திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 9-6 அக்கும் புலியின் (10 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1798பெரிய திருமொழி || (9-6–அக்கும் புலியின்) (திருக்குறுங்குடி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஈஸ்வர அபிமாநிகளாய் இருப்பர்க்கும் முகம் கொடுத்துக் கொண்டு இருக்குமவன் அனுகூலராய்ச் சென்று கிட்டுகிற நமக்கு முகம் தரச் சொல்ல வேணுமோ – ரஷ்ய ரஷக பாவம் மாறாதே போரும் தேசமாயிற்று-சீலாவானாய் இருக்கிறவன் வர்த்திக்கிற தேசம் – அவ் ஊரில் மரங்களுக்கும் அவன் படி உண்டு என்கிறார்) 1
அக்கும் புலியின தளமுடையார் அவரொருவர் பக்கம் நிற்க நின்ற பண்பரூர் போலும் தக்க மரத்தின் தாழ்சினை ஏறி தாய் வாயில் கொக்கின் பிள்ளை வெள்ளிற வுண்ணும் குறுங்குடியே –9-6-1
பதவுரை Show / Hide
கொக்கின் பிள்ளை, Kokkin Pillai - கொக்கின் குட்டியானது
தக்கமரத்தின், Thakkamarathin - (தனக்கு ஏறத்) தகுந்ததான தாழ்ந்த கிளையில் ஏறி
தாழ் சினை ஏறி, Thazh Sinai Eri - தாழ்ந்த கிளையில் ஏறி
தாய் வாயில், Thai Vayil - தாய்கொக்கின் வாயிலிருக்கிற
வெள்ளிறவு, Velliravu - ‘வெள்ளிறா’ என்னும் சாதிமீனை
உண்ணும், Unnum - உண்ணப்பெற்ற
குறுங்குடி, Kurungkudi - திருக்குறுங்குடியென்னும் தலமானது,
அக்கும், Akum - எலும்பையும்
புலியின அதளும், Puliyin Adhalum - புலியின் தோலையும்
உடையார் அவர் ஒருவர், Udaiyar Avar Oruthar - உடையவரான சிவபிரானாகிற ஒருவர்
பக்கம் நிற்க, Pakkam Nirka - அருகேயிருக்க (இடங்கொடுத்து)
நின்ற, Nindra - எழுந்தருளியிருக்கின்ற
பண்பர், Panbar - சீலகுணமுடையரான பெருமாளுடைய
ஊர் போலும், Oor Polum - திவ்யதேசமாம்.
1799பெரிய திருமொழி || (9-6–அக்கும் புலியின்) (திருக்குறுங்குடி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற அழகு எளியர்க்கு கிட்ட ஒண்ணாமை அன்றிக்கே ப்ரஹ்மாதிகளுக்கும் அகப்பட இக்கரையிலே நின்று கூப்பிடும்படி ஸ்ரீ சர்வாதிகனாய் இருக்கிறவன் எல்லாருக்கும் ஒக்க அனுபவிக்கலாம் படி வர்த்திக்கிற தேசம் ஸ்ரீ திருக் குறுங்குடி என்கிறார் – கீழே நின்ற நம்பி அனுபவம்-இதில் கிடந்த நம்பி அனுபவம்) 2
துங்க வரவத் திரை வந்துலவத் தொடு கடலுள் பொங்கா ரரவில் துயிலும் புநிதரூர் போலும் செங்கால அன்னம் திகழ் தண் பணையில் பெடையோடும் கொங்கார் கமலத் தலரில் சேரும் குறுங்குடியே –9-6-2
பதவுரை Show / Hide
செம் கால், Sem Kaal - சிவந்தகால்களையுடைய (- (ஊர் போலும்))
அன்னம், Annam - அன்னப்பறவை
திகழ் தண் பணையில், Thigal Than Panaiyil - அழகிய குளிர்ந்த நீர் நிலைகளிலே
கொங்கு ஆர் கமலத்து அலரில், Kongu Aar Kamalathu Alaril - மணம்மிக்க தாமரைப்பூவில்
பெடையோடும், Pedaiyodum - பேடையுடனே
சேரும், Serum - சேர்ந்துவாழுமிடமான
குறுங்குடி, Kurungkudi - குறுங்குடியானது
துங்கம், Thungam - ஓங்கினவைகளாய்
ஆர் அரவம், Aar Aravam - பெரிய ஆரவாரத்தை யுடையவைகளான
திரை, Thirai - அலைகள்
வந்து உலவ, Vandu Ulava - வந்து வீச
தொடு கடலுள், Thodu Kadalul - ஆழ்ந்த திருப்பாற்கடலிலே
