| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 587 | நாச்சியார் திருமொழி || 9 - சிந்துரச் செம்பொடி (திருமாலிருஞ்சோலை அழகரை வழிபடுதல்) 1 | சிந்துரச் செம்பொடிப் போல் திரு மால் இருஞ்சோலை எங்கும் இந்திர கோபங்களே எழுந்தும் பரந்திட்டனவால் மந்திரம் நாட்டி யன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்ட சுந்தரத் தோளுடையான் சுழலையில் நின்றுய்தும் கொலோ | திரு மாலிருஞ்சோலை எங்கும், Thirumaalirunjolai engum - திருமாலிருஞ்சோலையில் பார்த்த விடமெங்கும் இந்திர கோபங்கள், Indira Gopangal - பட்டுப் பூச்சிகளானவை செம், Sem - சிவந்த சிந்துரம் பொடி போல், Sindhuram Podi pol - ஸிந்தூரப் பொடி போல எழுந்து, Ezhundhu - மேலெழுந்து பரந்திட்டன, Parandhittana - பரவிக் கிடக்கின்றன ஆல், Aal - அந்தோ! அன்று, Andru - (கடலைக் கடைந்து அமுதமளிக்கவேணுமென்று தேவர்கள் சரணம் புகுந்து வேண்டின) அக் காலத்திலே மந்தரம், Mandharam - மந்தர மலை நாட்டி, Naati - (பாற் கடலில் மத்தாத) நாட்டி (கடல் கடைந்து) கொழு மதுரம், Kozhu Madhuram - மிகவும் மதுரமான சாறு, Saaru - அம்ருத ரஸத்தை கொண்ட, Konda - எடுத்துக் கொண்ட சுந்தரம் தோள் உடையான், Sundharam thol udaiyaan - ஸ்ரீ ஸுந்தர பாஹு நாதனுடைய சுழலையில் நின்று, Suzhalaiyil nindru - சூழ் வலையில் நின்றும் உய்தும் கொல், Uydhum kol - பிழைப்போமோ? |
| 588 | நாச்சியார் திருமொழி || 9 - சிந்துரச் செம்பொடி (திருமாலிருஞ்சோலை அழகரை வழிபடுதல்) 2 | போர்க் களிறு பொரும் மாலிரும் சோலை யம்பூம் புறவில் தார்க் கொடி முல்லைகளும் தவள நகை காட்டுகின்ற கார்க்கொள் படாக்கள் நின்று கழறிச் சிரிக்கத் தரியேன் ஆர்க்கிடுகோ தோழீ அவன் தார் செய்த பூசலையே | போர் களிறு, Por Kaliru - போர் செய்வதையே தொழிலாக வுடைய யானைகள் பொரும், Porum - பொருது விளையாடுமிடமான மாலிருஞ் சோலை, Maalirunjolai - திருமாலிருஞ் சோலை மலையினுடைய அம்பூம் புறவில், Amboom Puravil - மிகவுமழகிய தாழ்வரைகளிலே தார் கொடி முல்லைகளும், Thaar Kodi Mullaigalum - அரும்புகளை யுடைய கொடி முல்லைகளும் தவளம் நகை, Thavalam Nagai - (அழகருடைய) வெளுத்த புன்சிரிப்பை காட்டுகின்ற, Kaatukindra - நினைப்பூட்டா நின்றன (அன்றியும்) கார் கொள், Kaar kol - சினை கொண்ட படாக்கள், Padaakal - படா என்னுங் கொடிகள் நின்று, Nindru - பூத்து நின்று கழறி சிரிக்க, Kazhari Sirikka - ‘எமக்கு நீ தப்பிப் பிழைக்க முடியாது‘ என்று சொல்லிக் கொண்டே சிரிப்பது போல விகஸிக்க தரியேன், Thariyen - (அது கண்டு) தரிக்க மாட்டுகின்றிலேன் தோழீ, Thozhi - எனது உயிர்த் தோழியே! அவன் தார், Avan thaar - (நாம் ஆசைப்பட்ட) அவனுடைய தோள் மாலையானது செய்த, Seidha - உண்டு பண்ணின பூசலை, Poosalai - பரிபவத்தை ஆர்க்கு இடுகோ, Aarku idugo - யாரிடத்து முறையிட்டுக் கொள்வது? |
