Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: உண்ணுஞ் சோறு (11 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3293திருவாய்மொழி || (6-7–உண்ணுஞ் சோறு) (தலைவனது நகர்நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் இரங்குதல் (திருக்கோளூர்)) (படுக்கைத்தலையிலே மகளைக் காணாத திருத்தாயார் ‘என்மகள் திருக்கோளூர்க்குத்தான் சென்றிருக்கவேணும்‘ என்று அறுதியிட்டுக் கூறுகின்றாள். ஆழ்வாருடைய உண்மையான தன்மை முன்னிரண்டடிகளிற் கூறப்படுகின்றது) 1
உண்ணுஞ் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையு மெல்லாம்
கண்ணன் எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி
மண்ணினுள் அவன் சீர் வளம் மிக்கவன் ஊர் வினவித்
திண்ணம் என் இளமான் புகுமுர் திருக் கோளூரே.–6-7-1
உண்ணும் சோறு,Unnum sooru - உண்டு பசீதீர்க்க வேண்டும் படியானசோறும்
பருகும் நீர்,Parukum neer - குடித்து விடாய் தீர்க்க வேண்டும் படியான நீரும்
தின்னும் வெற்றிலையும் எல்லாம்,Thinnum vettrilaiyum ellam - தின்று களிக்கவேண்டும்படியான வெற்றிலையுமாகிய எல்லாப்பொருள்களும்
கண்ணன் எம்பெருமான் என்று என்றே,Kannan emperumaan endru endrae - (எனக்கு) ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவே யென்றுபலகாலும் சொல்லி
கண்கள் நீர்கள் மல்கி,Kangal neergal malgi - கண்ணீர தாரைதாரையாகப் பெருகப்பெற்றிருந்த
என் இள மான்,En ila maan - இளமான் போன்ற என்மகள்
மண்ணினுள்,Manninul - பூமண்டலத்துள்ளே
சீர் வளம் மிக்கவன்,Seer valam mikkavan - சீரும் சிறப்பும் மிகுந்தவனான
அவன்,Avan - அப்பெருமானுடைய
ஊர்,Oor - திவ்யதேசத்தை
வினவி,Vinavi - விசாரித்துக்கொண்டு சென்று
புகும் ஊர்,Pukum oor - சேர்ந்தவிடம்
திருக்கோளூரே,Thirukkoloore - திருக்கோளூராகவே யிருக்க வேணும்
திண்ணம்,Thinnam - இதில் ஸந்தேஹமில்லை
3294திருவாய்மொழி || (6-7–உண்ணுஞ் சோறு) (தலைவனது நகர்நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் இரங்குதல் (திருக்கோளூர்)) (பாராங்குச நாயகியின் லீலோபகரணங்களுள் ஒன்றான பூவையென்னும் பறவைகளை நோக்கித் திருத்தாயார் கேட்கிறார் என் பக்கலில் நசையற்று ஒழிந்தாளாகிலும் உங்களை நினைத்தாவது என்மகள் இங்கு மீண்டு வரக்கூடுமோ? சொல்லுங்கள் என்கிறாள். பூவைப்பறவை விடையளிக்க மாட்டாத அஃறிணையென்ற்றிந்தும் மதிகலங்கிக்கேட்கிறபடி. ஆழ்வாருடைய நித்யக்ரமத்தைச் சொல்லுவன முன்னடிகள்.) 2
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய
பேரும் தார்களுமே பிதற்றக் கற்பு வான் இடறி
சேரும் நல் வளம் சேர் பழனத் திருக் கோளூர்க்கே
போருங்கொல் உரையீர் கொடியேன் கொடி பூவைகளே –6-7-2
பூவைகளே,Poovaikale - பூவைப் பறவைகளே!
