திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1768 | பெரிய திருமொழி || (9-3–தன்னை நைவிக்கிலேன்) (திரு புல்லாணி 1) - (தலைவனை பிரிந்த தலைவி ஆற்றாமை மிகுதியால் தலைவனிடம் செல்லத் துணிந்து நெஞ்சையும் தோழியையும் துணை வேண்டிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒரு ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகள் போல்வாருக்கு அன்றோ அவன் தானே வரும் அளவும் ஆறி இருக்கிறோம் என்று தரிக்கல் ஆவது பழையார் பாடாற்ற வல்லது புதியார் க்கும் ஆற்றப் போமோ ஆர் உயிர் பட்டது என் உயிர் பட்டது -என்னக் கடவது இறே அசாதாரணரான ஸ்ரீ நித்ய சூரிகளிலே ஸ்ரீ திருவடி ஸ்ரீ திரு வநந்த வாழ்வான் போல்வார் தான் பட்டார்களோ நான் பட்டபடி -என்கிறார் என்று ஆயிற்று – இதுக்கு ஸ்ரீ ஜீயர் அருளிச் செய்யும் படி –-இது தன்னை ஸ்ரீ ஆழ்வார் பாடா நிற்க ஸ்ரீ எம்பெருமானார் -அங்கு ஆர் உயிர் பட்டது இங்கே எனது உயிர் பட்டது -என்று அருளிச் செய்தார் – ஸ்ரீ ஆழ்வார் உடைய அனுபவத்தை யாகில் ப்ராப்யமாக சொல்லுகிறதும்-ஆசைப் படுகிறதும் அதுக்கு அவ்வருகே ஒரு ஏற்றம் சொல்லுவாரைப் போலே சொல்லுவான் என் என்று நான் ஸ்ரீ ஜீயரைக் கேட்க நாவோடையான ஸ்திரீக்கு பர்த்தாவின் உடைய கர ஸ்பர்சம் உண்டானால்-வேர்ப்பது விடுவது ஆமாபோலே அனுபவத்தில் புதுமையால் படுகிற அலமாப்பு காணும் என்று அருளிச் செய்தாராக ஸ்ரீ பிள்ளை அருளிச் செய்வர்) 1 | தன்னை நைவிக்கிலேன் வல்வினையேன் தொழுதும் எழு
பொன்னை நைவிக்கும் அப் பூஞ்செருந்தி மண நீழல் வாய்
என்னை நைவித்து எழில் கொண்டு அகன்ற பெருமான் இடம்
புன்னை முத்தம் பொழில் சூழ்ந்து அழகாய புல்லாணியே –9-3-1 | பதவுரை Show / Hideவல் வினையேன், Val Vinaiyen - கொடிய பாவத்தை யுடையேனான நான் தன்னை, Thannai - என்னை நைவிக்கில் என், Naivikkil En - சிதிலப்படுத்திக் கொள்வதனால் என்ன பயன்? பொன்னை நைவிக்கும், Ponnai Naivikkum - (பொன்னுருவத்தைத் தோற்கடிக்கவல்ல அப்பூ செருந்தி மணம் நீழல்வாய், Appoo Serunthi Manam Neelalvai - அப்படிப்பட்ட ஸுரபுன்னைப் பூக்களின் பரிமளமுள்ள நிழலிலே என்னை நைவித்து, Ennai Naiviththu - என்னை யீடுபடுத்தி எழில் கொண்டு, Ezhil Konda - (எனது) மேனிநிறத்தைக் கவர்ந்துகொண்டு அகன்ற, Akanra - பிரிந்துபோன பெருமான், Perumaan - எம்பெருமானுடைய இடம், Idam - இருப்பிடமாயும், முத்தம், Muththam - முத்தரும்பின புன்னை பொழில் சூழ்ந்து, Punnai Pozhil Soozhndhu - புன்னைமரச் சோலைகளாலே சூழப்பட்டு அழகாய, Azhagaya - அழகியதாயுமிருக்கிற புல்லாணி, Pullaani - திருப்புல்லாணியை தொழுதும், Thozhudum - வணங்குவோம், எழு, Ezhu - புறப்படு. |
