Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: எங்கானலகங்கழிவாய் (11 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3623திருவாய்மொழி || (9-7–எங்கானலகங்கழிவாய்) (எம் பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக்களத்தே பறவைகளைத் தூதுவிடல் (திருமூழிக்களம்)) (பறவைகளைத் தூதுவிடுகிற பதிகமானாலும், ஆசாரியர்களே இங்குப் பறவைகளாகக் கருதப்படுகிறார் களென்பதை இம் முதற் பாட்டில் தெளிய வைத்தருளுகிறாராழ்வார்.) 1
எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்
செங்கால மட நாராய் திரு மூழிக் களத்து உறையும்
கொங்கார் பூம் துழாய் முடி எம் குடக் கூத்தர்க்கு என் தூதாய்
நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே–9-7-1
எம்கானல் அகம் கழிவாய்,Emkaanl akam kazhivai - எங்கள் உத்யானத்தில் உள்ளிருக்கிற கழியிலே
இரை தேர்ந்து,Irai therndhu - இறைதேடி
இங்கு இனிது அமரும்,Ingu inidhu amarum - இங்கே பொருந்தி வர்த்திக்கிற
செம் கால மட நாராய்,Sem kaala madha naaraai - சிவந்த காலையுடைய அழகிய நாரையே!
திருமூழிக் களத்து உறையும்,Thirumoozhik kalaththil uraiyum - திருமூழிக்களத்திலே நித்யவாஸம் பண்ணுமவனாய்
கொங்கு ஆர் பூ துழாய் முடி,Kongu ar poo thuzhaay mudi - தேன் மிகுந்த திருத்துழாயை முடியிலே அணிந்தவனான
எம் குடக்கூத்தற்கு,Em kudakkooththarku - குடக்கூத்தாடும் எம்பெருமானுக்கு
என் தூது ஆய்,En thoodu aayi - என் தூதாய்ச்சென்று (திரும்பி வந்து)
அமரோடே,Amaroadae - உன்னைச் சேர்ந்தவர்களோடுஙகூட
நும் கால்கள்,Num kaalgkal - (எனக்காக வழிநடந்த) உங்களுடைய கால்களை
என் தலைமேல்,En thalai mel - எனது தலைமீது
கெழுமீரோ,Kazhumeero - சேர்க்கிறீர்களா? (சேர்க்க வேணும்)
3624திருவாய்மொழி || (9-7–எங்கானலகங்கழிவாய்) (எம் பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக்களத்தே பறவைகளைத் தூதுவிடல் (திருமூழிக்களம்)) (திருமூழிக்களத்திலே தாமும் தாமுகந்த அடியார்களுமாயெழுந்தருளியிருக்குமிருப்பிலே நானும் வந்து அடிமை செய்யப் பெறலாகாதோ? அந்த கோஷ்டியிலே அந்வயிக்கை நான் அயோக்யனோ வென்று கேளுங்கோளென்று சில குருகினங்களைக் குறித்துச் சொல்லுகிறாள்.) 2
நுமரோடும் பிரியாதே நீரும் நும் சேவலுமாய்
அமர் காதல் குருகினங்காள் அணி மூழிக் களத்து உறையும்
எமராலும் பழிப்புண்டு இங்கு என் தம்மா விழிப்புண்டு
தமரோடு அங்கு உறைவார்கு தக்கிலமே கேளீரே –9-7-2
மரோடும் பிரியாதே,Marodum piriyathae - உங்களினத்தார்களை வீட்டுப் பிரியாமல்
நீரும் நும் சேவலும்ஆய்,Neerum num sevalum aayi - தம்பதிகளாய்க் கொண்டு
அமர்காதல் குருகு இனங்காள்,Amar kaadhal kurugu inanghaal - கூடிக் களித்துவர்த்திக்கும்படியான ப்ரணயத்தையுடைய குருகினங்களே
அணி மூழிக்களத்து உறையும்,Ani moozhik kalaththil uraiyum - திருமூழிக்களத்திலே நித்யவாஸம் பண்ணுகிற
தம்மால் இழிப்புண்டு,Thammaal izhippundu - தம்மால் உபேக்ஷிக்கப்பட்டு (அது காரணமாக)
எமலாரும் பழிப்புண்டு,Emalaarum pazhippundu - எம்மைச் சேர்ந்தவர்களாலும் பழிக்கப்பட்டு
இங்கு என்,Ingu en - இருக்குமில்விருப்பில் என்ன ப்ரயோஜனம்? (இப்படியிருப்பதை விடமுடிந்துபோவதே நன்றல்லவா?
