| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 524 | நாச்சியார் திருமொழி || 3 - கோழியழைப்பதன் (கண்ணன் கவர்ந்த கூறைகளைக் கன்னியர் இரத்தல்) 1 | கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்தோம் ஆழியம் செல்வன் எழுந்தான் அரவணை மேல் பள்ளி கொண்டாய் ஏழைமை ஆற்றவும் பட்டோம் இனி என்றும் பொய்கைக்கு வாரோம் தோழியும் நானும் தொழுதோம் துகிலைப் பணித்து அருளாயே | அரவு அணை மேல், Aravu anai mel - திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேலே பள்ளி கொண்டாய், Palli kondai - திருக் கண் வளர்ந்தருளுமவனே! குடைந்து, Kudainthu - (குளத்தில்) அவகாஹித்து நீர் ஆடுவான், Neer aaduvan - நீராடுவதற்காக கோழி அழைப்பதன் முன்னம், Kozhi azhaippadhan munnam - கோழி கூவுதற்கு முன்னம் போந்தோம், Pondhom - (இவ்விடம்) வந்தோம், (இப்போதோ வென்றால்,) பொய்கைக்கு, Poigaikku - குளத்திற்கு வாரோம், Vaarom - நாங்கள் வருவதில்லை செல்வன், Selvan - (ஸ்ரீ மந்நாராயணன் தன்னிடத்து நித்ய வாஸம் பண்ணப் பெறுகையாகிற) செல்வத்தை யுடையனான ஆழியன், Aazhiyan - சூரியன் எழுந்தான், Ezhundhaan - உதித்தான் ஆற்றவும் ஏழமை பட்டோம், Aatravum ezhamai pattom - (நாங்கள் உன்னாலே) மிகவும் இளிம்பு பட்டோம் இனி, Ini - இனி மேல் என்றும், Endrum - என்றைக்கும் தோழியும் நானும் தொழுதோம், Thozhiyum naanum thozhudhom - தோழியும் நானுமாக (உன்னை) ஸேவியா நின்றோம் துகிலை, Thugilai - (எங்களுடைய) சேலைகளை பணித்தருளாய், Panitharulaai - தந்தருள வேணும் |
| 525 | நாச்சியார் திருமொழி || 3 - கோழியழைப்பதன் (கண்ணன் கவர்ந்த கூறைகளைக் கன்னியர் இரத்தல்) 2 | இது என் புகுந்தது இங்கு அந்தோ இப் பொய்கைக்கு எவ்வாறு வந்தாய் மதுவின் துழாய் முடி மாலே மாயனே எங்கள் அமுதே விதி இன்மையால் அது மாட்டோம் வித்தகப் பிள்ளாய் விரையேல் குதி கொண்டு அரவில் நடித்தாய் குருந்திடைக் கூறை பணியாய் | இங்கு, Ingu - இங்கே புகுந்து இது என், Pugundhu idhu en - (நீ) வந்து சேர்ந்த விதற்குக் காரணமென்ன? இப் பொய்கைக்கு, Ip poigaikku - இக் குளத்திற்கு எவ்வாறு வந்தாய், Evvaaru vandhaai - எவ் வழியாலே வந்தாய்? மது இன் துழாய் முடிமாலே, Madhu in thuzhaai mudimaale - தேன் மாறாத இனிய திருத்துழாய் மாலை சூடிய திருவபிஷேகத்தை யுடைய பெரியோனே! மாயனே, Maayane - ஆச்சரிய சக்தி யுடையவனே! எங்கள் அமுதே, Engal amudhe - எங்களுக்கு அம்ருதம் போல் இனியவனானவனே! விதி இன்மையால், Vidhi inmaiyal - விதி யில்லாமையாலே அது மாட்டோம், Adhu maattom - ஸம்ச்லேஷத்திற்கு இசைய மாட்டோம் வித்தகப் பிள்ளாய், Vitthaka pillai - ஆச்சரிய சேஷ்டைகளையுடைய பிள்ளாய்! விரையேல், Viraiyel - அவஸரப் பட வேண்டா அரவில், Aravil - காளிய நாகத்தின் மேல்- குதி கொண்டு, Kudhi kondu - குதித்துக் கொண்டு நடித்தாய், Nadithaai - நர்த்தனஞ்செய்தவனே! குருந்திடைக் கூறை, Kurundhidai koorai - (அக்) குருந்த மரத்தின் மேல் வைத்திருக்கிற சேலைகளை பணியாய், Paniyaai - கொடுத்தருள் |