| 1769 | பெரிய திருமொழி || (9-3–தன்னை நைவிக்கிலேன்) (திரு புல்லாணி 1) - (தலைவனை பிரிந்த தலைவி ஆற்றாமை மிகுதியால் தலைவனிடம் செல்லத் துணிந்து நெஞ்சையும் தோழியையும் துணை வேண்டிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அதனில் பெரிய என் அவா -என்னுமா போலே விபுத்வத்துக்கு அவ்வருகாம் படியாய் இருக்கை- அணு வஸ்து இறே விபு வஸ்துவை விளாக்குலை கொள்ளுகிறது – அப்படியே இருக்கும் இறே சங்கோசம் அற அவன் பண்ணிக் கொடுத்த வாறே – பிரிகிற தமக்கும் அது உண்டாகில் பிரியான் இறே-இன்னம் காதல் தானே பெருகி தலை மறிந்தது இல்லை) 2 | உருகி நெஞ்சே நினைந்து இங்கு இருந்தேன் தொழுதும் எழு
முருகு வண்டுண் மலர்க்கைதையின் நீழலில் முன்னொரு நாள்
பெருகு காதன்மை என்னுள்ளம் எய்தப் பிரிந்தான் இடம்
பொருது முந்நீர்க் கரைக்கே மணி யுந்து புல்லாணியே –9-3-2 | பதவுரை Show / Hideநெஞ்சே, Nenjee - மனமே! (- (பின்னை என்ன செய்யவேணுமென்கிறாயோ, கேள்;)) இங்கு இருந்து, Ingu Irundhu - இங்கேயிருந்துகொண்டு நினைந்து, Ninaindhu - சீந்தித்து உருகி, Urugi - உருகுவதனால் என்னபயன்? வண்டு, Vandu - வண்டுகள் முருகு உண், Murugu Un - தேனுண்ணப் பெற்ற மலர், Malar - பூவையுடைத்தான கைதையின், Kaithaiyin - தாழையினுடைய நீழலில், Neelalil - நிழலிலே முன் ஒருநாள், Mun Orunaal - முன்பொருநாள் என் உள்ளம், En Ullam - என்னெஞ்சானது பெருகு காதன்மை எய்த, Perugu Kaadhanmai Eydha - மிக்க ஆவல்கொள்ளும்படி பிரிந்தான், Pirindhaan - பிரிந்துபோன பெருமானுடைய இடம், Idam - இருப்பிடமாயும் முந்நீர், Munnir - கடவானது பொருது, Porudhu - அலையெறிந்து கரைக்கே, Karaikkai - கரையிலே மணி உந்து, Mani Unthu - ரத்னங்களைக் கொழித்துத் தள்ளுமிடமாயுமுள்ள புல்லாணி, Pullaani - திருப்புல்லாணியை தொழுதும், Thozhudum - சென்றுவணங்குவோம்; எழு, Ezhu - எழுந்திரு |
| 1770 | பெரிய திருமொழி || (9-3–தன்னை நைவிக்கிலேன்) (திரு புல்லாணி 1) - (தலைவனை பிரிந்த தலைவி ஆற்றாமை மிகுதியால் தலைவனிடம் செல்லத் துணிந்து நெஞ்சையும் தோழியையும் துணை வேண்டிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நினைக்க ஒண்ணாமை அன்றிக்கே மறக்க ஒண்ணாது -என்கிறது) 3 | ஏது செய்தால் மறக்கேன் மனமே தொழுதும் எழு
தாது மல்கு தடம் சூழ் பொழில் தாழ்வார் தொடர்ந்து பின்
பேதை நின்னைப் பிரியேன் இனி என்று அகன்றான் இடம்
