| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3733 | திருவாய்மொழி || (10-7–செங்சொற் கவி) (ஆழ்வார் தமது மேனியின்மேல் எம்பெருமான் வைத்துள்ள வாஞ்சையைப் பாராட்டிப் பேசுதல் (திருமாலிருஞ்சோலை)) (எம்பெருமானுடைய எந்த சீல குணத்தில் தாம் ஆழங்காற்பட்டுக் களைத்தாரோ அக்குணத்தில் பிறரும் ஆழ்ந்து வருந்தாமைக்காக எச்சரிக்கை செய்கிறார் முதலடியால்.) 1 | செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்மின் திருமால் இரும் சோலை வஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து என் நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என் நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே யாகி நிறைந்தானே–10-7-1 | செம் சொல் கவி காள்,Sem sol kavi kaal - செவ்விய சொற்களை யுடைய கவிகளே என்னெஞ்சுள்ளும் உயிருள்ளும் கலந்து,En nenjullum uyirullum kalandhu - என்னெஞ்சுக்குள்ளேயும் ஆத்மாவுக்குள்ளேயும் ஒரு நீராகக் கலந்து உயிர் காத்து ஆள் செய்மின்,Uyir kaaththu aal seimin - உங்களை ஜாக்ரத்தையுடன் நோக்கிக் கொண்டு கவி பாடுங்கள் நின்றார் அறியா வண்ணம்,Nindraar ariyaa vannam - அருகே நின்ற பிராட்டியர் முதலானாருமறியாதபடி (ஏனிப்படி சொல்லுகிறேனென்னில்...) திருமாலிருஞ் சோலை,Thirumaalirunj solai - (...ஏனிப்படி சொல்லுகிறேனென்னில்) திருமாலிருஞ்சோலை மலையில் வாழ்கின்ற அவை என் நெஞ்சும் உயிரும் உண்டு,Avai en nenjum uyirum undu - அந்த என்னெஞ்சையுமுயிரையும் பஜித்து வஞ்சம் கள்வன் மா மாயன்,Vanjam kalvan maa maayan - வஞ்சனையும் களவும் மாயமுமே வடிவெடுத்த பெருமான் தானே ஆகி (என்னைக் காண இடமின்றிக்கே),Thaane aagi (ennaik kaana idam inrikkae) - தானேயாகி மாயம் கவி ஆய் வந்து,Maayam kavi aay vandhu - “ஆழ்வாரே! ளும்மைக் கொண்டு கவிபாடுவித்துக் கொள்ளப் பாரா நின்றேன்” என்றொரு மாயம் செய்து வந்து நிறைந்தான்,Niraindhaan - அவாப்த ஸமஸ்த காமனாயினான் (ஆதலால் செஞ்சொற்கவிகாஉயிர் காத்தாட் செய்மின் என்ன வேண்டிற்று) |
| 3734 | திருவாய்மொழி || (10-7–செங்சொற் கவி) (ஆழ்வார் தமது மேனியின்மேல் எம்பெருமான் வைத்துள்ள வாஞ்சையைப் பாராட்டிப் பேசுதல் (திருமாலிருஞ்சோலை)) (ஆழ்வார் தம்மோடு கலந்தபின் எம்பெருமாளுக்கு உண்டான பௌஷ்கல்யத்தைக்கண்டு இனியராகிறார் இப்பாட்டில்.) 2 | தானே ஆகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானே யாய் தானே யான் என் பான் ஆகி தன்னைத் தானே துதித்து எனக்குத் தேனே பாலே கன்னலே அமுதே திருமால் இரும் சோலைக் கோனே யாகி நின்று ஒழிந்தான் என்னை முற்றும் உயிர் உண்டே–10-7-2 | என் உயிரை முற்றும் உண்டு,En uyirai mutrum undu - என்னை ஸர்வப்ரபாரத்தாலும் புஜித்து தன்னை தானே துதித்து,Thannai thaane thuthiththu - தன்னை (நான் துதித்ததாக வைத்துத்) தானே துதி செய்து தானே ஆகி நிறைந்து,Thaane aagi niraindhu - தானோருவனே நிறைவு பெற்றவனாய் எல்லா உலகும் உயிரும் தானே ஆய்,Ellaa ulagamum