Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: உய்யவுலகு (11 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
64ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு) (தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்) 1
உய்ய உலகு படைத்து உண்ட மணிவயிறா
ஊழிதொறு ஊழி பல ஆலின் இலையதன்மேல்
பைய உயோகு-துயில் கொண்ட பரம்பரனே
பங்கய நீள் நயனத்து அஞ்சன மேனியனே
செய்யவள் நின் அகலம் சேமம் எனக் கருதி
செல்வு பொலி மகரக் காது திகழ்ந்து இலக
ஐய எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே –1-5-1
உய்ய,Uyya - (ஆத்மாக்கள்) உஜ்ஜீவிக்கைக்காக
உலகு,Ulagu - லோகங்களை
படைத்து,Padaiththu - ஸ்ருஷ்டித்து
உண்ட,Unda - (பின்பு ப்ரளயம் வந்தபோது அவற்றை) உள்ளே வைத்து ரக்ஷித்த
மணி வயிறா,Mani vayiraa - அழகிய வயிற்றை யுடையவளே
பல ஊழி ஊழி தொறு,Pala oozhi oozhi thoru - பல கல்பங்கள் தோறும்
ஆலின் இலை அதன் மேல்,Aalin ilai athan mel - ஆலிலையின் மேல்
பைய,Paiya - மெள்ள
உயோகு துயில் கொண்ட,Uyogu thuyil konda - யோகநித்திரை செய்தருளின
பரம் பரனே,Param parane - பர ஸ்மாத் பரனானவனே!
பங்கயம்,Pangayam - தாமரை மலர் போன்று
நீள்,Neel - நீண்டிருக்கின்ற
நயனம்,Nayanam - திருக் கண்களையும்
அஞ்சனம்,Anjanam - மை போன்ற
மேனியனே ஐய,Meniyaane aiya - திருமேனியை யுடைய ஸர்வேச்வரனே!
செய்யவள்,Seyyaval - செந்தாமரை மலரிற் பிறந்த பிராட்டிக்கிருப்பிடமான
நின் அகலம்,Nin akalam - உன் திரு மார்வானது
சேமம் என கருதி,Semam ena karuthi - (இந்நிர்த்தனத்தால் அசையாமல்) ரஷையை உடைத்தாக வேணுமென்று நினைத்துக் கொண்டு
செல்வு பொலி,Selvu poli - ஐச்வர்ய ஸம்ருத்திக்கு ஸூசகங்களான
மகரம்,Makaram - திரு மகரக் குழைகளோடு கூடின
காது,Kaadhu - திருக் காதுகளானவை
திகழ்ந்து இலக,Thigazhnthu ilaga - மிகவும் விளங்கும்படி
எனக்கு,Enakku - எனக்காக
ஒரு கால்,Oru kaal - ஒரு விசை
செங்கீரை ஆடுக,Sengkirei aaduga - செங்கீரை யாடி யருள வேணும்;
ஆயர்கள்,Aayargal - இடையர்களுக்கு விதேயனாய்
போர் ஏறே,Por aerae - போர்செய்ய நின்ற ரிஷபம் போலே செருக்கி யிரா நின்ற கண்ணனே!
ஆடுக ! ஆடுக!!,Aaduga aaduga - ஆடுக ! ஆடுக!!
65ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு) (தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்) 2
கோளரியின்னுருவங்கொண்டுஅவுணனுடலம்
குருதிகுழம்பியெழக்கூருகிரால்குடைவாய்.
மீளஅவன்மகனை மெய்ம்மைகொளக்கருதி
மேலையமரர்பதிமிக்குவெகுண்டுவர
காளநன்மேகமவைகல்லொடு கால்பொழியக்
கருதிவரைக்குடையாக்காலிகள்காப்பவனே.
ஆள. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே–1-5-2
கோன்,Kon - வலிமையை யுடைய
அரியின்,Ariyin - (நா) சிங்கத்தின்
உருவம் கொண்டு,Uruvam kondu - வேஷங்கொண்டு
அவுணன்,Avunan - ஹிரண்யாஸுரனுடைய
உடலம்,Udalam - சரீரத்தில்
குருதி,Kuruthi - ரத்தமானது
குழம்பி எழ,Kuzhambi ezha - குழம்பிக் கிளரும்படியாகவும்
அவன்,Avan - அவ்வஸுரனானவன்
மீள,Meela - மறுபடியும்
மகனை,Maganai - தன் மகனான ப்ரஹ்லாதனை
மெய்ம்மை கொள கருதி,Meimmai kola karuthi - ஸத்யவாதி யென்று நினைக்கும் படியாகவும் திருவுள்ளம் பற்றி
கூர் உகிரால்,Koor ugiraal - கூர்மையான நகங்களாலே
குடைவாய்,Kudaivai - (அவ்வசுரனுடலைக்) கிழித்தருளினவனே!