போது நாளும் கமழும் பொழில் சூழ்ந்த புல்லாணியே –9-3-3 | பதவுரை Show / Hideமனமே, Maname - நெஞ்சமே! (- (ஒருவகையாலும் மறக்கமுடிய வில்லையே!;)) ஏது செய்தால், Aethu Seithal - என்னகாரியஞ் செய்தால் மறக்கேன், Marakken - (பெருமானை) மறந்தவளாவேன்? தாது மல்கு, Thadu Malku - பூந்தாதுகள் நிறைந்த தடம் சூழ், Thadam Soozh - தடாகங்களாற் சூழப்பட்ட பொழில், Pozhil - சோலைகளினுடைய தாழ்வர், Thazhvar - பர்யந்தங்களிலே தொடர்ந்து, Thodarnthu - (என்னைத்) தொடர்ந்து கொண்டு பேதை, Pethai - “பேதாய்! இனி பின், Ini Pin - இனிமேல் நின்னை, Ninnai - உன்னை பிரியேன், Priyeen - (ஒருநாளும்) பிரியமாட்டேன்; என்று சொல்லிவைத்து அகன்றான், Akanraan - பிரிந்துபோன பெருமானுடைய இடம், Idam - இருப்பிடமாயும், நாளும் போது கமழும், Naalum Podhu Kamazhum - எப்போதும் பூக்கள் மணநாறப் பெற்ற பொழில் சூழ்ந்த, Pozhil Soozhntha - சோலைகளாற் சூழப்பட்ட புல்லாணி, Pullaani - திருப்புல்லாணியை தொழுதும் எழு, Thozhudhum Ezhuthu - வணங்குவோம் வா. |
| 1771 | பெரிய திருமொழி || (9-3–தன்னை நைவிக்கிலேன்) (திரு புல்லாணி 1) - (தலைவனை பிரிந்த தலைவி ஆற்றாமை மிகுதியால் தலைவனிடம் செல்லத் துணிந்து நெஞ்சையும் தோழியையும் துணை வேண்டிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் நித்ய வாஸம் பண்ணும் இடத்தில் ஆர்த்தர் இல்லை இறே – ஆர்த்தர்க்கு உத்தேச்யம் சென்று பெற வேண்டாதே இருந்த இடத்தே கொடு வந்து தள்ளும் தேசம் ஆயிற்று – பாவியேன் -அத்தேசத்தின் படி அவனுக்கும் உண்டாகப் பெற்றிலோமே) 4 | கொங்குண் வண்டே கரியாக வந்தான் கொடியேற்கு முன்
நங்கள் ஈசன் நமக்கே பணித்த மொழி செய்திலன்
மங்கை நல்லாய் தொழுதும் எழு போயவன் மன்னுமூர்
பொங்கு முந்நீர்க் கரைக்கே மணி யுந்து புல்லாணியே –9-3-4 | பதவுரை Show / Hideநல் மங்காய், Nal Mangai - உயிர்த்தோழியே!, (- (ஆதலால்) (போய் தொழுதும் எழு)) கொங்கு உண்டே கரி ஆக, Kongu Unde Kari Aaga - தேனுண்கிறவண்டு ஒன்றே ஸாக்ஷியாக (பிறரொருவருமறியாதபடி) கொடியேற்கு வந்தான், Kodiyerku Vandhaan - பாலியான என்பக்கல் விக்கு) வந்தனான நங்கள் ஈசன், Nangal Eesan - எம்பெருமான் முன், Mun - முன்பு நமக்கே பணித்த, Namakke Panitha - நமக்குச் சொல்லி வைத்த மொழி, Mozhi - சொற்படி செயிதிலன், Seyithilan - நடத்தவில்லை; அவன் மன்னும் ஊர், Avan Mannum Oor - அப்பெருமான் பொருந்தி வாழுமிடமாயும் பொங்கு முந்நீர், Pongu Munnir - அலைமோதுகின்ற கடலானது கரைக்கே, Karaikkai - கரையோரத்திலே மணி உந்து, Mani Unthu - ரத்னங்களைக் கொழித்துத்தள் ளுமிடமாயுமுள்ள புல்லாணி, Pullaani - திருப்புல்லாணியை |
