Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: தன்னேராயிரம் (11 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
223ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-முதல்திருமொழி - தன்னேராயிரம்) (யசோதைப்பிராட்டி கண்ணனது அதிமாநுஷ சேஷ்டிதங்களைக் கண்டு முலைகொடுக்க அஞ்சுதல்) 1
தன்னேராயிரம் பிள்ளைகளோடு தளர் நடையிட்டு வருவான்
பொன்னேய் நெய்யொடு பாலமுதுண்டு ஒரு புள்ளுவன் பொய்யே தவழும்
மின்னேர் நுண்ணிடை வஞ்ச மகள் கொங்கை துஞ்ச வாய் வைத்த பிரானே
அன்னே உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே –3-1-1
தன் நேர்,Than Ner - (வயஸ்ஸாலும் வளர்த்தியாலும்) தன்னோடு ஒத்த
ஆயிரம் பிள்ளைகளோடு,Ayiram Pillaihalodu - ஆயிரம் பிள்ளைகளோடு கூட
தளர் நடை இட்டு,Thalar Nadai Ittu - தளர் நடை நடந்து
வருவான் ,Varuvaan - வருகின்ற கண்ணபிரானே!
பொன் ஏய்,Pon Ey - (நிறத்தால்) பொன்னை ஒத்திரா நின்ற
நெய்யோடு,Neyyodu - நெய்யோடு கூட
பால் அமுது,Paal Amuthu - போக்யமான பாலையும்
உண்டு,Undu - (இடைச்சேரியில் களவு கண்டு) அமுது செய்து
பொய்யே,Poiye - (ஒன்றுமறியாத பிள்ளை போல்) கபடமாக
தவழும்,Thavazhum - தவழ்ந்து வருகின்ற ஒரு புள்ளுவநொப்பற்ற கள்ளனே!
மின் நேர்,Min Ner - மின்னலைப் போன்று
நுண்,Nun - அதி ஸூக்ஷ்மமான
இடை,Idai - இடையையும்
வஞ்சம்,Vanjam - வஞ்சனையையுமுடையளான
மகள்,Magal - பூதனை யென்னும் பேய் மகள்
துஞ்ச,Thunja - மாண்டு போம்படி
கொங்கை,Kongai - (அவளுடைய) முலையிலே
வாய் வைத்த,Vaai Vaitha - தன்னுடைய வாயை வைத்து (சுவைத்து)
பிரானே,Pranane - நாயனே
உன்னை,Unnai - (நம் பிள்ளை என்று இது வரை என்னால் பாவிக்கப் பட்ட) உன்னை
அறிந்து கொண்டேன்,Arindhu Kondean - (அருந்தெய்வம் என்று இன்று ) தெரிந்து கொண்டேன்
உனக்கு,Unakku - (ஆதலால் ) உனக்கு
அம்மம் தர,Ammam Thara - முலை கொடுக்க
அஞ்சுவன்,Anjuvan - பயப்படா நின்றேன்
அன்னே,Anne - அன்னே- அச்சக் குறிப்பிடைச் சொல்
224ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-முதல்திருமொழி - தன்னேராயிரம்) (யசோதைப்பிராட்டி கண்ணனது அதிமாநுஷ சேஷ்டிதங்களைக் கண்டு முலைகொடுக்க அஞ்சுதல்) 2
பொன் போல் மஞ்சன மாட்டி அமுதூட்டிப் போனேன் வருமளவு இப் பால்
வன் பாரச் சகடம் இறச் சாடி வடக்கிலகம் புக்கிருந்து
மின் போல் நுண்ணிடையால் ஒரு கன்னியை வேற்றுருவம் செய்து வைத்த
அன்பா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே–3-1-2
பொன் போல்,Pon Pol - பொன்னைப் போல்
மஞ்சனம் ஆட்டி,Manjanam Aatti - (உன் வடிவழகு விளங்கும்படி) (உன்னைத்) திருமஞ்சனம் செய்வித்து
அமுது ஊட்டி,Amuthu Ootti - (அதன் பிறகு) அமுது செய்யவும் பண்ணி விட்டு
போனேன்,Ponen - (யமுனை நீராடப்) போன நான்
வரும் அளவு இப் பால்,Varum Alavu Ip Paal - (மீண்டு) வருவதற்குள்ளே
வல்,Val - வலி வுள்ளதும்
பாரம்,Baaram - கனத்ததுமாயிருந்த
சகடம்,Sakadam - சகடமானது
மிற,Mira - (கட்டுக் குலைந்து) முறியும்படி
சாடி,Saadi - (அதைத் திருவடியால்) உதைத்துத் தள்ளி
வடக்கில் அகம்,Vadakkil Agam - (அவ்வளவோடும் நில்லாமல்) (இவ் வீட்டுக்கு) வடவருகிலுள்ள வீட்டிலே
புக்கு இருந்து,Pukku Irundhu - போய் நுழைந்து
மின் போல் நுண் இடையால்,Min Pol Nun Idaiyaal - (அவ் வீட்டிலுள்ள) மின்னலைப் போன்ற நுட்பமான இடையை யுடையளான
ஒரு கன்னியை,Oru Kanniyai - ஒரு கன்னிகையை
வேறு உருவம் செய்து வைத்த,Veru Uruvam Seidhu Vaitha - (கலவிக் குறிகளால்) வேறுபட்ட வடிவை யுடையளாகச் செய்துவைத்த
அன்பர்,Anbar - அன்பனே!