தமரோடு அங்கு உறைவார்க்கு,Thamarodu anggu urivaarkku - தம்முடைய அஸாதாரண பரிஜனத்தோடே அங்கே நித்யவாஸம் பண்ணுகிறவர்க்கு
தக்கிலம் ஏ,Thakkilam ee - நாம் தகுந்திருக்கமாட்டோமோ? (அவருடைய அநுபவம் நமக்குத்தகாதாவென்ற) கேளுங்கள்.
3625திருவாய்மொழி || (9-7–எங்கானலகங்கழிவாய்) (எம் பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக்களத்தே பறவைகளைத் தூதுவிடல் (திருமூழிக்களம்)) (திருவாய்மொழியாயிரத்தினுள் தூது விடுகிற பதிகங்கள் நான் கென்று சொன்னோமே; அவற்றும் ஒவ்வொரு பாட்டு உயிராக வைக்கப்படுகிறது, இப்பதிக்த்திற்கு உயிரான பாட்டு இது; ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி -சில கொக்கினங்களையும் குருகினங்களையும் நோக்கி தன் அழகைக் காண் கைக்கு நாங்கள் யோக்யதை யுடையோம் அல்லோமோ -என்று கேளீர் -என்கிறாள்) 3
தக்கிலமே கேளீர்கள் தடம் புனல் வாய் இரை தேரும்
கொக்கினங்காள் குருகினங்காள் குளிர் மூழிக் களத்து உறையும்
செக்கமலத்து அலர்போலும் கண் கை கால் செங்கனி வாய்
அக்கமலத்து இலைபோலும் திரு மேனி அடிகளுக்கே–9-7-3
தட புனல் வாய்,Thada punal vaay - பெரிய ஜலாசயத்திலே
இரைதேரும்,Iraiththarum - இரை தேடித்திரினிற் கொக்கு இனங்காள் குருகு இனங்காள்!
குளிர் மூழிக்களத்து உறையும்,Kulir moozhik kalaththil uraiyum - குளிர்ந்த திருமூழிக்களத்திலே நித்ய வாஸம் பண்ணுமவராய்
செம் கமலத்து அலர் போலும் கண் கைகால்,Sem kamalaththil alar poyum kan kaigal - செந்தாமரைப் பூப்போன்ற திருக்கண் திருக்கை திருவடிகளை யுடையராய்
செம் கனி வாய்,Sem kani vaay - சிவந்து களிர்ந்த திருப்பவளத்தை யுடையராய்
அக் கமலத்து இலை போலும் திருமேனி,Akk kamalaththil ilai poyum thirumeni - அந்தத் தாமரையின் இலையை யொத்த திருமேனியையுமுடையரான
அடிகளுக்கு,Adigalukku - ஸ்வாமிக்கு
தக்கிலமே கேளீர்கள்,Thakkilam keleerkal - நாங்கள் தகுந்ததிருக்கமாட்டோ மாவென்று கேளுங்கள்
3626திருவாய்மொழி || (9-7–எங்கானலகங்கழிவாய்) (எம் பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக்களத்தே பறவைகளைத் தூதுவிடல் (திருமூழிக்களம்)) (சில மேகங்களை நோக்கி ‘என் வார்த்தையை அவனுக்குச் சொன்னால் உங்களுக்கு ஏதேனும் தண்டனை நேருமோ?’ என்கிறாள்.) 4
திருமேனி அடிகளுக்குத் தீ வினையேன் விடு தூதாய்
திரு மூழிக் களம் என்னும் செழு நகர் வாய் அணி முகில்காள்
திரு மேனி அவட்கு அருளீர் என்றக்கால் உம்மைத்தன்
திருமேனி ஒளி அகற்றித் தெளி விசும்பு கடியுமே–9-7-4
அணிமுகில்காள்,Animukilkalkal - அழகிய மேகங்களே
திருமூழிக்களம் என்னும் செழு நகர் வாய்,Tirumoolikkalam ennum chelu nagar vay - திருமூழிக்கவாமென்கிற திவ்ய க்ஷேத்திரத்திலே வர்த்திப்பவராய்