| 589 | நாச்சியார் திருமொழி || 9 - சிந்துரச் செம்பொடி (திருமாலிருஞ்சோலை அழகரை வழிபடுதல்) 3 | கருவிளை யொண் மலர்காள் காயா மலர்காள் திருமால் உரு வொளி காட்டுகின்றீர் யெனக்குய் வழக்கொன்று உரையீர் திரு விளையாடு திண் தோள் திருமால் இரும் சோலை நம்பி வரி வளையில் புகுந்து வந்தி பற்றும் வழக்குளதே | ஒண், On - அழகிய கருவிளை மலர்காள், Karuvilai Malarkaal - காக்கணம் பூக்களே! காயா மலர்காள், Kaayaa Malarkaal - காயாம் பூக்களே! (நீங்கள்) திருமால், Thirumaal - எம்பெருமானுடைய உரு ஒளி, Uru Oli - திருமேனியின் நிறத்தை காட்டுகின்றீர், Kaatukindreer - நீனைப்பூட்டாநின்றீர்கள் எனக்கு, Enakku - (அதனை நீனைத்து வருந்துகின்ற) எனக்கு உய் வழக்கு ஒன்று, Uy Vazhakku ondru - பிழைக்கும் வகை யொன்றை உரையீர், Uraiyeer - சொல்லுங்கள் திரு விளையாடு, Thiru Vilaiyaadu - பெரிய பிராட்டியார் விளையாடுமிடமான திண் தோள், Thin Thol - திண்ணிய திருத் தோளை யுடையரான திருமாலிருஞ் சோலை நம்பி, Thirumaalirunjolai Nambi - அழகர் இல் புகுந்து, il pugundhu - (எனது) வீட்டினுள் புகுந்து வரி வளை, Vari Valai - (எனது) அழகிய வளைகளை வந்தி பற்றும் வழக்கு உளதே, Vandhi patrum vazhaku uladhe - பலாத்காரமாகக் கொள்ளைகொண்டு போவதும் நியாயமோ? |
| 590 | நாச்சியார் திருமொழி || 9 - சிந்துரச் செம்பொடி (திருமாலிருஞ்சோலை அழகரை வழிபடுதல்) 4 | பைம் பொழில் வாழ் குயில்காள் மயில்காள் ஒண் கரு விளைகாள் வம்பக் களங்கனிகாள் வண்ணப்பூவை நறும் மலர்காள் ஐம் பெரும் பாதகர்காள் அணி மால் இரும் சோலை நின்ற எம்பெருமான் உடைய நிறம் உங்களுக்கு என் செய்வதே | பைம் பொழில் வாழ், Paim Pozhil Vaazh - பரந்த சோலையில் வாழ்கின்ற குயில்காள், Kuyilkaal - குயில்களே! மயில்காள், Mayilkaal - மயில்களே! ஒண் கருவிளைகாள், On Karuvilaikaal - அழகிய காக்கணம் பூக்களே! வம்பக் களங்கனிகாள், Vamba Kalanganikaal - புதிய களாப்பழங்களே! வண்ணம் நறு பூவை மலர்காள், Vannam Naru Poovai Malarkaal - பரிமளத்தையுமுடைய காயாம் பூக்களே! ஐபெரு பாதகர்காள், Aiperu Paadhakarkaal - (ஆகிய) பஞ்ச மஹா பாதகர்களே! உங்களுக்கு, Ungaluku - உங்களுக்கு அணி மாலிருஞ்சோலை நின்ற எம்பெருமானுடைய நிறம் என் செய்வது, Ani Maalirunjolai Nindra Emperumaanudaiya Niram En Seivadhu - திருமாலிருஞ் சோலையிலுள்ள அழகருடைய திருமேனி நிறமானது எதுக்காக? (அந்த நிறத்தை நீங்கள் ஏற்றுக் கொண்டது என்னை ஹிம்ஸிப்பதற்காகவே என்கை) |
