திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1778 | பெரிய திருமொழி || (9-4–காவார்) (திரு புல்லாணி 2) - (பிரிவு ஆற்றாத தலைவி பறவைகளைத் தூது விட்டும் பிறை தென்றல் முதலியவற்றால் வருந்தியும் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிரிந்த நிலத்தில் இருக்க ஒண்ணாது ஒழிவது போகத் தொடங்கின தேசத்திலே போய்ப் புக ஒண்ணாது ஒழிவது நம் தசை இருந்த படி -என் -என்கிறாள்) 1 | காவார் மடல் பெண்ணை அன்றில் அரி குரலும்
ஏவாயின் ஊடு இயங்கும் எக்கில் கொடிதாலோ
பூவார் மணம் கமழும் புல்லாணி கை தொழுதேன்
பாவாய் இது நமக்கோர் பான்மையே யாகாதே –9-4-1 | பதவுரை Show / Hideகா ஆர்மடல், Kaa Aarmadal - சோலையெங்கும் நிறைந்த மடலையுடைய பெண்ணை, Pennai - பனைமரத்திலுள்ள அன்றில், Anril - அன்றிற்பறவையினுடைய அரி குரலும், Ari Kuralum - தழுதழுத்த த்வநியும் எவாயினுடு இயங்கும் எஃகின், Evayinudu Iyankum Eghin - அம்புபட்ட புண்வாயில் வ்யா பரிக்கின்ற வேற்படையிற் காட்டிலும் கொடிது, Kodithu - கொடியதாயிருக்கின்றது; ஆல் ஓ, Aal O - ஐயோ!; |
| 1779 | பெரிய திருமொழி || (9-4–காவார்) (திரு புல்லாணி 2) - (பிரிவு ஆற்றாத தலைவி பறவைகளைத் தூது விட்டும் பிறை தென்றல் முதலியவற்றால் வருந்தியும் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நோவு படுகை நமக்கே ஸ்வ பாவமாய் விட்டது என்று ஒரு வார்த்தை சொல்லி பின்பு பேசாதே இருக்கும் பிரகிருதி அன்றே – தான் இருக்கிற இடத்தே வர்த்திக்கிற சில பஷிகளை தூது விடுகிறாளாயிற்று சுலபன் அல்லாதவனை ஆசைப் பட்டு உடம்பு வெளுத்து இருக்கிறேனோ அது தான் பரத்வம் என்னும் படி இருக்கிற இடத்தே என் தசையை அறிவுயுங்கள் -என்கிறாள்) 2 | முன்னம் குறளுருவாய் மூவடி மண் கொண்டளந்த
மன்னன் சரிதைக்கே மாலகிப் பொன் பயந்தேன்
பொன்னங்கழிக் கானல் புள்ளினங்காள் புல்லாணி
அன்னமாய் நூல் பயந்தார்க்கு ஆங்கு இதனைச் செப்புமினே –9-4-2 | பதவுரை Show / Hideபொன்னங் கழி கானல், Ponnang Kazhi Kaanal - பொன்னங்கழி யென்கிற கடற் கரைநிலங்களிலுள்ள புள் இனங்கள், Pul Inangal - பறவையினங்களே!, முன்னம், Munnam - முன்பொருகால் குறள் உரு ஆய், Kural Uru Aayi - வாமநரூபியாகி (மாவலிபக்கல்) மூ அடி மண்கொண்டு, Moo Adi Mankondru - மூவடிநிலத்தை இரந்து பெற்று அளந்த, Alandha - (மூவுலகையும்) அளந்து கொண்ட மன்னன், Mannan - தேவாதிதேவனுடைய செயலுக்கே மால் ஆகி, Maal Aagi - நான் வியாமோஹ மடைந்த வளாகி பொன் பயந்தேன், Pon Payandhen - நிறவேறுபாடு அடைந்தவளானேன்; இதனை, Idhanai - எனது இந்த நிலைமையை புல்லாணி ஆங்கு, Pullaani Aangu - திருப்புல்லாணியென்கிற அவ்விடத்திலே சென்று, அன்னம் ஆய் நூல் பயந்தாற்கு, Annam Aayi Nool Payandhaarku - ஹம்ஸரூபியாய் வேதசாஸ்த்ரங்களை உபகரித்தபெருமானுக்கு செப்புமின், Seppumin - சொல்லுங்கள். |