uyirum thaane aay - ஸமஸ்த லோகங்களும் அவற்றிலுள்ள பிராணி வர்க்கங்களும் தானே யென்னலாம்படி அவற்றுக்கு அந்தராத்மாவாய் எனக்கு தேனே பாலே கன்னலே அமுதே,Enakku thenae paalae kannalae amuthae - எனக்குத் தேனும் பாலும் கன்னலு மமுதுமான ஸகலவித போக்யமும் யான் என்பான் தானே ஆகி,Yaan enbaan thaane aagi - நானென்கிற வஸ்துவும் தானேயாய் திருமாலிருஞ் சோலை கோனே ஆகி நின்றொழிந்தான்,Thirumaalirunj solai konae aagi nindrozhindhaan - திருமாலிருஞ் சோலை யெம் பெருமான் தானேயாய் விட்டான் |
| 3735 | திருவாய்மொழி || (10-7–செங்சொற் கவி) (ஆழ்வார் தமது மேனியின்மேல் எம்பெருமான் வைத்துள்ள வாஞ்சையைப் பாராட்டிப் பேசுதல் (திருமாலிருஞ்சோலை)) (எம்பெருமாளுக்கு மேன்மேலும் தம்பக்கலுண்டான அபிநிவேசம் எல்லையற்றிருக்கும்படியை யருளிச் செய்கிறார்.) 3 | என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் சேர் தென்னன் திருமால் இரும் சோலைத் திசை கூப்பிச் சேர்ந்த யான் இன்னம் போவேனே கொலோ என் கொல் அம்மான் திருவருளே–10-7-3 | என் உயிரை முற்றும் உண்டு,En uyirai mutrum undu - என்னைப் பாரிபூர்ணாநுபவம் பண்ணி தென்னன் திருமாலிருஞ்சோலை,Thennan thirumaalirunj solai - தென்னரசன் கொண்டாடும் திருமாலிருஞ்சோலை மலை நிற்கிற திசை,Thisai - (அவ்வளவோடும் நில்லாதே) திக்கை நோக்கி என் மாயம்,En maayam - ஆக்கை இதனுள் புக்கு என்னுடைய ப்ராக்ருத சாரிரத்தினுள்ளும் புகுந்து கைகூப்பி சேர்ந்த யான்,Kaikooppi serndha yaan - அஞ்சலி பண்ணி அடிமைப் பட்ட நான் என்னை முற்றும் தானே ஆய் நின்ற,Ennai mutrum thaane aay nindra - என்னுடைய தேஹாதியநு பந்திகளெல்லாம் தானே யென்னலாம்படி நின்ற இன்னம் போவேனே கொலோ,Innam poveanae kolo - இனி இதுக்கவ்வருகு ஓர்டத்தேடிப் போக நினைப்பேனோ? மாயம் அம்மான் சேர்,Maayam ammaan ser - மாயப்பிரான் பொருந்தி வாழ்கிற அம்மான் திரு அருள் என் கொல்,Ammaan thiru arul en kol - எம்பெருமானுடைய பாரிப்பு என்னாயிருந்தது! |
| 3736 | திருவாய்மொழி || (10-7–செங்சொற் கவி) (ஆழ்வார் தமது மேனியின்மேல் எம்பெருமான் வைத்துள்ள வாஞ்சையைப் பாராட்டிப் பேசுதல் (திருமாலிருஞ்சோலை)) (எம்பெருமாளுக்குத் தம்மிடத்திலுண்டான வியாமோஹாதிசயத்தைச் சொல்லி;க்கொண்டுவந்த ஆழ்வார் இப்பாட்டில் அப்பெருமாளுக்குத் திருமாலிருஞ் சோலைமலையிலுண்டானவொரு வியாமோஹத்தைப் பேசுகிறார்.) 4 | என் கொல் அம்மான் திருவருள்கள் உலகும் உயிரும் தானேயாய் நன்கு என் உடலம் கை விடான் ஞாலத்தூடே நடந்து உழக்கி தென்கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமால் இரும் சோலை நங்கள் குன்றம் கை விடான் நண்ணா அசுரர் நலியவே–10-7-4 | உலகும் உயிரும் தானே ஆய்,Ulagum uyirum thaane aay - ஸகலலோகங்களும ஸகலப்ராணிகளும் தானேயென்னலாம்படி அந்தரியாமியாய் நண்ணா அசுரர்நலிய,Nannaa asurarnaliya - (அவ்வளவோடும் நில்லாதே) விமுகர்களான ஆஸூரப்ரக்ருதிகள நசிக்கும்படியாக ஞாலத்தூடே நடந்து