| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2752 | திருவாய்மொழி || 1-8– ஓடும்புள்ளேறி (ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்) ( நித்ய விபூதியிலுள்ளாரோடு செவ்வைக் குணமுடையனாய்ப் பரிமாறும் வகை இப்பாட்டிற் சொல்லப்படுகிறது.) 1 | ஓடும் புள்ளேறி சூடும் தண் துழாய் நீடு நின்றவை ஆடும் அம்மானே –1-8-1 | Needu Nindra Avai - நித்ய ஸூரிகளா யிருக்கின்ற பெரிய திருவடி முதலானரோடு Soodum - கூடிப் பரிமாறுகிற Ammaan - ஸ்வாமி Pul yeri - பெரிய திருவடி மேற் கொண்டு Odum - (விரைந்து) ஓடுவன்; Than Thuzhaay - குளிர்ந்த திருத் துழாய் மாலையை Soodum - சாத்திக் கொள்வன். |
| 2753 | திருவாய்மொழி || 1-8– ஓடும்புள்ளேறி (ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்) ( கீழ்ப்பாட்டிற் கூறியபடி ஸ்ரீ வைகுண்டத்திலுள்ளாரோடு செவ்வியனாய்ப் பரிமாறகை மாத்திரமே யல்லாமல் அங்கு நின்றம் இந் நிலத்திலே வந்து அவதரித்து விரோதிகளைத் தொலைந்து ஸம்ஸாரிகளுடன் பரிமாறும்படியும் எம்பெருமானுக்குள்ளதென்று இப்பாட்டிற் சொல்லுகிறது. 2 | அம்மானாய்ப் பின்னும் எம்மாண்பும் ஆனான் வெம்மா வாய் கீண்ட செம்மா கண்ணனே –1-8-2 | Ammaan Aay - ஸ்வாமியாய் இருந்து Vem - உக்கிரமான Maa - குதிரையின் வடிவாக வந்த கேசி யென்னுமசுரனை Vaai Keenda - வாய் கிழித்தவனும் Sem Maa - சிவந்து பெரிய திருக்கண்களை யுடையவனுமான ஸ்ரீ க்ருஷ்ணன் Pinnum - பின்னையும் Em Maanpum Aanaan - எல்லா அவதார ஸௌந்தரியமு முடையனாயினான். |
| 2754 | திருவாய்மொழி || 1-8– ஓடும்புள்ளேறி (ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்) (இரட்டைப் பிள்ளைபெற்ற தாயானவள் இருகுழந்தை கட்கும் முலை கொடுக்கப் பாங்காக நடுவே கிடக்குமா போலே நித்ய ஸூரிகளுக்கும் ஸம்ஸாரிகளுக்குமொத்த முகந் தருதற்காகத் திருவேங்கடமலையிலே நின்றருளும் நீர்மையை அருளிச் செய்கிறார்) 3 | கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே –1-8-3 | Mannor - மண்ணுலகத்தார்க்கும் Vinorukku - விண்ணுலகத்தார்க்கும் Endrum - எப்போதும் Kan Aavaan - கண்ணாயிருப்பன், (யாவனென்னில்) Than Aar - குளிர்ச்சி நிறைந்த Vengadam - திருவேங்கடமென்கிற பெயரையுடைய Vinor Verrpan - நித்ய ஸுரிகட்கிடமான திருமலையை யுடையவன். |
| 2755 | திருவாய்மொழி || 1-8– ஓடும்புள்ளேறி (ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்) (அவனுடைய ருஜுத்வகுணத்தை இடைவிடாது பேசி யனுபவிக்கப்பெற்றமை தமக்கு நேர்ந்தபடியை யருளிச்செய்கிறார்) 4 | வெற்பை ஓன்று எடுத்து ஒற்கமின்றியே நிற்கும் அம்மான் சீர் கற்பன் வைகலே –1-8-4 | Onru Verpai - (கோவர்த்தன மென்னும்) ஒரு மலையை Eduthu Orkam Indriye - இளைப்பிலாமல் Nirukum - நின்றருளின Ammaan - எம்பெருமானுடைய Seer - திருக் குணத்தை Vaigal - நாள் தோறும் Karpan - பேசக் கடவேன். |
| 2756 | திருவாய்மொழி || 1-8– ஓடும்புள்ளேறி (ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்) (நான் எம்பெருமானது திருக்குணத்தையே விரும்புவதுபோல அவனும் என்னுடைய சரீரத்தையே விரும்பாநின்றானென்கிறார். திருவாய்ப்பாடியில் வெண்ணெய் அவனுக்கு எவ்வளவு போக்யமாயிருக்கிறதோ அவ்வளவு போக்யாமயிருந்தது என்னுடைய சரீரமவனுக்கு என்றவாறு) 5 | வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்டான் பொய் கலவாது என் மெய் கலந்தானே –1-8-5 | Vaigalum - எப்போதும் Vennai - வெண்ணெயை Kai Kalanthu - கை உள்ளளவும் நீட்டி Undaan - (வாரி யெடுத்து) அமுது செய்தவன் Poyinal Vaadhu - மெய்யாகவே En Mei - எனது மேனியிலே Kalanthaan - ஒன்று படக் கூடினான் |