| 526 | நாச்சியார் திருமொழி || 3 - கோழியழைப்பதன் (கண்ணன் கவர்ந்த கூறைகளைக் கன்னியர் இரத்தல்) 3 | எல்லே ஈது என்ன விளமை எம்மனைமார் காணில் ஒட்டார் பொல்லாங்கு ஈது என்று கருதாய் பூங்குருந்தேறி யிருத்தி வில்லால் இலங்கை யழித்தாய் நீ வேண்டியது எல்லாம் தருவோம் பல்லாரும் காணாமே போவோம் பட்டைப் பணித்து அருளாயே | வில்லால், Villaal - வில்லாலே இலங்கை, Ilangai - லங்கையை அழித்தாய், Azhithaai - நாசஞ் செய்தருளினவனே! எல்லே, Elle - என்னே! ஈது என்ன இளமை, Eethu enna ilamai - இது என்ன பிள்ளைத்தனம்! எம் அனைமார், Em anaimaar - எங்களுடைய தாய்மார்கள் காணில், Kaanil - கண்டால் ஒட்டார், Ottaar - (மறுபடியும் எங்களை வீட்டின் வழி வர) ஒட்டார்கள் ஈது, Eethu - (நீயொவென்றால்) கண்டாரடங்கலும் ஏசும்படி எங்களை அம்மணமாக்கி நிறுத்தியிருக்கிற இது பொல்லாங்கு என்று, Pollaangu endru - பொல்லாத காரியமென்று கருதாய், Karuthaai - நினைக்கிறாயில்லை பூ குருந்து, Poo kurundhu - புஷ்பித்திரா நின்ற குருந்த மரத்தின் மேல் ஏறி இருத்தி, Eri iruthi - ஏறி யிரா நின்றாய் நீ வேண்டியது எல்லாம், Nee vendiyadhu ellaam - நீ அபேஷிக்கு மவற்றை யடங்கலும் தருவோம், Tharuvom - கொடுக்கிறோம் பல்லாரும், Pallaarum - (ஊரிலுள்ள) பலரும் காணோமே, Kaanome - காணாதபடி போவோம், Povom - போகிறோம் பட்டை, Pattai - (எங்களுடைய) பட்டுச் சேலைகளை பணித்தருளாய், Panitharulaai - தந்தருள வேணும் |
| 527 | நாச்சியார் திருமொழி || 3 - கோழியழைப்பதன் (கண்ணன் கவர்ந்த கூறைகளைக் கன்னியர் இரத்தல்) 4 | பரக்க விழித்து எங்கும் நோக்கிப் பலர் குடைந்தாடும் சுனையில் அரக்க நில்லாக் கண்ண நீர்கள் அலமருகின்றனவா பாராய் இரக்கமேல் ஒன்றும் இலாதாய் இலங்கை அழித்த பிரானே குரக்கு அரசு ஆவது அறிந்தோம் குருந்திடைக் கூறை பணியாய் | இலங்கை அழித்த பிரானே!, Ilangai azhitha pirane! - இலங்கை அழித்த பிரானே! பலர் குடைந்து ஆடும் சுனையில், Palar kudainthu aadum sunaiyil - பல பெண்கள் படிந்து நீராடும் இப் பொய்கையின் கரையில் கண்ண நீர்கள், Kanna neergal - கண்ணீர்த் தாரைகள் அரக்க நில்லா, Arakka nilla - அடக்கினாலும் நிற்க மாட்டாதவைகளாய் அலமருகின்ற, Alamarugindra - ஆ தளும்புகிறபடியை எங்கும், Engum - நாற் புறத்திலும் பரக்க விழித்து, Parakka vizhithu - நன்றாக விழித்து நோக்கி பாராய், Nokki paaraai - உற்று நோக்கு ஒன்றும் இரக்கம் இலாதாய், Ondrum irakkam ilaadhaai - கொஞ்சங்கூட தயவு இல்லாதவனே! குரங்கு அரசு ஆவது அறிந்தோம், Kurangu arasu aavadhu arindhom - நீ மரமேற வல்லார்க்குள் தலைவன் என்பதை அறிந்து கொண்டோம் குருந்திடை கூறை பணியாய், Kurundhidai koorai paniyaai - (ஆன பின்பு) குருந்தின் மேலுள்ள (எங்கள்) சேலைகளை கொடுத்தருள வேணும் |
