| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3755 | திருவாய்மொழி || 10-9 சூழ்விசும் (திருநாட்டுக்குப் புறப்படுகிற ஸ்ரீவைஷ்ணவர்களைக் கண்ட உகப்பின் மிகுதியினால் ஸ்தாவரஜங்கமங்களுக்குண்டான வேறுபாட்டை யருளிச்செய்கிறார். தமக்கான பேறுதன்னை இங்ஙனே அசலிட்டுச் சொல்லுகிறபடி) 1 | சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன் வாழ் புகழ் நாரணன் தமரைக் கண்டு உகந்தே –10-9-1 | En appan, என் அப்பன் - அஸ்மத் ஸ்வாமியாய் Vaazhpuhal,வாழ்புகழ் - நித்ய கீர்த்தியுக்தனான Naaranaan,நாரணன் - ஸ்ரீமந் நாராயணனுடைய Thamarai,தமரை - அடியார்களை Kandu ukanthu,கண்டு உகந்து - வரக்கண்டு களித்து Soozh visumpu,சூழ் விசும்பு - எங்கும்பரந்த ஆகாசத்திலே Animugil,அணிமுகில் - அழகிய மேகங்கள் Thooriyam muzhakin,தூரியம் முழக்கின - வாத்ய கோஷம் செய்தன போன்றிருந்தன; Aal kadal,ஆழ் கடல் - ஆழமான கடல்கள் Alai thirai,அலை திரை - அலைந்து வருகிற திரைகளை Kai eduthu,கை எடுத்து - கையாகக் கொண்டு Aadina,ஆடின - கூத்தாடின; Ezhu pozhilum,ஏழ் பொழிலும் - ஸப்த த்வீபங்களும் Vazham aandhiya,வளம் ஏந்திய - உபஹாரங்களைக் கையேந்தின. |
| 3756 | திருவாய்மொழி || 10-9 சூழ்விசும் (மேலுண்டான லோகங்கள் பண்ணின ஸத்காரங்களை யருளிச்செய்கிறாரிதில்;) 2 | நாரணன் தமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில் பூரண பொற் குடம் பூரித்தது உயர் விண்ணில் நீரணி கடல்கள் நின்றார்த்தன நெடுவரைத் தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே–10-9-2 | Naaranaan thamarai kandu,நாரணன் தமரை கண்டு - பாகவதர்களைக் கண்டு Nal neer mugil,நல் நீர் முகில் - நல்ல தீர்த்தம் நிறைந்த மேகமானது Ukanthu,உகந்து - மகிழ்ந்து Uyar vinnil,உயர் விண்ணில் - உயர்ந்த ஆகாசத்திலே Pooranam pon kudam poorthadhu,பூரணம் பொன் குடம் பூர்த்தது - பூர்ண கும்பம் நிறைத்து வைத்தாற்போன்;றிருந்தது; Neer ani kadalgal,நீர் அணி கடல்கள் - நீரை வஹிக்கிற கடல்களானவை Nindru aarthina,நின்று ஆர்த்தின - நிலைநின்று கோஷித்தன Ulaku,உலகு - அந்தந்த லோகங்களிலுள்ளார் Engum thozhudhunar,எங்கும் தொழுதுனர் - எங்கும் தொழுதுகொண்டிருந்தார்கள் Netuvarai thoranam niraitthu,நெடுவரை தோரணம் நிரைத்து - பெரியமலைகளைத் தோரணங்களாக ஒழுங்குபடுத்தி. |
| 3757 | திருவாய்மொழி || 10-9 சூழ்விசும் (ஆதிவாஹிக லோகங்களென்று சிலவுண்டு; வழிநடத்துகிறவர்களாமவர்கள்; அவர்கள் எதிரே வந்து பூமார் பொழிந்து கொண்டாடும்படியை யருளிச்செய்கிறார்) 3 | தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை பொழி வனர் பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே எழுமின் என்று இருமருங்கு இசைந்தனர் முனிவர்கள் வழி இது