மேலை,Melai - மேன்மை பொருந்திய
அமரர் பதி,Amarar pathi - தேவேந்திரன்
மிக்கு வெகுண்டு வா,Mikku vekundu vaa - மிகவும் கோபித்துவா (அதனால்)
காளம்,Kaalam - கறுத்த
நில்,Nil - சிறந்த
மேகம் அவை,Megam avai - மேகங்களானவை
கல்லொடு,Kallodu - கல்லோடு கூடின
கார் பொழிய,Kaar poliya - வர்ஷத்தைச் சொரிய
கருதி,Karuthi - (‘இம்மலையே உங்களுக்கு ரக்ஷகம் இச் சோற்றை இதுக்கிடுங்கோள் ‘என்று முன்பு இடையர்க்குத் தான் உபதேசித்ததை) நினைத்து
வரை,Varai - (அந்த) கோவர்த்தநகிரியை
குடையா,Kudaiyaa - குடையாகக்கொண்டு
காலிகள்,Kaaligal - பசுக்களை
காப்பவனே,Kaappavane - ரக்ஷித்தருளினவனே!
ஆன,Aana - (இப்படி ரக்ஷிக்கைக் குறுப்பான) ஆண்பிள்ளைத் தனமுடையவனே!
எனக்கு,Enakku - எனக்காக
ஒரு கால்,Oru kaal - ஒரு விசை
செங்கீரை ஆடுக,Sengkirei aaduga - செங்கீரை யாடி யருள வேணும்;
ஆயர்கள்,Aayargal - இடையர்களுக்கு விதேயனாய்
போர் ஏறே,Por aerae - போர்செய்ய நின்ற ரிஷபம் போலே செருக்கி யிரா நின்ற கண்ணனே!
ஆடுக ! ஆடுக!!,Aaduga aaduga - ஆடுக ! ஆடுக!!
66ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு) (தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்) 3
நம்முடைநாயகனே. நான்மறையின்பொருளே.
நாவியுள்நற்கமலநான்முகனுக்கு ஒருகால்
தம்மனையானவனே. தரணிதலமுழுதும்
தாரகையின்னுலகும்தடவிஅதன்புறமும்
விம்மவளர்ந்தவனே. வேழமும்ஏழ்விடையும்
விரவியவேலைதனுள்வென்றுவருமவனே.
அம்ம. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே.1-5-3
ம்முடை,Mmudai - எங்களுக்கு
நாயகனே,Naayakane - நாதனானவனே!
நால் மறையின்,Naal maraiyin - நாலு வேதங்களுடைய
பொருளே,Porule - பொருளாயிருப்பவனே!
நாபியுள்,Naabiyul - திருநாபியில் முளைத்திராநின்ற
நல் கமலம்,Nal kamalam - நல்ல தாமரைமலரிற் பிறந்த
நான்முகனுக்கு,Naanmukhanukku - பிரமனுக்கு
ஒருகால்,Orukaal - அவன் வேதத்தைப் பறிகொடுத்துத் திகைத்த காலத்தில்
தம்மனை ஆனவனே,Thammanai aanavane - தாய் போலே பரிந்து அருளினவனே!
தரணி தலம் முழுதும்,Tharani thalam muzuthum - பூமி யடங்கலும்
தாரகையின் உலகும்,Thaarakaiyin ulakum - நக்ஷத்ர லோக மடங்கலும்
தடவி,Thadavi - திருவடிகளால் ஸ்பர்சித்து
அதன் புறமும்,Athan puramum - அதற்குப் புறம்பாயுள்ள தேசமும்
விம்ம,Vimm - பூர்ணமாம்படி
வளர்ந்தவனே,Valarnthavane - த்ரிவிக்ரமனாய் வளர்ந்தவனே!