| 1780 | பெரிய திருமொழி || (9-4–காவார்) (திரு புல்லாணி 2) - (பிரிவு ஆற்றாத தலைவி பறவைகளைத் தூது விட்டும் பிறை தென்றல் முதலியவற்றால் வருந்தியும் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கீழே என்னுடைய உடம்பில் நோவை அறிவியுங்கோள் என்றாள் இங்கு என்னுடைய சிந்தா வ்யதையை அறிவியுங்கோள் -என்கிறாள்) 3 | வவ்வித் துழாயதன் மேல் சென்ற தனி நெஞ்சம்
செவ்வியறியாது நிற்கும் கொல் நித்திலங்கள்
பவ்வத்திரை யுலவு புல்லாணி கை தொழுதேன்
தெய்வச் சிலையார்க்கு என் சிந்தை நோய் செப்புமினே –9-4-3 | பதவுரை Show / Hideதுழாய்அதன் மேல் வவ்லி, Thuzhai Adhan Mel Vavli - (தலைவனது) திருத்துழாய் மாலையைப் பற்றிக்கொண்டு சென்ற, Sendra - புறப்பட்டுப் போன, தனி நெஞ்சம், Thani Nenjam - (எனது) தனிப்பட்டமனமானது செவ்லி அறியாது நிற்கும் கொல், Sevli Ariyaadhu Nirkkum Kol - முறையறியாமல் (அவ்விடத்தே) தாமதித்திருக்குமோ? பவ்வம் திரை, Pavvam Thirai - கடலலைகளில் நித்திலங்கள் உலவு, Niththilangal Ulavu - முத்துக்கள் உலாவப்பெற்ற புல்லாணி, Pullaani - திருப்புல்லாணியை கைதொழுதேன், Kaithozhuthen - கையெடுத்துத் தொழுதவளான என், En - என்னுடைய சிந்தை நோய், Sindhai Noi - மநோவியாதியை தெய்வம் சிலையாற்கு, Deivam Silaiyarku - திவ்யமான வில்லையுடைய ரானபெருமாளுக்கு செப்புமின், Seppumin - (பறவைகளே!) சொல்லுங்கள். |
| 1781 | பெரிய திருமொழி || (9-4–காவார்) (திரு புல்லாணி 2) - (பிரிவு ஆற்றாத தலைவி பறவைகளைத் தூது விட்டும் பிறை தென்றல் முதலியவற்றால் வருந்தியும் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒரு பாலனுக்கு தமப்பன் பகையாக உதவிக் கார்யம் செய்தவன் அபலைக்குத் தன்னைப் பெறாமையாலே வந்த வ்யசனத்துக்கு வாசி வைத்து உதவின படி காண் –என் உடம்பிலே கண்ண நீரையும் உண்டாம் படி பண்ணினான்) 4 | பரிய விரணியதாக மணி யுகிரால்
அரியுருவாய்க் கீண்டான் அருள் தந்தவா நமக்குப்
பொரு திரைகள் போந்துலவு புல்லாணி கை தொழுதேன்
