| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 627 | நாச்சியார் திருமொழி || 13 - கண்ணன் என்னும் (தலைவி கண்ணன் அணிந்த ஆடை முதலியவற்றால் தன் வாட்டத்தைத் தணிக்க வேண்டுதல்) 1 | கண்ணன் என்னும் கரும் தெய்வம் காட்சிப் பழகிக் கிடப்பேனை புண்ணில் புளிப் பெய்தால் போலப் புறநின்று அழகு பேசாதே பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில் பீதக வண்ண வாடை கொண்டு என்னை வாட்டம் தணிய வீசீரே | கண்ணன் என்னும், Kannan enum - ஸ்ரீக்ருஷ்ணனென்கிற கரு தெய்வம், Karu dheivam - கரியதொரு பரதேவதையினுடைய காட்சி, Kaatchi - காட்சியிலே பழகி கிடப்பேனே, Pazhagi kidapene - பழகிக் கிடக்கிற என்னைக் குறித்து (ஓ! தாய்மார்களே! நீங்கள்) புறம் நின்று, Puram nindru - அசலாக இருந்து கொண்டு புண்ணில் புளி பெய்தால் போல, Punnil puli peidhal pol - புண்ணிலே புளி ரஸத்தைச் சொரிந்தாற்போல் அழகுபேசாதே, Azhagu pesadhe - பணிக்கை சொல்வதைத் தவிர்ந்து, பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில், Pennin varutham ariyaadha Perumaan araiyil - பெண் பிறந்தாருடைய வருத்தத்தை அறியாதவனான கண்ணபெருமானுடைய திருவரையில் சாத்திய பீதக வண்ணம் ஆடை கொண்டு, Peedhaga vannam aadai kondu - பீதாம்பரத்தைக் கொண்டுவந்து வாட்டம் தணிய, Vaatam thaniya - (என்னுடைய) விரஹ தாபம் தீரும்படி என்னை வீசீரே, Ennai veeseere - என்மேல் வீசுங்கள் |
| 628 | நாச்சியார் திருமொழி || 13 - கண்ணன் என்னும் (தலைவி கண்ணன் அணிந்த ஆடை முதலியவற்றால் தன் வாட்டத்தைத் தணிக்க வேண்டுதல்) 2 | பாலாலிலையில் துயில் கொண்ட பரமன் வலைப்பட்டு இருந்தேனை வேலால் துன்பம் பெய்தால் போல் வேண்டிற்றெல்லாம் பேசாதே கோலால் நிரை மேய்ந்தாயனாய்க் குடந்தைக் கிடந்த குடமாடி நீலார் தண்ணம் துழாய் கொண்டு என் நெறி மென் குழல் மேல் சூட்டீரே | பால் ஆலிலையில், Paal aalilaiyil - பால் பாயும் பருவத்தை யுடைய ஆலந்தளிரிலே துயில் கொண்ட, Thuyil konda - கண் வளர்ந்தருளின பரமன், Paraman - பெருமானுடைய வலை, Valai - வலையிலே பட்டிருந்தேனை, Patirundhenai - அகப்பட்டுக் கொண்டிருக்கிற என்னைக் குறித்து வேலால் துன்னம் பெய்தால் போல், Velaal thunnam peydhal pol - வேலாயுதத்தை யிட்டுத் துளைத்தாற்போல் (கொடுமையாக) வேண்டிற்று எல்லாம் பேசாதே, Venditru elam pesadhe - உங்களுக்குத் தோன்றின படி யெல்லாம் சொல்வதைத் தவிர்ந்து ஆயன் ஆய், Aayan aay - இடைப் பிள்ளையாய் கோலால், Kolaal - (இடைச் சாதிக்கு உரிய) கோலைக் கொண்டு நிரை மேய்த்து, Nirai meithu - பசுக் கூட்டங்களை மேய்த்தவனாய் குடந்தை கிடந்த, Kudandhai kidandha - திருக் குடந்தையில் திருக் கண்வளர்ந்தருளுமவனாய் குடம் ஆடி, Kudam aadi - குடக் கூடத்தாடினவனுமான கண்ணபிரானுடைய நீல்ஆர் தண்அம் துழாய் கொண்டு, Neelaar thanam thuzhaai kondu - பசுமை பொருந்திக் குளிர்ந்து அழகிய திருத் துழாயைக் கொண்டு வந்து நெறி மென், Neri men - நெறிப்புக் கொண்டதாயும் மிருதுவாயு மிருந்துள்ள என் குழல்மேல், En kuzhalmel - என் கூந்தலிலே சூட்டீர், Chooteer - சூட்டுங்கள் |
| 629 | நாச்சியார் திருமொழி || 13 - கண்ணன் என்னும் (தலைவி கண்ணன் அணிந்த ஆடை முதலியவற்றால் தன் வாட்டத்தைத் தணிக்க வேண்டுதல்) 3 | கஞ்சைக் காய்ந்த கரு வில்லி கடைக் கண்ணி என்னும் சிறைக் கோலால் நெஞ்சூடுருவ வேவுண்டு நிலையும் தளர்ந்து நைவேனை அஞ்சேல் என்னான் அவன் ஒருவன் அவன் மார்வணிந்த வனமாலை வஞ்சியாதே தருமாகில் மார்வில் கொணர்ந்து புரட்டீரே | கஞ்சை, Kanjai - கம்ஸனை காய்ந்த, Kaayndha - தொலைத்தவனாயும் கரு வில்லி, Karu villi - பெரியவில் போன்ற புருவத்தை யுடைனாயு மிருக்கிற கண்ண பிரானுடைய கடைக்கண் என்னும், Kadaikkan enum - கடைக் கண்ணாகிற சிறை கோலால், Sirai kolaal - சிறகையுடைய அம்பாலே நெஞ்சு ஊடுருவ, Nenju ooduruva - நெஞ்சமுழுதும் வேவுண்டு, Vevundu - வெந்து போம்படியாகப் பெற்று நிலையும் தளர்ந்து, Nilaiyum thalarndhu - நிலைமை குலைந்து நைவேனை, Naivenai - வருந்துகின்ற என்னை நோக்கி அஞசேல் என்னானவன் ஒருவன், Anjel enaanavan oruvan - “பயப்படாதே“ என்றொரு வார்த்தையும் சொல்லாதவனாய் விஜாதீயனான அவன், Avan - அப்பெருமான் மார்வு அணிந்த, Maarvu anindha - (தனது) திருமார்பில் சாத்தி யருளின வன மாலை, Vana maalai - வன மாலையை வஞ்சியாதே, Vanjiyaadhe - மோசம் பண்ணாமல் தரும் ஆகில், Tharum aagil - கொடுத்தருள்வனாகில் கொணர்ந்து, Konarndhu - (அம் மாலையைக்) கொண்டு வந்து மார்வில், Maarvil - (என்னுடைய) மார்பிலே புரட்டீர், purateer - (நெஞ்சினுள் வெப்பம் தீருமாறு) புரட்டுங்கள் |
| 630 | நாச்சியார் திருமொழி || 13 - கண்ணன் என்னும் (தலைவி கண்ணன் அணிந்த ஆடை முதலியவற்றால் தன் வாட்டத்தைத் தணிக்க வேண்டுதல்) 4 | ஆரே யுலகத் தாற்றுவார் ஆயர் பாடி கவர்ந்துண்ணும் காரேறு உழக்க உழக்குண்டு தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை ஆராவமுதம் அனையான் தன் அமுத வாயிலூறிய நீர் தான் கொணர்ந்து புலராமே பருக்கி இளைப்பை நீக்கீரே | ஆயர்பாடி, Aayarpaadi - திருவாய்ப்பாடி முழுவதையும் கவர்ந்து உண்ணும், Kavarnthu unnum - கொள்ளை