திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1838 | பெரிய திருமொழி || (9-10–எங்கள்) (திருக் கோட்டியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தம் திரு நாமத்தைச் சொல்லி ஏத்தும் படியாக நெஞ்சை பிரியாதே இருந்து அடியவர்க்கு பிரசாதத்தைப் பண்ணுமவன் – கிளர்ந்து ஸ்ரமஹரமான அருவிகள் நீர் மாறாதே ஒழுகுமா போலே-மேகம் பொன்களையே சிந்த – அத்தாலே மிக்க ஒளியை உடைத்தாய் செந்தாமரைகள் மாறாதே அலர்ந்த ஸ்ரீ திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனவன்) 1 | எங்கள் எம்மிறை யெம்பிரான் இமையோர்க்கு நாயகன் ஏத்த அடியவர்
தங்கள் தம் மனத்துப் பிரியாது அருள் புரிவான்
பொங்கு தண்ணருவி புதம் செய்யப் பொன்களே சிதறும் இலங்கொளி
செங்கமல மலரும் திருக் கோட்டியூரானே –9-10-1 | பதவுரை Show / Hideஎங்கள் எம் இறை, Engal Em Irai - எமக்கு அஸாதாரண ஸ்வாமியும் (- (எவ்விடத்துள்ளானென்னில்)) எம் பிரான், Em Piraan - எமக்கு உபகாரகனும் இமை யோர்க்கு நாயகன், Imai Yorkku Naayagan - நித்யஸூரிகளுக்குத் தலைவனும் ஏத்து, Aethu - துதிக்கின்ற அடியவர் தங்கள் தம், Adiyavar Thangal Tham - பக்தர்களினுடைய மனத்து, Manaththu - நெஞ்சிலே பிரியாது, Priyaadhu - பிரியாமல் பொருந்தியிருந்து அருள் புரிவான், Arul Purivaan - (அவர்கட்கு) அருள் செய்பவனுமான எம்பெருமான் பொங்கு, Pongu - மேன்மேலும் கிளர்கின்ற தண், Than - குளிர்ந்த அருவி, Aruvi - அருவிகளானவை புதம் செய்ய, Pudham Seyya - தாவிப்பாய, பொன்களே சிதற, Pongkale Chithara - (அவ்வருவிகள் முகமாகப்) பொன்மணிகள் சிந்த இலங்கு ஒளி, Ilangu Oli - (அதனால்) விளங்குகின்ற ஒளியையுடையதாயும் செம் கமலம் மலரும், Sem Kamalam Malarum - செந்தாமரைப்பூக்கள் மலரப்பெற்றதாயுமுள்ள திருக்கோட்டியூரான், Thirukkoottiyooran - திருக்கோட்டியூரிலெழுந்தருளி யுள்ளான் |
| 1839 | பெரிய திருமொழி || (9-10–எங்கள்) (திருக் கோட்டியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நம்முடைய துக்கங்களை எல்லாம் போக்குகைக்காக பிராட்டிமாரோடே கூட ஸ்ரீ திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனான் என்கிறார்) 2 | எவ்வ நோய் தவிர்ப்பான் எமக்கு இறை இன்னகைத் துவர்வாய் நிலமகள் தம்
செவ்வி தோய வல்லான் திரு மா மகட்கு இனியான்
மௌவல் மாலை வண்டாடும் மல்லிகை மாலையோடும் அணைந்த மாருதம்
தெய்வ நாற வரும் திருக் கோட்டியூரானே –9-10-2 | பதவுரை Show / Hideஎவ்வம் நோய் தவிர்ப்பான், Evvam Noi Thavirppaan - துக்கஹேதுவான வியாதிகளை நீக்கியருள்பவனும் எமக்கு இறை, Emakku Irai - எமக்குவகுத்த ஸ்வாமியும் இன் நகை துவர் வாய் நிலம் மகள், In Nakai Thuvar Vaai Nilam Magal - இனிய புன்சிரிப்பையும் சிவந்த அதரத்தையுமுடையளான பூமிப்பிராட்டியினுடைய செல்வி, Selvi - அழகை தோய வல்லான், Thoya Vallaaan - அநுபவிக்கவல்லவனும் திரு மா மகட்கு இனியான், Thiru Maa Makadku Iniyaan - பெரிய பிராட்டியார்க்கு போக்யனுமான எம்பெருமான் வண்டு ஆடும், Vandu Aadum - வண்டுகள் சுழலமிடாநிற்கப் பெற்ற மௌவல் மாலையோடும், Mauval Maalaiyodum - சாதிமல்லிகைப் பூக்களோடும் மல்லிகை மாலையோடும், Mallikai Maalaiyodum - மல்லிகைப் பூக்களோடும் அணைந்த, Anaindha - ஸம்பந்தித்த மாருதம், Maarudham - காற்றானது தெய்வம் நாற, Deivam Naara - திவ்யமான பரிமளத்தை வீசிக்கொண்டு வரும், Varum - வந்து உலாவப்பெற்ற திருக்கோட்டியூரான், Thirukkoottiyooran - திருக்கோட்டியூரிலுள்ளான் |
| 1840 | பெரிய திருமொழி || (9-10–எங்கள்) (திருக் கோட்டியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவ்வோ யுகங்கள் தோறும் ஆஸ்ரயிப்பார் உகந்த திரு நிறத்தை தானும் உகந்து கொண்டு பிரளய ஆபத்துக்களிலும் உதவும் ஸ்வ பாவனானவன் ஸ்ரீ திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனான் – என்கிறார்) 3 | வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் விண்ணவர் தமக்கு இறை எமக்கு
ஒள்ளியான் உயர்ந்தான் உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான்
துள்ளு நீர் மொண்டு கொண்டு சாமரைக் கற்றை சந்தந முந்தி வந்தசை
தெள்ளு நீர் புறவில் திருக் கோட்டியூரானே –9-10-3 | பதவுரை Show / Hideவெள்ளியான், Velliyaan - (கிருதயுகத்தில்) வெளுத்த நிறமுடையவனும் (- (இப்படியிருந்தும்)) கரியான், Kariyaan - (கலியுகத்தில்) கறுத்தநிற முடையவனும் மணி நிறம் வண்ணன், Mani Niram Vannan - (த்வாபரயுகத்திலே) நீல மணியின்நிறம் போன்ற நிறமுடையவனும் விண்ணவர் தமக்கு இறை, Vinnavar Thamakku Irai - நித்யஸூரிகளுக்கு நிர்வாஹகனும் உயர்ந்தான், Uyarnthaan - எல்லாரினும் மேம்பட்டவனும் எமக்கு ஒள்ளியான், Emakku Olliyaan - எனக்குத்தன்னழகைக் காட்டித்தந்தவனும் உலகு ஏழும் உண்டு, Ulaku Ezhum Undu - (பிரளயகாலத்திலே) ஸப்தலோகங்களையும் திருவயிற்றிலே வைத்துக்காத்து உமிழ்ந்தான், Umizhndhaan - பிறகு வெளிப்படுத்தினவனுமான ஸர்வேச்வரன் துள்ளு நீர், Thullu Neer - கொந்தளிக்கின்ற அலைகளாலே சாமரை கற்றை, Saamarai Kattrai - சாமரத்திரள்களையும் சந்தனம், Sandanam - சந்தனமரங்களையும் மொண்டு கொண்டு வந்து, Montu Kondu Vandu - இழுத்துக்கொண்டு வந்து உந்தி, Undhi - தள்ளி அசை, Asai - பிரவஹிக்கின்ற தெள்ளுநீர், Thelluneer - தெளிந்தநீரையுடைய புறவின், Puravin - சுற்றுப்பக்கங்களோடு கூடின திருக்கோட்டியூரான, Thirukkoottiyooraan - திருக்கோட்டியூரிலுள்ளான் |
