| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 152 | பெரியாழ்வார் திருமொழி || 2-4 நீராட்டம் 1 | வெண்ணெய் அளைந்த குணுங்கும் விளையாடு புழுதியும் கொண்டு திண்ணென இவ்விரா உன்னைத் தேய்த்துக் கிடக்க நான் ஒட்டேன் எண்ணெய்ப் புளி பழம் கொண்டு இங்கு எத்தனை போதும் இருந்தேன் நண்ணல் அரிய பிரானே நாரணா நீராட வாராய் -2 -4-1 | வெண்ணெய் அளைந்த, Vennai alaindha - வெண்ணெ யளைந்ததனாலான குணுங்கும், Kunungum - மொச்சை நாற்றத்தையும் விளையாடு புழுதியும், Vilaiyaadu puzhudhiyum - விளையாடுவதினாற் படிந்த புழுதியையும் கொண்டு, Kondu - (உடம்பிற்) கொண்டிருந்து (அதனால்) இவ் விரா, Iv vira - இன்றை இரவில் தேய்த்து கிடக்க, Theithu kidakka - (உடம்பைப் படுக்கையிலே) தேய்த்துக் கொண்டு படுத்திருக்கும்படி (விட) உன்னை, Unnai - உன்னை திண்ணென, Thinnaena - நிச்சயமாக நான் ஒட்டேன், Naan ottaen - நான் ஸம்மதிக்க மாட்டேன் எண்ணெய், Ennai - (தேய்த்துக் கொள்வதற்கு வேண்டிய) எண்ணெயையும் புளி பழம், Puli pazham - புளிப் பழத்தையும் கொண்டு, Kondu - ஸித்தமாக வைத்துக் கொண்டு இங்கு, Ingu - இங்கே எத்தனை போதும், Ethanai podhum - எவ்வளவு காலமாக (வெகு காலமாக) இருந்தேன், Irundhaen - (உன் வரவை எதிர்பார்த்து) இரா நின்றேன் நண்ணல் அரிய பிரானே, Nannal ariya pirane - (ஒருவராலும ஸ்வ யத்நத்தால்) கிட்டக் கூடாத ஸ்வாமியே நாரணா, Naaraana - நாராயணனே நீராட, Neeraada - நீராடுவதற்கு வாராய், Vaaraay - வர வேணும் |
| 153 | பெரியாழ்வார் திருமொழி || 2-4 நீராட்டம் 2 | கன்றுகளோடச் செவியில் கட்டெறும்பு பிடித்திட்டால் தென்றிக் கெடுமாகில் வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன் நின்ற மராமரம் சாய்த்தாய் நீ பிறந்த திருவோணம் இன்று நீ நீராட வேண்டும் எம்பிரானே ஓடாதே வாராய் -2 4-2 | நின்ற, Nindra - நிலையாய் நின்ற மராமரம், Maramaram - (ஊடுருவ அம்பெய்து) சாய்த்தவனே கன்றுகள், Kanrugal - பசுவின் கன்றுகள் ஓட, Oda - வெருண்டோடும்படி செவியில், Seviyil - (அக் கன்றுகளின்) காதில் கட்டெறும்பு பிடித்து இட்டால், Katterumbu pidithu ittaal - கட்டெறும்பைப் பிடித்துப் போட்டால் தென்றி, Thenri - (அதனால் அக் கன்றுகள் வெருண்டு)சிதறிப் போய் கெடும் ஆகில், Kedum aagil - (கண்டு பிடிக்க முடியாதபடி) ஓடிப் போய் விட்டால் (பின்பு நீ) வெண்ணெய், Vennai - வெண்ணையை திரட்டி, Thiratti - திரட்டி விழுங்குமா, Vizhungumaa - விழுங்கும்படியை காண்பன், Kaanban - பார்ப்பேன்(வெண்ணெயே உனக்கு உண்ணக் கிடைக்கா தென்றபடி) இன்று, Indru - இந்த நாள் நீ பிறந்த, Nee pirandha - நீ அவதரித்த திரு ஓணம், Thiru onam - ஸ்ரவண நஷத்ரமாகும் (ஆகையால்) நீ, Nee - நீ நீர் ஆட வேண்டும், Neer aada vendum - நீராடுவதற்கு வர வேணும் எம்பிரான் ஓடாதே வாராய், Embiraan odaathe vaaraay - எம்பிரான் ஓடாதே வாராய் |