கொண்டு அநுபவிக்கிற கார் ஏறு, Kaar yeru - ஒரு கறுத்த காளை போன்ற கண்ணன் உழக்க, Uzhakka - ஹிம்ஸிக்க உழக்குண்டு, Uzhakkundu - (அதனால்) துன்பப்பட்டு தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை, Thalarndhum murindhum kidapenai - பலவகையான் சைதில்யங்களை யடைந்து நொந்து கிடக்கிற என்னை உலகத்து, Ulagathu - இவ் வுலகத்திலே ஆற்றுவர், Aatruvar - தேறுதல் சொல்லி ஆறச் செய்பவர் ஆரே, Aare - ஆருண்டு (யாருமில்லை) ஆரா அமுதம் அனையான் தன், Aara amutham anaiyaan than - எவ்வளவு அனுபவித்தாலும் திருப்தி பிறவாத அம்ருதம் போன்ற கண்ணபிரான் உடைய அமுதம் வாயில், Amutham vaayil - அம்ருதம் சுரக்கிற திரு வாயிலே ஊறிய, ooriya - ஊறிக் கிடக்கிற நீர் தான், neer thaan - ரசத்தை யாவது புலராமே கொணர்ந்து, Pularaame konarndhu - உலராமல் பசையோடு கொண்டு வந்து பருக்கி, Parukki - அதை நான் பருகும்படி பண்ணி இளைப்பை நீக்கீரே, ilaippai neekeere - எனது ஆயாசத்தை பரிஹரிக்கப் பாருங்கோள் (என்கிறாள்) |
| 631 | நாச்சியார் திருமொழி || 13 - கண்ணன் என்னும் (தலைவி கண்ணன் அணிந்த ஆடை முதலியவற்றால் தன் வாட்டத்தைத் தணிக்க வேண்டுதல்) 5 | அழிலும் தொழிலும் உருக்காட்டான் அஞ்சேல் என்னான் அவன் ஒருவன் தழுவி முழுகிப் புகுந்து என்னைச் சுற்றுச் சுழன்று போகானால் தழையின் பொழில் வாய் நிரைப்பின்னே நெடுமாலூதி வருகின்ற குழலின் துளை வாய் நீர் கொண்டு குளிர முகத்துத் தடவீரே | அழிலும் , Azhilum - அழுதாலும் தொழிலும் , Thozhilum - தொழுதாலும் உருக்காட்டான் , Urukatan - தன் வடிவைக் காட்டாதவனாயும் அஞ்சேல் என்னானவன், Anjel Ennaanavan - உருவைக் காட்டாவிடினும் “அஞ்சேல்“ என்ற சொல்லும் சொல்லாதவனாயுமுன்ள ஒருவன் , Oruvan - ஒரு மஹாநுபாவன் (கண்ணன்) புகுந்து , Pugundhu - இங்கே வந்து என்னை தழுவி முழுசி , Ennai thazhuvi muzhusi - என்னை நெருக்கி யணைத்து சுற்றி சுழன்று , Sutri suzhandru - முன்னும் பின்னும் சூழ்ந்து கொண்டிருந்து போகான், Pogaan - போகாமலிருக்கான் ஆல்!, aal! - இது உண்மையான அநுபவமல்லாமல் மாநஸாநுபவ மாத்ரமான உரு வெளிப்பாடாகையாலே துக்கம் தழையின் பொழில் வாய் , Thazhayin pozhil vaai - பீலிக் குடைகளாகிற சோலையின் கீழே நிரை பின்னே ,nirai pinne - பசுக் கூட்டங்களின் பின் புறத்திலே நெடு மால் , Nedu maal - வ்யாமுத்தனான கண்ண பிரான் ஊதி வருகின்ற , Oodhi varuginra - ஊதிக் கொண்டு வரப் பெற்ற குழலின் துளைவாய் , Kuzhalin thulaivai - புல்லாங்குழலின் த்வாரங்களிலுண்டாகிற நீர் கொண்டு , Neer kondu - நீரைக் கொணர்ந்து முகத்து, Mukathu - என்னுடைய முகத்திலே குளிர தடவீர், kulira tadaveer - குளிர்த்தியாகத் தடவுங்கள் |