வைகுந்தர்க்கு -என்று வந்து எதிரே–10-9-3 | Andru,அன்று - முன்பொருகால் Bhoomi alandhavan thamar munne,பூமி அளந்தவன் தமர் முன்னே - பூமியை அளந்துகொண்ட பகவானது அடியார்களின் ஸன்னிதியிலே Doobam,தூபம் - தூபம் ஸமரிப்பிப்பதோடு Nal malar mazhai,நல் மலர்மழை - நன்றான புஷ்பவர்ஷத்தைப் பொழிகின்றவர்களாய்க்கொண்டு Ulakargal,உலகர்கள் - அந்தந்தலோகங்களிலுள்ளவர்கள் Thozhudhanar,தொழுதனர் - தொழுதார்கள்; Munivargal,முனிவர்கள் - ஆங்காங்குள்ளமுனிவர்கள் (தாங்கள் மௌனமாயிருக்கும் விரதத்தை தவிர்ந்து) Vaikundharkku,வைகுந்தர்க்கு - ஸ்ரீ வைகுண்டத்தை நோக்கிப் போமவர்களுக்கு Vazhi idhu endru,வழி இது என்று - இதுதான் வழி என்று சொல்லி Edhire vandhu,எதிரே வந்து - அபிமுகர்களாக வந்து Ezumin endru,எழுமின் என்று - எழுந்தருளவேணும் எழுந்தருளவேணுமென்று எச்சாரிக்கையிட்டு irumarungu isaithanar,இருமருங்கு இசைத்தனர் - இருபக்கங்களிலும் சொன்னார்கள் |
| 3758 | திருவாய்மொழி || 10-9 சூழ்விசும் (மேலுலகங்களில் தேவர்கள், இவர்கள் போகிற வழிகளிலே தங்குகைக்குத் தோப்புகள் சமைத்தும் வாத்யகோஷம் முதலானவற்றைப் பண்ணியும் கொண்டாடும்படியைக் கூறுகிறார்) 4 | எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர் கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர் அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே-10-9-4 | Madhu vir thuzhai mudi,,மது விர் துழாய் முடி, - தேன் பெருகுகின்ற திருத்துழாயைத் திருமுடியிலேயுடைய Madhavan,மாதவன் - திருமாலினது Thamarkku,தமர்க்கு - அடியாரான பாகவதர்களுக்கு தேவர்கள் Edhiri edhiri,எதிர் எதிர் - இவர்கள் போகிற வழிக்கு முன்னே Irubu idam vaguthanar,இருப்பு இடம் வகுத்தனர் - தங்குமிடங்களைச் சமைத்தார்கள் Kathiravar,கதிரவர் - த்வாதசாதித்யர்களும் Avar avar,அவர் அவர் - மற்றுமுள்ளவர்களும் ஆதி வாஹிக கணங்களெல்லாம் Kai nirai kaattinar,கை நிரை காட்டினர் - பார்த்தருளீர் பார்த்தருளீர்!! என்று கைகாட்டிக் கொண்டேசென்றார்கள் Athir kural,அதிர் குரல் - அதிருகிற முழக்கத்தையுடைய Murasangal,முரசங்கள் - போரிகளானவை Alaikadal muzhakku otta,அலைகடல் முழக்கு ஒத்த - அலையெறிகின்ற ஸமுத்ரகாரிஜனை போன்றிருந்தனர். |
| 3759 | திருவாய்மொழி || 10-9 சூழ்விசும் (வாசலில் வானவரென்ரது அர்ச்சிராதி மார்க்கத்திலே தலைநின்ற வருண இந்த்ர ப்ரஜாபதிகளை, அவர்கள் மதவன்தமரென்று கொண்டாடினார்களம். இவர்கள் பிராட்டி புருஷகாரமாக ஆச்ரயித்த அந்தப்புரபரிகர பூதர்களென்று சொல்லிக் கொண்டாடினார்களாம்) 5 | மாதவன் தமர் என்று வாசலில் வானவர் போதுமின் எமது இடம் புகுதுக என்றலும் கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள் வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே–10-9-5 | Vaanavar,வானவர் - வருணன் இந்திரன் பிரஜாபதி ஆகிய தேவர்கள் Vaasalil,வாசலில் - தம்தம் ஸ்தானங்களின் வாசல்களிலே வந்து Maadhavan thamar endru,மாதவன் தமர் என்று - இவர்கள் பரமபாகவதர்கள்‘ என்று சொல்லி ஆதரித்து Pothumin,போதுமின் - இங்ஙனே எழுந்தருளுங்கள்! Emathu idam puguthuga,எமது இடம் புகுதுக - எங்களது அதிகார ஸ்தலங்களிலே பிரவேசியுங்கள் Endralum,என்றலும் - என்று சொன்னவாறே Vedam nal vaayavar,வேதம் நல் வாயவர் - (மேலுலகங்களிலே) வைதிகராயுள்ளவர்கள் Velvi ulmaduthu,வேள்வி உள்மடுத்து - தாங்கள் செய்த தேவபூஜைகளின் பலன்களை ஸமர்பிக்க Kinnarar gerudargal,கின்னரர் கெருடர்கள் - கின்னர்ர்களும், கருடர்களும் Keedhangal paadinar,கீதங்கள் பாடினர் - கீதங்களைப் பாடினார்கள் |
| 3760 | திருவாய்மொழி || 10-9 சூழ்விசும் (திவ்யாப்ஸரஸ்ஸீக்கள் மகிழ்ந்து வாழ்த்தினபடியை யருளிச்செய்கிறார்.) 6 | வேள்வி உள் மடுத்தலும் விரை கமழ் நறும் புகை காளங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர் ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே–10-9-6 | Velvi ul matuthalum,வேள்வி உள் மடுத்தலும் - வைதிகர்கள் தம்தம் தேவ பூஜா பலன்களை ஸமரிப்பித்தவளவிலே Virai kamizh,விரை கமிழ - பரிமளம் மிக்க Narupukai,நறுபுகை - ஸீகந்த தூபங்களானவை Engum kalanthu,எங்கும் கலந்து - எங்கும் வியாபிக்க Kaalangal valam puri,காளங்கள் வலம் புரி - திருச்சின்னங்களையும் சங்கு களையும் Isaithanar,இசைத்தனர் - ஊதினார்கள் Vaal on kan madanthaiyar,வாள் ஒண் கண் மடந்தையர் - ஒளிமிக்க கண்களையுடைய தேவஸ்த்ர்கள் Aazhiyaan thamar,ஆழியான் தமர் - “திருவாழியை யேந்திய எம்பெருமாளுக்கு அடிமைப்பட்டவர்களே! Vaanagam aan mingal endru,வானகம் ஆண் மின்கள் என்று - இந்த ஸ்வர்க்காதிபதங்களை ஆளுங்கோள்” என்று சொல்லி Magizhnthu vaazhthinar,மகிழ்ந்து வாழ்த்தினர் - ப்ரீதியுடன் வாழ்த்தினார்கள் |
| 3761 | திருவாய்மொழி || 10-9 சூழ்விசும் (மருத் கணங்களும் வஸீகணங்களும் தங்களுடைய எல்லைக்கு அப்பாலும் தொடர்ந்துவந்து தோத்திரம் செய்யும்படி சொல்லுகிறது) 7 | மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும் தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடு கடல் கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே–10-9-7 | Todukadal kidantha,தொடுகடல் கிடந்த - அகாதமான கடலிலே திருக்கண் வளர்ந்தருளின் Em Keshavan,எம் கேசவன் - எம்பெருமானாய் Kilar oli mani mudi,கிளர் ஒளி மணி முடி - கிளர்ந்தவொளியையுடைய ரத்னகிர்டத்தையணிந்த வனாய்க்கொண்டு Kudanthai,குடந்தை - திருக்குடத்தையிலே கண் வளர்ந்தருளுகிற Em Kovalan,எம் கோவலன் - எமது கோபாலனுக்கு Kudi