| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 286 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஏழாம் திருமொழி - ஐயபுழுதி (திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு நற்றாய் இரங்கும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 1 | ஐய புழுதி உடம்ப ளைந்து இவள் பேச்சு மலந்த லையாய் செய்ய நூலின் சிற்றாடை செப்பி னுடுக்கவும் வல்ல ளல்லள் கையி னில் சிறு தூதை யோடு இவள் முற்றில் பிரிந்துமிலள் பைய ரவணைப் பள்ளி யானோடு கை வைத்து இவள் வருமே–3-7-1 | இவள்,Eval - இச் சிறு பெண்ணானவள் ஐய புழுதியை,Ayya Puzhudhiyai - அழகிய புழுதியை உடம்பு அளைந்து,Udambu Alaindhu - உடம்பிலே பூசிக் கொண்டு பேச்சும் அலந்தலை ஆய்,Pechchum Alandhalai Aay - ஒன்றோடொன்று அந்வயியாத பேச்சை யுமுடையளாய் செய்ய நூலின் சிறு ஆடை,Seyya Noolin Siru Aadai - சிவந்த நூலாலே செய்விக்கப்பட்ட சிற்றாடையை செப்பன்,Seppan - செம்மையாக உடுக்கவும் வல்லன் அல்லன்,Udukkavum Vallan Allan - [அரையில் தங்கும்படி] உடுக்கவும் மாட்டாதவளாயிரா நின்றாள்; இவள்,Eval - இப்படியொரு பருவத்தை யுடையளான இவள் சிறு தூதையோடு,Siru Thoodhaiyodu - (மணற்சோறாக்கும்) சிறிய தூதையையும் முற்றிலும்,Mutrilum - சிறு சுளகையும் கையினில்,Kaiyinil - கையில் நின்றும் பிரிந்து இவள்,Pirindhu Ival - விட்டொழிகின்றிலள்; இவள்,Eval - இப்படிக்கொத்த விளையாட்டை யுடைய இவள் பை அரவு அணை பள்ளியானொடு,Pai Aravu Anai Palliyaanodu - சேஷ சாயியான எம்பெருமானுடனே கை வைத்து வரும்,Kai Vaitthu Varum - கை கலந்து வாரா நின்றாள். |
| 287 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஏழாம் திருமொழி - ஐயபுழுதி (திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு நற்றாய் இரங்கும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 2 | வாயில் பல்லும் எழுந்தில மயிரும் முடி கூடிற்றில சாய்விலாத குறுந்தலைச் சில பிள்ளைகளோ டிணங்கி தீயிணக்கிணங்காடி வந்து இவள் தன்னன்ன செம்மை சொல்லி மாயன் மா மணி வண்ணன் மேல் இவள் மாலுறு கின்றாளே–3-7-2 | வாயில்,Vayil - (இம் மகளுடைய) வாயில் பல்லும் எழுந்தில,Pallum Ezhundhila - பற்களும் முளைக்க வில்லை; மயிரும் முடி கூடிற்றில,Mayirum Mudi Koodittrila - மயிரும் சேர்த்து முடிக்கும்படி கூடவில்லை. இவள்,Eval - இப்படிப்பட்ட இவள் இவண்,Evan - இந்தப் பருவத்தில் சாய்வு இலாத,Saivu Ilaadha - தலை வணக்கமில்லாத குறுந்தலை,Kurunthalai - தண்மையில் தலை நின்ற சில பிள்ளைகளோடு,Sila Pillailaodu - சில பெண் பிள்ளைகளோடு இணங்கி,Enangi - ஸஹ வாஸம் பண்ணி தீ இணக்கு இணங்காடி வந்து,Thee Inakku Inangaadi Vandhu - (அதற்குப் பலனாக) பொல்லாத இணக்கத்தை (களவுப் புணர்ச்சியை)ச் செய்து வந்து (இத்தனை போது எங்குப் போனாய்? யாரோடு இணங்கி வந்தாய்? என்று நான் கேட்டால்) தன் அன்ன,Than Anna - தனக்கு ஒத்த வார்த்தைகளை செம்மை சொல்லி,Semmai Solli - கபடமற்ற வார்த்தை போல் தோற்றும்படி சொல்லி இவள்; மாயன் மா மணிவண்ணன் மேல்,Maayan Maa Manivannan Mel - அற்புதச் செய்கைகளையும் நீலமணி நிறத்தையுமுடையனான கண்ணபிரான் மாலுறுகின்றாள்,Maal Urugindraal - மோஹப்படுகிறாள். |