| 591 | நாச்சியார் திருமொழி || 9 - சிந்துரச் செம்பொடி (திருமாலிருஞ்சோலை அழகரை வழிபடுதல்) 5 | துங்க மலர்ப் பொழில் சூழ் திருமால் இருஞ்சோலை நின்ற செங்கட் கருமுகிலின் திருவுருப் போல் மலர் மேல் தொங்கிய வண்டினங்காள் தொகு பூஞ்சுனைகாள் சுனையில் தங்கு செந்தாமரைகாள் எனக்கோர் சரண் சாற்றுமினே | துங்கம் மலர் பொழில் சூழ், Thungam Malar pozhil soozh - ஓங்கின மலர்களை யுடைய சோலைகள் சூழ்ந்த திருமாலிருஞ் சோலை, Thirumaalirunjolai - திருமாலிருஞ்சோலையில் நின்ற, Nindra - நின்ற திருக் கோலமாய் எழுந்தருளியிருக்கிற செம் கண் கருமுகிலின், Sem Kan Karumukilin - செந்தாமரை போன்ற திருக் கண்களையும் காள மேகம் போன்ற வடிவையுமுடைய எம்பெருமானுடைய திருவுருப் போல், Thiruvuru pol - அழகிய வடிவம் போலே மலர் மேல் தொங்கிய வண்டு இனங்காள், Malar Mel Thongiya Vandu Inankaal - மலர் மேல் தங்கி யிருக்கிற வண்டுக் கூட்டங்களே! தொகு, Thogu - நெருங்கி யிருக்கின்ற பூஞ்சுனைகாள், Poonjunaikaal - அழகிய சுனைகளே! சுனையில் தங்கு, Sunaiyil Thangu - அச் சுனைகளில் உள்ள செம் தாமரைகாள், Sem Thaamaraikaal - செந்தாமரை மலர்களே! எனக்கு, Enakku - (உங்கள் யம தூதர்களாக நினைக்கிற) எனக்கு ஓர் சரண் சாற்றுமின், Or Charan Satrumin - ஒரு பற்றுக்கோடு சொல்லுங்கள் |
| 592 | நாச்சியார் திருமொழி || 9 - சிந்துரச் செம்பொடி (திருமாலிருஞ்சோலை அழகரை வழிபடுதல்) 6 | நாறு நறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான் நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன் நூறு தடா நிறைந்த அக்கார வடிசில் சொன்னேன் ஏறு திருவுடையான் இன்று வந்து இவை கொள்ளும் கொலோ | நறு பொழில் நாறும், Naru Pozhil Naarum - பரிமளம் மிகுந்த பொழில்கள் மணங்கமழா நிற்கப் பெற்ற மாலிருஞ் சோலை, Maalirunjolai - திருமாலிருஞ்சோலையில் (எழுந்தருளி யிருக்கிற) நம்பிக்கு, Nambiku - எம்பெருமானுக்கு நான், Naan - அடியேன் நூறு தடாவில், Nooru Tadaavil - நூறு தடாக்களில் நிறைந்த வெண்ணெய், Vennnei - வெண்ணெயை வாய் நேர்ந்து, Vaai Nerndhu - வாயாலே சொல்லி பராவி வைத்தேன், Paraavi Vaithen - ஸமர்ப்பித்தேன் (இன்னமும்) நூறு தடா நிறைந்த, Nooru Thadaa Niraindha - நூறு தடாக்களில் நிறைந்த அக்கார அடிசில், Akkara adisil - அக்கார வடிசிலும் சொன்னேன், Sonnen - வாசிகமாக ஸமர்ப்பித்தேன் இவை, Ivai - இந்த வெண்ணெயையும் அக்கார வடிசிலையும் ஏறு திரு உடையான், Eru Thiru Udaiyaan - (நாட்செல்ல நாட்செல்ல) ஏறி வருகிற ஸம்பத்தை யுடையரான அழகர் இன்று வந்து, Indru Vandhu - இன்று எழுந்தருளி கொள்ளும் கொல், Kollum Kol - திருவுள்ளம் பற்றுவரோ? |