வேழமும்,Vezhamum - குவலயாபீடமென்ற யானையும்
ஏழ் விடையும்,Ezh vidaiyum - ஏழு ரிஷபங்களும்
விரவிய,Viraviya - (உன்னை ஹிம்ஸிப்பதாக) உன்னோடு வந்து கலந்த
வேலைதனுள்,Velaithanul - ஸமயத்திலே
வென்று,Vendru - (அவற்றை) ஜயித்து
வருமவனே,Varumavane - வந்தவனே!
அம்ம,Amma - ஸ்வாமியானவனே!
எனக்கு,Enakku - எனக்காக
ஒரு கால்,Oru kaal - ஒரு விசை
செங்கீரை ஆடுக,Sengkirei aaduga - செங்கீரை யாடி யருள வேணும்;
ஆயர்கள்,Aayargal - இடையர்களுக்கு விதேயனாய்
போர் ஏறே,Por aerae - போர்செய்ய நின்ற ரிஷபம் போலே செருக்கி யிரா நின்ற கண்ணனே!
ஆடுக ! ஆடுக!!,Aaduga aaduga - ஆடுக ! ஆடுக!!
67ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு) (தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்) 4
வானவர்தாம்மகிழவன்சகடமுருள
வஞ்சமுலைப்பேயின் நஞ்சமதுஉண்டவனே.
கானகவல்விளவின்காயுதிரக்கருதிக்
கன்றதுகொண்டெறியும்கருநிறஎன்கன்றே.
தேனுகனும்முரனும்திண்திறல்வெந்நரகன்
என்பவர்தாம்மடியச்செருவதிரச்செல்லும்
ஆனை. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே–1-5-4
வானவர் தாம்,Vaanavar thaam - தேவர்கள்
மகிழ,Magizha - மகிழும்படியாகவும்
வல் சகடம்,Val sakadam - வலியுள்ள சகடாஸுரன்
உருள,Urula - உருண்டு உருமாய்ந்து போம்படியாகவும்
வஞ்சம்,Vancham - வஞ்சனையை உடையளான
பேயின்,Peyin - பூதனையினுடைய
முலை,Mulai - முலை மேல் தடவிக் கிடந்த
நஞ்சு,Nanj - விஷத்தை
அமுது உண்டவனே,Amudhu undavane - அம்ருதத்தை அமுது செய்யுமா போலே அமுது செய் தருளினவனே!
கானகம்,Kaanagam - காட்டிலுள்ளதான
வல்,Val - வலிமை பொருந்திய
விளவின்,Vilavin - விளாமரத்தினுடைய
காய்,Kaai - காய்களானவை
உதிர,Udhira - உதிரும்படி
கருதி,Karuthi - திருவுள்ளத்திற் கொண்டு
கன்று அது கொண்டு,Kanru adhu kondu - கன்றான அந்த வத்ஸாஸுரனைக் கையில் கொண்டு
எறியும்,Eriyum - (விளவின் மேல்) எறிந்தவனாய்
கரு நிறம்,Karu niram - கறுத்த நிறத்தை யுடையனாய்
என் கன்றே,En kanrae - என்னுடைய கன்றானவனே!
தேனுகனும்,Thenukanum - தேனுகாஸுரனும்
முரனும்,Muranum - முராஸுரனும்
திண் திறல்,Thin thiral - திண்ணிய வலிவை யுடையனாய்
வெம்,Vem - கொடுமை யுடையனான
நரகன்,Naragan - நரகாஸுரனும்
என்பவர் தாம்,Enbavar thaam - என்றிப்படி சொல்லப்படுகிற தீப்பப் பூண்டுகளடங்கலும்
மடிய,Madiya - மாளும்படியாக
செரு,Seru - யுத்தத்திலே
அதிர,Athira - மிடுக்கை உடையயனாய்க் கொண்டு
செல்லும்,Sellum - எழுந்தருளுமவனான
ஆனை,Aanai - ஆனை போன்ற கண்ணனே!
எனக்கு,Enakku - எனக்காக
ஒரு கால்,Oru kaal - ஒரு விசை
செங்கீரை ஆடுக,Sengkirei aaduga - செங்கீரை யாடி யருள வேணும்;
ஆயர்கள்,Aayargal - இடையர்களுக்கு விதேயனாய்
போர் ஏறே,Por aerae - போர்செய்ய நின்ற ரிஷபம் போலே செருக்கி யிரா நின்ற கண்ணனே!
ஆடுக ! ஆடுக!!,Aaduga aaduga - ஆடுக ! ஆடுக!!
68ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு) (தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்) 5
மத்தளவும்தயிரும்வார்குழல்நன்மடவார்
வைத்தனநெய்களவால்வாரிவிழுங்கி ஒருங்கு
ஒத்தஇணைமருதம்உன்னியவந்தவரை
ஊருகரத்தினொடும்உந்தியவெந்திறலோய்.
முத்தினிளமுறுவல்முற்றவருவதன்முன்
முன்னமுகத்தணியார்மொய்குழல்களலைய
அத்த. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுக–1-5-5
வார் குழல்,Vaar kuzhal - நீண்ட மயிர்முடியை யுடையராய்
நல் மடவார்,Nal madavaar - நன்மையையும் மடப்பத்தையுமுடையரான ஸ்த்முகனாலே
வைத்தன,Vaiththana - சேமித்து வைக்கப்பட்டவையாய்
மத்து,Mathu - மத்தாலே
அளவும்,Alavum - அளாவிக் கடைகைக்கு உரிய
தயிரும்,Thayirum - தயிரையும்
நெய்,Ney - நெய்யையும்
களவால்,Kalavaal - திருட்டு வழியாலே
வாரி,Vaari - கைகளால் அள்ளி
விழுங்கி,Vizhungi - வயிறார உண்டு
உன்னிய,Unniya - உன்னை நலிய வேணும் என்னும் நினைவையுடையராய்
ஒருங்கு,Orungu - ஒருபடிப்பட
ஒத்த,Otha - மனம் ஒத்தவர்களாய்
இணை மருதம்,Inai marutham - இரட்டை மருதமரமாய்க் கொண்டு
வந்தவரை,Vanthavarai - வந்துநின்ற அஸுரர்களை
ஊரு கரத்தினொடும்,Ooru karathinodum - துடைகளாலும் கைகளாலும்
உந்திய,Unthiya - இரண்டு பக்கத்திலும் சரிந்து விழும்படி தள்ளின
வெம்திறவோய்,Vem thiravoi - வெவ்விய வலிவை யுடையவனே!
அத்த,Atha - அப்பனே!
முத்து,Muthu - திருமுத்துக்கள் தோன்றும்படி
இன்,In - இனிதான
இள முறுவல்,Ila muruval - மந்தஹாஸமானது
முற்ற,Mutra - பூர்ணமாக
வருவதன் முன்,Varuvathan mun - வெளிவருவதற்கு முன்னே
முன்னம் முகத்து,Munnam mugaththu - முன் முகத்திலே
அணி ஆர்,Ani aar - அழகு மிகப் பெற்று
மொய்,Moi - நெருங்கி யிரா நின்ற
குழல்கள்,Kuzhalgal - திருக் குழல்களானவை
அலைய,Alaiya - தாழ்ந்து அசையும்படி
எனக்கு,Enakku - எனக்காக
ஒரு கால்,Oru kaal - ஒரு விசை
செங்கீரை ஆடுக,Sengkirei aaduga - செங்கீரை யாடி யருள வேணும்;
ஆயர்கள்,Aayargal - இடையர்களுக்கு விதேயனாய்
போர் ஏறே,Por aerae - போர்செய்ய நின்ற ரிஷபம் போலே செருக்கி யிரா நின்ற கண்ணனே!
ஆடுக ! ஆடுக!!,Aaduga aaduga - ஆடுக ! ஆடுக!!
69ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு) (தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்) 6
காயமலர்நிறவா. கருமுகில்போலுருவா.
கானகமாமடுவில்காளியனுச்சியிலே
தூயநடம்பயிலும்சுந்தரஎன்சிறுவா.
துங்கமதக்கரியின்கொம்புபறித்தவனே.
ஆயமறிந்துபொருவான்எதிர்வந்தமல்லை
அந்தரமின்றியழித்தாடியதாளிணையாய்.
ஆய. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே.–1-5-6
காய மலர்,Kaaya malar - காயாம் பூப் போன்ற
நிறவா,Niravaa - நிறத்தை யுடையவனே!
கரு முகில் போல்,Karu mugil pol - காள மேகம் போன்ற
உருவா,Uruvaa - ரூபத்தை யுடையவனே
கானகம்,Kaanagam - காட்டில்
மா மடுவில்,Maa maduvil - பெரிய மடுவினுள்ளே கிடந்த
காளியன்,Kaaliyan - காளிய நாகத்தினுடைய
உச்சியிலே,Uchiyile - தலையின் மீது
தூய,Thooya - மனோஹரமான
நடம்,Nadam - நர்த்தநத்தை
பயிலும்,Pailum - செய்தருளின
சுந்தர,Sundara - அழகையுடையவனே!