| 288 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஏழாம் திருமொழி - ஐயபுழுதி (திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு நற்றாய் இரங்கும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 3 | பொங்கு வெண் மணல் கொண்டு சிற்றிலும் முற்றத் திழைக்க லுறில் சங்கு சக்கரம் தண்டு வாள் வில்லு மல்லது இழைக்க லுறாள் கொங்கை இன்னம் குவிந்தெ ழுந்தில கோவிந்த னோடு இவளை சங்கை யாகி என் னுள்ளம் நாள் தொறும் தட்டுளுப்பாகின்றதே–3-7-3 | பொங்கு,Pongu - (இவள்)நுண்ணியதாய் வெள்,Vel - வெளுத்திரா நின்ற மணல் கொண்டு,Manal Kondu - மணலாலே முற்றத்து,Mutrathu - முற்றத்திலே சிற்றில்,Sittril - கொட்டகத்தை இழைக்கலுறிலும்,Izhaikkalurilum - நிர்மாணஞ் செய்யத் தொடங்கினாலும் சங்கு சக்கரம் தண்டு வாள் வில்லும் அல்லது,sangu chakaram Thandu Vaal Villum Alladhu - சங்கு முதலிய எம்பெருமான் சின்னங்களை யொழிய (மற்றொன்றையும்) இழைக்கலுறாள்,Izhaikkalurall - இழைக்க நினைப்பதில்லை; இன்னம்,Innam - (இவளுக்கோ வென்றால்) இன்றளவும் கொங்கை,Kongai - முலைகளானவை குவிந்து எழுந்தில,Kuvindhu Ezhundhila - முகம் திரண்டு கிளர்ந்தன வில்லை; இவளை,Ivalai - இப்படி இளம் பருவத்தளான இவளை கோவிந்தனோடு சங்கை ஆகி,Govindhanoodu Sangai Aagi - கண்ணபிரானோடு சம்பந்த முடையவளாகச் சங்கித்து என் உள்ளம்,En Ullam - என் நெஞ்சமானது நாள் தொறும்,Naal Thorum - ஸர்வ காலமும் தட்டுளுப்பாகின்றது,Thattuluppaagindrathu - தடுமாறிச் செல்லா நின்றது. |
| 289 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஏழாம் திருமொழி - ஐயபுழுதி (திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு நற்றாய் இரங்கும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 4 | ஏழை பேதை ஓர் பாலகன் வந்து என் பெண் மகளை யெள்கி தோழிமார் பலர் கொண்டு போய்ச் செய்த சூழ்ச்சியை யார்க்குரைக்கேன் ஆழியா னென்னு மாழ மோழையில் பாய்ச்சி அகப்படுத்தி மூழை யுப்பறியாத தென்னும் மூதுரையு மிலளே–3-7-4 | ஏழை,Ezhaai - சாபல்யமுடையவளும் பேதை,Paedhai - அறியாமை யுடையவளும் ஓர் பாலகன்,Or Balagan - இளம் பருவத்தை யுடையளுமான என் பெண் மகளை,En Pen Magalai - எனது பெண்பிள்ளையை தோழிமார் பலர் வந்து,Thozhimaaar Palar Vandhu - பல தோழிகள் அணுகி வந்து எள்கி,Elgi - (விளையாட வரவேணுமென்று) வஞ்சித்து கொண்டு போய்,Kondu Poi - அழைத்துக் கொண்டு போய் ஆழியான் என்னும்,Aazhiyan Ennum - ஸர்வேச்வரன் என்று ப்ரஸித்தமான ஆழம் மோழையில்,Aazham Mozhaiyil - ஒருவராலும் நிலைகொள்ள வொண்ணாத கீழாற்றில் பாய்ச்சி,Paaychchi - உள்ளுறத் தள்ளி அகப்படுத்தி,Agappaduthi - (அதிலே) அகப்படுத்தி செய்த சூழ்ச்சியை,Seidha Soozhchiyai - (இவ்வாறு) செய்த கபடத் தொழில்களை ஆர்க்கு உரைக்கேன்,Aarkku Uraikkaen - யாரிடம் முறையிடுவேன்?; மூழை உப்பு அறியாதது என்னும் மூதுரையும் இவள்,Moozhai Uppu Ariyaadhadhu Ennum Moodhuraiyum Ival - (இம் மகளோ வென்றால்) “அகப்பையானது (பதார்த்தத்தின்) ரஸத்தை அறியாது” என்கின்ற பழ மொழியின் அறிவையும் தன்னிடத்து உடையவளல்லள். |