உழக்கி,Gnaalaththoode nadandhu uzhakki - பூமியெங்கும் நடையாயடியுலாவி தென்கொள்திசைக்கு நிலதம்ஆய் நின்ற திருமாலிருஞ்சோலை,Thenkolthisaikku nilatham aay nindra thirumaalirunj solai - தெற்குத் திக்குக்குத் திலகமாயிராநின்ற திருமாலிருஞ்டசோலையாகிற நாங்கள் குன்றம் கைவிடான்,Naangal kunram kaividaan - நமது திருமலையைக் கைவிடாதவனா யிருக்கிறான்; என் உடலம் நன்கு கைவிடான்,En udalum nangu kaividaan - என்னுடம்பிலே மிகவும் விருப்பம் பண்ணா நின்றான்; அம்மான் திரு அருள் என்கொல்,Ammaan thiru arul enkol - எம்பெருமானுடைய வியாமோஹத்தின்படி என்னே! |
| 3737 | திருவாய்மொழி || (10-7–செங்சொற் கவி) (ஆழ்வார் தமது மேனியின்மேல் எம்பெருமான் வைத்துள்ள வாஞ்சையைப் பாராட்டிப் பேசுதல் (திருமாலிருஞ்சோலை)) (எம்பெருமான் தம்மோடே கலந்து தம்வாயாலே திருவாய்மொழி கேட்டருளிந ப்ரீதி உள்ளடங்காமே ஆனந்தத்ததிற்குப் போக்கு வீடாகத் தென்னாதென்னாவென்று ஆளத்திவைத்துப் பாடிக் களியாநின்றான்! இஃது என்னபடியை மூன்றடிகளினால் அற்புதமாகப் பேசுகிறார்.) 5 | நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த எண்ணா தனகள் எண்ணும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே–10-7-5 | நண்ணா அசுரர்; நலிவு எய்த,Nannaa asurar; nalivu eydha - பிரதி கூலர்களான ஆஸூரப்ரக்தி;கள் அழியவும் நல்ல அமரர்பொலிவு எய்த,Nalla amarar polivu eydha - அநுகூலர்களான தேவப்ரத்ருதிகள் மகிழவும் எண்ணாதனகள் எண்ணும் நல்முனிவர் இன்பம் தலைசிறப்ப,Ennaadhanagal ennnum nalmunivar inbam thalai sirappa - எம்பெருமாளுக்கு இன்னமும் சில குண விபூதிகள் உண்டாகவேணுமென்று என்ணுமவர்களான முனிவர்கள் கேட்டு மிகவுமுகக்கும்படியாகவும் பண் ஆர் பாடல் இன் கவிகள்,Pan aar paadal in kavikal - பண்ணிறைந்த பாடல்களான இனியகவிகளையிட்டு யானாகி;த்தன்னைத் தானே பாடி,Yaan aagi; thannai thaane paadi - தானே யானாகி;த்தன்னைத் தானே பாடி தென்னா என்னும் என் அம்மான்,Thenna ennum en ammaan - தென்னா தெனாவென்று ஆளத்திவைத்து ரஸியாநிற்கு மெம்பெருமான் (எங்குள்ளா னென்னில) திருமாலிருஞ் சோலையான்,Thirumaalirunj solaiyaan - திருமாலிருஞ்சோலை மலையிலுள்ளான். |
| 3738 | திருவாய்மொழி || (10-7–செங்சொற் கவி) (ஆழ்வார் தமது மேனியின்மேல் எம்பெருமான் வைத்துள்ள வாஞ்சையைப் பாராட்டிப் பேசுதல் (திருமாலிருஞ்சோலை)) (திருமாலிருசோஞ்லைமலையப்பனுடைய வியாமோஹாதிசயத்தை யருளிச்செய்கிறார்.) 6 | திருமால் இரும் சோலையானே யாகி செழு மூஉலகும் தன் ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழி ஊழி தலை அளிக்கும் திருமால் என்னை ஆளுமால் சிவனும் பிரமனும் காணாது அருமால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே–10-7-6 | சிவனும் பிரமஎம் காணாது,Sivanum Brahma em kaanadhu - சிவனுக்கும் பிரமனுக்கு மெட்டாதேயிருந்து அரும் மால் எய்தி அடி பரவ,Arum maal eydhi adi parava - (அவர்கள்) அருமையான