என் சிறுவா,En siruvaa - எனக்குப் பிள்ளை யானவனே!
துங்கம்,Thungam - உன்னதமாய்
மதம்,Madham - மதத்தை யுடைத்தான
கரியின்,Kariyin - குவலயாபீடமென்னும் யானையினது
கொம்பு,Kombu - தந்தங்களை
பறித்தவனே,Pariththavane - முறித்தருளினவனே!
ஆயம் அறிந்து,Aayam arindhu - (மல்ல யுத்தம்) செய்யும் வகையறிந்து
பொருவான்,Poruvaan - யுத்தம் செய்வதற்காக
எதிர் வந்த,Ethir vantha - எதிர்த்து வந்த
மல்லை,Mallai - மல்லர்களை
அந்தரம் இன்றி,Antharam indri - (உனக்கு) ஒரு அபாயமுமில்லாதபடி
அழித்து,Azhiththu - த்வம்ஸம்செய்து
ஆடிய,Aadiya - (இன்னம் வருவாருண்டோ என்று) கம்பீரமாய் ஸஞ்சரித்த
தான் இணையாய்,Thaan inaiyaai - திருவடிகளை யுடையவனே!
ஆய,Aaya - ஆயனே!
எனக்கு,Enakku - எனக்காக
ஒரு கால்,Oru kaal - ஒரு விசை
செங்கீரை ஆடுக,Sengkirei aaduga - செங்கீரை யாடி யருள வேணும்;
ஆயர்கள்,Aayargal - இடையர்களுக்கு விதேயனாய்
போர் ஏறே,Por aerae - போர்செய்ய நின்ற ரிஷபம் போலே செருக்கி யிரா நின்ற கண்ணனே!
ஆடுக ! ஆடுக!!,Aaduga aaduga - ஆடுக ! ஆடுக!!
70ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு) (தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்) 7
துப்புடையயார்கள்தம்சொல்வழுவாதுஒருகால்
தூயகருங்குழல்நல்தோகைமயிலனைய
நப்பினைதன்திறமாநல்விடையேழவிய
நல்லதிறலுடையநாதனும்ஆனவனே.
தப்பினபிள்ளைகளைத்தனமிகுசோதிபுகத்
தனியொருதேர்கடவித்தாயொடுகூட்டிய என்
அப்ப. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே. –1-5-7
துப்பு உடை,Thuppu udai - நெஞ்சில் கடினத் தன்மை யுடையரான
ஆயர்கள் தம்,Aayargal tham - இடையர்களுடைய
சொல்,Sol - வார்த்தையை
வழுவாது,Vazhuvaadhu - தப்பாமல்
ஒரு கால்,Oru kaal - ஒரு காலத்திலே
தூய,Thooya - அழகியதாய்
கரு,Karu - கறுத்திரா நின்றுள்ள
குழல்,Kuzhal - கூந்தலையுடையளாய்
நல் தோகை,Nal thogai - நல்ல தோகையையுடைய
மயில் அனைய,Mayil anaiya - மயில்போன்ற சாயலை யுடையளான
நப்பின்னை தன் திறமா,Nappinnai than thiramaa - நப்பின்னைப் பிராட்டிக்காக
நல்,Nal - (கொடுமையில்) நன்றான
விடைஏழ்,Vidai ezh - ரிஷபங்களேழும்
அவிய,Aviya - முடியும்படியாக
நல்ல திறல் உடைய,Nalla thiral udaiya - நன்றான மிடுக்கை யுடையனாய்
நாதன் ஆனவனே,Naadhan aanavane - அவ்விடையர்களுக்கு ஸ்வாமியானவனே!
தன்,Than - தன்னுடைய
மிகு சோதி,Migu sothi - நிரவதிக தேஜோரூபமான் பரமபதத்திலே
புக,Puga - செல்லும்படியாக
தனியே,Thaniye - தனியே
ஒரு,Oru - ஒப்பற்ற
தேர்,Ther - தேரை
கடலி,Kadali - கடத்தி
தப்பின,Thappina - கை தப்பிப்போன
பிள்ளைகளை,Pillaihalai - வைதிகன் பிள்ளைகளை
தாயொடு கூட்டிய,Thaaiodu kootiya - தாயோடு கூட்டின
என் அப்ப,En appa-en appane - என் அப்பனே!
