| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 637 | நாச்சியார் திருமொழி || 14 - பட்டி மேய்ந்தோர் (விருந்தாவனத்தே பரமனைக் கண்டமை கூறுதல்) 1 | பட்டி மேய்ந்தோர் காரேறு பலதேவற்கோர் கீழ்க் கன்றாய் இட்டீறிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே இட்டமான பசுக்களை யினிது மறித்து நீரூட்டி விட்டுக் கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே | ஓர் கார் ஏறு, Oor Kaar eru - (கண்ண பிரானென்கிற) கறுத்த காளை யொன்று பட்டி மேய்ந்து, Patti Meindhu - காவலில்லாமல் யதேச்சமாய்த் திரிந்து கொண்டும் பல தேவற்கு, Pala Dhevarku - பல ராமனுக்கு ஓர் கீழ் கன்று ஆய், Oor Keezh Kanru Aay - ஒப்பற்ற தம்பியாய் இட்டீறிட்டு, Itteeritu - ஸந்தோஷத்துக்குப் போக்கு வீடாகப் பலவகையான கோலா ஹலங்களைப் பண்ணி விளையாடி, Vilaiyaadi - விளையாடிக் கொண்டு இங்கே போத, Inge Podha - இப்படி வர கண்டீரே, Kandire - பார்த்தீர்களோ? இட்டம் ஆன, Ittam Aana - (தனக்கு) இஷ்டமான பசுக்களை, Pasukalai - பசுக்களை இனிது, Inidhu - த்ருப்தியாக மறித்து, Marithu - மடக்கி மேயத்து நீர் ஊட்டி, Neer Ootti - தண்ணீர் குடிப்பித்து விட்டுக் கொண்டு, Vittu Kondu - (இப்படியாக) அவற்றை மேய விட்டுக் கொண்டு விளையாட, Vilaiyaada - (அப் பெருமான்) விளையாட நிற்க விருந்தாவனத்தே, Virundhavanathe - ப்ருந்தாவனத்திலே கண்டோம், Kandom - ஸேவித்தோம் |
| 638 | நாச்சியார் திருமொழி || 14 - பட்டி மேய்ந்தோர் (விருந்தாவனத்தே பரமனைக் கண்டமை கூறுதல்) 2 | அனுங்க வென்னைப் பிரிவு செய்து ஆயர்பாடி கவர்ந்துண்ணும் குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த்தனனைக் கண்டீரே கணங்களோடு மின் மேகம் கலந்தால் போலே வனமாலை மினுங்க நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே | அனுங்க, Anunga - நான் வருந்தும்படியாக என்னை பிரிவு செய்து, Ennai Pirivu Seydhu - என்னைப் பிரிய விட்டுப் போய் ஆயர்பாடி, Aayarpaadi - திருவாய்ப் பாடியை கவர்ந்து, Kavarnthu - ஆக்ரமித்து உண்ணும், Unnum - அநுபவிக்கின்றவனாய் குணுங்கு நாளி, Kunungu Naali - வெண்ணெய் மொச்ச நாள்ளம் நாறுமவனாய் குட்டேற்றை, Kutetrai - இளைய ரிஷபம் போன்றவனான கோவர்த்தனனை, Govardhananai - கண்ண பிரானை கண்டீரே, Kandire - கண்டீரே மின் மேகம், Min Megam - மின்னலும் மேகமும் கலந்தால் போல், Kalanthaal Pol - ஒன்றோடொன்று சேர்ந்தாற்போலே வனமாலை மினுங்க நின்று, Vanamaalai Minunga Nindru - (கறுத்த திருமேனியிலே மின்னல் போன்ற) வனமாலை திகழப் பெற்று கணங்களோடு, Kanangalodu - (தோழன்மாருடைய) கூட்டங்களோடு கூட விளையாட, Vilaiyaada - விளையாடா நிற்க விருந்தாவனத்தே கண்டோம், Virundhavanathe Kandom - விருந்தாவனத்தே கண்டோம் |