| 632 | நாச்சியார் திருமொழி || 13 - கண்ணன் என்னும் (தலைவி கண்ணன் அணிந்த ஆடை முதலியவற்றால் தன் வாட்டத்தைத் தணிக்க வேண்டுதல்) 6 | நடை யொன்றில்லா வுலகத்து நந்த கோபன் மகன் என்னும் கொடிய கடிய திருமாலால் குளப்புக் கூறு கொளப்பட்டு புடையும் பெயரகில்லேன் நான் போட்கன் மிதித்த வடிப்பாட்டில் பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள் போகா யுயிர் என்னுடம்பையே | நடை ஒன்று இல்லா உலகத்து , Nadai ondru illa ulagathu - (ஏற்கனவே) மரியாதைகளெல்லாம் குலைந்து கிடக்கிற இவ் வுலகத்தில் நந்தகோபன் மகன் என்னும் , Nandhagopan magan ennum - ஸ்ரீநந்த கோபர் மகன் என்று ப்ரஸித்தனாய் கொடி ,Kodi - இரக்க மற்றவனாய் கடிய , Kadiya - ஸ்வார்த்த பரனான திருமாலால் , Thirumaalaal - ச்ரிய: பதியாலே (கண்ணனாலே) நான் , Naan - அபலையான நான் குளப்புக்கூறு கொளப்பட்டு , Kulapukkuru kolapattu - மிகவும் துன்பப் படுத்தப் பட்டு புடை பெயரவும் கில்லேன் , Pudai peyaravum kilen - அப்படி இப்படி அசைவதற்கும் அசக்தை யாயிரா நின்றேன் (ஆன பின்பு) போட்கன் , Potkan - சுணை கேடனான அக் கண்ண பிரான் மிதித்த அடிப்பாட்டில் , Midhitha adipaatil - திருவடி பட்டு மிதித்த இடத்திலுண்டான பொடி தான் , Podi thaan - ஸ்ரீபாத தூளியை யாவது கொணர்ந்து , Konarndhu - கொண்டு வந்து போகா உயிர் என் உடம்பை பூசீர்கள் , Poga uyir en udambai pooseergal - வீட்டுப் பிரியாத வுயிரை யுடைய என் உடம்பிலே பூசுங்கள் |
| 633 | நாச்சியார் திருமொழி || 13 - கண்ணன் என்னும் (தலைவி கண்ணன் அணிந்த ஆடை முதலியவற்றால் தன் வாட்டத்தைத் தணிக்க வேண்டுதல்) 7 | வெற்றிக் கருளக் கொடியான் தன் மீ மீ தாடா வுலகத்து வெற்ற வெறிதே பெற்றதாய் வேம்பேயாக வளர்த்தாளே குற்றமற்ற முலைதன்னைக் குமரன் கோலப் பணைத் தோளோடு அற்ற குற்றமவை தீர அணைய வமுக்கிக் கட்டீரே | கருளன் வெற்றி கொடியான் தன் மீது ஆடா உலகத்து , Karulan vetri kodiyaan than meedhu aadaa ulagathu - பெரிய திருவடியை வெற்றிக் கொடியாக வுடைய எம்பெருமானுடைய ஆணையை மீறிச் செல்லக் கடவதல்லாத இவ்வுலகத்தில் (எம்பெருமானுடைய ஆணைக்கு உட்பட்டதான இவ்வுலகத்தில்) பெற்ற தாய் , Petra thaai - அவனைப் பெற்ற தாயாகிய யசோதையானவள் (தனது புத்திரனை) வெற்ற வெறிதே , Vetra verithe - ஒருவர்க்கும் பயனின்றியே (பயனில்லை யென்கிற மாத்திரமேயோ?) வேம்பு ஆகவே , Vembu aagave - வேப்பங்காய் போல் வைக்கும் படியாகவே