Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: கண்ணன்கழலி (11 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3711திருவாய்மொழி || (10-5–கண்ணன்கழலி) (பக்தி பண்ணும் வகைகளைத் தொகுத்துக் கூறல்) (முதலிலே *வீடுமின் முற்றத்தில் “எண் பெருக்கந்நலத்தொண் பொருளீறில வண்புகழ் நாரணன்” என்று பஜனத்திற்கு ஆலம்பனமாகச் சொல்லப்பட்டதான மந்த்ரத்தை *எண்ணுந் திருநாமம் திண்ணம் நாரணமே* என்று காட்டுகிறார்.) 1
கண்ணன் கழலிணை-நண்ணும் மனம் உடையீர்
எண்ணும் திருநாமம்-திண்ணம் நாரணமே–10-5-1
கண்ணன் கழல் இணை,Kannan kazhal inai - அடியவர்க் கெளியனான பெருமானது திருவடியிணைகளை
எண்ணும் திருநாமம்,Ennum thirunaamam - (நீங்கள்) சிந்திக்க வேண்டிய திருநாமம்
நண்ணும் மனம் உடையீர்,Nannum manam udaiyeer - அடைய வேணுமென்கிற நெஞ்சையுடையவர்களே!
நாரணம் ஏ திண்ணம்,Naaranam e thinnam - நாராயணமே; மற்றொன்றில்லை யென்பது திடம்.
3712திருவாய்மொழி || (10-5–கண்ணன்கழலி) (பக்தி பண்ணும் வகைகளைத் தொகுத்துக் கூறல்) (“எண்பெருக்கி லெண்ணுந் திருநாமத்தின் சப்தார்த்தங்களைச் சுருக்கி” என்ற ஆசார்ய ஹ்ருதய சூர்ணையின்படி கீழ்ப்பாட்டில் நாரணமென்று சம்பம் சுருக்கப்பட்டது. இப்பாட்டிலும் மேற்பாட்டிலுமாக அர்த்தம் சுருக்கப்படுகிறது.) 2
நாரணன் எம்மான் பாரணங்கு ஆளன்
வாரணம் தொலைத்த காரணன் தானே–10-5-2
நாரணன் எம் மான்,Naaranan em maan - நாராயணனாய் எமக்கு ஸ்வாமியானவன் (அன்றியும்)
பார் அணங்கு ஆளன்,Paar anangu aalan - பூமிப் பிராட்டிக்கு நாயகன்
வாரணம் தொலைத்த,Vaaranam tholaitha - கம்ஸனது மதயானையை முடித்தருளின
காரணன் தானே,Kaaranan thaane - ஜகத்காரணபூதனும் அவனே
3713திருவாய்மொழி || (10-5–கண்ணன்கழலி) (பக்தி பண்ணும் வகைகளைத் தொகுத்துக் கூறல்) (நாராயண சப்தார்த்தமாகக் கீழப்பாட்டில் ப்ரஸ்துதமான ரஷகத்வம் விவாரிக்கப்படுகிறது இதில்.) 3
தானே உலகு எல்லாம் தானே படைத்து இடந்து
தானே உண்டு உமிழ்ந்து தானே ஆள்வானே–10-5-3
தானே,Thaane - நாராயணனை தானே
படைத்து இடந்து,Padaiththu idandhu - ஸ்ருஷ்டித்து (பிரளயத்திலே) இடந்தெடுத்து
உலகு எல்லாம்,Ulagu ellaam - ஸகல ஜகத்துக்கும் சரீரியா யுள்ளவன்;
தானே உண்டு உமிழ்ந்து,Thaane undu umizhndhu - ஒருவருடைய அபேஷையு மில்லாதபடி தானே (ஸமயங்களில்) உண்பதும் உமிழ்வதுஞ் செய்து
தானே,Thaane - அப்பெருமான் தானே (வேறொரு துணை யின்றியே)
தானே ஆள்வான்,Thaane aalvaan - தானே நிர்வஹிக்குமவன்
3714திருவாய்மொழி || (10-5–கண்ணன்கழலி) (பக்தி பண்ணும் வகைகளைத் தொகுத்துக் கூறல்) (நாராயண மந்த்ரத்தில் சதுர்த்தியின் அர்த்தத்தை யநுஸந்திக்கு மாசாரியர்கள் “அஸ்மை காலம் ஸகலமபி ஸர்வத்ர ஸகலாஸு அவஸ்தாஸு ஆவிஸ்ஸ்யர் மம ஸஹஜகைங்கரிய விதய” (அஷ்டச்லோக-3.) என்று கைங்கரிய ப்ரார்த்தனையைப் பொருளாகக்காட்டுகையாலே, இங்கு ஸம்ஸாரிகளை நோக்கிக் கைங்காரியத்தை வித்தருளுகிறார். ஆள்வான் என்று, கீழே சொன்ன ரஷகத்வத்தை அநுபாஷித்தபடி.) 4
ஆள்வான் ஆழி நீர்க் கோள்வாய் அரவு அணையான்
தாள்வாய் மலர் இட்டு நாள்வாய் நாடீரே–10-5-4
ஆழிநீர்,Aazhineer - காரணபூதமான ஏகாரிண வத்தலே
ஆள்வான்,Aalvaan - ஆளுமவனான அப்பெருமானுடைய
கோள் வாய் அரவு அணையான,Kol vaai aravu anaiyaan - மிடுக்குப் பொருந்திய வாயை யுடையவனான ஆதிசேஷனைப் படுக்கை யாகவுடையனாய்க் கொண்டு தாள்வாய்
மலர் இட்டு,Malar ittu - புஷ்பங்களை ஸமரிப்பித்து நாள் வாய்
நாடீர்,Naadeer - ஆசரயியுங்கோள் திருவடிகளிலே நாடாறும்.
