| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2919 | திருவாய்மொழி || 3-3–ஒழிவில் 1 | ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம் தெழி குரல் அருவித் திருவேங் கடத்து எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–3-3-1 | தெழி குரல் அருவி, Thezhi kural aruvi - கம்பீரமான ஓசையையுடைய அருவிகள் பொருந்தின திருவேங்கடத்து, Thiruvengadathu - திருவேங்கடமலையில் எழில் கொள், Ezhil kol - நிறம்பெற்ற எந்தை தந்தை தந்தைக்கு, Endhai thandhai thandhaikku - எமது குலநாதனான பெருமானுக்கு, நாம், Naam - அடியோம் ஒழிவு இல், Ozhivu il - ஓய்வில்லாத காலம் எல்லாம், Kaalam ellaam - காலம் முழுவதும் உடன் ஆய், Udan aay - கூடவே யிருந்து மன்னி, Manni - ஸகல அவஸ்தைகளிலும் பிரியாது நின்று வழு இலா, Valu ila - குற்றமற்ற அடிமை, Adimai - கைங்கரியங்களை செய்ய வேண்டும், Seyya vendum - பண்ணக்கடவோம். |
| 2920 | திருவாய்மொழி || 3-3–ஒழிவில் 2 | எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை வானவர் வானவர் கோனொடும் சிந்து பூமகிழும் திரு வேங்கடத்து அந்தம் இல்புகழ்க் கார் எழில் அண்ணலே.–3-3-2 | வானவர், Vaanavar - நித்யஸூரிகள் வானவர் கோனொடும், Vaanavar koanodum - தங்களில் தலைவரான ஸேனை முதலியரோடு கூட சிந்து, Sindhu - தூவின பூ, Poo - புஷ்பங்கள் மகிழும், Magilum - செவ்விகுன்றாதிருக்கப்பெற்ற திருவேங்கடத்து, Thiruvengadathu - திருமலையில் அந்தம் இல் புகழ், Antham il pugazh - முடிவில்லாத புகழையுடையவனும் கார் எழில், Kaar ezil - நீலநிறத்தழகுடையனுமான அண்ணல், Annal - எம்பெருமான் எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை, Endhai thandhai thandhai thandhaikkum mundhai - எம்குலநாதன் |
| 2921 | திருவாய்மொழி || 3-3–ஒழிவில் 3 | அண்ணல் மாயன் அணிகொள் செந் தாமரைக் கண்ணன் செங்கனி வாய்க் கரு மாணிக்கம் தெண்ணிறை சுனை நீர்த் திரு வேங்கடத்து எண் இல் தொல் புகழ் வானவர் ஈசனே. –3-3-3 | அணிக்கொள், Anikkol - அழகுபொருந்திய செம் தாமரை கண்ணன், Sem thamarai kannan - செந்தாமரை மலர் போன்ற திருக்கண்களையுடையவனும் செம் கனிவாய், Sem kanivai - சிவந்த கனிபோன்ற அதரத்தையுடையவனும் கருமாணிக்கம், Karumaanikkam - நீலரத்னம்போல் திருமேனி விளக்கத்தை யுடையவனும் தென் நிறை சுனை நீர், Then nirai sunai neer - தெளிவையும் நிறைவையுமுடைய சுனைநீர் பொருந்திய திருவேங்கடத்து, Thiruvengadathu - திருமலையில் எண் இல் தொல் புகழ், Enum il thol pugazh - எண்ணிறந்த நித்திய கல்யாண குணங்களையுடையவனும் வானவர் ஈசன், Vaanavar Eesan - நித்யஸூரிகட்குத் தலைவனுமான எம்பெருமான் அண்ணல், Annal - நமக்கு ஸ்வாமியும் மாயன், Maayan - ஆச்சரிய சேஷ்டிதங்களையுடையவனுமானவன் |