| 639 | நாச்சியார் திருமொழி || 14 - பட்டி மேய்ந்தோர் (விருந்தாவனத்தே பரமனைக் கண்டமை கூறுதல்) 3 | மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை ஏலாப் பொய்கள் உரைப்பானை இங்கே போதக் கண்டீரே மேலால் பரந்த வெயில் காப்பான் வினதை சிறுவன் சிறகு என்னும் மேலாப்பின் கீழ் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே | மால் ஆய் பிறந்த நம்பியை, Maal aay Pirandha Nambiyai - பெண்கள் பக்கலுண்டான வ்யாமோஹமே ஒரு வடிவாய்க் கொண்டு பிறந்த தென்னலாம்படியான பெருமானாய் மாலே செய்யும் மணாளனை, Maale Seiyum Manalanai - வ்யாமோஹத்தையே செய்கிற மணவாளப் பிள்ளையாய் ஏலா பொய்கள் உரைப்பானை, Eala poikal uraipanai - பொருந்தாத பொய்களைச் சொல்லுமவனான கண்ண பிரானை இங்கே போதக் கண்டீரே?, Inge Podha Kandire? - இங்கே போதக் கண்டீரே? மேலால், Melaal - மேலே பரந்த, Parandha - பரவின வெயில், veyil - வெய்யிலை காப்பான், kapan - (திருமேனியில் படாமல்) தடுப்பதற்காக வினதை சிறுவன் சிறகு என்னும் மேலாப்பின்கீழ் வருவானை, Vinathai Siruvan Siragu Enum Melapinkeezh Varuvaanai - கருடனுடைய சிறகாகிற விதானத்தின் கீழ் எழுந்தருளா நின்ற அப் பெருமானை விருந்தாவனத்தே கண்டோம், Virundhavanathe Kandom - விருந்தாவனத்தே கண்டோம் |
| 640 | நாச்சியார் திருமொழி || 14 - பட்டி மேய்ந்தோர் (விருந்தாவனத்தே பரமனைக் கண்டமை கூறுதல்) 4 | காரத்தண் கமலக் கண் என்னும் நெடுங்கயிறு படுத்து என்னை ஈர்த்துக் கொண்டு விளையாடும் ஈசன் தன்னைக் கண்டீரே போர்த்த முத்தின் குப்பாயப் புகர் மால் யானைக் கன்றே போல் வேர்த்து நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே | கார், Kaar - காளமேகத்திலே தண், Than - குளிர்ந்த கமலம், Kamalam - தாமரை பூத்தாற் போன்றுள்ள கண் என்றும், Kan Endrum - திருக் கண்கள் என்கிற நெடு கயிறு, Nedu Kayiru - பெரிய பாசத்திலே என்னை படுத்தி, Ennai Paduthi - என்னை அசப்படுத்தி ஈர்த்துக் கொண்டு, Eerthu Kondu - (தான் போமிடமெங்கும் என்னெஞ்சையும் கூடவே) இழுத்துக் கொண்டு போய் விளையாடும் ஈசன் தன்னைக் கண்டீரே?, Vilaiyaadum Eesan Thannai Kandire? - விளையாடும் ஈசன் தன்னைக் கண்டீரே? போர்த்த முத்தின் குப்பாயம், Portha Muthin Kuppayam - போர்வையாகப் போர்த்த முத்துச் சட்டையை யுடையதாய் புகர், Pugar - தேஜஸ்ஸை யுடையதாய் மால், Maal - பெரிதான யானை கன்று போல், Yaanai Kanru Pol - யானைக் குட்டி போலே வேர்த்து நின்று விளையாட, Verthu Nindru Vilaiyaada - வேர்வையுற்று நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோம், Virundhavanathe Kandom - விருந்தாவனத்தே கண்டோம் |
