Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: காப்பிடல் (10 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
192பெரியாழ்வார் திருமொழி || 2-8 காப்பிடல் 1
இந்திரனோடு பிரமன் ஈசன் இமையவர் எல்லாம்
மந்திர மா மலர் கொண்டு மறைந்துவராய் வந்து நின்றார்
சந்திரன் மாளிகை சேரும் சதுரர்கள் வெள்ளறை நின்றாய்
அந்தியம்போது இதுவாகும் அழகனே காப்பிட வாராய் – 2-8 1-
சந்திரன், chandiran - சந்த்ரனானவன்
மாளிகை சேரும், maaligai serum - வீடுகளின் மேல் நிலையிலே சேரப் பெற்ற
சதுரர்கள் வெள்ளறை, sathurargal vellarai - மங்களா ஸாஸன ஸமர்த்தர்கள் வஸிக்கின்ற திரு வெள்ளறையிலே
நின்றாய், nindrai - நின்றவனே!
அழகனே, azhagane - அழகு உடையவனே!
இந்திரனோடு, indiranodu - இந்திரனும்
பிரமன், piraman - ப்ரஹ்மாவும்
ஈசன், eesan - ருத்ரனும்
இமையவர், imaiyavar - மற்றுமுள்ள தேவர்களும்
எல்லாம், ellam - (ஆகிய) யாவரும்
மா மந்திரம் மலர் கொண்டு, maa manthiram malar kondru - சிறந்த மந்த்ர புஷ்பங்களைக் கொண்டு
உவர் ஆய் வந்து, uvar aay vandhu - (மிக்க ஸமீபமாவும் மிக்க தூரமாகவு மல்லாமல்) நடுவிடத்தி லிருப்பவராக வந்து
மறைந்து நின்றார், marainthu nindraar - மறைந்து நின்றார்கள்
இது, idhu - இக் காலம்
அம், am - அழகிய
அந்தி போது ஆகும், andhi podhu aagum - ஸாயம் ஸந்த்யா காலமாகும்
காப்பு இட வாராய், kaappu ida vaaraay - (ஆகையால்) (நான் உனக்கு ரக்ஷையாக) திருவந்திக் காப்பிடும்படி வருவாயாக
193பெரியாழ்வார் திருமொழி || 2-8 காப்பிடல் 2
கன்றுகள் இல்லம் புகுந்து கதறுகின்ற பசு எல்லாம்
நின்று ஒழிந்தேன் உன்னைக் கூவி நேசமேல் ஒன்றும் இலாதாய்
மன்றில் நில்லேல் அந்திப்போது மதிள் திருவெள்ளறை நின்றாய்
நன்று கண்டாய் என் தன் சொல்லு நான் உன்னைக் காப்பிட வாராய் -2 8-2
மதிள், madhil - மதிளரணை யுடைய
திரு வெள்ளறை, thiru vellarai - திரு வெள்ளறையிலே
நின்றாய், nindrai - நின்றருளினவனே!
மேல், mel - (என்) மேல்
ஒன்றும், ondruum - துன்பமும்
நேசம் இலாதாய், naesam ilaadhaay - அன்பில்லாதவனே!
உன்னை கூவி, unnai koovi - உன்னைக் கூவிக் கொண்டு
நின்றொழிந்தேன் (அதனால்), nindrozhinthen (adhanal) - நின்று விட்டேன்
பசு எல்லாம், pasu ellam - பசுக்களெல்லாம்
கன்றுகள் இல்லம் புகுந்து, kanrugall illam pugundhu - கன்றுகளிருக்குமிடத்திலே சேர்ந்து
கதறுகின்ற, kadharukindra - முலை கடுப்பாலே கத்துகின்றன;
அந்தி போது, andhi podhu - அந்தி வேளையில்
மன்றில், manril - நாற் சந்தியில்
நில்வேல், nilvael - நில்லாதே;
என் தன் சொல்லு, en than sollu - என்னுடைய வார்த்தை
நன்று கண்டாய், nanru kandaay - (உனக்கு) நல்லதாகுங்கிடாய்
நான் உன்னை காப்பு இட வாராய், naan unnai kaappu ida vaaraay - இப்போது இது சொல்வது சடக்கென (நீ) காப்பிட வருவதற்காக
194பெரியாழ்வார் திருமொழி || 2-8 காப்பிடல் 3
செப்போது மென் முலையார்கள் சிறு சோறும் இல்லும் சிதைத்திட்டு
அப்போது நான் உரப்பப் போய் அடிசிலும் உண்டிலை ஆள்வாய்
முப்போதும் வானவர் ஏத்தும் முனிவர்கள் வெள்ளறை நின்றாய்
இப்போது நான் ஒன்றும் செய்யேன் எம்பிரான் காப்பிட வாராய் 2-8 3
ஆள்வாய், aalvai - என்னை ஆளப் பிறந்தவனே!
