| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 567 | நாச்சியார் திருமொழி || 7 - கருப்பூரம் நாறுமோ (பாஞ்ச சன்னியத்தைப் பத்மநாபனோடுஞ் சுற்றமாக்குதல்) 1 | கருப்பூரம் நாறுமோ கமலப் பூ நாறுமோ திருப் பவளச் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச் சுவையும் நாற்றமும் விருப்புற்று கேட்கின்றேன் சொல் ஆழி வெண் சங்கே | ஆழி வெண் சங்கே, Aazhi Ven Sange - கம்பீரமாய் வெளுத்திரா நின்ற ஸ்ரீபாஞ்ச ஜந்யாழ்வானே மருப்பு ஓசித்த மாதவன் தன், Marupu Ositha Madhavan Than - (குவயாபீட யானையன்) கொம்பை முறித்த கண்ண பிரானுடைய வாய், Vaai - திரு அதரத்தினுடைய சுவையும், Suvaiyum - ரஸத்தையும் நாற்றமும், Naatramum - பரிமளத்தையும் விரும்புற்று, Virumputru - ஆசையோடே கேட்கின்றேன், Ketkinren - (உன்னைக்) கேட்கிறேன் திருப் பவளச் செவ்வாய் தான், Thiru Pavala Chevvaai Thaan - (அப்பெருமானுடைய) அழகிய பவளம் போன்ற சிவந்த திருவதரமானது கருப்பூரம், Karupooram - பச்சைக் கற்பூரம் போல் நாறுமோ?, Naarumo? - பரிமளிக்குமோ? (அல்லது) கமலப் பூ, Kamala Poo - தாமரைப் பூப் போலே நாறுமோ?, Naarumo? - பரிமளிக்குமோ? தித்தித்திருக்குமோ, Thithithirukkumo - மதுரமான ரஸத்தை உடைத்தாயிருக்குமோ? சொல், Sol - இன்னபடி யிருக்குமென்று எனக்குச் சொல் |
| 568 | நாச்சியார் திருமொழி || 7 - கருப்பூரம் நாறுமோ (பாஞ்ச சன்னியத்தைப் பத்மநாபனோடுஞ் சுற்றமாக்குதல்) 2 | கடலில் பிறந்து கருதாது பஞ்ச சனன் உடலில் வளர்ந்து போய் ஊழியான் கைத்தலத் திடரில் குடியேறித் தீய வசுரர் நடலைப் பட முழங்கும் தோற்றத்தாய் நற் சங்கே | நல் சங்கே, Nal Sange - அழகிய சங்கே! கடலில், Kadalil - ஸமுத்திரத்திலே பிறந்து, Pirandhu - பிறந்து (அங்கு நின்றும்) பஞ்சசனன் உடலில் போய் வளர்ந்து, Panjasanan Udalil Poi Valarndhu - பஞ்சஜனனென்ற அஸுரனுடைய சரீரத்திற் போய் வளர்ந்து கருதாது, Karudhadhu - (இப்படி பிறந்த விடத்தையும் வளர்ந்த விடத்தையும்) நினையாமல் ஊழியான், Oozhiyaan - எம்பெருமானுடைய கை தலம் திடரில், Kai Thalam Thidaril - கைத் தலமாகிற உந்நத ஸ்தானத்திலே குடி ஏறி, Kudi eri - குடி புகுந்து தீய அசுரர், Theeya Asurar - கொடியவர்களான அசுரர்கள் நடலைப் பட, Nadalai Pada - துன்பப்படும்படி முழங்கும் தோற்றத்தாய், Muzhangum Thotrathaai - ஒலி செய்யும்படியான மேன்மை யுடையையா யிரா நின்றாய் (உன்பெருமையே பெருமை) |