பொங்கு ஆர் அரவில், Pongu Aar Aravil - பெரிய திருமேனி வாய்ந்த திருவனந்தாழ்வான் மீது
துயிலும், Thuyilum - திருக்கண்வளர்ந்தருளா நின்ற
புனிதர், Punithar - பரமபவித்திரரான பெருமாளுடைய
1800பெரிய திருமொழி || (9-6–அக்கும் புலியின்) (திருக்குறுங்குடி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மஹாஸ் வராஹஸ் ஸ்புட பத்ம லோசன -என்கிறபடியே காணவே தாபம் எல்லாம் ஆறும்படியாக குளிர்ந்து முகில் போலே இருக்கிற வடிவை உடையனாய் இருகிறவன் – அவதாரங்கள் போலே தீர்த்தம் பிரசாதித்து போகாதே நித்ய வாஸம் பண்ணுகிற தேசம்) 3
வாழக் கண்டோம் வந்து காண்மின் தொண்டீர்காள் கேழல் செங்கண் மா முகில் வண்ணர் மருவுமூர் ஏழைச் செங்காலின் துணை நாரைக்கு இரை தேடிக் கூழைப் பார்வைக் கார் வயல் மேயும் குறுங்குடியே –9-6-3
பதவுரை Show / Hide
தொண்டீர்காள், Thondeerkaal - பாகஸதர்களே!
வாழ கண்டோம், Vaazha Kandom - உஜ்ஜீவிக்கும் வகையறிந்தோம்
ஏழை செம் கால், Ezhaik Sem Kaal - மிருதுவாய்ச் சிவந்த கால்களையுடைய
இன் துணை நாரைக்கு, In Thunai Naraikku - இனிய துணையாகிய நாரைச்சேவனுக்கு
இரை தேடி, Irai Thedi - உணவு தேடிக்கொண்டு
கூழை பார்வை, Koozhai Paarvai - க்ருத்ரிமமான பார்வையை
கார் வயல் மேயும், Kaar Vayal Meyum - கருவடைந்த வயல்களிலே மேயப்பெற்றதும்
கேழல், Kezhal - வராஹாவதாரம் செய்தருளினவராய்
செம் கண், Sem Kan - செந்தாமரைக் கண்ணராய்
மா முகில் வண்ணர், Maa Mukil Vannaar - காளமேகம் போன்ற நிறத்தையுடையவரான பெருமாள்
மருவும் ஊர், Maruvum Oor - பொருந்திவாழும் திவ்ய தேசமாயிருப்பதுமான
குறுங்குடி, Kurungkudi - திருக்குறுங்குடியை
வந்து காண்மின், Vandhu Kaanmin - வந்து ஸேவியுங்கள்
1801பெரிய திருமொழி || (9-6–அக்கும் புலியின்) (திருக்குறுங்குடி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தலைகள் பத்தும் சிதறும்படியாக சென்று அடை மதிள் படுத்தி ராவணன் உடைய நெஞ்சில் திண்மையையும் தோளில் மிடுக்கையும் போக்கின ஆண் பிள்ளை வர்த்திக்கிற ஊர் போலே) 4
சிரம் முன் ஐந்தும் ஐந்தும் சிந்தச் சென்று அரக்கன் உரவும் கரமும் துனித்த வுரவோனூர் போலும் இரவும் பகலும் ஈன் தேன் முரல மன்று எல்லாம் குரவின் பூவே தான் மண நாறும் குறுங்குடியே –9-6-4
பதவுரை Show / Hide
இரவும் பகலும், Iravum Pagalum - எப்போதும்
தேன், Then - வண்டுகள்
ஈன், Een - இனிமையாக
முரல, Mural - ரீங்காரஞ் செய்யப் பெற்றதும்
மன்று எல்லாம், Manru Ellam - வெளிநிலமுழுதும்
குரவின் பூவேதான், Kuravin Poovethaan - குருவம்பூக்களே
மணம் நாறும், Manam Naarum - பரிமளிக்கப்பெற்றதுமான
குறுங்குடி, Kurungkudi - திருக்குறுங்குடியானது
முன், Mun - முன்பு (ராமாவதாரத்தில்)
அரக்கன், Arakkan - இராவணனென்னும் ராக்ஷஸனது
சிரம் ஐந்தும் ஐந்தும், Sirama Aindhum Aindhum - பத்துத் தலைகளும்
சிந்த, Sindha - சிதறும்படி
சென்று, Sendru - (இலங்கைக்கு) எழுந்தருளி
உரமும் கரமும், Uramum Karumum - (அவனது) மார்பையும் கைகளையும்
துணித்த, Thuniththa - துணித்தொழித்தவனான
உரவோன், Uravon - பெருமிடுக்குடைய பெருமானுடைய
ஊர்போலும், Oorpolum - திவ்யதேசமாகும்.