3715திருவாய்மொழி || (10-5–கண்ணன்கழலி) (பக்தி பண்ணும் வகைகளைத் தொகுத்துக் கூறல்) (ஸ்வரூபாநுரூபமான காரியத்தைச் செய்யவே ஸ்வரூபாநுரூபமான புருஷார்த்தத்தைப் பெறலாமென்கிறார்தில்.) 5
நாடீர் நாள் தோறும் வாடா மலர் கொண்டு
பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே–10-5-5
நாள்தோறும்,Naalthorum - தினந்தோறும்
அவன் நாமம்,Avan naamam - அப்பெருமானது திருநாமங்களை
வாடா மலர்கொண்டு பாடீர் பாடுங்கள் (இங்ஙனே செய்தக்கால்),Vaadaa malarkondu paadeer paadungal (ingnae seidhakkaal) - செவ்வி மாறாத பூக்களைக் கொண்டு
நாடீர் பணியுங்கள்; வீடே பெறலாம்,Naadeer paniyungal; veede peralaam - மோஷமே பெறலாகும்
3716திருவாய்மொழி || (10-5–கண்ணன்கழலி) (பக்தி பண்ணும் வகைகளைத் தொகுத்துக் கூறல்) (கீழ்ப்பாட்டில் நாடீரென்றதற்கு இடம் காட்டுகிறாரிப்பாட்டில்.) 6
மேயான் வேங்கடம் காயா மலர் வண்ணன்
பேயார் முலை உண்ட வாயான் மாதவனே–10-5-6
காயா மலர்வண்ணன்,Kaayaa malarvannnan - காயாம் பூப்போன்ற திருமேனி நிறத்தையுடையனாய்
திருமால்,Thirumaal - மாதவன்
பேயார் முலை உண்ட வாயன் வேங்கடம் மேயான்,Peyaar mulai unda vaayan vengadam meyaan - பூதனையின் முலையைச் சுவைத்துண்டு அவளை முடித்தவனான திருவேங்கட மலையிலுள்ளான்
3717திருவாய்மொழி || (10-5–கண்ணன்கழலி) (பக்தி பண்ணும் வகைகளைத் தொகுத்துக் கூறல்) (வாடாமலர்கொண்டு நாடோறும் நாடமுடியாமலும், வேங்கடம்மே யானை அடிபணிய முடியாமலுமிருப்பார்க்கும் ஒருவழியருளிச் செய்கிறாரிப்பாட்டில்.) 7
மாதவன் என்று என்று ஓத வல்லீரேல்
தீது ஒன்றும் அடையா ஏதம் சாரவே–10-5-7
மாதவன் என்றென்று ஓத வல்லீரேல்,Maadhavan endrenru ootha vallireel - த்வயமென்கிற மந்த்ரரத்னத்தை அநுஸந்திக்க வல்லீர்களாகில்
தீதொன்று மடையா,Theedonru madayaa - ஏதம் சாராவே மாதவன் என்று என்று ஓத வல்லீர் ஏல்
தீது ஒன்றும் அடையா,Theethu ondrum adayaa - அதீத பாபங்களில் ஒன்றும் கிட்டாது
ஏதம் சாரா,Aedham saaraa - மேலுள்ள பாவங்களும் வந்து கூடாது
3718திருவாய்மொழி || (10-5–கண்ணன்கழலி) (பக்தி பண்ணும் வகைகளைத் தொகுத்துக் கூறல்) ( “நாராயணத் திருநாமத்தையோ ஸ்ரீமத் பதத்தையோ அநுஸந்திக்க நாங்கள் அதிகாரிகளோ? மிகமிக நீசரான எங்களுக்கு அத்தனையதிகாரமுண்டோ?” என்று சங்கிப்பார்க்குச் சொல்லுகிறது இப்பாட்டு அதிகாரி நியதியில்லை; ஆரேனுமாகத் திருநாமத்தைச் சொல்லலாம். அப்படிச்சொல்லுவார் நித்ய ஸூரிகளோ டொப்பார்கள் என்கிறார்.) 8
சாரா ஏதங்கள் நீரார் முகில் வண்ணன்
பேர் ஆர் ஓதுவார் ஆரார் அமரரே–10-5-8
ஏதங்கள் சாரா,Aedhangal saaraa - ஒரு பொல்லாங்கும் வந்து கிட்டாது;
பேர் ஆர் ஓதுவார்,Per aar othuvar - திருநாமங்களை ஓதுமவர்கள் யாவ ரோ
