| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 607 | நாச்சியார் திருமொழி || 11 - தாமுகக்கும் (தலைவி திருவரங்கன் செய்கைக்கு மனம்பொறாது தாய்மார் முதலியோரை நோக்கி வருந்திக் கூறுதல்) 1 | தாமுகக்கும் தங்கையில் சங்கமே போலாவோ யாமுகக்கும் என் கையில் சங்கமும் ஏந்திழையீர் தீ முகத்து நாகணை மேல் சேரும் திருவரங்கர் ஆ முகத்தை நோக்காரால் அம்மனே அம்மனே | ஏந்து இழையீர்!, Endhu izhaeeyir - ஆபரணங்களை யணிந்துள்ள மாதர்களே! யாம் உகக்கும் என் கையில் சங்கமும், Yaam ugakkum en kaiyil sangamum - நான் உகந்து தரித்துக் கொண்டிருக்கிற என் கையில் வளைகள் தாம் உகக்கும் தம் கையில் சங்கம் போலாவோ, Thaam ugakkum tham kaiyil sangam polaavo - தான் உகந்து தரித்துக் கொண்டிருக்கிற தன்கையில் சங்கோடு ஒவ்வாதோ? தீ முகத்து, Thee mukathu - க்ரூரமான முகங்களை யுடைய நாக அணை மேல், Naaga anai mel - திருவனந்தாழ்வானாகிற படுகையின் மேலே சேரும், Serum - பள்ளி கொண்டருளா நின்ற திரு அரங்கர், Thiru arangar - ஸ்ரீரங்கநாதன் முகத்தை, Mukathai - (என்னுடைய) முகத்தை நோக்கார், Nokaar - நோக்குகின்றாரில்லை ஆ!, Aa! - ஐயோ! அம்மனே! அம்மனே!, Ammane! Ammane! - அந்தோ! அந்தோ! |
| 608 | நாச்சியார் திருமொழி || 11 - தாமுகக்கும் (தலைவி திருவரங்கன் செய்கைக்கு மனம்பொறாது தாய்மார் முதலியோரை நோக்கி வருந்திக் கூறுதல்) 2 | எழில் உடைய அம்மனை மீர் என்னரங்கத்து இன்னமுதர் குழல் அழகர் வாய் அழகர் கண் அழகர் கொப்பூழில் எழு கமலப் பூ அழகர் எம்மானார் என்னுடைய கழல் வளையைத் தாமும் கழல் வளையே ஆக்கினரே | எழில் உடைய, Ezhil udaiya - அழகை யுடைய அம்மனைமீர், Ammanaimir - தாய்மார்களே! அரங்கத்து, Arangathu - திருவரங்கத்திலெழுந்தருளி யிருக்கிற என் இன் அமுதர், En in Amudhar - என்னுடைய இனிய அமுதம் போன்றவராய் குழல் அழகர், Kuzhal azhagar - அழகிய திருக் குழற் கற்றையை யுடையவராய் வாய் அழகர், Vaay Azhagar - அழகிய திரு வதரத்தை யுடையவராய் கண் அழகர், Kan Azhagar - அழகிய திருக் கண்களை யுடையவராய் கொப்பூழில் எழு கமலம் பூ அழகர், Koppuzhil ezhu kamalam poo Azhagar - திருநாபியி லுண்டான தாமரைப் பூவாலே அழகு பெற்றவராய் எம்மானார், Emmaanaar - எனக்கு ஸ்வாமியான அழகிய மணவாளர் என்னுடைய, Ennudaiya - என்னுடைய கழல் வளையை, kazhal valaiyai - “கழல்வளை“ என்று இடு குறிப் பெயர் பெற்ற கை வளையை தாமும், thaamum - அவர் தாம் கழல் வளையை ஆக்கினர், kazhal valaiyai aakinar - “கழன்றொழிகிறவளை“ என்று காரணப் பெயர் பெற்ற வளையாக ஆக்கினார் |