| 641 | நாச்சியார் திருமொழி || 14 - பட்டி மேய்ந்தோர் (விருந்தாவனத்தே பரமனைக் கண்டமை கூறுதல்) 5 | மாதவன் என் மணியினை வலையில் பிழைத்த பன்றி போல் ஏதுமொன்றும் கொளத்தாரா ஈசன் தன்னைக் கண்டீரோ பீதக வாடை யுடை தாழப் பெருங்கார் மேகக் கன்றே போல் வீதியார வருவானை விருந்தா வனத்தே கண்டோமே | மாதவன், Madhavan - ஸ்ரீய: பதியாய் என் மணியினை, En Maniyinai - எனக்கு நீல ரத்னம் போலே பரம போக்யனாய் வலையில் பிழைத்த பன்றி போல், Valaiyil Pizhaitha Panri Pol - வலையில் நின்றும் தப்பிப் பிழைதத்தொரு பன்றி போலே (செருக்குற்று) ஏதும் ஒன்றும், Edhum Ondrum - (தன் பக்கலுள்ள) யாதொன்றையும் கொள தாரா, Kola Thaaraa - பிறர் கொள்ளும்படி தாராதவனான (ஒருவர் கைக்கும் எட்டாதவனான) ஈசன் தன்னை கண்டீரே?, Eesan Thannai Kandire? - ஈசன் தன்னை கண்டீரே? பீதகம் ஆடை, Peedhagam Aadai - திருப் பீதாம்பரமாகிற உடை, Udai - திருப் பரிவட்டமானது தாழ, Thaazha - தொங்கத் தொங்க விளங்க பெரு கார் மேகம் கன்று போல், Peru Kaar Megam Kanru Pol - பெருத்துக் கறுத்துதொரு மேகக் குட்டி போலே வீதி ஆர வருவானை, Veethi Aara Varuvaanai - திரு வீதி நிறைய எழுந்தருளும் பெருமானை விருந்தாவனத்தே கண்டோம், Virundhavanathe Kandom - விருந்தாவனத்தே கண்டோம் |
| 642 | நாச்சியார் திருமொழி || 14 - பட்டி மேய்ந்தோர் (விருந்தாவனத்தே பரமனைக் கண்டமை கூறுதல்) 6 | தருமம் அறியா குறும்பனைத் தன கைச் சார்ங்கமதுவே போல் புருவம் வட்ட மழகிய பொருத்த மிலியைக் கண்டீரே வுருவு கரிதாய் முகம் செய்தாய் உதய பருப் பதத்தின் மேல் விரியும் கதிரே போல்வானை விருந்தாவனத்தே கண்டோமே | தருமம் அறியா, Tharumam Ariyaa - இரக்கமென்பது அறியாதவனாய் குறும்பனை, Kurumbanai - குறும்புகளையே செய்யுமவனாய் தன் கை சார்ங்கம் அதுவே போல், Than Kai Saarngam Athuve Pol - தனது திருக்கையிலுள்ள சார்ங்க வில்லைப் போன்ற புருவ வட்டம், Puruva Vattam - திருப் புருவ வட்டங்களாலே அழகிய, Azhagiya - அழகு பெற்றவனாய் பொருத்தம் இலியை, Porutham Iliyai - (அவ்விழகை அன்பர்கட்டு அநுபவிக்கக் கொடுத்து) பொருந்தி வாழப் பெறாதவனான பெருமானை கண்டீரே?, kandeere? - கண்டீரே? உருது கரிது ஆய், Uruthu Karidhu Aay - திருமேனியில் கருமை பெற்றும் முகம் செய்து ஆய், Mukam Seidhu Aay - திரு முகத்தில் செம்மை பெற்றும் இருப்பதாலே உதயம் பருப்பதத்தின் மேல் விரியும் கதிர் போல்வானை, Udhayam Parupathathin Mel Viriyum Kathir Polvaanai - உதய பர்வதத்தின் மேலே விரிகின்ற சூரியன் போல் விளங்கும் அப்பெருமானை விருந்தாவனத்தே கண்டோமே, Virundhavanathe Kandome - விருந்தாவனத்தே கண்டோமே |