| 1772 | பெரிய திருமொழி || (9-3–தன்னை நைவிக்கிலேன்) (திரு புல்லாணி 1) - (தலைவனை பிரிந்த தலைவி ஆற்றாமை மிகுதியால் தலைவனிடம் செல்லத் துணிந்து நெஞ்சையும் தோழியையும் துணை வேண்டிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கீழே மறக்க ஒண்ணாது என்றது இறே-இங்கே நினைக்க ஒண்ணாது என்கிறது – மறத்தல் நினைத்தால் இரண்டாய் இறே இருப்பது-அவை இரண்டும் அரிதாக நின்றது உணரில் -உள்ளம் சுடுமால்–என்கிறது வருந்தி நினைக்கில் என்கிறது இல்லை நினைந்தவாறே நெஞ்சு சுடா நின்றது என்கை) 5 | உணரில் உள்ளம் சுடுமால் வினையேன் தொழுதும் எழு
துணரி நாழல் நறும் போது நம் சூழ் குழல் பெய்து பின்
தணரிலாவி தளரும் என வன்பு தந்தானிடம்
புணரி யோதம் பணில மணி யுந்து புல்லாணியே –9-3-5 | பதவுரை Show / Hideவினையேன், Vinaiyen - பாவியான நான் (- (தோழீ!) தொழுதும் எழு-;) உணரில், Unaril - நினைத்தமாத்திரத்தில் உள்ளம் சுடும், Ullam Sudum - நெஞ்சு வேம்; ஆல், Aal - அந்தோ! ; துணரின் நாழல் ஈறு போது, Thunarin Naazhal Eeru Podhu - பூங்கொத்துக்களை யுடைத்தான நாழலின் மணம் மிக்க புஷ்பங்களை நம் சூழல், Nam Soozhal - நமது பரந்த கூந்தலிலே பெய்து, Peidhu - சூட்டி பின் தணரில் ஆவிதளரும் என அன்பு தந்தான், Pin Thanaril Aavithalarum Ena Anbu Thandhan - ;இனி விட்டுப் பிரிந்தால் உயிர் தடுமாறிப் போகும்; என்னும்படியான அன்பைக் கொண்டிருந்து (விட்டுப் பிரிந்த) பெருமானுடைய இடம், Idam - உறைவிடமாயும் புணரி ஓதம், Punari Otham - கடலலைகளானவை பணிலம், Panilam - சங்குகளையும் மணி, Mani - ரத்னங்களையும் உந்து, Undhu - ஒதுக்கித் தள்ளுமிடமாயுள்ள புல்லாணி, Pullaani - திருப்புல்லாணியை |
| 1773 | பெரிய திருமொழி || (9-3–தன்னை நைவிக்கிலேன்) (திரு புல்லாணி 1) - (தலைவனை பிரிந்த தலைவி ஆற்றாமை மிகுதியால் தலைவனிடம் செல்லத் துணிந்து நெஞ்சையும் தோழியையும் துணை வேண்டிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் நித்ய வாஸம் பண்ணாத இடத்தில் நினைக்கவும் அரிது அவன் நித்ய வாஸம் பண்ணும் இடத்தில் காயிக வியாபாரமும் பண்ணக் குறை இல்லை – வள்ளல் –சம்ஸ்லேஷ சமயத்தில் தன்னை எனக்கு சர்வ ஸ்வாதானம் பண்ணினவன் – மாயன் – இப்போது முறை கெட்டுத் தான் இருந்த இடத்தே செல்ல வேண்டும்படி அப்போது அப்படி பரிமாறினவன் மணி வண்ணன் – இவை ஒன்றுமே இல்லை யாகிலும் விட ஒண்ணாத படியான வடிவு அழகை உடையவன் – எம்மான் –அவ் வடிவு அழகை காட்டி என்னை அனந்யார்ஹனாக எழுதிக் கொண்டவன்) 6 | எள்கி நெஞ்சே நினைந்து இங்கு இருந்தென் தொழுதும் எழு
வள்ளல் மாயன் மணி வண்ணன் எம்மான் மருவும் இடம்
கள்ளவிழும் மலர்க்காவியும் தூ மடல் கைதையும்
