முன்னே நின்று தேரை நடத்தினவன் – ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை உடையவன்) 9
பன்னிய பாரம் பார் மகட்கு ஒழிய பாரத மா பெரும் போரிலே மன்னர்கள் மடிய மணி நெடும் திண் தேர் மைத்துனர்க்கு உய்த்த மா மாயன் துன்னு மாதவியும் சுர புனைப் பொழிலும் சூழ்ந்தெழு செண்பக மலர்வாய் தென்ன வென்றளிகள் முரன்றிசை பாடும் திருக் கண்ணங்குடி யுள் நின்றானே –9-1-9
பதவுரை Show / Hide
பார்மகட்கு, Paarmakadku - பூமிப்பிராட்டிக்கு இருந்த (- (திருக்கண்ணங்குடியுள், நின்றான்-.))
பன்னிய பாரம், Panniya Paaram - விஞ்சின பாரமானது
ஒழிய, Ozhiy - விட்டுநீங்கும்படி
பாரதம் மா பெரு போரில், Bharatham Maa Peru Poaril - மிகப் பெரிய பாரதயுத்தத்தில்
மன்னர்கள், Mannargal - அரசர்கள்
மடிய, Madiy - தொலையும்படி
மைத்துனற்கு, Maiththunarukku - அர்ஜுநனுக்கு
மணி நெடு திண் தேர் உய்த்த, Mani Neduthin Ther Uyththa - மணிகளுடையதாய்ப் பெரிதாய்த் திடமாயிருந்த தேரை நடத்தின
மா மாயன், Maa Maayan - ஆச்சரிய சக்தியுக்தனான பெருமான்,-
துன்னு மாதவியும், Thunnu Maadhaviyum - நெருங்கின குருக்கத்தியும்
சுரபுனை பொழிலும், Surapunai Pozhilum - சுரபுன்னைச் சோலைகளும்
சூழ்ந்து எழு செண்பகம், Soozhndhu Ezhuthu Senbagam - சுற்றிலுமுண்டான செண்பகங்களும் ஆகிய இவற்றினுடைய
மலர்வாய், Malarvaai - பூக்களிலே
அளிகள், Azhigal - வண்டுகள்
தென்ன என்று, Thenna Endru - தென்ன தென்ன வென்று
முரன்று, Murandru - ஆலாபித்து
இசை பாடும், Isai Paadum - இசைபாடப்பெற்ற
1757பெரிய திருமொழி || (9-1–வங்கமா முந்நீர்) (திருக் கண்ணங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கும் அழியாத ஊரை வில்லாலே அக்னி கிளரும்படியாக செற்ற ஸ்ரீ திருக் கண்ணங்குடியுள் நின்றானை – ஸ்ரீ ஆழ்வார் ஒலியை உடைத்தாக அருளிச் செய்தவையாய்–லஷணங்களில் குறை அற்று இருந்துள்ள இப்பத்தையும் அப்யசிக்க வல்லார்க்களுக்கு ஸ்ரீ பகவத் தாரித்ர்யம் இல்லை – என்கிறார்) 10
கலையுலா வல்குல் காரிகை திறத்துக் கடல் பெரும் படையொடும் சென்று சிலையினால் இலங்கை தீ எழச் செற்ற திருக் கண்ணங்குடியுள் நின்றானை மலைகுலா மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள் உலவு சொல் மாலை யொன்பதொடு ஒன்றும் வல்லவர்க்கு இல்லை நல்குரவே –9-1-10
பதவுரை Show / Hide
கலை உலா அல்குல், Kalai Ula Alkul - நல்ல ஆடை உலாவுகின்ற இடுப்பையுடையளான
காரிகை திறத்து, Kaarikai Thirathu - அழகிற்சிறந்த ஸீதாபிராட்டிக்காக
கடல் பெரு படையொடும் சென்று, Kadal Peru Padaiyodum Sendru - ஸமுத்திரத்திற் காட்டில பெரிதான (வானர) சேனையோடே எழுந்தருளி
சிலையினால், Silaithinaal - சார்ங்கவில்லாலே
இலங்கை தீ எழ செற்ற, Ilankai Thee Ezh Setra - இலங்கை நெருப்புப்பற்றி யெரியும்படி அழித்தவனும்
திருக்கண்ணங்குடியுள் நின்றானை, Thirukkannangudiyul Nindraanai - திருக்கண்ணங்குடியில் எழுந்தருளு யிருப்பவனுமான எம்பெருமான் விஷயமாக;
மலைகுலா மாடம், Malaikula Maadam - மலையென்று கொண்டாடிச் சொல்லத்தக்க மாடங்களை யுடைத்தான
மங்கையர், Mangaiyar - திருமங்கை நாட்டில் உள்ளவர்கட்கு
தலைவன், Thalaivan - தலைவரும்
மானம் வேல், Maanam Veel - சிறந்த வேற்படையை யுடையவருவான
கலியன், Kaliyan - ஆழ்வாருடைய
வாய் ஒலிகள், Vaai Oligal - ஸ்ரீ ஸூக்தியாய்
உலவு, Ulavu - லக்ஷணங்களில் குறையற்றவையான
சொல் மாலை ஒன்பதோடு ஒன்றும், Sol Maalai Onpathodu Ondrum - இப்பத்துப் பாசுரங்களையும்
வல்லவர்க்கு, Vallavarkku - ஓதவல்லவர்களுக்கு
நல்குரவு, Nalkuravu - ஏழைமை
இல்லை, Illai - இல்லையாம்.