| 1841 | பெரிய திருமொழி || (9-10–எங்கள்) (திருக் கோட்டியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ பிராட்டியோடு ஒக்க ருத்ரனுக்கும் திரு மேனி யிலே இடம் கொடுத்த சீலவான் ஸ்ரீ திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனான் என்கிறார்) 4 | ஏறும் ஏறி இலங்கும் ஒண் மழுப் பற்றும் ஈசற்கு இசைந்து உடம்பிலோர்
கூறு தான் கொடுத்தான் குல மா மகட்கு இனியான்
நாறு செண்பக மல்லிகை மலர் புல்லியின் இளவண்டு நன்னறும்
தேறல் வாய் மடுக்கும் திருக் கோட்டியூரானே –9-10-4 | பதவுரை Show / Hideஏறு ஏறி, Eru Eri - விருஷயத்தை வாஹனமாகக்கொண்டு ஏறியிருப்பவனும் இலங்கும் ஒன் மழு பற்றும், Ilankum On Mazhu Patrum - விளங்குகின்ற அழகிய மபுவாயுதத்தைக் கையிலேந்திக் கொண்டிருப்பவனுமான ஈசற்கு, Eesarku - சிவபிரானுக்கு இசைந்து, Isainthu - திருவுள்ளமிணங்கி உடம்பில் ஓர் கூறு, Udamil Oru Kooru - தனது திருமேனியில் ஒரு பாகத்தை இருப்பிடமாகக் கொடுத்தருளினவனும் குலம், Kulam - சிறந்த மா மகட்கு, Maa Makadku - பெரியபிராட்டியார்க்கு இனியான், Iniyaan - போக்யனுமான எம்பெருமான் இன் இன வண்டு, In Ina Vandu - இனிய இளவண்டுகளானவை நாறு, Naaru - மணம்மிக்க செண்பகம், Senbagam - செண்பகப்பூவையும் மல்லிகை மலர், Mallikai Malar - மல்லிகைப்பூவையும் புல்கி, Pulki - தழுவி நல் நறு தேறல், Nal Naru Therhal - நல்லமணமுள்ள தேனிலை வாய் மடுக்கும், Vai Madukkum - வாய்வைத்துப் பருகுமிடமான திருக்கோட்டியூரான், Thirukkoottiyooran - திருக்கோட்டியூரிலுள்ளான். |
| 1842 | பெரிய திருமொழி || (9-10–எங்கள்) (திருக் கோட்டியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பண்டு பூமியை அளந்து கொண்டவன் இப்போது ஸ்ரீ திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனான் என்கிறார்) 5 | வங்க மா கடல் வண்ணன் மா மணி வண்ணன் விண்ணவர் கோன் மது மலர்
தொங்கல் நீண் முடியான் நெடியான் படி கடந்தான்
மங்குல் தோய் மணி மாட வெண் கொடி மாகமீது உயர்ந்தேறி வானுயர்
திங்கள் தான் அணவும் திருக் கோட்டியூரானே –9-10-5 | பதவுரை Show / Hideவங்கம் கடல் வண்ணன், Vangam Kadal Vannan - கப்பல்களையுடைய பெரிய கடலின் நிறம்போன்ற நிறமுடையவனும் மர மணி வண்ணன், Mara Mani Vannan - நீலமணி நிறமுடையவனும் விண்ணவர் கோன், Vinnavar Kon - நித்யஸூரிகட்குத் தலைவனும் மது, Madhu - தேனையுடைத்தான மலர் தொங்கல், Malar Thongal - பூமாலையை நீள் முடியான், Neel Mudiyaan - நீண்ட திருவபிஷேகத்தி லணிந்துள்ளவனும் நெடியான், Nedhiyaan - ஸர்வோத்க்ருஷ்டனும் படி கடந்தான், Padi Kadandhaan - (த்ஜீவிக்ரமாவதாரத்தில்) பூமியையளந்து கொண்டவனமான பெருமான் மங்குல் தோய் மணி மாடம், Mangul Thoi Mani Maadam - மேகமண்டலத்தை அளாவியிருக்கின்ற மணிமாடங்களிலே (கட்டின) வெண் கொடி, Ven Kodi - வெளுத்த த்வஜபடங்கள் மாகம் மீது, Maagam Meedhu - ஆகாசத்தின் மேலே உயர்ந்து ஏறி, Uyarnthu Eri - வியாபித்து வரன் உயர் திங்கள்தான், Varan Uyar Thingalthaan - மிகவுமுயரநின்ற சந்திரனை அணவும், Anavum - ஸ்பர்சிக்கப்பெற்ற திருக்கோட்டியூரான், Thirukkoottiyooran - திருக்கோட்டியூரிலுள்ளான். |