புள்ளும் அள்ளல் பழனங்களும் சூழ்ந்த புல்லாணியே –9-3-6 | பதவுரை Show / Hideநெஞ்சே, Nenjee - மனமே! நினைந்து, Ninaindhu - (அவனைச்) சிந்தித்து எள்கி, Elgi - ஈடுபட்டு இங்கு இருந்து என், Ingu Irundhu En - இங்கேயிருப்பதனால் என்ன பலன்? வள்ளல், Vallal - உதாரனும் மாயன், Maayan - ஆச்சர்யச் செய்கைகளையுடை யவனும் மணிவண்ணன், Manivannan - நீலமணிபோன்ற நிறமுடையவனுமான எம்மான், Emman - எம்பெருமான் மருவும் இடம், Maruvum Idam - விரும்பியுறையுமிடமாயும், கள் அவிழும் மலர்காவியும், Kal Avizhum Malarkaaviyum - மது ஒழுகுகின்ற மலர்களையுடைய செங்கழுநீர்களும் தூ மடல் கைதையும், Thoo Madal Kaithaiyum - வெளுத்தமடல் களையுடைய தாழைகளும் புள்ளும், Pullum - பலவகையான பறவைகளும் அள்ளல் பழனங்களும், Allal Pazhanangalum - சேறுமிக்க வயல்களும் சூழ்ந்த, Soozhndha - சூழ்ந்திருக்கப் பெற்றதாயுமுள்ள புல்லாணி, Pullaani - திருப்புல்லாணியை தொழுதும் எழு, Thozhudhum Ezhuthu - தொழுவோம் வா, |
| 1774 | பெரிய திருமொழி || (9-3–தன்னை நைவிக்கிலேன்) (திரு புல்லாணி 1) - (தலைவனை பிரிந்த தலைவி ஆற்றாமை மிகுதியால் தலைவனிடம் செல்லத் துணிந்து நெஞ்சையும் தோழியையும் துணை வேண்டிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் ருசி முன்னாக -இத்தலை ருசி பண்ணும் அன்று இறே பலத்தோடே வ்யாப்தம் ஆவது – அவனுடைய ருசி இறே பேற்றுக்கு உடலாக தலைக் கட்டுவது – இவனுடைய ருசி அவனுடைய விரகத்துக்கு உடலாம் இத்தனை இறே) 7 | பரவி நெஞ்சே தொழுதும் எழு போயவன் பாலமாய்
இரவு நாளும் இனிக் கண் துயிலாது இருந்து என் பயன்
விரவி முத்தம் நெடு வெண் மணல் மேற்கொண்டு வெண் திரை
புரவி என்னப் புதம் செய்து வந்து யுந்து புல்லாணியே –9-3-7 | பதவுரை Show / Hideநெஞ்சே, Nenjee - மனமே! இனி, Ini - இப்போது இரவும் நாளும், Iravum Naalum - இரவும் பகலும் கண்துயிலாது இருந்து என்பயன், Kanthuyilaadhu Irundhu Enpayan - (கண்ணுறங்கா திருப்பதனால் என்ன பயன்? முத்தம், Muththam - முத்துக்களோடே விரவி, Viravi - கலந்து நெடு வெண்மணல், Nedu Venmanal - அதிகமான வெண்மணற்களை மேல் கொண்டு, Mel Kondu - மேலே எறட்டிக்கொண்டு வந்து வெண் திரை, Ven Thirai - வெளுத்த அலைகள் புரவி என்ன, Puravi Enna - குதிரை போல புதம் செய்துவந்து, Pudham Seithuvandu - தாவிக்கொண்டு வந்து தள்ளுமிடமான புல்லாணி, Pullaani - திருப்புல்லாணியிலே அவன் பாலம் ஆய் போய், Avan Paalam Aay Poi - அவ்வெம்பெருமான் பக்கல்ஈடு பட்டோமாய்ச் சென்று பரவி தொழுதும், Paravi Thozhudum - துதிந்து வணங்குவோம் வா, எழு |