| 290 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஏழாம் திருமொழி - ஐயபுழுதி (திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு நற்றாய் இரங்கும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 5 | நாடும் ஊரும் அறியவே போய் நல்ல துழாயலங்கள் சூடி நாரணன் போமிட மெல்லாம் சோதித்துழி தருகின்றாள் கேடு வேண்டு கின்றார் பலருளர் கேசவனோடு இவளை பாடு காவலிடுமி னென்றென்று பார் தடுமாறினதே–3-7-5 | நாடும்,Naadum - விசேஷ ஜ்ஞாநிகளும் ஊரும்,Oorum - ஸாமான்ய ஜ்ஞாநிகளும் அறிய,Ariya - அறியும்படியாக [பஹிரங்கமாக] போய்,Poi - வீட்டை விட்டுப் புறம்பே போய் நல்ல,Nalla - பசுமை மாறாத துழாய் அலங்கில்,Thuzhaai Alangil - திருத் துழாய் மாலையை சூடி,Soodi - (பகவத் ப்ரஸாதமென்று சொல்லிக் கொண்டு) தரித்துக் கொண்டு நாரணன் போம் இடம் எல்லாம்,Naaranan Pom Idam Ellaam - எம்பெருமான் போகிற இடம் முழுவதும் சோதித்து உழி தருகின்றாள்,Sodhiththu Uzhi Tharugindraal - தேடித் திரியா நின்றாள்; கேடு வேண்டுகின்றார்,Kaedu Vaendugindraar - இக்குடிக்குக் கேடு விளைய வெணுமென்று கோருமவர்கள் பலர் உளர்,Palar Ular - பல பேருண்டு; இவளை,Evalai - (ஆகையால்) எம்பெருமானைத் தேடித் திரிகிற இவளை கேசவனோடு,Kesavanodu - (அந்த) என்பெருமாளோடு (சேர்ப்பதற்காக அந்தப்புரத்திற் கொண்டாடுவோம்.) பாடு காவல் இடுமின்,Paadu Kaaval Idumin - அருகு காவலிடுங்கள் என்று என்னை,Endru Ennai - என்று இதையே பல காலும் சொல்லிக் கொண்டு பார்,Paar - பூமியிலுள்ள அநுகூல ஜநமானது தடுமாறினது,Thadumaarinadhu - மனங்குழம்பிச் செல்லா நின்றது |
| 291 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஏழாம் திருமொழி - ஐயபுழுதி (திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு நற்றாய் இரங்கும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 6 | பட்டம் கட்டிப் பொற்றோடு பெய்து இவள் பாடகமும் சிலம்பும் இட்டமாக வளர்த்தெடுத் தேனுக்கு என்னோடு இருக்கலுறாள் பொட்டப் போய்ப் புறப்பட்டு நின்று இவள் பூவைப்பூ வண்ணா வென்னும் பட்ட வார் குழல் மங்கைமீர் இவள் மாலுறுகின்றாளே–3-7-6 | வட்டம் வார்,Vattam Vaar - சுருட்சியையும் நீட்சியையும் உடைய குழல்,Kuzhal - கூந்தலையுடைய மங்கைமீர்,Mangaimeer - மாதர்காள்!, பட்டம் கட்டி,Pattam Katti - (இம் மகளுக்கு) (நெற்றிக்கு அணியான)பட்டத்தைக் கட்டியும் பொன் தோடு,Pon Thodu - (காதுக்கு அணியான) பொன் தோட்டையும் பாடகமும் சிலம்பும்,Paadagamum Silambum - (கழலணியான) பாடகத்தையும் சிலம்பையும் பெய்து,Peithu - இட்டும் இவள் இட்டம் ஆக,Eval Ettam Aaga - இவளுடைய இஷ்டாநுஸாரமாக வளர்த்து எடுத்தேனுக்கு என்னோடு,Valarthu Eduthtenukku Ennodu - (இவளை) வளர்த்தெடுத்த என்னோடு இவள் இருக்கலுறாள்,Eval Erukkaluraal - இவள் இருக்க மாட்டேனென்கிறாள்; பொட்ட,Potta - (பின்னை ஏன் செய்கின்றாளெனில்;) திடீரென்று போய்,Poi - என்னைக் கைவிட்டுப் போய் புறப்பட்டு நின்று,Purappattu Nindru - (எல்லாருங்காணத் தெருவிலே) புறப்பட்டு நின்று பூவைப் பூ வண்ணா என்னும்,Poovaip Poo Vannaa Ennum - “காயாம்பூப்போன்ற மேனி நிறமுடைய கண்ணபிரானே!” என்று வாய் விட்டுக் கூப்பிடா நின்றாள்; இவள் மாலுறுகின்றாள்,Eval Maalurugindraal - (அவ்வளவில் அவன் அருகுவாரா தொழியில்) இவள் மோஹத்தை யடைகின்றாள். |
| 292 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஏழாம் திருமொழி - ஐயபுழுதி (திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு நற்றாய் இரங்கும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 7 | பேசவும் தெரியாத பெண்மையின் பேதையேன் பேதை இவள் கூசமின்றி நின்றார்கள் தம்மெதிர் கோல் கழிந்தான் மூழையாய் கேசவா வென்றும் கேடிலீ யென்றும் கிஞ்சுக வாய் மொழியாள் வாசவார் குழல் மங்கைமீர் இவள் மாலுறு கின்றாளே–3-7-7 | வாசம் வார்,Vaasam Vaar - வாஸனையையும் நீட்சியையுமுடைய குழல்,Kuzhal - கூந்தலையுடைய மங்கைமீர்,Mangaimeer - பெண்காள்! பேதையேன்,Pethaien - பேதைமையை யுடையளான என்னுடைய பேதை,Pethai - பெண் பிள்ளையும் பேசவும் தெரியாத பெண்மையின்,Pesavum Theriyatha Penmaiyin - (தன்னுடைய ஆசாரத்துக்கு ஒரு கெடுதி விளைந்ததாகப் பிறர்) ஒரு வார்த்தை சொன்னாலும் (அதைப்) பொறுக்க மாட்டாத ஸ்த்ரீத்வத்தை யுடையவளும் கிஞ்சுகம் வாய் மொழியாள்,Kinchukam Vaaimozhiyal - கிளியினுடைய வாய்மொழி போன்ற இனிய வாய் மொழியை யுடையவளுமான இவள்,Eval - இவள், நின்றார்கள் தம் எதிர்,Nindraargal Tham Ethir - மர்யாதை தவறாமல் இருக்குமவர்கள் முன்னே, கூசம் இன்றி,Koosam Inri - கூச்சமில்லாமல் கோல் கழிந்தான் மூழை ஆய்,Kol Kazhindhaan Moozhai Aay - கோலை விட்டு நீங்கின அகப்பை போல (என்னோடு உறவற்றவளாய்க் கொண்டு) கேசவனே! என்றும் கேசவா என்றும்,Kesavaa Endrum - கேசவனே! என்றும் கேடு இலீ என்றும்,Kedu Ilee Endrum - அழிவற்றவனே! [அச்யுதனே!] என்றும் வாய் விட்டுச் சொல்லி இவள் மாலுறுகின்றாள்,Eval Maalurugindraal - இவள் மோஹமடையா நின்றாள்; ஏ,A - இரக்கம் |
| 293 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஏழாம் திருமொழி - ஐயபுழுதி (திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு நற்றாய் இரங்கும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 8 | காறை பூணும் கண்ணாடி காணும் தன் கையில் வளை குலுக்கும் கூறை யுடுக்கும் அயர்க்கும் தங் கொவ்வைச் செவ்வாய் திருத்தும் தேறித் தேறி நின்று ஆயிரம் பேர்த் தேவன் திறம் பிதற்றும் மாறில் மா மணி வண்ணன் மேல் இவள் மாலுறுகின்றாளே–3-7-8 | இவள்,Eval - இப் பெண் பிள்ளையானவள் காறை,Kaarai - பொற் காறையை பூணும்,Poonum - (தன் கழுத்தில்) பூணா நின்றாள்; கண்ணாடி காணும்,Kannadi Kaanum - (அக்காறையுங் கழுத்துமான அழகை) கண்ணாடிப் புறத்தில் காணா நின்றாள்; தன் கையில்,Than Kaiyil - தன் கையிலிருக்கிற வளை