அரி மலர்க் கண்ணீர் ததும்ப வந்துகிலும் நில்லாவே –9-4-4 | பதவுரை Show / Hideபரிய, Pariya - பருத்த இரணியானது, Iraniyanathu - இரணியாசுரனுடைய ஆகம், Aagam - மார்பை அரி உரு ஆய், Ari Uru Aay - நரஸிம்ஹ ரூபியாய் அணி உகிரால், Ani Ukiraal - அழகிய நகங்களாலே கீண்டான், Keendaan - கிழித்தொழித்த பெருமான் நம்விஷயத்திலே அருள் தந்த ஆ, Arul Thanda Aa - கிருபைபண்ணின விதம் என்னே!; பொரு திரைகள், Poru Thiraigal - ஒன்றின்மேலொன்றாக ஏறித் துவருகிற அலைகள் போந்து உலவு, Pondhu Ulavu - கிட்டவந்து உலாவப் பெற்ற புல்லாணி, Pullaani - திருப்புல்லாணியை கைதொழுதேன், Kaithozhuthen - தொழுதவளான என்னுடைய அரி மலர்கண், Ari Malarkann - வண்டுபடிந்த பூப்போன்ற கண்களின்று நீர்ததும்ப, Neerthadum - நீர்தளும்ப அம் துகிலும், Am Thugilum - அழகிய வஸ்த்ரமும் நில்லா, Nilla - அரையில் தங்குகின்றதில்லை. |
| 1782 | பெரிய திருமொழி || (9-4–காவார்) (திரு புல்லாணி 2) - (பிரிவு ஆற்றாத தலைவி பறவைகளைத் தூது விட்டும் பிறை தென்றல் முதலியவற்றால் வருந்தியும் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவளுடைய பந்துக்கள் அடைய திரண்டு நாங்கள் சொன்ன வார்த்தை கேளாதே அவன் வார்த்தை கேட்டாய் இறே- நாங்கள் சொன்னதுவே மெய்யாய்-அவன் சொன்ன வார்த்தை பொய்யான படி கண்டாயே – இனி நாங்கள் சொன்னத்தை கேட்க வல்லையே என்ன அப்படியே செய்கிறோம் -அவன் பின் போன நெஞ்சை மீட்டால் -என்கிறாள்) 5 | வில்லாலிலங்கை மலங்கச் சரம் துரந்த
வல்லாளன் பின் போன நெஞ்சம் வருமளவும்
எல்லாரு மென் றன்னை யேசிலும் பேசிடினும்
புல்லாணி யெம்பெருமான் பொய் கேட்டிருந்தேனே –9-4-5 | பதவுரை Show / Hideஇலங்கை, Ilankai - லங்காபுரியானது மலங்க, Malanga - நலங்கியழியும்படியாக வில்லால், Villal - சார்ங்கத்தாலே சரம், Saram - அம்புகளை துரந்த, Durandha - பொழிந்த வல்லாளன் பின், Vallalan Pin - மஹாவீரரான பெருமாள் பின்னே போன, Pona - சென்ற நெஞ்சம், Nenjam - மனமானது வரும் அளவும், Varum Alavum - மீண்டுவருகிறவரையில், எல்லாரும், Ellarum - தோழிமார்தாய்மார் முதலிய அனைவரும் என் தன்னை, En Thannai - என்னை ஏசிலும், Esilum - பழித்தாலும் பேசிடினும், Pesidinum - (கண்டித்துச்) சொன்னாலும் (ஒன்றுக்கும் மீளாதபடி) புல்லாணி எம்பெருமான், Pullani Emperuman - திருப்புல்லாணி யெம்பெருமானுடைய பொய், Poi - பொய்யுரைகளை கேட்டு இருந்தேன், Kettu Irundhen - நம்பித்தரித்திருக்கின்றேன். |