உன்னை,Unnai - (நம் பிள்ளை என்று இது வரை என்னால் பாவிக்கப் பட்ட) உன்னை
அறிந்து கொண்டேன்,Arindhu Kondean - (அருந்தெய்வம் என்று இன்று ) தெரிந்து கொண்டேன்
உனக்கு,Unakku - (ஆதலால் ) உனக்கு
அம்மம் தர,Ammam Thara - முலை கொடுக்க
அஞ்சுவன்,Anjuvan - பயப்படா நின்றேன்
225ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-முதல்திருமொழி - தன்னேராயிரம்) (யசோதைப்பிராட்டி கண்ணனது அதிமாநுஷ சேஷ்டிதங்களைக் கண்டு முலைகொடுக்க அஞ்சுதல்) 3
கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கிக் குடத் தயிர் சாய்த்துப் பருகி
பொய்ம் மாய மருதான அசுரரைப் பொன்றுவித்து இன்று நீ வந்தாய்
இம் மாயம் வல்ல பிள்ளை நம்பீ உன்னை என் மகனே யென்பர் நின்றார்
அம்மா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே–3-1-3
கும்மாயத்தோடு,Kummaayathodu - (கண்ணபிரானே!) குழையச் சமைத்த பருப்பையும்
வெண்ணெய்,Vennai - வெண்ணெயையும்
விழுங்கி,Vizhunghi - விழுங்கி விட்டு
குடம் தயிர்,Kudam Thayir - குடத்தில் நிறைந்த தயிரை
சாய்த்து,Saaythu - (அந்தக் குடத்தோடு) சாய்த்து
பருகி,Parugi - குடித்தும்
பொய் மாயம் மருது ஆன அசுரரை,Poi Maayam Marudhu Aana Asurarai - பொய்யையும் மாயச் செய்கையை யுமுடைய அஸுரர்களால் ஆவேசிக்கப் பெற்ற (இரட்டை) மருத மரங்களை
பொன்று வித்து,Ponru Viththu - விழுந்து முறியும் படி பண்ணியும்
நீ,Nee - (இவ்வளவு சேஷ்டைகளைச் செய்த) நீ
இன்று,Indru - இப்போது
வந்தாய்,Vandhai - (ஒன்றுஞ் செய்யாதவன் போல) வந்து நின்றாய்;
இம் மாயம்,Em Maayam - இப்படிப்பட்ட மாயச்செய்கைகளை
வல்ல,Valla - செய்ய வல்ல
பிள்ளை,Pillai - பிள்ளாய்!
நம்பி,Nambi - (அந்தப் பிள்ளைத் தனத்தால்) பூர்ணனானவனே!
உன்னை,Unnai - (இப்படி யிருக்கிற) உன்னை
நின்றார்,Ninraar - (உன் வாசி அறியாத) நடு நின்றவர்கள்
என் மகனே என்பர்,En Magane Enpar - என் (வயிற்றிற் பிறந்த) சொல்லா நின்றார்கள்;(நானோ வென்றால் அப்படி நினையாமல்)
உன்னை அறிந்து கொண்டேன்,Unnai Arindhu Kondean - (இவன் ஸர்வேச்வரன் என்று) உன்னைத் தெரிந்து கொண்டேன்;
அம்மா,Amma - (ஆதலால்,) ஸர்வேச்வரனே!