| 643 | நாச்சியார் திருமொழி || 14 - பட்டி மேய்ந்தோர் (விருந்தாவனத்தே பரமனைக் கண்டமை கூறுதல்) 7 | பொருத்த முடைய நம்பியைப் புறம் போல் உள்ளும் கரியானை கருத்தைப் பிழைத்து நின்ற அக்கரு மா முகிலைக் கண்டீரே அருத்தி தாரா கணங்களால் ஆரப் பெருகு வானம் போல் விருத்தம் பெரிதாய் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே | பொருத்தம் உடைய நம்பியை, Porutham Udaya Nambiyai - பொருத்தமுடைய ஸ்வாமியாய் புறம் போல் உள்ளும் கரியானை, Puram Pol Ullum Kariyaanai - உடம்பு போலே உள்ளமும் கறுத்திரா நின்றவனாய் கருத்தை பிழைத்து நின்ற, Karuthai Pizhaithu Nindra - நான் எண்ணும் எண்ணத்தைத் தப்பி நிற்பவனாய் அக் கரு மா முகிலை, ak karu maa mukilai - கறுத்துப் பெருத்த முகில் போன்றவனான அக் கண்ணபிரானை கண்டீரே?, Kandire? - கண்டீரே? அருத்தி, Aruthi - விரும்பப் பெறுகின்ற தாரா கணங்களால், Thaaraa Kanangalal - நக்ஷத்ர ஸமூஹங்களாலே ஆர பெருகு, Aara Perugu - மிகவும் நிறைந்திருந்துள்ள வானம் போல், vanam pol - ஆகாசம் போல் வானம் போல் விருத்தம் பெரிது ஆய், Virutham Peridhu Aay - பெருங்கூட்டமாய் வருவானை, varuvanai - எழுந்தருளா நின்ற அப் பெருமானை விருந்தாவனத்தே கண்டோமே, Virundhavanathe Kandome - விருந்தாவனத்தே கண்டோமே |
| 644 | நாச்சியார் திருமொழி || 14 - பட்டி மேய்ந்தோர் (விருந்தாவனத்தே பரமனைக் கண்டமை கூறுதல்) 8 | வெளிய சங்கு ஓன்று உடையானைப் பீதவாடை யுடையானை அளி நன்குடை திருமாலை ஆழியானைக் கண்டீரே களி வண்டும் கலந்தால் போல் கமழ் பூங்குழல்கள் தடந்தோள் மேல் மிளிர நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே | வெளிய சங்கு ஒன்று உடையானை, Veliya Sangu Ondru Udaiyaanai - வெளுத்த ஸ்ரீபாஞசயன மொன்றை வுடையனாய் பீதகம் ஆடை உடையானை, Peethagam Aadai Udaiyaanai - பீதாம்பரத்தை உடையாகக் கொண்டவனாய் நன்கு அளி உடைய, Nangu Ali Udaya - நன்றாகக் கிருபை யுடையவனாய் ஆழியானை, Aazhiyaanai - திருவாழியாழ்வானை யுடையவனாய் திருமாலை, Thirumaalai - ஸ்ரீய: பதியான கண்ணனை கண்டீரே?, kandeere? - கண்டீரே? களி வண்டு, Kali Vandu - (மதுபானத்தாலே) களித்துள்ள வண்டுகளானவை எங்கும், engum - எப் புறத்திலும் கலந்தால், kalandhal - பரம்பினாற்போலே கமழ் பூங்குழல்கள், Kamazh Poonguzhalkal - பரிமளிக்கின்ற அழகிய திருக் குழல்களானவை தடதோள்மேல், Thada thol mel - பெரிய திருத் தோள்களின் மேலே மிளிர நின்று விளையாட, Milira Nindru Vilaiyaada - (தாழ்ந்து) விளங்க நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே, Virundhavanathe Kandome - விருந்தாவனத்தே கண்டோமே |