| 569 | நாச்சியார் திருமொழி || 7 - கருப்பூரம் நாறுமோ (பாஞ்ச சன்னியத்தைப் பத்மநாபனோடுஞ் சுற்றமாக்குதல்) 3 | தட வரையின் மீத சரற் கால சந்திரன் இடை உவாவில் வந்து எழுந்தால் போலே நீயும் வடமதுரையார் மன்னன் வாசுதேவன் கையில் குடியேறி வீற்று இருந்தாய் கோலப் பெரும் சங்கே | கோலம் பெரு சங்கே, Kolam Peru Sange - அழகிய பெரிய சங்கே! சாற்காலம் சந்திரன், Saarkaalam Chandiran - சரத் கால சந்திரன் உவா இடையில், Uvaa Idaiyil - பௌர்ணமியினன்று தட வரையின் மீது வந்து எழுந்தால் போல, Thada Varaiyin Meedhu Vandhu Ezhunthaal Pol - பெரிய உதய கிரியிலே வந்து உதித்தாற்போல நீயும், Neeyum - நீயும் வடமதுரையார் மன்னன் வாசு தேவன் கையில், VadaMathuraiyaar Mannan Vasudevan Kaiyil - வடமதுரையிலுள்ளார்க்கு அரசானான கண்ணபிரானுடையத் திருக் கையில் குடி ஏறி, Kudi eri - குடி புகுந்து வீற்றிருந்தாய், Veetrirunthaai - உன் மேன்மையெல்லாம் தோற்ற இரா நின்றாய் |
| 570 | நாச்சியார் திருமொழி || 7 - கருப்பூரம் நாறுமோ (பாஞ்ச சன்னியத்தைப் பத்மநாபனோடுஞ் சுற்றமாக்குதல்) 4 | சந்தர மண்டலம் போல் தாமோதரன் கையில் அந்தரம் ஓன்று இன்றி ஏறி அவன் செவியில் மந்திரம் கொள்வாயே போலும் வலம் புரியே இந்திரனும் உன்னோடு செல்வத்துக்கு ஏலானே | வலம்புரியே!, Valampuriye! - வலம்புரிச் சங்கே! தமோதரன் கையில், Dhamodharan Kaiyil - கண்ண பிரானது திருக்கையில் சந்திர மண்டலம் போல், Chandira Mandalam Pol - சந்திர மண்டலம் போலே அந்தரம் ஒன்று இன்றி ஏறி, Andharam Ondru Indri eri - இடைவிடாது இருந்து கொண்டு அவன் செவியில், Avan Seviyil - அவனுடைய காதில் மந்திரம் கொள்வாய் போலும், Mandhiram Kolvaai Polum - ஏதோ ரஹஸ்யம் பேசுகிறாய் போலிரா நின்றாய், இந்திரனும், Indiranum - (செல்வத்தில் மிக்கவனாகப் புகழ் பெற்ற) இந்திரனும் செல்வத்துக்கு, Selvathuku - ஐச்வர்ய விஷயத்தில் உன்னோடு ஏலான், Unnodu elaan - உனக்கு இணையாக மாட்டான் |
| 571 | நாச்சியார் திருமொழி || 7 - கருப்பூரம் நாறுமோ (பாஞ்ச சன்னியத்தைப் பத்மநாபனோடுஞ் சுற்றமாக்குதல்) 5 | உன்னோடு உடனே ஒரு கடலில் வாழ்வாரை இன்னார் இனையார் என்று எண்ணுவார் இல்லை காண் மன்னாகி நின்ற மதுசூதன் வாய் அமுதம் பன்னாளும் உண்கின்றாய் பாஞ்ச சன்னியமே | பாஞ்ச சன்னியமே!, Paanja Sanniyame! - சங்கே! ஒரு கடலில், Oru Kadalil - ஒரே கடலில் உன்னோடு உடனே, Unnodu Udane - உன்னோடு கூடவே வாழ்வாரை, Vaazhvaarai - வாழப் பிறந்தவர்களான மற்றும் பலரை இன்னார் இனையார் என்று எண்ணுவார் இல்லை காண், Innaar Inaiyaar Endru Ennuvaar Illai Kaan - ஒரு பதார்த்தமாகவும் மதிப்பாரில்லை காண் (நீ ஒருவன் மாத்திரம்) மன் ஆகி நின்ற, Man Aagi Nindra - ஸர்வ ஸ்வாமியா யிரா நின்ற மதுசூதன், Madhusoodhan - கண்ணபிரானுடைய வாய் அமுதம், Vaai Amudham - திருவாயினமுதத்தை பல் நாளும், Pal Naalum - பல காலமாக உண்கின்றாய், Ungindraai - பருகா நின்றாய் (ஆகையால் நீயே பாக்யசாலி) |