ஊரும் நாடும் உலகமும்,Uurum naadum ulagum - தானிருந்த ஊரும் நாடும் உலகமுமெல்லாம்
தன்னைபோல்,Thannaipol - தன்னைப்போலவே
அவனுடைய,Avanudaiya - எம்பெருமானுடைய
பேரும் தார்களுமே பிதற்ற,Perum thaarkalume pithatra - திருநாமங்களையும் சின்னங்களையுமே பிதற்றும்படி (செய்யுமவளான)
கொடியேன் கொடி,Kodiyaan kodi - பாவியேனுடைய மகள்
வான் கற்பு இடறி,Vaan karppu idari - சிறந்த ஸ்த்ரீத்வமர்யாதையைக்கடந்து
நல் வளம் சேர் பழனம்,Nal valam ser pazhanam - விலக்ஷணமான வனம் பொருந்திய நீர்நிலைகளையுடைத்தான்
திருக்கோளூர்க்கே சேரும்,Thirukkoloorkae serum - திருக்கோளூரிலேயே சென்று சேர்ந்திருப்பன்,
போரும் கொல்,Porum kol - (உங்களைநினைத்தாகிலும்) திரும்பிவருவாளோ
உரையீர்,Uraiyeer - சொல்லுங்கள்.
3295திருவாய்மொழி || (6-7–உண்ணுஞ் சோறு) (தலைவனது நகர்நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் இரங்குதல் (திருக்கோளூர்)) (ஐயோ! என்மகள் திருக்கோளூரிலே எப்பாடு படுகிறாளோ வென்கிறாள் தாய்.) 3
பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம் புட்டில்கள்
யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி எழும் என்
பாவை போய் இனித் தண் பழனத் திருக்கோளூர்க்கே
கோவைவாய் துடிப்ப மழைக் கண்ணொடு என் செய்யுங்கொலோ?–6-7-3
பூவை,Poovai - பூவைகளென்ன
பை கிளிகள்,Pai kilikal - பசுமைதங்கிய கிளிகளென்ன
பந்து,Pandhu - பந்துகளென்ன
தூதை,Thoothai - சிறுசோறுசமைக்கும் பானைகளென்ன
பூ புட்டில்கள்,Poo puttilkal - பூவிடும் குடலைகளென்ன ஆகிய (லீலோபகரணங்களான)
யாவையும்,Yaavaiyum - இவையெல்லாவற்றாலும் உண்டாகக்கூடிய இன்பம்
திருமால் திரு நாமங்களே,Thirumaal thiru naamangale - பகவானுடைய திருநாமங்களினாலேயாம்படி
கூவி,Koovi - அத்திருநமங்களைச் சொல்லியழைத்து
எழும்,Ezhum - உஜ்ஜீவிப்பவளான
என் பாவை,En paavai - எனது பெண்பிள்ளை யானவள்
இனி,Ini - இங்கே ஒரு குறையற்றிருக்கச் செய்தேயும்.
தண் பழனம் திரு கோளுர்க்கே போய்,Than pazhanam thiru kolurkkay poi - குளிர்ந்த நீர் நிலயங்களையுடைய திருக்கோளூர்க்கே புறப்பட்டுப்போய்
கோவை வாய் துடிப்ப,Kovai vaay thudippa - கோவைப்பழம் போன்ற அதரம் துடிக்கும்படியாக
மழை கண்ணொடு,Mazhai kannodu - நீர்பெருகப்பெற்ற கண்களோடே நின்று
என் செய்யும் கொலோ,En seyyum kolo - என்னபாடுபடுவளோ! (அவ்விருப்பை நான் காணப்பெற்றிலேனே! என்று அலமருகின்றாளென்க)
3296திருவாய்மொழி || (6-7–உண்ணுஞ் சோறு) (தலைவனது நகர்நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் இரங்குதல் (திருக்கோளூர்)) (என் மகளுடைய நடவடிக்கையைக் கண்டு உலகத்தார் உகப்பர்களோ! அன்றி, வெறுப்பர்களோ வென்று சங்கிக்கிறாள் தாய்.) 4
கொல்லை என்பர் கொலோ? குணம் மிக்கனள் என்பர் கொலோ?
சில்லை வாய்ப் பெண்கள் அயற்சேரி உள்ளாரும் எல்லே!