உனக்கு அம்மம் தர அஞ்சுவன்,Unakku Ammam Thara Anjuvan - உனக்கு முலை கொடுக்க பயப்படா நின்றேன்
226ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-முதல்திருமொழி - தன்னேராயிரம்) (யசோதைப்பிராட்டி கண்ணனது அதிமாநுஷ சேஷ்டிதங்களைக் கண்டு முலைகொடுக்க அஞ்சுதல்) 4
மை யார் கண்ட மட வாய்ச்சியர் மக்களை மை யன்மை செய்து அவர் பின் போய்
கொய்யார் பூந் துகில் பற்றித் தனி நின்று குற்றம் பல பல செய்தாய்
பொய்யா உன்னைப் புறம் பல பேசுவ புத்தகத்துக்குள கேட்டேன்
ஐயா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே–3-1-4
மை ஆர் கண்,Mai Aar Kan - மையை அணிந்துள்ள கண்களையும்
மடம்,Madam - மடப்பம் என்ற குணத்தை யுமுடையரான
ஆய்ச்சியர் மக்களை,Aaychiyar Makkalai - இடைப் பெண்களை
மை யன்மை செய்து,Mai Yanmai Seithu - (உன் விஷயத்திலே) மோஹிக்கப் பண்ணி
கொய் ஆர் பூ துகில்,Koi Aar Poo Thugil - (அப் பெண்களுடைய) கொய்தல் நிறைந்த அழகிய புடவைகளை
பற்றி,Patri - பிடித்துக் கொண்டு
அவர் பின் போய்,Avar Pin Poi - அப் பெண்களின் பின்னே போய்
தனி நின்று,Thani Nindru - தனி யிடத்திலே நின்று
பல பல குற்றம்,Pala Pala Kutram - எண்ணிறந்த தீமைகளை
செய்தாய்,Seithai - (நீ) பண்ணினாய்;
பொய்யா,Poiyaa - (என்று யசோதை சொல்ல,’ நீ கண்டாயோ?’ என்று கண்ணன் கேட்க)
(அதற்கு யசோதை சொல்கிறாள்;)
(தீ மை செய்தது மல்லாமல், செய்ய வில்லை யென்று) பொய் சொல்லுமவனே!

உன்னை,Unnai - உன்னைக் குறித்து
புத்தகத்துக்கு உள,Puthagathukku Ula - ஒருபுஸ்தக மெழுதுகைக்குத் தகுந்துள்ளனவாம்படி
பேசுவ,Pesuva - சொல்லப் படுகின்றனவான
பல புறம்,Pala Puram - பற்பல உன் சொற்கள்
கேட்டேன்,Kettaen - (என் காதால்) கேட்டிருக்கின்றேன்;
ஐயா,Ayya - அப்பனே
உன்னை,Unnai - (நம் பிள்ளை என்று இது வரை என்னால் பாவிக்கப் பட்ட) உன்னை
அறிந்து கொண்டேன்,Arindhu Konden - (அருந்தெய்வம் என்று இன்று ) தெரிந்து கொண்டேன்
உனக்கு,Unakku - (ஆதலால் ) உனக்கு
அம்மம் தர,Ammam Thara - முலை கொடுக்க
அஞ்சுவன்,Anjuvan - பயப்படா நின்றேன்
227ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-முதல்திருமொழி - தன்னேராயிரம்) (யசோதைப்பிராட்டி கண்ணனது அதிமாநுஷ சேஷ்டிதங்களைக் கண்டு முலைகொடுக்க அஞ்சுதல்) 5
முப்போதும் கடைந் தீண்டிய வெண்ணெயினோடு தயிரும் விழுங்கி
கப்பாலாயர்கள் காவிற் கொணர்ந்த கலத்தொடு சாய்த்துப் பருகி
மெய்ப்பாலுண்டழு பிள்ளைகள் போலந விம்மி விம்மி யழுகின்ற
அப்பா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே–3-1-5
முப்போதும்,Muppothum - மூன்று சந்திப் போதுகளிலும்