| 572 | நாச்சியார் திருமொழி || 7 - கருப்பூரம் நாறுமோ (பாஞ்ச சன்னியத்தைப் பத்மநாபனோடுஞ் சுற்றமாக்குதல்) 6 | போய்த் தீர்த்தமாடாதே நின்ற புணர் மருதம் சாய்த்தீர்த்தான் கைத்தலத்தே ஏறிக் குடி கொண்டு சேய்த்தீர்த்தமாய் நின்ற செங்கண் மால் தன்னுடைய வாய்த் தீர்த்தம் பாய்ந்த்தாட வல்லாய் வலம் புரியே | வலம் புரியே!, Valam Puriye! - வலம்புரிச் சங்கே! போய், Poi - வெகு தூரம் வழி நடந்து போய் தீர்த்தம், Theertham - கங்கை முதலிய தீர்த்தங்களிலே ஆடாதே, Aadaadhe - நீராடுகையாகிற கஷ்டங்கள் பட வேண்டாமல் நின்ற, Nindra - நாரத சாபத்தாலே மரமாய் நின்ற புணர் மருதம், Punar Marutham - இரட்டை மருத மரத்தை சாய்த்து ஈர்த்தான், Saaithu eerthaan - முறித்துத் தள்ளின கண்ணபிரானுடைய கைத்தலத்து ஏறி, Kaithalathu eri - திருக் கைத்தலத்தின் மீதேறி குடிகொண்டு, Kudikondu - குடியாயிருந்து சேய், Sei - மிகத்தூரமாய் தீர்த்தமாய் நின்ற, Theerthamaai Nindra - பாவநமாயிருக்கிற செங்கண் மால் தன்னுடைய, Sengan maal Thanudaiya - புண்டரீகாக்ஷனான அவனுடைய வாய்த் தீர்த்தம், Vaai Theertham - வாயம்ருதத்திலே பாய்ந்து, Paaindhu - குதித்து ஆடவல்லாய், Aadavallaai - நீராடவல்லாய் |
| 573 | நாச்சியார் திருமொழி || 7 - கருப்பூரம் நாறுமோ (பாஞ்ச சன்னியத்தைப் பத்மநாபனோடுஞ் சுற்றமாக்குதல்) 7 | செங்கமல நாண் மலர் மேல் தேன் நுகரும் அன்னம் போல் செங்கண் கரு மேனி வாசுதேவன் உடைய அங்கைத் தலமேறி அன்ன வசம் செய்யும் சங்கரையா உன் செல்வம் சால அழகியதே | நாள், Naal - அப்போதலர்ந்த செம் கமலம் மலர் மேல், Sem Kamalam Malar Mel - செந்தாமரைப் பூவில் படிந்து தேன், Then - தேனை நுகரும், Nugarum - பருகுகின்ற அன்னம் போல், Annam Pol - அன்னப் பறவை போன்று செம் கண் கருமேனி வாசு தேவனுடைய, Sem Kan Karumeni Vaasu Dhevanudaiya - சிவந்த திருக் கண்களையும் கறுத்த திருமேனியை யுமுடைய கண்ணபிரானது அம் கைத்தலம் ஏறி, Am Kaithalam eri - அழகிய கைத் தலத்தின் மீதேறி அன்ன வசம் செய்யும், Anna Vasam Seiyum - கண் வளர்கின்ற சங்கு அரையா!, Sangu Araya! - சங்குகளிற் சிறந்த பாஞ்ச ஜந்யமே! உன் செல்வம், Un Selvam - உன்னுடைய செல்வமானது சால, Saala - மிகவும் அழகியது, Azhagiyadhu - சிறந்தது காண் |
| 574 | நாச்சியார் திருமொழி || 7 - கருப்பூரம் நாறுமோ (பாஞ்ச சன்னியத்தைப் பத்மநாபனோடுஞ் சுற்றமாக்குதல்) 8 | உண்பது சொல்லில் உலகு அளந்தான் வாய் அமுதம் கண் படை கொள்ளில் கடல் வண்ணன் கைத் தலத்தே பெண் படையார் உன் மேல் பெரும் பூசல் சாத்துகின்றார் பண் பல செய்கின்றாய் பாஞ்ச சன்னியமே | பாஞ்சசன்னியமே, Paanja Sanniyame - சங்கே!, உண்பது சொல்லில், Unbadhu Sollil - நீ உண்பது என்ன வென்றால் உலகு அளந்தான் வாய் அமுதம், Ulagu Alanthaan Vaai Amutham - உலகங்களை அளந்தவனான் எம்பெருமானுடைய திருவாயிலுள்ள அம்ருதம் கண் படை கொள்ளில், Kan Padai Kollil - நீ படுத்துக் கொள்வது எங்கே யென்றால் கடல் வண்ணன் கை தலத்தே, Kadal Vannan Kai Thalathe - கடல் போன்ற நிறத்தை யுடையனான