| 2922 | திருவாய்மொழி || 3-3–ஒழிவில் 4 | ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது தேசமோ திரு வேங்கடத் தானுக்கு? நீசனேன் நிறைவு ஒன்றுமிலேன் என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே.–3-3-4 | வானவர்க்கு, Vaanavarkku - நித்யஸூரிகளுக்கு ஈசன், Eesan - தலைவன் என்பன், Enban - என்று சொல்லுவேன் என்றால், Endraal - இப்படிச் சொன்னால் நீசனேன் நிறைவு ஒன்றும் இலேன் எண் கண், Neesanen niraivu ondrum ilen en kan - கடைகெட்டவனும் குணபூர்த்தியற்றவனுமான என் விஷயத்தில் பாசம் வைத்த, Paasam vaitha - ஆசாபாசத்தை வைத்தருளினின்ற பரம் சுடர்சோதிக்கு, Param sudarsothikku - நிரவதிக ஜ்யோதிர்மய தின் மங்கள விக்ரஹயுக்தனான திருவேங்கடத்தானுக்கு, Thiruvengadathaanukku - திருவேங்கட முடையானுக்கு அது தேசமோ, Athu dhesamo - நான் சொன்னது ஒரு பெருமையோ? |
| 2923 | திருவாய்மொழி || 3-3–ஒழிவில் 5 | சோதி ஆகி,எல்லா உலகும் தொழும் ஆதி மூர்த்தி என்றால்அளவு ஆகுமோ, வேதியர் முழு வேதத்து அமுதத்தைத் தீது இல் சீர்த் திரு வேங்கடத் தானையே?–3-3-5 | வேதியர் முழு வேதத்து அமுதத்தை , Vethiyar muzhu vedathu amudhathai - வைதிகர்களால் ஓதப்படுகிற ஸகல வேதங்களிலும் பரம போக்யனாக ப்ரதிபாதிக்கப்படுபவனும் தீது இல் சீர் , Theethu il seer - தீது ஒன்றுமில்லாத திருக்குணங்களை யுடையனுமான திருவேங்கடத்தானை , Thiruvengadathaannai - திருமலையப்பனைக் குறித்து சோதி ஆகி , Sothi aagi - சோதிமயமான திருமேனியையுடையனாய் ஆதி , Aadhi - ஸகலஜகத்காரணபூதனான (எல்லா உலகும் தொழும் உலகத்தவர்களெல்லாராலும் தொழப்படுபவனாய்) மூர்த்தி , Moorthi - ஸர்வேச்வரன் (இவன்) என்றால் , Endraal - என்று நான் சொன்னால் (அது) அளவு ஆகுமோ , Alavu aagumo - ஒரு பெருமை யாகுமோ? |
| 2924 | திருவாய்மொழி || 3-3–ஒழிவில் 6 | வேங் கடங்கள் மெய் மேல்வினை முற்றவும், தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார், வேங்கடத்து உறைவார்க்கு நம என்னல் ஆம் கடமை அது சுமந் தார்கட்கே.–3-3-6 | வேங்கடத்து , Vengadathu - திருமலையிலே உறைவார்க்கு , Uraivaarkku - நித்யவாஸஞ்செய்தருளுகிற பெருமானுக்கு நம எனல் ஆம் கடமை அது , Nama enal aam kadamai adhu - நமர் என்று சொல்லுவதாகிற அந்தக் கடமையை சுமந்தார்கட்கு , Sumanthaarkku - வஹிக்கின்றவர்களுக்கு கடங்கள் , Kadangal - அனுபவித்தே தீர்க்கவேண்டிய (பூர்க்ருத) பாபங்களும் மேல்வினை , Melvinai - (ப்ரக்ருதிவாஸநையாலே) இனி விளையக்கூடிய பாவங்களம் (ஆகிய) முற்றவும் , Mutravum - ஸகலபாபங்களும் வேம் , Vem - வெந்துபோயினவென்னும் அழிந்து விடும்: (இப்படி பாவங்கள் தொலையலே) தங்கட்கு நல்லனாவே , Thangatku nallanaave - தாங்கள் அடியவர்களான தாங்கள் ; தங்கள் ஸ்வரூபத்திற்குத் தகுதியானவற்றையே (ஸகங்கரியங்களையே) செய்வார் , Seivaar - செய்யப் பெறுவர்கள். |