கடைந்து,Kadaindhu - (இடையரால்) கடையப் பட்டு
ஈண்டிய,Eindiya - திரண்ட
வெண்ணெயினோடு,Venneyinodu - வெண்ணையையும்
தயிரும்,Thayirum - தயிரையும்
விழுங்கி,Vizhunki - (களவு கண்டு) விழுங்கி,
ஆயர்கள்,Aayargal - (அவ்வளவோடும் நில்லாமல்) அவ்விடையர்கள் (தம்முடைய)
கப்பால்,Kappal - தோளாலே (வருந்திச் சுமந்து)
காவில்,Kavil - காவடியில்
கொணர்ந்த,Konarntha - கொண்டு வந்த பால் முதலியவற்றை
கலத்தொடு,Kalathodu - (அந்தப்) பாத்திரத்தோடே
சாய்த்து,Saithu - சாய்த்து
பருகி,Parugi - குடித்தும்
மெய் பால் உண்டு அழுகிற பிள்ளைகள் போல விம்மி விம்மி அழுகின்ற,Mei Paal Undu Alugira Pillaihal Pola Vimmi Vimmi Alugindra - (அதனால் பசி யடங்கின படியை மறைக்க நினைத்து) முலைப் பாலை உண்டு (அது பெறாதபோது) அழுகிற பிள்ளைகளைப் போலே விக்கி அழுகின்ற
அப்பா,Appa - பெரியோனே!
உன்னை அறிந்து கொண்டேன்,Unnai Arindhu Konden - (நம் பிள்ளை என்று இது வரை என்னால் பாவிக்கப் பட்ட) உன்னை (அருந்தெய்வம் என்று இன்று ) தெரிந்து கொண்டேன்
உனக்கு அம்மம் தர அஞ்சுவன்,Unakku Ammam Thara Anjuvan - (ஆதலால் ) உனக்கு முலை கொடுக்க பயப்படா நின்றேன்
228ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-முதல்திருமொழி - தன்னேராயிரம்) (யசோதைப்பிராட்டி கண்ணனது அதிமாநுஷ சேஷ்டிதங்களைக் கண்டு முலைகொடுக்க அஞ்சுதல்) 6
கரும்பார் நீள் வயல் காய் கதிர்ச் செந்நெலைக் கற்றா நிரை மண்டித் தின்ன
விரும்பாக் கன்றொன்று கொண்டு விளங்கனி வீழ எறிந்த பிரானே
சுரும்பார் மென் குழல் கன்னி யொருத்திக்குச் சூழ் வலை வைத்துத் திரியும்
அரம்பா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே–3-1-6
நீள் வயல்,Neel Vayal - பரந்த வயலிலே
கரும்பு ஆர்,Karumbu Aar - கரும்பு போலக் கிளர்ந்துள்ள
காய்,Kaai - பசுங்காயான
கதிர்,Kathir - கதிரையுடைய
செந்நெலை,Sennelai - செந்நெல் தாந்யத்தை
கன்று ஆ நிரை,Kanru Aa Nirai - கன்று களோடு கூடின பசுக்களின் திரள்
மண்டி தின்ன,Mandi Thinna - விரும்பித் தின்னா நிற்கச் செய்தே
விரும்பா கன்று ஒன்று,Virumbaa Kanru Ondru - (அத்திரளிலே சேர்ந்து மேய்கிறாப்போல் பாவனை செய்த அஸுராவிஷ்டமான) (நெல்லைத் தின்கையில்) விருப்பமில்லாத ஒரு கன்றை
கொண்டு,Kondu - (அதன் செய்கையினாலே ‘இது ஆஸுரம்’ என்று அறிந்து) (அதனைக் குணிலாகக்) கொண்டு, (மற்றொரு அஸுரனால் ஆவேசிக்கப்பட்டிருந்த)
விளங்கனி,Vilangani - விளாமரத்தின் பழங்கள்
வீழ,Veezha - உதிரும்படி
எறிந்த ,Erindha - (அவ்விளாமரத்தின் மேல் அக்கன்றை) வீசியெறிந்த
பிரானே,Piraane - பெரியோனே!