| 593 | நாச்சியார் திருமொழி || 9 - சிந்துரச் செம்பொடி (திருமாலிருஞ்சோலை அழகரை வழிபடுதல்) 7 | இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில் நான் ஓன்று நூராயிரமாகக் கொடுத்து பின்னும் ஆளும் செய்வன் தென்றல் மணம் கமழும் திரு மால் இருஞ்சோலை தன்னுள் நின்ற பிரான் அடியேன் மனத்தே வந்து நேர் படிலே | தென்றல், Thendral - தென்றல் காற்றானது மணம் கமழும், Manam Kamazhum - மணத்தைக் கொண்டு வீசுகின்ற திரு மாலிருஞ் சோலை தன்னுள், Thiru Maalirunjolai thannul - திருமாலிருஞ்சோலை மலையிலே நின்ற, Nindra - எழுந்தருளி யிருக்கிற பிரான், Piran - ஸ்வாமியான அழகர் இன்று, Indru - இன்றைக்கு வந்து, Vandhu - இவ்விட மெழுந்தருளி இத்தனையும், Ithanaiyum - நூறு தடா நிறைந்த வெண்ணெயையும் அக்கார வடிசிலையும் அமுது செய் திட பெறில், Amuthu seithida peril - அமுது செய்தருளப் பெற்றால் (அவ்வளவுமன்றி) அடியேன் மனத்தே வந்து நேர் படில், Adiyen manathe vandhu ner padil - அடியேனுடைய ஹ்ருதயத்திலே நித்ய வாஸம் பண்ணப் பெற்றால் நான், Naan - அடியேன் ஒன்று, Ondru - ஒரு தடாவுக்கு நூறு ஆயிரம் ஆ கொடுத்து, Nooru Aayiram Aa Koduthu - நூறாயிரம் தடாக்களாக ஸமர்ப்பித்து பின்னும், Pinnum - அதற்கு மேலும் ஆளும் செய்வன், Aalum Seivan - ஸகல வித கைங்கரியங்களும் பண்ணுவேன் |
| 594 | நாச்சியார் திருமொழி || 9 - சிந்துரச் செம்பொடி (திருமாலிருஞ்சோலை அழகரை வழிபடுதல்) 8 | காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள் மாலின் வரவு சொல்லிக் மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ சோலை மலைப் பெருமான் துவராபதி எம்பெருமான் ஆலினிலைப் பெருமான் அவன் வார்த்தை வுரைக்கின்றவே | கரிய குருவி கணங்கள், Kariya kuruvi kanangal - கரிய குருவிக் கூட்டங்கள் காலை, Kaalai - விடியற்காலத்திலே எழுந்திருந்து, Ezhundhirundhu - எழுந்து சோலைமலை பெருமான், Solaimalai Peruman - திருமாலிருஞ்சோலை மலைக்குத் தலைவனாயும் துவராபதி எம்பெருமான், Dhuvarapathi Emperuman - துவராபுரிக்குத் தலைவனாயும் ஆலின் இலை பெருமான் அவன், Aalin ilai Peruman avan - ஆலிலையில் வளர்ந்த பெருமானுயுமுள்ள அந்த ஸர்வேச்வரனுடைய வார்த்தை, vaarthai - வார்த்தைகளை உரைக்கின்ற, uraikindra - சொல்லா நின்றன (இப்படி) மாலின், Maalin - எம்பெருமானுடைய வரவு, Varavu - வருகையை சொல்லி, solli - சொல்லிக் கொண்டு மருள் பாடுதல், Marul paaduthal - மருளென்கிற பண்ணைப் பாடுவதானது மெய்ம்மை கொல், Meimmai kol - மெய்யாகத் தலைக் கட்டுமா |