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே
மெல்லிடை நுடங்க இள மான் செல்ல மேவினளே.–6-7-4
இள மான்,Ila maan - இளமான் போன்ற என்மகள்
செல்வம் மல்கி அவன் கிடந்த திருகோளூர்க்கே,Selvam malgi avan kidantha thirukolurkkay - செல்வம் நிரம்ப்ப்பெற்று அப்பெருமான் கண்வளர்ந்தருளப்பெற்ற திருக்கோளூரைக்குறித்தே
மெல் இடை நுடங்க,Mel idai nudanga - மெல்லிய (தனது) இடை நோகும்படி
செல்ல மேளினளே,Sella melinaLae - புறம்பட்டுச் செல்ல நெஞ்சு பொருந்திவிட்டாளே!, (இதைப்பற்றி)
சில்லை வாய் பெண்டுகள்,Sillai vaai pendaL - வம்புவாயான நஞ்சேரிப் பெண்களுக்கு
அயல் சேரி உள்ளாகும்,Ayal seri uLlaagum - அயல் சேரியிலுள்ள பெண்களும்
கொல்லை என்பர் கொலோ,Kollai enbar kolo - இவள் வரம்பு கடந்து நடந்தவள்“ என்று சொல்லிப் பழிப்பர்களோ அல்லது)
குணம் மிக்கனள் என்பர் கொலோ,Gunam mikkanal enbar kolo - விலக்ஷணகுண முடையவள்“ என்று சொல்லிக் கொண்டாடுவர்களோ!
எல்லை,Yellai - என்னாகுமோ!
3297திருவாய்மொழி || (6-7–உண்ணுஞ் சோறு) (தலைவனது நகர்நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் இரங்குதல் (திருக்கோளூர்)) (திருக்கோளூர்க்கு நடந்த என்மகள் அங்குச் சோலைகளையும் பொய்கைகளையும் அவன் கோயிலையுங்கொண்டு ஆச்சரியமான உகப்பை அடைவளே, அந்தோ! அவ்வுகப்பை நான் காணக் கொடுத்து வைக்கவில்லையே! என்று தளர்கின்றாள் தாய்.) 5
மேவி நைந்து நைந்து விளையாடலுறாள் என் சிறுத்
தேவி போய் இனித் தன் திருமால் திருக் கோளூரில்
பூவியல் பொழிலும் தடமும் அவன்கோயிலும் கண்டு
ஆவி உள் குளிர எங்ஙனே உகக்குங்கொல் இன்றே?–6-7-5
ஏன் சிறு தேவி,Yen siru devi - வயதுமுதிராதவளும் திவ்யஸ்வபாவ முடையவளுமான என் மகள்
மேவி,Mevi - பகவந் குணங்களிலே யீடுபட்டு
நைந்து நைந்து,Naindhu naindhu - மிகவும் இளைத்து
விளையாடல் உறாள்,Vilayaadal ural - (தன் வயதுக்குரிய) விளையாட்டிலும பொருந்தாதவளாய்
போய்,Poi - இங்கு நின்றும் போய்
தன் திருமால் திருக்கோளூரில்,Than thirumaal thirukoluril - தனக்கு அஸாதாரணானான எம்பெருமானுடைய திருக்கோளூரில்
பூ இயல் பொழிலும் ஸ்ரீ,Poo iyal pozhilum sri - பூக்களை இயல்பாகவுடைய சோலைகளையும்
தடமும்,Thadamum - தடாகங்களை
அவன் கோயிலும்,Avan koyilum - அவனது திவ்ய ஸந்நிதியையும்
கண்டு,Kandu - பார்த்து
ஆவி உள் குளிர,Aavi ul kulira - நெஞ்சு குளிரும்படியாக
இன்று எங்ஙனே உகக்கும் கொல்,Indru engane ukakkum kol - இன்று எவ்வண்ணம் களித்திருப்பளோ! (அந்நிலைமையை நான் காணப்பெற்றிலேனே!)