சுரும்பு ஆர்,Surumbu Aar - வண்டுகள் நிறைந்த
மென் குழல்,Men Kuzhal - மெல்லிய குழலை யுடையனான
கன்னி ஒருத்திக்கு,Kanni Oruththikku - ஒரு கன்னிகையை அகப்படுத்திக் கொள்வதற்காக
சூழ் வலை,Soozh Valai - (எல்லாரையும்) சூழ்ந்து கொள்ளக் கடவ (திருக் கண்களாகிற) வலையை
வைத்து,Vaiththu - (அவள் திறத்திலே விரித்து) வைத்து
திரியும்,Thiriyum - (அந்ய பரரைப் போலத்) திரியா நின்ற
அரம்பா,Arambaa - தீம்பனே!
உன்னை அறிந்து கொண்டேன்,Unnai Arindhu Konden - (நம் பிள்ளை என்று இது வரை என்னால் பாவிக்கப் பட்ட) உன்னை (அருந்தெய்வம் என்று இன்று ) தெரிந்து கொண்டேன்
உனக்கு அம்மம் தர அஞ்சுவன்,Unakku Ammam Thara Anjuvan - (ஆதலால் ) உனக்கு முலை கொடுக்க பயப்படா நின்றேன்
229ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-முதல்திருமொழி - தன்னேராயிரம்) (யசோதைப்பிராட்டி கண்ணனது அதிமாநுஷ சேஷ்டிதங்களைக் கண்டு முலைகொடுக்க அஞ்சுதல்) 7
மருட்டார் மென் குழல் கொண்டு பொழில் புக்கு வாய் வைத்து அவ் வாயர் தம் பாடி
சுருட்டார் மென் குழல் கன்னியர் வந்து உன்னைச் சுற்றும் தொழ நின்ற சோதி
பொருட்டா யமிலேன் எம்பெருமான் உன்னைப் பெற்ற குற்றமல்லால் மற்றிங்கு
அரட்டா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே–3-1-7
மருட்டு ஆர்,Maruttu Aar - (கேட்டவர்களை) மயங்கப் பண்ணுந்திறமை யுள்ள
மெல்,Mel - மெல்லிய (த்வநியை யுடைய)
குழல் கொண்டு,Kuzhal Kondu - வேய்ங்குழலைக் கையிற் கொண்டு
பொழில்,Pozhil - (ஸம்போகத்துக்கு ஏகாந்தமான) சோலைகளிலே
புக்கு,Pukku - போய்ச் சேர்ந்து
வாய் வைத்து,Vaai Vaiththu - (அந்த வேங்குழலை) (தன்) வாயில் வைத்து (ஊத)
ஆயர் தம் பாடி,Aayar Tham Paadi - (அவ்வளவிலே) இடைச்சேரியிலுள்ள
சுருள் தார் மெல் குழல்,Surul Thaar Mel Kuzhal - சுருண்டு பூவனிந்த மெல்லிய குழலையுடைய
அக் கன்னியர்,Ak Kanniyar - (இடையர்களால் காக்கப்பட்டிருந்த) அந்த இடைப்பெண்கள்
வந்து,Vandhu - (குழலோசை கேட்கையிலுள்ள விருப்பத்தாலே காவலுக்கடங்காமல்) (அச் சோலை யிடத்தே) வந்து
உன்னை,Unnai - உன்னை
சுற்றும் தொழ,Sutrum Thozha - நாற்புரமும் சூழ்ந்து கொண்டு ஸேவிக்க
நின்ற,Nindra - (அதனால்) நிலைத்து நின்ற
சோதி,Sothi - தேஜஸ்ஸை யுடையவனே
எம் பெருமான்,Em Perumaan - எமக்குப் பெரியோனே!
உன்னை,Unnai - (இப்படி தீம்பனான) உன்னை
பெற்ற,Pettra - பிள்ளையாகப் பெற்ற
குற்றம் அல்லால்,Kutram Allaal - குற்றமொன்றை (நான் ஸம்பாதித்துக் கொண்டேனத்தனை) யல்லது
இங்கு,Ingu - இவ்வூரில் உள்ளாரோடொக்க
மற்று பொருள் தாயம் இலேன்,Matru Porul Thaayam Ileyn - மற்றொரு பொருட் பங்கையும் பெற்றிலேன்;
அரட்டா,Arattaa - (இப்படிப்பட்ட) தீம்பனே!