முப்போதும், muppothum - ­மூன்று காலத்திலும்
வானவர், vaanavar - தேவர்கள்
ஏத்தும், eththum - ஸ்தோத்திரஞ்செய்கின்ற
முனிவர்கள் வெள்ளறை, munivargal vellarai - (உன் மங்களத்தையே) எண்ணுகிறவர்களுடைய திரு வெள்ளறையிலே
நின்றாய், nindrai - நிற்பவனே! (நீ)
செப்போது, seppodhu - பொற் கலசங்களை (உவமையாகச்) சொல்லத் தகுந்த
மெல் முலையார்கள், mel mulaiyaarkal - மெல்லிய முலையை யுடைய ஸ்திகள்
சிறு சோறும், siru sorum - (விளையாட்டாகச் செய்த) மணற் சோற்றையும்
(சிறு) இல்லும், (siru) illum - மணல் வீட்டையும்
சிதைத்திட்டு, sidhaidittu - அழித்து விட்டு (நிற்க)
அப்போது, appodhu - அக் காலத்தில்
நான், naan - நான்
உரப்ப, urappu - கோபித்துச் சொல்ல
போய், poi - (பிடித்தடிப்பேனோ? என்றஞ்சி என் முன் நில்லாமல்) அப்பாற்போய்
அடிசிலும், adisilum - சோற்றையும்
உண்டிலை, undilai - உண்ணாமலிருந்திட்டாய்
இப்போது, ippodhu - இந்த மையத்திலே
நான் ஒன்றும் செய்யேன், naan ondruum seyyen - நான் உன்னை (மருட்டுதல் முதலியன) ஒன்றும் செய்ய மாட்டேன்
எம்பிரான் காப்பிட வாராய், empiraan kaappida vaaraay - எம்பிரான் காப்பிட வாராய்
195பெரியாழ்வார் திருமொழி || 2-8 காப்பிடல் 4
கண்ணில் மணல் கொடு தூவி காலினால் பாய்ந்தனை என்று என்று
எண்ணரும் பிள்ளைகள் வந்திட்டு இவரால் முறைப்படுகின்றார்
கண்ணனே வெள்ளறை நின்றாய் கண்டாரோடே தீமை செய்வாய்
வண்ணமே வேலையது ஒப்பாய் வள்ளலே காப்பிட வாராய் 2-8 4
கண்ணனே, kannane - ஸ்ரீக்ருஷ்ணனே!
வெள்ளறை நின்றாய்!, vellarai nindrai! - புண்டரீகாக்ஷன் தானே இவன்
கண்டாரோடே, kandaarode - கண்டவரோடெல்லாம்
தீமை செய்வாய், theemai seivaay - தீம்பு செய்பவனே!
வண்ணம், vannam - திருமேனி நிறம்
வேலை அது, velai adhu - கடலின் நிறத்தை
ஒப்பாய், oppaay - ஒத்திருக்கப் பெற்றவனே!
வள்ளலே, vallale - உதாரனே!