| 1775 | பெரிய திருமொழி || (9-3–தன்னை நைவிக்கிலேன்) (திரு புல்லாணி 1) - (தலைவனை பிரிந்த தலைவி ஆற்றாமை மிகுதியால் தலைவனிடம் செல்லத் துணிந்து நெஞ்சையும் தோழியையும் துணை வேண்டிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நிர பேஷரான இவர் ஓர் அபலை இறே -என்று பாராதே நமக்கு ஸ்நேஹிப்பாரைப் போலே சலத்தைப் பண்ணினார் ஆயிற்று) 8 | அலமும் ஆழிப் படையும் உடையார் நமக்கு அன்பராய்ச்
சாலமதாகித் தகவொன்றிலர் நாம் தொழுதும் எழு
உலவு கானல் கழி யோங்கு தண் பைம்பொழி லூடிசை
புலவு கானல் கழி வண்டினம் பாடு புல்லாணியே –9-3-8 | பதவுரை Show / Hideஅலமும் ஆழிபடையும் உடையார், Alamum Aazhipadaiyum Udaiyaar - காலப்பையும சக்கரமுமாகிற திவ்யாயுதங்களை யுடையரான பெருமான் (- (அவர் அப்படியிருந்தாலும்) (நெஞ்சே!) நாம் தொழுதும் எழு) நமக்கு, Namakku - நம் விஷயத்திலே அன்பர் ஆய், Anbar Aay - அன்புடையவர் போன்றவராய் சலம் அது ஆகி, Salam Adhu Aagi - கபடத்தையுடையவராகி தகவு ஒன்று இலர், Thagavu Ondru Ilan - சிறிதும் இரக்கமில்லாதவரா யிருக்கின்றார் உலவு கால், Ulavuk Kaal - உலாகின்ற தென்றல் காற்றையுடைய நல் கழி, Nal Kazhi - நல்ல கழிகளிலே ஓங்கு தண் பை பொழிலூடு, Ongu Than Pai Pozhiloodu - உயர்ந்து குளிர்ந்து பரந்த சோலைகளிடத்தே புலவு கானல் களிவண்டு இனம், Pulavu Kaanal Kalivandu Inam - புலால் நாற்றம் நாறுகின்ற கடற்கரைச் சோலைகளிலுள்ள களிவண்டுகளின் கூட்டமானது இசை பாடு, Isai Paadu - இசைபாடப்பெற்ற புல்வாணி, Pulvaani - திருப்புல்லாணியை |
| 1776 | பெரிய திருமொழி || (9-3–தன்னை நைவிக்கிலேன்) (திரு புல்லாணி 1) - (தலைவனை பிரிந்த தலைவி ஆற்றாமை மிகுதியால் தலைவனிடம் செல்லத் துணிந்து நெஞ்சையும் தோழியையும் துணை வேண்டிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (செய்யக் கடவது அல்லாதன எல்லாம் செய்து பெறக் கடவோம் புருஷார்த்தம் -ஸ்வ யத்ன சாத்தியம் என்று இருப்பார் படுவது எல்லாம் படக் கடவோம்) 9 | ஓதி நாமம் குளித்து உச்சி தன்னால் ஓளி மா மலர்ப்
பாத நாளும் பணிவோம் நமக்கே நலமாத லில்
ஆது தாரான் எனிலும் தரும் அன்றியும் அன்பராய்ப்
போதுமாதே தொழுதும் அவன் மன்னு புல்லாணியே –9-3-9 | பதவுரை Show / Hideமாதே, Maadhe - தோழிப்பெண்ணே,! (- (நாம்)) நமக்கே நலம் ஆதலில், Namakke Nalam Aadhalin - நமக்கே புருஷார்த்தமாதலால் குளித்து, Kulithu - ஸ்நாநம்பண்ணி நாமம் ஓதி, Naamam Oadhi - (பிரானுடைய) திருநாமங்களை ஓதி ஒளி மா மலர்பதம், Oli Maa Malarpadham - ஒளிபொருந்திய சிறந்த திருவடிவத் தாமரைகளை