உன்னை அறிந்து கொண்டேன்,Unnai Arindhu Konden - (நம் பிள்ளை என்று இது வரை என்னால் பாவிக்கப் பட்ட) உன்னை (அருந்தெய்வம் என்று இன்று ) தெரிந்து கொண்டேன்
உனக்கு அம்மம் தர அஞ்சுவன்,Unakku Ammam Thara Anjuvan - (ஆதலால் ) உனக்கு முலை கொடுக்க பயப்படா நின்றேன்
230ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-முதல்திருமொழி - தன்னேராயிரம்) (யசோதைப்பிராட்டி கண்ணனது அதிமாநுஷ சேஷ்டிதங்களைக் கண்டு முலைகொடுக்க அஞ்சுதல்) 8
வாளா வாகிலும் காண கில்லார் பிறர் மக்களை மையன்மை செய்து
தோளா லிட்டு அவரோடு திளைத்து நீ சொல்லப் படாதன செய்தாய்
கேளார் ஆயர் குலத்தவர் இப் பழி கெட்டேன் வாழ்வில்லை நந்தன்
காளாய் உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே-3-1-8
வாளா ஆகிலும்,Vaalaakilum - (நீ தீம்பு செய்யாமல்) வெறுமனே யிருந்தாலும்
காண கில்லார்,Kaana Killar - (உன் மினுக்குப் பொறாதவர்கள்) (உன்னைக்) காண வேண்டார்கள்;
நீ,Nee - (இப்படியிருக்கச் செய்தேயும்) நீயோ வென்றால்
பிறர் மக்களை,Pirar Makkalai - அயற் பெண்டுகளை
மையன்மை செய்து,Maiyanmai Seidhu - (உன்னுடைய இங்கிதாதிகளாலே) மயக்கி
தோளால் இட்டு,Tholaal Ittu - (அவ்வளவோடு நில்லாமல்) (அவர்களைத்) தோளாலும் அணைத்திட்டு
அவரோடு,Avarodu - அப் பெண்களோடு
திளைத்து,Thilaiththu - விளையாடி
சொல்லப்படாதன,Sollappadadhana - வாயாற் சொல்லக் கூடாத காரியங்களை
செய்தாய்,Seidhai - (அவர்கள் விஷயத்திலே) செய்தாய்;
ஆயர் குலத்தவர்,Aayar Kulathavar - இடைக் குலத்துத் தலைவர்கள்
இப் பழி,Ip Pali - இப்படிப் பட்ட பழிகளை
கேளார்,Kaelaar - கேட்கப் பொறார்கள்;
கெட்டேன்,Kettaen - (இப் பழிகளைக் கேட்கப் பெற்ற நான்) பெரும் பாவியாயிரா நின்றேன்;
வாழ்வு இல்லை,Vazhvu Illai - (இனி எனக்கு இவ் வூரில்) வாழ்ந்திருக்க முடியாது,
நந்தற்கு,Nandharku - நந்த கோபருக்கு
ஆளா,Aalaa - (அழகியதாக) ஆள் பட்ட பிள்ளாய்;
உன்னை அறிந்து கொண்டேன்,Unnai Arindhu Konden - (நம் பிள்ளை என்று இது வரை என்னால் பாவிக்கப் பட்ட) உன்னை (அருந்தெய்வம் என்று இன்று ) தெரிந்து கொண்டேன்
உனக்கு அம்மம் தர அஞ்சுவன்,Unakku Ammam Thara Anjuvan - (ஆதலால் ) உனக்கு முலை கொடுக்க பயப்படா நின்றேன்
231ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-முதல்திருமொழி - தன்னேராயிரம்) (யசோதைப்பிராட்டி கண்ணனது அதிமாநுஷ சேஷ்டிதங்களைக் கண்டு முலைகொடுக்க அஞ்சுதல்) 9
தாய்மார் மோர் விற்கப் போவர் தகப்பன்மார் கற்றா நிரைப் பின்பு போவர்
நீ ஆய்ப் பாடி இளங் கன்னி மார்களை நேர்படவே கொண்டு போதி
காய்வார்க்கு என்றும் உகப்பனவே செய்து கண்டார் கழறத் திரியும்
ஆயா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே–3-1-9
தாய்மார்,Thaaymaar - (பெண்களை அகம் பார்க்க வைத்து விட்டு) தாய்மாரானவர்
மோர் விற்க,Mor Virkka - மோர் விற்பதற்கு