| 1783 | பெரிய திருமொழி || (9-4–காவார்) (திரு புல்லாணி 2) - (பிரிவு ஆற்றாத தலைவி பறவைகளைத் தூது விட்டும் பிறை தென்றல் முதலியவற்றால் வருந்தியும் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நமக்கு ஆஸ்வாசத்தை பண்ணக் கடவனானவன் போய்க் கொடு நின்றான்-நலிவார் பெருத்திரா நின்றது அனுபவிக்கலான நிலத்திலே போய்ப் புகப் பெற்றிலோம்-இங்குள்ளவையும் நம்மை விட்டுப் போகா நின்றது -என்கிறாள்) 6 | சுழன்று இலங்கு வெங்கதிரோன் தேரோடும் போய் மறைந்தான்
அழன்று கொடிதாகி யஞ்சுடரில் தான் அடுமால்
செழுந்தடம் பூஞ்சோலை சூழ் புல்லாணி கை தொழுதேன்
இழந்து இருந்தேன் என்தன் எழில் நிறமும் சங்குமே –9-4-6 | பதவுரை Show / Hideசுழன்று இலங்கு வெம் கதிரோன், Suzhandru Ilangu Vem Kathiron - (மேருமலையைச்) சுற்றி வந்துகொண்டு பிரகாசிக்கின்ற ஸூரியன் தேரோடும் போய் மறைந்தான், Therodum Poi Marainthaan - தனது தேரோடே சென்று அஸ்தமித்தான்; அம்சுடரோன் தான், Amsudharon Thaan - அழகிய கிரணங்களையுடைய சந்திரனோ வென்றால் அழன்று கொடிது ஆகி, Azhandru Kodithu Aagi - மிகவும் தீக்ஷ்ணனாய்க் கொண்டு அடும், Adum - தஹிக்கின்றான், ஆல், Aal - அந்தோ! செழு, Sezhu - செழுமைதங்கிய தடம், Thadam - தடங்களாலும் பூ சோலை, Poo Cholai - பூஞ்சோலைகளாலும் சூழ், Sool - சூழப்பட்ட புல்லாணி, Pullaani - திருப்புல்லாணியை கைதொழுதேன், Kaithozhuthen - கைதொழுத யான் என்தன் எழில்நிற மும், Enthan Ezhilnira Mum - எனது அழகிய நிறத்தையும் சங்கும், Sangum - வளைகளையும் இழந்திருந்தேன், Izhandhirundhen - இழந்து விட்டேன் |
| 1784 | பெரிய திருமொழி || (9-4–காவார்) (திரு புல்லாணி 2) - (பிரிவு ஆற்றாத தலைவி பறவைகளைத் தூது விட்டும் பிறை தென்றல் முதலியவற்றால் வருந்தியும் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சௌபரி ஐம்பது வடிவு கொண்டு புஜித்தால் போலே ரத்னங்களால் பண்ணப் பட்ட மாடங்கள் தோறும் தானும் அவனுமாய் அனுபவிக்கக் காணும் கோலிற்று – அது எல்லாம் செய்து சமைந்தேன் – அப்ராப்யத்தை ஆசைப் படும்படியான பாபத்தை பண்ணின என் மேலே – வேலையும் வெந்தழலே வீசுமே —இந்த த்வனிக்கு சேஷித்தது உண்டாகா கொண்டு பிரமியா நின்று இவள் தன் விரஹ அக்னி தன் மேல் படாத படி கடக்க நின்று வீசா நின்றதாயிற்று) 7 | கனை ஆர் இடி குரலின் கார் மணியின் நா வாடல்
தினை யேனும் நில்லாது தீயில் கொடிதாலோ
புனையார் மணி மாடப் புல்லாணி கை தொழுதேன்