குலுங்கும்,Valai Kulungum - வளையல்களை குலுக்கா நின்றாள்; கூறை,Koora - புடவையை உடுக்கும்,Udukum - (ஒழுங்குபட) உடுத்துக் கொள்ளா நின்றாள்; (அவன் வரவுக்கு உடலாக இவ்வளவு அலங்கரித்துக் கொண்டவளவிலும் அவ்ன் வரக் காணாமையாலே,) அயர்க்கும்,Ayarkkum - தளர்ச்சி யடையா நின்றாள்; தன் கொவ்வை செம் வாய் திருத்தும்,Than Kovvai Sem Vaai Thiruthum - (மறுபடியுந் தெளிந்து இதற்கு மேலாக அலங்கரித்துக்கொள்ளத் தொடங்கி) கோவக் கனிபோலச் சிவந்துள்ள தன் அதரத்தைத் (தாம்பூல சர்வணாதிகளால்) ஒழுங்கு படுத்தா நின்றாள்; தேறித் தேறி நின்று,Theerith Theeri Nindru - மிகவுந் தெளிந்து நின்று ஆயிரம் பேர் தேவன் திறம் பிதற்றும்,Aayiram Per Devan Thiram Pitharuthum - ஸஹஸ்ர நாமப் பொருளான எம்பெருமானுடைய குணங்களை வாய் புலற்றா நின்றாள்; மாறு இல்,Maaru El - (அதன் பிறகு) ஒப்பற்றவனும் மா மணி வண்ணன் மேல்,Maa Mani Vannan Mel - நீலமணி போன்ற நிறத்தை யுடையனுமான(அக்) கண்ண பிரான் மேல் மாலுறுகின்றாள்,Maalurugindraal - மோஹியா நின்றாள் |
| 294 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஏழாம் திருமொழி - ஐயபுழுதி (திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு நற்றாய் இரங்கும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 9 | கைத்தலத் துள்ள மாடழியக் கண்ணாலங்கள் செய்து இவளை வைத்து வைத்துக் கொண்டு என்ன வாணிபம் நம்மை வடுப் படுத்தும் செய்த் தலை யெழு நாற்றுப் போல் அவன் செய்வன செய்து கொள்ள மைத் தட முகில் வண்ணன் பக்கல் வளர விடுமின்களே–3-7-9 | கைத்தலத்து உள்ள மாடு அழிய,Kaithalathu Ulla Maadu Azhiy - கையிலுள்ள பணத்தைச் செலவழித்து கண்ணாலங்கள் செய்து,Kannaalangal Seidhu - (இவளுக்குச் செய்ய வேண்டிய) கல்யாணங்களைப் பண்ணி இவளை,Evalai - (நமக்கடங்காத) இவளை வைத்து வைத்துக் கொண்டு,Vaithu Vaithukkondu - நியமித்தும் காவலிட்டும் வைத்துக் கொண்டிருப்பதனால் என்ன வாணிபம்,Enna Vaanipam - என்ன பயனுண்டாம்; நம்மை வடுப்படுத்தும்,Nammai Vadupaduthum - (பயனுண்டாகாதொழிவது மன்றி) நமக்கு அவத்யத்தையும் உண்டாக்கும்; செய்தலை எழு நாற்று போல்,Seithalai Ezu Naatru Pol - (என்று தாயாராகிய நான் சொல்ல, இதைக் கேட்ட பந்துக்கள்) ”வயலிலே வளர்ந்த நாற்றை அவ்வயலுக் குடையவன் தன் இஷ்டப்படி விநியோகம் கொள்வது போல, அவள் செய்வன செய்து கொள்ள,Aval Seivana Seidhu Kolla - (இவளையும்) (ஸ்வாமியாகிய)அவன் தான் செய்ய நினைத்தவற்றை (தடையற)ச் செய்து கொள்ளும்படி மை தட முகில் வண்ணன் பக்கல்,Mai Thada Mugil Vannan Pakkal - கறுத்துப் பெருத்த மேகம் போன்ற வடிவுடைய அக் கண்ண பிரானிடத்தில் வளர,Valara - (இவள்) வாழும்படி விடுமின்கள்,Vidumingal - (இவளைக் கொண்டு போய்) விட்டு விடுங்கள் " (என்கிறார்கள் என்று, தாய் தானே சொல்லுகிறபடி.) |