| 528 | நாச்சியார் திருமொழி || 3 - கோழியழைப்பதன் (கண்ணன் கவர்ந்த கூறைகளைக் கன்னியர் இரத்தல்) 5 | காலைக் கதுவிடுகின்ற கயலொடு வாளை விரவி வேலைப் பிடித்து என் ஐமார்களோட்டில் என்ன விளையாட்டோ கோலச் சிற்றாடை பலவும் கொண்டு நீ ஏறி இராதே கோலம் கரிய பிரானே குருந்திடைக் கூறை பணியாய் | கரிய, Kariya - கறுத்த கோலம், Kolam - திருமேனியை யுடைய பிரானே, Pirane - கண்ண பிரானே! கயலொடு, Kayalodu - கயல் மீன்களும் வாளை, Vaalai - வாளை மீன்களும் விரவி, Viravi - ஒன்றாய்க் கூடி காலை, Kaalai - (எமது) கால்களை கதுவிடுகின்ற, Kadhuviduginra - கடியா நின்றன என் ஐமார்கள், En aimargal - (இப்படி நீ எங்களை வருத்தப்படுத்துவதைக் கேள்விப்பட்டு) எங்கள் தமையன்மார்கள் வேலை பிடித்து, Velai pidithu - வேலைப் பிடித்துக் கொண்டு ஓட்டில், Ottil - உன்னைத் துரத்திவிட்டால் என்ன விளையாட்டு, Enna vilaiyaattu - (அது பின்னை) என்ன விளையாட்டாய் முடியும்? நீ, Nee - நீ கோலம், Kolam - அழகிய சிற்றாடை பலவும் கொண்டு, Sitraadai palavum kondu - சிற்றாடைகளை யெல்லாம் வாரிக் கொண்டு ஏறி இராது, Eri iraadhu - (மரத்தின் மேல்) ஏறி யிராமல் குருந்திடை, Kurundhidai - குருந்த மரத்தின் மேலுள்ள கூறை, Koorai - (எங்கள்) சேலைகளை பணியாய், Paniyaai - தந்தருள் |
| 529 | நாச்சியார் திருமொழி || 3 - கோழியழைப்பதன் (கண்ணன் கவர்ந்த கூறைகளைக் கன்னியர் இரத்தல்) 6 | தடத்தவிழ் தாமரைப் பொய்கைத் தாள்கள் எம் காலைக் கதுவ விடத்தேள் எறிந்தாலே போலே வேதனை யாற்றவும் பட்டோம் குடத்தை எடுத்து ஏறவிட்டுக் கூத்தாட வல்ல வெங்கோவே படிற்றை எல்லாம் தவிர்ந்து எங்கள் பட்டைப் பணித்து அருளாயே | தடம், Thadam - விசாலமாயும் அவிழ் தாமரை, Avizh thaamarai - மலர்ந்த தாமரைகளை யுடையவுமான பொய்கை, Poigai - தடாகத்திலே தாள்கள், Thaalgal - தாமரைத் தண்டுகளானவை எம் காலை, Em kaalai - எங்கள் கால்களை கதுவ, Kadhuva - கடிக்க விடம் தேள் எறிந்தால் போல, Vidam thel erindhaal pol - விஷத்தை யுடைய தேள் கொட்டினாற்போலே ஆற்றவும், Aatravum - மிகவும் வேதனை பட்டோம், Vedhanai pattom - வருத்தப் படா நின்றோம் குடத்தை, Kudathai - குடங்களை எடுத்து, Eduthu - தூக்கி ஏற விட்டு, Era vittu - உயர வெறித்து கூத்து ஆட, Koothu aada - (இப்படி) குடக் கூத்தை ஆடுவதற்கு வல்ல, Valla - ஸாமர்த்தியமுள்ள எம் கோவே, Em kove - எம்முடைய தலைவனே! படிற்றை எல்லாம் தவிர்ந்து, Paditrai ellaam thavirndhu - (நீ செய்கிற) தீம்புகளை யெல்லாம் விட்டு எங்கள் பட்டை பணித்தருளாய், Engal pattai pani tharulaayi - சேலைகளை கொடுத்தருள வேணும். |