திருமேனி அடிகளுக்கு,Tirumeni adigalukku - சிறந்த திருமேனியையுடையரான ஸ்வாமிக்கு
தீ வினையேன் விடு தூது ஆய்,Ti vinayen vidu tutu ay - பாபியான நான் விடுகிற தூதாய்ச் சென்று
அவட்கு திருமேனி அருளீர் என்றக்கால்,Avadku tirumeni arulir enrakkal - பராங்குச நாயகிக்கு உமது திரு மேனியைக் கொடுத்தருளீர் என்று ஒரு வார்த்தை சொன்னால்
உம்மை,Ummai - இவ்வுபகாரம் செய்கிற உங்களை
தம் திருமேனி ஒளி அகற்றி,Tam tirumeni oli akatri - உங்கள் வடிவிலுள்ள புகாரை மாற்றி
தெளி விசும்பு கடியுமே,Teli vicumpu kadiyume - நிர்மலமான ஆகாசத்தில் நீங்கள் வர்த்திக்கமுடியாதபடி தண்டிப்பரோ
3627திருவாய்மொழி || (9-7–எங்கானலகங்கழிவாய்) (எம் பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக்களத்தே பறவைகளைத் தூதுவிடல் (திருமூழிக்களம்)) (ஸ்ரீ ஆறாயிரப்படி –அவளுக்கு அருளீர் என்ன அமையுமோ -இன்னாருக்கு அருளீர் என்ன வேண்டாவோ என்னில் யாவள் ஒருத்தியுடைய நெஞ்சை யுமக்குத் திரு நாடாகக் கொண்டு நீர் உறைகிறீர்- அவளுக்கு அருளீர் என்று சொல்லி கோள் என்கிறாள்) 5
தெளி விசும்பு கடித்து ஓடித் தீ வளைத்து மின் இலகும்
ஒளி முகில்காள் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடர்குத்
தெளிவிசும்பு திரு நாடாத் தீ வினையேன் மனத்து உறையும்
துளிவார்கள் குழலார்க்கு என் தூதுரைத்தல் செப்புமினே–9-7-5
தெளிவிசும்பு கடிது ஒடி,Telivicumpu kadidu odi - நிர்மலமான ஆகாசத்திலே விரைந்து பறந்து சென்று
தீ வளைத்துமின் இலகும்,Ti valaittumin ilakum - கொள்ளி வட்டம் போலே அழகிய மின் விளங்கப்பெற்ற
ஒளி முகில்காள்,Oli mukilkalkal - அழகிய மேகங்களே
திரு மூழிக்களத்து உறையும்,Tiru moolikkalattu uraiyum - திருமூழிக்களத்தில் நித்யவாஸஞ் செய்தருள்கின்ற
ஒண் சுடர்க்கு,On sudarkku - அழகிய தேஜோராசியாயும்
தீ வினை யேன் மனத்து,Theevinai yen manattu - பாபியான என்னுடைய மனத்திலே
தெளிவிசும்பு திருநாடு ஆ உறையும்,Telivicumpu tirunadu a uraiyum - தெளிவிசும்பான திருநாட்டிலே பண்ணும் வியாமோஹத்தைப்பண்ணி வாத்திப்பவராயும்
துளி வார்கள் குழலார்க்கு,Tuli varkal kuzhalarkku - துளித்து ஒழுகின்ற மதுவையுடைய மயிர் முடியையுடையார்யுமிருக்கிற பெரியவர்க்கு
என் தூதுஉரைத்தல் செய்யுமின்,En tuturaithal seyyumin - எனது தூதுமொழியைச் சொல்லுங்கள்
3628திருவாய்மொழி || (9-7–எங்கானலகங்கழிவாய்) (எம் பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக்களத்தே பறவைகளைத் தூதுவிடல் (திருமூழிக்களம்)) (ஸ்ரீ ஆறாயிரப்படி –தூ மொழி வாய் வண்டினங்காள்-என்னுடைய சுடர் வளையும் கலையும் இழந்தேன் என்று சொல்ல வேணும் – சொல்லும் இடத்தில் அவன் உங்கள் வார்த்தையை அநாதரியாமே பிராட்டி சந்நிதியில் வைத்துச் சொல்ல வேணும் -என்கிறாள்.) 6