| 2925 | திருவாய்மொழி || 3-3–ஒழிவில் 7 | சுமந்து மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு. அமர்ந்து வானவர் வானவர் கோனொடும் நமன்று எழும் திரு வேங்கடம் நங்கட்குச் சமன் கொள் வீடு தரும் தடங் குன்றமே.–3-3-7 | மா , Maa - சிறந்த மலர் , Malar - புஷ்பங்களையும் நீர் , Neer - தீர்த்தத்தையும் சுடர் , Sudar - தீபத்தையும் தூபம் , Thoobam - தூபத்தையும் சுமந்துகொண்டு , Sumandhukondu - ஏந்திக்கொண்டு வானவர் , Vaanavar - தேவர்கள் வானவர் கோ னொடும் , Vaanavar konodum - தங்கள் தலைவனோடுகூட அமர்ந்து நமன்று , Amarndu namandru - அநந்யப்ரயோஜநராய் வணங்கி எழும் , Ezhum - உஜ்ஜீவிக்குமிடமான திருவேங்கடம் , Thiruvengadam - திருவேங்கடமென்கிற தடம் குன்றமே பெரிய திருமலையே நங்கட்கு , Nangatku - நமக்கு சமன் கொள் வீடு , Saman kol veedu - பரமஸாம்யாபத்தி ரூபமான மோஷத்தை தரும் , Tharum - அளிக்கும். |
| 2926 | திருவாய்மொழி || 3-3–ஒழிவில் 8 | குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன், அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன் சென்று சேர் திரு வேங்கட மாமலை ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே.–3-3-8 | குன்றம் ஏந்தி , Kundram endhi - (கோவர்த்தன) மலையைக் குடையாகத் தாங்கிநின்று குளிர் மழை , Kulir mazhai - குளிர்ந்தபெருமழையை காத்தவன் , Kaathavan - தடுத்தவனும் அன்று , Andru - முன்பொரு காலத்தில் ஞாலம் அளந்த பிரான் , Nyaalam alandha piran - உலகங்களையளந்த பிரபுவுமாகிய பரன் , Paran - எம்பெருமான் சென்று சேர் , Sendru ser - வந்து சேர்ந்தவிடமான திருவேங்கட மாமலை ஒன்றமே , Thiruvengata maamalai ondrame - திருமலையொன்றை மாத்திரமே தொழ , Thozha - தொழப்பெறில் நம் வினை , Nam vinai - நமது வினைகள் யாவும் ஓயும் , Ooyum - தொலைந்திடும். |
| 2927 | திருவாய்மொழி || 3-3–ஒழிவில் 9 | ஓயும் மூப்புப் பிறப்பு இறப்புப் பிணி வீயுமாறு செய்வான் திரு வேங்கடத்து ஆயன் நாள்மலராம் அடித் தாமரை வாயுளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே.–3-3-9 | திருவேங்கடத்து ஆயன் தாமரை நாள் மலர் ஆம் , Thiruvengadathu Aayan Thamarai Naal Malar Aam - திருமலையில் வாழ்கிற ஸ்ரீ கிருஷ்ணன் அப்போதலர்ந்த செந்தாமரைப்பூப்போன்ற ஓயும் மூப்பு , Ooyum Moopu - ஓய்வை விளைவிக்கின்ற கிழந்தனமென்ன பிறப்பு , Pirappu - பிறவியென்ன இறப்பு , Irappu - மரணமென்ன அடி , Adi - திருவடிகளை வாய் உள்ளும் , Vaai ullum - வாக்கினுள்ளும் மனத்துள்ளும் , Manathullum - நெஞ்சினுள்ளும் வைப்பார்கட்கு , Vaipparkatku - வைத்துக் கொள்பவர்களுக்கு பிணி , Pini - வியாதியென்ன (ஆகிய இவை) வீயும் ஆறு , Veeyum aaru - தொலையும் வகை செய்வான் , Seyvaan - செய்தருள்வன். |