| 530 | நாச்சியார் திருமொழி || 3 - கோழியழைப்பதன் (கண்ணன் கவர்ந்த கூறைகளைக் கன்னியர் இரத்தல்) 7 | நீரிலே நின்று அயர்க்கின்றோம் நீதி யல்லாதன செய்தாய் ஊரகம் சாலவும் சேய்ததால் ஊழி எல்லாம் உணர்வானே ஆர்வம் உனக்கே யுடையோம் அம்மனைமார் காணில் ஒட்டார் போர விடாய் எங்கள் பட்டைப் பூங்குருந்து ஏறி இராதே | ஊழி எல்லாம், Oozhi ellam - கற்பாந்த காலத்திலெல்லாம் உணர்வானே, Unarvaane - (ஜகத் ரக்ஷண சிந்தையுடன்) உணர்ந்திருப்பவனே! நீரிலே நின்று அயர்க்கின்றோம், Neerile ninru ayarkinrom - ஜலத்தில் நின்று கொண்டு வருத்தப்படா நின்றோம் நீதி அல்லாதன, Neethi allaadhana - அநீதியான செயல்களை ஆல், Aal - ஐயோ! (இப்படி நீ எங்களை வருத்தத் செய்தேயும்) உனக்கே, Unakke - உன் விஷயத்திலேயே ஆர்வம் உடையோம், Aarvam udaiyom - நாங்கள் அன்புள்ளவர்களா யிரா நின்றோம் அம்மனைமார், Ammanaimaar - எங்கள் தாய்மார் காணில், Kaanil - நீ பண்ணும் லீலைகளுக்கு நாங்கள் இணங்கி நிற்பதைக் கண்டால் செய்தாய், Seithaai - செய்யா நின்றாய் ஊர், Oor - (உன் விஷமங்களுக்குத் தப்பி ஓடிப் பிழைக்கப் பார்ப்போமென்றால்) எங்கள் ஊராகிய ஆய்ப் பாடியும் அகம், Agam - மாளிகைகளும் சாலவும், Saalavum - மிகவும் சேய்த்து, Seithu - தூரத்தி லிரா நின்றன ஒட்டார், Ottaar - இசைய மாட்டார்கள் எங்கள் பட்டை, Engal pattai - எங்களுடைய சேலைகளை போர விடாய், Pora vidaai - தந்தருளாய் பூ குருந்து, Poo kurundhu - பூத்திரா நின்ற குருத்த மரத்தின் மேல் ஏறி இராதே, Eri iraadhe - ஏறிக் கொண்டு தீமைகளைச் செய்யாதே |
| 531 | நாச்சியார் திருமொழி || 3 - கோழியழைப்பதன் (கண்ணன் கவர்ந்த கூறைகளைக் கன்னியர் இரத்தல்) 8 | மாமியார் மக்களே யல்லோம் மற்றும் இங்கு எல்லாரும் போந்தார் தூ மலர்க்கண்கள் வளரத் தொல்லை யிராத் துயில்வானே சேமமலேன்றிது சாலச் சிக்கனே நாமிது சொன்னோம் கோமள வாயர் கொழுந்தே குருந்திடைக் கூறை பணியாய் | தொல்லை இரா, Thollai iraa - பழைய ராத்ரிகளில் தூ மலர் கண்கள் வளர, Thoo malar kangal valara - பரிசுத்தமான மலர் போன்ற கண்கன் நித்ரா பரவசமாம்படி துயில்வானே,Thuyilvaane - பள்ளி கொள்பவனே! மாமியார் மக்களே அல்லோம், Maamiyaar makkale allom - (இப் பொய்கைக் கரையிலே நிற்குமவர்கள்) உனக்குத் தேவிமாராகும் முறையிலுள்ளார் மாத்திரமல்லோம் மற்றும் எல்லோரும், Matrum ellorum - மற்றுள்ள மாமிமார், அவர்கள் தாய்மார் முதலியவர்களும் இங்கு, Ingu - இவ் விடத்தில் போந்தார், Pondhaar - வந்திருக்கின்றார்கள் இது, Idhu - நீ செய்கிற இத் தீம்பானது சால, Saala - மிகவும் சேமம் அன்று, Semam andru - தகுதியானதன்று இது, Idhu - இவ் வார்த்தையை நாம், Naam - நாங்கள் சிக்கன, Sikana - திண்ணிதாக சொன்னோம், sonnom - சொல்லுகின்றோம் ஆயர், Aayar - இடையர்களுக்கு கோமளக் கொழுந்தே, Komala kozhundhe - இளங்கொழுந்து போன்றவனே! குருந்திடை கூறை பணியாய், Kurundhidai koorai paniyaai - குருந்தின் மேலுள்ள (எங்கள்) சேலைகளை கொடுத்தருள வேணும். |