தூதுரைத்தல் செப்புமின்கள்-தூ மொழி வாய் வண்டினங்காள்
போதிரைத்து மது நுகரும்-பொழில் மூழிக் களத்து உறையும்
மாதரைத் தம் மார்பகத்தே-வைத்தார்க்கு என் வாய் மாற்றம்
தூதுரைத்தல் செப்புதிரேல்-சுடர் வளையும் கலையுமே–9-7-6
தூ மொழி வாய்வண்டு இனங்காள்,Tu mozhi vayvandu inankal - தூய மொழியை வாயிலேயுடைய வண்டினங்களே
போது இரைத்து மது நுகரும் பொழில்,Podu iraithu madu nukarum pozhil - பூக்களிலே இரைத்துக்கொண்டு மதுபானம் பண்ணும் பொழில்களையுடைய
மூழிக்களத்து உறையும்,Moolikkalattu uraiyum - திருமூழிக்களத்திலே வாழ்பவராய்
தம்மார்வகத்தே மாதரை வைத்தார்க்கு,Tamarvakatthe matarai vaitharkku - தமது திருமார்பிலே பிராட்டியைத்தாக்கி நிற்பவராய் பெரியவர்க்கு
என்வாய் மாற்றம்,En vay maatram - என் வாய்ப்பாசுரமான
தூது உரைத்தல் செப்புதீர் எல்,Tutu uraithal sepputhir el - தூது வாக்யத்தைச் சொல்லப் பார்த்தீர்களாகில்
சுடர் வளையும் கனையும்,Sudar valaiyum kanaiyum - (எனது) அழகிய கைவனைகளையும் சேலையையும் பற்றி
தூது உரைத்தல் செப்பு மின்கள்,Tutu uraithal seppu mingal - தூதுக்குப் பாசுரமாகச் சொல்லுங்கோள்
3629திருவாய்மொழி || (9-7–எங்கானலகங்கழிவாய்) (எம் பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக்களத்தே பறவைகளைத் தூதுவிடல் (திருமூழிக்களம்)) (சில குருகினங்களைக் குறித்துச் சொல்லுகிறாள்–எம் பெருமானைக்கண்டு, நீர் சிலரோடே கலந்து அவர்களைத் துறந்து அதுவே புகழாக வீற்றிருக்குமிவ்விருப்பு தருமோமென்று சொல்லுங்கோள் என்கிறாள்.) 7
சுடர் வளையும் கலையும் கொண்டு-அரு வினையேன் தோள் துறந்த
படர் புகழான் திரு மூழிக்-களத்து உறையும் பங்கயக் கண்
சுடர் பவள வாயனைக் கண்டு-ஒரு நாள் ஒரு தூய் மாற்றம்
படர் பொழில் வாய்க் குருகினங்காள்-எனக்கு ஓன்று பணியீரே–9-7-7
படர் பொழில்வாய் குருகு இனங்காள்,Padar pozhil vay kurugu inankal - பரந்து சோலையகத்தே வாழ்கிற குயிலினங்களே
சுடர் வளையும் கலையும் கொண்டு,Sudar valaiyum kalaiyum kondu - (எனது) அழகிய கைவளையையும் சேலையையும் கைக்கொண்டு
அருவினையேன் தோள் துறந்த,Aruvinaiyen thol thuranda - போக்கவரிய பாவஞ்செய்த என்னை விட்டுப்பிரிந்த
படர் புகழான்,Padar pugazhan - பரந்த புகழையுடையவனும்
பங்கயம் கண்,Pangayam kan - செந்தாமரைக்கண்ணனும்
சுடர்பவளம் வாயனை கண்டு,Sudar pavalam vayanai kandu - அழகிய பவழம்போன்ற வாயையுடையவனுமான எம்பெருமானைக் கண்டு
எனக்கு,Enakku - எனக்காக
ஒரு நாள்,Oru naal - ஒரு கால்
ஓர் தூய் மாற்றம் ஒன்று பணியீர்,Or thuya maatram onru paniyeer - ஒரு நல்வார்த்தை சொல்ல வேணும்.