வளர்த்தான் , Valarthaan - வளர்த்து வாரா நின்றான் குற்றம் அற்ற , Kutram atra - (அவனைத் தவிர்த்து வேறொருவன் விரும்புகையாகிற) குற்றம் இல்லாத முலை தன்னை , Mulai thannai - (என்னுடைய) ஸ்தநங்களை குமரன் , Kumaran - யௌவனத்தோடு தோள் தீண்டியான அப் பெருமானுடைய கோலம் பணைதோளோடு , Kolam panaitholodu - அழகியதாயும் கற்பகக்கிளை போன்ற தாயுமுள்ள திருத் தோள்களோடே அற்ற குற்றம் அவை தீர , Atra kutram avai theera - (என்னைக் கை விட்டு) அவற்றுக்கே அற்றுத் தீர்ந்த குற்றம் தீரும்படி அணைய அமுக்கி கட்டீர் , Anaiya amuki kateer - அமுக்கி யணைத்துக் கட்டி விடுங்கள் |
| 634 | நாச்சியார் திருமொழி || 13 - கண்ணன் என்னும் (தலைவி கண்ணன் அணிந்த ஆடை முதலியவற்றால் தன் வாட்டத்தைத் தணிக்க வேண்டுதல்) 8 | உள்ளே உருகி நைவேனை உளளோ இலளோ என்னாத கொள்ளை கொள்ளிக் குறும்பனை கோவர்த்த நனைக் கண்டக்கால் கொள்ளும் பயன் ஓன்று இல்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில் எறிந்து என்னழலைத் தீர்வேனே | உள்ளே உருகி நைவேனை, ulle Urugi Naivenai - உள்ளுக்குள்ளேயே கரைந்து நைந்து போகிற என்னைப் பற்றி உளளோ இலளோ என்னாத, Ullalo Ilalo Enadha - “இருக்கிறாளா? செத்தாளா?“ என்றும் கேளாதவனாய் கொள்ளை கொள்ளி, Kollai Kolli - என் ஸர்வஸ்வத்தையும் அபஹரித்துக் கொண்டவனாய் குறும்பனை, Kurumbanai - (பெண்கள் திறத்திலே) பொல்லாங்கு செய்யுமவனான கோவர்த்தனனை, Govarthananai - கண்ணபிரானை கண்டக்கால், Kandakkaal - (ஒருகால்) நான் காணப் பெற்றேனாகில் கொள்ளும் பயன் ஒன்று இல்லாத, Kollum Payan Ondru Illadha - (ஆட்டுக் கழுத்தல் முலை போலே) உபயோக மற்றதான கொங்கை தன்னை, Kongai Thannai - (என்னுடைய இந்த) முலையை கிழங்கோடும் அள்ளி பறித்திட்டு, Kizhangodum Alli Parithitu - வேர் முதலோடே பற்றிப் பிடுங்கி அவன் மார்வில் எறிந்து, Avan Maarvil Erindhu - அந்த க்ருஷ்ணனுடைய மார்பிலே எறிந்து விட்டு என் அழலை, En Azhalai - என் துக்கத்தை தீர்வேன், theerven - போக்கிக் கொள்ளப் பெறுவேன் |
| 635 | நாச்சியார் திருமொழி || 13 - கண்ணன் என்னும் (தலைவி கண்ணன் அணிந்த ஆடை முதலியவற்றால் தன் வாட்டத்தைத் தணிக்க வேண்டுதல்) 9 | கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தற்கோர் குற்றேவல் இம்மைப் பிறவி செய்யாதே யினிப் போய் செய்யும் தவம் தான் என் செம்மையுடைய திருமார்வில் சேர்த்தான் ஏலும் ஒரு நான்று மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி விடை தான் தருமேல் மிக நன்றே | கொம்மை முலைகள், Kommai