adiyarkku,குடி அடியார்க்கு - குலங்குலமாக அடிமைப்பட்டவர்கள் விஷயத்திலே Madanthaiyar vaazhththalum,மடந்தையர் வாழ்த்தலும் - அப்ஸலஸ்ஸீக்கள் பல்லாண்டு பாடினவளவிலே Marutharum vasukkalum,மருதரும் வசுக்களும் - மருந்துக்களும் அஷ்டவசுக்களும் Engum todarndhu,எங்கும் தொடர்ந்து - போமிடமெங்கும் தொடர்ந்துவந்து Thothiram sollinar,தோத்திரம் சொல்லினர் - பல்லாண்டு பாடினார்கள் |
| 3762 | திருவாய்மொழி || 10-9 சூழ்விசும் (ப்ரக்ருதி மண்டலத்துக்கு அப்பால் பரமபதத்திற்குப் புறம்பாக நீத்ய ஸூரிகள் இவர்களை எதிரிகொள்ளும்படி சொல்லுகிறது இப்பாட்டில்) 8 | குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று முடி யுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர் வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே–10-9-8 | Ivar govindan thanukku kudi adiyar endru,இவர் கோவிந்தன் தனக்கு குடி அடியார் என்று - இவர்கள் பகவார்க்குக் குலங்குலமாக அடியவர்கள் என்று சொல்லி Mudi udai vaanavar,முடி உடை வானவர் - சேஷத்வத்துக்குச் சூடின முடியையுடைய நித்ய ஸூரிகள் Murai murai,முறை முறை - சிரமம் தப்பாமல் Edhirigolla,எதிரிகொள்ள - ‘ஸ்வாகதம்’ என்று சொல்லி யெதிரிகொண்டழைக்க Vadivu udai Maadhavan Vaikundam puga,வடிவு உடை மாதவன் வைகுந்தம் புக - அழகிய வடிவு படைத்த எம்பெருமானுடைய ஸ்ரீ வைகுண்டத்திலே பிரவேசிக்கைக்குறுப்பான Kodi ani netumadil,கொடி அணி நெடுமதிள் - அலங்ற்ரமாக வெடுத்துக் கட்டின கொடிகளையுடைய உயர்ந்த மதிளை யுடைத்தான Gopuram kuruginar,கோபுரம்குறுகினர் - தலைவாசலில் புகுந்தார்கள். |
| 3763 | திருவாய்மொழி || 10-9 சூழ்விசும் (அங்குள்ள நித்யஸூரிகள் இவர்களைக் கண்டு ‘இப்படி பரமபதத்திலே வருவதே இதென்ன பாக்யம்! இதென்ன பாக்யம்!!’ என்று வியந்து மகிழ்ந்தனரென்கிறதிப்பாட்டில்) 9 | வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர் வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர் வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே–10-9-9 | Vaikundam pukudhalum,வைகுந்தம் புகுதலும் - ஸ்ரீ வைகுண்டத்திலே சென்று புகுந்தவளவிலே Vaasalil vaanavar,வாசலில் வானவர் - திருவாசல்காக்கும் முதலிகளானவர்கள் Vaikundan thamar emar,வைகுந்தன் தமர் எமர் - “ஸ்ரீவைகுண்ட நாதனுடையார்கள் எங்களுடைய ஸ்வாமிகள் (ஆகையாலே) Emadhu idam pukuthu endru viyathanar,எமது இடம் புகுது என்று வியத்தனர் - எங்களதிகாரத்திலே புக வேணும்” என்றுசொல்லி உகந்தார்கள்; Vaikundathu,வைகுந்தத்து - அவ்விடத்திலே Amararum munivarum,அமரரும் முனிவரும் - கைங்கரிய நிஷ்டராயும் குணாநுபவ நிஷ்டராயுமுள்ளவர்கள் Mannavar Vaikundam puguvadhu vidhiye (endru) viyandhanar,மண்ணவர் வைகுந்தம புகுவது விதியே (என்று) வியந்தனர் - “லீலாவிபூதியி லிருந்தவர்கள் நித்ய விபூதியேற வருவது மஹா பாக்யமே!” என்று சொல்லி உகந்தார்கள். |