எனக்கு,Enakku - எனக்காக
ஒரு கால்,Oru kaal - ஒரு விசை
செங்கீரை ஆடுக,Sengkirei aaduga - செங்கீரை யாடி யருள வேணும்;
ஆயர்கள்,Aayargal - இடையர்களுக்கு விதேயனாய்
போர் ஏறே,Por aerae - போர்செய்ய நின்ற ரிஷபம் போலே செருக்கி யிரா நின்ற கண்ணனே!
ஆடுக ! ஆடுக!!,Aaduga aaduga - ஆடுக ! ஆடுக!!
71ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு) (தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்) 8
உன்னையும்ஒக்கலையில்கொண்டுதமில்மருவி
உன்னொடுதங்கள்கருத்தாயினசெய்துவரும்
கன்னியரும்மகிழக்கண்டவர்கண்குளிரக்
கற்றவர்தெற்றிவரப்பெற்றஎனக்குஅருளி
மன்னுகுறுங்குடியாய். வெள்ளறையாய். மதிள்சூழ்
சோலைமலைக்கரசே. கண்ணபுரத்தமுதே.
என்னவலம்களைவாய். ஆடுகசெங்கீரை
ஏழுலகும்முடையாய். ஆடுகஆடுகவே. –1-5-8
மன்னு,Mannu - (ப்ரளயத்துக்குமழியாமல்) பொருந்தி யிருக்கக் கடவ
குறுங்குடியாய்,Kurungudiyai - திருக் குறுங்குடியிலே எழுந்தருளி யிருக்குமவனே!
வெள்ளறையாய்,Vellaraiyai - திரு வெள்ளறையிலே வர்த்திக்குமவனே!
மதிள் சூழ்,Mathil soozh - மதிலாலே சூழப்பட்ட
சோலை மலைக்கு,Solai malaikku - திருமாலிருஞ்சோலை மலைக்கு
அரசே,Arase - அதிபதியானவனே!
கண்ணபுரத்து,Kannapuraththu - திருக் கண்ண புரத்திலே நிற்கிற
அமுதே,Amudhe - அம்ருதம் போன்றவனே!
என் அவலம்,En avalam - என் துன்பங்களை
களைவாய்,Kalaivai - நீக்குபவனே!
உன்னை,Unnai - (மகோ உதாரனான ) உன்னை
ஒக்கலையில்,Okkalaiyil - இடுப்பிலே
கொண்டு,Kondu - எடுத்துக் கொண்டு
தம் இல்,Tham il - தங்கள் அகங்களிலே
மருவி,Maruvi - சேர்ந்து
உன்னொடு,Unnodu - உன்னோடு
தங்கள்,Thangal - தங்களுடைய
கருத்து ஆயின செய்து,Karuthu aayina seythu - நினைவுக்குத் தக்கபடி பரிமாறி
வரும்,Varum - மறுபடியும் கொண்டு வாரா நிற்கிற
கன்னியரும்,Kanniyarum - இளம்பெண்களும்
மகிழ,Magizha - (இச் செங்கீரையைக் கண்டு) ஸந்தோஷிக்கும்படியாகவும்
கண்டவர்,Kandavar - (மற்றும்) பார்த்தவர்களுடைய
கண்,Kan - கண்களானவை
குளிர,Kulira - குளிரும்படியாகவும்
கற்றவர்,Katravar - (கவி சொல்லக்) கற்றவர்கள்
தெற்றி வர,Thetri vara - பிள்ளைக் கவிகள் தொடுத்து வரும்படியாகவும்
பெற்ற,Petra - உன்னை மகனாகப் பெற்ற
எனக்கு,Enakku - என் விஷயத்திலே
அருளி,Aruli - கிருபை செய்து
செங்கீரை ஆடுக-;,Sengkirei aaduga - செங்கீரை ஆடுக-;
ஏழ் உலகும்,Ezh ulagum - ஸப்த லோகங்களுக்கும்
உடையாய்,Udaiyai - ஸ்வாமியானவளே!
ஆடுக ஆடுக-.,Aaduga aaduga - ஆடுக ! ஆடுக!!
72ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு) (தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்) 9
பாலொடுநெய்தயிர்ஒண்சாந்தொடுசண்பகமும்
பங்கயம்நல்லகருப்பூரமும்நாறிவர
கோலநறும்பவளச்செந்துவர்வாயினிடைக்
கோமளவெள்ளிமுளைப்போல்சிலபல்லிலக
நீலநிறத்தழகாரைம்படையின்நடுவே
நின்கனிவாயமுதம்இற்றுமுறிந்துவிழ
ஏலுமறைப்பொருளே. ஆடுகசெங்கீரை
ஏழுலகும்முடையாய். ஆடுகஆடுகவே –1-5-9
மறை,Marai - வேதத்தினுடைய
ஏலும்,Ealum - தகுதியான
பொருளே,Porule - அர்த்தமானவனே!
பாலொடு,Paalodu - பாலோடே கூட
நெய்,Ney - நெய்யும்
தயிர்,Thayir - தயிரும்
ஒண் சாந்தொடு,Onn saanthodu - அழகிய சந்தநமும்
செண்பகமும்,Senbagamum - செண்பகம் முதலிய மலர்களும்
பங்கயம்,Pangayam - தாமரைப் பூவும்
நல்ல,Nalla - உத்தமமான
கருப்பூரமும்,Karuppooramum - பச்சைக் கர்ப்பூரமுமாகிய இலை
நாறி வர,Naari vara - கலந்து பரிமளிக்க
கோலம்,Kolam - அழகிய
நறு பவளம்,Naru pavalam - நற் பவளம் போல்
செம்,Sem - அழகியதாய்
துவர்,Thuvar - சிவந்திருக்கிற
வாயின் இடை,Vaayin idai - திருவதரத்தினுள்ளே
கோமளம்,Komalam - இளையதான
வெள்ளி முளை போல்,Velli mulai pol - வெள்ளி முளை போலே
சில பல்,Sila pal - சில திரு முத்துக்கள்
இலக,Ilaga - விளங்க
நீலம் நிறத்து,Neelam nirathu - நீல நிறத்தை யுடைத்தாய்
அழகு ஆர்,Azhagu aar - அழகு நிறைந்திரா நின்ற
ஐம்படையின் நடுவே,Aimbadaiyin naduve - பஞ்சாயுதத்தின் நடுவே
நின்,Nin - உன்னுடைய
கனி,Kani - கொவ்வைக் கனி போன்ற
வாய்,Vaai - அதரத்தில் ஊறுகின்ற
அமுதம்,Amudham - அம்ருத ஜலமானது
இற்று முறிந்து விழ,Itru murinthu vizha - இற்றிற்று விழ
ஆடுக-.,Aaduga - ஆடுக-.
73ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு) (தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்) 10
செங்கமலக்கழலில்சிற்றிதழ்போல்விரலில்
சேர்திகழாழிகளும்கிண்கிணியும் அரையில்
தங்கியபொன்வடமும்தாளநன்மாதுளையின்
பூவொடுபொன்மணியும்மோதிரமும்கிறியும்
மங்கலஐம்படையும்தோல்வளையும்குழையும்
மகரமும்வாளிகளும்சுட்டியும்ஒத்திலக
எங்கள்குடிக்கரசே. ஆடுகசெங்கீரை
ஏழுலகும்முடையாய். ஆடுகஆடுகவே. –1-5-10
எங்கள் குடிக்கு,Engal kudikku - எங்கள் வம்சத்துக்கு
அரசே,Arase - ராஜாவானவனே!