உச்சிதன்னால், Uchithannal - தலையினால் நாளும் பணிவோம், Naalum Panivom - நாள்தோறும் தொழக் கடவோம்; ஆது தாரான் எனிலும், Aadhu Tharaan Enilum - (அப்பிரான் ஒன்றும் தரமாட்டானேலும் தரும், Tharum - தந்திடுவன்; அன்றியும், Andriyum - தரினும் தாராதொழியினும் அன்பராய், Anbarai - பக்தராய் அவன் மன்னு புல்வாணியே, Avan Mannu Pulvaaniye - அவன் பொருந்தி வாழும் திருப்புல்லாணியையே தொழுதும், Thozhudum - தொழுவோம், போது, Podhu - வா. |
| 1777 | பெரிய திருமொழி || (9-3–தன்னை நைவிக்கிலேன்) (திரு புல்லாணி 1) - (தலைவனை பிரிந்த தலைவி ஆற்றாமை மிகுதியால் தலைவனிடம் செல்லத் துணிந்து நெஞ்சையும் தோழியையும் துணை வேண்டிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்பத்து பாட்டையும் அதிகரிக்கவுமாம் அன்றிக்கே ஒரு பாட்டை அதிகரிக்கவுமாம் அதில் அர்த்தானுசந்தானம் பண்ணவுமாம் அதில் இசையை அப்யசிக்கவுமாம் – இவ்விசை தன்னை ஒருவன் பாடா நின்றால் அதில் அசஹமானனாம் அதன்றிக்கே ஒழியுமுமாம் – ஏதேனும் ஒரு ஆகாரத்தில் அந்வயமே வேண்டுவது – அவர்களுக்கு வாசஸ் ஸ்தான தேசம் -துக்க கந்த ரஹீதமான நித்ய விபூதியே இத்தை இங்கே அப்யசிக்க அவர்கள் இங்குத்தை தனிமை தீர அர்ச்சிராதி மார்க்கமே அங்குள்ளார் கொண்டாடப் போய் நித்ய விபூதியிலே புக்கு நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்) 10 | இலங்கு முத்தும் பவளக் கொழுந்தும் எழில் தாமரைப்
புலங்கள் முற்றும் பொழில் சூழ்ந்து அழகிய புல்லாணி மேல்
கலங்கல் இல்லாப் புகழான் கலியன் ஒலி மாலை
வலம் கொள் தொண்டர்க்கு இடமாவது பாடல் வைகுந்தமே –9-3-10 | பதவுரை Show / Hideஇலங்கு முத்தும், Ilangu Muthum - விளங்குகின்ற முத்துக்களையும் பவளம் கொழுந்தும், Pavalam Kozhundum - பவளத்துளிர்களையும் எழில் தாமரை, Ezhil Thamarai - அழகிய தாமரைகளையு முடைத்தாய் புலங்கள் முற்றும், Pulangal Mutrum - உள்ள இடங்கள் முழுதும் பொழில் சூழ்ந்து, Pozhil Soozhndu - சோலைகளால் சூழப்பட்டதாய் அழகு ஆய, Azhagu Aaya - அழகியதான புல்லாணி மேல், Pullaani Mael - திருப்புல்லாணிவிஷமாக, கலங்கல் இல்வா புகழான், Kalangal Ilvaa Pugazhaan - கலக்கமற்ற கீர்த்தியையுடைய வரான கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார் ஒலி, Oli - அருளிச் செய்த மாலை, Maala - சொல்மாலையாகிய இத்திரு மொழியை வலங்கொள் தொண்டர்க்கு, Valangol Thondarkku - அதிகரிக்கின்ற பாகவதர்களுக்கு இடம் ஆவது, Idam Aavadhu - இருப்பிடமாவது (எவ்விடமென்றால்) பாடு இல்லைகுந்தம், Paadu Illaikundham - ஒரு துன்பமுமில்லாத ஸ்ரீவைகுண்டமே. |