எண் அரு, en aru - எண்ணுவதற்கு அருமையான (மிகப் பல)
பிள்ளைகள் இவர், pillaigal ivar - இப் பிள்ளைகள்
வந்திட்டு, vandhittu - வந்திருந்து
மணல் கொடு, manal kodu - மணலைக் கொண்டு வந்து
கண்ணில் தூவி, kannil thoovi - கண்ணில் தூவி விட்டு
காலினால் பாய்ந்தனை, kaalinaal paaindhanai - (அதனோடு நில்லாமல்) காலினாலும் உதைத்தாய்;
என்று என்று, endru endru - என்று பலதரஞ்சொல்லி (நீ செய்யுந்தீம்பைக் குறித்து)
முறைப்படுகின்றார், muraippaduginraar - முறையிடா நின்றார்கள்
காப்பு இட வாராய், kaappu ida vaaraay - (ஆதலால் அங்கே போவதை விட்டு) காப்பு இட வாராய்
196பெரியாழ்வார் திருமொழி || 2-8 காப்பிடல் 5
பல்லாயிரவர் இவ்வூரில் பிள்ளைகள் தீமைகள் செய்வார்
எல்லாம் உன் மேல் அன்றிப் போகாது எம்பிரான் இங்கே வாராய்
நல்லார்கள் வெள்ளறை நின்றாய் ஞானச் சுடரே உன் மேனி
சொல்லார வாழ்த்தி நின்று ஏத்தி சொப்படக் காப்பிட வாராய் -2 8-5
இ ஊரில், i ooril - (பஞ்சலக்ஷம் குடியுள்ள) இவ்வூரிலே
தீமைகள் செய்வார், theemaigal seivaar - தீம்புகளைச் செய்பவர்களாகிய
பிள்ளைகள், pillaigal - சிறுவர்கள்
பல் ஆயிரவர், pal aayiravar - அனேக ஆயிரக் கணக்கானவர்கள்;
எல்லாம், ellam - அவர்கள் செய்யும் தீம்புகளெல்லாம்
உன் மேல் அன்றி , un mel andri - உன் மேலல்லாமல்
போகாது, pogaadhu - (வேறொருவர் மேலும்) ஏறாது;
எம்பிரான்! நீ இங்கே வாராய், empiraan! nee inge vaaraay - (இப்படியிருப்பதால் அங்கே போகாமல்) எம்பிரான்! நீ இங்கே வாராய்;
நல்லார்கள் வெள்ளறை நின்றாய், nallaargal vellarai nindraay - நல்லவர்கள் வாழ்கிற வெள்ளறை(யில்) நின்றாய்!
ஞானம் சுடரே, gyaanam sudare - ஞான வொளியை யுடையவனே!
உன் மேனி, un meni - உன் திருமேனியை
சொல் ஆர் நின்று ஏத்தி, sol ar nindru aethi - சொல் நிறையும்படி நின்று ஸ்தோத்ரஞ்செய்து
வாழ்த்தி சொப்பட காப்பு இட வாராய், vaazhthi soppada kaappu ida vaaraay - மங்களாசாஸநஞ்செய்து நன்றாக காப்பு இட வாராய்
197பெரியாழ்வார் திருமொழி || 2-8 காப்பிடல் 6
கஞ்சன் கறுக்கொண்டு நின் மேல் கரு நிற செம்மயிர் பேயை
வஞ்சிப்பதற்கு விடுத்தான் என்பதோர் வார்த்தையும் உண்டு
மஞ்சு தவழ மணி மாட மதிள் திரு வெள்ளறையில் நின்றாய்
அஞ்சுவன் நீ அங்கு நிற்க அழகனே காப்பிட வாராய் -2- 8-6
மஞ்சு தவழ், manju thavazh - மேகங்கள் ஊர்ந்து செல்கின்ற
மணி மாடம், mani maadam - ரத்ந மயமான வீடுகளையும்
மதிள் திருவெள்ளறை, madhil thiru vellarai - மதிளையுமுடைய திருவெள்ளறை(யில்) நின்றாய்!
கஞ்சன், kanjan - கம்ஸனானவன்
நின் மேல், nin mel - உன் மேலே
கறுக்கொண்டு, karukkondu - கோபங்கொண்டு
கரு நிறம், karu niram - கரு நிறத்தையும்
செம் மயிர், sem mayir - செம் பட்ட மயிரையுமுடைய
பேயை, peyai - பூதனையை
வஞ்சிப்பதற்கு, vanjippatharku - (உன்னை) வஞ்சனையாகக் கொல்வதற்கு
விடுத்தான், Vidutthaan - அனுப்பினான்
என்பது, Enbadhu - என்பதான
ஓர் வார்த்தையும் , Or vaarthaiyum - ஒரு சொல்லும்
உண்டு, undu - கேட்டிருப்பதுண்டு
நீ அங்கு நிற்க, Nee Angu Nirka - (ஆதலால்) நீ அவ்விடத்திலே நிற்பதற்கு
அஞ்சுவன், Anjuvan - நான் அஞ்சா நின்றேன்
அழகனே! காப்பு இட வாராய், Azhagane! Kaappu Ida Vaaraay - அழகனே! காப்பு இட வாராய்
198பெரியாழ்வார் திருமொழி || 2-8 காப்பிடல் 7
கள்ளச் சகடும் மருதும் கலக்கழிய உதை செய்த
பிள்ளை அரசே நீ பேயை பிடித்து முலை உண்ட பின்னை
உள்ளவாறு ஒன்றும் அறியேன் ஒளி உடை வெள்ளறை நின்றாய்
பள்ளிகொள் போது இதுவாகும் பரமனே காப்பிட வாராய் -2 -8-7
கள்ளம், Kallam - வஞ்சனை யுடைய
சகடும், Sagadum - சகடாஸுரனையும்
மருதும், Marudhum - யமளார்ஜுநங்களையும்
கலக்கு அழிய, Kalakku Azhiya - (வடிவம்) கட்டுக் குலைந்தழியும்படி
உதை செய்த, Udhai Seydha - (திருவடிகளால்) உதைத்துத் தள்ளிய
பிள்ளை அரசே, Pillai Arase - பிள்ளைத் தன்மையைக் கொண்ட பெருமையனே!