| 154 | பெரியாழ்வார் திருமொழி || 2-4 நீராட்டம் 3 | பேய்ச்சி முலை உண்ணக் கண்டு பின்னையும் நில்லாது என் நெஞ்சம் ஆய்ச்சியர் எல்லாரும் கூடி அழைக்கவும் நான் முலை தந்தேன் காய்ச்சின நீரோடு நெல்லிக் கடாரத்தில் பூரித்து வைத்தேன் வாய்த்த புகழ் மணி வண்ணா மஞ்சனமாட நீ வாராய் -2 4-3 | பேய்ச்சி, Peycchi - பூதனையினுடைய முலை, Mulai - முலையை (அவளுடைய உயிரோடும்) உண்ண, Unna - (நீ) உண்டு விட கண்டு, Kandu - (அதைப்) பார்த்தும் பின்னையும் என் நெஞ்சம் நில்லாது, Pinnaiyum en nenjam nillaadhu - (நான் அஞ்சி ஓட வேண்டி யிருக்க ஆய்ச்சியர் எல்லாரும், Aaychiyar ellaarum - இடைச்சிகள் எல்லாரும் கூடி, Koodi - ஒன்று கூடி அழைக்கவும், Azhaikkavum - கூப்பாடு போட்டுக் கதறவும் நான், Naan - (உன் மேல் அன்பு கொண்ட) நான் முலை தந்தேன், Mulai thandhaen - முலை (உண்ணக்) கொடுத்தேன் நெல்லியொடு, Nelliyodu - நெல்லியை யிட்டு காய்ச்சின, Kaaychina - காய்ச்சின நீர், Neer - வெந்நீரை கடாரத்தில், Kadaarathil - சருவத்தில் பூரித்து வைத்தேன், Poorithu vaithaen - நிறைத்து வைத்திருக்கிறேன் வாய்த்த, Vaaytha - பொருந்திய புகழ், Pugazh - யசஸ்ஸையும் மணி, Mani - நீல மணி போன்ற வண்ணா, Vanna - நிறத்தையுமுடைய கண்ணனே! மஞ்சனம் ஆட, Manjanam aada - நீராட நீ வாராய், Nee vaaraay - நீ வர வேணும் |
| 155 | பெரியாழ்வார் திருமொழி || 2-4 நீராட்டம் 4 | கஞ்சன் புணர்ப்பினில் வந்த கடிய சகடம் உதைத்து வஞ்சகப் பேய் மகள் துஞ்ச வாய் முலை வைத்த பிரானே மஞ்சளும் செங்கழு நீரின் வாசிகையும் நாறு சாந்தும் அஞ்சனமும் கொண்டு வைத்தேன் அழகனே நீராட வாராய் -2 4-4 | கஞ்சன், Kanchan - கம்ஸனுடைய புணர்ப்பினில், Punarpinil - கபடமான ஆலோசனையினாலே வந்த, Vandha - (நலிவதாக) வந்த கடிய, Kadiya - (அஸுரா வேசத்தாலே) க்ரூரமான சகடம், Sakadam - சகடத்தை உதைத்து, Udaithu - (திருவடிகளால்) உதைத்து முறித்து விட்டு வஞ்சகம், Vanjakam - வஞ்சனை யுள்ள பேய் மகள், Pei Magal - பூதனை யானவள் துஞ்ச, Thunja - முடியும்படி முலை, Mulai - (அவளுடைய) முலையிலே வாய் வைத்த, Vai Vaitha - வாயை வைத்த பிரானே, Pirane - உபகாரகனே! மஞ்சளும், Manjalum - (உன் மேனி நிறம் பெறும்படி சாத்துவதற்கு உரிய)மஞ்சளையும் செங்கழுநீரின் வாசிகையும், Sengazhuneerin Vaasikaiyum - (நீராடிய பிறகு சாத்திக் கொள்ள வேண்டிய) செங்கழுநீர் மாலையையும் நாறு சாந்தும், Naaru Saandhum - பரிமளிதமான சந்தநத்தையும் அஞ்சனமும், Anjanamum - (கண்களிலிடும்) மையையும் கொண்டு வைத்தேன், Kondu Vaithen - கொண்டு வைத்தேன் அழகனே! நீராட வாராய், Azhagane! Neeraada Vaaraay - அழகனே! நீராட வாராய் |