1802பெரிய திருமொழி || (9-6–அக்கும் புலியின்) (திருக்குறுங்குடி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பாண்டவர்களுக்காக யுத்தத்தில் நடத்தினவன் வர்த்திக்கிற ஊர் போலும் – முடி சூடுவார் யாரோ என்று இருக்குமாயிற்று தாழ்வு செய்து திரிகைக்கு) 5
கவ்வைக் களிற்று மன்னர் மாளக் கலி மாந்தேர் ஐவர்க்காய் அன்று அமரில் உய்த்தானூர் போலும் மைவைத்திலங்கு கண்ணார் தங்கள் மொழி யொப்பார் கொவ்வைக் கனிவாய்க் கிள்ளை பேசும் குறுங்குடியே –9-6-5
பதவுரை Show / Hide
கொவ்வைக் கனிவாய், Kovvaik Kanivai - கோவைப்பழம்போற் சிவந்த வாயையுடைய
கிள்ளை, Killa - கிளிகளானவை
மை வைத்து இலங்கு கண்ணார் தங்கள் மொழி ஒப்பான், Mai Vaiththu Ilangu Kannaar Thangal Mozhi Oppaan - மையிட்டு விளங்குகின்ற கண்களையுடைய பெண்களில் பேச்சுப்போல
பேசும், Pesum - பேசுமிடமான
குறுங்குடி, Kurungkudi - திருக்குறுங்குடியானது
அன்று, Andru - முன்பொருகால்
அமரில், Amaril - பாரதயுத்தத்தில்
கவ்வை களிறு மன்னர், Kavvai Kaliru Mannar - பேரொலிகொண்ட யானைகளை யுடையவரான அரசர்கள்
மாள, Maala - மாண்டுபோம்படியாக
ஐவர்க்கு ஆய், Aivarkku Aay - பஞ்சபாண்டவர்களுக்காக
கலி மா தேர், Kali Maa Ther - திண்ணிய பெரியதேரை
உய்த்தான், Uyiththaan - நடத்தின பெருமானுடைய
ஊர்போலும், Oorpolum - திவ்யதேசமாகும்
1803பெரிய திருமொழி || (9-6–அக்கும் புலியின்) (திருக்குறுங்குடி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சாமாராதன உபகரணங்களைத் தரித்துக் கொண்டு அதிகாரிகளான நீங்கள் அடைவு கெட ஏத்தி அஞ்சலியை பண்ணி உஜ்ஜீவித்துப் போகப் பாருங்கோள்) 6
தீ நீர் வண்ண மா மலர் கொண்டு விரை ஏந்தி தூ நீர் பரவித் தொழுமின் எழுமின் தொண்டீர்காள் மா நீர் வண்ணர் மருவி யுறையும் இடம் வானில் கூநீர் மதியை மாடம் தீண்டும் குறுங்குடியே –9-6-6
பதவுரை Show / Hide
தொண்டீர்காள், Thondeerkaal - தொண்டர்களே! (- (“கூனீர்“ என்பதில் “நீர்மை“ என்னும் பண்பு ஈறுபோயிற்று, நீர்மையாவது ஸ்வபாவம்.))
தூ நீர், Thoo Neer - பரிசுத்தியை யுடையரான நீங்கள்
தீ, Thee - (தூபதீபங்களுக்கான) அக்நியையும்
நீர், Neer - (அர்க்கியத்துக்கான) தீர்த்தத்தையும்
வண்ணம் மா மலர், Vannam Maa Malar - நாநாவர்ணமுடைய சிறந்த புஷ்பங்களையும்
விரை, Virai - பரிமளத்ரவ்யங்களையும்
ஏந்திக் கொண்டு, Aendhik Kondo - எடுத்துக்கொண்டு
பாவி, Paavi - (எம்பெருமானைத்) துதித்து
தொழுமின், Thozhumin - தொழுங்கோள்,
எழுமின், Ezhumin - உஜ்ஜீவிக்கப் பாருங்கோள்
வானில், Vaanil - ஆகாசத்தில்
கூன் நீர், Koon Neer - வளைந்திருப்பதை இயற்கையாகவுடைய
மதியை, Madhiyai - சந்திரனை
மாடம் தீண்டும், Maatam Theendum - மாடங்கள் ஸ்பர்சிக்கும்படியாக ஓங்கியுள்ள
குறுங்குடி, Kurungkudi - திருக்குறுங்குடியானது
மா நீர் வண்ணர், Maa Neer Vannarar - கடல் வண்ணரான பெருமாள்
மருவி உறையும் இடம், Maruvi Uraiyum Idam - பொருந்தியாழுமிடமா யிருக்கின்றது.