3298திருவாய்மொழி || (6-7–உண்ணுஞ் சோறு) (தலைவனது நகர்நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் இரங்குதல் (திருக்கோளூர்)) (கீழ்ப்பாட்டில் “எங்ஙனே யுகக்குங்கொல்!“ என்றாள், அவள் உகக்கும்படியைப் பாசுரமிட்டுச் சொல்லுகிறது இப்பாட்டு.) 6
இன்று எனக்கு உதவாது அகன்ற இளமான் இனிப் போய்த்
தென் திசைத் தலத மனைய திருக்கோ ளூர்க்கே
சென்று தன் திருமால் திருக் கண்ணும் செவ் வாயும் கண்டு
நின்று நின்று நையும் நெடுங்கண்கள் பனி மல்கவே.–6-7-6
எனக்கு,Enakku - தன்னைப்பிரிந்து நோவுபட்டுக் நடக்கிற எனக்கு
இன்று,Indru - இப்போது
உதவாது அகன்ற,Udhavathu akanra - உசாத்துணையாக இராதே கைகழித்துபோன
இள மான்,Ila maan - இளமான்போன்ற என்மகள்
போய்,Poi - வருந்தி வழிநடந்து போய்
தென்திசை திலதம் அனையை,Thenthisai thilatham anaiyai - தெற்குத் திசைக்கு அலங்காரமான
திருக்கோளூர்க்கே சென்று,Thirukolurkkay sendru - திருக்கோளூரிலே பிரவேசித்து
இனி,Ini - அங்ஙனம் புகுந்த பின்பு தன்னை வசீகரிக்க அத்திருமாலினுடைய
திருக்கண்ணும் செம்வாயும் கண்டு,Thirukkanum semvayum kandu - திருக்கண்களையும் செவ்விய அதரத்தையும் கண்டு
நெடு கண்கள் பனிமல்க,Nedhu kangal panimalga - தனது விசாலமான கண்களில் ஆனந்த பாஷ்பம் நிரம்பப்பெற்று (ஹர்ஷப்ரகர்ஷத்தாலே)
நின்று நின்று நையும்,Ninru ninru nayum - ஒன்றுஞ் செய்யமாட்டாதே சிதிலையாகி நிற்பள்
3299திருவாய்மொழி || (6-7–உண்ணுஞ் சோறு) (தலைவனது நகர்நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் இரங்குதல் (திருக்கோளூர்)) (தன்மகள் திருக்கோளூரெம்பெருமானுடைய திருக்கண்ணும் செவ்வாயுங்கண்டு கண்ணீர் பெருகநிற்பவள் என்று கீழ்ப்பாட்டில் ஊஹித்துப்பேசின திருத்தாயார், அவள் திருக்கோளூரளவும் சென்று சேர்ந்தாளாகிலன்றோ அங்ஙனே யிருப்பது, இவள்தான் அத்தனை தூரம் வழிநடந்து முடிந்து சென்று சேர்ந்த பிறகு நடக்கக்கூடியதை இப்போது சிந்திக்க இடமேது? என்கிறாள்.) 7
மல்கு நீர்க் கண்ணொடு மையலுற்ற மனத்தினளாய்
அல்லும் நன் பகலும் நெடுமால் என்றழைத் தினிப் போய்ச்
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே
ஒல்கி ஒல்கி நடந்து எங்ஙனே புகுங்கொல் ஒசிந்தே?–6-7-7
மல்கு நீர் கண்ணொடு,Malku neer kannodu - (என் மகளானவள்) நீர் நிரம்பிய கண்களையுடையவளாயும்
மையல் உற்ற மனத்தனள் ஆய்,Maiyal utra manathanal aai - வியாமோஹம் கொண்ட நெஞ்சையுடையளாயும்
நல் அல்லும் பகலும்,Nal allum pagalum - நல்ல இரவிலும் பகலிலும் (தவறாது)
நெடு மால் என்று அழைத்து,Nedu maal endru azhaiththu - ஸர்வேச்வரனே! என்று கூப்பிட்டுக்கொண்டிருந்து,
இனி,Ini - இப்போது
ஒல்கி ஒல்கி நடந்து,Olgi olgi nadandhu - ஒடுங்கியொடுங்கி அசைந்து நடந்து
ஒசிந்து போய்,Osindhu poi - தளர்ந்து சென்று செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே
எங்ஙனே புகும்கொல்,Engane pugum kol - எப்படி போய்ச் சேர்ந்திருப்பளோ?
3300திருவாய்மொழி || (6-7–உண்ணுஞ் சோறு) (தலைவனது நகர்நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் இரங்குதல் (திருக்கோளூர்)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –இவள் பிரகிருதி மார்த்வத்தையும் எம்பெருமானைப் பிரிந்து சிதிலை யாய் இருக்கிற படியையும் அனுசந்தித்து இவள் புக்கால் படும்படியை அனுசந்திக்க வேண்டுவது அவள் அவ்வளவும் சென்று புக வல்லாள் ஆகில் இ றே என்கிறாள் .) 8
ஒசிந்த நுண்ணிடை மேல் கையை வைத்து நொந்து நொந்து
கசிந்த நெஞ்சினளாய்க் கண்ண நீர் துளும்பச் செல்லுங்கொல்?