| 595 | நாச்சியார் திருமொழி || 9 - சிந்துரச் செம்பொடி (திருமாலிருஞ்சோலை அழகரை வழிபடுதல்) 9 | கோங்கலரும் பொழில் மாலிரும் சோலையில் கொன்றைகள் மேல் தூங்கு பொன் மலைகளோடு உடனே நின்று தூங்குகின்றேன் பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கொலியும் சாரங்க வில் நாண் ஒலியும் தலைப் பெய்வது எஞ்ஞான்று கொலோ | கோங்கு அலரும் பொழில், Kongu Alarum Pozhil - கோங்கு மரங்கள் மலரப் பெற்ற சோலைகளை யுடைய மாலிருஞ் சோலையில், Maalirunjolaiyil - திருமாலிருஞ் சோலை மலையில் கொன்றைகள் மேல், Kondraigal Mel - கொன்றை மரங்களின் மேல் தூங்கு, Thoongu - தொங்குகின்ற பொன் மாலைகளோடு உடனாய் நின்று, Pon Maalaigalodu Udanay Nindru - பொன் நிறமான பூமாலை களோடு ஸமமாக தூங்குகின்றேன், Thoongukinren - வாளா கிடக்கின்றேன் பூ கொள், Poo kol - அழகு பொருந்திய திரு முகத்து, Thiru Mugathu - திருப் பவளத்திலே மடுத்து, Maduthu - வைத்து ஊதிய, Oodhiya - ஊதப் படுகிற சங்கு, Sangu - ஸ்ரீபாஞ்சஜந்யத்தினுடைய ஒலியும், Oliyum - த்வநியும் சார்ங்கம் வில்நாண் ஒலியும், Saarngam Vilnaan Oliyum - சார்ங்கமென்னும் வில்லின் நாணோசையும் தலைப் பெய்வது, Thalai Peivadhu - ஸமீபிப்பது எஞ்ஞான்று கொல், Yenjaandru kol - என்றைக்கோ? |
| 596 | நாச்சியார் திருமொழி || 9 - சிந்துரச் செம்பொடி (திருமாலிருஞ்சோலை அழகரை வழிபடுதல்) 10 | சந்தொடு கார் அகிலும் சுமந்து தடங்கள் பொருது வந்திழியும் சிலம்பாறுடை மாலிருஞ்சோலை நின்ற சுந்தரனை சுரும்பார் குழல் கோதை தொகுத்து உரைத்த செந்தமிழ் பத்தும் வல்லார் திருமாலடி சேர்வர்களே | சந்தொடு, Santhodu - சந்தனக் கட்டைகளையம் கார் அகிலும், Kaar Agilum - காரகிற் கட்டைகளையும் சுமந்து, Sumandhu - அடித்துக் கொண்டு தடங்கள் பொருது வந்து, Thadangal Poruthu Vandhu - பல பல குளங்களையும் அழித்துக் கொண்டு ஓடி வந்து இழியும், Izhiyum - பெருகுகின்ற சிலம்பாறு உடை, Silambaaru udai - நூபுர கங்கையையுடைத்தான மாலிருஞ் சோலை நின்ற சுந்தரனை, Maalirunjolai Nindra Sundharanai - திருமாலிருஞ்சோலை மலையில் எழுந்தருளி யிருக்கிற அழகரைக் குறித்து சுரும்பு ஆர் குழல் கோதை, Surumbu Aar Kuzhal Kodhai - வண்டுகள் படித்த கூந்தல் முடியை யுடைய ஆண்டாள் தொகுத்து உரைத்த, Thoguthu uraitha - அழகாக அருளிச் செய்த செம் தமிழ் பத்தும் வல்லார், Sem Thamizh Pathum Vallar - செந்தமிழிலாகிய இப்பத்துப் பாசுரங்களையும் ஓத வல்லவர்கள் திருமால் அடி, Thirumaal Adi - ஸ்ரீமந்நாராயணனுடைய திருவடிகளை சேர்வர்கள், Servarkal - அடையப் பெறுவர்கள் |