நீர் ஆர் முகில் வண்ணன்,Neer aar mukil vannnan - நீர் நிரம்பிய மேகம் போன்றவனான எம்பெருமானுடையர்
ஆர் ஆ,Aar aa - அவர்கள் எது பிறப்பு ஏதியல்வாக நின்றவர்களாயினும்
அமரர்ஏ,Amarar - நித்ய ஸூரிகளோ டொப்பார்கள்
3719திருவாய்மொழி || (10-5–கண்ணன்கழலி) (பக்தி பண்ணும் வகைகளைத் தொகுத்துக் கூறல்) (இப்பாட்டில் “அமரத் தொழுவார்கட்கு” என்பது உயிரான சொல்; அமரத் தொழுகை யாவதென்னென்னில் ப்ரயோஜநாந்தர மொன்றையுங் கணிசியாமே தொழுகை.) 9
அமரர்க்கு அரியானை தமர்கட்கு எளியானை
அமரத் தொழுவார்கட்கு அமரா வினைகளே–10-5-9
அமரர்க்கு,Amararkku - அரி யானை பிரமன் முதலானார்க்கும் அரியனாய்
அமர தொழுவார் கட்கு,Amara thozhuvaar kadku - பலனென்றும் விரும்பாதே தொழுமவர்களுக்கு
தமர்கட்கு எளியானை,Thamar kadku ezhiyanaai - அடியவர்க்கு எளியனாயுள்ள பெருமானை
வினைகள் அமரா,Vinaihal amaraa - விரோதிகள் வந்து கிட்டாது.
3720திருவாய்மொழி || (10-5–கண்ணன்கழலி) (பக்தி பண்ணும் வகைகளைத் தொகுத்துக் கூறல்) (இப்பதிகத்தில், முதற்பாட்டில் திருமந்த்ரப்ரஸ்தாவம் செய்தருளினார் ; ஏழாம்பாட்டில் த்வயப்ரஸ்தாவம் செய்தருளினார். அதற்குமேலெல்லாம் பெரும்பாலும் சரமச்லோக ப்ரஸ்தாவமேயாயிருக்கிறது. *ஸர்வபாபேப்யோ மோஷயிஷ்யாமி* என்பதுதானே சரமச்லோகத்தின் ஸாரம். அது இப்பாட்டில் “வினை வல்லிருளென்னும் முனைகள் வெருவிப்போம்” என்று தலைக்கட்டப்படுகிறது.) 10
வினை வல் இருள் என்னும் முனைகள் வெருவிப் போம்
சுனை நல் மலர் இட்டு நினைமின் நெடியானே–10-5-10
வினை,Vinai - கருமங்களென்ன
வெருவிப்போம்,Veruvippom - தாமே அஞ்சி அகன்றொழியும்
வல் இருள்,Val irul - கொடிய அஞ்ஞானமென்ன
சுனை நம் மலர்இட்டு,Sunai nam malarittu - சுனைகளிலுண்டான நல்ல பூக்களையிட்டு
என்னும் முனைகள்,Ennum munaigal - ஆகவிப்படி சொல்லப்படுகிற இத்திரங்கள்
நெடியான் நினைமின்,Nedhiyaan ninaimin - ஸர்வேச்வரனைச் சிந்தியுங்கள்
3721திருவாய்மொழி || (10-5–கண்ணன்கழலி) (பக்தி பண்ணும் வகைகளைத் தொகுத்துக் கூறல்) (இப்பதிகம் வல்லார், தம்மைப்போலே நெடியானருள் சூடும்படியாவரென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11
நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன்
நொடி ஆயிரத்து இப்பத்து அடியார்க்கு அருள் பேறே–10-5-11
நெடியன் அருள்,Nedhiyan arul - ஸர்வேச்வரனுடைய க்ருபையை,
ஆயிரத்து இருபத்து,Aayirathu irupathu - ஆயிரத்தினுள் இப்பதிகமானது
சூடும் படியான்,Soodum padhiyaan - அநுபவிக்கு மியல்வினரான
சடகோபன்,Sadagopan - ஆழ்வார்
நொடி,Nodi - அருளிச் செய்ததான
அடியார்க்கு,Adiyaarkku - பக்தர்களுக்கு
அருள் பேறு,Arul paeru - ப்ரஸாத லாபமாயிருக்கும்