பக்தியைச் செலுத்தித் திருவடிகளைத் துதிக்க அருளை ஈந்த அம்மான்,Arulai eenda ammaan - அவாகளுக்குத் தன் திருவருளைத் தந்தருளின பெருமானாய், செழு மூ உலகும்,Sezhu moo ulagam - விலகூஷணமான மூவுலங்களையும் தன் ஒருமா வயிற்றின் உள்ளே வைத்து,Than orumaa vayittrin ullae vaiththu - ஒப்பற்ற பெரிய தன் திருவயிற்றினுள்ளே வைத்து ஊழி ஊழி தலை அளிக்கும்,Oozhi oozhi thalai alikkum - கற்பந்தோறும் நன்றாகக் காப்பாற்றுமாவனான திருமால்,Thirumaal - திருமகள் கொழுநன் திருமாலிருஞ் சோலையானே ஆகி என்னை ஆளும் மால்,Thirumaalirunj solaiyaanai aagi ennai aayum maal - திருமாலிருஞ் சோலையிலே நின்று கொண்டே என்னை யாட்கொள்வதில் பெரும்பித்தனாயிராநின்றான். |
| 3739 | திருவாய்மொழி || (10-7–செங்சொற் கவி) (ஆழ்வார் தமது மேனியின்மேல் எம்பெருமான் வைத்துள்ள வாஞ்சையைப் பாராட்டிப் பேசுதல் (திருமாலிருஞ்சோலை)) (இப்போது தம்முடைய ஸம்த்திக்கு அடி திருமலையாகையாலே இத்திருமலை தானே நமக்கு ப்ராப்யமென்று திருமலையைக் கொண்டாடுகிறார்.) 7 | அருளை ஈ என் அம்மானே என்னும் முக்கண் அம்மானும் தெருள் கொள் பிரமன் அம்மானும் தேவர்கோனும் தேவரும் இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை மருள்கள் கடியும் மணி மலை திருமால் இரும் சோலை மலையே–10-7-7 | என் அம்மானே அருளை ஈ என்னும்,En ammaanai arulai e ennum - எம்பெருமானே! உன்னருளைத் தந்தருள்வேணும் என்று வேண்டுகிற முக்கண் அம்மானும்,Mukkan ammaanum - எம் சிவபிரானும் தெருள் கொள் பிரமன் அம்மானும்,Therul kol Brahman ammaanum - நல்லறிவு வாய்ந்த நான் முகக் கடவுளும் தேவர் கோஎம் தேவரும்,Devar koem devarum - தேவேந்திரனும் முப்பத்து மூவரமரர்களும் இருள்கள் கடியும் முனிவரும்,Irulgal kadidum munivarum - அஜ்ஞானங்களைப் போக்கவல்ல முனிவர்களும் ஏத்தும்,Aethum - துதிக்கும் படியான அம்மான்,Ammaan - எம்பெருமா னெழுந்தருளி யிருக்குமி;டமான திருமலை,Thirumalai - திருமலை எதுவென்றால்; மருள் கள் கடியும் மணிமலை,Marulgal kadidum manimalai - மருள்களை யெல்லாம் தவிக்கும் அழகியமலையான திருமாலிருஞ் சோலைமலையே,Thirumaalirunj solai malaiyae - தெற்குத் திருலையேயாகும். |
| 3740 | திருவாய்மொழி || (10-7–செங்சொற் கவி) (ஆழ்வார் தமது மேனியின்மேல் எம்பெருமான் வைத்துள்ள வாஞ்சையைப் பாராட்டிப் பேசுதல் (திருமாலிருஞ்சோலை)) (திருமாலிருஞ் சோலைமலை, திருப்பாற்கடல், திருநாடு, திருவேங்கடமலை முதலாகத் தானெழுந்துருளியிருக்கும் திவ்விய தேசங்களெல்லவறாறலும் தனக்குப் பிறக்கும் ப்ரீதியை என்னுடைய அவயங்களிலே ஸம்ச்லேஷத்தாலே பெற்றவனாய் ஒரு கூஷணமும் என்னைவிட்டுப் பிரிந்து தாரிக்கமாடடாதவனாயிரா நின்றான்; இவனுடைய அபிநிவேசமிருக்கும்படி என்னே! யென்று வியக்கிறாற்ப்பாட்டில்.) 