| 645 | நாச்சியார் திருமொழி || 14 - பட்டி மேய்ந்தோர் (விருந்தாவனத்தே பரமனைக் கண்டமை கூறுதல்) 9 | நாட்டைப் படை என்று அயன் முதலா தந்த நளிர் மா மலருந்தி வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் தன்னைக் கண்டீரே காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளும் உடன் மடிய வேட்டை யாடி வருவானை விருந்தாவனத்தே கண்டோமே | நாட்டை படை என்று, Natai Padai Endru - உலகங்களை ஸ்ருஷ்டி என்று அயன் முதலா, Ayan Mudhalaa - பிரமன் முதலான பிரஜாபதிகளை தந்த, thandha - உண்டாக்கின நளிர் மா மலர் உந்தி வீட்டை பண்ணி, Nalir Maa malar Undhi Veetai Panni - குளிர்ந்த பெரிய மலரை யுடைத்தான திருநாபி யாகிற வீட்டை யுண்டாக்கி விளையாடும், vilaiyaadum - இப்படியாக லீலா ரஸம் அநுபவிக்கிற விமலன் தன்னை, Vimalan Thannai - பரம பாவனனான பெருமானை கண்டீரே?, kandire? - கண்டீரே? தேனுகனும், Thenukanum - தேநுகாஸுரனும் களிறும், kalirum - குவலயாபீட யானையும் புள்ளும், pullum - பகாஸுரனும் உடன் மடிய, udan madiya - உடனே மாளும்படியாக காட்டை நாடி வேட்டை ஆடி வருவானை, kaatai naadi vettai aadi varuvaanai - காட்டிற் சென்று வேட்டையாடி வரும் அப் பெருமானை விருந்தாவனத்தே கண்டோமே, Virundhavanathe Kandome - விருந்தாவனத்தே கண்டோமே |
| 646 | நாச்சியார் திருமொழி || 14 - பட்டி மேய்ந்தோர் (விருந்தாவனத்தே பரமனைக் கண்டமை கூறுதல்) 10 | பருந்தாள் களிற்றுக்கு அருள் செய்த பரமன் தன்னைப் பாரின் மேல் விருந்தா வனத்தே கண்டமை விட்டு சித்தன் கோதை சொல் மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள் பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ் பிரியாது என்றும் இருப்பரே | பரு தாள் களிற்றுக்கு, Paru Thaal Kalitruku - பருத்த கால்களை யுடைய கஜேந்திராழ்வானுக்கு அருள் செய்த, Arul Seidha - க்ருபை பண்ணின பரமன் தன்னை, Paraman thannai - திருமாலை பாரின் மேல், paarin mel - இந் நிலத்திலே விருந்தாவனத்தே கண்டமை, Virundaavanathe Kandamai - ஸ்ரீ ப்ருந்தாவனத்திலே ஸேவிக்கப் பெற்றமையைப் பற்றி விட்டு சித்தன் கோதை சொல், Vittu Chithan Kodhai sol - பெரியாழ்வார் திருமகளான ஆண்டாளருளிச் செய்த இப் பாசுரங்களை மருந்து ஆம் என்று, Marundhu aam endru - (பிறவி நோய்க்கு) மருந்தாகக் கொண்டு தம் மனத்தே, tham Manathe - தங்கள் சிந்தையிலே வைத்துக் கொண்டு வாழ்வார்கள், Vaithu kondu Vaazhvaarkal - அநுஸந்தித்துக் கொண்டு வாழுமவர்கள் பெரு தாள் உடைய பிரான் அடி கீழ், Peru Thaal Udaya Piran Adi Keezh - பெருமை பொருந்திய திருவடிகளை யுடைய எம்பெருமானுடைய திருவடிகளின் கீழே என்றும், Endrum - எந்நாளும் பிரியாது இருப்பார், Piriyadhu Iruppar - பிரியாமலிருந்து நித்யாநுபவம் பண்ணப் பெறுவர்கள் |