நீ, Nee - நீ
பேயை, Peyai - பூதனையினுடைய
முலை பிடித்து உண்ட பின்னை, Mulai pidithu unda pinnai - தாயாகவே நினைத்து முலையைப் பிடித்து (வாய் வைத்து) உண்ட பின்பு
உள்ள ஆறு, Ulla aaru - உள்ள படி
ஒன்றும் அறியேன், Ondrum ariyen - ஒன்றுமறிகிறேனில்லை;
ஒளி உடை வெள்ளறை நின்றாய், Oli udai vellarai nindrai - ஒளி உடை வெள்ளறை நின்றாய்!
இது, Idhu - இப்போது
பள்ளி கொள் போது ஆகும், Palli kol podhu aagum - படுத்து உறங்குகிற வேளையாகும்;
பரமனே!, Paramane! - அழகாலே மேம்பட்டவனே காப்பு இட வாராய்
199பெரியாழ்வார் திருமொழி || 2-8 காப்பிடல் 8
இன்பம் அதனை உயர்த்தாய் இமையவர்க்கு என்றும் அரியாய்
கும்பக் களிறு அட்ட கோவே கொடும் கஞ்சன் நெஞ்சினில் கூற்றே
செம் பொன் மதிள் வெள்ளறையாய் செல்வத்தினால் வளர் பிள்ளாய்
கம்பக் கபாலி காண் அங்கு கடிதோடிக் காப்பிட வாராய் – 2-8 -8
இன்பம் அதனை, Inbam adhanai - உன் குண சேஷ்டிதங்களால்) பரமாநந்தத்தை
உயர்த்தாய், Uyarthaai - (எனக்கு) மேன் மேலுண்டாக்கினவனே! தொல்லை இன்பத்து இறுதி கண்டவள் அன்றோ
இமையவர்க்கு, Imaiyavarkku - தேவர்க்கு
என்றும், Endrum - எந்நாளும்
அரியாய், Ariyaai - அருமையானவனே!
கும்பம், Kumbam - மஸ்தகத்தையுடைய
களிறு, KaLiru - குவலயாபீடத்தை
அட்ட, Atta - கொன்ற
கோவே, Koode - ஸ்வாமியே!
கொடு, Kodu - கொடுமை தங்கிய
கஞ்சன், Kanjan - கம்ஸனுடைய
நெஞ்சினில், Nenjil - மநஸ்ஸிலே
கூற்றே, Kootre - யமன் போல் பயங்கரனாய்த் தோன்றுமவனே!
செம் பொன் மதிள் வெள்ளறையாய்!, Sem pon madhil vellaraiyaay! - செம் பொன் மதிள் வெள்ளறையாய்!
செல்லத்தினால் வளர், Sellathinaal valar - செல்வச் செருக்கோடு வளர்கின்ற
பிள்ளாய், Pillay - குழந்தாய்!