| 156 | பெரியாழ்வார் திருமொழி || 2-4 நீராட்டம் 5 | அப்பம் கலந்த சிற்றுண்டி யக்காரம் பாலில் கலந்து சொப்பட நான் சுட்டு வைத்தேன் தின்னல் உருதியேல் நம்பீ செப்பிள மென் முலையாளர்கள் சிறுபுறம் பேசிச் சிரிப்பர் சொப்பட நீராட வேண்டும் சோத்தம்பிரான் நீ இங்கே வாராய் -2 4-5 | நம்பி, Nambi - (பால சாபலத்தால்) பூர்ணனே! செப்பு, Seppu - பொற் கலசம் போன்ற இள மெல் முலையார்கள், Ila mel mulaiyaargal - இளமையான மெல்லிய முலையை யுடைய மாதர்கள் சிறுபுறம் பேசி, Sirupuram pesi - (உன் மேலே) அற்பமான குற்றங்களை மறைவிற் சொல்லி சிரிப்பர், Sirippar - பரிஹஸிப்பார்கள் (அன்றியும்) பாலில், Paalil - பாலிலே அக்காரம், Akkaaram - வெல்லக் கட்டியை கலந்து, Kalandhu - சேர்த்துப் (பிசைந்து) அப்பம், Appam - அப்பத்தையும் கலந்த, Kalandha - (அப்படியே) சேர்ந்த சிற்றுண்டி, Sitrundi - சிற்றுண்டியையும் சொப்பட, Soppada - நன்றாக நான் சுட்டு வைத்தேன், Naan suttu vaithen - நான் சுட்டு வைத்தேன் தின்னல் உறுதி ஏல், Thinnal uruthi ael - (நீ அவற்றை) தின்ன விரும்பினாயாகில் சொப்பட, Soppada - நன்றாக நீர் ஆட வேண்டும், Neer aada vendum - நீராட வேண்டும் பிரான், Piran - ஸ்வாமியே! சோத்தம், Soththam - உனக்கு ஓரஞ்சலி இங்கே வாராய், Inge vaaray - இங்கே வாராய் |
| 157 | பெரியாழ்வார் திருமொழி || 2-4 நீராட்டம் 6 | எண்ணைய்க் குடத்தை உருட்டி இளம்பிள்ளை கிள்ளி எழுப்பிக் கண்ணைப் புரட்டி விழித்துக் கழகண்டு செய்யும் பிரானே உண்ணக் கனிகள் தருவன் ஒலி கடல் ஓத நீர் போலே வண்ணம் அழகியபிரானே மஞ்சனமாட நீ வாராய் – 2-4 6 | எண்ணெய் குடத்தை, Ennai kudathai - எண்ணெய் நிறைந்த குடத்தை உருட்டி, Urutti - உருட்டிவிட்டு இள பிள்ளை, Ila pillai - (உறங்குகிற) சிறு குழந்தைகளை கிள்ளி, Killi - கையால் வெடுககெனக் கிள்ளி எழுப்பி, Ezhuppi - (தூக்கம் வி்ட்டு) எழுந்திருக்கச் செய்து கண்ணை, Kannaai - கண் இமையை புரட்டி விழித்து, Puratti vizhithu - தலை கீழாக மாற்றி (அப் பூச்சி காட்டி) விழித்து கழை கண்டு, Kazhai kandu - பொறுக்க முடியாத தீம்புகளை செய்யும், Seyyum - செய்து வருகிற பிரானே, Pirane - ஸ்வதந்த்ரனே! கனிகள், Kanigal - (நில்ல) பழங்களை உண்ண, Unna - (நீ) உண்ணும்படி தருவன், Tharuvan - (உனக்குக்) கொடுப்பேன் ஒலி, Oli - கோஷியா நின்ற கடல், Kadal - கடலினுடைய ஓதம், Otham - அலைகளை யுடைய நீர் போலே, Neer pole - ஜலம் போலே வண்ணம் அழகிய, Vannam azhagiya - திருமேனியின் நிறம் அழகாயிருக்கப் பெற்ற நம்பீ, Nambi - உத்தம புருஷனே! மஞ்சனம் ஆட நீ வாராய், Manjanam aada nee vaaraay - நீராட நீ வர வேணும் |