1804பெரிய திருமொழி || (9-6–அக்கும் புலியின்) (திருக்குறுங்குடி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஜன்மாதிகளுக்கு ஹேதுவாய் இருக்கிற விஷயங்களைப் பற்றி இருக்கிற மநோ ரதத்தைத் தவிர்த்து அவனுக்கே அடியோம் என்று இருக்கிற நீங்கள் அவன் வர்த்திக்கிற ஊரைச் சென்று அடையுங்கோள்) 7
வல்லிச் சிறு நுண்ணிடை யாரிடை நீர் வைக்கின்ற அல்லல் சிந்தை தவிர அடைமின் அடியீர்காள் சொல்லில் திருவே யனையார் கனிவாய் எயிறு ஒப்பான் கொல்லை முல்லை மெல்லரும்பீனும் குறுங்குடியே –9-6-7
பதவுரை Show / Hide
அடியீர்காள், Adiyeergal - பகவத் பக்தர்களே!
நீர், Neer - நீங்கள்
வல்லி சிறு நுண் இடையாரிடை, Valli Siru Nun Idaiyaridai - கொடிபோன்று மிக நுண்ணிய இடையை யுடையரான பெண்களிடத்து
வைக்கின்ற, Vaikkindra - வைத்திருக்கிற
அல்லல் சிந்தை தவிர, Allal Sindhai Thavira - துக்ககரமான சிந்தனையைத் தவிர்த்து
கொல்லை முல்லை, Kollai Mullai - கொல்லைகளிலுள்ள முல்லைகளானவை
சொல்லில் திரு அனையார், Sollil Thiru Anaiyaar - சொல்லுமிடத்து ஸ்ரீ மஹா லக்ஷ்மியை யொத்திருக்கின்ற ஸ்த்ரீகளினுடைய
கனிவாய், Kanivai - கோவைக்கனிபோன்ற வாயிலுள்ள
எயிறு ஒப்பான், Eiyiru Oppaan - பற்களோடொப்ப
மெல் அரும்பு, Mel Arumbu - அழகிய அரும்புகளை
ஈனும், Eenum - புறப்படவிடுமிடமான
குறுங்குடி, Kurungkudi - திருக்குறுங்குடியை
அடைமின், Adaimin - அடையுங்கோள்
1805பெரிய திருமொழி || (9-6–அக்கும் புலியின்) (திருக்குறுங்குடி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நம்மோடு ஒரு சம்பந்தம் உடைய நீங்கள் –பர பக்தி உக்தராய்க் கொண்டு -வகுத்த ஸ்வாமி யானவன் இருக்கிற தேசத்தை சென்று அடையுங்கோள்) 8
நாராரிண்டை நாண் மலர் கொண்டு நந்தமர்காள் ஆராவன்போடு எம்பெருமானூர் அடைமின்கள் தாராவாரும் வார் புனல் மேய்ந்து வயல் வாழும் கூர்வாய் நாரை பேடையோடாடும் குறுங்குடியே –9-6-8
பதவுரை Show / Hide
நம் தமர்காள், Nam Thamarkal - நம்மோடொத்த பகவத்பக்தர்களே! (- (எம்பெருமான் ஊர் அடைமின்கள்))
நார் ஆர் இண்டை, Naar Aar Indai - நார்களில் நெருங்கக் கோக்கப்பட்ட மாலைகளையும்
நாள் மலர், Naal Malar - அப்போதலர்ந்த பூக்களையும்
கொண்டு, Kondru - ஏந்திக் கொ;ண்டு
ஆரா அன்போடு, Aaraa Anbodu - பரபக்தியுக்தராய்க் கொண்டு
வார்புனல், Vaarpunal - நீண்ட நீர்நிலங்களிலே
மேய்ந்து, Meiyndhu - இரைமேய்ந்து
வயல், Vayal - வயல்களில்
வாழும், Vaalum - வாழ்கின்ற
கூர் வாய் நாரை, Koora Vaai Naarai - கூர்மையுள்ள வாயலகுகளையுடைய நாரைகள்
பேடையோடு, Pedaioodu - பேடைகளுடனே
ஆடும், Aadum - களித்துவர்த்திக்கப்பெற்ற
குறுங்குடி, Kurungkudi - திருக்குறுங்குடியென்கிற
எம்பெருமான் ஊர், Emperumaan Oor - திவ்யதேசத்தை
அடைமின்கள், Adaiminkal - சென்று சேருங்கள்
1806பெரிய திருமொழி || (9-6–அக்கும் புலியின்) (திருக்குறுங்குடி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (செவ்விப் பூக்களைத் தரித்துக் கொண்டு சென்று –தீர்க்க பிரமாணத்தை பண்ணுங்கோள் – வழு விலா வடிமை செய்ய வேண்டும் -என்றும் இருக்கும் நீங்கள்) 9
நின்ற வினையும் துயரும் கெட மா மலரேந்திச் சென்று பணிமின் எழுமின் தொழுமின் தொண்டீர்காள் என்றும் இரவும் பகலும் வரி வண்டு இசை பாடக் குன்றின் முல்லை மன்றிடை நாறும் குறுங்குடியே –9-6-9
பதவுரை Show / Hide
தொண்டர்காள், Thondarkal - பகவத்பக்தர்களே!