அவ் வெம்பெருமானுடைய திருக் கையிலே (இப்படி உனக்கு ஊணுமுறக்கமும் அங்கேயா யிருப்பதனால்) பெண் படையார், Pen Padaiyaar - பெண்குலத்தவர்கள் அனைவரும் உன் மேல், Un Mel - உன் விஷயமாக பெரு பூசல், Peru Poosal - பெரிய கோஷம் போடுகிறார்கள் (எங்கள் ஜீவனத்தை இவனே கொள்ளை கொள்ளுகிறானென்று கூச்சலிடுகிறார்கள்) பண்பு அல செய்கின்றாய், Panbu Ala Seikiraai - (இப்படி அவர்கள் வருந்தும்படி) அநியாயமான காரியத்தைச் செய்கிறாய் (இஃது உனக்குத் தகுதி யல்ல என்கை) |
| 575 | நாச்சியார் திருமொழி || 7 - கருப்பூரம் நாறுமோ (பாஞ்ச சன்னியத்தைப் பத்மநாபனோடுஞ் சுற்றமாக்குதல்) 9 | பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பார்த்திருப்ப மது வாயில் கொண்டால் போலே மாதவன் தன் வாயமுதம் பொதுவாக உண்பதனைப் புக்கு நீ யுண்டக்கால் சிதையாரோ வுன்னோடு செல்வப் பெரும் சங்கே | பெரு செல்வம் சங்கே, Peru Selvam Sange - பெரிய செல்வம் படைத்த சங்கமே! பதினாறாம் ஆயிரவர் தேவிமார், Pathinaaraam Aayiravar Devimaar - பதினாறாயிரம் தேவிமார்கள் பார்த்து இருப்ப, Paarthu Iruppa - கண்ண பிரானுடைய வாயமுதத்தை நாம் பருக வேணுமென விரும்பி எதிர்பார்த்திருக்கையில் பொது ஆக உண்பது மாதவன் தன் வாய் அமுதத்தை, Pothu Aaga Unbadhu Madhavan than vaai Amudhathai - பகவத் ஸம்பந்திகளெல்லாரும் பொதுவாக உண்ண வேண்டியதான அவ்வெம்பெருமானது வாயமுதத்தை நீ புக்கு, Nee Pukku - நீ யொருவனே ஆக்ரமித்து மது வாயில் கொண்டால் போல் உண்டக்கால், Madhu Vaayil Kondaal pol Undakkaal - தேனை உண்கிறாப் போல் உண்டால் உன்னோடு சிதையாரோ, Unnodu Sidhaiyaaro - (மற்றபேர்கள்) உன்னோடு விவாதப் பட மாட்டாரோ |
| 576 | நாச்சியார் திருமொழி || 7 - கருப்பூரம் நாறுமோ (பாஞ்ச சன்னியத்தைப் பத்மநாபனோடுஞ் சுற்றமாக்குதல்) 10 | பாஞ்ச சன்னியத்தைப் பற்ப நாபனொடும் வாய்த்த பெரும் சுற்றம் ஆக்கிய வண் புதுவை ஏய்ந்த புகழ்ப் பட்டர்பிரான் கோதை தமிழ் ஈரைந்தும் ஆய்ந்து ஏத்த வல்லார் அவரும் அணுக்கரே | பாஞ்சசன்னியத்தை, Paanjachanniyathai - சங்கை பற்பநாபனோடும், Parpanaabanodum - எம்பெருமானோடே வாய்ந்த பெரு சுற்றம் ஆக்கிய, Vaayndha Peru Suththam Aakkiya - கிட்டின பேருறவை யுடையதாக வார்த்தை சொன்ன வண் புதுவை, Van Pudhuvai - அழகிய ஸ்ரீ வில்லிபுத்தூரில் திருவவதரித்தவளும் ஏய்ந்த புகழ், Eaindha Pugazh - நிறைந்த புகழை யுடையவளும் பட்டர் பிரான் கோதை, Pattar Piran Kodhai - பெரியாழ்வாருடைய ஆண்டாள் (அருளிச் செய்த) தமிழ் ஈர் ஐந்தும், Thamizh Eer Aindhum - இத் தமிழ்ப் பாசுரங்கள் பத்தையும் ஆய்ந்து, Aaindhu - அநுஸந்தித்து ஏத்த வல்லார் அவரும், Aetha Vallar Avarum - (இது கொண்டு எம்பெருமானைத்) துதிக்க வல்லவர்களும் அணுக்கர், Anukkar - பாஞ்சஜந்யம் போல் அந்தரங்கராகப் பெறுவர்கள் |