3630திருவாய்மொழி || (9-7–எங்கானலகங்கழிவாய்) (எம் பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக்களத்தே பறவைகளைத் தூதுவிடல் (திருமூழிக்களம்)) (அவருடைய வடிவழகுக்கு என்ன அபாயம் நேருகிறதோவென்று அஞ்ச வேண்டாதபடி. ஸீரக்ஷிதாமாக வொரு திவ்ய தேசத்திலே யெழுந்தருளியிருந்தார்; இனி நம்முடைய ஆர்த்தி தீர்க்குமத்தனையே வேண்டுவது; ஆன பின்பு என்னுடைய ஆர்த்தியை அறிவியுங்கோளென்று சில வண்டுகளையும் தும்பிகளையுங்குறித்துச் சொல்லுகிறான். ஆறாயிரப்படி காண்மின்; – “வண்டினங்காள் தும்பிகாள்! உன்னழகைக் காணப்பெறாதே அவளிழந்துபோமித்தனையோ வென்று சொல்லிகோளென்கிறான்” என்று.) 8
எனக்கு ஓன்று பணியீர்காள்-இரும் பொழில் வாய் இரை தேர்ந்து
மனக்கு இன்பம் பட மேவும்-வண்டினங்காள் தும்பிகாள்
கனக்கொள் திண் மதிள் புடை சூழ்-திரு மூழிக் களத்து உறையும்
புனக்கொள் காயாமேனிப்-பூந்துழாய் முடியார்க்கே–9-7-8
இரு பொழில் வாய்,Iru pozhil vay - பெரிய சோலையிலே
இரை தேர்ந்து,Irai therndhu - இரையான மதுவைத்தேடிக் கொண்டு
மனக்கு இன்பம் பட மேவும்,Manakku inbam pada mevum - மனதுக்கு இனிமையுண்டாம்படி கலந்துவர்த்திக்கிற
வண்டு இனங்கன காள் தும்பிகாள்,Vandu inankan kaal thumbikal - வண்டுகளே ! தும்பிகளே !
கனம் கொள் திண் மதின் புடை சூழ்,Kanam kol thin madhin pudai soozh - கனத்துத் திண்ணிய மதிவாலே சுற்றும் சூழப்பட்ட
திருமூழிக்களத்து,Thirumoozhikkalathu - திருமூழிக்களத்திலே வாழ்பவராய் உறையும்
புனம் கோள் கரியா மேனி,Punam kol kariya meni - தன்னிலத்தில் வளருகிற காயாம்பூப் போன்ற மேனி நிறத்தையுடையவராய்
பூ துழாய் முடியார்க்கு,Poo thulasi mudiyaarkku - பூந்துழாயை முடியிலே அணித் துள்ளவரான பெரியவர்க்கு
எனக்கு ஒன்று பணியீர்கள்,Enakku onru paniyeergaal - எனக்காக வொரு வார்த்தை சொல்லவேணும்.
3631திருவாய்மொழி || (9-7–எங்கானலகங்கழிவாய்) (எம் பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக்களத்தே பறவைகளைத் தூதுவிடல் (திருமூழிக்களம்)) (எம்பெருமானுடைய வடிவழகுதான் நினைக்க நினைக்க ஆழ்வாரை யுருக்குகின்றதென்னுமிடம் நன்கு தெரிவிக்கப்படுகிறது இப்பாட்டில்.) 9
பூந்துழாய் முடியார்க்கு பொன் ஆழிக் கையார்க்கு
ஏந்து நீர் இளங்குருகே திரு மூழிக் களத்தார்க்கு
ஏந்து பூண் முலை பயந்து என் இணை மலர்க் கண் நீர் ததும்ப
தாம் தம்மைக் தம்மைக் கொன்டு அகல்தல் தகவன்று என்று உரையீரே–9-7-9
நீர் ஏந்து இள குருகே,Neer endhu ila kuruke - நீராலே யேந்தப்படுகிற இளங்குருகே
பூ துழாய் முடியார்க்கு,Poo thulasi mudiyaarkku - திருத்துழாயைத் திருமுடியிலே அணிந்துள்ளவரும்
பொள் ஆழி கையாருக்கு,Pol azhi kaiyaarukku - அழகிய திருவாழியைக் கையிலேயுடையவரும்
திருமூழிக்களத் தாருக்கு,Thirumoozhikkalath thaarukku - திருமூழிக்களத்தில் வாழ்பவருமான பெரியவர்க்கு
பூண் ஏந்து முலை பயந்து,Poon endhu mulai payandhu - ஆபரணமணிந்த முலைகள் வைவர்ணிய மடைந்து
என் இணை மலர் நீர்ததும்ப,En inai malar neerdathumba - மலர்போன்ற எனது கண்ணைகள் நீர்மல்கும்படி