| 609 | நாச்சியார் திருமொழி || 11 - தாமுகக்கும் (தலைவி திருவரங்கன் செய்கைக்கு மனம்பொறாது தாய்மார் முதலியோரை நோக்கி வருந்திக் கூறுதல்) 3 | பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற வெம்பெருமான் செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார் எங்கோல் வளையால் இடர் தீர்வர் ஆகாதே | பொங்கு, Pongu - அலை யெறியா நின்றுள்ள ஓதம், Odham - கடலாலே சூழ்ந்த, Soozhndha - சூழப்பட்ட புவனியும், Buvaniyum - இப் பூ மண்டலமும் விண் உலகும், Vin ulagum - பரம பதமும் ஆதும் சோராமே, Aathum sorame - சிறிதும் குறைவு படாதபடி ஆள்கின்ற, Aalkinra - நிர்வஹித்துக் கொண்டு போருகிற எம் பெருமான், Em perumaan - ஸ்வாமியாய் செங்கோல் உடைய, Sengol udaiya - செங்கோல் செலுத்த வல்லவராய் திரு அரங்கம் செல்வனார், Thiru arangam selvanaar - கோயிலிலே பள்ளி கொண்டிருப்பவரான மஹாநுபாவர் என், En - என்னுடைய கோல் வளையால், Kol valaiyaal - கை வளையாலே இடர் தீர்வர் ஆகாதே, Idar theervar aagaadhe - தம் குறைகளெல்லாம் தீர்ந்து நிறைவு பெறுவரன்றோ (அப்படியே என் வளையைக் கொள்ளை கொண்டு அவர் நிறைவு பெற்று போகட்டும் என்றபடி) |
| 610 | நாச்சியார் திருமொழி || 11 - தாமுகக்கும் (தலைவி திருவரங்கன் செய்கைக்கு மனம்பொறாது தாய்மார் முதலியோரை நோக்கி வருந்திக் கூறுதல்) 4 | மச்சணி மாட மதிள் அரங்கர் வாமனனார் பச்சைப் பசும் தேவர் தாம் பண்டு நீர் ஏற்ற பிச்சைக் குறையாகி என்னுடைய பெய் வளை மேல் இச்சை யுடையரேல் இத்தெருவே போதாரே | மச்சு, Machu - மேல் தளங்களாலே அணி, Ani - அலங்கரிக்கப் பட்ட மாடம், Maadam - மாடங்களையும் மதிள், Madhil - மதிள்களையுமுடைய அரங்கர், Arangar - திருவரங்கத்திலே எழுந்தருளி யிருப்பவராய் வாமனனார், Vaamananar - (முன்பு) வாமநாவதாரம் செய்தருளினவராய் பச்சைப் பசுந்தேவர், Pachai Pachundhevar - பசுமை தங்கிய தேவரான பெரிய பெருமான் தாம், Thaam - தாம் பண்டு, Pandu - முன்பு (மஹாபலி யிடத்தில்) நீர் ஏற்ற பிச்சை குறை ஆகி, Neer yetra Pichchai Kurai aagi - உதக தாரா பூர்வகமாகப் பெற்ற பிச்சையிலே குறை யுண்டாகி (அக்குறையைத் தீர்ப்பதற்காக) என்னுடைய, Ennudaiya - என்னுடைய பெய் வளை மேல், Pei Valai Mel - (கையில்) இடப்பட்டுள்ள வளை மேல் இச்சை உடையர் ஏல், Ichai Udaiyar el - விருப்பமுடையவராகில் இத் தெருவே, Ith Theruve - இத் தெரு வழியாக போதாரே, Podhaare - எழுந்தருள மாட்டாரோ? |