8 | திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே–10-7-8 | திருமாலிருஞ் சோலை மலையே திருப்பாற்கடலே என் தலையே,Thirumaalirunj solai malaiyae thiruparkadalai en thalaiyae - செற்குத் திருமலையேடும் திருப்பாற்கடலோடு மொக்க என் தலையையும் திருமால் வைகுந்தமே தண் திருவேங்கடமே எனது உடலே,Thirumaal vaikundhame than thiruveengadame enathu udal - ஸ்ரீவைகுண்டத்தோடும் திருமலையோடு மொக்க என்னுடலையும், அருமா மாயத்து எனது உயிரே,Arumaa maayathu enathu uyirae - கடக்கவாரிதான ப்ரக்ருதியோடே கலசியிருக்கிற என்னாத்மாவையும் மனமே வாக்கே கருமமே,Maname vaakke karumamae - மனஸ்ஸையும் வாக்கையும் க்ர்யையும், என் ஊழி முதல்வன் ஒருவன்,En oozhi mudhalvan oruvan - ஸகலகாரண பூதனான ஸர்வேச்வரன் ஒருவன் ஒரு மா நொடியும் பிரியான்,Oru maa nodiyum priyaan - ஒரு கூக்ஷணத்தில் ஏகதேசமும் பிரிகிறலன். |
| 3741 | திருவாய்மொழி || (10-7–செங்சொற் கவி) (ஆழ்வார் தமது மேனியின்மேல் எம்பெருமான் வைத்துள்ள வாஞ்சையைப் பாராட்டிப் பேசுதல் (திருமாலிருஞ்சோலை)) (இப்பாட்டில் பெரும்பாகம் ஆழ்வார் தம் திருவுள்ளத்தை நோக்கிச் சொல்லுவதாகவும் சிறுபாகம் எம்பெருமானை நோக்கிச் செல்லுவதாகவும் பன்னீராயிரப்பn தவிர்ந்த மற்ற வியாக்கியானங்களிலெல்லா முள்ளது. பன்னிராயிரப்படியில் மாத்திரம் பாட்டு முழுவதும் திருவுள்ளத்தையே நோக்கிச் சொல்லுவதாகவுள்ளது.) 9 | ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் உலகு எல்லாம் ஊழி தோறும் தன்னுள்ளே படைத்துக் காத்துக் கெடுத்து உழலும் ஆழி வண்ணன் என் அம்மான் அம் தண் திரு மால் இரும் சோலை வாழி மனமே கை விடேல் உடலும் உயிரும் மங்க ஓட்டே–10-7-9 | ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன்,Oozhi mudhalvan oruvanae ennum oruvan - ஸமஸ்த வஸ்துக்களுக்கும் ஒருவனே காரணபூத னென்று சொல்லப்பட்ட அத்விதீயானய் உலகு எல்லாம்,Ulaku ellam - ஸகல லோகங்களையும் ஊழி தோறும்,Oozhi thorum - படைக்கவேண்டிய காலந்தோறும் தன் உள்ளே,Than ullae - தன் ஸங்கல்பத்தின் ஏக தேசத்துக்குள்ளே படைத்து காத்து கெடுத்து உழலும்,Padaiththu kaaththu keduththu uzhallum - ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களைச் செய்து போரு மவனாய் ஆழி வண்ணன் என் அம்மான,Aazhi vannan en ammaan - கன்பீரஸ்வபாவனாயிருக்கின்ற எம்பெருமானுடைய அம் தண் திருமாலிருஞ்சோலை,Am than thirumaalirunj solai - அழகிய குளிர்ந்த திருமலையை மனமே,Maname - நெஞ்சே! கைவிடேல்,Kaividael - கைவிடாதே வாழி,Vaazhi - இது கொண்டு வாழ்வாயாக, எம்பெருமானே! உடலும் உயிரும் மங்க ஒட்டு,Udalum uyirum manga ottu - எனது சாரிரமும் பிராணனும் உனது வெறுப்புக்கு இலக்காம்படி இசையவேணும். |