| 2757 | திருவாய்மொழி || 1-8– ஓடும்புள்ளேறி (ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்) (என்னைத் தனக்கே அடிமைப் படுத்திக் கொண்டானென்கிறார்.) 6 | கலந்து என்னாவி நலம் கொள் நாதன் — புலன் கொள் மாணாய நிலம் கொண்டானே –1-8-6 | Kalandhu - ஒரு நீராகக் கலந்து En Aavi - எனது ஆத்மாவினுடைய Nalam - அடிமைத் தனமாகிய நன்மையை Kolnaadan - தனக்காக்கிக் கொண்ட ஸ்வாமி யானவன் Pulan Kol Maan Aay - (கண் முதலிய) இந்திரியங்களைக் கவர்ந்து கொள்கின்ற (மநோ ஹரமான) வாமந ப்ரம்மசாரி சேஷத்தை யுடையவனாய் Nilam Kondaan - (மூவடி) நிலத்தை பிக்ஷை யேற்றுக் கொண்டான். |
| 2758 | திருவாய்மொழி || 1-8– ஓடும்புள்ளேறி (ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்) (நப்பின்னைப் பிராட்டியோடு ஸம்ச்லேஷிப்பதற்காக அதற்கிடையூறாயிருந்த ஏழெருதுகளை வலியடக்கினாப்போலே என்னோடு கலவிசெய்ய விரும்பி என்னுடைய பாபம் முதலிய பிரதிபந்தமங்களைப் போக்கியருளினானென்பது கருத்து) 7 | கொண்டான் ஏழ் விடை உண்டான் ஏழ் வையம் தண் தாமம் செய்து என் எண் தானானானே –1-8-7 | Ezhvidai - ஏழு விருதுகளையும் Kondaan - (நப்பின்னைக்காக) வலி யடக்கினவனும் Ezh Vaiyam - ஏழுலகங்களையும் Undaan - (பிரளங் கொள்ளாதபடி) திருவயிற்றிலே வைத்தவனுமான எம்பெருமான் Than Thaamam - குளிர்ந்த பரமபதத்திற்கொப்பாக என்னைத் திருவுள்ளம்பற்றி En Endhaan Aanaan - நான் எண்ணின எண்ணத்திற்குப் பிரதியாகத்தான் சில எண்ணங்கள் கொண்டான். |
| 2759 | திருவாய்மொழி || 1-8– ஓடும்புள்ளேறி (ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்) (என்னை யகப்படுத்திக்கொள்வதற்காகவே எம்பெருமான் பல திருவவதாரங்கள் செய்தான்; அங்ஙனஞ் செய்த அவதாரங்களுக்கு ஓர் எல்லையில்லை யென்கிறார்) 8 | ஆனான் ஆனாயன் மீனோடு ஏனமும் தான் ஆனான் என்னில் தானாய சங்கே –1-8-8 | Aan Aayan Aanaan - பசுமேற்கும் இடையனானான் Meenodu Enamum Thaan Aanaan - மத்ஸ்யாவதாரமும் வராஹாவதாரமும் முதலான அவதாரங்களைத் தானே செய்தான். Ennil - என்னுமிடத்து Thaan Aaya - தானெடுத்த அவதாரங்கள் Sange - சங்கமென்னும் கணக்கை யுடையனவே. (அபாரமென்றபடி) |
| 2760 | திருவாய்மொழி || 1-8– ஓடும்புள்ளேறி (ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்) (இப்படி எனக்காக ஸகல யோனிகளிலும் வந்து பிறந்தருளுகிறவன் தனது திருக்கைகளில் அழகிய திருவாழியும் திருச்சங்கும் ஏந்தி அவ்வழகோடுகூட வந்து பிறப்பவனென்கிறார்) 9 | சங்கு சக்கரம் அங்கையில் கொண்டான் எங்கும் தானாய் நங்கள் நாதனே –1-8-9 | Engum - எவ்விடத்தும் Thaanaaya - (அவதார முகத்தால்) தானே வியாபித்த Nangal Naadhan - எம்பெருமான் Am Kaiyil - அழகிய திருக் கைகளில் Sangu Chakkaram - திருவாழி திருச் சங்குகளை Kondaan - தரித்துள்ளான். |
| 2761 | திருவாய்மொழி || 1-8– ஓடும்புள்ளேறி (ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்) (இப்படி எனக்காக எண்ணிறந்த திருவவதாரங்களைப் பண்ணியருளின இவருடைய ஆச்ரித வாத்ஸல்யத்தைப் பேசவேண்டில், நானோ பேசுவது? கடலோதங்ளர்த்தாப்போலே கிளர்ந்துள்ள வேதங்களே யன்றோ பேசவேண்டுமென்கிறார்.) 10 | நாதன் ஞாலம் கொள் பாதன் என்னம்மான் ஓதம் போல் கிளர் வேத நீரானே –1-8-10 | Naadhan - ஸகல லோக நாதனும் Gnalam Kolpaadan - உலகத்தை யெல்லாம் அளந்து கொண்ட திருவடிகளை யுடையனுமான Em Ammaan - எம்பெருமான் Otham Polkilar - கடல் போல முழங்குகின்ற Vedam - வேதங்களால் அறியத் தக்க Neeran - நீர்மையை யுடையான். |
| 2762 | திருவாய்மொழி || 1-8– ஓடும்புள்ளேறி (ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்) (இந்தத் திருவாய்மொழி மற்ற திருவாய்மொழிகளினும் ஆராய்ந்து சொல்லப்பட்டதென்கிறார்) 11 | நீர் புரை வண்ணன் சீர் சடகோபன் நேர்தல் ஆயிரத்து ஓர்தல் இவையே –1-8-11 | Neerpurai Vannan - நீரை யொத்த நிறத்தை யுடைவனான ஸர்வேச்வரனுடைய Seer - ருஜுத்வமென்னுங் குணத்தைக் குறித்து Sadagopan - நம்மாழ்வார் Neerthal - நேர்ந்து அருளிச் செய்த Ivai - இப் பத்துப் பாட்டும் Aayirathu - ஆயிரத்தினுள் Orthal - ஆராய்ந்து அறியத் தக்கன. |