வினையேன் மேல் வேலையும் வெந்தழலே வீசுமே –9-4-7 | பதவுரை Show / Hideகனை ஆர்இடி குரலின், Kanai Aaridi Kuralin - இடியிடித்தாற்போன்று மிக்க த்வநியோடு கூடின கார், Kaar - கறுத்த மணியின், Maniyin - (மாட்டின் கழுத்திலுள்ள) மணியின் நா ஆடல், Naa Aadal - நாக்கு அசைந்து ஒலிப்ப தானது தினையேனும் நில்லாது, Dhinaiyenum Nilladhu - தினையளவும் (கொஞ்சமும்) ஓயாமல் தீயின், Theeyin - நெருப்பைக் காட்டிலும் கொடிது, Kodithu - கொடுமைபுரியாநின்றது; புனை ஆர்மணி மாடம், Punar Aarmani Maadam - அழகுமிக்க மணிமாடங்களை யுடைய புல்லாணி, Pullaani - திருப்புல்லாணியை கைதொழுதேன், Kaithozhuthen - தொழுவதற்கு ஆசைப்பட்டவளான வினையேன் மேல், Vinaikyen Mel - பாவியேன் மேல் வேலையும், Velaiyum - கடல்தானும் வெம் தழலே, Vem Thazhale - வெவ்விய நெருப்பையே வீசும், Veeseum - வீசுகின்றது. |
| 1785 | பெரிய திருமொழி || (9-4–காவார்) (திரு புல்லாணி 2) - (பிரிவு ஆற்றாத தலைவி பறவைகளைத் தூது விட்டும் பிறை தென்றல் முதலியவற்றால் வருந்தியும் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிரபல விரோதிகளை ஆற்றி உகந்தாருக்கு தன்னைக் கொடுக்க கடவனாக ஆசைப் பட்ட நமக்கு நம் விரோதிகளை மாற்றி நமக்கு தன்னை தந்தபடி காண்) 8 | தூம்புடைக் கை வேழம் வெருவ மருப்பொசித்த
பாம்பின் அணையான் அருள் தந்தவா நமக்குப்
பூஞ்செருந்திப் பொன் சொரியும் புல்லாணிக் கை தொழுதேன்
தேம்பல் இளம் பிறையும் என்தனக்கு ஓர் வெந்தழலே –9-4-8 | பதவுரை Show / Hideதூம்பு உடை கை வேழம், Thoombu Udai Kai Vezham - துளையையுடையத்தான துதிக் கையையுடைய (குவலயாபீடமென்னும்) யானையானது வெருவ, Veruva - அச்சமுறும்படி மருப்பு ஒசித்த, Maruppu Osiththa - (அதன்) கொம்புகளை முறித்த பாம்பின் அணையான், Paampin Anaiyaan - சேஷசாயியான பெருமான் கைதொழுதேன், Kaithozhuthen - தொழுவதற்கு ஆசைப்பட்டவளான என் தனக்கு, En Thanakku - எனக்கு நமக்கு, Namakku - நம் திறத்தில் அருள் தந்த ஆ, Arul Thanda Aa - அருள் செய்தவிதம் என்னே!; பூ, Poo - அழகிய செருந்தி, Serunthi - சுரபுன்னைமரங்கள் பொன் சொரியும், Pon Soriyum - பொன்போன்ற மலர்களை உதிர்க்குமிடமான புல்லாணி, Pullaani - திருப்புல்லாணியை தேம்பல் இளபிறையும், Thembal Ilapiraiyum - மிக இளைய சந்திரனும் ஓர்வெம் தழல், Orvem Thazhal - வெவ்விய நெருப்புப்போலுள்ளான |
| 1786 | பெரிய திருமொழி || (9-4–காவார்) (திரு புல்லாணி 2) - (பிரிவு ஆற்றாத தலைவி பறவைகளைத் தூது விட்டும் பிறை தென்றல் முதலியவற்றால் வருந்தியும் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஜகதா காரனாய் இருக்கிறவன் –அபேஷியாது இருக்க இவற்றை உண்டாக்கினவன் அபேஷை உடைய நம் கார்யம் செய்த படி காண் – சாமான்யத்திலே பண்ணக் கடவது விசேஷணத்தில் அன்றிக்கே இருப்பதே நாட்டுக்கு இட்ட அக்கம் -தான்யாதிகள் -அந்தப் புரத்துக்கு அரிதாவதே) 9 | வேதமும் வேள்வியும் விண்ணும் இரு சுடரும்