| 2928 | திருவாய்மொழி || 3-3–ஒழிவில் 10 | வைத்த நாள்வரை எல்லை குறுகிச் சென்று, எய்த்து, இளைப்பதன் முன்னம் அடைமினோ பைத்த பாம்பணையான் திரு வேங்கடம் மொய்த்த சோலை மொய் பூந்தடந் தாள்வரை.–3-3-10 | வைத்த, vaitha - (பாகவதர்களே!) (உங்களுக்குச்) சங்கற்பித்துவைத்த நாள், naal - ஆயுட்காலத்தினுடைய வரை, varai - அளவான எல்லை, ellai - எல்லையானது குறுகி, kurugi - அணுகி எய்த்து இளைப்பதன் முன்னம், eithu ilaipathan munnam - (அதனால் நீங்கள்) மிகவும் தளர்ச்சியடைவதற்கு முன்னே சென்று, sendru - (திருமலையை நோக்கிச் சென்று) பைத்த பாம்பு அணையான், paitha paambu anaiyaan - படமெடுத்த ஆதிசேஷனைப் படுக்கையாகக்கொண்ட பெருமானது திருவேங்கடம், thiruvengadam - (அத்) திருமலையில் மொய்த்த சோலை , Moitha solai - நெருங்கின சோலைகளும் மொய் பூ தடம் , Moi poo Thadam - நெருங்கின புஷ்கரிணிகளுமுள்ள தாழ்வர் , Thaazhvar - திருத்தாழ்வரையை அடைமின் , Adaimin - அடையுங்கள் |
| 2929 | திருவாய்மொழி || 3-3–ஒழிவில் 11 | தாள் பரப்பி மண் தாவிய ஈசனை, நீள் பொழில் குரு கூர்ச் சட கோபன் சொல், கேழில் ஆயிரத்திப் பத்தும் வல்லவர், வாழ்வர் வாழ்வெய்தி ஞாலம் புகழவே.–3-3-11 | தாள் பரப்பி, thaal parappi - திருவடியை விரித்து மண் தாவிய, man thaaviya - பூமியெல்லாம் அளந்து கொண்ட ஈசனை, eesanai - எம்பெருமானைக் குறித்து நீள் பொழில், neel pozhil - உயர்ந்த சோலைகளையுடைய குருகூர் சடகோபன், kurugoor sadagopan - ஆழ்வார் சொல், sol - அருளிச்செய்த கேழ் இல், kezh il - ஒப்பற்றதான ஆயிரத்து, aayirathu - ஆயிரத்தில் இப் பத்தும், ip pathum - இத்திருவாய்மொழியை வல்லவர், vallavar - ஓதவல்லவர்கள் ஞாலம் புகழ, nyaalam pugazha - உலகம் யாவும் கொண்டாடும் படி வாழ்வு எய்தி, vaazhvu eidhi - வாழ்ச்சிபெற்று வாழ்வர், vaazhvar - (அந்த வாழ்ச்சி ஒருநாளும் குன்றாமே) விளங்குவர். |
| 3633 | திருவாய்மொழி || (9-7–எங்கானலகங்கழிவாய்) (எம் பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக்களத்தே பறவைகளைத் தூதுவிடல் (திருமூழிக்களம்)) (இத்திருவாய்மொழியானது தன்னைப்பயிலுமவர்கட்கு பகவத்விச்லேஷ ஹேலுவான ஸம்ஸார வியாதியையறுக்கு மென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11 | ஒழிவின்றித் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடரை ஒழிவில்லா அணி மழலைக் கிளி மொழியாள் அலற்றிய சொல் வழு வில்லா வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த அழிவு இல்லா ஆயிரத்து இப்பத்தும் நோய் அறுக்குமே–9-7-11 | ஒழிவு இன்றி,Ozhivu indri - நிரந்தரமாக திருமூழிக்களத்து உறையும்,Thirumoozhikkalathu uraiyum - திருமூழிக்களத்திலே வாழ்கிற ஒண் சுடரை,On sudarai - தேஜோமூர்த்தியான எம்பெருமானை ஒழிவு இல்லா அணி மழலை கிளி மொழி யாள் அலற்றிய சொல்,Ozhivu illa ani mazhalai kili mozhi yaal alatriya sol - மபிரிந்து தரிக்கமாட்டாத வொரு மென்கிளிமொழித் தலைவி சொன்ன சொல்லாகவைத்து வழு இல்லாவண் குருகூர் சடகோபன் உரைத்த,Vazhu illaavan kurukoor sadagopan uraitha - அன்பில் குறைவில்ல தவரான ஆழ்வார் ஆழ்ந்து அருளிர் செய்க அழிவு இல்லா ஆயிரம்,Azhivu illa aayiram - நித்யவேதமான இவ்வாயிரத்தினுள் இப்பத்தும்,Ippaththum - இப்பதிகம் நோய் அதுக்கும்,Noi athukkum - ஸம்ஸார வியாதியைத் தீர்த்துக் கொடுக்கும் |