Mulaigal - (எனது) கிளர்ந்த பருத்த முலைகளினுடைய இடர் தீர கோவிந்தற்கு ஓர குற்றவேல், Idar Theera Govindharku Ora Kutravel - குமைச்சல் தீரும்படி கண்ணபிரானுக்கு அந்தரங்கமான கைங்கரியத்தை செம்மை உடைய திருமார்விலே, Semmai Udaiya Thirumaarvile - (அன்பர்கள் அணைவதற்கென்றே ஏற்பட்டிருக்கையாகிற) செவ்வையை யுடைத்தான் (தனது) திருமார்பிலே சேர்த்தானேலும், Serthaanelum - (என்னை அவன்) சேர்த்துக் கொண்டானாகில் நன்று, Nandru - நல்லது ஒரு நான்று, Oru Naandru - ஒரு நாள் இம்மைப் பிறவி செய்யாதே இனி போய், Immai Piravi Seyaadhe Ini Poi - இந்த ஜன்மத்திலே செய்யப் பெறாமல் இந்தப் பிறவி கழிந்த பின்பு வேறொரு தேச விசேஷத்திலே போய் செய்யும், Seiyum - செய்யக் கூடியதான தவந்தான் ஏன்?, Thavandhaan Yen? - தபஸ்ஸு ஏதுக்கு? முகம் நோக்கி, Mugam Nokki - என் முகத்தைப் பார்த்து மெய்ம்மை சொல்லி, Meimmai Solli - மெய்யே சொல்லி விடை தான் தருமேல், Vidai Thaan Tharumel - “நீ எனக்கு வேண்டாம்போ“ எனறு தள்ளி விட்டமை தோன்ற விடை கொடுப்பானாகில் மிக நன்று, Miga Nandru - அது உத்தமோத்தமம் |
| 636 | நாச்சியார் திருமொழி || 13 - கண்ணன் என்னும் (தலைவி கண்ணன் அணிந்த ஆடை முதலியவற்றால் தன் வாட்டத்தைத் தணிக்க வேண்டுதல்) 10 | அல்லல் விளைத்த பெருமானை ஆயர்பாடிக்கு அணி விளக்கை வில்லி புதுவை நகர் நம்பி விட்டுசித்தன் வியன் கோதை வில்லைத் தொலைத்த புருவத்தாள் வேட்கை யுற்று மிக விரும்பும் சொல்லைத் துதிக்க வல்லார்கள் துன்பக் கடலுள் துவளாரே | வில்லை துலைத்த, Villai Thulaitha - வில்லைத் தோற்கடித்த புருவத்தாள், Puruvathaal - புருவங்களை யுடையளாய் வில்லி புதுவை நகர் நம்பி விட்டு சித்தன் வியன் கோதை, Villi Puthuvai nagar Nambi Vittu Chithan Viyan Kodhai - ஸ்ரீவில்லி புத்தூர்க்குத் தலைவரான பெரியாழ்வாருடைய மகளாய் ஆச்சர்ய குணசாலிநியான ஆண்டாள் அல்லல் விளைத்த பெருமானை, Allal Vilaitha Perumaanai - (திருவாய்ப் பாடி முழுதும்) தீங்கு விளைத்து அதனால் பெருமை பெற்றவனும் ஆயர் பாடிக்கு அணி விளக்கை, Aayar Paadikku Ani Vilakkai - திருவாய்ப் பாடிக்கு மங்கள தீபம் போன்று ப்ரகாசகனுமான கண்ண பிரானை வேட்கை உற்று, Vetkai Utru - ஆசைப் பட்டு மிக விரும்பும் சொல்லை, Miga Virumbum Sollai - மிக்க அபிநிவேசம் தோற்ற அருளிச் செய்த இப் பாசுரங்களை துதிக்க வல்லார்கள், Thuthika Vallargal - புகழ்ந்து ஓத வல்லவர்கள் துன்பம் கடலுள், Thunbam Kadalul - ஸம்ஸார ஸமுத்ரத்தில் துவளார், Thuvalaar - துவண்டு நோவு படமாட்டார்கள் |