தாம் தம்மை கொண்டு அகல்தல்,Thaam thammai kondu agalthal - அவர்தாம் தம்முடைய திருமேனியையுங்கொண்டு அகன்று போவதானது
நகவு அன்று என்று உரையீர்,Nakavu anru endru uraiyeer - தருமமன்று என்று சொல்லுங்கோள்
3632திருவாய்மொழி || (9-7–எங்கானலகங்கழிவாய்) (எம் பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக்களத்தே பறவைகளைத் தூதுவிடல் (திருமூழிக்களம்)) (நான் முடிவதற்கு முன்னே என்னிலைமையைத் திருமூழிக்களத்தெம்பெருமானுக்கு உரையீரென்று சில அன்னங்களையிரக்கிறாள்.) 10
தகவன்று என்று உரையீர்கள் தடம் புனல் வாய் இரை தேர்ந்து
மிக வின்பம் பட மேவும் மெல் நடைய அன்னங்காள்
மிக மேனி மெலிவு எய்தி மேகலையும் ஈடு அழிந்து என்
அகமேனி ஒழியாமே திரு மூழிக் களத்தார்க்கே–9-7-10
தடபுனல் வாய்,Thadapunal vaai - விசாலமான நீர்நிலங்களிலே
இரை தேர்ந்து,Irai therendhu - இரை தேடிக்கொண்டு
மிக இன்பம் பட மெவும்,Miga inbam pada mevum - பேரானந்தமாகச் சேர்ந்து வாழ்கிற
மெல நடைய அன்னங்காள்,Mela nadaiya annangaal - மெல்லிய நடையையுடைய அன்னங்களே
மேனி மிக மெலிவு எய்தி,Meni miga melivu eydhi - சரீரம் மிகவும் மெலிவடைந்து
மேகலையும் ஈடு அழிந்து,Megalaiyum eedu azhindhu - மேகலையும் தங்காதபடியாகி (அதற்கு மேலே)
என் அகமேனி ஒழியாமே,En agameni ozhiyamae - என் அந்தரங்க ஸ்வரூபம் குலையாத பழிக்கு
திருமூழிக்களத் தார்க்கு,Thirumoozhikkalath thaarkku - திருமூழிக்களத்துறையும் பெருமாளுக்கு
தகவு அன்று என்று உரையீர்கள்,Thakavu anru endru uraiyeergal - இப்படியுபேக்ஷிப்பது நியயாமன்றென்று சொல்லும் கோள்
3633திருவாய்மொழி || (9-7–எங்கானலகங்கழிவாய்) (எம் பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக்களத்தே பறவைகளைத் தூதுவிடல் (திருமூழிக்களம்)) (இத்திருவாய்மொழியானது தன்னைப்பயிலுமவர்கட்கு பகவத்விச்லேஷ ஹேலுவான ஸம்ஸார வியாதியையறுக்கு மென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11
ஒழிவின்றித் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடரை
ஒழிவில்லா அணி மழலைக் கிளி மொழியாள் அலற்றிய சொல்
வழு வில்லா வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த
அழிவு இல்லா ஆயிரத்து இப்பத்தும் நோய் அறுக்குமே–9-7-11
ஒழிவு இன்றி,Ozhivu indri - நிரந்தரமாக
திருமூழிக்களத்து உறையும்,Thirumoozhikkalathu uraiyum - திருமூழிக்களத்திலே வாழ்கிற
ஒண் சுடரை,On sudarai - தேஜோமூர்த்தியான எம்பெருமானை
ஒழிவு இல்லா அணி மழலை கிளி மொழி யாள் அலற்றிய சொல்,Ozhivu illa ani mazhalai kili mozhi yaal alatriya sol - மபிரிந்து தரிக்கமாட்டாத வொரு மென்கிளிமொழித் தலைவி சொன்ன சொல்லாகவைத்து
வழு இல்லாவண் குருகூர் சடகோபன் உரைத்த,Vazhu illaavan kurukoor sadagopan uraitha - அன்பில் குறைவில்ல தவரான ஆழ்வார் ஆழ்ந்து அருளிர் செய்க
அழிவு இல்லா ஆயிரம்,Azhivu illa aayiram - நித்யவேதமான இவ்வாயிரத்தினுள்
இப்பத்தும்,Ippaththum - இப்பதிகம்
நோய் அதுக்கும்,Noi athukkum - ஸம்ஸார வியாதியைத் தீர்த்துக் கொடுக்கும்