போவர்,Poovar - (வெளியூருக்குப்) போவர்கள்
தமப்பன்மார்,Thamappanmaar - (அப் பெண்களின்) தகப்பன் மாரானவர்
கன்று ஆ நிரை பின்பு போவர்,Kanru Aa Nirai Pinbu Poovar - இளம் பசுக் கூட்டங்களை மேய்க்கைக்காக அவற்றின் பின்னே போய் விடுவர்கள்
நீ-;,Nee - (அப்படிப்பட்ட ஸமயத்திலே) நீ
ஆய்ப்பாடி,Aayppaadi - இடைச்சேரியில்
இள கன்னிமார்களை,Ela Kannimaargalai - (தந்தம் வீடுகளில் தனியிருக்கின்ற) யுவதிகளான பெண்களை
நேர் பட,Ner Pada - நீ நினைத்தபடி
கொண்டு போதி,Kondu Pothi - (இஷ்டமான இடங்களில்) கொண்டு போகா நின்றாய்;
காய்வார்க்கு,Kaayvaarkku - (உன் மேல்)த்வேஷம் பாராட்டுகின்ற கம்ஸாதிகளுக்கு
என்றும் உகப்பனவே,Endrum Ukappanave - எந் நாளும் (வாயாரப் பழித்து) ஸந்தோஷப் படக் கூடிய செய்கைகளையே
செய்து,Seidhu - செய்து கொண்டு
கண்டார் கழற திரியும்,Kandaal Kalara Thiriyum - (உனக்கு) அநுகூலரா யுள்ளவர்களும் (உன்னை) வெறுத்துச் சொல்லும்படி திரியா நின்ற
ஆயா,Aayaa - ஆயனே!
உன்னை அறிந்து கொண்டேன்,Unnai Arindhu Konden - (நம் பிள்ளை என்று இது வரை என்னால் பாவிக்கப் பட்ட) உன்னை (அருந்தெய்வம் என்று இன்று ) தெரிந்து கொண்டேன்
உனக்கு அம்மம் தர அஞ்சுவன்,Unakku Ammam Thara Anjuvan - (ஆதலால் ) உனக்கு முலை கொடுக்க பயப்படா நின்றேன்
232ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-முதல்திருமொழி - தன்னேராயிரம்) (யசோதைப்பிராட்டி கண்ணனது அதிமாநுஷ சேஷ்டிதங்களைக் கண்டு முலைகொடுக்க அஞ்சுதல்) 10
தொத்தார் பூங்குழல் கன்னி யொருத்தியைச் சோலைத் தடம் கொண்டு புக்கு
முத்தார் கொங்கை புணர்ந்து இரா நாழிகை மூவேழு சென்ற பின் வந்தாய்
ஒத்தார்க்கு ஒத்தன பேசுவர் உன்னை உரப்பவே நான் ஒன்றும் மாட்டேன்
அத்தா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே–3-1-10
தொத்து ஆர்,Thothu Aar - கொத்தாய்ச் சேர்ந்திருந்துள்ள
பூ,Poo - புஷ்பங்கள் அணியப் பெற்ற
குழல்,Kuzhal - கூந்தலை யுடைய
கன்னி ஒருத்தியை,Kanni Oruthiyai - ஒரு கன்னிகையை
தடஞ்சோலை,Thadanchoalai - விசாலமானதொரு சோலையிலே
இரா,Iraa - (நேற்று) இரவில்
கொண்டு புக்கு,Kondu Pukku - அழைத்துக் கொண்டு போய்
முத்து ஆர்,Muthu Aar - (அவளுடைய) முத்து வடமணிந்த
கொங்கை,Kongai - ஸ்தநங்களோடு
புணர்ந்து,Punarnthu - ஸம்ச்லேஷித்து விட்டு
மூ ஏழு நாழிகை சென்ற பின்,Moo Ezhu Naaligai Senra Pin - மூன்று யாமங்கள் கடந்த பிறகு
வந்தாய்,Vandhai - (வீட்டுக்கு) வந்து சேர்ந்தாய்;
உன்னை,Unnai - (நீ இவ்வாறு தீமை செய்கையாலே) உன்னைக் குறித்து
ஒத்தார்க்கு ஒத்தன பேசுவர்,Oththaarkku Oththana Pesuvar - வேண்டுவார் வேண்டினபடி சொல்லுவார்கள்;
உரப்ப,Urappa - (இப்படி அவர்கள் சொல்லாதிருக்கும்படி) (உன்னை) சிக்ஷிக்க
நான்,Naan - (அபலையாகிய) நான்
ஒன்றும்,Ondrum - கொஞ்சமும்
மாட்டேன்,Matten - சக்தை யல்லேன்;
அத்தா,Aththa - நாயனே!