| 532 | நாச்சியார் திருமொழி || 3 - கோழியழைப்பதன் (கண்ணன் கவர்ந்த கூறைகளைக் கன்னியர் இரத்தல்) 9 | கஞ்சன் வலை வைத்த வன்று காரிருள் எல்லில் பிழைத்து நெஞ்சு துக்கம் செய்யப் போந்தாய் நின்ற விக்கன்னியரோமை அஞ்ச யுரப்பாள் அசோதை ஆணாட விட்டிட்டிருக்கும் – வஞ்சகப் பேய்ச்சி பாலுண்ட மசுமையிலீ கூறை தாராய் | கஞ்சன், Kanjan - கம்ஸனானவன் வலை வைத்த அன்று, Valai vaitha andru - உன்னை அழிப்பதாக நினைத்த காலத்தில் கார் இருள், Kaar irul - மிக்க இருளை யுடையத்தான எல்லில், Ellil - இரவில் பிழைத்து, Pizhaithu - பிழைத்து நின்ற, Nindra - (அம்மணமாக) நிற்கின்ற இக் கன்னிய ரோமை, Ik kanniya romai - இளம் பெண்களான எங்களுக்கு நெஞ்சு துக்கம் செய்ய, Nenju thukkam seiya - மனத் துன்பத்தை உண்டாக்குவதற்காக போந்தாய், Pondhaai - வந்து பிறந்தாய் அசோதை, Asodhai - யசோதைப் பிராட்டியோ வென்றால் அஞ்ச, Anja - நீ பயப்படும்படி உரப்பாள், Urapaal - உன்னை அதட்ட மாட்டாள் ஆணாட விட்டிட்டிருக்கும், Anaada vittitirukkum - தீம்பிலே கை வளரும் படி உன்னை விட்டிரா நின்றாள் வஞ்சகம், Vanjakam - வஞ்சனை யுடைய பேய்ச்சி, Peichchi - பூதனையினுடைய பால், Paal - முலைப் பாலை உண்ட, Unda - (அவளுயிரோடே கூட) உறிஞ்சி யுண்ட மசுமை இலீ, Masumai ilee - லஜ்ஜை யில்லாதவனே! கூறை தாராய், Koorai thaaraai - சேலைகளைத் தந்தருள் |
| 533 | நாச்சியார் திருமொழி || 3 - கோழியழைப்பதன் (கண்ணன் கவர்ந்த கூறைகளைக் கன்னியர் இரத்தல்) 10 | கன்னியரோடு எங்கள் நம்பி கரியபிரான் விளையாட்டை பொன்னிய மாடங்கள் சூழ்ந்த புதுவையர் கோன் பட்டன் கோதை இன்னிசை யால் சொன்ன மாலை ஈரைந்தும் வல்லவர் தாம் போய் மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கிருப்பாரே | எங்கள் நம்பி, Engal nambi - எமக்கு ஸ்வாமியாய் கரிய, Kariya - கார் கலந்த மேனியனான பிரான், Piran - கண்ண பிரான் கன்னிய ரோடு, Kanniyarodu - ஆயர் சிறுமியரோடே செய்த விளையாட்டை, Vilaiyatai - திவ்ய லீலைகளைக் குறித்து பொன் இயல், Pon iyal - ஸ்வர்ண மயமான மாடங்கள் சூழ்ந்த, Maadangal soozhnda - மாடங்களால் சூழப்பட்ட புதுவையர் கோன், Puthuvaiyar kon - ஸ்ரீவில்லிபுத்தூரி லுள்ளார்க்குத் தலைவரான பட்டன் கோதை, Pattan kodhai - பெரியாழ்வார்க்குத் திருமகளான ஆண்டாள் இன் இசையால், In isaiaal - இனிய இசையாலே சொன்ன, Sonna - அருளிச் செய்த மாலை, Maalai - சொல் மாலையாகிய ஈர் ஐந்தும், Eer aindhum - இப் பத்துப் பாட்டுக்களையும் வல்லவர் தாம், Vallavar thaam - கற்க வல்லவர்கள் போய், Poi - (அர்ச்சிராதி மார்க்கமாகப்) போய் வைகுந்தம் புக்கு, Vaigundham pukku - பரம பதத்தை யடைந்து (அவ் விடத்திலே) மன்னிய, Manniya - நித்ய வாஸம் செய்தருளுகிற மாதவனோடு, Madhavanodu - திருமாலோடு கூடி இருப்பார், Irupaar - நித்யா நுபவம் பண்ணிக் கொண்டு வாழ்ந்திருக்கப் பெறுவர். |