| 295 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஏழாம் திருமொழி - ஐயபுழுதி (திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு நற்றாய் இரங்கும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 10 | பெருப் பெருத்த கண்ணாலங்கள் செய்து பேணி நம் மில்லத் துள்ளே இருத்துவா னெண்ணி நாமிருக்க இவளும் ஒன் றெண்ணுகின்றாள் மருத்துவப் பதம் நீங்கினா ளென்னும் வார்த்தை படுவதன் முன் ஒருப் படுத்திடுமின் இவளை உலகளந்தா னிடைக்கே–3-7-10 | பெருபெருத்த,Peruperutha - (இவளுக்கு) மிகவும் விசேஷமான கண்ணாலங்கள் செய்து,Kannaalangal Seidhu - கல்யாண காரியங்களைச்செய்து பேணி,Paeni - அன்பு பூண்டு நம் இல்லத்துள்ளே,Nam Illathulle - நம் வீட்டுக்குள்ளேயே இருந்துவான் எண்ணி நாம் இருக்க,Irundhuvaan Enni Naam Irukka - (இவளை) இருக்கச் செய்ததாக நாம் நினைத்திருக்க இவளும்,Ivalum - இவளொ வென்றால் ஒன்று எண்ணுகிறாள்,Ondru Ennugiraal - (நம் எண்ணத்திற்கு விபரீதமாக) மற்றொன்றை எண்ணுகிறாள். மருத்துவப்பதம் நீங்கினாலென்னும் வார்த்தைபடுவதன் முன்,Maruthuvapadham Neenginaalennum Vaarthaipaduvathan Mun - (என்று தாயாகிய நான் சொல்ல இதைக் கேட்ட பந்துக்கள்) வயித்தியன் தான் செய்யும் மருந்தில் பதம் பார்த்து செய்யாவிடில் அது கை தவறுவது போல இவள் பதம் பார்த்து நாம் செய்யாமையாலே இவள் கைகழிந்தாளேன்கிற அபவாதம் பிறப்பதற்கு முன். இவளை,Ivalai - இவளை உலகு அளந்தானிடைக்கே,Ulaku Alandhaanidaikke - உலகளந்தருளின கண்ணபிரானிடத்திலேயே(கொண்டு போய்) ஒருபடுத்திடுமின்,Orupaduthidumin - சேர்த்துவிடுங்கள் (என்று கூறியதைத் தாய் கூறுகின்றாள்) |
| 296 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஏழாம் திருமொழி - ஐயபுழுதி (திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு நற்றாய் இரங்கும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 11 | ஞால முற்றும் உண்டு ஆலிலைத் துயில் நாரா யணனுக்கு இவள் மால தாகி மகிழ்ந்தன ளென்று தாயுரை செய்ததனை கோல மார் பொழில் சூழ் புதுவையர்கோன் விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும் வல்லவர்கட்கு இல்லை வரு துயரே-3-7-11 | இவள்,Eval - இப்பெண்பிள்ளை யானவள் ஞாலம் முற்றும் உண்டு,Gnaalam Mutrum Undu - எல்லா வுலகங்களையும் திருவயிற்றிலே வைத்து நோக்கி ஆல் இலை துயில்,Aal Ilai Thuyil - ஒரு ஆலந்தளிரிலே கண் வளர்ந்தருளின நாராயணனுக்கு,Naarayananukku - எம்பெருமான் விஷயத்தில் மால் அது ஆகி,Maal Athu Aagi - மோஹத்தை யுடையளாய் மகிழ்ந்தனள் என்று,Magizhndhanal Endru - (அவனை அணைக்க வேண்டு மென்ற மநோ ரதத்தினால்) மனமுகந்தாள்” என்று தாய் உரை செய்ததனை,Thaai Urai Seidhaththai - தாய் சொல்லியதை கோலம் ஆர்,Kolam Aar - அழகு நிறைந்த பொழில் சூழ்,Pozhil Soozh - சோலைகளாலே சூழப்பட்ட புதுவையர் கோன்,Puthuvaiyar Kon - ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ளவர்க்குத் தலைவரான விட்டுச் சித்தன்,Vittuch Siththan - பெரியாழ்வார் சொன்ன,Sonnna - அருளிச் செய்த மாலை,Maalai - சொல் மாலையாகிய பத்தும்,Paththum - இப்பத்துப் பாட்டையும் வல்லவர்கட்கு,Vallavarkatku - ஓத வல்லவர்களுக்கு வரு துயர் இல்லை,Varu Thuyar Illai - வரக்கூடிய துன்பம் ஒன்றுமில்லை. |