உன்னை அறிந்து கொண்டேன்,Unnai Arindhu Konden - (நம் பிள்ளை என்று இது வரை என்னால் பாவிக்கப் பட்ட) உன்னை (அருந்தெய்வம் என்று இன்று ) தெரிந்து கொண்டேன்
உனக்கு அம்மம் தர அஞ்சுவன்,Unakku Ammam Thara Anjuvan - (ஆதலால் ) உனக்கு முலை கொடுக்க பயப்படா நின்றேன்
233ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-முதல்திருமொழி - தன்னேராயிரம்) (யசோதைப்பிராட்டி கண்ணனது அதிமாநுஷ சேஷ்டிதங்களைக் கண்டு முலைகொடுக்க அஞ்சுதல்) 11
காரார் மேனி நிறத் தெம்பிரானைக் கடி கமழ் பூங்குழலாய்ச்சி
ஆரா இன்னமு துண்ணத் தருவன் நான் அம்மம் தாரேனென்ற மாற்றம்
பாரார் தொல் புகழான் புதுவை மன்னன் பட்டர் பிரான் சொன்ன பாடல்
ஏராரின்னிசை மாலை வல்லார் இருடீகேச னடியாரே–3-1-11
கார் ஆர்,Kaar Aar - மேகத்தோடு ஒத்த
மேனி நிறத்து,Meni Nirathu - திருமேனி நிறத்தை யுடைய
எம் பிரானை,Em Piraanai - கண்ண பிரானைக் குறித்து,
கடி கமழ் பூ குழல் ஆய்ச்சி,Kadi Kamal Poo Kuzhal Aaychi - வாஸனை வீசா நின்ற பூக்களை அணிந்த கூந்தலை யுடைய யசோதை
ஆரா இன் அமுது உண்ண தருவன் நான்,Aaraa In Amudhu Unna Tharuvan Naan - (எவ்வளவு குடித்தாலும்) திருப்தி பிறவாத இனிய ஸ்தந்யத்தை
இது வரை உனக்கு உண்ணத் தந்துகொண்டிருந்த நான்

அம்மம் தாரேன்,Ammam Thaarein - (இன்று உன் ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்தேனாகையால்) அம் மந்தர அஞ்சுவேன்”
என்ற மாற்றம்,Endra Maattram - என்று சொன்ன பாசுரத்தை
சொன்ன,Sonna - அருளிச் செய்த,
பார் ஆர்,Paar Aar - பூமி யெங்கும் நிறைந்துள்ள
தொல்,Thol - பழமையான
புகழான்,Pugazhaan - கீர்த்தியை யுடையராய்
புதுவை,Puthuvai - ஸ்ரீவில்லிபுத்தூருக்கு
மன்னன்,Mannan - நிர்வாஹகரான
பட்டர் பிரான்,Pattar Piraan - பெரியாழ்வாருடைய
பாடல்,Paadal - பாடலாகிய
ஏர் ஆர் இன் இசை மாலை,Er Aar In Isai Maalai - இயலழகாலே நிறைந்து இனிய இசையோடே கூடியிருந்துள்ள சொல் மாலையை
வல்லார்,Vallaar - ஓத வல்லவர்கள்
இருடீகேசன்,Erudheekesan - ஹ்ருஷிகேசனான எம்பெருமானுக்கு
அடியார்,Adiyaar - அடிமை செய்யப் பெறுவார்கள்.