| 158 | பெரியாழ்வார் திருமொழி || 2-4 நீராட்டம் 7 | கறந்த நல் பாலும் தயிரும் கடைந்து உறி மேல் வைத்த வெண்ணெய் பிறந்ததுவே முதலாக பெற்று அறியேன் எம்பிரானே சிறந்த நல் தாய் அலர் தூற்றும் என்பதனால் பிறர் முன்னே மறந்தும் உரையாட மாட்டேன் மஞ்சனம் ஆட நீ வாராய் – 2-4 7 | எம்பிரானே, Embiraane - எம்பிரானே! கறந்த, Karandha - (அந்தந்த காலங்களில்) கறந்த நல் பாலும், Nal paalum - நல்ல பாலையும் தயிரும், Thayirum - தயிரையும் கடைந்து உறி மேல் வைத்த வெண்ணெய், Kadainthu uri mel vaitha vennai - (தயிரைக்) கடைந்து உறியில் வைத்திருக்கிற வெண்ணெயையும் பிறந்ததுவே முதல் ஆக, Pirandhadhuve mudhal aaga - (நீ) பிறந்தவன்று தொடங்கி பெற்று அறியேன், Pertru ariyen - கண்டறியேன் சிறந்த நல் தாய், Sirandha nal thay - (எல்லாரினுங் குழந்தைக்குச்) சிறக்கின்ற பெற்ற தாயும்(பிள்ளை மேல் குற்றம் உண்டானாலும் மறைக்கக் கடவ நல் சிறந்த தாயார் ) அலர் தூற்றும், Alar thootrum - பழி சொல்லுகின்றாளே என்பதனால், Enpathaanal - என்று சொல்லுவார்களே என்ற அச்சத்தினால் பிறர் முன்னே, Pirar munne - அயலா ரெதிரில் மறந்தும், Maranthum - ப்ராமாதிகமாகவும் உரை ஆட மாட்டேன், Urai aada maatten - (உனக்குக் குறைவைத் தருஞ்) சொல்லைச் சொல்ல மாட்டேன் மஞ்சனம் ஆட நீ வாராய், Manjanam aada nee vaaraay - நீராட நீ வர வேணும் |
| 159 | பெரியாழ்வார் திருமொழி || 2-4 நீராட்டம் 8 | கன்றினை வாலோலை கட்டி கனிகள் உதிர எறிந்து பின் தொடர்ந்தோடி ஓர் பாம்பை பிடித்துக் கொண்டாடினாய் போலும் நின் திறத்தேன் அல்லேன் நம்பி நீ பிறந்த நல் திரு நாள் நன்று நீ நீராட வேண்டும் நாரணா நீராட வாராய் -2 4-8 | கன்றினை, Kanrinai - கன்றினுடைய வால், Vaal - வாலிலே ஓலை கட்டி, Olai katti - ஓலையைக் கட்டி கனிகள், Kanigal - பழங்கள் (அஸுரத் தன்மையினால் உன்னைக் கொல்ல வந்த ஒரு கன்றை எறி குணிலாகக் கொண்டு அஸுராவேசமுள்ள விளா மரத்தின் பழங்கள்) உதிர, Udhira - (கீழே) உதிர்ந்து விழும்படி எறிந்து, Erindhu - வீசி பின், Pin - பின்பு ஓடி தொடர்ந்து, Odi thodarndhu - ஓடிப் போய் ஓர் பாம்பை, Or paambai - (காளியனென்ற) ஒரு ஸர்ப்பத்தை பிடித்துக் கொண்டு, Pidithuk kondu - பிடித்துக் கொண்டு ஆட்டினாய் போலும், Aattinaay polum - ஆட்டினவனோ தான் (நீ) நம்பி, Nambi - ஒன்றிலும் குறைவில்லாதவனே! நின் திறத்தேன் அல்லேன், Nin thirathen allen - (நான்) உன் விஷய மொன்றையு மறியாத வளாயிரா நின்றேன் (அது கிடக்கட்டும்) நீ பிறந்த, Nee pirandha - நீ அவதரித்த நல் திரு நாள், Nal thiru naal - திரு நிஷத்திரமாகும் (இந் நாள்) (ஆகையால்) நீ நின்று நீர் ஆட வேண்டும், Nee nindru neer aada vendum - நீ நின்று நீர் ஆட வேண்டும் நாரணா ஓடாதே வாராய், Naarana odaathe vaaraay - நாரணா ஓடாதே வாராய் |