ஆதியும் ஆனான் அருள் தந்தவா நமக்குப்
போதலரும் புன்னை சூழ் புல்லாணி கை தொழுதேன்
ஒதமும் நானும் உறங்காது இருந்தேனே –9-4-9 | பதவுரை Show / Hideவேதமும், Vedhamum - வேதஸ்வரூபியாகவும் வேள்வியும், Velviyum - யஜ்ஞஸ்வரூபியாகவும் விண்ணும், Vinnum - மேலுலகங்களாகவும் இரு சுடரும், Iru Sudarum - சந்திரஸூர்யர்களாகவும் ஆதியும், Aadhiyum - ஜகத்காரண பூதகனாகவும் ஆனான், Aanaan - ஆன பெருமான் நமக்கு, Namakku - நம் திறத்திலே அருள் தந்த ஆ, Arul Thanda Aa - அருள் செய்தவிதம் என்னே!; போது அலரும், Podhu Alarum - பூக்கள் மலரப்பெற்ற புன்னை சூழ், Punnai Soozh - புன்னைமரங்களால் சூழப்பட்ட புல்லாணி, Pullaani - திருப்புல்லாணியை கைதொழுதேன், Kaithozhuthen - தொழவிரும்பியவளான நானும், Naanum - நானும் ஓதமும், Othathum - கடலும் உறங்காது இருந்தேன், Urangathu Irundhen - கண்ணுறக்கமற் றிருக்கிறோம். |
| 1787 | பெரிய திருமொழி || (9-4–காவார்) (திரு புல்லாணி 2) - (பிரிவு ஆற்றாத தலைவி பறவைகளைத் தூது விட்டும் பிறை தென்றல் முதலியவற்றால் வருந்தியும் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த ஸ்ரீ திரு மொழியை அப்யசிக்க வல்லார் –இங்கும் குறைவற அனுபவித்து அங்கும் குறைவற அனுபவிக்கப் பெறுவார்கள்) 10 | பொன்னலரும் புன்னை சூழ் புல்லாணி யம்மானை
மின்னிடையார் வேட்கை நோய் கூர விருந்ததனைக்
கன்னவிலும் திண தோள் கலியன் ஒலி வல்லார்
மன்னவராய் மண்ணாண்டு வானாளும் உன்னுவரே –9-4-10 | பதவுரை Show / Hideபொன் அலரும் புன்னை சூழ், Pon Alarum Punnai Soozh - பொன் போன்ற பூக்கள் மலரப்பெற்ற புன்னை மரங்களால் சூழப்பட்ட புல்லாணி, Pullaani - திருப்புல்லாணியி லெழுந்தருளியிருக்கிற அம்மானை, Ammaanai - எம்பெருமான் விஷயத்திலே மின் இடையார், Min Idaiyaar - மின்னல்போல் நுண்ணிய இடையை யுடையரான பெண் பிறந்தவர்கள் வேட்கை நோய் கூர, Vetkai Noi Koora - ஆசை நோய் மிகும்படியாக இருந்தனை, Irundhanai - இருக்கும் நிலைமையைப் பற்றி கல் நவிலும் திண்தோள் கலியன், Kal Navilum Thinthol Kalyan - மலையென்று போற்றத் தகுந்த திண்ணிய திருத்தோள்களை யுடையரான ஆழ்வார் ஒலி, Oli - அருளிச் செய்த இப்பாசுரங்களை வல்லார், Vallar - கற்று வல்லவர்கள் மன்னவர் ஆய், Mannavar Aay - அரசர்களாகி மண் ஆண்டு, Man Aandu - பூமியை ஆட்சிபுரிந்து (பிறகு) வான் நாடும், Vaan Naadum - பரமபத நாட்டிற்கும் உன்னுவர், Unnuvar - விரைந்தெழுவர் |