| 3742 | திருவாய்மொழி || (10-7–செங்சொற் கவி) (ஆழ்வார் தமது மேனியின்மேல் எம்பெருமான் வைத்துள்ள வாஞ்சையைப் பாராட்டிப் பேசுதல் (திருமாலிருஞ்சோலை)) (கீழ்ப்பாட்டில் “உடலுமுயிரும் மங்கவொட்டே” என்று பிரார்த்திக்கச் செய்தேயும் இவருடைய திருமேனியிலுள்ள விருப்பத்தினாலே எம்பெருமான் பின்னையும் மேல் விழுந்து ஆதாரிக்க, ஐயோ! ஸர்வஜ்ஞனான இவனுக்கு இவ்வுடலின் ஹேயத்வம் தெரியவில்லையே! ஹேயங்களா இருப்பத்துநான்கு த்ததுவங்களினால் புணர்க்கப்பட்டது இது என்று உண்மையை யெடுத்துக்காட்டினால் இந்த நப்பாசை தவிரக்கூடம் என்று நினைத்து அரை யெடுத்துரைக்கிறாரிப்பட்டில்.) 10 | மங்க ஒட்டு உன் மா மாயை திரு மால் இரும் சோலை மேய நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம் இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே–10-7-10 | திருமாலிருஞ் சோலை மேய,Thirumaalirunj solai meya - தெற்குத் திருமலையில் வாழ்கின்ற நங்கள் கோனே,Naangal koonae - எம்பெருமானே! யானே நீ ஆகிஎன்னை அளித்தானே,Yaanae nee aagi ennai aliththaanae - நமக்குள் ஐக்கியமாம்படி என்னை ரகூஷித்தவனே! பொங்கு ஐம்புலஎம்,Pongu aim pulam - கிளர்ந்து வருகின்ற சப்தாதி விஷயங்கள் ஐந்தும் பொறி ஐந்தும்,Pori aindhum - ஜ்ஞானேந்திரியங்கள் ஐந்தும் கருமேந்திரிமம்,Karumeendhri mam - கருமேந்திரியங்கள் ஐந்தும் ஐம்பூதம்,Aim boodham - பஞ்ச பூதங்களும் இங்கு,Ingu - ஸம்ஸார நிலைமையில் இவ் உயிர் ஏய் பிரகிருதி,Ivv uyir eyy pragiruthi - ஜீவனோடே கலசின மூலப்ரக்ருதியும் மான ஆங்காரம் மனங்கள்,Maan aangaara manangal - மஹாஎம் அஹங்காரமும் மனஸ்ஸூமாகிற உன் மா மாயை மங்க ஒட்டு,Un maa maayai manga ottu - உனது பெரிய மாயையைக் கழித்துத்தர ஸம்மதித்தருள வேணும். |
| 3743 | திருவாய்மொழி || (10-7–செங்சொற் கவி) (ஆழ்வார் தமது மேனியின்மேல் எம்பெருமான் வைத்துள்ள வாஞ்சையைப் பாராட்டிப் பேசுதல் (திருமாலிருஞ்சோலை)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் இத்திருவாய் மொழிக்குப் பலமாக இவர் அர்த்தித்த படியே ஈஸ்வரனுடைய விரோதி நிரசன உத்யோகத்தைச் சொல்லிக் கொண்டு அதுவே இத்திருவாய் மொழிக்குப் பலமாக அருளிச் செய்கிறார்.) 11 | மான் ஆங்கார மனம் கெட ஐவர் வன்கையர் மங்க தான் ஆங்கார மாயப் புக்கு தானேதானே ஆனானைத் தேன் ஆங்காரப் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள் மான் ஆங்காரத் திவை பத்தும் திருமால் இரும் சோலை மலைக்கே–10-7-11 | மான் ஆங்காரம் மனம் கெட,Maan aangaara manam keda - மஹான் அஹங்காரம் மனம் என்னுமிவை கெடும்படியாகவும் வன்கையர்; ஐவர் மங்க,Vankaiyar; aivar manga - கொடிய இந்திரியங்களைந்தும் தொலையும்படியாகவும் தான் ஆங்காரம்,Thaan aangaaraam - தானே அபிமானியாய்ப் புகுந்து தானே தானே ஆனானே,Thaane thaane aananae - ஆத்மாத்மீயர்கள் தானேயாயிருக்கிற பெருமானை, தேன் ஆங்காரம் பொழில்,Then aangaara pozhil - வண்டுகனுடைய செருக்கையுடைத்தான சோலை சூழ்ந்த குருகூர்,Kurukoor - திருநகாரிக்குத் தலைவரான சடகோபன் சொல்,Sadagopan sol - ஆழ்வாரருளிச் செய்த ஆயிரத்துள்,Aayiraththul - ஆயிரத்தில் மான் ஆங்காரத்து இவை பத்;தும்,Maan aangaaraaththu ivai paththum - மஹதஹங்காரதி ரூபமான ப்ரக்ருதி தொலைவதற்காகச் சொன்ன இப்பதிகம். திருமாலிருஞ் சோலை மலைக்கே,Thirumaalirunj solai malaikke - திருமாலிருஞ்சோலை விஷயமாயி;ற்று. |