நின்ற வினையும், Nindra Vinaikum - ஸஞ்சிதகருமங்களும்
துயரும், Thuyarum - ப்ராரப்தகருமங்களும்
கெட, Keda - ஒழியும்படியாக
மா மலர், Maa Malar - சிறந்த புஷ்பங்களை
ஏந்தி, Aendi - எடுத்துக்கொண்டு
இரவும் பகலும் என்றும், Iravum Pagalum Endrum - இரவும் பகலுமாகிய எக்காலத்திலும்
வரி வண்டு இசை பாட, Vari Vandu Isai Paada - வஜீவண்டுகள் இசை பாடப்பெற்றதும்
குன்றின் முல்லை, Kundrin Mullai - மலையிலுள்ள முல்லைப் பூக்கள்
மன்றிடை, Mandridai - வெளிநிலங்களிலே
நாறும், Naarum - கமழப்பெற்றதுமான
குறுங்குடி, Kurungkudi - திருக்குறுங்குடியை
சென்று, Sendru - அடைந்து
பணிமின், Panimin - ஸேவியுங்கள்
தொழுமின், Thozhumin - அஞ்ஜலிபண்ணுங்கள்,
எழுமின், Ezhumin - (இவ்வகையாலே) உஜ்ஜீவிக்கப்பாருங்கள்
1807பெரிய திருமொழி || (9-6–அக்கும் புலியின்) (திருக்குறுங்குடி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உக்தி ஆபாசங்களால் அழிக்க ஒண்ணாத படியான திண்மையை உடைய இத்தை அஹ்ருத்யமாகச் சொல்ல புத்தி பூர்வகமாகப் பண்ணின பாபங்கள் போம்) 10
சிலையால் இலங்கை செற்றான் மற்றோர் சினவேழம் கொலையார் கொம்பு கொண்டான் மேய குறுங்குடி மேல் கலையார் பனுவல் வல்லான் கலியன் ஒலி மாலை நிலையார் பாடல் பாடப் பாவம் நில்லாவே –9-6-10
பதவுரை Show / Hide
சிலைபால், Silaihaal - சார்ங்கத்தாலே
இலங்கை, Ilankai - லங்காபுரியை
செற்றான், Setraan - அழித்தவனும்
மற்று, Mattru - அன்றியும்
சினம், Sinam - சிற்றங்கொண்ட
ஓர் வேழம், Oru Vezham - (குவலயாபீடமென்கிற) ஒரு யானையினது
கொலை ஆர், Kolai Aar - கொலைத் தொழில்வல்ல
கொம்பு, Kombu - தந்தங்களை
கொண்டான், Kondaan - முறித்துக் கொண்டவனான பெருமான்
மேய, Meya - நித்யவாஸம் பண்ணுகிற
குறுங்குடி மேல், Kurungkudi Mael - திருக்குறுங்குடி விஷயமாக
கலை ஆர் பனுவல்வல்லான், Kalai Aar Panuvalvallaaan - சாஸ்த்ரோக்த லக்ஷணங்களமைந்த கவிகளைப் பாட வல்லவரான
கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார்
ஒலி, Oli - அருளிச் செய்த
மாலை, Maala - சொல்மாலையாகிய
நிலை ஆர் பாடல், Nilai Aar Paadal - நிலைநிற்கும் பாசுரமாகிய (வேதரூபமான) இத்திருமொழியை
பாட, Paada - பாடவே
பாவம், Paavam - பாவங்கள்
நில்லா, Nilla - நில்லாமல் ஓடிப்போம்