| 611 | நாச்சியார் திருமொழி || 11 - தாமுகக்கும் (தலைவி திருவரங்கன் செய்கைக்கு மனம்பொறாது தாய்மார் முதலியோரை நோக்கி வருந்திக் கூறுதல்) 5 | பொல்லாக் குறள் உருவாய் பொற் கையால்நீர் ஏற்று எல்லா வுலகும் அளந்து கொண்ட வெம்பெருமான் நல்லார்கள் வாழும் நளிரரங்க நாகணையான் இல்லாதோம் கைப்பொருளும் எய்துவான் ஒத்து உளனே | பொல்லா குறள் உரு ஆய், Polla Kural Uru Aay - விலக்ஷண வாமந ருபியாய் பொன் கையில், Pon Kaiyil - அழகிய கையாலே நீர் ஏற்று, Neer Yetru - பிக்ஷை பெற்று எல்லா உலகும், Ella Ulakum - ஸகல லோகங்களையும் அளந்து கொண்ட, Alanthu Konda - தன் வசப் படுத்திக் கொண்ட எம் பெருமான், Em Perumaan - ஸ்வாமியாய் நல்லார்கள் வாழும், Nallaarkal Vaazhum - நன்மை மிக்க மஹான்கள் வாழ்கிற நளிர் அரங்கம், Nalir Arangam - ஸர்வ தாப ஹரமான திருவரங்கத்தில் நாக அணையான், Naaga Anaiyaan - திருவனந்தாழ்வானைப் படுக்கையாக வுடையரான பெரிய பெருமாள் இல்லாதோம், Illaadhom - அகிஞ்சநையான என்னுடைய கைப் பொருளும், Kai Porulum - கைம் முதலான வஸ்துவையும் (சரீரத்தையும்) எய்துவான் ஒத்து உளன், Eidhuvaan Othu Ulan - கொள்ளை கொள்வான் போலிரா நின்றான் |
| 612 | நாச்சியார் திருமொழி || 11 - தாமுகக்கும் (தலைவி திருவரங்கன் செய்கைக்கு மனம்பொறாது தாய்மார் முதலியோரை நோக்கி வருந்திக் கூறுதல்) 6 | கைப்பொருள்கள் முன்னமே கைக் கொண்டார் காவிரிநீர் செய் புரள வோடும் திருவரங்கச் செல்வனார் எப்பொருட்கும் நின்றார்க்கும் எய்தாது நான்மறையின் சொற்பொருளாய் நின்றார் என் மெய்ப் பொருளும் கொண்டாரே | காவிரி நீர், Kaveri Neer - காவேரியின் தீர்த்தமானது செய் புரள ஓடும், Sey Purala oodum - பயிர் நிலங்களிலெலாம் ஓடிப் புரளும் படியான நீர் வளம் மிகுந்த திரு அரங்கம், Thiru Arangam - திருவரங்கத்தில் எழுந்தருளி யிருக்கிற செல்வனார், Selvanaar - ஸ்ரீமானாயும் எப் பொருட்கும் நின்று, Epporutkum Nindru - எல்லாப் பொருள்களிலும் அந்தராத்மாவாய் நின்று ஆர்க்கும் எய்தாது, Aarkum Eydhaadhu - ஒருவர்க்கும் கைப் படாமல் நால் மறையின் சொல் பொருள் ஆய் நின்றார், Naal Maraiyin Sol Porul Aay Nindraar - நான்கு வேதங்களிலுள்ள சொற்களுக்கும் பொருளாய் நிற்பவருமான பெரிய பெருமாள் முன்னமே, Munname - ஏற்கனவே கைப் பொருள்கள், Kai Porulkal - கையிலுள்ள பொருள்களை யெல்லாம் கைக் கொண்டார், Kaikondar - கொள்ளை கொண்டவராயிருந்து வைத்து (இப்போது) என் மெய் பொருளும், En Mei Porulum - எனது சரீரமாகிற வஸ்துவையும் கொண்டார், Kondaar - கொள்ளை கொண்டார் |