ஒசிந்த ஒண் மலராள் கொழுநன் திருக்கோளூர்க்கே
கசிந்த நெஞ்சினளாய் எம்மை நீத்த எம் காரிகையே.–6-7-8
ஒசிந்த ஒண் மலராள் கொழுநான்,Osintha on malaraal kolunaan - துவண்ட திருமேனியையுடைய பெரிய பிராட்டியாருக்கு வல்லபனான எம்பெருமான் வர்த்திக்கிற
திருக்கோளூர்க்கே,Thirukolurkkay - திருக்கோளூரையே நோக்கி
எம்மை நீத்த,Emmai neetha - எங்களை விட்டுப் பிரிந்து சென்ற
எம் காரிகை,Em karigai - அழகியாளான என் பெண் பிள்ளை,
ஒசிந்த நுண் இடைமேல்,Osintha nun idaimael - ஏற்கனவே துவண்ட மெல்லிய இடுப்பின்மீது
கையை வைத்து,Kaiyai vaiththu - (இளப்பினால்) கையை வைத்துக் கொண்டு
நொந்த நொந்து,Nontha nonthu - மேன்மேலும் நோவு பெற்று
கசிந்த நெஞ்சினள் ஆய்,Kasintha nenjinal aai - ஈரமான மனத்தையுடையவளாய்
கண்ண நீர் துளும்ப,Kanna neer thulumba - கண்ணீர் பெருகும்படி
செல்லும் கொல்,Sellum kol - (அவ்வூர்) சென்று சேர்ந்திருக்ககூடுமோ?
3301திருவாய்மொழி || (6-7–உண்ணுஞ் சோறு) (தலைவனது நகர்நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் இரங்குதல் (திருக்கோளூர்)) (திருக்கோளூரெம்பெருமான் பக்கலிலே ப்ராவண்யமே வடிவெடுத்த இப்பெண்பிள்ளை ஊராருடைய பழிமொழிகளுக்கும் அஞ்சாதே எங்களையும் ஒருபொருளாக மதியாதே நடந்து சென்றாளே யென்கிறாள் திருத்தாய்.) 9
காரியம் நல்லனகள் அவை காணில் என் கண்ணனுக்கு என்று
ஈரியா யிருப்பாள் இதெல்லாம் கிடக்க இனிப் போய்ச்
சேரி பல் பழி தூஉய் இரைப்பத் திருக்கோளூர்க்கே
நேரிழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைத்திலளே.–6-7-9
நேர் இழை,Ner izhai - நேர்த்தியான ஆபரணங்களை யணிந்துள்ள என் மகள்,
காரியம் நல்லனகள் அவை காணில்,Kaariyam nallanakal avai kaanil - பதார்த்தங்களில் நல்லதானவற்றைக்கண்டால்
என் கண்ணனுக்கு என்று,En kannanukku endru - “இவை எம்பெருமானுக்கு ஆம்“ என்று அநுஸந்தித்து
ஈரியாய் இருப்பாள்,Eeriyaai iruppaal - ஈரநெஞ்சையுடையளாக இருப்பவள்
இது எல்லாம் கிடக்க,Idhu ellam kidakka - இங்கே அளவற்ற ஐச்வரியங்கள் கிடக்கவும்
இனி,Ini - இப்போது
போய்,Poi - வெளியேறிச் சென்று
சேரி பல் பழி தூய் இரைப்ப,Seri pal pazi thooyiraippa - சேரியிலுள்ளார் பல பழமொழிகளைத் தூற்றி கோஷிக்கும்படியாக
திருக்கோளூர்க்கே நடந்தாள்,Thirukolurkkay nadandhaal - திருக்கோளூரை நோக்கியே நடந்து சென்றாள்,
எம்மை ஒன்றும் நினைத்திலன்,Emmai ondrum ninaithilan - எங்களை ஒரு பொருளாக மதித்திலன்
3302திருவாய்மொழி || (6-7–உண்ணுஞ் சோறு) (தலைவனது நகர்நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் இரங்குதல் (திருக்கோளூர்)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –எம்பெருமான் பக்கல் அத்யந்தம் பிரவணை யாய் இருக்கிற இவள் சேரியில் உள்ளார் சொல்லும் பழியே பாதேயமாகக் கொண்டு திருக் கோளூருக்கே போனாள் என்கிறாள்.) 10
நினைக்கிலேன் தெய்வங்காள்! நெடுங் கண் இள மான் இனிப் போய்
அனைத்துலகு முடைய அரவிந்த லோசனனை
தினைத் தனையும் விடாள் அவன் சேர் திருக் கோளூர்க்கே
மனைக்கு வான் பழியும் நினையாள் செல்ல வைத்தனளே.-6-7-10
தெய்வங்கள்,Dheivangal - தெய்வங்களே!