| 1843 | பெரிய திருமொழி || (9-10–எங்கள்) (திருக் கோட்டியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ராவணன் மிடுக்கை அழித்த ஸ்ரீ தசராத்மாஜன் இப்போது ஸ்ரீ திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனான் என்கிறார்) 6 | காவலன் இலங்கைக்கு இறை கலங்கச் சரம் செல உய்த்து மற்றவன்
ஏவலம் தவிர்த்தான் என்னை யாளுடை யெம்பிரான்
நாவலம் புவி மன்னர் வந்து வணங்க மாலுறைகின்றது இங்கு எனத்
தேவர் வந்து இறைஞ்சும் திருக் கோட்டியூரானே –9-10-6 | பதவுரை Show / Hideகாவலன், Kavalank - ‘நானே ஜகத்ரக்ஷகன்’ என்று அஹங்காரங்கொண்டிருந்த (- (எவ்விடத்திலுள்ளானென்னில்)) இலங்கைக்கு இறை, Ilangaikku Irai - லங்காதிபதியான இராவணன் கலங்க, Kalanga - முடியும்படியாக சரம், Saram - பாணங்களை அவன், Avaan - அவ்விராவணனுடைய ஏவலம், Evalam - பாணப்ரயோக ஸாமர்த்தியத்தை தவிர்த்தான், Thavirthaan - தொலைத்தவனும் என்னை ஆளுடை, Ennai Aaludai - என்னை அடிமைகொண்டருளினவனுமான எம்பிரான், Embiraan - எம்பெருமான் நாவலம் புவி மன்னர், Naavalam Puvi Mannar - ஜம்பூத்வீபத்திலுள்ள அரசர்கள் மால் இங்கு உறைகின்றது என வந்து, Maal Ingu Uraikindrathu En Vandu - ‘எம்பெருமான் இவ்விடத்தில் நித்யஸந்நிதி பண்ணியிருக்கிறான்’ என்று தெரிந்துவந்து வணங்க, Vananga - ஆச்ரயிக்க தேவர், Thevar - பிரமன் முதலிய தேவர்களும் வந்து இறைஞ்சும், Vandu Irainchum - வந்து வணங்கப்பெற்ற திருக்கோட்டி யூரான், Thirukkoatti Yooran - திருக்கோட்டியூரிலுள்ளான். |
| 1844 | பெரிய திருமொழி || (9-10–எங்கள்) (திருக் கோட்டியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கன்றாயும் விளாவாயும் வந்த அசூரர்களால் வரும் நலிவைப் போக்கி ஸ்ரீ கோவர்த்தன உத்தாரணம் பண்ணின மகா அபதானத்தை உடையவன் -இப்போது ஸ்ரீ திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனான் என்கிறார்) 7 | கன்று கொண்டு விளங்கனி எறிந்து ஆநிரைக்கு அழிவன்று மா மழை
நின்று காத்து உகந்தான் நில மா மகட்கு இனியான்
குன்றின் முல்லையின் வாசமும் குளிர் முல்லையின் மணமும் அளைந்து இளம்
தென்றல் வந்து உலவும் திருக் கோட்டியூரானே –9-10-7 | பதவுரை Show / Hideகன்று கொண்டு, Kandru Kondo - வத்ஸாஸுரனைக் கொண்டு விளங்கனி, Vilanganai - கபித்தாஸுரன் மீது எறிந்து, Erinthu - வீசியெறிந்து இரண்டையும் முடித்தவனும் ஆநிரைக்கு அழிவு என்று, Aaniraikku Azhivu Endru - பசுக்கூட்டத்திற்குத் தீங்கு வந்ததேயென்றுபரிந்து மா மழை, Maa Mazhai - பெருமழையை நின்று காத்து, Ninru Kaathu - நிலைநின்று தடுத்து உகந்தான், Uganthaan - திருவுள்ளமுவந்தவனும் நிலம் மா மகட்கு, Nilam Maa Makadkku - பூமிப்பிராட்டிக்கு இனியான், Iniyaan - போக்யனுமான எம்பெருமான் இள தென்றல், Ila Thenral - இளமைதங்கிய தென்றற்கொற்று குன்றின் முல்லையின் வாசமும், Kunrin Mullaiyin Vaasamum - மலைமுல்லைப்பூக்களின் பரிமளத்தையும் குளிர் மல்லிகை மணமும், Kulir Malligai Manamum - குளிர்ந்த கொடிமல்லிகையின் பரிமளத்தையும் அளைந்து, Alaindhu - முகந்துகொண்டு வந்து உலவும், Vandhu Ulavum - வந்து (வீதிகளில்) உலாவப்பெற்ற திருக்கோட்டியூரான், Thirukkoottiyooran - திருக்கோட்டியூரிலுள்ளான் |
| 1845 | பெரிய திருமொழி || (9-10–எங்கள்) (திருக் கோட்டியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (குருந்து தொடக்கமான விரோதி வர்க்கத்தைப் போக்கின ஸ்ரீ கிருஷ்ணன் -இப்போது ஸ்ரீ திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனான் என்கிறார்) 8 | பூங்குருந்து ஒசித்தானை காய்ந்த அரிமாச் செகுத்து அடியேனை ஆளுக
ஈங்கு என்னுள் புகுந்தான் இமையோர்கள் தம் பெருமான்
தூங்கு தண் பலவின் கனித்தொகு வாழையின் கனியொடு மாங்கனி
தேங்கு தண் புனல் சூழ்த் திருக் கோட்டியூரானே –9-10-8 | பதவுரை Show / Hideபூ, Poo - பூத்திருந்த குருந்து, Kurundhu - குருந்தமரத்தை ஒசித்து, Osiththu - முறித்துத் தள்ளினவனாயும் ஆனை, Aanaik - (குவலயாபீட மென்னும்) யானையை காய்ந்து, Kaayndhu - சீறிமுடித்தவனாயும் அரிமா, Arimaa - (கேசியென்னும்) குதிரையை செருத்து, Seruththu - கொன்றவனாயும் அடியேனை, Adiyenai - அடியேனை ஆள் உகந்து, Aal Ugandhu - ஆட்கொண்டருளத் திருவுள்ளமுவந்து ஈங்கு, Eengu - இந்த ஸம்ஸாரத்திலே என்னுள் புகுந்தான், Ennul Pugundhaan - என்னெஞ்சினுள்ளே புகுந்தருளினவனாயும் இமையோர்கள் தம் பெருமான், Imaiyorkal Tham Perumaan - நித்யஸூரிகளுக்குத் தலைவனாயுமுள்ள பெருமான் மாங்கனி, Maangani - மாம்பழங்கள் துங்கு, Thungu - (பழுத்துத்) தொங்குகின்ற தண், Than - அழகிய பலவின் கனி, Palavin Kani - பலாப்பழங்களோடும் தொகு வாழையின் கனியோடும், Thogu Vaalaiyin Kaniyodum - திரண்ட வாழைப்பழங்களோடுங்கூட தேங்கு, Thengu - (விழுந்து) தேங்கியிருக்கப்பெற்ற தண் புனல், Than Punal - குளிர்ந்த நீர்நிலங்களாலே சூழ், Sool - சூழப்பட்ட திருக்கோட்டியூரான், Thirukkoottiyooran - திருக்கோட்டியூரிலுள்ளான். |
| 1846 | பெரிய திருமொழி || (9-10–எங்கள்) (திருக் கோட்டியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தான் தன்னை சர்வ பிரகாரத்தாலும் அனுபவிக்கைக்கு ஈடான பக்தியை உடையராய் -ப்ரஹ்மாவோடு சமாநரான- ப்ராஹ்மணருக்கு ஆஸ்ரயநீயனாய் ஸ்ரீ திருக் கோட்டியூரிலே வந்து சந்நிஹிதன் ஆனான் என்கிறார்) 9 | கோவையின் தமிழ் பாடுவார் குடமாடுவார் தட மா மலர் மிசை