செம் கமலம்,Sem kamalam - செந்தாமரைப் பூப் போன்ற
கழலில்,Kalazhil - திருவடிகளில்
சிறு இதழ் போல்,Siru idhazh pol - (அந்தப் பூவினுடைய) உள்ளிதழ் போலே சிறுத்திருக்கிற
விரலில்,Viralil - திரு விரல்களில்
சேர் திகழ்,Ser thigal - சேர்ந்து விளங்கா நின்ற
ஆழிகளும்,Aazhilgalum - திருவாழி மோதிரங்களும்
கிண் கிணியும்,Kin kiniyum - சதங்கைகளும்
அரையில் தங்கிய,Araiyil thangiya - அரையில் சாத்தி யிருந்த
பொன் வடமும்,Pon vadamum - பொன் அரை நாணும்
(பொன்) தாள,Pon thaal - பொன்னால் செய்த காம்பையுடைய
நல்,Nal - நல்லதான
மாதுளையின் பூவொடு,Mathulaiyin poovodu - மாதுளம் பூக் கோவையும்
பொன் மணியும்,Pon maniyum - (நடு நடுவே கலந்து கோத்த) பொன் மணிக் கோவையும்
மோதிரமும்,Mothiramum - திருக்கை மோதிரங்களும்
சிறியும்,Siriyum - (மணிக் கட்டில் சாத்தின) சிறுப் பவள வடமும்
மங்கலம்,Mangalam - மங்களாவஹமான
ஐம்படையும்,Aimpadaiyum - பஞ்சாயுதமும்
தோள் வளையும்,Thol valaiyum - திருத் தோள் வளைகளும்
குழையும்,Kuzhaiyum - காதணிகளும்
மகரமும்,Magaramum - மகர குண்டலங்களும்
வாளிகளும்,Vaaligalum - (திருச் செவி மடல் மேல் சாத்தின) வாளிகளும்
சுட்டியும்,Suttiyum - திரு நெற்றிச் சுட்டியும்
ஒத்து,Othu - அமைந்து
இலக,Ilaga - விளங்கும்படி
ஆடுக. ஆடுக.,Aaduga aaduga - ஆடுக. . . ஆடுக.
74ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு) (தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்) 11
அன்னமும்மீனுருவும்ஆளரியும்குறளும்
ஆமையுமானவனே. ஆயர்கள்நாயகனே.
என்அவலம்களைவாய். ஆடுகசெங்கீரை
ஏழுலகும்முடையாய். ஆடுகவாடுகவென்று
அன்னநடைமடவாள்அசோதையுகந்தபரிசு
ஆனபுகழ்ப்புதுவைப்பட்டனுரைத்ததமிழ்
இன்னிசைமாலைகள்இப்பத்தும்வல்லார் உலகில்
எண்திசையும்புகழ்மிக்குஇன்பமதெய்துவரே. –1-5-11
அன்னமும்,annamum - ஹம்ஸ ரூபியாயும்
மீன் உருவும்,meen uruvum - மத்ஸ்ய ரூபியாயும்
ஆள் அரியும்,aal ariyum - நர ஸிம்ஹ ரூபியாயும்
குறளும்,kuRalum - வாமந ரூபியாயும்
ஆமையும்,aamaiyum - கூர்ம ரூபியாயும்
ஆனவனே,aanavane - அவதரித்தவனே!
ஆயர்கள்,aayargal - இடையர்களுக்கு
நாயகனே,naayakane - தலைவனானவனே!
என் அவலம்,en avalam - என் துன்பத்தை
களைவாய்,kaLaiyaai - நீக்கினவனே!
செங்கீரை ஆடுக,senkeerai aaduga - செங்கீரை ஆட வேணும்
ஏழ் உலகும்,ezh ulagum - ஸப்த லோகங்களுக்கும்
உடையாய்,udaiyaai - ஸ்வாமி யானவனே!
ஆடுக ஆடுக என்று,aaduga aaduga enRu - பலகாலுமாடவேணும் என்று
அன்னம் நடை,annam nadai - ஹம்ஸ கதியை யுடையனாய்
மடவாள்,maDavaal - நற்குணமுடையளான
அசோதை,asodhai - யசோதைப் பிராட்டியாலே
உகந்த,ugandha - உகந்த சொல்லப் பட்ட
பரிசு,parisu - ப்ரகாரத்தை
ஆன,aana - பொருந்திய
புகழ்,pugazh - புகழை யுடையரான
புதுவை பட்டன்,puduvai paTTan - பெரியாழ்வார்
உரைத்த,uraittha - அருளிச் செய்த
இன் இசை,in isai - இனிய இசையை யுடைய
தமிழ் மாலைகள்,thamizh maalaigal - தமிழ்த் தொடைகளான
இ பத்து,i paththu - இப் பத்துப் பாசுரங்களையும்
வல்லார்,vallaar - ஓத வல்லவர்கள்
உலகில்,ulakil - இந்த லோகத்தில்
எண் திசையும்,eN thisaikum - எட்டுத் திசைகளிலும் (பரந்த)
புகழ்,pugazh - கீர்த்தியையும்
மிகு இன்பமது,migu inbamathu - மிக்க இன்பத்தையும்
எய்துவர்,eydhuththavar - பெறுவார்கள்.