நினைக்கிலேன்,Ninaikkilen - எனக்கு ஒன்றும் தோன்றவில்லை,
நெடு கண் இளமான்,Nedu kann ilamaan - பெருத்த கண்களையுடைய இளமான் போன்ற என் மகள்
இனி போய்,Ini poi - இப்போது சென்று
அனைத்து உலகும் உடைய,Anaiththu ulagam udaiya - ஸர்வலோக ஸ்வாமியான
அரவிந்த லோசனனை,Aravinda losananai - செந்தாமரைக் கண்ணனை
தினை தனையும் விடாள்,Thinai thanaiyum vidaal - சிறிது போதும் விடாதவளாய்க் கொண்டு
அவன் சேர் திருக்கோளூர்க்கே,Avan ser thirukolurkkay - அவன் வர்த்திக்கும் திருக்கோளூரை நோக்கியே
செல்ல வைத்தனள்,Sella vaiththanal - சடக்கெனச் சென்றாள்,
மனைக்கு வான் பழியும் நினையான்,Manaikku vaan pazhiyum ninaiyaan - தன் குடிக்கு இது பெரிய பழிப்பாகுமென் பதையும் நினைத்திலள்.
3303திருவாய்மொழி || (6-7–உண்ணுஞ் சோறு) (தலைவனது நகர்நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் இரங்குதல் (திருக்கோளூர்)) (நிகமத்தில் இப்பத்தும் வல்லார் இட்ட வழக்காய் இருக்கும் திருநாடு என்கிறார்) 11
வைத்த மா நிதியாம் மது சூதனையே அலற்றிக்
கொத்தலர் பொழில் சூழ் குருகூர்ச் சட கோபன் சொன்ன
பத்து நூற்றுள் இப் பத்து அவன் சேர் திருக் கோளூர்க்கே
சித்தம் வைத்துரைப்பார் திகழ் பொன்னுல காள்வாரே.–6-7-11
வைத்த மா நிதி ஆம்,Vaitha maa nidhi aam - சேமித்து வைத்த மஹா நிதிபோன்ற
மது சூதனையே அலற்றி,Madhu soodanaie alatri - எம்பெருமானையே வாய்வெருவி கொத்து அலர்பொழில் சூழ் குருகூர் சடகோபன் சொன்ன
கொத்து அலர்பொழில் சூழ் குருகூர் சடகோபன் சொன்ன,Kothu alar pozhil soozh kurugur sadagopan sonna - பூங்கொத்து அலருகிற சோலைகளால் சூழப்பட்ட திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார்க்குத் அருளிச்செய்த
பத்து நூற்றுள்,Pathu nootrul - ஆயிரத்தினுள்ளே
இப் பத்து,ep pathu - இத்திருவாய்மொழியை
அவன் சேர் திருக்கோளூர்க்கே சித்தம் வைத்து,Avan ser thirukolurkkay siththam vaiththu - அவன் வர்த்திக்கிற திருக்கோளூரிலேயே மனம் பதிந்து
உரைப்பார்,Uraippar - உரைக்க வல்லவர்கள்
திகழ்,Thigazh - நித்யமாக விளங்குகின்ற
பொன் உலகு ஆள்வார்,Pon ulagu aalvaar - பரமபதத்தை ஆளப் பெறுவர்கள்.