| 613 | நாச்சியார் திருமொழி || 11 - தாமுகக்கும் (தலைவி திருவரங்கன் செய்கைக்கு மனம்பொறாது தாய்மார் முதலியோரை நோக்கி வருந்திக் கூறுதல்) 7 | உண்ணாது உறங்காது ஒலி கடலை யூடறுத்து பெண்ணாக்கை யாப்புண்டு தாமுற்றபேதெல்லாம் திண்ணார் மதிள் சூழ் திருவரங்கச் செல்வனார் எண்ணாதே நம்முடைய நன்மைகளே எண்ணுவரே | திண் ஆர் மதிள் சூழ, Thin Ar Mathil Soozha - (மஹா ப்ரளயத்துக்கும் அழியாதபடி) திண்மை பொருந்திய மதிள்களாலே சூழப்பட்ட திரு அரங்கம், Thiru Arangam - கோயிலிலே எழுந்தருளியிருக்கிற செல்வனார், Selvanaar - ச்ரிய யதியான பெருமாள் (ஸ்ரீராமனாய்த் திருவவதரித்த போது) பெண் ஆக்கை, Pen Aakkai - சீதையென்சிற வொரு பெண்ணின் சரீரத்தில் ஆசைக்குக் கட்டுப்பட்டு உண்ணாது, Unnaadhu - உண்ணாமலும் உறங்காது, Urankaadhu - உறங்காமலும் (வருந்தி) ஒலி கடலை, Oli Kadalai - (திரைக் கிளப்பத்தாலே) கோஷிக்கின்ற கடலை ஊடு அறுத்து, Oodu Aruthu - இடையறும்படி பண்ணி (அணை கட்டி) தாம் உற்ற, Thaam Utra - (இப்படி) தாம் அடைந்த பேது எல்லாம், Pedhu Ellaam - பைத்தியத்தை யெல்லாம் எண்ணாது, Ennaadhu - மறந்து போய் (இப்போது) தம்முடைய, Thammudaiya - தம்முடைய நன்மைகளே, Nanmaikale - பெருமைகளையே எண்ணுவர்,Ennuvar - எண்ணா நின்றார் |
| 614 | நாச்சியார் திருமொழி || 11 - தாமுகக்கும் (தலைவி திருவரங்கன் செய்கைக்கு மனம்பொறாது தாய்மார் முதலியோரை நோக்கி வருந்திக் கூறுதல்) 8 | பாசி தூரத்துக் கிடந்த பார் மகட்குப் பண்டு ஒரு நாள் மாசுடம்பில் நீர் வாரா மானமிலாப் பன்றியாம் தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார் பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராதே | பண்டு ஒரு நாள், Pandu Oru Naal - முன்னொரு காலத்தில் பாசி தூர்த்து கிடந்த, Paasi Thoorthu Kidandha - பாசி படர்ந்து கிடந்த பார் மகட்டு, Paar Magattu - ஸ்ரீ பூமிப் பிராட்டிக்காக மாசு உடம்பில் நீர் வாரா மானம் இலா பன்றி ஆம், Maasu Udambil Neer Vaaraa Maanam Ila Panri Aam - அழுக்கேறின சரீரத்தில் ஜலம் ஒழுகா நிற்கும் ஹேயமான தொரு வராஹ வடிவு கொண்ட தேசு உடைய தேவர், Dhesu Udaya Dhevar - தேஜஸ்ஸை யுடைய கடவுளாகிய திரு அரங்கம் செல்வனார், Thiru Arangam Selvanaar - ஸ்ரீரங்கநாதன் பேசி இருப்பனகள், Pesi Irupanakal - (முன்பு) சொல்லி யிருக்கும் பேச்சுக்களானவை பேர்க்கவும் பேரா, Perkkavum Pera - (நெஞ்சில்நின்றும்) பேர்க்கப் பார்த்தாலும் பேர மாட்டாதவை |