மேவு நான் முகனில் விளங்கு புரி நூலர்
மேவு நான் மறை வாணரை வகை வேள்வி ஆறங்கம் வல்லவர் தொழும்
தேவ தேவபிரான் திருக் கோட்டியூரானே –9-10-9 | பதவுரை Show / Hideகோவை இன் தமிழ், Kovai In Tamil - ஒழுங்குடைத்தான இனிய தமிழ்ப்பாசுரமாகிய இத்திருமொழியை பாடுவார், Paduvar - (விரும்பி ஆதரித்துப்) பாடக்கூடியவர்களும், குடம் ஆடுவார், Kudam Aaduvar - குடமெடுத்து ஆடுமாபோலே (ப்ரீதிக்குப்போக்கு வீடாக) நர்த்தனஞ் செய்பவர்களும் தட மா மலர் மிசை மேவு, Tada Maa Malar Misai Mevu - மிகப்பெரிய (திருநாபிக்) கமலத்தின்மீது பொருந்தியுள்ள நான் முகனில், Naan Mughanil - பிரமனிற்காட்டிலும் விளங்கு புரிநூலர், Vilangu Purinoolar - விளங்குகின்ற யஞ்ஞோப வீதத்தையுடையவர்களும் மேவு நால் மறை வாணர், Mevu Naal Marai Vaanar - நான்கு வேதங்களையும் விரும்பிக் கற்றவர்களும் ஐவகை வேள்வி, Aivagai Velvi - பஞ்சமஹாயஜ்ஞாநுஷ்டா நத்திலும் ஆறு அங்கம், Aaru Angam - வேதாங்கங்கள் ஆறையும் பயில்வதிலும் வல்லவர், Vallavar - ஸமர்த்தர்களுமான ஸ்ரீவைஷ்ணவர்கள் தொழும், Thozhum - வணங்கப்பெற்ற தேவதேவபிரான், Deva Deva Piraan - தேவாதிதேவன் திருக்கோட்டியூரான், Thirukkoottiyooran - திருக்கோட்டியூரிலுள்ளான் |
| 1847 | பெரிய திருமொழி || (9-10–எங்கள்) (திருக் கோட்டியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த இப்பத்தும் வல்லார்களுக்கு ஸ்ரீபரமபதமே வாசஸ் ஸ்தானம் என்கிறார்) 10 | ஆலுமா வலவன் கலிகன்றி மங்கையர் தலைவன் அணி பொழில்
சேல்கள் பாய் கழனித் திருக் கோட்டியூரானை
நீல மா முகில் வண்ணனை நெடுமாலை யின் தமிழால் நினைந்த விந்
நாலும் ஆறும் வல்லார்க்கு இடமாகும் வானுலகே –9-10-10 | பதவுரை Show / Hideஆலும் மா வலவன், Aalum Maa Valavan - ஆடல்செய்நின்ற குதிரையை ஏறிச்செலுத்துதலில் ஸமர்த்தரும் மங்கையர் தலைவன், Mangaiyar Thalaivan - திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவருமான கலிகன்றி, Kalikanri - ஆழ்வார், அணி யொழில், Ani Yozhil - அழகிய சோலைகளையும் சேல்கள் பாய் கழனி, Selgal Pai Kazhani - மீன்கள் துள்ளிவிளையாடுகின்ற கழனிகளையுமுடைத்தான திருக்கோட்டி யானை, Thirukkoatti Yaanai - திருக்கோட்டியூரில் எழுந்தருளியிருப்பவனும் முகில் வண்ணனை, Mugil Vannana - மேகம்போன்ற நிறத்தை யுடையவனும் நெடு மாலை, Nedu Maalai - (அடியார்திறத்தில்) அதிகமான வியாமோஹத்தை யுடையனுமான எம்பெருமானை இன் தமிழால், In Tamizhal - இனிய தமிழ்ப்பாசுரங்களைக் கொண்டு நினைத்த, Ninaiththa - சிந்தித்த இ நாலும் ஆறும், I Naalum Aarum - இப்பத்துப் பாசுரங்களையும் வல்லார்க்கு, Vallarkku - ஓதவல்லவர்களுக்கு வான் உலகு, Vaan Ulagu - பரமபதம் இடம் ஆகும், Idam Aakum - இருப்பிடமாகும் |