| 160 | பெரியாழ்வார் திருமொழி || 2-4 நீராட்டம் 9 | பூணித் தொழுவினில் புக்கு புழுதி அளைந்த பொன் மேனி காணப் பெரிதும் உகப்பன் ஆகிலும் கண்டார் பழிப்பர் நாண் எத்தனையும் இலாதாய் நற்பின்னை காணில் சிரிக்கும் மாணிக்கமே என் மணியே மஞ்சனம் ஆட நீ வாராய் -2 4-9 | பூணி, Pooni - பசுக்கள் கட்டிய தொழுவினில், Thozhuvinil - கொட்டகையிலே புக்கு, Pukku - நுழைந்து புழுதி அளைந்த, Puzhuthi alaindha - புழுதி மண்ணிலளைந்து அதனால் மாசு படிந்த பொன் மேனி, Pon meni - (உனது) அழகிய உடம்பை காண, Kaana - பார்ப்பதற்கு பெரிதும், Perithum - மிகவும் உகப்பன், Ugappan - (நான்) விரும்புவேன் ஆகிலும், Aagilum - ஆனாலும் கண்டார், Kandaar - (உன்னைப்) பார்ப்பவர்கள் பழிப்பர், Pazhippar - ‘(இவள் பிள்ளை வளர்ப்பது அழகாயிருக்கி்ன்றது’ என்று என்னை) ஏசுவார்கள் எத்தனையும் நாண் இலாதாய், Yethanaiyum naan ilaadhaay - (அன்றியும்) சிறிதும் லஜ்ஜை யென்பதில்லாதவனே! நப்பின்னை, Nappinnai - நப்பின்னையானவள் காணில், Kaanil - நீ இப்படியிருப்பதைக் கண்டால் சிரிக்கும், Sirikkum - சிரிப்பாள் என் மாணிக்கமே!, En maanikkame! - (என்) மணியே! மஞ்சனம் ஆட நீ வாராய், Manjanam aada nee vaaraay - நீராட நீ வர வேணும் |
| 161 | பெரியாழ்வார் திருமொழி || 2-4 நீராட்டம் 10 | கார்மலி மேனி நிறத்து கண்ண பிரானை உகந்து வார்மலி கொங்கை யசோதை மஞ்சனம் ஆட்டியவாற்றை பார்மலி தொல் புதுவைக் கோன் பட்டர்பிரான் சொன்ன பாடல் சீர்மலி செம்தமிழ் வல்லார் தீவினை யாதும் இலரே -2-4 10 | கார், Kaar - காளமேகத்திற் காட்டிலும் மலி, Mali - சிறந்த மேனி நிறத்து, Meni nirathu - திரு மேனி நிறத்தை யுடைய கண்ண பிரானை, Kanna piranai - கண்ண பிரானை உகந்து, Ugandhu - விரும்பி வார்மலி, Vaarmali - கச்சுக்கு அடங்காமல் விம்முகின்ற கொங்கை, Kongai - ஸ்தனங்களையுடைய அசோதை, Asothai - யசோதைப் பிராட்டி மஞ்சனம் ஆட்டிய, Manjanam aattiya - நீராட்டின ஆற்றை, Aattrai - ப்ரகாரத்தை பார், Paar - பூமியிலே மலி, Mali - சிறந்த தொல், Thol - பழமையான புதுவை, Pudhuvai - ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு கோன், Kon - நிர்வாஹகரான பட்டர் பிரான், Pattar piran - பெரியாழ்வார் சொன்ன, Sonna - அருளிச் செய்த சீர்மலி, Seermali - அழகு நிறைந்த செந்தமிழ், Sendhamizh - செந்தமிழாலாகிய பாடல், Paadal - (இப்) பாசுரங்களை வல்லார், Vallaar - ஓத வல்லவர்கள் யாதும், Yaadhum - சிறிதும் தீவினை இலர், Theevinai ilar - பாவமில்லாதவராவர் |