| 3764 | திருவாய்மொழி || 10-9 சூழ்விசும் (மண்ணவர் விண்ணவராகப் பெற்றது நம்முடைய பரமபாக்கியமன்றோவென்று மீண்டும் சிலர்சொல்லத் தொடங்கினர்) 10 | விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர் பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர் நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும் மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே–10-9-10 | Vidhi vakai puguṉnar endru,விதி வகை புகுந்னர் என்று - “நம்முடையபாக்யாநுகுணமாக இவர்கள் இவ்விடம் வந்து சேர்ந்தார்கள்” என்று சொல்லி Nalvethiyar,நல்வேதியர் - நல்ல வேதங்களாலே பிரதிபாதிக்கப்பட்ட நித்ய ஸூரிகள் Pathiyinil,பதியினில் - தம்தம்திவ்யஸ்தானங்களிலே Panginil,பாங்கினில் - உபசாரங்களுடனே pathangal kazhuvinar,பாதங்கள் கழுவினர் - வந்தவர்களது திருவடிகளை விளக்கினார்கள் Nidhiyum,நிதியும் - ஸ்ரீவைஷ்ணவர்க்குநிதியான திருவடி நிலைகளையும் Nal sunnamum,நல் சுண்ணமும் - ஸ்ரீசூர்ணத்தையும் Nirai kudam,நிறை குடம் - பூரண கும்பங்களையும் Vilakkamum,விளக்கமும் - மங்கள தீபங்களையும் Madhi mugam madandhaiyar,மதி முகம் மடந்தையர் - சந்திரன்போன்ற முகத்தை யுடையவர்களான பாரிசார்கைகள் Vandhu yendhinar,வந்து ஏந்தினர் - ஏந்திக்கொண்டு எதிரே வந்தார்கள் |
| 3765 | திருவாய்மொழி || 10-9 சூழ்விசும் (இப்பதிகம் வல்லார், நித்ய விபூதியிலே பகவத் குணாநுபவம் பண்ணி அதிலே யீடுபட்டு அதுக்கவ்வாருகு கால்வாங்க மாட்டாதே யிருப்பாரோ டொப்பர்களென்று பயனுரைத்துத் தலைக் கட்டுகிறாராயிற்று. கீழ்ப் பாசுரங்களில் சொல்லிற்றை யெல்லாம் ஸங்க்ரஹமாக அநுபாஷிக்கிறாராயிற்று) 11 | வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல் சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11 | Avar vandhu edhir kolla,அவர் வந்து எதிர் கொள்ள - அந்த பெருமாளும் பிராட்டியும் வந்து எதிரிகொள்ள Mamani mandapathu,மாமணி மண்ட பத்து - திருமாமணி மண்டபத்திலே Antham il perinpathu,அந்தம் இல் பேர் இன்பத்து - முடிவில்லாத மஹானந் தத்தை யுடைய Adiyarodu,அடியரோடு - பரம்பாகவதர்களோடே கூடி Kotthu alarpoliz kurukur sadagopan,கொத்து அலர்பொழில் குரு கூர் சடகோபன் - பூங்கொத்து அலருகிற சோர்லைகளை யுடைத்தான திருநகாரிக்குத் தலைவரான ஆழ்வார் Sol,சொல் - அருளிச்செய்த Sandhangalḷ ayirathu,சந்தங்;கள் ஆயிரத்து - வேதரூபமான ஆயிரம் பாசுரங்களில் Ivai,இவை - இப்பத்துப் பாசுரங்களை Vallar,வல்லார் - ஒதவல்லவர்கள் Munivare,முனிவரே - பகவத்குணங்களை மனனம் பண்ணும் முனிவராவர் |