| 615 | நாச்சியார் திருமொழி || 11 - தாமுகக்கும் (தலைவி திருவரங்கன் செய்கைக்கு மனம்பொறாது தாய்மார் முதலியோரை நோக்கி வருந்திக் கூறுதல்) 9 | கண்ணாலம் கோடித்து கன்னி தன்னைக் கைபிடிப்பான் திண்ணார்ந்து இருந்த சிசுபாலன் தேசு அழிந்து அண்ணாந்து இருக்கவே ஆங்கு அவளைக் கை பிடித்து பெண்ணாளன் பேணுமூர் பேரும் அரங்கமே | கண்ணாலம் கோடித்து, Kannaalam Kodithu - கல்யாண ஸந்நாஹங்களை யெல்லாம் பரிஷ்காரமாகச் செய்து முடித்து கன்னி தன்னை, Kanni Thannai - கல்யாணப் பெண்ணான ருக்மிணிப் பிராட்டியை கை பிடிப்பான், Kai Pidipaan - பாணி க்ரஹணம் செய்து கொள்ளப் போவதாக திண் ஆர்ந்து இருந்த, Thin Aarndhu Irundha - ஸம்சயமில்லாமல் நிச்சயமாக நினைத்திருந்த சிசுபாலன், Sisubalan - சிசுபாலனானவன் தேசு அழிந்து, Dhesu Azhinthu - அவமானப்பட்டு அண்ணாந்திருக்க ஆங்கு, Annandhirukka aangu - ஆகாசத்தை நோக்கிக் கிடக்கும் படியாக நேர்ந்த அச் சமயத்திலே அவளை, Avalai - அந்த ருக்மிணிப் பிராட்டியை கை பிடித்த, Kai Piditha - பாணி க்ரஹணம் செய்தருளினவனாய் பெண்ணாளன், Pennaalan - பெண்பிறந்தார்க் கெல்லாம் துணைவன் என்று ப்ரஹித்தனான பெருமான் பேணும், Penum - விரும்பி எழுந்தருளி யிருக்கிற ஊர், Oor - திவ்ய தேசத்தினுடைய பேரும், Perum - திரு நாமமும் அரங்கம், Arangam - திருவரங்கமாம் |
| 616 | நாச்சியார் திருமொழி || 11 - தாமுகக்கும் (தலைவி திருவரங்கன் செய்கைக்கு மனம்பொறாது தாய்மார் முதலியோரை நோக்கி வருந்திக் கூறுதல்) 10 | செம்மை யுடைய திருவரங்கர் தாம் பணித்த மெய்ம்மைப் பெரு வார்த்தை விட்டு சித்தர் கேட்டிருப்பார் தம்மை யுகப்பாரைத் தாம் உகப்பர் என்னும் சொல் தம்மிடையே பொய்யானால் சாதிப்பார் ஆர் இனியே | செம்மை உடைய, Semmai Udaya - (மன மொழி மெய்கள் மூன்றும் ஒருபடிப் பட்டிருக்கை யாகிற) செம்மைக் குணமுடைய திரு அரங்கர், Thiru Arangar - ஸ்ரீரங்கநாதர் தாம் பணித்த, Thaam Panitha - (முன்பு) தம் வாயாலே அருளிச் செய்த மெய்ம்மை, meimai - ஸத்யமானதும் பெரு, peru - பெருமை பொருந்தியதுமான வார்த்தை, vaarthai - சரம ச்லோக ரூபமான வார்த்தையை விட்டு சித்தர், Vittu Chithar - (என் திருத் தகப்பனாரான) பெரியாழ்வார் கேட்டு இருப்பர், Ketu Irupar - (குரு முகமாகக்) கேட்டுற (அதில் சொல்லி யிருக்கிறபடி) நிர்ப் பரராயிப்பர் தம்மை உகப்பாரை தாம் உகப்பர் என்னும் சொல், Thammai Ukapaarai Thaam Ukapar Ennum Sol - “தம்மை விரும்பினவர்களைத் தாமும் விரும்புவர்“ என்ற பழமொழியனது தம் இடையே, tham Idaiye - தம்மிடத்திலேயே பொய் ஆனால், poi aanal - பொய்யாய்ப் போய் விட்டால் இனி, ini - அதற்கு மேல் சாதிப்பார் ஆர், saadhipar aar - (அவர் தம்தை) நியமிப்பார் ஆர்? (யாருமில்லை) |