அங்கு, Angu - நீ இருக்கிறவிடத்தில்
கம்பம், Kambam - (கண்டார்க்கு) நடுக்கத்தை விளைக்க வல்ல
கபாலி காண், Kabali kaan - துர்க்கையாகும்;
கடிது ஓடி காப்பு இட வாராய், Kadidhu odi kaappu ida vaaraay - (ஆகையால் அங்கு நில்லாமல்) மிகவும் விரைந்தோடி காப்பு இட வாராய்
200பெரியாழ்வார் திருமொழி || 2-8 காப்பிடல் 9
இருக்கொடு நீர் சங்கில் கொண்டிட்டு எழில் மறையோர் வந்து நின்றார்
தருக்கேல் நம்பி சந்தி நின்று தாய் சொல்லு கொள்ளாய் சில நாள்
திருக் காப்பு நான் உன்னைச் சாத்தத் தேசுடை வெள்ளறை நின்றாய்
உருக்காட்டும் அந்தி விளக்கு இன்று ஒளி கொள்ள ஏற்றுகிறேன் வாராய் – 2-8 9
இருக்கொடு, Irukodu - (புருஷ ஸூக்தம் முதலிய) ருக்குக்களைச் சொல்லிக் கொண்டு
நீர், Neer - தீர்த்தத்தை
சங்கில், Sangil - சங்கத்திலே
கொண்டிட்டு, Kondittu - கொணர்ந்து
எழில், Ezhil - விலக்ஷணரான
மறையோர், Maraaiyor - ப்ராஹ்மணர் (உனக்கு ரக்ஷையிடுவதற்கு)
வந்து நின்றார், Vandhu nindraar - வந்து நிற்கிறார்கள்;
நம்பி, Nambi - தீம்பு நிறைந்தவனே!
சந்தி நின்று, Sandhi nindru - நாற்சந்தியிலே நின்று
தருக்கேல், Tharukkael - செருக்கித் திரியாதே
சில நாள், Sil naal - சில காலம்
தாய் சொல்லு, Thai sollu - தாய் வார்த்தையை
கொள்ளாய், Kollaay - கேட்பாயாக;
தேசு உடை வெள்ளறை நின்றாய், Desu udai vellarai nindraay - தேஜஸ்ஸை உடைய வெள்ளறை நின்றாய்!
இன்று, Indru - இப்போது
நான், Naan - நான்
திரு காப்பு, Thiru kaappu - அழகிய ரக்ஷையை
உன்னை சாத்த, Unnai saathu - உனக்கு இடுதற்காக
உருகாட்டும் அந்திவிளக்கு, Urukaatum andhivilakku - உன் திருமேனி வடிவத்தைக் காட்டுகின்ற அந்தி விளக்கை
ஏற்றுகேன் வாராய், Etruken vaaraay - ஏற்றுவேன் (இதைக்காண) கடுக வருவாயாக
201பெரியாழ்வார் திருமொழி || 2-8 காப்பிடல் 10
போதமர் செல்வக் கொழுந்து புணர் திரு வெள்ளறையானை
மாதர்க்கு உயர்ந்த யசோதை மகன் தன்னைக் காப்பிட்ட மாற்றம்
வேதப் பயன் கொள்ள வல்ல விட்டு சித்தன் சொன்ன மாலை
பாதப் பயன் கொள்ள வல்ல பத்தர் உள்ளார் வினை போமே -2- 8-10
மாதர்க்கு உயர்ந்த, Maadharkku uyarntha - ஸ்திரீகளுள் சிறந்த
அசோதை, Asodhai - யசோதைப் பிராட்டி
மகன் தன்னை, Magan thannai - தன் புத்ரனான கண்ணனை
காப்பு இட்ட, Kaappu itta - ரக்ஷை யிட அழைத்த
மாற்றம், Maatram - வார்த்தையை
போது அமர், Pothu amar - தாமரைப் பூவைப் (பிறப்பிடமாகப்) பொருந்திய
செல்வக் கொழுந்து, Selva kozhundhu - செல்வத்திற்கு உரியவளாய் மற்றைத் தேவியரிற் சிறந்தவளான பிராட்டி
புணர், Punar - ஸம்ச்லேஷிக்கப் பெற்ற
திரு வெள்ளறையானை, Thiru vellaraiyaanai - திரு வெள்ளறையில் நின்றருளியவனைப் பற்றி
வேதப் பயன், Vedha payan - (எம்பெருமானுக்கு மங்களாசாஸநம் செய்கையையே) வேத தாத்பர்யமாக
கொள்ள வல்ல, Kolla valla - அறிய வல்ல
விட்டு சித்தன், Vittu chithan - பெரியாழ்வார்
சொன்ன, Sonna - அருளிச் செய்த
மாலை, Maalai - பாமாலையினுடைய
பாதம் பயன், Paadham payan - ஓரடி கற்றதனாலாகிய பயனை; நாலாம் அடியில் சொன்ன காப்பிடுதலை
கொள்ள வல்ல, Kolla valla - அடைய வல்ல
பக்தர் உள்ளார், Bakthar ullaar - பக்தராக உள்ளவரது
வினை, Vinai - வினைகளெல்லாம்
போம், Poom - கழிந்து விடும்